World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan police harass witnesses in case of murdered SEP supporter

இலங்கையில் சோ.ச.க. ஆதரவாளர் படுகொலை தொடர்பான சாட்சிகளுக்கு பொலிஸ் தொந்தரவு

By our correspondent
18 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

கிழக்கு இலங்கையில் உள்ள கந்தளாய் நீதிமன்றத்தின் நீதவான், சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 7 படுகொலை செய்யப்பட்டமை தொடர்பான வழக்கை கடந்த மாதம் ஒத்திவைத்தார். திருகோணமலை பொலிசை சேர்ந்த குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் (சி.ஐ.டி.) கேட்கப்பட்ட கால அவகாசத்தை நீதவான் சவால் செய்யவில்லை. பொலிசாரால் முன்னெடுக்கப்பட்ட எந்தவொரு தக்க விசாரணையினதும் ஆதாரங்கள் முன்வைக்கப்படவில்லை.

மரியதாஸ் திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானையில் உள்ள அவரது வீட்டில் வைத்து ஆகஸ்ட் 7 அன்று இரவு துப்பாக்கிதாரியால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாட்டின் பாதுகாப்புப் படையினரின் பிரிவின் கீழ் நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ இயங்கும் கொலைப்படைகளில் ஒன்றே இந்த திட்டமிட்ட கொலையை செய்திருப்பதற்கான அனைத்து தடயங்களும் உள்ளன.

தீவின் கிழக்கில் தாக்குதல்களை முன்னெடுக்குமாறு இராணுவத்திற்கு ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ கட்டளையிட்ட நிலைமையின் கீழேயே இந்தக் கொலை சம்பவம் நடந்துள்ளது. முல்லிப்பொத்தானை உட்பட அரசாங்கக் கட்டுப்பாட்டுப் பிரதேசங்கள் பூராவும் இரவில் எவராலும் இலகுவாக நகர முடியாதளவு கடுமையான பாதுகாப்பு அமுல்படுத்தப்பட்டுள்ளது. பாதுகாப்புப் படைகள் மரியதாஸ் படுகொலை செய்யப்பட்ட பின்னர் அவர் புலி ஆதரவாளர் என்ற பொய் பிரச்சாரத்தை பரப்பிவிட்டிருந்தனர்.

சோ.ச.க. மற்றும் உலக சோசலிச வலைத் தளமும், இலங்கை அதிகாரிகள் மரியதாஸை கொலை செய்தவர்களை கண்டுபிடித்து வழக்குத் தொடர வேண்டும் எனக் கோரி ஒன்பது மாதங்களுக்கும் மேலாக ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்தன. பாதுகாப்புப் படையினர் தொடர்புபட்டுள்ளதாக குற்றஞ்சாட்டப்பட்ட, கடந்த ஆண்டு பூராவும் நடந்த ஏனைய நூற்றுக்கணக்கான படுகொலை அல்லது கடத்தல் வழக்குகளைப் போலவே, இந்தப் பொலிஸ் விசாரணையும் இதுவரை செயலின்மை, கைக்கு கை மாற்றுதல் மற்றும் தட்டிக்கழித்தல் நடவடிக்கைகளுக்கு உள்ளாகியுள்ளது. இந்த விசாரணை மூன்று வேறுபட்ட நகரங்களில் உள்ள நான்கு வெவ்வேறு விசாரணை அதிகாரிகளுக்கிடையில் கைமாற்றப்பட்டுள்ளது.

சோ.ச.க. முன்னெடுத்த பிரச்சாரத்திற்கு இலங்கை அதிகாரிகள் கொடுத்த பதில் முழுமையான தக்க விசாரணையை நடத்துமாறு பொலிசாருக்கு கட்டளையிடுவதற்கு மாறாக, சாட்சிகளையும் மற்றும் மரியதாஸ் கொலையாளிகள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்பட வேண்டும் என்றக் கோரிக்கைக்கு ஆதரவளித்தவர்களையும் தொந்தரவுக்கு உட்படுத்துவதாகவே இருந்தது.

புகழ் பெற்ற திரைப்பட இயக்குனரான அசோக ஹந்தகமவை அவரது வேலைத் தளமான இலங்கை மத்திய வங்கியில் மார்ச் 1ம் திகதி ஒரு பொலிஸ் அதிகாரி சந்தித்தார். மரியதாஸ் கொலை தொடர்பான சோ.ச.க. பிரச்சாரத்தை ஆதரித்து அறிக்கை விடுத்தது ஏன் என்றும் பாதிக்கப்பட்டவரை தெரியுமா என்றும் ஹந்தகமவிடம் நேரடியாக அவர் கேட்டார். மரியதாஸை தெரிந்திருக்காவிட்டாலும் அத்தகைய கொலைகளை கண்டிப்பதோடு அடிப்படை ஜனநாயக உரிமைகளை மதிப்பதாக ஹந்தகம தெரிவித்திருந்தார்.

மார்ச் 4, மரியதாஸின் மனைவி கிருஷாந்தி உள்ளூர் பொலிஸ் நிலையத்திற்கு அழைக்கப்பட்டார். அங்கு அவரது கனவரின் கொலை தொடர்பாக யாரை சந்தேகிப்பதாக சி.ஐடி. பொலிசார் அவரிடம் கேள்வியெழுப்பினர். தான் பொலிசுக்கு ஏற்கனவே விபரங்கள் அடங்கிய பல அறிக்கைகளை வழங்கியிருப்பதாக அந்த அதிகாரிக்கு கிருஷாந்தி நினைவூட்டியதோடு சோ.ச.க. யின் பல அறிக்கைகளில் வெளியிடப்பட்டவற்றுக்கு அதிகமாக தனக்கு எதுவும் தெரியாது என்றும் தெரிவித்தார்.

அதே தினம், முல்லிப்பொத்தானையில் மருந்தகம் ஒன்றின் உரிமையாளரும் மரியதாசின் நண்பருமான ரஞ்சனையும் பொலிசார் அழைத்தனர். அவரிடம் கொலை தொடர்பான கேள்விகள் எழுப்பப்படவில்லை. மாறாக, மரியதாஸின் அரசியல் நடவடிக்கைகள் பற்றியும் அவருக்கும் சோ.ச.க. யிற்கும் உள்ள தொடர்பு பற்றியுமே கேள்வியெழுப்பப்பட்டது. ரஞ்சன், மரியதாஸ் கொலை செய்யப்பட்ட பின்னர், மருந்தகத்தை விற்றுவிட்டு நகரத்தை விட்டே வெளியேறிவிட்டார்.

மார்ச் 7, திருகோணமலை சி.ஐ.டி. கிளையின் பொறுப்பதிகாரி, மரியதாசின் இரு சகோதரர்களான பெனடிக்ட்டையும் ஜேசுதாசையும் விசாரணைக்கு உட்படுத்தினார். இந்த அதிகாரி, கொலை தொடர்பாக உலக சோசலிச வலைத் தளத்தில் வெளிவந்திருந்த கட்டுரைகளின் பிரதிகளை அவர்களுக்கு முன்னால் வைத்திருந்ததோடு, சோ.ச.க. தொடர்பாக சகோதரர்களின் நிலைப்பாடு பற்றியே குறிப்பாக அக்கறை காட்டியதாகத் தெரியவந்துள்ளது. மரியதாஸ் தனது போட்டோ ஸ்டூடியோ நடத்திவந்த கட்டிடத்தின் உரிமையாளர் அவரைக் கொன்றதாக சகோதரர்கள் நினைக்கின்றனரா எனவும் தெரிந்துகொள்ள அந்த அதிகாரி விரும்பினார்.

இந்த சகல முன்னேற்றங்களும், சாட்சிகளையும் சோ.ச.க. ஆதரவாளர்களையும் அச்சுறுத்துவதற்கும் அதே போல் இந்தக் கொலையை கட்டியடிக்கக்கூடிய ஒரு சாத்தியமான பலியாட்டை அடையாளங் காண்பதற்கும் பொலிசாரின் சார்பில் முன்னெடுக்கப்படும் பிரச்சாரம் என்பதை சுட்டிக்காட்டுகின்றன. சம்பவம் நடந்த போது கடமையில் இருந்த பாதுகாப்புப் படை உறுப்பினர்களை விசாரிக்கவோ அல்லது சம்பவம் நடந்த இடத்தில் தடயங்களை திரட்ட நீதிமன்ற விசாரணைகளை முன்னெடுக்கவோ பொலிசார் அடிப்படை நடவடிக்கைகளை மேற்கொண்டதற்கான அறிகுறிகள் எதுவும் கிடையாது.

இராஜபக்ஷ அரசாங்கம் மீண்டும் நாட்டை யுத்தத்திற்குள் தள்ளியதை அடுத்து கடந்த ஆண்டு பூராவும் கடத்தப்பட்டு கொல்லப்பட்ட நூற்றுக்கணக்கானவர்களில் மரியதாசும் ஒருவர். மிகவும் முழுமைபடுத்தப்படாத மக்கள் கண்காணிப்புக் குழுவின் அறிக்கை, 2006 ஜூலை முதல் 2007 ஏப்பிரல் வரை தீவின் வடக்கு, கிழக்கிலும் மற்றும் கொழும்பிலும், 103 பேர், பெரும்பாலும் தமிழர்கள் காணாமல் போயுள்ளதாகக் காட்டுகிறது. ஆசிய மனித உரிமைகள் ஆணைக்குழுவின் படி, 2006ல் குறைந்தபட்சம் 1,000 பேர் காணாமல் போயுள்ளனர். ஏப்பிரல் அளவில் மேலும் 300 பேர் காணாமல் போயுள்ளதாக இந்த ஆண்டு பதிவாகியுள்ளது.

சோ.ச.க. உறுப்பினர் நடராஜா விமலேஸ்வரன் மற்றும் அவரது நண்பர் சிவநாதன் மதிவதனனும் காணாமல் போயுள்ளமை தொடர்பாக இலங்கை அதிகாரிகள் விசாரணை செய்ய வேண்டும் எனக் கோரியும் சோ.ச.க. தற்போது ஒரு பிரச்சாரத்தை முன்னெடுத்துள்ளது. இவர்கள் இருவரும் யாழ்ப்பாணக் குடாநாட்டில் ஊர்காவற்துறையையும் புங்குடுதீவையும் இணைக்கும் கடல் பாலத்தில் உள்ள கடற்படை சோதனை நிலையத்தை நோக்கி மார்ச் 22 அன்று மாலை சுமார் 6.30 மணியளவில் சென்றுகொண்டிருந்த போது கடைசியாகக் காணப்பட்டுள்ளனர்.

இந்த வழக்குகளை விசாரித்து பொறுப்பாளிகளை நீதியின் முன் நிறுத்துமாறு இலங்கை அதிகாரிகளை நெருக்கும் எங்களது முயற்சிகளுக்கு ஆதரவளிக்குமாறு தமது ஆதரவாளர்களுக்கும் மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் மீண்டும் ஒரு முறை சோ.ச.க. வேண்டுகோள் விடுக்கின்றது. இலங்கை அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை மீறுவதற்கும் மற்றும் அதன் புதுப்பிக்கப்பட்ட யுத்தத்தை எதிர்க்கும் எவரையும் அச்சுறுத்தி பீதிகொள்ள வைக்கும் அதன் முயற்சிகளுக்கும் எமது பிரச்சாரம் ஒரு முக்கியமான பலத்த அடியாகும்.

மரியதாஸ் கொலை தொடர்பான கண்டனக் கடிதங்களை அனுப்ப வேண்டிய முகவரி:

Inspector General of Police Victor Perera,
Police Headquarters,
Colombo 1, Sri Lanka.
Fax: 0094 11 2446174
Email: igp@police.lk

Attorney General C.R.De Silva.
Attorney General's Department,
Colombo 12, Sri Lanka.
Fax: 0094 11 2436 421

பிரதிகளை சோசலிச சமத்துவக் கட்சிக்கும் (இலங்கை) மற்றும் உலக சோசலிச வலைத் தளத்திற்கும் அனுப்பி வையுங்கள்.

Socialist Equality Party, P.O. Box 1270, Colombo, Sri Lanka. Email: wswscmb@sltnet.lk

உ.சோ.வ.த. க்கு கடிதங்களை அனுப்ப தயவு செய்து இந்த online படிவத்தை பயன்படுத்தவும்.

இலங்கை அதிகாரிகளுக்கு அனுப்பப்பட்ட கடிதங்கள் மற்றும் பெட்டிசன்களின் ஒரு பகுதியை இங்கு பிரசுரிக்கின்றோம்.

* * *

அன்பின் திரு. செயலாளர்,

நான் 2006 ஆகஸ்ட் 7 அன்று கிழக்கில் திருகோணமலையில் முல்லிப்பொத்தானையில் சிவப்பிரகாசம் மரியதாஸ் அவரது வீட்டில் வைத்து கொல்லப்பட்டது தொடர்பாக மீண்டும் எனது அக்கறையை வெளிப்படுத்தவே இதை எழுதுகிறேன்.

தகவல்களில் இருந்து நான் புரிந்துகொண்டவாறு, மரியாதாஸ் அவரது அரசியல் நோக்கங்களுக்காக, குறிப்பாக யுத்தம் மற்றும் உங்களது நாட்டில் இரத்தக் களரி தொடர்பான அவரது எதிர்ப்புக்காகவே கொல்லப்பட்டுள்ளார்.

கொலைசெய்வது மிகப்பெரும் குற்றமாகும். அரசியல் கொலை அதைவிடப் பெரிய குற்றமாகும். இந்தக் குற்றச்சாட்டுக்கள் தொடர்பாக விசாரணை நடத்தாமல் இருப்பது அனைத்தையும் விட மோசமானதும், உங்களது சிவில் நிர்வாகத்தின் இழிவான நிலைமையையும் வெளிப்படுத்துகிறது.

ஆகவே, இந்த விவகாரம் தொடர்பாக அக்கறையான விசாரணை நடத்துமாறும், குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்துமாறும் நான் உங்களது அதிகாரிகளுக்கு பலமான வேண்டுகோள் விடுக்கின்றேன்.

இத்தகைய விசாரணைகளில் நேரம் முக்கிய பகுதியாகும். நியாயம் கிடைக்க வேண்டும், அதே வேளை அது கிடைப்பதாகத் தோன்றவும் வேண்டும். இந்த விசாரணைகளை மேற்கொண்டதாக மட்டுமன்றி சந்தேக நபர்களை அடையாளம் கண்டு கைது செய்வதிலும் உங்களது அலுவலகம் வெற்றி கண்டதாக சர்வதேச ஊடகங்கள் மூலம் தெரிந்துகொள்ள நான் எதிர்பார்க்கின்றேன்.

மீண்டும், உங்களது அலுவலகத்தால் மேற்கொள்ளப்படும் எந்தவொரு விசாரணை தொடர்பாகவும் நாம் பெருமையடைவோம்.

தங்கள் உண்மையுள்ள

®.H.

ரெஜினா, கனடா.

* * *

பொலிஸ் மா அதிபர் விக்டர் பெரேரா மற்றும் சட்ட மா அதிபர் கே.சி. கமலசபேசன் ஆகியோருக்கு,

சோசலிச சமத்துவக் கட்சியின் அரசியல் ஆதரவாளரான சிவப்பிரகாசம் மரியதாஸ், ஆகஸ்ட் 7ம் திகதி, திருகோணமலையில் இருந்து தெற்காக சுமார் 20 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ள முல்லிபொத்தானையில் கொல்லப்பட்டது தொடர்பாக உடனடியான தக்க விசாரணையை நடத்துமாறு கோருவதற்கே நாம் இதை எழுதுகின்றோம்.

அன்றைய தினம் இரவு சுமார் 9.30 மணியளவில் யாரோ ஒருவர் தன்னை அழைப்பது கேட்டு கதவுக்கு அருகே சென்ற போதே மரியதாஸ் அவரது வீட்டிலேயே துப்பாக்கிதாரியால் நெற்றியிலும் கழுத்திலும் சுட்டுக் கொல்லப்பட்டார். கொலையாளி மதில் மேல் ஏறி ஓடுவதைக் கண்ட மரியதாஸின் மனைவி ஸ்டெலா கிருஷாந்தி, கொலையாளி அரைக் காட்சட்டையும் ரீ சேட்டும் ஹெல்மெட்டும் அணிந்திருந்ததைக் கண்டுள்ளார்.

அரை மணித்தியாலத்தின் பின்பு சம்பவ இடத்திற்கு தம்பலகாமத்தில் இருந்து வந்த பொலிசார், கிருஷாந்தியிடம் வாக்குமூலம் பெற்றுக்கொண்டு மரியதாசின் சடலத்தை அப்புறப்படுத்தி கந்தளாய் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றுள்ளனர். அடுத்த நாள் ஆஸ்பத்திரியில் நீதவானின் விசாரணை ஒன்று நடைபெற்றதோடு, அடையாளந்தெரியாத துப்பாக்கிதாரி சுட்டதில் இறப்பு நிகழ்ந்துள்ளது என்ற வழமையான முடிவு அறிவிக்கப்பட்டது.

செப்டெம்பர் 4, விசாரணைகளில் தடயங்கள் ஏதும் கண்டுபிடிக்கப்படவில்லை என்றும், இந்த வழக்கு மீண்டும் டிசம்பர் 7ம் திகதியே, மூன்று மாதங்கள் கடந்து, உள்ளூர் நீதவான் நீதிமன்றத்தில் விசாரிக்கப்படும் என்றும் தம்பலகாமம் பொலிஸ் நிலையத்தின் குற்றவியல் பிரிவின் தலைவர் சார்ஜன்ட் பெரேரா எங்களுக்கு அறிவித்தார்.

இந்தக் கொலையின் சூழ்நிலை, கைதேர்ந்த, இலக்கு வைக்கப்பட்ட கொலை என்பதை சுட்டிக் காட்டுகின்றது. இந்தக் கொலையை பாதுகாப்புப் படை, பொலிஸ் அல்லது துணைப்படைக் குழுக்களின் உறுப்பினர்களாலேயே செய்யப்பட்டது என சந்தேகிப்பதற்கு காரணங்கள் உள்ளன. இந்த முழுப் பிரதேசமும் யுத்த பிராந்தியத்தின் மத்தியில் இருப்பதோடு துருப்பக்களும், பொலிசும் மற்றும் ஊர்காவற் படையினரும் கடுமையாக ரோந்து செல்லும் பிரதேசமாகும். இரவில் பயணிக்கும் எவரும் வழமை போல் வீதித் தடைகளில் உள்ள சோதனை நிலையங்களில் சோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

இந்த விசாரணையை துரிதப்படுத்த நேரத்துடன் நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றவாளிகள் யாராக இருந்தாலும் சட்டத்தின் முன் நிறுத்தப்பட வேண்டும் என நாம் கோருகின்றோம்.

ஜே.ஜி. ஸ்பெயின்

* * *

அன்பின் ஐயா,

சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளர் சிவப்பிரகாசம் மரியதாஸ் கொலை தொடர்பான விசாரணை.

நாம் மேல் குறிப்பிடப்பட்ட வழக்கு தொடர்பாக தங்களுக்கு எழுத விரும்புகின்றோம். உயிரிழந்த திரு. மரியதாஸ், அவரது கொலை தொடர்பாக தக்க விசாரணை நடத்தக் கோரி பிரச்சாரம் செய்யும் சோசலிச சமத்துவக் கட்சியின் ஆதரவாளராவார். எங்களது தொழிற்சங்கம் இந்தப் பிரச்சாரத்தை பலமாக ஆதரிக்கின்றது.

திரு. மரியதாஸ் சோ.ச.க. யின் அரசியல் நடவடிக்கைகளுக்கு ஜனநாயக முறையில் உதவிய போதிலும், சோ.ச.க. வழங்கும் விபரங்களின்படி, அரசாங்க ஆயுதப் படைகளின் தொடர்ச்சியான அச்சுறுத்தல்களை அடுத்து திருகோணமலை மாவட்டத்தில் முல்லிப்பொத்தானையில் அவரது வீட்டில் வைத்து துரதிஷ்டவசமாக சுட்டுக்கொல்லப்பட்டுள்ளார். அவரது கொலை ஜனநாயகத்திற்கு பலத்த அடியாகும். ஆகவே உண்மையானதும் நேர்மையானதுமான விசாரணையை நடத்தி சத்தியமானளவு விரைவாக குற்றவாளிகளை சட்டத்தின் மற்றும் நியாயத்தின் முன் நிறுத்துமாறு தங்களுக்கு வேண்டுகோள் விடுக்கின்றோம்.

நன்றி.

உண்மையுள்ள,

மலையக முற்போக்கு ஆசிரியர் சங்கம், இலங்கை.