WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German politicians deny responsibility for racist
attack
இனவெறித் தாக்குதலுக்கான பொறுப்பை ஜேர்மன் அரசியல்வாதிகள் மறுக்கின்றனர்
By Stefan Steinberg
31 August 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
ஜேர்மனிய பெரும் கூட்டணி அரசாங்கத்தின் முக்கிய உறுப்பு அமைப்புக்கள் (சமூக
ஜனநாயக கட்சி, கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் மற்றும் கிறிஸ்துவ சமூக யூனியன்)
ஆகியவை கிழக்கு ஜேர்மனிய சிறு நகரான மூஹெல்னில் ஒரு
குடிகாரக் கும்பல் சமீபத்தில் இந்திய குடிமக்கள் மீது நடத்திய தாக்குதலை பாசாங்குத்தனத்துடனும் நிராகரித்தலுடனும்
எதிர்கொண்டனர்.ஒருமித்த வகையில் அவர்கள் இத்தகைய பிற்போக்குத்தனமான வெறிச் செயல்கள் தங்களுடைய
சொந்த அரசியல் சமூகக் கொள்கைகளுடன் எவ்விதத் தொடர்பும் அற்றவை என்று கூறுகின்றனர். மாறாக ஜேர்மனிய
மக்களை "இனவெறிக்காக" அவர்கள் குறைகூறி, இன்னும் கூடுதலான வகையில் "பொது விழிப்புணர்வு" (Civic
Courage) காட்ட வேண்டும் என்று குடிமக்களுக்கு அருளுரை அழைப்பு
விடுத்துள்ளனர்.
ஆகஸ்ட் 19, ஞாயிறன்று அதிகாலையில், லைப்சிக்கிற்கு 50 கிலோமீட்டர் தெற்கே
உள்ள ஒரு சிறுநகரான மூஹெல்ன் என்ற இடத்தில் நடைபெற்ற தெருவிழாவில் பங்கு பற்றிய எட்டு இந்தியர்கள்
மிருகத்தனமாக ஐம்பது இளைஞர்களால், தேசிய, இனவெறி கோஷங்களுடன் தாக்கப்பட்டனர்.
ஜேர்மனிய அதிபரான அங்கேலா மேர்க்கெல் (கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்-CDU)
மூஹெல்னில் நடைபெற்ற நிகழ்வுகளை "அசாதரணமான முறையில் வேதனை தரும், வெட்ககரமான நிகழ்வு" என்று
கண்டித்தார்; இது வெளிநாடுகளில் "மிகக் கவனமாக" கவனிக்கப்பட்டுள்ளதாகவும் ஜேர்மனியின் சர்வதேச நிலைப்பாட்டிற்கு
பாதிப்பு விளைவிக்கக் கூடும் என்றும் அவர் கூறினார்.
இன்னும் கூடுதலான வகையில் சமூக, கலாச்சார திட்டங்களுக்கு நிதி ஒதுக்குவதின்
மூலம் மட்டும் வலதுசாரித் தீவிரத்திற்கு எதிரான போராட்டம் நின்றுவிடக் கூடாது என்று மேர்க்கெல் கூறினார்.
மாறாக ஒவ்வொரு குடிமகனும் இதில் தலையிட்டு "தனிப்பட்ட முறையில் தைரியத்தை காட்ட வேண்டும்" என்ற
அழைப்பையும் அவர் விடுத்தார்.
கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் பொதுச் செயலாளர் ரொனால்ட் போவ்வாலா
அதிபரின் கருத்துக்களையே எதிரொலித்த வகையில் மேர்க்கெலுக்கு ஆதரவு கொடுத்து, "எங்களுக்கு கூடுதலான
பணம் வேண்டாம்; கூடுதலான பொது விழிப்புணர்வுதான்" வேண்டும் என்று
Ostsee
பத்திரிகைக்கு அவர் தெரிவித்தார்.
கிழக்கு ஜேர்மனிய மாநிலமான
Saxony-Anhalt
இன் பிரதமரான
வொல்வ்காங் போமர்
(CDU) நாட்டின்
கிழக்கில் தீவிரவலதின் செல்வாக்கு பரப்பு பற்று ஜேர்மனி குறைமதிப்பு செய்கின்றது; மேலும்
Leipzisger Volkszeitung
பத்திரிகையிடம், "ஒரு இனவெறி உணர்வு மக்களில் குறைந்த பட்சம் ஒரு பகுதியினரிடையேயாயினும் உள்ளது" என்றும்
தெரிவித்தார்.
Suddeutsche Zeitung
பத்திரிகையில் வந்துள்ள ஏமாற்றத் திகைப்பை கொடுக்கும் கட்டுரை ஒன்றின்படி, மூஹெல்னில் நடந்த தாக்குதல்
எந்த அளவிற்கு "அந்நியரை பற்றிய பயம்" மற்றும் "சர்வாதிகார சிந்தனையின் வளர்ச்சி ஜேர்மன் மக்களிடையே
ஆழ்ந்த வேர்களை கொண்டுள்ளது என்பதை உறுதிப்படுத்துகிறது என எழுதியுள்ளது.
பசுமைக் கட்சியின் தலைவர்களும் வன்முறையை கண்டித்தனர்; ஜேர்மன் தொழிற்சங்க
கூட்டமைப்பின் (DGB)
தலைவர் மைக்கேல் சோம்மர் "கெளரவமான மக்களின் எழுச்சி" தேவை என்றார்; அதாவது பயனற்ற
அரசாங்கத் தலைமையிலான எதிர்ப்புக்கள், முன்பு வெளிநாட்டு மக்களுக்கு எதிராக நடந்தபோது நடத்தப்பட்டது
போல் வரவேண்டும் என்று கூறுகிறார்.
ஆகஸ்ட் 19 நிகழ்வுகளில், மிகத்தீவிர வலதுசாரி ஜேர்மன் தேசிய கட்சியின்
(NPD) தொடர்பு இருந்ததற்கான நேரடிச் சான்றுகள்
இல்லாவிடினும், சமூக ஜனநாயக கட்சி (SPD)
யின் தலைவர் குர்ட் பெக்கும் சமூக ஜனநாயக கட்சி உள்துறை அமைச்சரகத்தில் வல்லுனரான டீற்றர் வீவில்புட்ஷும்
மூஹெல்ன் நிகழ்வுகளை அக்கட்சியின் மீது தடை வேண்டும், அதுதான் சமீபத்திய ஆண்டுகளில் நாட்டின் கிழக்குப்
பகுதியில் தன்னுடைய நடவடிக்கைகளை விரிவாக்கியுள்ளது என்று கூறியுள்ளனர்.
2003ல் ஜேர்மன் தேசிய கட்சியை தடைசெய்ய வந்த முன்முயற்சி ஜேர்மன்
நீதிமன்றங்களால் தூக்கி எறியப்பட்டது; ஏனெனில் அரசாங்க முகவர்கள் ஏராளமான முறையில் நவபாசிச அமைப்பில்
சேர்ந்துள்ளது கட்சியின் மீது எத்தடையும் பயனற்றது என்பது வெளியானது. ஜேர்மனியில் தீவிர வலதுசாரி
அமைப்புக்களை தடைசெய்தல் என்பது மரபார்ந்த வகையில் பழைமைவாத அரசியல் வாதிகளால் முன்வைக்கப்படும்
கருத்து ஆகும்; அவர்கள் அரசாங்கத்திற்கு வரும் எந்த எதிர்ப்பையும், குறிப்பாக இடதில் இருந்து வருபவற்றை
சமாளிக்க கூடுதலான அரசஅதிகாரங்கள் வேண்டும் என்று வாதிடுபவர்கள் ஆவர்.
முக்கிய அரசியல் வட்டாரங்கள், செய்தி ஊடகங்கள் ஆகியவை மூஹெல்ன் நிகழ்வுகளை
எதிர்கொண்ட விதம் முற்றிலும் பாசாங்குத்தனம் ஆகும். 1990ல் ஜேர்மனி மறு இணைப்பு அடைந்துள்ள 17 ஆண்டுகள்
பற்றிய நிதானமான ஆய்வு தேசிய, இனவெறி உணர்வுகளின் வளர்ச்சிக்கான முக்கிய பொறுப்பு நாட்டின் முக்கிய
அரசியல் கட்சிகளிடம்தான் உள்ளது என்பதை தெளிவுபடுத்தும். தன்னுடைய சொந்தக் கொள்கையின் சமூக
விளைவுகளிடம் இருந்து கவனத்தை திசை திருப்பும் வகையில், ஜேர்மனிய அரசாங்கங்கள் பல முறையும் மக்களை
இனவெறிப் பிரச்சாரத்தில் ஈடுபடத் தூண்டி, பின்னர் இனவழித் தாக்குதல் நடக்கும்போது மக்கள் அனைவரையுமே
குறை கூறியுள்ளன.
முதலாளித்துவ மறு இணைப்பின் அரசியல், பொருளாதார விளைவுகள்
ஆரம்பத்தில் இருந்தே கிழக்கு ஜேர்மனியில் முதலாளித்துவமுறை
அறிமுகப்படுத்தப்பட்டபின் தேசிய உணர்வை தூண்டிவிடுதல் ஒரு முக்கிய அடையாளமாக இருந்தது. 1989ம் ஆண்டு
மேற்கு ஜேர்மனியின் அரசியல் முக்கியஸ்தர்கள் கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச அதிகாரத்துவத்தின் கூறுபாடுகளுடன்
ஏற்கனவே ஒத்துழைத்து கிழக்கு ஜேர்மனிய ஆட்சிக்கு எதிராகக் காட்டும் ஜனநாயக சார்பு உடைய
ஆர்ப்பாட்டங்களை ஜேர்மனிய தேசியவாத திசையில் திருப்பினர்.
இப்பிரச்சாரத்தின் மையமாக இருப்பது சாக்சனி மாநிலம் ஆகும். 1989ல்
லைப்சிக்கில் நடைபெற்ற திங்கள் எதிர்ப்பு ஆர்ப்பாட்டத்தில், கூட்டாட்சிக் குடியரசின் (மேற்கு ஜேர்மனியின்)
கொடிகள், கிழக்கு ஜேர்மனியின் ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சியின் (SED)
முக்கிய தலைவர்களின் ஆதரவுடன் தோன்ற ஆரம்பித்தன; பின் இக்கட்சி ஜனநாயக சோசலிச கட்சியானது
(PSD).
ஆர்ப்பாட்டக்காரர்களின் முதல் கோஷம், "நாம்தான் மக்கள்" என்பது
தேசியவாத கோஷமான "நாம் ஒரு மக்கள்" என்று மாறியது.
மறு ஒருங்கிணைப்பு காலத்தில் இருந்து தொடர்ச்சியான ஜேர்மனிய அரசாங்கங்கள்
பலமுறையும் இனவெறிப் பிரச்சாரங்களை சமூக அமைதியின்மையை எதிர்கொள்ளும் வகையில் தொடக்கின. கிறிஸ்துவ
ஜனநாயக யூனியன் தலைமையிலான கெல்முட் கோல் மற்றும் அவருக்குப் பின் வந்த சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்
கட்சி கூட்டணி அரசாங்கமும் (1997-2005) முறையாக குடியேறுபவர்கள், தஞ்சம் கோருவோருக்கு ஜேர்மனியின்
போருக்கு பிந்தைய அரசியல் அமைப்பில் வழங்கப்பட்டுள்ள உரிமைகளை குறைக்கும் வகையில் முயற்சிகளை
மேற்கொண்டன.
நாட்டினுள் குடியேறுபவர்கள் வருவதை தடுக்கும் வகையில் எல்லைக் கட்டுப்பாடுகள்
பலப்படுத்தப்பட்டன; இதன் விளைவாக ஜேர்மனிக்குள் வலதுசாரி வன்முறையினால் ஏற்பட்ட மொத்த
பாதிப்பாளர்களின் எண்ணிக்கையை விட ஜேர்மனிய எல்லையில் வெளிநாட்டினரின் உயிர்கள் அதிகமாகப் போயின.
குடியேறுபவர்களின் உரிமைகள் தொடர்ந்து தாக்கப்படுதல், அரசாங்கத்தின்
இனவெறிப் பிரச்சாரத்துடன் இணைந்த வகையில் மேற்கு ஜேர்மனிய நகரங்களான
Mölln (1992),
மற்றும்
Solingen (1993) ஆகியவற்றின்மீது இனவெறித் தாக்குதல்கள்
நடத்தப்பட்டதின் பின்னணி ஆயிற்று. இதையொட்டி பல துருக்கிய குடும்பங்கள் முற்றிலும் மடிந்து போனது
விளைவாயிற்று. அப்பொழுதும், இப்பொழுது போலவே ஜேர்மனிய அரசியல்வாதிகள் தேசிய, இனவழி உணர்வுகள்
வளர்வதில் தங்களுக்கு இருந்த பொறுப்பைக் கைகழுவி விட்டனர். தாக்குதலுக்கு பரந்த அளவில் பொதுமக்கள்
காட்டிய எதிர்ப்பு மற்றும் கடும் வெறுப்புணர்வை திசைதிருப்பும் வகையில் அமைதியான மெழுகுவர்த்தி ஏற்றும்
ஆர்ப்பாட்டங்களை "அனைத்து ஜனநாயகவாதிகளின் ஒற்றுமை", "கெளரவமானவர்களின் எதிர்ப்பு" என்ற வகையில்
கோஷங்களிட்டு நடத்தினர்.
சமூக ஜனநாயக கட்சி,
கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் என்னும் இரு கட்சிகளில் இருந்தும்
அரசியல்வாதிகள் பலமுறையும் குடியேற்றத்திற்கு முற்றுப் புள்ளிவைக்க வேண்டும் என்ற தீவிர வலதுசாரிகளின்
அடிப்படைக் கோரிக்கையை, "படகு நிரம்பியுள்ளது" என்ற கோஷத்தை ஜேர்மனிய பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு
இன்னும் பொருத்தமான வகையில் மாற்றின. முன்னாள் சமூக ஜனநாயக கட்சி உள்துறை மந்திரியான ஓட்டோ ஷில்லி
ஜேர்மனிக்கு புதிய குடியேறுபவர்கள் வரவேற்கப்பட மாட்டார்கள் என்றும் "ஏற்றுக்கொள்ளக்கூடிய அளவு
அடையப்பட்டுவிட்டது" என்றும் கூறினார்; கிறிஸ்துவ ஜனநாயக யூனியன்/கிறிஸ்துவ சமூக யூனியனின் முன்னாள்
பாராளுமன்றக் குழுவின் தலைவரான ப்றீட்றிஸ் மெர்ட்ஸ் "நம் நாட்டின் நலனை ஒட்டி குடியேறுதலை கட்டுப்படுத்த
வேண்டுமே அன்றி, குடியேறுபவர்களின் நலன்களை ஒட்டி அல்ல. குடியேறுதலுக்கு சட்டபூர்வ உரிமை இருக்க
முடியாது." என 2001ல் கூறினார்.
"ஜேர்மனிய வழிக்காட்டும் கலாச்சாரம்" என்று ஜேர்மனிய தேசியவாதத்திற்கு
புத்துயிர் கொடுக்கும் பிரச்சாரத்திலும் மெர்ட்ஸ் ஒரு முக்கிய முன்முயற்சியாளராக இருந்தார். செப்டம்பர் 11,
2001 தாக்குதல்களுக்கு பின்னர் மெர்ட்ஸின் பிரச்சார ஆதரவாளர்கள் விரைவில் இஸ்லாமிசம்தான் புதிய
"வெளிநாட்டு ஆபத்து" என்றும் இது "ஜேர்மனிய அடையாளத்தை" அச்சுறுத்தக்கூடும் என்றும் கூறத் தலைப்பட்டனர்.
இன்னும் கூடுதலான வகையில் "பொது விழிப்புணர்வு" பொதுமக்களால் காட்டப்பட
வேண்டும் என்று முறையிடும் வகையில் ஜேர்மனிய அரசியல் வாதிகள் வலதுசாரித் தீவிரவாதிகளுக்கு எதிரான
திறமையான போராட்டத்தை நீதித்துறையும் காவற்துறையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதை பற்றிச் சிறிதும்
கவனியாமல் உள்ளனர்.
பல அமைப்புக்களும் இளைஞர்களும் பல முறையும் இனவழி அநீதி மற்றும் வன்முறை
வலதுசாரித் தீவிரப் பிரச்சாரத்தில் இருப்பது பற்றி எதிர்ப்புத் தெரிவித்துள்ளனர்; ஆனால் நீதிமன்றங்கள்
குடியேறுபவர், தஞ்சம் கோருபவர்களுக்கு எதிராக மோசமான முறையில் வலதுசாரிகள் அல்லது போலீசார்
நிகழ்த்திய குற்றங்களில் மிகக் குறைந்த தண்டனை கொடுப்பதையே கண்டனர். அந்த நேரத்தில் தீவிர இனவெறிக்கு
எதிரான அமைப்புக்கள் திறமையுடன் செயல்படுவதற்குத் தேவையான நிதியங்கள் இல்லாமல் வாடுகின்றன.
கலாச்சாரரீதியில் பிற்போக்குத்தனத்திற்கு விளைநிலத்தை உருவாக்குவதுடன், பெருகிய
சமூக சமத்துவமின்மையை வார்த்தை ஜாலங்களுடன் சுரண்ட முற்பட்டுள்ள தீவிர வலது அமைப்புக்களுக்கு
இடமளித்துள்ளது ஜேர்மனிய மக்களிடையே உள்ள இனவெறி அல்ல. பதிலாக, இனவாத, தேசியவாத
முற்கருத்துக்களை கொண்ட கொள்கைகளுக்கு ஊக்கம் கொடுக்கும் வகையில் ஜேர்மனிய ஆளும் உயரடுக்கு நடந்து
கொள்ளும் முறையுடன் அதிகரிக்கும் வறுமையும் இணைவதுதான்.
2006ல் சாக்சனி மானில அரசாங்கம் வெளியிட்ட அறிக்கை ஒன்று இந்த முன்னாள்
கிழக்கு ஜேர்மனிய நாட்டின் அரசாங்கக் கொள்கையில் இருந்து விளைந்த சமூகப் பேரழிவை குறியிட்டுக்
காட்டுகிறது.
2005ம் ஆண்டு சாக்சோனி மாநிலத்தின் மக்கட்தொகையில் எட்டில் ஒரு பகுதி
முன்னாள் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட
Hartz IV
மற்றும் சமூக பொதுநல உதவித் தொகைகளை நம்பியிருந்தது. 2005ம் ஆண்டு மொத்த வேலையற்றவர் எண்ணிக்கை
420,000 என்று இருந்தது; அதாவது மக்கட்தொகையில் ஐந்தில் ஒரு பங்கினர். சிறு நகரங்களிலும்,
கிராமங்களிலும் இந்த எண்ணிக்கை மாநில அளவை விட இருமடங்காக இருந்தது.
அதே நேரத்தில் குறைவூதிய வேலைகளில் --இரண்டாம் வேலைச் சந்தை என்று
அழைக்கப்பட்டது -2007ல் குறைந்தது 36,000 பேர் இருந்தனர் -- இருந்த பல்லாயிரக்கணக்கான
தொழிலாளர்கள் இருந்தனர். இதன் விளைவாக வேலையற்றவர்களுடைய குடும்பங்களில் மட்டும் வறுமை
நின்றுவிடவில்லை. சாக்சோனி அரசாங்கம் கொடுத்த அறிக்கையின்படி, மாநிலத்தின் குடும்பங்களில் 24
சதவிகிதத்தினர் (தேசியவிகிதமான 15 சதவிகிதத்துடன் ஒப்பிடுகையில்) வறுமையில் வாழ்ந்திருந்தனர்.
வறுமை அளவுகள் சாக்சோனி மற்றும் ஜேர்மனியில் மொத்தமாக உயர்ந்து
வருகையில், சாக்சோனியில் வறுமை விகிதம் என்பது 1990 களின் இறுதிப்பகுதியில் இருந்து விரைவான வேகத்தில்
உயர்ந்துள்ளது. மாநிலத்தில் உள்ள வேலைகள் மற்றும் பணி நிலைமைகள் மீது நடத்தப்படும் இடைவிடாத்
தாக்குதல்களோடு சமூக, பொதுநல வசதிகள் மக்களுக்காக கொடுக்கப்படுவது என்பது முற்றிலும்
மூடப்படுவதுடனும், இளைஞர்களுக்கும் குறிப்பாக மறுக்கப்படுவதுடனும் இணைந்து நடைபெறுகிறது.
இத்தகைய பொருளாராத நிலைமைகள் வன்முறையின் வெடிப்பிற்கு, மூஹெல்ன்
நகரத்தில் நடைபெற்றது போன்றவற்றிற்கு, முற்றிலும் பொருத்தமானவைதான். சமீபத்திய ஜேர்மனிய செய்தி
ஊடகத் தகவல்கள், நிகழ்வைப் பற்றி விசாரிப்பவை, வன்முறையில் தொடர்பு கொண்டிருந்த முக்கிய நபர்களில்
ஒருவர் ஒரு 17 வயது ஜேர்மனிய இளைஞர் எனக் கூறுகின்றன; இந்த இளைஞர் சமூக நல உதவியில் வாழும்
ஒற்றைப் பெற்றோரின் ஐந்து குழந்தைகளில் ஒருவர் ஆவார்.
சுயதிருப்தியுடன், தன்னிறைவு பெற்றுள்ள அரசியல்வாதிகள், அதிபர் மேர்க்கெல்
உட்பட, அருளுரை வகையில் கூடுதலான "பொது விழிப்புணர்வு" வேண்டும் என்று அழைப்புக் கொடுத்து பணம் மட்டும்
கிழக்கு ஜேர்மனியின் பிரச்சினைகளைத் தீர்க்க முடியாது என்று அறிவிக்கையில், இவர்களுடைய பொருளாதார
கொள்கைகள்தான் பாரிய முறையில் உழைப்பு மற்றும் சமூகரீதியாக பின்தங்கிய மக்களிடம் இருந்து செல்வத்தை ஒரு
பொருளாதாரச் சலுகை உடைய உயரடுக்கிற்கு மாற்றுகிறது என்ற உண்மை மறுப்பதற்கில்லை.
இந்த வழிவகை நாட்டின் கிழக்குப் பகுதியோடு நின்றுவிடவில்லை. முன்னாள் சமூக
ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி அரசாங்கத்தின்கீழ் சமூக, பொதுநலச் செலவினக் குறைப்புக்கள் நாடு
முழுவதும் நடத்தப்பட்டு, அத்துடன் ஊதியங்கள் வேலைகள் மீதான தாக்குதலும் போருக்கு பிந்தைய ஜேர்மனியில்
இல்லாத அளவிற்கு நடைபெற்றன. இந்தக் கசப்பான அனுபவங்களில் வெளிவந்த அடிப்படை உண்மை ஜேர்மனியில்
பெரும்பாலான பிளவு கிழக்கிற்கும் மேற்கிற்கும் இடையே அல்ல, மாறாக முதலாளித்துவ வர்க்கம் மற்றும்
உழைக்கும் வர்க்கத்திற்கும் இடையே என்பதுதான்.
சாக்சோனியில் இடது கட்சி
ஜேர்மனியின் அரசியல் கட்சிகள் பங்கு வறுமையின் வளர்ச்சி மற்றும் தேசிவாதத்தை
வளர்த்தலில் எப்படி உள்ளது என்பதைப் பற்றிய எந்த ஆய்வும் இடது கட்சியின் பங்கை ஆராயாவிட்டால்
முற்றுப்பெறாது; ஏனெனில் அது ஜனநாயக சோசலிச கட்சி (PDS)
மற்றும் தேர்தல் மாற்றிட்டுக் குழு (WASG)
இவற்றின் இணைப்பின் மூலம் வந்தது ஆகும்.
இடது கட்சியின் முக்கிய உறுப்பினர்கள் மூஹெல்ன் வன்முறையைக் கண்டித்து தங்கள் கட்சி
சாக்சோனி மாநிலத்தில் அதிகாரத்தில் இல்லை என்பதை கூறி அதற்கான எந்தப் பொறுப்பில் இருந்தும் கைகழுவி
விட்டனர். ஆனால் பேர்லின் மற்றும் சமீப காலம் வரை
Mecklenburg Voropommern மாநிலத்தில் இடதுகட்சி
உள்ளூர்ப்பணிகள் தகர்க்கப்படுதல் மற்றும் வேலைகள் ஊதியங்கள் ஆகியவற்றின்மீதான தாக்குதல்களில் முக்கிய பங்கைக்
கொண்டுள்ளது. எனவே சமூக விளைவுகளுக்கு இக்கட்சியும்தான் பொறுப்பு ஏற்க வேண்டும்.
உண்மையில், சாக்சோனியில் உள்ள இடது கட்சியின் கட்சிப்பிரிவில் வலதுசாரி பிரிவு
முழுவதையும் அடக்கியுள்ளது. தன்னுடைய தகுதி நற்சான்றுகளை அது எப்பொழுதும் ஒரு "பொறுப்புடைய" கட்சி
என்று காட்டிக் கொள்ள முற்பட்டு, ஜேர்மனிய சிறு வணிக நலன்களுக்கு சிறந்த நிலைமைகள் உருவாக்கப்பட
வேண்டும் என்றும் முறையிட்டுள்ளது.
1990களின் தொடக்கத்தில், டிரெஸ்டென் நகரில் ஜனநாயக சோசலிச கட்சியில்
முக்கிய நபராக இருந்த கிறிஸ்ரீன ஒஸ்ரோவிஸ்கி,
தீவிர வலதுசாரி ஜேர்மன் தேசிய கட்சியின் நட்புக் காண முயலும்
இதே சமூக அடுக்கைத்தான் தனக்கு ஆதரவாகத் திரட்ட முயன்றார். பவேரியா மாநில கிறிஸ்தவ சமூக யூனியன்
போன்றவிதத்தில் பழைமைவாத அணுகுமுறையுடன், ஒரு கிழக்கு ஜேர்மனிய கட்சி, "உள்நாட்டு சிறு வணிகர்களை"
தளமாகக் கொண்டு அமைக்கப்பட வேண்டும் என்று ஒஸ்ரோவிஸ்கி அழைப்பு விடுத்தார். ஜனநாயக சோசலிச
கட்சியுடனும் தீவிர வலது கட்சிகளுடன் இதற்கான உரையாடல்களையும் அவர் கோரினார்.
ஜனநாயக சோசலிச கட்சி-இடது
கட்சி இதுவரை சாக்சோனி அரசாங்கத்தில் பங்கைப்பெற மறுக்கப்பட்டாலும், அதன் பிரதிநிதிகள் பங்கு உள்ளூர்
அளவில் சமூக ஜனநாயக கட்சி மற்றும் கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் நகரசபை தலைவர்கள், கிராமசபை
தலைவர்களுடன் ஒத்துழைத்து சமூக, பொதுநல வெட்டுக்களுக்கு ஆதரவு கொடுத்து வருகின்றனர். கட்சித்
தலைமையும் இவ்வாண்டு சமூக ஜனநாயக கட்சியின் இடத்தை தற்போதைய கூட்டு அரசாங்கத்தில் எடுத்துக்
கொள்ளத் தயார் என்றும் ஒரு கிறிஸ்தவ ஜனநாயக யூனியன் சிறுபான்மை அரசாங்கத்தை "பொறுத்துக் கொள்ளத்
தயார்" என்றும் தெளிவாக அறிவித்துள்ளது.
பழைமைவாத வலதிற்கு உற்ற நட்புக் கட்சி என்பதை நிரூபிப்பதற்காக டிரெஸ்டெனில்
உள்ள இடது கட்சியின் பாராளுமன்ற பிரிவில் பாதிபேர் கூட்டணி அரசாங்கத்தின் திட்டமான அரசாங்கத்திற்கு
உடைமையான வீடுகள் பங்கை அமெரிக்க ஊக வணிக நிறுவனமான
Fortress க்கு
விற்பதற்கு ஆதரவாக வாக்களித்தனர்; இது விரைவில் 15 சதவிகித வாடகை ஏற்றத்தை சுமத்தியது.
ஜேர்மனியின் முக்கிய அரசியல் கட்சிகள் பலமுறையும் தேசிய தீவிரப் பற்று கருத்தை
சமூக எதிர்ப்பை திசைதிருப்பப் பயன்படுத்திருக்கையில், அதே போன்ற முறைதான் இடது கட்சியிலும்
காணப்படலாம். கிழக்கு ஜேர்மனியில் 2000ம் ஆண்டில் சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி கூட்டணியின்
வெறுப்பிற்கு உட்பட்ட சமூகச் செலவினங்களை எதிர்த்திருந்த
Hartz IV
மீதான தாக்குதல்கள் உச்சக் கட்டத்தில் இருந்தபோது, இடது கட்சியின் முக்கிய பிரமுகரும் முன்னாள் சமூக
ஜனநாயக கட்சி தலைவருமான ஒஸ்கார் லாபொன்டைன் லைப்சிக் நகரின் சந்தையை வெளிநாட்டு
தொழிலாளர்கள்மீது தாக்குதல் நடத்த பயன்படுத்தினார்.
கூட்டணியின் சமூகக் கொள்கைகளை எதிர்த்த ஆர்ப்பாட்டம் ஒன்றில் பேசிய அவர்,
போலந்து மற்றும் செக் குடியரசின் எல்லைகளை கருத்தில் கொண்டு லாபொன்டைன் ஜேர்மனிய தந்தையர் மற்றும்
தாய்களை அவர்கள் வேலைகளை வெளிநாட்டு தொழிலாளர்கள் எடுத்துக் கொண்டுவிடாமல் தடுக்க வேண்டியது அரசாங்கத்தின்
பொறுப்பு என்று கூறினார். லாபொன்டைனின் அறிக்கை ஒன்றும் வாய்தவறி வெளிவந்துவிட்ட கருத்து அல்ல. அவருடைய
மிக சமீபத்திய புத்தகத்தில் அவர் "கட்டாய குடியேற்றம்" பற்றிக் குறிப்பிட்டு, ஜேர்மனியின் உயரடுக்கின் மீது இது
கட்டாயமாக சுமத்தப்படுகிறது என்று குறிப்பிட்டு தன்னுடைய நோக்கம், "ஜேர்மனிய மொழி பேசாதவர்கள்,
தங்கள் பங்கிற்கு வரிசெலுத்தாதவர்கள் மற்றும் சமூக அரசாங்கத்தின் நிதிக்கு உதவாதவர்கள் அனைவருக்கும்"
குடியுரிமை திரும்பப் பெற வேண்டும் என்று அறிவித்துள்ளார்.
உத்தியோகபூர்வ ஜேர்மனிய அரசியல் வட்டங்கள் ஜேர்மனிய மக்களை அதன் இனவெறி
இருப்பது என்பதற்காக கண்டிக்கையில், சமூகப் பேரழிவு மற்றும் தேசிய அரசியலின் இணைப்பு, அதுவும் ஜேர்மனிய
உயரடுக்கு இணைந்ததில் இருந்து நடத்திக் கொண்டிருக்கும் பிரச்சாரம்தான் --பழைமைவாத வலது மற்றும்
உத்தியோகபூர்வ இடது இரண்டுமே இதைச் செய்கின்றன -- வலதுசாரி தீவிரவாதம் மற்றும் மூஹெல்னில் நடைபெற்ற
வெளிப்பாடுகள் ஆகியவற்றின் வளர்ச்சிக்கு உரமிடும் வகையில் இருக்கின்றன.
சமீபத்திய தேர்தல்கள் இந்த "இனவெறி உணர்வுகளுக்கு" இணங்குவது என்பதற்கு பதிலாக
ஜேர்மனிய மக்கள் மிகவும் தீவிரமாக சமூக சமத்துவமின்மையின் பெருக்கத்தைப் பற்றி கவலை கொண்டுள்ளனர்,
இடதிற்கு நகர்ந்து கொண்டிருக்கின்றனர் என்பதை வெளிப்படுத்தியுள்ளது. இத்தகைய வளர்ச்சியை ஜேர்மனிய அரசியல்
அமைப்பு எதிர்கொள்ளும் விதம், பொருளாதார கொள்கைகளில் இருந்து திசை திருப்புதலும், இஸ்லாமிய சிறுபான்மை
அல்லது கிழக்கு ஐரோப்பாவில் இருந்து வரும் தொழிலாளர்கள் போன்ற சில சமூகங்களை அரக்கத்தனமாக சித்தரிப்பதும்,
அதே நேரத்தில் அரசாங்கத்தின் போலீஸ் அதிகாரங்களை அதிகப்படுத்துவதுமாக உள்ளது. இதுதான் குர்ட் பெக்கும்
இன்னும் பலருமை தீவிர வலதை எதிர்கொள்ள கூடுதலான அரசாங்க அதிகாரங்கள் தேவைப்படும் என்று அழைப்பு
விடுத்துள்ளதில் உள்ள உண்மையான முக்கியத்துவம் ஆகும். |