: மத்திய
கிழக்கு
British troops in Iraq deployed to Iranian border
ஈராக்கில் உள்ள பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈரானிய எல்லையில் நிறுத்திவைப்பு
By Julie Hyland
14 September 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
பிரிட்டனின்
Independent
ஏடு, ஈராக்கில் நிறுத்திவைக்கப்பட்டுள்ள பிரிட்டிஷ் துருப்புக்கள் ஈரானிய
எல்லை அருகே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன என்று புதனன்று தகவல் கொடுத்துள்ளது.
பாக்தாத்தில் இருந்து Kim
Sengupta எழுதியுள்ள பிரத்தியேக கட்டுரையின்படி,
கிட்டத்தட்ட 350 துருப்புக்கள் சம்பந்தப்பட்டுள்ளதாக கூறப்படும் இந்த நகர்வு, "அமெரிக்கர்களின்
வேண்டுகோளின் பேரில் நிகழ்ந்துள்ளது."
பஸ்ராவை தளமாகக் கொண்ட 1
Mechanised Brigade இன் தளபதியான பிரிகேடியர்
ஜேம்ஸ் பாஷால் கூறினார்: "ஆயுதங்கள் வருகையை தடுப்பதில் உதவி செய்யும் வகையில் ஈரானிய எல்லைக்கு
வருமாறு கோரப்பட்டோம்; எனக்கு அதைச் செய்ய விருப்பம்தான். நுழையும் இடங்கள் பற்றி நாங்கள் அறிவோம்,
எதைச் செய்ய வேண்டுமோ அதை எங்களால் செய்ய முடியும். எங்களுக்கு தெரிந்துள்ளபடி, அமெரிக்கப் படைகள்
'பெருக்கத்தில் உள்ளன', அவர்களைப் பொறுத்த வரையில் எல்லை என்பது முக்கியத்துவம் வாய்ந்தது."
அறிக்கை தொடர்கிறது: "எல்லைக்கு நகர்தல் என்பது பிரிட்டிஷ் இராணுவத்தை
பொறுத்த வரையில் கொள்கையில் மாற்றம் என்பதாகும்.
Maysan பகுதியின்
நீண்ட எல்லையில் அவர்கள் ரோந்து சுற்றியதை நிறுத்தியிருந்தனர்; அந்த நேரத்தில் அப்பகுதி ஈராக்கிற்கு ஆயுதங்களை
அனுப்புவதற்கு வழியாகப் போகக்கூடும் என்ற அமெரிக்க கவலைகள் இருந்த போதிலும் இவ்வாறு நடந்தது."
பின்னர், Daily
Mail, "லண்டனில் இருக்கும் பாதுகாப்பு அமைச்சரகத்தின்
செய்தித் தொடர்பாளர் பிரிட்டிஷ் படைகள் ஈராக்கி எல்லைப் பாதுகாப்பு படைகளுடன் இணைந்து செயல்பட்டு
வருவதை உறுதிப்படுத்தினார். நீர்ப்பாதைகளை ரோந்து சுற்றுவதிலும் பிரிட்டிஷ் படைகள் சம்பந்தப்பட்டுள்ளன."
"ஈரானிய ஆட்சிக்கு நெருக்கமாக இருக்கும் கூறுபாடுகள் சமீபத்திய வாரங்களில்
ஈராக்கிற்குள் தாக்குதல் நடத்துவதற்கு தயாரிக்கும் வகையில் ஷியைட் குடிப்படைகளுக்கு ஆயுதங்கள் அனுப்பவதை
அதிகப்படுத்தியுள்ளன"; இதையொட்டி அமெரிக்கா பிரிட்டனை வேண்டியது என்று சென்குப்தாவின் தகவல் கூறியுள்ளது.
"ஈரானிய ஆட்சிக்கு நெருக்கமாக இருக்கும் கூறுபாடுகள்" என்னும் குறிப்பு தெளிவற்ற
நிலையில், கிட்டத்தட்ட பொருளற்ற வகையில் உள்ளது. ஆயினும்கூட
Independent
தெளிவாகக் கூறுவது போல், பிரிட்டிஷ் ஆதரவுடன்
தெஹரானுடன் ஒரு இராணுவ மோதல் உணர்வை அதிகரிக்க தேவையான நடவடிக்கைகளை எடுக்க அமெரிக்காவிற்கு
இது போதுமானது.
சென்குப்தா சுட்டிக் காட்டியுள்ளபடி, பிரிட்டிஷ் படைகள் அங்கு நிறுத்தப்பட்டுள்ளது
ஒரு "உயர் ஆபத்து நிறைந்த மூலோபாயம்; ஈரானிய ஆதரவு பெற்றுள்ள ஷியைட் குடிப்படைகள் அல்லது ஈரானியப்
படைகளுடன் மோதலுக்கு வழி வகுக்கக்கூடும்; மற்றும் ஈரான் பதிலடி கொடுக்கக்கூடிய வகையில் பஸ்ரா விமான
தளத்தில் இருக்கும் பிரிட்டிஷ் படைகளுக்கு எதிராக செயல்படலாம் அல்லது வன்முறையை தூண்டிவிட்டு பஸ்ரா
நகரத்திற்கு அவர்களை மீண்டும் கொண்டுவந்துவிடலாம். இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவுகள் ஏற்கனவே
இவ்வாண்டு தொடக்கத்தில் ஈரானிய புரட்சிகர காவலர்கள் ஒரு பிரிட்டிஷ் கடற்படை குழுவை கைப்பற்றியபின்
சீர்குலைந்துள்ளன."
அமெரிக்கத் தலைமையிலான ஆக்கிரமிப்பிற்கு எதிராக நடக்கும் எழுச்சியில் ஈரானியத்
தொடர்பு பற்றிய கூற்றுக்களுக்கு சான்றாக எந்த ஆதாரமும் அளிக்கப்படவில்லை. அமெரிக்க, மற்றும் பிரிட்டிஷ்
நடவடிக்கைகளின் குறிப்பிடத்தக்க கூறுபாடு ஆக்கிரமிப்பு படைகளின் அரசியல் கணிப்பீடுகள் பற்றித்தான் என்ற
முடிவிற்கு வரமுடியும்.
ஈராக்கில் இருக்கும் அமெரிக்கத் தலைமை தளபதி டேவிட் பெட்ரீயஸ், ஈராக்கிலுள்ள
அமெரிக்க தூதர் ரியன் கிரோக்கர் இருவரும் ஆயுதப் படைகள் குழு மற்றும் வெளியுறவு விவகாரங்கள் குழு என்று
பிரதிநிதிகள் மன்ற குழுக்களுக்கு கொடுத்த தொடர் அறிக்கைகள் மற்றும் செனட் மன்றத்தின் இதேபோன்ற
குழுக்களுக்கும் அறிக்கைகளை கொடுத்த பின்
Independent இன் தகவல் வந்துள்ளது.
பிரிட்டிஷ் நிர்வாகத்தின் ஈராக்கிய கொள்கையில் "பெருக்கம்" என்று புறநிலை
மதிப்பீடாக கருதப்படும் வகையில் இருக்கும் அவர்களுடைய சாட்சியங்கள் உண்மையில் அமெரிக்கத் தலைமையிலான
ஆக்கிரமிப்பு மற்றும் ஈராக்மீதான படையெடுப்பிற்கு ஆதரவு கொடுத்தலும், சமீபத்தில் அங்கிருந்து அமெரிக்க
துருப்புக்களை குறைக்கும் எண்ணம் இல்லை என்பதை வலியுறுத்தும் வகையிலும் இருந்தன.
பெட்ரீயஸ் மற்றும் கிரோக்கர் கொடுத்த அறிக்கைகளில் மிகவும் முக்கியத்துவம்
வாய்ந்தது தெஹ்ரானை அவர்கள் இலக்கு வைத்திருப்பதுதான். ஈரான் ஈராக்கில் ஒரு "மறைமுகப் போரை"
நடத்திவருவதாக பெட்ரீயஸ் கூறினார்; இதைப் பற்றி கிரோக்கர் கூறுகையில் "தெஹ்ரான் ஈராக்கிய அரசின்
விரோதிகளுக்கு பேராபத்து விளைவிக்கும் திறன்கள் உடைய ஆயுதங்களை வழங்கி வருகிறது" என்றார்.
திங்கட்கிழமை சட்டமன்ற குழுவிற்கு சாட்சியம் கொடுத்த பின்னர், பெட்ரீயஸ்,
"ஈராக்கிற்குள்ளே என்பதைக் காட்டிலும், ஈரானுக்கு எதிராக அதன் சொந்த எல்லைகளுக்குள்ளேயே, நடவடிக்கை
எடுப்பதற்கு விரைவில் அனுமதி தேவைப்படலாம் என்ற வலுவான குறிப்பை" வெளிப்படுத்தினார்.
Fox News க்கு கொடுத்த
பேட்டி ஒன்றில், தெஹ்ரான், ஈராக்கில் சில கூறுபாடுகளை ஆதரிப்பதாக குற்றம் சாட்டிய பெட்ரீயஸ், "அவை,
எமது படைகள், ஈராக்கிய படைகள், நிரபராதியான குடிமக்கள் ஆகியோருக்கு எதிரான வன்முறைச் செயல்களில்
ஈடுபட்டு வருகின்றன. கவச வாகனங்களுக்கு எதிராக குறிப்பிடத்தக்க வகையில் பேராபத்து விளைவிக்கும் சிறப்புத்
தயாரிப்பான வெடிப்புக் கருவிகள், ஈரான் கொடுத்துள்ள ராக்கெட்டுக்கள் அவற்றை பயன்படுத்தி சர்வதேசப்
பகுதியில் சாதாரண மக்கள் மற்றும் எமது படைகள் மீது செய்தல், போன்றவை நடைபெறுகின்றன." என்று
கூறினார்.
"எனவே ஈராக்கில், ஈரானின் பங்கு பேரழிவைத் தரக்கூடிய தன்மை உடையது"
என்று அவர் சேர்த்துக் கொண்டார்.
அதே பேட்டியில் கிரோக்கர் கூறியது: "[ஈராக்கில்] ஈரானின் பங்கு தீமை
விளைவிக்கக்கூடியது. இது இரு விதங்களில் செயல்படுகிறது. அவர்கள் தீவிரப்போக்குடைய குடிப்படைகளுக்கு ஆதரவு
கொடுக்கின்றனர். உந்தி வீசி வெடிக்ககூடிய சிறு ஏவுகணைகளை வழங்குகின்றனர்; அவை எமது படைகளையும்
ஈராக்கியர்களையும் குறிவைக்கின்றன. உறுதிப்பாட்டை குலைக்கும் பங்கை அவர்கள் செய்து வருகின்றனர்."
பெட்ரீயஸ் மற்றும் கிரோக்கர் சாட்சியம் பற்றி தன்னுடைய அறிக்கையில் உலக
சோசலிச வலைத் தளம் கூறியுள்ளதுபோல், "ஈரான் மீது அமெரிக்க தாக்குதல் என்று திரண்டுகொண்டிருக்கும்
அச்சுறுத்தல்தான் விசாரணையின் துணை உரை ஆகும். அமெரிக்கா அதன் முதல் இராணுவத் தளத்தை ஈராக்
ஈரானுடன் கொண்டுள்ள எல்லை அருகே கட்டமைக்க திட்டமிடுகிறது; இது இவ்வாண்டு நவம்பர் அளவில்
செயல்முறைக்கு வந்துவிடும்; இதைத் தவிர பாக்தாத்திற்கு ஈரானில் இருந்து செல்லும் முக்கிய சாலைகளிலும்
பாதுகாப்பு நிறைந்த சோதனை சாவடிகளும் அமைக்கப்படும்" என்று திங்களன்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னலில்
வந்த அறிக்கை ஒன்றினால் அது அடிக்கோடிட்டு காட்டப்படுகிறது.
ஈராக்கில் இருந்து 4,000 துருப்புக்களை கொண்ட ஒரு இராணுவப் பிரிவை
இவ்வாண்டு இறுதிக்குள் திரும்பிப் பெறுதல் என்பது, எவ்வித ஐயத்திற்கும் இடமின்றி "ஈரான் மீதான இராணுவத்
தாக்குதல் திட்டங்கள் விரைவடைகின்றன" என்பதின் முக்கிய காரணி ஆகும்.
அமெரிக்க இராணுவத்தின் தளம் ஈரானின் எல்லையில் இருந்து நான்கு மைல்களுக்குள்
அமைக்கப்படும்; குறைந்தது 200 துருப்புக்களையாவது கொண்டிருக்கும். நவம்பர் மாதத்திற்குள் அது முழுமையாகச்
செயல்படத் தொடங்கிவிடும். ஈரானுக்கும் பாக்தாத்திற்கும் இடையே இருக்கும் முக்கிய சாலைகளிலும் பலமான
சோதனைச் சாவடிகள் அமைக்கப்படும்.
அதிக விளம்பரம் பெறாத ஒரு நிகழ்வு ஈராக்கிற்கு இன்னும் கூடுதலாக 1,200
துருப்புக்களை அனுப்பி வைப்பதாக ஜோர்ஜியாவுடன் ஏற்பட்டுள்ள உடன்படிக்கை ஆகும்; அதையொட்டி அந்நாடு
அமெரிக்கா, இங்கிலாந்திற்கு அடுத்தாற்போல் அதிகப் படைகளை அனுப்பிவைக்கும் நாடு என்று ஆகும்.
இத்துருப்புக்கள் ஈரான், ஈராக் எல்லைகளில் ரோந்து பணியிலும் ஈடுபடும்; ஜோர்ஜிய படைகள் ஒரு முன்னணிப்
பங்கை எடுத்துக் கொள்ளுவது இதுதான் முதற்தடவையாகும்.
ஆகஸ்ட் மாத இறுதியில்,
Dr.Dan Plesch, மற்றும்
Martin Butcher
என்னும் இரு பிரிட்டிஷ் பாதுகாப்பு பிரிவு ஆய்வாளர்கள் ஈரான் மீதான ஒரு இராணுவத் தாக்குதல்களுக்கு
அமெரிக்கத் தயாரிப்பு பற்றி விவரிக்கும் ஒரு 80 பக்க அறிக்கையை வெளியிட்டனர்.
"ஈரானின் [பேரழிவு ஆயுதங்களை] அணு சக்தி, ஆட்சி, ஆயுதப் படைகள்,
அரசாங்கக் கருவிகள், பொருளாதார உள்கட்டுமானங்கள் ஆகியவற்றை அழிப்பதற்கான இராணுவத் தயாரிப்புக்களை
அமெரிக்கா மேற்கொண்டுள்ளது; ஜனாதிபதி ஜோர்ஜ் டபுள்யூ புஷ் உத்தரவு கொடுத்த சில நாட்களுள்,
இல்லாவிடில் சில மணி நேரத்திற்குள் இது நடத்தப்படும்." என்று அது கூறுகிறது.
"அமெரிக்க விமானத் தாக்குதல்கள் மற்றும் நீண்ட தொலைதூரத் திறன் உடைய
ஏவுகணைகள் ஏற்கனவே ஈரானுக்குள் இருக்கும் 10,000 இலக்குகளை சில மணி நேரத்திற்குள் அழிக்கத் தயாராக
உள்ளன. ஏற்கனவே வளைகுடாப் பகுதியில் உள்ள அமெரிக்க தரைப்படை, விமானப்படை, கடற்படை பிரிவுகள்,
ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருக்கும் படைகள் ஆகியவை ஈரானிய படைகள், ஆட்சி மற்றும் அரசாங்கத்தை
குறுகிய காலத்தில் பேரழிவிற்கு உட்படுத்திவிடும்.."
வாராந்திர Sunday
Telegraph, அமெரிக்காவும் ஈரானும் ஒருவர் மற்றொருவர்
நடவடிக்கையை கண்காணிப்பதற்கு "கேட்கும்" சோதனைச்சாவடிகளை நிறுவிவிட்டன என்று தகவல் கொடுத்துள்ளது.
"ஈரானிய ஈராக்கிய போரின்போது மூழ்கடிக்கப்பட்ட கிரேனின் மேடையை அஸ்திவாரமாக கொண்டு கட்டப்பட்ட
ஈரானிய ஒற்றர் சாவடிகள், வட அரேபிய வளைகுடாவில் வணிகக் கப்பல்கள் மற்றும் கூட்டணி கடற்படைகள்
ஆகியவற்றின் நடவடிக்கைகளை கண்காணிக்கும் வகையில் ராடர், புகைப்படமெடுக்கும் கருவிகள், மற்றும் அகச்சிவப்புக்
கதிர் கருவிகள் ஆகியவற்றை கொண்டுள்ளதாக கூறும் அமெரிக்க ஆதாரங்களை டெலிகிராப் மேற்கோள்
காட்டியுள்ளது.
"ஈரானிய நடவடிக்கையின் முக்கிய நோக்கங்களில் ஒன்று, புரட்சிப் படை பூசலுக்குட்பட்ட
நீர்ப்பகுதிகளில், ஈராக்கிய பஸ்ரா நகரத்திற்கு தெற்கே இருக்கும்
Shatt an Arab
நீர்வழி எனப்படுவதில், கூடுதலான கூட்டணி கப்பல்களை தடுப்பது ஆகும் என்று தளபதிகள் அஞ்சுகின்றனர்."
"ஆனால் தன்னுடைய அணுசக்தி நிலையங்கள் அமெரிக்க விமானத் தாக்குதல்களில்
பாதிக்கப்பட்டால், அதற்கு விடையிறுக்கும் வகையில் கவனிக்கும் சாவடிகள் வணிகக் கப்பல்களை தாக்கும் ஈரானிய
படைகளுக்கு உதவுவதற்கு இருக்கலாம் என்று அமெரிக்க இராணுவம் நம்புகிறது."
"இத்தகைய நடவடிக்கைகள் ஈரான் தாக்கப்பட்டால் மேற்கத்தைய நலன்களுக்கு
எதிராக கெரில்லா தாக்குதல் அல்லது வடிவற்ற தாக்குதல்களைத் தொடங்கும் அச்சுறுத்தல் திட்டங்களின் ஒரு பகுதியாக
இருக்கக்கூடும்."
பிரிட்டிஷ் கடற்படை அதிகாரிகள், "அமெரிக்கர்களுக்கும் ஈரானியர்களுக்கும்
இடையேயான அழுத்தம் மிக அதிக அளவிற்கு போய்விட்டது" எனக் கூறியதாக செய்தித்தாள் மேற்கோளிட்டுள்ளது.
"மார்ச் மாதம் வரை, ஈரானியர்களால் எமது கடற்படைவீரர்கள் கைப்பற்றப்படும்
வரை, கூட்டணி ரோந்துகள் ஈராக்கின் எண்ணெய் ஏற்றுமதி தொகுப்புக்களை அல் கொய்தா தற்கொலை பிரிவினர்
தாக்குதலில் இருந்து காப்பாற்றுவதில் குவிப்புக் காட்டினர்.
"இப்பொழுது ஈரானியர்களை கண்காணிப்பதுதான் எங்களுடைய உயர் முன்னுரிமை
ஆகும். மீண்டும் திடீரென்ற தாக்குதலை நாங்கள் விரும்பவில்லை; எனவே நாங்கள்... கண்டிப்பாக அவர்கள் என்ன
செய்கிறார்கள், அமெரிக்க குண்டுகள் ஈரானிய அணுசக்தி நிலையங்களில் போடப்படும்போது என்ன நிகழும்
என்பதைப் பற்றி அறிய விரும்புகிறோம்." |