WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German bank loss only the start
ஜேர்மன் வங்கியின் இழப்பு ஒரு ஆரம்பம்தான்
By Nick Beams
5 September 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
பிணை எடுக்கப்பட்ட ஜேர்மன் வங்கியான
IKB அதன் ஆண்டு
இழப்புக்கள் 700 மில்லியன் யூரோக்களாக (954 மில்லியன் அமெரிக்க டாலர்) இருக்கக்கூடும் என்ற தகவலை
கொடுத்துள்ளது. இது ஐரோப்பிய சந்தைகள் முழுவதும் குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடியின் பாதிப்புக்களினால்
வரக்கூடிய அறிவிப்புக்களில் ஒருபொழுதும் கடைசியானதாக இருக்காது.
இவ்வங்கியின் தோல்வி 1931இற்கு பின்னர் ஜேர்மன் நிதிய நெருக்கடிகளில் மோசமானதாக
இருக்கக்கூடும் என்ற எச்சரிக்கைகளை அடுத்து ஆகஸ்ட் மாத தொடக்கத்தில் வங்கிகளின் குழு ஒன்று இதை பிணை எடுக்க
ஏற்பாடு செய்தது. இந்த IKB
வங்கியின் நிர்வாகக்குழு "ஒரு புதிய ஆரம்பத்திற்கு", "இருப்புக் குறிப்பு (balance
sheet) ஒரு முறை சரிபார்க்கப்பட்டுவிட்டால்" போதுமானது
என்று கூறியுள்ளது. வங்கிக்கு $1 பில்லியனுக்கும் மேலான இழப்பு இருக்கக்கூடும் என்று மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன;
இந்த வங்கியோ மார்ச் மாதம் முடிந்த 12 மாத காலத்தில் 179.6 மில்லியன் யூரோக்கள் (244.6 மில்லியன்
அமெரிக்க டாலர்) இலாபத்தை ஈட்டியிருந்ததாக கூறப்படுகிறது.
பிணை எடுப்பதற்கான நிபந்தனைகளின்படி, அரசாங்கத்திற்கு சொந்தமான
KfW மற்றும் ஜேர்மனிய
வங்கிகளின் சங்கம் ஒன்று 3.5 பில்லியன் அளவிலான இழப்பினை சரிசெய்யக்கூடிய வகையில்
IKB மற்றும் அதன்
துணை நிறுவனம் Rhineland
Funding
ஆகியவற்றிடம் ஒப்புக் கொண்டுள்ளன; இவை அமெரிக்க குறைந்த பிணையுள்ள
அடைமான கடன்களும் உட்பட, சொத்து ஆதாரமுடைய கடன்களில் முதலீடு செய்திருந்தன.
KfW,
Rhineland இடம்
IKB
இற்கு இருந்த 8.1 பில்லியன் பொறுப்புக்கள் அனைத்தையும் ஏற்றுக் கொண்டுள்ளது.
IKB இற்கு கிடைத்துள்ள இந்த
பாரிய நஷ்டம் மற்றும் அரசாங்கத்திற்கு சொந்தமான
SachsenLB இனது நிகழ்ந்த இரண்டும் ஒரு ஆரம்பமாகத்தான்
இருக்கக்கூடும். இந்த வாரம் Fitch Ratings
ஐரோப்பிய வங்கிகள் அமெரிக்கத் குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடியில் தாங்கள் கொண்டுள்ள தொடர்புகள்
பற்றி மிகக் குறைவாகத்தான் தகவல்களை கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்படி பகிரங்கமாக உண்மையை
வெளிப்படுத்துவதற்கு காட்டும் தயக்கம் வங்கிகள் மற்றும் நிதிய அமைப்புக்கள் எந்த அளவிற்கு ஆபத்துக்களை
கொண்டுள்ளன என்பது பற்றி சந்தைகளில் நடுக்கத்தை ஏற்படுத்திவிடக்கூடும் என்று எச்சரிக்கை
கொடுக்கப்பட்டுள்ளது.
"தற்போதைய சூழ்நிலையில் முக்கியமான கூறுபாடுகளில் ஒன்று தகவல்கள்
மறைக்கப்படுவதாகும்" என்று கடந்த வெள்ளியன்று வெளியிட்ட அறிக்கையில்
Fitch
கூறியுள்ளது. "இப்பொழுது ஆபத்துங்கள் எங்கே உள்ளன என்பது பற்றி நல்ல முறையில் அறிந்து கொள்ளுவதற்கு
பதிலாக, பல சந்தையில் பங்கு பெறுபவர்கள் ஓரத்தில் நின்றுதான் வேடிக்கை பார்க்கின்றனர்."
"தகவல் மறைக்கப்படுவது" என்னும் கருத்து சில அவதானிகளுக்கு அந்நியமான
சொற்களாக காதுகளில் ஒலிக்ககூடும்; முதலீட்டாளர்களின் தரத்திற்கேற்ப இருக்கும் நிதிய இருப்புக்களில் குறைந்த
பிணையுள்ள அடைமானங்கள் எந்த அளவிற்கு சேர்க்கப்பட்டுள்ளன என்று தெரியாத நிலையில்,
Standard and Poor's, Moody's
உட்பட Fitch
இன்னும் மற்ற கடன் மதிப்பு வழங்கும் நிறுவனங்கள் இதில் எந்தளவிற்கு ஈடுபட்டுள்ளன என்பது பற்றி
சிந்திக்கவைத்துவிடும். அமெரிக்கச் சந்தைகளில் நச்சு தோய்ந்த விளையாட்டுப் பொருட்களை விநியோகித்ததற்காக
சீனா கடிந்து கொள்ளப்படும் நிலையில், ஐரோப்பிய வங்கிகள், நிதிய அமைப்புக்களில் எந்த அளவிற்கு "நச்சு
தோய்ந்த" கடன்கள் உள்ளன என்பது பற்றி தெரிவிக்காமல் இருப்பதற்கு நாணயத் தரம் அளிக்கும் நிறுவனங்கள்
பொறுப்பை ஏற்றே தீரவேண்டும் என விவாதிக்கப்படுகின்றது.
கடந்த வியாழனன்று ஜேர்மனிய அதிபரான அங்கேலா மேர்க்கெல் பொது
கண்காணிப்பிற்கு நெருக்கமாக உட்பட வேண்டியவற்றுள் நிதியச் சந்தைகளில் பங்கு பெற்றுள்ள நாணயத் தர
நிறுவனங்களும் சேர்க்கப்பட வேண்டும் என்று கூறினார். ஜூன் மாதம்
G8 கூட்டத்தில்
காப்பு நிதிகள் பற்றி சர்வதேச கண்காணிப்பு தேவை என்பதற்கான முயற்சிகளை மேற்கொள்ள முயன்றார்; ஆனால்
அமெரிக்காவும், பிரிட்டனும் இக்கருத்தை எள்ளி நகையாடின. ஆனால் அக்டோபர் மாதம்
G8 நிதி மந்திரிகள்
உச்சி மாநாடு நடக்கும் நேரத்தில் சர்வதேச கட்டுப்பாடு பற்றிய பிரச்சினை மீண்டும் விவாதப் பட்டியலில்
சேர்க்கப்படலாம்.
பிரெஞ்சு ஜனாதிபதியான நிக்கோலா சார்க்கோசி அமெரிக்க நாணயத் தர
நிறுவனங்கள் குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடியில் கொண்ட பங்குகளை பற்றி தாக்கிப் பேசியவர்களுள்
ஒருவராவார். கடந்த மாத உரை ஒன்றில் அவர் "முக்கிய நாடுகளின் தலைவர்கள் உறுதியான ஒருங்கிணைந்த
வகையில் வெளிப்பாட்டுத் தன்மை மற்றும் சர்வதேச சந்தைகளை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மேற்கொள்ளத்
தவறினால்", நிதிய நெருக்கடிகள் அடிக்கடி ஏற்படும் ஏன்று எச்சரித்தார்.
International Herald Trubune
ஆகஸ்ட் 28 ல் வந்துள்ள கட்டுரை ஒன்று அமெரிக்கச் சந்தைகள் பற்றி ஒரு
"சர்வதேச கண்ணோட்டம்" தேவை என்று பெருகிய முறையில் உணரப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ளது. "ஒரு
சர்வதேச அணுகுமுறை நமக்குத் தேவை; அமெரிக்கவும் அதில் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்" என்று ஜேர்மன்
அரசாங்கத்தின் பொருளாதார ஆலோசனைக் குழுவின் உறுப்பினராக இருக்கும்
Peter Bofinger
செய்தித்தாளிடம் தெரிவித்தார்.
எதிர்பார்க்கப்படும் அமெரிக்க எதிர்ப்பை ஒட்டி,
Peter Bofinger
அமெரிக்காவின் பெருகிவரும் கடன் நிலையின் தாக்கங்கள் பற்றியும் நினைவுபடுத்தினார்: "உலகின் மற்ற பகுதிகளை
தன்னுடைய கடனுக்கு அமெரிக்கா நம்பியுள்ளது. எமது நிறுவனங்கள் அவர்களுடைய நிதியப் பொருள்களை வாங்குவதை
நிறுத்தினால், அவர்களை அது பெரிதும் பாதிக்கும்."
பிரான்சின் பொருளாதார பகுப்பாய்வுக் குழுவின், பிரதம மந்திரிக்கு
ஆலோசனைகளை வழங்கும் அமைப்பின் தலைவரான
Christian de Boissieu, காப்பு நிதிகள் (Hedge
funds) இன்னும் கடுமையான விதிகளுக்கு உட்படுத்தப்பட
வேண்டும், அவற்றின் ஆபத்துக்கள் நன்கு விளக்கப்பட வேண்டும் என்று கூறினார். அனைத்து காப்பு நிதியங்களும்
உலகந்தழுவிய பத்திரத்தில் பதிவு செய்யப்பட வேண்டும் என்றும் வங்கிகள் முதலீடு செய்வதற்கு இசைவு பெறுவதற்கு
முன்பு சிக்கல் வாய்ந்த பாதுகாப்பு பத்திரங்கள் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும் என்றும் கூறினார்.
ஆனால் அத்தகைய நடவடிக்கை சற்றே தாமதமாகத்தான் வந்துள்ளது; அதுவும்
தற்போதைய நெருக்கடியின் தன்மை இன்னும் வெளிப்படையாக வந்துள்ளபோது அவ்வாறுதான் தோன்றுகிறது.
அமெரிக்க மத்திய வங்கி மற்றும் வணிக பத்திரச் சந்தையின் பெரும்பகுதி அவசரக்கால நடவடிக்கை எடுத்தும்,
நிறுவனங்களுக்கும் நிதிய அமைப்புக்களுக்கும் குறுகிய கால தற்போதுள்ள சொத்துக்களால் கொடுக்கல்-வாங்கல்
செய்யக்கூடிய தகமை வழங்க வேண்டியதின் ஆதாரம் இன்னமும் முடக்கப்பட்டுள்ளது. இக்கடன்களின் அளவு $24
பில்லியன் குறைவாக கடந்த முன்று வாரங்களில் போய்விட்டது; இது குறைந்த பிணையுள்ள கடன் நெருக்கடி
ஏற்படுத்திய நம்பிக்கை குறைவைத்தான் பிரதிபலிக்கிறது. 11 சதவிகிதம் சுருங்கியது என்றால் அது கடந்த ஏழு
ஆண்டுகளில் மிக அதிகமானதாகும் என்று மத்திய வங்கி தவகல்கள் கூறுகின்றன.
மேலும் மத்திய வங்கியால் தற்போதுள்ள சொத்துக்களால் கொடுக்கல்-வாங்கல்
செய்யக்கூடிய தகமையை அதிகரிப்பதற்கு எடுக்கப்படும் நடவடிக்கை அமெரிக்க பொருளாதாரத்தின் மற்றைய
பிரிவுகளில் வீடுகள் சரிவின் பாதிப்பைத் தடுக்க முடியுமா என்ற சந்தேகங்களும் உள்ளன. பைனான்சியல்
டைம்ஸின் கட்டுரையாளர் Wolfgang Munchau
குறைந்த பிணையுள்ள அடைமானங்கள் வீட்டின் மதிப்பை விட அதிகமாகப் போய், அடைமான திருப்பிக் கட்டுதல்கள்
அதிகமானால், வட்டிவிகிதக் குறைப்புக்களினால் பயன் ஏதும் இருக்காது என்று கூறியுள்ளார்.
இன்னும் பல பிரச்சினைகளும் எதிர்கொள்ளப்பட உள்ளன. "குறைந்த பிணையுள்ள கடன்
சந்தை ஒன்றுதான் கடன் சந்தையில் உறுதியற்ற துணைப் பிரிவு என்று இல்லை என்பதை நாம் நினைவிற் கொள்ள
வேண்டும். அமெரிக்காவின் நுகர்வு குறையும்போது, கடன் அட்டைகளில் நெருக்கடி, மற்றும் வாகனங்கள் மாதாந்த
தவணையில் கொடுக்கும்
உத்தரவாத கடன் வழங்கல் (CDO)
உம் நெருக்கடியை சந்திக்கும் என்பதை நாம் எதிர்கொள்ள
வேண்டும். வட்டச் சுழற்சியில், பெருநிறுவன திவால்கள் மீண்டும் எழுச்சி பெற்றால், அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும்
அவ்வாறு நிகழ்ந்தால், உத்தரவாதக் கடன் நெறிகள் பற்றியும் பிரச்சினைகளை நாம் கேட்க வேண்டியிருக்கும். கடன்
சந்தை மிக ஆழமானது; தொத்துவியாதி போல் பரவுவதற்கு அதில் திறன் உள்ளது." என்று அவர் தொடர்ந்து
கூறினார்.
நிதியச் சந்தைகள் மற்றும் பொருளாதாரத்தில் நிலைப்பாடு பற்றிய அக்கறைகள்
இன்னமும் பொதுவாக மத்திய வங்கியின் ஆண்டு கருத்தரங்கு
Jackson Hone
ல் கடந்த வாரம் நடந்து முடிந்த பின்னரும் கூட குறையவில்லை.
இதில் பங்கு பெற்றவர்கள், வங்கியாளர்கள் மற்றும் கல்வியாளர்கள் உட்பட,
அரங்கை விட்டு வெளியேறும்பொது நுழையும்போது இருந்ததைவிட பெரும் நம்பிக்கையற்ற தன்மையில்தான் இருந்தனர்
என்று ஒரு Bloomberg
அறிக்கை குறிப்பிட்டுள்ளது.
"மந்த நிலை வராது என்ற நினைப்பில் நான்
Jackson Hole
கருத்தரங்கிற்கு வந்தேன். ஆனால் அப்படி ஒரு நிலை வரலாம் என்ற கருத்தில்தான் மாநாட்டை விட்டு
நகருகிறேன்." என்று பென்சில்வானியா பல்கலைக்கழகத்தின்
Wharton School
ஐ சேர்ந்த பேராசிரியர் Susan Wachter
செய்தி நிறுவனத்திடம் கூறினார்.
Lehmen Brothers ல்
தலைமை அமெரிக்கப் பொருளாதார வல்லுனராக இருக்கும்
Ethan Harris, "கூட்டத்தில் பல நம்பிக்கை நிறைந்தவர்கள்
இருந்தனர். இது தீவிரமாகிவிடக் கூடும் என்ற வலுவான ஒருமித்த கருத்துத்தான் வெளிப்பட்டுள்ளது." என்று
கூறினார். |