WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
Strike by India's unorganised sector workers
இந்தியாவில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் வேலை நிறுத்தம்
By our correspondent
15 September 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
இந்தியாவின் அமைப்பு சாராப் பிரிவு எனக் கூறப்படும் பிரிவின் மில்லியன் கணக்கான
தொழிலாளர்கள் கடந்த மாதம் குறைந்த ஊதியம் மற்றும் இழிநிலைகள் பற்றிய தங்கள் கோபம், விரக்தி ஆகியவற்றை
வெளியிடும் வகையில் ஒரு ஒரு-நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர். ஆனால், அதே நேரத்தில், ஸ்ராலினிச
கம்யூனிஸ்ட் கட்சியுடன் (மார்க்ஸிஸ்ட்) சிபிஐ(எம்) உடன் இணைந்திருக்கும் தொழிற்சங்கங்கள், புது டெல்லியில் உள்ள
ஐக்கிய முன்போக்குக் கூட்டணி (UPA)
அரசாங்கத்திற்கு எதிராக ஒரு அரசியல் இயக்கம் வளர்ச்சியுறுவதை தடைசெய்யும் வகையில் தங்கள் கோரிக்கைகளின்
வரம்பை மட்டுப்படுத்திக் கொண்டன.
இந்தியாவில் "அமைப்பு சார் பிரிவு" என்பது அரசாங்கம் மற்றும் தனியார் தொழில்
அமைப்புக்களைக் குறிக்கும்; அவைதான் வரவு-செலவு திட்ட ஆவணங்கள் மற்றும் அரசாங்க அறிக்கைகளில் இடம்பெறும்
உத்தியோகபூர்வ புள்ளி விவரங்களின் ஒரு பகுதியாக இருக்கும். "அமைப்பு சாராப்பிரிவு" என்பது மற்றவர்கள்
அனைத்தையும் உள்ளடக்கும்; இதில் குறைந்தது 400 மில்லியன் பகுதிநேர, தற்காலிக தொழிலாளர்கள் பெரிய,
சிறிய வணிகங்கள், தங்கள் வீடுகளில் இருந்தே வேலை செய்பவர்கள், பிற வீடுகளில் வேலை செய்பவர்கள் ஆகியோர்
அடங்குவர். பலரும் கிராமப் புறத் தொழிலாளர்களாகவும், குத்தகை விவசாயத்தில் ஈடுபடுபவர்களாகவும் உள்ளனர்.
CPI(N) உடன் இணைந்துள்ள இந்திய
தொழிற்சங்கங்களின் மையம் (CITU),
ஆகஸ்ட் 8ல் வேலைநிறுத்தத்திற்கு ஏற்பாடு செய்திருந்தது; இதில் 45 மில்லியன் தொழிலாளர்கள் பங்கு பெற்றதாக
கூறியது; இது முக்கியமாக மேற்கு வங்காளம், கேரளா, மற்றும் திரிபுரா என்று
CPI-M தலைமையிலான
கூட்டணி ஆட்சிகள் அதிகாரத்தில் உள்ள பகுதிகளில் நடைபெற்றது. வேலை நிலைமைகள், வேலைப் பாதுகாப்பு,
சமூக பாதுகாப்பு நலன்கள் ஆகியவை பற்றி விரிவான சட்டமியற்றுதல் வேண்டும் என்றும், இருக்கும் தொழிலாளர்
சட்டங்கள் அமைப்பு சாராப் பிரிவிற்கு விரிவுபடுத்தப்பட வேண்டும் என்றும்
CITU அழைப்பு
விடுத்துள்ளது.
வேலைநிறுத்தத்தின் முக்கிய நோக்கம் காங்கிரஸ்-தலைமையிலான
UPA ஐ,
மந்திரிசபை மே மாதம் ஒப்புதல் அளித்திருந்த அதன்
Unorganised Sector Worker's Social Security Bill
எனப்படும் அமைப்பு சாராப் பிரிவுத் தொழிலாளர்களின் சமூகப் பாதுகாப்பு சட்ட வரைவைத் திருத்த வேண்டும்
என்பதாகும். இடது முன்னணியில் இருக்கும் மற்ற கட்சிகளைப் போலவே
CPI(M)
அரசாங்கத்தின் ஒரு பகுதியாக இல்லாமல் அதை "வெளியில் இருந்து ஆதரிக்கிறது." அமைப்பு சாராப் பிரிவிற்கான
சட்டம் அரசாங்கத்திற்கு ஆதரவு கொடுப்பதற்கு நியாயப்படுத்துவதற்காக
UPA உடன் இடது
முன்னணி மேற்கொண்ட குறைந்தபட்ச செயற்திட்டத்தின் (CMP)
ஒரு பகுதியாகும்.
திட்டமிடப்பட்டுள்ள சட்டவரைவின் குறுகிய தன்மை
CPI(M) ஐ
அரசியலளவில் அம்பலப்படுத்தியுள்ளது. ஒரு "தேசிய ஆலோசனைக் குழு" அமைக்கப்பட வேண்டும் என்றும் அது
அரசாங்கத்திற்கு அமைப்புசாரப் பிரிவு தொழிலாளர்களின் பல்வேறு அடுக்குகளுக்கான பல பொதுநலத் திட்டங்கள்
செயல்படுத்தப்படுவது பற்றித் தன்னுடைய பரிந்துரைகளை கொடுக்கும் என்றும் அத்திட்டம் கூறுகிறது. இப்படிப்பட்ட
சிறிய அணுகுமுறையின் ஒரு பகுதியாக கடந்த மாதம் பல திட்டங்கள் அறிவிக்கப்பட்டு சட்டவரைவுடன்
இணைக்கப்பட்டன; அதில் நிலமற்ற கிராமப்புற குடும்பத்தினருக்கு ஒரு திட்டம், தேசிய அளவில் மூத்த குடிமக்களுக்கு
ஓய்வூதியம், வறுமைக் கோட்டிற்கு கீழே இருக்கும் தொழிலாளர்கள், அவர்களுடைய குடும்பத்தினர் ஆகியோருக்கு
ஒரு சுகாதார காப்பீட்டுத் திட்டம் ஆகியவை அடங்கியிருந்தன.
தொழிற்சங்க அமைப்பு இல்லாத, தற்காலிக தொழிலாளர்களும், ஆயுள்காப்பீடு,
ஓய்வூதிய நலன்கள் மற்றும் சுகாதார, இயலாமை நலன்கள் ஆகியவற்றை, நாள் ஒன்றிற்கு ஒரு ரூபாய்
அரசாங்கத்திடம் கொடுத்து, அவர்களை வேலைக்கு அமர்த்துபவர்களும் ஒரு ரூபாய் கொடுக்கும் நிலையில்,
பெறமுடியும். ஆண்டுக்கு 6,500 ரூபாய்க்கும் ($100) குறைவாக சம்பாதிப்பவர்கள்
BPL என்று
வறுமைக் கோட்டிற்கு கீழ் இருப்பவர்களாக அழைக்கப்பட்டு, அரசாங்கம் அவர்களுக்காக அவர்களுடைய ஒரு
ரூபாய் பங்கைக் கொடுக்கும். இந்தக் குறைந்த திட்டம் கூட செயல்படுத்தப்பட பல ஆண்டுகள் ஆகலாம். இந்த
திட்டத்திற்கு தேவையான 22.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் எப்படி எழுப்பப்படும் என்பதை பற்றி இதுவரை
அரசாங்கம் குறிப்பு ஏதும் கொடுக்கவில்லை.
CPI(M) ன்
Peoples Democracy
ஜூன் 3ம் தேதி பதிப்பு புதிய சட்டம் "அமைப்பு சாராப் பிரிவுத் தொழிலாளர்களுக்கு கணிசமாக" ஏதும்
செய்யவில்லை என்று குறைகூறியுள்ளது. வேலைநிறுத்த தினத்தன்று
CITU வின்
தலைவர் எம்.கே.பாந்தே செய்தியாளர்களிடம் கூறினார்: "மத்திய (தேசிய) அரசாங்கத்தின் ஏமாற்றுத்தனம்
பற்றி மக்களிடையே சீற்றம் உள்ளது." ஆனால் இந்த ஏமாற்றுத்தனத்தைத்தான்
CPI(M), மற்றும்
அதன் தொழிற்சங்கங்கள் UPA
அரசாங்கத்தின் உறுதிமொழியான குறைந்த பட்ச செய்ல்திட்டம் செயல்படுத்தப்படும் என்பதற்கு நம்பகத்தன்மை
கொடுக்கும் வகையில் உதவிவருகின்றன.
வேலைநிறுத்தம் பெருகிய எதிர்ப்பு உணர்வை குறைக்கும் வகையிலும்,
UPA
அரசாங்கத்திற்கு ஒரு சில சலுகைகள் கொடுக்க வைப்பதற்கான அழுத்தத்தை கொடுக்கும் வகையிலும் நோக்கத்தை
கொண்டிருந்தது. வேலைநிறுத்தத்திற்கான ஆதரவு "எமது கற்பனையையும் விஞ்சியிருந்தது" என்று அறிவித்த பின்,
CITU
வின் மேற்கு வங்க பிரிவின் தலைவரான Shyamal
Chakraborty அறிவித்தார்: "இந்த வேலைநிறுத்தத்தின் மூலம்
மத்திய அரசு தக்க முறையில் எச்சரிக்கை பெறும் என்றும் தொழிலாளர்களின் நலன்களை பாதுகாப்பதற்காக ஒரு
விரிவான சட்டத்தை இயற்றும் என்றும் நம்புகிறேன்."
"Conditions of Work and Promotion of Liveliboods in
Unorganised Sector" என்ற தலைப்பில் ஆகஸ்ட் 9ம்
தேதி வெளிவந்துள்ள அறிக்கை ஒன்று, 394.9 மில்லியன் தொழிலாளர்கள் அல்லது நாட்டின் மொத்த தொழிலாளர்
தொகுப்பில் 86 சதவிகிதத்தினர் எதிர்கொண்டுள்ள மகத்தான சமூகப் பிரச்சினைகளை பற்றி ஒரு பரந்த
பார்வையை கொடுக்கிறது. National
Commission for Enterprises in the Unorganised Sector (NCEUS)
என்னும் அமைப்பால் இயற்றப்பட்ட இந்த அறிக்கை தொழிலாளர்கள் "முற்றிலும் இழிவான நிலைமையை"
எதிர்கொள்ளுகின்றனர், "வாழ்வதற்கு வேறு எந்த வழிவகையும் இல்லாத நிலையில் இப்படி நடக்கிறது" என்று
கண்டறிந்துள்ளது. 79 சதவிகிதத்தினர் நாள் ஒன்றுக்கு 20 ரூபாய்க்கும் குறைவாகத்தான் சம்பாதிக்கின்றனர்.
அமைப்பு சாரா பிரிவில் உள்ள தொழிலாளர்களுக்கு சட்டபூர்வ பாதுகாப்புக்கள்
ஏதும் கிடையாது. 40 முதல் 50 சதவிகித ஆண் தொழிலாளர்களும், 81 முதல் 87 சதவிகிதப் பெண்
தொழிலாளர்களும் தொழிலாளர் நலப்பிரிவு அமைச்சகம் நிர்ணயித்துள்ள குறைந்த அளவான நாள் ஒன்றுக்கு 49
ரூபாய் (அமெரிக்க $1.10), கிராமப்புறப் பகுதிகளிலும் 67 ரூபாய்களை (அமெரிக்க 1.65$) மட்டுமே
பெறுகின்றனர் என்று NCEUS
தெரிவிக்கிறது.
மகளிரும் குழந்தை தொழிலளர்களும் மிகக் கடுமையான சுரண்டலுக்கு உட்படுகின்றனர்.
பெரும்பாலானவர்கள் ஆலைகளிலோ, தொழிற்கூடங்களிலோ வேலை செய்வதற்கு பதிலாக தங்கள் வீடுகளில் இருந்து
குறிப்பிட்ட விலை வீதத்திற்கு பொருட்களை தயாரிக்கின்றனர் நீண்ட நேரம் அவர்கள் வேலை பார்த்தும் அவர்களுக்கு
ஈடாக கிடைப்பது மிகக் குறைவான ஊதியம்தான். அறிக்கை விவரித்துள்ளபடி, முதலாளிகள் இத்தகைய இல்லங்களை
தளமாகக் கொண்ட பணியை விரும்புகின்றனர்; ஏனெனில் இது "இன்னும் கூடுதலான உற்பத்தித் திறனை" கொண்டது.
அமைப்பு சாரப் பிரிவு 1990 களின் ஆரம்பத்தில் இருந்து தொடர்ச்சியான
அரசாங்கங்கள் சந்தைச் சீர்திருத்தக் கொள்கைகளை செயல்படுத்துவதின் விளைவாக பெருகியுள்ளது. ஏழைகளுக்கும்
அடக்கப்படுபவர்க்கும் காப்பாளர் என்று தன்னைக் காட்டிக் கொண்டாலும்,
CPI(M) தான்
அதிகாரத்தை பெற்றிருக்கும் மாநிலங்களிலும் இதைப் போன்ற பொருளாதார கொள்கைகளைத்தான் பின்பற்றி
வருகிறது. தேசிய மாதிரி அளவை அமைப்பு (NSSO)
இன் கருத்தின்படி, 1999-2000த்தில் CPI-M
தலைமையிலான இடது முன்னணி மூன்று தசாப்தங்களாக ஆட்சி
நடத்தி வரும் மேற்கு வங்கத்தில் அமைப்பு சாரா தொழிலாளர்களின் சதவிகிதம் மொத்த வேலை செய்பவர்கள்
தொகுப்பில் 89.6 சதவிகிதம் என்று இருந்தது.
UPA அரசாங்கம் இறுதியில்
அமைப்பு சாரா பிரிவு தொழிலாளர்கள் சமூகப் பாதுகாப்பு சட்டவரைவை திங்களன்று, கூட்டத்தொடர் முடிவதற்கு
சற்று முன்னதாக, பாராளுமன்றத்தின் கீழ் பிரிவில் அறிமுகப்படுத்தியது.
CPI(M) இன்
அரசியற்குழு உறுப்பினரான பிருந்தா காரட் இச்சட்ட வரைவை "பெயரளவிற்கு நடத்தப்படும் மிக மோசமான
சட்ட வரைவு, அவர்கள் சட்ட வரைவை குறைந்தபட்ச தேசிய பொது செயற்திட்டத்தில் உறுதிமொழி
கொடுத்திருந்ததால் அறிமுகப்படுத்தியுள்ளனர்" என்று கூறினார்.
இப்படி அரசாங்கமோ அல்லது அரசியலில் அதற்குத் தூணாக இருக்கும்
CPI(M) மோ
காட்டிக் கொள்ளுவது எந்தவிதத்திலும் இந்தியாவின் வறியமக்கள்பால் அக்கறை கொண்டதல்ல. மாறாக இது
அவர்களுடைய மோசமாகிக் கொண்டிருக்கும் நிலையின் பொறுப்பை திசை திருப்பும் மூர்க்கமான முயற்சியாகும்.
|