World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Socialist strategy needed to oppose war and social inequality
Statement by the Socialist Equality Party (Australia)

போரையும், சமூக சமத்துவமின்மையையும் எதிப்பதற்கு சோசலிச மூலோபாயம் தேவை

சோசலிச சமத்துவக் கட்சியின்(ஆஸ்திரேலிய) அறிக்கை
7 September 2007

Back to screen version

போர், இராணுவவாதம், ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல், தீவிரமாகிவரும் சமூக சமத்துவமின்மை ஆகியவற்றிற்கு எதிராக போராடுவதற்கான ஒரு வழிவகையை உலகம் முழுவதும் மில்லியன்கணக்கான மக்கள் தேடுகின்றனர்.

அவர்கள் முன்னுள்ள, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இன்னும் கூடுதலான போர் விரிவாக்கம் ஏற்படல், ஈரான் மீதான தாக்குதல் உலக நிதிய நிலையில் பெருகி வரும் கொந்தளிப்பு மற்றும் பொருளாதார பெருங்குழப்பம்; தங்கள் நகரங்கள், சிற்றூர்களிலும் உள் கட்டமைப்புக்கள் பாரியளவில் எந்நேரமும் சரியக்கூடிய ஆபத்து; வெப்பதட்ப மாற்றம், சுற்றுச் சூழல் சேதம் ஆகியவற்றால் ஏற்படக்கூடிய "இயற்கை" பேரழிவுகளின் அச்சுறுத்தல் பற்றி ஓர் ஆழ்ந்த அமைதியற்ற தன்மையையும் கவலையும் கொண்டுள்ளனர்.

சனிக்கிழமை ஆசிய-பசிபிக் பொருளாதார கூட்டுழைப்பிற்கான மாநாடு (APEC) சிட்னியில் நடைபெற உள்ள நிலையில், அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ், ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டின், ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ ஏப், சீன ஜனாதிபதி ஹி ஜின்டோ உட்பட, உலகின் 21 அரசியல் தலைவர்கள் கூட இருக்கும் போது ஆயிரக்கணக்கான மக்களின் இந்த உணர்வுகளை தெருக்களில் காணக்கூடியதாக இருக்கும்.

ஆனால் சியாட்டிலில் 1999ம் ஆண்டு தொடங்கி பெப்ருவரி 2003ல் ஈராக் போருக்கு எதிரான உலகந்தழுவிய ஆர்ப்பாட்டங்களில் உச்சக் கட்டத்தை அடைந்த அத்தகைய ஆர்ப்பாட்டங்கள் ஏற்பட்டு எட்டு ஆண்டுகளுக்கு பின்னர், ஒரு அரசியல் இருப்புநிலைக் குறிப்பைக் கொள்ளுவது அவசியமாகும். அரசியல் கட்டமைப்பின் போக்கை மாற்றுவதற்கு அழுத்தம் கொடுக்கப்படலாம் என்ற கருத்துக்கள் இந்த எதிர்ப்புக்களில் மேலாதிக்கம் செலுத்தும் வரை, பங்கு பெறுபவர்களின் நோக்கங்கள் மிகவும் உண்மையாக இருந்தாலும், போர், அடக்குமுறை, சமூகப் பிற்போக்குத்தனம் ஆகிய பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு அவை பயன்படாது என்பதைத்தான் சர்வதேச அனுபவம் புலப்படுத்தியுள்ளது.

இதுதான் சிட்னியில் மீண்டும் அடிக்கோடிட்டு காட்டப்பட்டுள்ளது. நகரத்தில் பெரும் பகுதிகள் கிட்டத்தட்ட ஒரு இராணுவ-போலீஸ் நாடு போல் மாற்றப்பட்டுள்ளன. மிக அதிகமான அதிகாரங்கள் போலீசாருக்கு கொடுக்கப்பட்டுள்ளன; இராணுவ படைகள் உள்நாட்டு "பாதுகாப்பு" நடவடிக்கைகளுக்காக பயன்படுத்தப்படுகின்றன. நீர் பீய்ச்சி தாக்குவதற்கு தயாரிப்புக்கள் செய்யப்பட்டுவிட்டன, எதிர்ப்புக்கள், எதிர்பாளர்களை "வன்முறை" என இடைவிடாமல் கண்டிக்கும் செயலுக்கு இடையே இவ்வாறு நடைபெற்று வருகின்றன. "பயங்கரவாதத்தின் மீதான போர்" என்று அழைக்கப்படுவதுன் உண்மையான பொருள் உரையை இவை அனைத்தும் தெளிவாக நிரூபணம் செய்கின்றன. ஈராக், ஆப்கானிஸ்தான், கிழக்கு திமோர் அல்லது சொலமன்கள் என்று வெளிநாடுகளில் இராணுவ வெற்றி என்பது இராணுவவாதத்தை வளர்ப்பதுடன் உள்நாட்டில் ஜனநாயக உரிமைகளை அடக்குவதையும் குறிப்பிடுகிறது.

5.8 கி.மீ. நீளம், 2.8 மீட்டர் உயரம் கொண்ட உயர்ரக எஃகு மற்றும் காங்க்ரீட் சுவர் சிட்னி நடுப்பகுதியைச் சுற்றி அமைக்கப்பட்டு APEC நடவடிக்கைகள் நடக்கும் பகுதியை ஒரு ஒதுக்கப்பட்ட பகுதியாக நிறுவியிருப்பது உலகம் முழுவதும் இருக்கும் அரசாங்கங்கள் தாங்கள் பிரதிநிதித்துவப்படுத்துவதாக கூறும் மக்களிடம் இருந்து எவ்வளவு தூரம் முற்றிலும் ஒதுங்கியிருக்கின்றன என்பதற்கு நேரடிச் சாட்சியமாகும். ஹோவர்ட் அரசாங்கத்தின் இராணுவ-போலீஸ் நடவடிக்கைகளுக்கு தொழிற்கட்சியின் முழு ஆதரவு இருப்பது உலகம் முழுவதுமான போக்கிற்கு இன்னுமொரு உதாரணமாகிறது: உத்தியோகபூர்வ அரசியல் கட்டமைப்பின் எந்தப் பிரிவிலும் அடிப்படை ஜனநாயக உரிமைகளுக்கு ஒரு தளம் இல்லை என்பதே அது.

சனிக்கிழமை ஆர்ப்பாட்டத்திற்கு ஏற்பாடு செய்திருந்தவர்கள் தோற்றுவிக்கும் போலிக் கற்பனைகளில் இருந்து ஒரு அரசியல் உடைவை ஏற்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதை இந்த சர்வதேச அனுபவங்களில் இருந்து படிப்பினை பெற்றுக் கொள்ளுதல் என்பதின் பொருள் ஆகும். புஷ் கூட்டை நிறுத்து (Stop Bush Coalition) அமைப்பின் கருத்தின்படி, ஈராக் படையெடுப்பின்போது "அதிர்ச்சி, பெரும் அச்சம்" இவற்றின் பாதிப்பை குறைத்ததால் 2003 ம் ஆண்டு உலகம் முழுவதும் நடைபெற்ற போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்கள் வெற்றி என கூறுகின்றது. இந்த சீற்றத்தை கொடுக்கும் விளக்கம் உண்மையை மறைக்கும் நோக்கத்தை கொண்டது: அமெரிக்க தலைமையிலான படைகளும் அவற்றின் கூட்டாளிகளும் ஈராக்கிய மக்களுக்கு எதிராக நிகழ்த்திய வன்முறையை அது மறைக்கிறது; போரின் போதும், ஆரம்ப படையெடுப்பின்போதும், இப்போர் கிட்டத்தட்ட ஒரு மில்லியன் மக்கள் இறப்பிற்கு வழிவகுத்து; மில்லியன் கணக்கான அகதிகளை தோற்றுவித்து; கிட்டத்தட்ட ஈராக்கிய சமூகத்தையே அழித்துவிட்டது. மேலும் நான்கரை ஆண்டுகளுக்கு பின்னர் அமெரிக்கா கால வரையற்று ஈராக்கை ஆக்கிரமிக்கும் எண்ணத்தில் தீவிரமாக உள்ளதுடன், அதைத்தவிர நிரந்தரமான இராணுவ தளங்களை அமைத்துள்ளதுடன் ஈரான் மீது தாக்குதல் நடத்துவதற்காக இராணுவத் தயாரிப்பையும் நடத்தி வருகிறது.

எதிர்ப்பு குழுக்கள் இப்பொழுது உள்ள சக்திகள் மீது தக்க அழுத்தம் கொடுத்தால் தற்போதைய முதலாளித்துவ சமூக, அரசியல் ஒழுங்கிற்குள் "மற்றொருவித உலகம் அமைக்கப்பட முடியும்", என்ற போலிக் கற்பனைகளுக்கு ஊக்கம் கொடுத்துள்ளன. மீண்டும் இது மனித நாகரிகத்தை எதிர்கொண்டுள்ள பெருகிய ஆபத்துக்களை பற்றி கவலை கொண்டுள்ள அனைவருடைய கண்களிலும் மண்ணை தூவும் நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது; இந்த உச்சி மாநாட்டு நேரத்தில் அது இன்னும் வெளிப்படையாகத்தான் தெரிய வருகிறது.

வியட்நாம் போர் எதிர்ப்பு இயக்கத்துடன் ஒப்புமைகள் காணும் முயற்சிகள் முற்றிலும் தவறானவை; ஏனெனில் அவை தற்போதைய போரின் அடிப்படை பொருளுரையை மறைத்துவிடுகின்றன.

அமெரிக்க ஆளும் உயரடுக்கிற்கு வியட்நாமைவிட ஈராக்கில் இதையும் விட அதிகமாக விடயங்கள் உள்ளடங்கியுள்ளது. ஒரு நாட்டின்மீது வெற்றி கொண்டு ஆக்கிரமிப்பது என்ற ஒரு நோக்கத்தை மட்டும் ஈராக் போர் கொண்டிருக்கவில்லை. இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் வரலாற்றுரீதியான வீழ்ச்சியில் இருந்து மீளும் அவநம்பிக்கையற்ற உந்துதலின் ஒரு பகுதி ஆகும்; இதில் தன்னுடைய இராணுவ மேலாதிக்கைத்தை பயன்படுத்தி இருபதாம் நூற்றாண்டின் முதல் பாதியில் இரு உலகப் போர்கள் மூலமாக அது அடைந்திருந்த உலக ஆதிக்கம் என்றும் நிலையை தக்க வைத்துக்கொள்ளும் நோக்கத்தின் ஒரு பகுதியாகும்.

உலக மேலாதிக்கத்திற்கான அமெரிக்க உந்ததுல் "பயங்கரவாதத்தின் எதிரான போர்" என்ற பதாகையின்கீழ் தொடுக்கப்பட்டுள்ளது. மத்திய கிழக்கு, மற்றும் மத்திய ஆசியாவின் மீது இது கூடிய கவனத்தை காட்டுகிறது; ஏனெனில் இப்பகுதியில் பரந்த எண்ணெய், எரிவாயு இருப்புக்கள் உள்ளன. ஐரோப்பாவில் இருக்கும் தன்னுடைய பழைய போட்டியாளர்கள் மற்றும் சீனா, ரஷ்யா என்று எழுச்சி பெற்றுவரும் உலக சக்திகளுக்கு எதிரான தனது நிலையை தக்கவைத்துக் கொள்ளுவதற்கு இவ்விருப்புக்கள் மீது தன்னுடைய கட்டுப்பாட்டை அது வைத்திருக்க வேண்டும்.

1914ல் முதல் உலகப் போர் வெடிப்பு மற்றும் இரு தசாப்தங்களுக்கு பின்னர் இரண்டாம் உலகப் போர் ஆகியவற்றிற்கு வழிவகுத்த இருபதாம் நூற்றாண்டு தொடக்கத்தில் உலகத்தை உடைத்த அதேவித போட்டிகளும் விரோதப் போக்குகள்தாம் இப்பொழுது மீண்டும் வெளிப்பட்டுள்ளன.

இந்த ஆழ்ந்த பூசல்களின் தன்மை எந்த அளவிற்கு வெளிப்படையாக இருக்கிறது என்றால், முன்னாள் ஆஸ்திரேலிய பிரதம மந்திரி பெளல் கீட்டிங் APEC உடைய முக்கிய பணி சீனாவை சர்வதேச உறவுகளில் ஒருங்கிணைத்துக் கொள்ளவேண்டும் என்று கொடுத்துள்ள எச்சரிக்கை ஆகும்; பழைய ஐரோப்பிய சக்திகள் 19ம் நூற்றாண்டின் இறுதியில் ஜேர்மனியிடம் காட்டிய தவறு மீண்டும் ஏற்பட்டுவிடக் கூடாது என்று அவர் கூறியுள்ளார்.

ஆபத்துக்கள் எவ்வளவு தெளிவாகத் தெரிந்தாலும், எச்சரிக்கைகள் எவ்வளவு உரத்து வந்தாலும், போட்டி முதலாளித்துவ சக்திகளின் நலன்களை சமாதான முறையில் சமரசப்படுத்திவிட முடியாது. இறுதி ஆய்வில், முதலாளித்துவ அரசியல்வாதிகளின் உந்துதல் ஒருபோதும் உலகப் போருக்கு வழிவகுத்துவிடுவதில்லை. போரை நோக்கி செல்வது என்பது உற்பத்தி சக்திகளின் உலகரீதியான வளர்ச்சிக்கும் போட்டியுடும் தேசிய அரசமைப்பு முறைக்கும் இடையே உள்ள புறநிலை முரண்பாடுகளின் வெளிப்பாடு ஆகும்; இவைதான் முதலாளித்துவ இலாபமுறையின் கட்டமைப்பை உருவாக்குகின்றன.

ஒவ்வொரு முதலாளித்துவ பெரும் சக்தியும் இந்த முரண்பாட்டிற்குத் தீர்வு காணும் வகையில் உலகில் தன்னுடைய நிலைமைய வலுப்படுத்திக் கொள்ள முற்படுகிறது. அவ்வாறு செய்கையில் அது தன்னுடைய போட்டி நாடுகளின் பொருளாதார, அரசியல் மற்றும் இராணுவ நலன்களுடன் மோதலுக்கு உட்படுகிறது.

இருபதாம் நூற்றாண்டின் முதல் பகுதியில் பல மில்லியன் கணக்கான மக்களுடைய உயிரிழப்பு மற்றும் சமூக, பொருளாதார பேரழிவு ஆகியவற்றை ஏற்படுத்திய இந்த ஏகாதிபத்தியங்களுக்கு இடையிலான போட்டிகள் அடக்கப்பட்டாலும், இரண்டாம் உலகப் போருக்கு பின் வந்த தசாப்தங்களில் தீர்க்கப்படவில்லை. அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் மற்றும் சோவியத் ஒன்றியத்துடன் பனிப்போர் என்ற இரு காரணிகள் சர்வதேச உறவுகளை கட்டுப்படுத்தும் கட்டமைப்பை கொடுத்தன.

கடந்த பதினைந்து ஆண்டுகளில், சோவியத் ஒன்றியத்தின் உடைவு மற்றும் அமெரிக்காவின் பொருளாதாரநிலைச் சரிவு இரண்டும் சர்வதேச நிலைமையை மாற்றியுள்ளன. புஷ் நிர்வாகத்தின் குற்றம் சார்ந்த தன்மை --ஜனநாயகக் கட்சியின் ஆதரவை இது பெறுதல்-- தன்னுடைய உலக மேலாதிக்கத்தை தக்க வைத்துக் கொள்ளுவதற்கு வாழ்வா, சாவா என்ற போராட்டத்தில் அமெரிக்கா ஈடுபட்டுள்ளதை பிரதிபலித்துக் காட்டுகிறது.

போருக்குப் பிந்தைய சர்வதேச உறவுகள் சிதைந்து விட்டன என்பது மட்டும் அல்ல. பூகோளமயமாக்கல் போக்கு புதிய சக்திகளின் எழுச்சியை கண்டுள்ளது, குறிப்பாக சீனா, இந்தியா ஆகியவற்றின் எழுச்சியை காண்பது, உலகப் பொருளாதாரத்திற்கும் முதலாளித்துவ தேசிய அரசு அமைப்புமுறை ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் முரண்பாட்டை தீவிரப்படுத்திவிட்டது. இதையொட்டி ஒரு புதிய ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான முரண்பாடுகள் வெடிப்பதற்கான சூழ்நிலை உருவாக்கப்படுகிறது. இதுதான் ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் நடைபெறும் போர்களின் வரலாற்று முக்கியத்துவம் ஆகும். புஷ் குறிப்பிட்டுள்ளது போல் அவை தனிப் போர்கள் அல்ல, ஒரே போரின் இரு வேறு அரங்குகள் ஆகும்.

ஒரு புதிய கட்டபோரின் பின் இருக்கும் புறநிலை சமூகப் பொருளாதார உந்து சக்திகள் பற்றி அறிந்து கொள்ளுதல் ஒரு முடிவிற்குத்தான் இட்டுச் செல்லும்: போருக்கு எதிரான போராட்டம் ஆளும் வர்க்கங்கள் மற்றும் அவற்றின் அரசாங்கங்கள் இவற்றிற்கு எதிராக எதிர்ப்புக்களை ஒழுங்கமைப்பதின் மூலம் மட்டுமே சாதிக்கப்பட முடியாது. மாறாக, ஒருசர்வதேச சோசலிச மூலோபாயத்தின் அடிப்படையில் அது நடத்தப்பட வேண்டும்; அது உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தினரை ஒன்று சேர்த்து முதலாளித்துவ இலாப முறை மற்றும் அதையொட்டிய காலம் கடந்து விட்ட தேசிய அரசமைப்பு முறை ஆகியவற்றை அகற்றுவதற்கு செயல்பட வேண்டும்.

APEC உச்சிமாநாட்டின் பின்னணியில்

அரங்கிற்காக தயாரிக்கப்படும் APEC க்குள்ளும், பூசல் அணிகள் நன்கு வெளிப்பட்டுள்ளன. உத்தியோகபூர்வ செயற்பட்டியலுக்கு புறத்தே, புஷ், ஹோவர்ட் மற்றும் அபே ஆகியோர் அமெரிக்கா, ஆஸ்திரேலிய, ஜப்பான் ஆகியவற்றிற்கு இடையே இருக்கும் பெருகிய பாதுகாப்பு உறவுகளை வலுப்படுத்த கூடுவர்; அக்கூட்டு சீனாவிற்கு எதிராக இயக்கப்படுவது ஆகும்.

மூடிய கதவுகளுக்குப் பின் நடக்கும் விவாதங்களை பற்றி கருத்துத் தெரிவிக்கும் மர்டோக்கிற்கு சொந்தனமான ஆஸ்திரேலிய செய்தித்தாள் ஆசியாவை அமெரிக்காவா, சீனாவா ஆதிக்கம் கொள்ளும்? என்பது பற்றி ஒரு கட்டுரையை வெளியிட்டுள்ளது.

குறிப்பிடத்தக்கவகையில், ஆஸ்திரேலியா மற்றும் அமெரிக்காவிற்கும் இடையே புஷ்ஷின் வருகைக்கு பின் அறிவிக்கப்பட்ட முதல் உடன்பாடு ஆஸ்திரேலிய இராணுவத்திற்கு கூடுதலான வாய்ப்பை அமெரிக்க இராணுவத் தொழில்நுட்பத்தை அடைவதற்கு கொடுக்கப்பட்டுள்ள நிலையாகும்.

மேலும் அமெரிக்க வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ், தன்னுடைய ஒரே ஒருசெய்தி ஊடகப் பேட்டியில், ஆஸ்திரேலிய இராணுவத்தின் பங்கு பற்றி, ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானத்திலும் மட்டுமின்றி, சாலோமன் தீவுகள், திமோர் ஆகியவற்றிலும் கொண்ட பங்கு பற்றியும், ஆஸ்திரேலிய அரசாங்கம் பிஜி, டோங்கா போன்ற இடங்களிலும் செய்யும் "கடுமையான உழைப்பை" பாராட்டியுள்ளார்.

APEC உச்சிமாநாடே "தடையற்ற சந்தையின்" வெற்றிக்கு ஒரு புகழாரம் என்ற வகையில் உத்தியோகபூர்வ பிரச்சாரத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. ஹோவர்டின் கருத்தின்படி, எதிர்ப்புக்கள் "பொருளாதார வளர்ச்சி பற்றிய வெறுப்பு" மற்றும் அதைத் தோற்றுவித்துள்ள முதலாளித்துவ முறைக்கு எதிரான விரோதப் போக்கு ஆகியவற்றினால் உந்துதல் பெற்றுள்ளது.

இதேபோல், Australian பத்திரிகையில் வந்துள்ள தலையங்கம் ஒன்று "முதலாளித்துவத்திற்கு எதிரான களைப்புற்ற, பழைய முறையிலான பிரச்சாரத்தை" கண்டித்து, "வறுமையில் இருந்து நூறு மில்லியன் கணக்கான மக்களை விடுவிக்க உதவும்" முதலாளித்துவ பூகோளமயமாக்கலின் பங்கையும் பாராட்டியுள்ளது.

இத்தகைய புகழாரங்கள் பாரிய போலீஸ் இராணுவ நடவடிக்கை உச்சிமாநாட்டை சுற்றியிருப்பதின் மூலம் மட்டும் நிராகரிக்கப்படுவது மட்டுமல்லாது, உலகப் பொருளாதாரத்தின் தலைநகரத்தின் இதயத்தானத்தில் ஏற்பட்ட சமீபத்திய வளர்ச்சிகளினாலும் நிராகரிக்கப்படுகின்றது.

பத்து ஆண்டுகளுக்கு முன்பு "சுதந்திர சந்தையின்" உயர் குருமார்கள் ஆசிய பொருளாதார நெருக்கடியை "சற்று கோணலான முதலாளித்துவத்தின்" (crony capitalism) விளைவு என்று உதறித் தள்ளினர். இப்பொழுது உலகப் பொருளாதாரத்தின் மற்ற வெளிப்பகுதிகளில் படர்ந்த தீமை அதன் இதயத்தானமான அமெரிக்கா, ஐரோப்பா மற்றும் ஜப்பானில் பரவியுள்ளது வெளிப்படையாகியுள்ளது

அமெரிக்காவில் ஏற்பட்ட குறைந்த பிணையுள்ள அடைமான நெருக்கடி கிட்டத்தட்ட நிதிய முறையை உருகிப் போய்விடும் நிலையை தோற்றுவித்தது, ஒருபோதும் கடனை திருப்பிக் கொடுக்க முடியாத நிலையில் சமூகத்தின் வறிய மக்களை வங்கிகள் மற்றும் பிற நிதிய அமைப்புக்கள் பொறி போட்டுப் பிடித்ததின் விளைவு ஆகும். முன்னோடியில்லாத அளவிற்கு நிதியமுறையில் ஒட்டுண்ணித்தனம் வளர்ந்திருப்பதை இது குறிக்கிறது.

கடந்த தசாப்தங்களில் அமெரிக்காவின் பொருளாதார மேலாதிக்கம் உலகப் பொருளாதார அமைப்பு முழுவதிற்குமே ஒரு அஸ்திவாரத்தை அமைத்துக் கொடுத்திருந்து. ஒரு மிகப் பரந்த உற்பத்தித் தொழில் --இயந்திரங்கள், தொடர்புகள், போக்குவரத்து, தொழில்நுட்பம்-- ஆகியவற்றின் வளர்ச்சியை அது அடிப்படையாகக் கொண்டிருந்தது. இப்பொழுது அமெரிக்கப் பொருளாதாரம் உலகின் பிற பகுதிகளில் இருக்கும் கடன்களை கொடுக்கும் மற்றும் "நச்சு பதிந்த" நிதிய பொருட்களை சந்தேகப்படாத வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்களுக்கு விற்பனவற்றினதும் ஆதிக்கத்திற்கு உட்பட்டுள்ளது.

ஒட்டுண்ணித்தனத்தின் வளர்ச்சி இப்பொழுதும் கூட, கட்டுப்படுத்துவது ஒரு புறம் இருக்க, எந்த அளவிற்கு நிதிய முறை செயல்படுகிறது எனத் தெரியவில்லை என்று மத்திய வங்கியாளர்கள் ஒப்புக் கொள்ளும் அளவிற்கு வளர்ந்துவிட்டது.

ஆரம்ப கொந்தளிப்பு தற்காலிகமாக குறைந்துவிட்டது என்றாலும், நீண்ட கால வழிவகை, அதன் தொலை விளைவுடைய தாக்கங்கள் நடைமுறைக்கு வந்துவிட்டன. கடன் நிலை உறுதியற்ற தன்மை வெளிப்படுத்தப்பட்டுள்ளது கடன் சந்தைகளின் பல பிரிவுகளை முடக்கி விட்டது; அதே நேரத்தில் அமெரிக்க வீடுகள் சந்தையின் சுருக்கம் என்பது ஒரு மந்த நிலையை தூண்டிவிடக்கூடும், அதனால் உலகம் முழுவதும் விளைவுகள் இருக்கக் கூடும் என்ற எச்சரிக்கைகள் வெளிப்பட்டுள்ளன.

வேறுவிதமாகக் கூறினால், பெருமந்தத்திற்கு பின் உலகில் மிகத் தீவிரமாக வெளிவந்த ஆசிய-பசிபிக் பகுதியில் ஒரு தசாப்தத்திற்கு முன் மில்லியன் கணக்கான மக்களை தாக்கிய பொருளாதார பேரழிவு இப்பொழுது உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாள வர்க்கத்தினரை அச்சுறுத்துகிறது. இந்த ஆழ்ந்த நெருக்கடியின் உடனடி விளைவுகள் வட்டிவிகித குறைப்புக்கள் மற்ற நிதியத் திருத்தங்கள், திரித்தல்கள் ஆகியவற்றால் தற்காலிகமாக குறைக்கப்பட்டாலும், இந்த நடவடிக்கைகள் மிக அதிக தொலைவில் இல்லாமல் விரைவிலேயே வெடிப்புத் தன்மைகூடிய முரண்பாடுகளை குவிப்பதற்குத்தான் வழிவகுத்துள்ளது.

போரின் அச்சுறத்தலை போலவே, நிதியச் சரிவு மற்றும் பொருளாதாரப் பெருமந்தம் ஆகியவை எதிர்ப்பு அரசியலால் எதிர்கொள்ள முடியாதது ஆகும். அவை முதலாளித்துவ முறை முழுமையாக தோல்வியுற்றதன் தெளிவான அடையாளங்கள் ஆகும். இவை பூகோளமயமாக்கலின் விளைவும் அல்ல. மாறக, பூகோளமயமான உற்பத்தி சக்திகளின் வளர்சி மனிதகுலத்தை எதிர்கொண்டுள்ள அனைத்து பிரச்சினைகளையும் தீர்க்கும் புறநிலை அடிப்படையை உலக அளவில் கொடுக்கிறது. ஆனால் உலகம் முழுவதும் இருக்கும் மக்களுடைய கூட்டு உழைப்பால் தோற்றுவிக்கப்படும் இந்த உற்பத்தி சக்திகள் மனிதகுலத்தின் தேவைகளை பூர்த்தி செய்ய பயன்படுத்தப்பட வேண்டும் என்றால், அவை தனியார் உடைமை, இலாபமுறை ஆகியவற்றின் பிடிகளில் இருந்து விடுவிக்கப்பட வேண்டும்.

ஆஸ்திரேலியாவிலும் உலகம் முழுவதிலும் மாணவர்கள் மற்றும் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள அவசர பணி, ஒரு சோசலிச சர்வதேசிய வேலைத்திட்டத்தினால் வழிகாட்டப்படும் தொழிலாள வர்க்கத்தின் வெகுஜன சர்வதேச அரசியல் இயக்கத்தை கட்டமைப்பது ஆகும். இதுதான் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு மற்றும் அதன் ஆஸ்திரேலிய பிரிவான சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோக்கு ஆகும்; அன்றாடம் இது உலக சோசலிச வலைத் தளத்தால் வளர்ச்சி பெறுகிறது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved