World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGermany: Terror plot carried out under police observation ஜேர்மனி: போலீஸ் கண்காணிப்பின் கீழ் நடத்தப்பட்ட பயங்கரவாத சதி By Ulrich Rippert புதனன்று அனைத்து ஜேர்மன் செய்தித்தாள்களும், பல மக்களைப் பலி கொள்ள கூடிய மிக பெரிய வெடிகுண்டு வெடிப்பிற்கான சதித்திட்டம் தீட்டியதாக சந்தேகிக்கப்பட்ட மூன்று பயங்கரவாதிகளின் கைது தொடர்பான தலைப்புச் செய்திகளை வெளியிட்டு இருந்தன. "பல உயிர்களை பலி கொள்ளக் கூடிய ஒரு "பயங்கர கொலை முயற்சி" (Spiegel Online); "ஜேர்மனியில் இதுவரை இல்லாத கோணத்தில் ஒரு பயங்கரவாதம்" (Frankfurter Allgemeine Zeitung); பாதுகாப்பு படைகளால் "கடைசி நேரத்தில்" தடுக்கப்பட்ட ஒரு சதித்திட்டம் (Lausitzer Rundschau) என்பது போன்ற பல தலைப்புகளை மற்றும் முதன்மை செய்திகளை இவை வெளியிட்டன. அதே நேரத்தில், பயங்கரவாதிகள் என சந்தேகிக்கப்படும் இந்த மூன்று நபர்களும் குறைந்தபட்சம் ஆறு மாத காலமாக 300 போலீஸ் அதிகாரிகளால் 24 மணி நேரமும் கண்காணிக்கப்பட்டதாக செய்திகள் குறிப்பிட்டன. அடையாளம் தெரியாத வினியோக வண்டிகள் மற்றும் வர்த்தக வாகனங்கள் ஒரு மூடப்பட்ட விவசாய ஆலையின் உள்ளேயும் வெளியேயும் சென்று வருவதை கிராமவாசிகள் கவனித்திருக்கும் நிலையில், 900 பேரை மட்டுமே மக்கள் தொகையாக கொண்ட Oberschledorn என்ற அந்த கிராமத்தில், இந்த சந்தேகத்திற்குரியவர்களை போலீஸ் கண்காணித்து வந்தது என்பது மிகவும் அதிகப்படியானதும் மற்றும் போலியானதுமாகும். Süddeutsche Zeitung -ன் ஒரு செய்தியாளர் கருத்துப்படி, அந்த கிராமத் தலைவர், தமது குறைகளை கடந்த திங்களன்று உள்ளூர் போலீசிடம் தெரிவித்திருக்கிறார். "தாங்கள் போலீஸ் வானலை கருவிகளின் இலக்கநுட்பவியலில் (Digitalisation) ஏதேனும் செய்தாக வேண்டும் என அவர்கள் அலுவலர்களிடம் தெரிவித்தனர்", என்று செய்தியாளர் எழுதினார். புதனன்று (05.09.2007) செய்தியாளர் கூட்டத்தில் ஜெனரல் பெடரல் அட்டார்னி மொனிக்கா ஹார்ம்ஸ் மற்றும் குற்றவியல் புலனாய்வுகள் (BKA) பிரிவின் தலைவர் Jörg Ziercke ஆகியோர் தெரிவித்திருப்பவை மட்டுமே இதுவரை தெரிந்திருக்கும் உண்மைகளாகும். ஊடகங்களின் நிகழ்வு தொகுப்புகள் பெரும்பாலும் முழுவதுமாக, ஜேர்மனியின் முன்னணி பாதுகாப்பு அமைப்புகளின் பிரதிநிதிகளால் முன்னிறுத்தப்படும் பதிப்பை சார்ந்தே இருக்கின்றன. புதனன்று (05.09.2007) செய்தியாளர் கூட்டத்தில் அளிக்கப்பட்ட தகவல்களின் அடிப்படையில், பின்வரும் விளக்கம் வெளிப்படுகிறது: நாடக பாணியில், வட ரைன்-வெஸ்ட்பாலியாவின் தென்கிழக்கில் இருக்கும் செளர்லாந்தில் உள்ள ஒரு சிறிய காட்டில், 21 மற்றும் 28 வயதான, இஸ்லாமிற்கு மாறி இருந்த இருவரை மற்றும் 28 வயதான துருக்கியர் ஒருவரையும் போலீஸ் கைது செய்தது. பெருமளவில் பலரை தாக்குதலுக்கு உட்படுத்தும் நோக்குடன் மிகப் பெரிய குண்டு வெடிப்புக்கு திட்டமிட்டதாக குற்றஞ்சாட்டி, புதனன்று (05.09.2007), மத்திய உயர்நீதிமன்ற நீதிபதி இந்த மூவருக்கும் எதிராக கைது ஆணை பிறப்பித்து இருந்தார். BKA -யின் கருத்துப்படி, சந்தேகிக்கப்பட்டவரில் ஒருவர் தப்பிக்க முயன்றதுடன், போலீஸ் அலுவலரின் பாதுகாப்பு ஆயுதத்தையும் பறித்தார். போலீஸ் அதிகாரி சுடப்பட்டு சிறு காயமடைந்த அச்சம்பவத்தில், சந்தேகப்பட்டவர் தலையில் அடிப்பட்டதுடன், அவரிடம் இருந்து உடனடியாக ஆயுதமும் பறிக்கப்பட்டது. இதன் பின்னர், பல்வேறு மாநிலங்களில் 41 இடங்களில் தேடுதல் நடத்தப்பட்டன. ஒட்டுமொத்தமாக, பத்து பேர்கள் விசாரணையின் கீழ் உள்ளனர், இதில் மூன்று பேர் வெளிநாடுகளில் உள்ளனர்.கைது செய்யபட்ட மூன்று பேர்களும், இஸ்லாமிக் ஜிஹாத் அமைப்பின் சர்வதேச பயங்கரவாத வலையமைப்பின் உறுப்பினர்கள் என குற்றஞ்சாட்டப்பட்டு உள்ளனர். பெடரல் அட்டார்னி ஹார்ம்ஸின் தகவல்படி, ஜிஹாத் அமைப்பு, உஸ்பெகிஸ்தான் இஸ்லாமிய அமைப்புடன் (Uzbekistan Islamic Movement -IMU) தொடர்பு கொண்டிருக்கிறது. இது 2004-ல் உஸ்பெகிஸ்தானின் தலைநகர் தாஷ்கண்டில் நடந்த தற்கொலை குண்டுவெடிப்பிற்கு பொறுப்பு ஏற்று கொண்டிருக்கிறது. IMU குறிப்பாக மத்திய ஆசியாவில் செயல்பட்டு வருவதுடன், பாகிஸ்தானில் இது ஒரு மிக வலுவான அடித்தளத்தை கொண்டிருக்கலாம் என கூறப்படுகிறது. 2006-ம் ஆண்டின் ஒரு குளிர்காலத்தில், ஜேர்மனியில் உறுப்பினர்களை நியமிப்பது மற்றும் தாக்குதலுக்கு தயார்படுத்துவது என்ற நோக்கத்தில் ஒரு ஜேர்மன் குழு சட்டவிரோதமாக ஏற்படுத்தப்பட்டது. இந்த மூவரும் பாகிஸ்தானுடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்றும், குறைந்தபட்சம் அவர்களில் ஒருவர் சில மாதங்கள் ஒரு பயங்கரவாத பயிற்சி முகாமில் இருந்திருக்கலாம் என்றும் குற்றஞ்சாட்டப்பட்டுள்ளனர். இந்த மூன்று பேர்களும் ஏற்கனவே தங்களின் பக்கம் டிசம்பர் 31-ல் கவனத்தை ஈர்த்திருக்கிறார்கள். இவர்களில் ஒருவரான ஃபிரிட்ஷ் கிலொவிக்ஜ், ஹனாயில் உள்ள அமெரிக்க படைத்தளங்களை சுற்றி பல தடவைகள் சென்றிருந்தபோது கவனிக்கப்பட்டு இருக்கிறார். இது "ஒரு சாதகமான இலக்கை குறிவைக்கும்" ஒரு முயற்சியாக இருந்தது மற்றும் அவர்கள் தங்களின் கவனத்தை தீவிரப்படுத்தினர் என புலனாய்வாளர்கள் கூறுகின்றனர். இந்த ஆண்டின் மார்ச் மாதத்தில், தலைமை மத்திய சட்ட வழக்கறிஞர் ஓர் உத்தியோகபூர்வ விசாரணையை தொடங்கினார். அதிலிருந்து, இந்த குழுவால் எடுக்கப்பட்ட ஒவ்வொரு அசைவையும் போலீஸ் புலனாய்வாளர்கள் கண்காணித்திருக்கின்றனர். இந்த சந்தேகத்திற்குரியவர்கள், வெடிகுண்டுகள் தயாரிக்க உதவும் 730 கிலோ ஹைட்ரஜன் பெராக்ஸைடு கொண்ட 12 பீப்பாய்களை எவ்வாறு வாங்கினார்கள் என்பதை அவர்கள் கண்காணித்தார்கள். BKA தகவல்களின்படி, 550 கிலோ அளவிலான டிஎன்டி -க்குச் சமமான இது, ஒரு மிகப் பெரிய வெடிகுண்டு தாக்குதலை நடத்த போதுமானதாகும். மட்ரிட் மற்றும் லண்டனில் நடந்த பயங்கர வெடிகுண்டு தாக்குதலில் பயன்படுத்தப்பட்ட சாதனங்களை விட இந்த வெடிகுண்டுகளின் திறன் அதிகமாக இருக்கலாம் என BKA தலைவர் ஜோர்ஜ் ஜியர்க்கே தெரிவித்தார். ஜியர்க்கே மேலும் கூறுகையில், போலீசின் காவல்துறையின் அதிரடி நடவடிக்கைகள் மூலம் மக்கள் மீதான மிகப் பெரிய ஆபத்து தடுக்கப்பட்டு இருக்கிறது என கூறினார். சில வாரங்களுக்கு முன்னர் பீப்பாய்கள் வைக்கப்பட்டிருந்த மற்றும் குறைவான வீரியமும், குறைவான அபாயமும் கொண்ட பொருளுக்கு மாற்றாக அதிக வீரியமிக்க வெடிக்கக்கூடிய திரவங்களை பரிமாறிக் கொள்ளும் கிடங்கில் நுழைவதை முயன்று பெற்றிருந்தது. செய்தியாளர்களின் தகவல்கள்படி, ஜிஹாத் ஒன்றிய குழுவிற்கு எதிராக போலீஸ் அனுப்பப்பட்டது என்பது முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் ஷ்லெயெர் கடத்தலுக்கு பின்னர் செய்யப்பட்ட "ஒரு மிகப் பெரிய போலீஸ் அனுப்புகை" ஆகும். 300 போலீஸ் அதிகாரிகளின் 24 மணி நேர கண்காணிப்பிற்கும் கூடுதலாக, சந்தேகிக்கப்பட்டவர்களை கைது செய்வதில் மேலும் 300 அதிகாரிகள் ஈடுபடுத்தப்பட்டனர். இவ்விடத்தில் ஒரு விடையம் தெளிவாக இல்லை, அதாவது, போலீசின் கண்காணிப்பு குழுக்களுக்கு கூடுதலாக, BKA -யின் கீழ் மறைந்திருக்கும் முகவர்களும் இந்த திட்டத்தில் ஈடுபடுத்தப்பட்டனர். சதித்திட்டம் இருப்பதாக எந்தவொரு முடிவையும் செய்ய முடியாத நிலையும் மற்றும் பயங்கரமான ஆபத்து எதுவும் இருக்காது என அனுமானிப்பதும் கணிப்பதும் தவறாக போகலாம் என்ற நிலையில், இந்த மொத்த விவகாரமும் பாதுகாப்பு முகவாண்மைகளின் ஒரு எளிய இட்டுக்கட்டுதலாக இருந்தது. எவ்வாறிருப்பினும், ஏற்கனவே தெரிந்த உண்மைகளின் அடிப்படையில் தெளிவாவது என்னவென்றால், ஹார்ம்ஸின் வார்த்தைகளின்படி, "இன்றைய நிலையில் மிக மோசமான செயலான பயங்கரவாத தாக்குதலுக்கு திட்டமிடுதல்" என்பது போலீசின் மற்றும் ஜேர்மனியின் முன்னணி பாதுகாப்பு முகவாண்மைகளின் கண்காணிப்பின் கீழேயே நடந்தது என்பது தான். ஒரு கேள்வி எழுகிறது: இது போன்ற சட்டத்திற்கு எதிரான திட்டங்களை தடுக்க பாதுகாப்பு படைகள் ஏன் ஆரம்ப நாட்களிலேயே தலையிடவில்லை? கணிப்பின்படி, மக்களுக்கு கடுமையான ஆபத்து ஏற்படுத்தும் இது போன்ற திட்டங்கள் முழுமை நிலையை அடைவதற்கு முன்னதாகவே தடுப்பது தான் போலீசின் பணியாகும். ஏன் இந்த சதி தற்போது வெளியிடப்பட்டு இருக்கின்றன? குறிப்பிட்ட காலம் வரை பாதுகாப்பு படைகளால் அறியப்பட்டு இருந்த ஒன்று ஏன் தற்போது பொதுவில் கொண்டு வரப்பட்டு இருக்கிறது? அரசியல் விவகாரங்கள் இதில் பங்கு வகிக்கின்றனவா? அரசியலுக்கு சாதகமான காலத்தில் இந்த சதியை வெளிப்படுத்த ஏதேனும் முடிவு இருந்ததா, நாட்டின் சாதனங்களை வலுப்படுத்த, வசதியான திட்டங்கள் செயல்படுத்த மற்றும் தனியார் கணினிகளின் இணைய வழி தேடல்கள் சார்ந்து உள்துறை அமைச்சர் Wolfgang Schaüble (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்) நீண்ட காலமாக நடத்தி வரும் பிரச்சாரத்திற்கு வலு சேர்க்க என - இந்த முறைமை தற்போது வரை பொதுமக்களின் கணிசமான எதிர்ப்பை சந்தித்திருக்கிறது. ஒரு "இஸ்லாமிய பயங்கரவாத தாக்குதலுக்கான" ஆயத்தப்பணி பற்றிய ஆச்சரியப்படுத்தும் பகிரங்கத்திற்கு சில நாட்களுக்கு முன்பு தான், வெளியுறவுக் கொள்கைக்கான (DGAP) அரை அரசாங்கம் சார்ந்த ஜேர்மன் சமூகத்தால் வெளியிடப்படும் சர்வதேச கொள்கைகளுக்கான மாத இதழ், "ஐரோப்பாவில் இஸ்லாம் - இலாபமா அல்லது அபாயமா?" என்ற ஒரு கவனத்தை ஈர்க்கும் தலைப்புடன் வெளிவந்தது. அந்த இதழின் தலையங்கம் குறிப்பிட்டிருப்பதாவது: "உண்மையில், ஐரோப்பாவில் குண்டுகளை வீசி வருவது முதலாக, இரயில்களை கொளுத்துவது, திரைப்பட தயாரிப்பாளர்களை கொல்வது மற்றும் இளம் முஸ்லிம்களை செயல்குலைப்பது போன்றவைகளால் இஸ்லாமிய அடிப்படைவாதிகள் பாரீஸின் நகரப்பகுதிகளில் நெருப்பூட்டி வருகிறார்கள். இந்த கண்டத்தில் அவர்களுடன் சுமார் 15 மில்லியன் முஸ்லீம்கள் வாழ்ந்து வருவதை பெரும்பான்மை ஐரோப்பிய சமூகம் உணர வேண்டும்..." எனக் குறிப்பிடுகிறது. இதிலிருந்து தெளிவாவது என்னவென்றால், பிற்போக்கான நோக்கங்களுக்காக பயங்கரவாத தாக்குதலுக்கான திட்டங்கள் பகிரங்கப்படுத்தப்பட்டு இருக்கின்றன என்பது தான். "ஜேர்மன் கலாச்சாரத்தை பலப்படுத்த" கடந்த வார இறுதியில் சிடியு கட்சி காங்கிரசில் அழைப்பு விடுத்த கிறிஸ்துவ ஜனநாயக யூனியனின் அதிபர் அங்கேலா மேர்க்கெல், புலனாய்வு ஆணையங்களுக்கு, அவைகளின் "பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில்" சமீபத்தில் கிடைத்திருக்கும் வெற்றிக்காக, தமது "வாழ்த்தை, நன்றியை மற்றும் ஏற்பை" தெரிவித்திருந்தார். அவர் மேலும் கூறுகையில், இங்கு நமக்கிருக்கும் பயங்கரவாதத்தின் ஆபத்து மறைமுகமாக இல்லை, நேரடியாகவே இருக்கிறது என்பதையே இந்த கைது நடவடிக்கை காட்டுவதாக அவர் குறிப்பிட்டார். மேலும், முன்னெச்சரிக்கை முறைமைகளின் முக்கியத்துவங்கள் குறித்தும் அவர் வலியுறுத்தினார். உள்துறை அமைச்சர் Schaüble மிகவும் மழுங்கி போய் இருக்கிறார். சர்வதேச பயங்கரவாதம் என்பது ஜேர்மன் படையினர்கள் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் உதவி பணியாளர்கள் மற்றும் ஜேர்மனியில் இருக்கும் அமெரிக்க நிறுவனங்களுக்கு எதிராக மட்டும் செயல்படவில்லை என அவர் வலியுறுத்தினார். ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத எதிர்ப்பு துருப்பாக ஜேர்மானிய ஆயுத படைகள் நிறுத்தப்பட வேண்டும் என்பதை நியாயப்படுத்தவும் மற்றும் இந்த மாதத்திற்கு பின்னர் ஆப்கானிஸ்தான் யுத்தத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்த அழைப்பு விடுத்திருக்கும் யுத்த எதிர்ப்பாளர்களை பயமுறுத்தவும், Schäuble பயங்கரவாத தாக்குதல்கள் மீதான அச்சத்தை வெளிப்படுத்திக் கொண்டிருந்தார். இந்த வாரத்தின் பிற்பகுதியில் நாடுகளின் உள்துறை அமைச்சர்களின் ஒரு சிறப்பு கூட்டத்திற்கு Schäuble அழைப்பு விடுத்திருந்தார். இந்த குழுவின் தலைவராக உள்ள பேர்லின் செனட்டர் Erhart Körting (சமூக ஜனநாயக கட்சி) இதற்கு உடனடியாக பதில் அளித்திருப்பதுடன், வெள்ளிக்கிழமை ஒரு கூட்டத்திற்கும் அழைப்பு விடுத்திருக்கிறார். Schäuble -ன் கருத்துப்படி, கணினிகளில் இணைய வழி தேடுபவர்களுக்கான அவரின் சட்ட இசைவாணையின் கோரிக்கை மேசையில் தங்கி இருப்பதுடன், முக்கியத்துவத்தையும் பெற்று வருகிறது. தாம் இந்த விவாதத்தை இன்று தொடங்க விரும்பவில்லை என தெரிவித்த அவர், பயங்கரவாதிகள் அவர்களின் பெரிய சதி வேலைகளுக்கு அனைத்து வகையான நவீன தொலைத்தொடர்பு வசதிகளை பயன்படுத்தி வருவதாகவும், இணையம் வழியாகவும் கணிசமான அளவிற்கு விரிவாக தொடர்பு கொண்டு வருவதாகவும் தெரிவித்தார்.பவேரியன் உள்துறை அமைச்சர் Günther Beckstein -னின் (கிறிஸ்துவ சமூக யூனியன் - CSU) கருத்துப்படி, சந்தேகத்திற்குரியவர்களில் ஒருவர் முனீச் நகரத்தில் இருந்து வந்தார். அம்மனிதன் பக்கத்து மாநிலமான Baden-Württemberg- ல் பல ஆண்டுகள் வசித்திருக்கிறார், ஆனால் அவர் தமது பிறப்பிடத்துடன் தொடர்புகளை பாராமரித்துக்கொண்டிருந்ததால், அவரை கண்காணிப்பதில் பவேரியன் பாதுகாப்பு ஆணையம் ஈடுபடுத்தப்பட்டு இருந்தது என்பதை Beckstein உறுதிப்படுத்தினார். அந்த சந்தேகத்திற்குரியவர் ஒரு சில வாரங்களுக்கு முன்பாக பவேரியாவில் உள்ள பழக்கமானவர்களை சந்தித்திருப்பதாகவும், அவர்கள் "இணையத்தில் இஸ்லாமிய வலைத் தளங்களை உருவாக்கியதாகவும்" Beckstein தெரிவித்தார். அவர் மேலும் கூறுகையில், தனியார் கணினிகளில் இணைய வழி தேடல்கள் செய்வதற்காக உள்துறை அமைச்சர் Schäuble -ஆல் வலியுறுத்தப்பட்ட அதிகாரம், பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் "ஒரு அசாதாரண முக்கியத்துவமும் மற்றும் பயனுள்ள முறைமையையும் கொண்டிருப்பதை" இது காட்டுகிறது என அவர் தெரிவித்தார். அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யு. புஷ், ஜேர்மன் ஆணையங்களை அவற்றின் "வெற்றிக்காக" பாராட்டி இருக்கிறார் மற்றும் புலனாய்வு ஆணையங்களிடையேயான தன்னிகரில்லா சர்வதேச கூட்டுறவை கண்டு ஜனாதிபதி மிகவும் மகிழ்ச்சி அடைந்திருப்பதாக அவரின் உதவியாளர் கோர்டொன் ஜோன்ட்ரோ தெரிவித்திருக்கிறார். ஜேர்மனியில் நடந்திருக்கும் கைது நடவடிக்கை உலகளவிலான பயங்கரவாத அச்சுறுத்தலை கோடிட்டுக்காட்டுகிறது என அவர் கூறினார். இரும்பு பழுத்திருப்பது போல விடையம் முற்றி இருப்பதாலும் மற்றும் ஜனநாயக உரிமைகளின் மீதான கடுமையான தாக்குதல்களும், அரசின், போலீசின் அதிகாரத்தை உயர்த்துவதற்கான Schäuble-இன் திட்டங்களுக்கான ஆதரவும் உள்துறை அமைச்சர்களின் சிறப்பு கூட்டம் காற்றுள்ளபோதே தூற்றிக் கொள்ளுவது போல் நடக்கிறதோ என்ற சிறிய சந்தேகமும் இருக்கிறது. |