WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Greens to hold special party congress on
Afghanistan
ஜேர்மனி: பசுமைக் கட்சியினர் ஆப்கானிஸ்தான் பற்றி சிறப்புக் கட்சி மாநாட்டை கூட்ட
உள்ளனர்
By Dietmar Henning
14 September 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
செப்டம்பர் 15ம் தேதி, ஜேர்மனிய பசுமைக் கட்சி, ஆப்கானிஸ்தானில் ஜேர்மன்
இராணுவத்தை (Bundeswehr)
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது தொடரப்படலாமா என்பது பற்றிய அடுத்த மாத
பாராளுமன்ற வாக்கெடுப்பில் தன்னுடைய அணுகுமுறையை விவாதிப்பதற்காக கூடுகிறது.
பசுமைக் கட்சியினர் இடையே சர்வதேச பாதுகாப்பு உதவிப் படைகள் (ISAF),
ஐக்கிய நாடுகள் கட்டுப்பாட்டின்கீழ் நிறுத்தப்படுவது தொடரப்பட வேண்டும் என்ற பரந்த உடன்பாடு உள்ளது. நிறுத்தி
வைக்கப்பட்டுள்ள 3,200 ஜேர்மனிய இராணுவத்தினரில் பெரும்பாலானவர்கள்
ISAF இன் ஒரு
பிரிவினராகும்.
2001ல் சமூக ஜனநாயக கட்சியுடன் இணைந்து பசுமைக் கட்சியினர் அரசாங்கத்தை
அமைத்திருந்த போது, அவர்கள் சிறிதும் தயக்கம் காட்டாமல் ஆப்கானிஸ்தானிற்கு இராணுவத்தினை அனுப்பினர்; இப்பொழுதும்
அதே ஆதரவைக் கொடுக்கின்றனர். பசுமைக் கட்சியின் நிறுவன உறுப்பினர்களில் ஒருவரான
Tom Koenigs
இப்பொழுது ஆப்கானிஸ்தானில் ஐக்கிய நாடுகள் சபையின் ஒரு சிறப்பு தூதராக உள்ளார்.
Koenigs பல செய்தியாளர்
கூட்டங்கள் இன்னும் கூடுதலான படைகள் ஆப்கானிஸ்தானில் நிறுத்தி வைக்கப்பட வேண்டும் என்று கூறியுள்ளார்.
ஆனால் அமெரிக்கத் தலைமையிலான நீடித்த விடுதலைக்கான நடவடிக்கை என்பதின்
கீழ் (Operation Enduring Freedom-
OEF)
இருக்கும் படைகள் தொடர்ந்து நிறுத்தப்படுவதற்கு பசுமைக் கட்சியினர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; இதிலும்
கட்சியில் பரந்த அளவு உடன்பாடு உள்ளது.
பசுமைக் கட்சியினர் முன்னதாக நீடித்த விடுதலைக்கான நடவடிக்கையில் ஜேர்மனி
பங்கு பெறுவதை ஆதரித்தனர். கட்சியின் தலைவரான
Claudia Roth 2001ல் கீழ்க்கண்ட விதத்தில் அதை
நியாயப்படுத்தினார்: "ஒரு நாடு, ஒரு சமயம் என்பவற்றிற்கு எதிரான போர் என்ற பிரச்சினை அல்ல இது;
பயங்கரவாதத்திற்கு எதிரான போராகும்; இதையொட்டி போலீஸ், இராணுவ அடக்குமுறை பயன்படுத்தப்படுவதை
நான் ஒதுக்க மாட்டேன்."
ஆனால் ஆப்கானிஸ்தானில் அமெரிக்க இராணுவம் மற்றும் நீடித்த விடுதலைக்கான
நடவடிக்கையுடன் தொடர்பு கொள்ளுவது தவிர்க்கப்படுதல் ஜேர்மனிய நலன்களுக்கு இன்னும் நல்லது என்ற முடிவிற்கு
பின்னர் கட்சி வந்துள்ளது. நீடித்த விடுதலைக்கான நடவடிக்கை திட்டத்தை முடிப்பது என்பது கடினம் அல்ல;
ஏனெனில் ஜேர்மனிய சிறப்புப் படைகள் பிரிவில் இருந்து 100 பேர்தான் நீடித்த விடுதலைக்கான நடவடிக்கையுடன்
தொடர்பு கொண்டுள்ளனர். மேலும், ஜேர்மன் இராணுவத்தின் கருத்தின்படி இப்படைகள் இரண்டு ஆண்டுகளுக்கும்
மேலாக தீவிர செயற்பாடுகள் எதிலும் ஈடுபடவில்லை.
மூன்றாம் மற்றும் கடைசி ஆப்கானிஸ்தானில் இருப்பது தொடர்பான கட்டளை பற்றி
மட்டுமே கருத்து வேறுபாடுகள் இருக்கத்தான் செய்கின்றன. இவ்வாண்டு வசந்த காலத்தில் இருந்து ஆறு ஜேர்மனிய
டொர்னாடோ ஜெட் போர்விமானங்கள் ஆப்கானிஸ்தானில் இலக்குகளை கண்டறிவதற்கு ஈடுபடுத்தப்பட்டு
IASF, OEF
இரண்டிற்குமே இலக்குகள் பற்றிய விவரங்களை கொடுத்துள்ளன.
பசுமைக் கட்சியினர் இந்த ஆண்டு மார்ச் மாதம் டொர்னாடோ
பயன்படுத்தப்படுவதற்கு ஜேர்மனிய பாராளுமன்றம் உடன்பட்டபோதும் ஒருமனதான கருத்துக்களை
கொண்டிருக்கவில்லை. பசுமைக் கட்சி பிரதிநிதிகளில் 26 பேர் ஆதரித்தும் 25 பேர் எதிர்த்து அல்லது
வாக்களிப்பில் கலந்துகொள்ளாத நிலைப்பாட்டையும் கொண்டனர். இதற்கிடையில் நிலைமை இன்னும் சிக்கல்
வாய்ந்ததாக மாறியுள்ளது. அக்டோபர் மாதம் அரசாங்கம்
ISAF நிலைப்பாடு
மற்றும் டொர்னாடோ பயன்படுத்தப்படுவது இரண்டின்மீதும் ஒரே வாக்கெடுப்பு வேண்டும் (முன்னர் தனித்தனி
வாக்ககெடுப்பு நடாத்தப்பட்டது) என்ற திட்டத்தை முன்வைக்க உள்ளது.
இது பசுமைக் கட்சி உறுப்பினர்களை எப்படிச் செயல்படலாம் என்ற பிரச்சினையுள்
தள்ளியுள்ளது. இணைந்த தீர்மானத்திற்கு "சரி" என அவர்கள் வாக்களித்து டொர்னாடோ பயன்படுத்தப்படுவதற்கு
ஆதரவு கொடுக்கலாம்; ஆனால் அதற்குச் சிலர் எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர். அவர்கள் வாக்களிக்காமல்
இருக்கலாம் அல்லது அனைத்து பிரதிநிதிகளும் ISAF
பணியை ஆதரித்தாலும்கூட, தீர்மானத்திற்கு எதிராக வாக்கு அளிக்கலாம்.
இறுதி முடிவு கட்டுப்படுத்தும் விளைவைக் கொண்டிராது. அரசியலமைப்பின்படி,
பாராளுமன்ற வாக்குகள் ஒவ்வொரு பிரதிநிதியின் "மனச்சாட்சிப்படி" என உள்ளன. மேலும் பசுமைக் கட்சியினர்
வாக்களிக்கும் முறை பாராளுமன்றத்தின் முடிவில் சிறிதும் செல்வாக்கை பெற்றிராது; ஏனெனில் அரசாங்க கூட்டணி,
தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் போதுமான பெரும்பான்மையை கொண்டுள்ளது.
இப்பிரச்சினையை சந்திக்கும் வகையில், கட்சித் தலைமை பசுமைக் கட்சியின் சிறப்பு
மாநாட்டிற்கு ஒரு முன்கருத்து தீர்மானத்தை கொடுத்துள்ளது. "IASF
பின்னணியின் டொர்னாடோவை பயன்படுத்தப்படுவது அரசாங்கத்தின் திட்டங்களுக்கு பாராளுமன்றத்தில் நாம்
உடன்படுகிறோமா என்பது ...கட்சிக்குள்ளும் பாராளுமன்ற குழுவிற்குள்ளும் கோடை காலத்தில் இருந்து பூசலுக்கு
உட்பட்டுள்ளது" என்று தீர்மானம் கூறுகிறது. "இரு நிலைப்பாடுகளுக்குமே தக்க காரணங்கள் இருந்தன.
Alliance 90/
பசுமைக் கட்சியின்(உத்தியோகபூர்வ பெயர்) உடைய கருத்தில், கடந்த
விவாதங்கள், தற்பொழுது உள்ள நிலை இரண்டுமே தொடர்ந்து டொர்னாடோ பயன்படுத்தப்படுவதற்கு சாதகம்,
பாதகம் இரண்டையும் கொண்டுள்ளன."
கட்சியின் சிறப்பு மாநாடு இதைப் பற்றி ஆதரித்து அல்லது எதிர்த்து
வாக்களிக்கலாமா, அல்லது மூன்றாவது விருப்புரிமையான வாக்கெடுப்பில் கலந்து கொள்ளாமல் இருக்கலாமா,
என்பதை தீர்மானிக்க உள்ளது. ஆனால் ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய இராணுவத் தலையீட்டிற்கு தனது தொடர்ந்த
ஆதரவு உண்டு என்பதை கட்சி தெளிவாக்கியுள்ளது. "பாராளுமன்றப் பிரிவு வாக்கெடுப்பின்போது கலந்து
கொள்ளாதது என்பது IASF
க்கு கொள்கையளவில் நாம் கொடுத்துள்ள ஆதரவின் பின்னணியில் பொதுமறுசீரமைப்பை பாதுகாப்பதற்கு உகந்த
வழிவகையா என்று தீர்மானிக்க வேண்டும்; மேலும் இப்பொழுது அரசாங்கம் எடுத்துவரும் போக்கை மற்றும் அதன்
தந்திரோபாய நடவடிக்கைகள் பற்றிய எமது அதிருப்தியை எங்ஙனம் தெரிவிப்பது என்றும் தீர்மானிக்க வேண்டும்."
முந்தைய பசுமைக் கட்சி மாநாடுகளின் அனுபவங்களை கொண்டு பார்த்தால், இந்த
விவாதம் கடுமையாகவும், ஆர்வத்துடனும், சில நேரங்களில் கண்ணீருடனும் விவாதிக்கப்படலாம் என
எதிர்பார்க்கலாம்; ஆனால் முக்கிய பிரச்சினையான ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவப் படைகளை
ISAF
கட்டுப்பாட்டின் ஒரு பகுதியாக நிறுத்தி வைப்பது என்பதில் மாற்றும் ஏதும் இராது.
ஆப்கானிஸ்தானில் இருக்கும் உண்மைநிலை விவாதத்தில் இருந்து ஒதுக்கி
வைக்கப்படுகிறது: அதாவது பல ஆயிரக்கணக்கான இறந்து விட்ட சாதாரண குடிமக்கள், சாதாரண மக்களுடைய
வாழ்க்கையில் வந்துள்ள போரின் பேரழிவு விளைவுகள், ஊழல் நலிந்த கைப்பாவைகளின் அதிகாரம், ஆக்கிரமிப்புப்
படைகளினால் பாதுகாக்கப்படும் போதைத் தயாரிப்பு பிரபுக்கள், பெரிய சக்திகளின் ஏகாதிபத்திய நலன்கள்
ஆகியவை பற்றி விவாதம் இருக்காது.
இறுதியில், பசுமைவாதிகள் ஆப்கானிஸ்தானில் ஜேர்மன் இராணுவ நடவடிக்கைக்கு
உறுதியாக ஆதரவு கொடுப்பர். ஆறு ஆண்டுகள் போருக்குப் பின்னர், ஆப்கானிஸ்தானில் ஜேர்மனிய ஆயுதப்
படைகளுக்கு ஒரு முற்போக்கான பங்கைக் கொடுக்க மனோதத்துவரீதியாக அடக்குமுறையை கையாண்டால்தான்
முடியும். ஆனால் தாமே திருப்தி அடைந்துகொண்டு, தங்களைப் பற்றி மட்டுமே நினைப்பதில் பொழுதைக்
கழித்துவிடும் பசுமைவாதிகள் சாதாரண மக்களின் விதி பற்றி ஏளனமும் அக்கறையின்மையும்தான் கொண்டுள்ளனர்
அவ்வாறு செய்கையில், அவர்கள் ஜேர்மனிய ஏகாதிபத்தியத்தின் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய தூணாக
விளங்குகின்றனர்.
பசுமைவாதிகளின் வலதுபுற வளர்ச்சி
ஆப்கானிஸ்தான் பற்றிய பசுமைக் கட்சியின் நிலைப்பாடு கட்சியின் தொடர்ந்த
வலதுபுறப் போக்கின் ஒரு பகுதியே ஆகும். நீடித்த விடுதலை நடவடிக்கைக்கு எதிராக பசுமை வாதிகள்
இப்பொழுது இருக்கின்றனர் என்றால், இது அவர்களுடைய முந்தைய சமாதான நிலைப்பாட்டிற்கு திரும்புதல் என்ற
பொருளைப் பிரதிபலிக்காது. சாதாரணமாகக் கூறவேண்டும் என்றால்,
ISAF க்கு ஆதரவு
கொடுத்து அதே நேரத்தில் அமெரிக்க ஆதிக்கத்திற்கு உட்பட்ட நீடித்த விடுதலைக்கான நடவடிக்கைக்கு ஆதரவை
கொடுக்க மறுக்கும் அவர்களுடைய நிலைப்பாடு, "இராணுவவாதத்தை -- ஏற்கிறோம்; ஆனால் அமெரிக்க
நலன்களுக்காக அல்ல, ஜேர்மனிய விருப்பங்களை ஒட்டி." என்ற விதத்தில்தான் உள்ளது.
வாஷிங்டனின் ஆக்கிரோஷமான வெளியுறவுக் கொள்கை, ஈராக்கில் அமெரிக்க
சங்கடம் இவற்றின் அடிப்படையில், ஜேர்மனியில் இருக்கும் ஆளும் வர்க்கம் தன்னுடைய சர்வதேச பொருளாதார,
புவி மூலோபாய நலன்களை கூடுதலான உறுதிப்பாட்டுடன் தொடர்கிறது.
முன்னாள் பசுமைக் கட்சியின் வெளியுறவு மந்திரியான ஜோஷ்கா பிஷ்ஷர் வெளியுறவு,
பாதுகாப்புக் கொள்கையில் கூடுதலான ஜேர்மனிய பொறுப்பு வேண்டும் என்று உரத்த குரலில் வாதிட்டு வருகிறார்.
மார்ச் மாதம் நடுப்பகுதியில் Berlin Humboldt
பல்கலைக்கழகத்தில் நிகழ்த்திய உரை ஒன்றில் பிஷ்ஷர் ஜேர்மனிய
தலைமையில் ஐரோப்பா, "அமெரிக்கர்கள் ஒருதலைப்பட்சக் கொள்கையின் விளைவாக, தாங்களே எடுத்துக்
கொண்ட வலுவற்ற தன்மையில் இருந்து தோன்றியுள்ள பிரச்சினைகளை தீர்க்க வேண்டும்" என்று கூறினார். ஜேர்மனி
மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இன்னும் வலுவான இராணுவ நிலைப்பாட்டைக் கொள்ள வேண்டும் என்பதற்கு ஒப்புதல்
தெரிவித்தார்.
கடந்த பத்து ஆண்டுகளில் ஜேர்மனிய இராணுவவாதத்தை முன்கொண்டு செல்ல
பசுமைவாதிகள் முக்கிய பங்கைக் கொண்டுள்ளனர். 1998ல் கூட்டாட்சி அரசாங்கத்தில் அவர்கள் சேர்க்கப்பட்டது
யூகோஸ்லாவிய போருக்கு எதிராக அவர்கள் கொடுத்த இசைவின் அடிப்படையில்தான். அரசாங்கத்தில் அதன் பின்
அவர்கள் நாட்டின் இராணுவப் பணிகள் பால்கன்கள், ஆபிரிக்கா, ஆப்கானிஸ்தான் ஆகியவற்றில் நடத்தப்படுவதற்கு
ஆதரவு கொடுத்தனர்.
இந்த நடவடிக்கைகளை சமாதான வகை அலுப்புச் சொற்கள் மூலம் அவர்கள்
மறைக்க முற்பட்டனர்: நாட்டு இராணுவம் ஒரு "சமாதானம் காக்கும்" படை, அது "ஜனநாயகம்",
"சுதந்திரம்" ஆகியவற்றிற்குப் போராடுகிறது", பால்கன்களில் ஒரு புதிய "Auschwitz"
(நாஜிகளின் கொலை முகாம்) ஏற்படக்கூடியதை அது தடுக்கிறது
என்றெல்லாம் அவர்கள் கூறுகின்றனர். ஆனால் ஜேர்மனிய வெளியுறவுக் கொள்கையின் ஏகாதிபத்திய இலக்குகளை
இவ்விதத்தில் மூடிமறைக்கும் முயற்சிகள் அதிகரித்த முறையில் கடினமாகி வருகின்றன.
ஆரம்பத்தில் இருந்தே, ஆப்கானிஸ்தானிற்கு எதிரான போர் என்பது, மத்திய
ஆசியா, மத்திய கிழக்கு மற்றும் சீனா என்பவற்றின் அருகில் நெருக்கமாக இருப்பதால் உள்ள அந்நாட்டின்
மகத்தான பூகோள மூலோபாய முக்கியத்துவத்தை எண்ணெய் வளத்தை கட்டுப்படுத்தும் வகைத் தன்மையினால்
உந்துதல் பெற்றது. தன்னுடைய இராணுவத் தலையீட்டினால் சமூக ஜனநாயகக் கட்சி-பசுமைக் கட்சி அரசாங்கம்
மற்ற பெரும் சக்திகள் உலகத்தை மீண்டும் துண்டாட தொடங்கும்போது தாங்கள் வெறுமே பார்த்துக் கொண்டு
இருக்கமாட்டோம் என்பதைத்தான் அடையாளம் காட்டியது.
உள்நாட்டுக் கொள்கையில், பசுமை வாதிகள் இன்னும் நெருக்கமாக கிறிஸ்தவ
ஜனநாயக யூனியன்/
கிறிஸ்தவ சமூக யூனியன் (CDU/CSU)
இல் இருக்கும் கிறிஸ்துவ ஜனநாயகவாதிகளிடம் நகர்ந்து
வருகின்றனர். சமூகக் கொள்கையில் அவர்கள் "Hartz"
சமூகநலச் சீர்திருத்தங்கள் மற்றும் பொதுநலச் செலவினக் குறைப்பிற்கு தீவிர ஆர்வத்தை தொடர்ந்து கொடுத்து
வருகின்றனர். சமீபத்தில் அவர்கள் உடன்பட்டுள்ள பொருளாதாரத் திட்டத்தின் ஒரு பகுதி ஜேர்மன் தாராளவாத
கட்சி (FDP)
வலதுசாரி பிரிவானரால் எழுதப்பட்டது என்று கூடக் கூறப்படலாம்.
சுற்றுச் சூழல் கொள்கையில் அதிபர் அங்கேலா மேர்க்கெல் (CDU)
மீது அவர்கள் புகழாரத்தை கொட்டுகின்றனர்; அந்த அம்மையார் சமீபத்தில்தான் வெப்பதட்ப மாறுதலை
குறைக்கும் நடவடிக்கைகளை வாதிடுவதில் வாக்காளர்களை ஈர்க்கும் நலன் இருப்பதை கண்டுபிடித்துள்ளார். அதிபர்
சீனாவிற்கு அண்மையில் சென்றிருந்தபோது, வெப்ப மாற்றம் மற்றும் மனித உரிமைகள் பற்றி ஒன்றுடன் ஒன்று
தொடர்புபடுத்தாது குறிப்பிட்டுப் பேசியதைக் கூட, பசுமைக் கட்சியின் தலைவர்
Butikofer
புகழ்ந்து, "சீனாவுடன் தெளிவான மொழியில் பேசுவது மிகவும் சரியே" என்றார்.
"அவருக்கு மரியாதை செலுத்த என்னுடைய தொப்பியை எடுத்து வணக்கம்
செலுத்துகிறேன்" என்று கட்சித் தலைவர் Claudia
Roth பின்னர் கூறினார். அவருக்கு முன் பதவியில் இருந்தவர்கள்
கடைபிடித்த முறையை விட மேர்க்கெலின் வழிவகை "உவக்கும் வகையில்" மாறுபட்டுள்ளது, எல்லாவற்றிற்கும் மேலாக
சமூக ஜனநாயக ஹெகாாாட் ஷ்ரோடர் வழிவகையைவிட என்று ரோத் கூறினார். முன்னாள் பசுமைக் கட்சியின் சுற்றுச்
சூழல் மந்திரியான Jurgen Trittin
"அங்கேலா மேர்க்கெல் சீனாவில் மனித உரிமைகள் தலைப்பை எழுப்பிய விதம்"
மிகவும் பாராட்டிற்கு உரியது என்றார்.
பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பிரிவின் தலைவர்களான
Fritz Kuhn
மற்றும் Renate Kunast,
இன்னும் மற்ற முக்கிய பசுமைவாதிகளும் சில காலமாக அதிபர் மெர்க்கெலுடன் இரகசியப் பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளனர்.
மார்ச் மாதத்தில் இருந்து பசுமைக் கட்சி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயகக் கட்சி பாராளுமன்ற பிரதிநிதிகள் நடத்தும்
பேச்சுவார்த்தைகள் புதுப்பிக்கப்பட்டு நடத்தப்படுவது, அதற்கு "Pizza
Connection"என்று பெயரிடப்பட்டுள்ளன. இவை உண்மையிலேயே
1990 களின் கடைசியிலேயே தொடங்கின. அத்ாெடக்க நாட்களில் கூட்டங்களில் பங்கு பெற்ற பசுமைக் கட்சியின்
Margareta Wolf
மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக கட்சியின் Hermann
Gröhe இருவருமே இப்பொழுது இக்கூட்டங்களை மீண்டும்
தொடக்கியுள்ளனர்.
கூட்டாட்சி அளவில் ஒரு கிறிஸ்துவ ஜனநாயக -பசுமைக் கட்சிக்கூட்டணி என்பது ஒரு
கூடாத செயல் என்பது இல்லாமல் போய்விட்டதால் (10 ஆண்டுகளுக்கு முன் அந்த நிலை கிடையாது) வருங்காலத்தில்
பங்கு பெறுபவர்கள் தங்கள் கூடும் இடங்களை இரகசியமாக வைத்துக் கொள்ள விரும்புகின்றனர். கிட்டத்தட்ட ஒரு
டஜன் பங்கு பெறுவோர் பெயரும் இரகசியமாக வைக்கப்படும்; ஏனெனில் அவர்கள் தங்கள் கட்சிக்குள்ளேயே வெளிநபர்கள்
அல்ல. கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ
சமூக யூனியன் பாராளுமன்ற பிரிவிற்கு Gröhe
ஒரு சட்ட ஆலோசகர் ஆவார்; அதன் நிர்வாகக் குழு உறுப்பினரும் ஆவார்.
பசுமைக் கட்சியின் பாராளுமன்ற பிரிவின் வெளி வணிகத்திற்கான செய்தித் தொடர்பாளர்
Wolf ஆவார்.
"Pizza Connection" என்று
பொன் நகரில் ஆரம்ப நாட்களில் தொடர்பு கொண்டிருந்தவர்களில் தீவிரமானவர்கள் தற்போதைய அரசாங்கத்தில்
முக்கிய பங்கை பெற்றுள்ளனர்; இதில் Eckart von
Klaeden (கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ
சமூக யூனியன் பாராளுமன்ற பிரிவு வெளியுறவுக் கொள்கை செய்தித் தொடர்பாளர்), கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்
தலைமைச் செயலாளர் Roland Pofalla
மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்தவ
சமூக யூனியன் பாராளுமன்ற பிரிவின் தலைவரான
Norbert Rottgen ஆகியோர் அடங்குவர். |