World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French Foreign Minister Bernard Kouchner visits Baghdad

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பேர்னார்ட் குஷ்நெர் பாக்தாத் விஜயம்

By Alex Lantier
28 August 2007

Back to screen version

பிரெஞ்சு வெளியுறவு அமைச்சர் பேர்னார்ட் குஷ்நெர், ஆகஸ்ட் 19-21 தேதிகளில் மூன்று நாள் திடீர் பயணம் ஒன்றை பாக்தாத்திற்கு மேற்கொண்டார்; இப்பயணத்தின்போது அவர் உயர்மட்ட ஈராக்கிய அரசியல் வாதிகள் மற்றும் மதகுருமார்களை சந்தித்தார்; ஜனாதிபதி ஜலால் தாலபானி மற்றும் பிரதம மந்திரி நூரி அல்-மாலிக் ஆகியோரும் இதில் அடங்குவர். இந்தப் பயணம் 2003ல் அமெரிக்க தலைமையிலான ஈராக் மீதான படையெடுப்பு, ஆக்கிரமிப்பிற்கு பின்னர், பிரெஞ்சு அரசாங்கத்திற்கும் பாக்தாத்தில் உள்ள அமெரிக்க கைப்பாவை அரசாங்கத்திற்கும் இடையே நடக்கும் முதல் பகிரங்க தொடர்பை குறிக்கிறது.

2003ல் முன்னாள் பிரெஞ்சு ஜனாதிபதியான ஜாக் சிராக் ஐ.நா.வில் அமெரிக்கா ஈராக் மீது படையெடுப்பதற்கு தேவையான சட்டபூர்வ போலிக் காரணத்தைக் காட்டும் சூழ்ச்சிக்கையாளலை எதிர்த்திருந்தார். அப்பொழுது பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் முக்கிய உறுப்பினராக இருந்த குஷ்நெர், "மனிதாபிமான முறைத் தலையீடு" என்ற அவரது தத்துவத்தின் பெயரில் அமெரிக்க நடவடிகைகளுக்கு ஓரளவு ஆதரவு கொடுத்திருந்த பிரெஞ்சு அமைப்பின் உறுப்பினர்களில் ஒருவராக இருந்தார். இப்பொழுது ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியின் கன்சர்வேடிவ் அரசாங்கத்தில் அவர் மத்திய கிழக்கில் பிரெஞ்சு மற்றும் அமெரிக்க ஏகாதிபத்திய நலன்களுக்கு ஒரு ஒழுங்கை தோற்றுவிக்க முயன்று வருகிறார்.

குஷ்நெர் அறிக்கைகளின் பகட்டுத்தனமான தெளிவற்ற தன்மை -- குறிக்கோளை "பிரெஞ்சு மக்களின் ஐக்கியம், இரக்கவுணர்வு மற்றும் ஈராக்கிய மக்களுக்கு அவர்கள் கூறுபாடுகள் அனைத்திலும் ஆதரவு கொடுக்கும் வகையில் வெளிப்படுத்தும்" தன்னுடைய விஜயத்திற்கான தனது குறிக்கோளை அவர் விளக்கியமை-- அவருடைய கொள்கையின் அடிப்படை உந்தித்தள்ளுதலை மறைக்க முடியவில்லை.

இப்பிராந்தியத்தில் ஒரு "குறிப்பிட்ட பங்கை" பிரான்ஸ் கொண்டுள்ளது என்று அவர் கூறினார்; இதற்கு காரணம் "அமெரிக்கர்கள் தாங்களாகவே நிலைமையில் இருந்து வெளியேற முடியாது", மற்றும் "ஐரோப்பாவும் ஐக்கிய நாடுகளும் ஈராக்கில் ஒரு பங்கை கட்டாயம் வகிக்க வேண்டும்" என்றார். 1999ல் அமெரிக்கா-நேட்டோ இரண்டின் கீழும் கொசோவோ ஆக்கிரமிப்பு நடந்தது பற்றி அவர் பலமுறையும் குறிப்பிட்டார்; அப்பொழுது குஷ்நெர் ஐக்கிய நாடுகள் மன்ற இடைக்கால நிர்வாகத்தின் தலைவராக ஜூலை 1999ல் இருந்து ஜனவரி 2001 வரை பணிபுரிந்திருந்தார். அப்பதவி வகிக்கையில் இவர் பழைய யூகோஸ்லேவிய அரசு நிறுவனங்கள் அகற்றப்பட்டு அவை இனவழி அல்பேனிய கோசோவோ விடுதலை இராணுவப்படையுடன் பிணைக்கப்பட்ட ஒரு சாதனத்தால் பதிலீடு செய்யப்பட்டதை மேற்பார்வையிட்டார்.

ஒரு நடுநிலை உள்ள பகுதியில், ஈராக்கிய பிரிவுகள் பலவற்றின் மாநாட்டைக் கூட்டுதற்கு பிரெஞ்சு தூதர்கள் ஏற்பாடு செய்ய முடியும் என்றும் அவர் கூறினார்; ஜூலை 14-15 தேதிகளில் பாரிஸ் புறநகரான La Celle-Saint-Cloud பகுதியில் லெபனானில் இருந்து வந்த அரசியல் வாதிகள் நடத்திய மாநாட்டை பற்றி அவர் குறிப்பிட்டார்; லெபனான், முன்னாள் பிரெஞ்சு காலனியாக இருந்து அங்கு பிரெஞ்சு ஏகாதிபத்தியம் இன்னமும் சக்திவாய்ந்த தொடர்புகளை கொண்டுள்ளது. ஆனால் பிரெஞ்சு நாளேடான Le Monde க்குக் கொடுத்த பேட்டியில் தலாபானி, குஷ்நெரின் மாநாட்டு திட்டத்தை அவசியமற்றது என்று நிராகரித்து விட்டார்.

அமெரிக்கா ஈராக்மீது படையெடுத்தற்கு பிரான்சில் பெரும் எதிர்ப்பு இருந்ததை நனவாக உணர்ந்திருந்த குஷ்நெர், அமெரிக்காவில் இருந்து, பொருத்தமாய் தோன்றாததென்பதையும் விட, தன்னை தூர வைத்துக் கொள்ளவே முயற்சித்தார். RTL வானொலி நிருபரால் அவருடைய விஜயம் அமெரிக்க படையெடுப்பிற்கு உட்குறிப்பாக ஒப்புதல் கொடுக்கிறதா எனக் கேட்கப்பட்டபோது, குஷ்நெர் தான் புறப்படுவதற்கு "சில மணி நேரங்கள்" முன்புதான் அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைசிடம் அதைப்பற்றி தகவல் கொடுத்ததாக கூறினார். பிரெஞ்சு பத்திரிக்கையில் பிரெஞ்சு மேற்தட்டு துருப்புக்கள் மற்றும் குர்திஷ் பேஷ்மர்க்காவினால் நடத்தப்படும் நன்கு திட்டமிடப்பட்டுள்ள கரந்தடி நடவடிக்கை என விவரிக்கப்படும் குஷ்நெரின் விஜயத்தில் பாக்தாத் விமான நிலையத்தில் இறங்கி பசுமைப் பகுதிக்கு, இரண்டுமே அமெரிக்கக் கட்டுப்பாட்டிற்குள் இருந்த பகுதிக்கு சென்றது உள்ளடங்கும்.

தன்னுடைய பங்கிற்கு புஷ் நிர்வாகம் குஷ்நெரை பாராட்டியது. வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளரான Gordon Johndroe இந்தப் பயணத்தை, "ஈராக் ஒரு உறுதியான மற்றும் பாதுகாப்பான நாடாக விளங்குவதற்கு சர்வதேச அளவில் இருக்கும் உதவும் விருப்பங்களுக்கு மற்றொரு உதாரணம் ஆகும்..." என்று அழைத்திருந்தார்.

Newsweek ற்கு பாக்தாத் பயணத்திற்கு பின்னர் கொடுத்த பேட்டியை ஒட்டி, அவருடைய கருத்துக்கள் பற்றி குஷ்நெர் ஈராக்கிய பிரதம மந்திரி மாலிகியினால் குறைகூறப்பட்டார். அந்த ஏட்டிடம் குஷ்நெர் கூறியதாவது "பிரதம மந்திரி மாற்றப்பட வேண்டும் என்று பலரும் நம்புகின்றனர்... அரசாங்கம் செயல்படவில்லை... நான் இப்பொழுதுதான் கொண்டலீசா (ரைஸ்) உடன் தொலைபேசியில் 10 அல்லது 15 நிமிஷங்களுக்கு முன்பு தொடர்புகொண்டிருந்தேன்; நான் அவரிடம் கூறினேன், 'கேட்டுக் கொள்ளுங்கள், அவர் மாற்றப்படுவார்'."

இப்பேட்டி வெளியிடப்பட்டதை அடுத்து, மாலிகி, ஈராக்கின் உள்விவகாரங்களில் தலையிடுவதற்காக, குஷ்நெரை ஏனைய பல அமெரிக்க அரசியல்வாதிகளுடன் சேர்த்து கண்டித்தார். பின்னர் பிரெஞ்சு வெளியுறவு மந்திரி ஒரு நிபந்தனையுடன் கூடிய மன்னிப்பை அளித்தார்; அவர் கூறியது: "ஈராக்கிய உள் விவகாரங்களில் நேரடியாக நான் தலையிட்டதற்கு ஈராக்கிய பிரதம மந்திரி நான் மன்னிப்புக் கேட்க வேண்டும் என்று விரும்பினால், நான் அதை விருப்பத்துடன் செய்வேன். நான் பேசிய ஈராக்கியர்களிடம் கேள்விப்பட்ட கருத்துக்களை பற்றி நான் குறிப்பிட்டேன் என்பதை தெளிவுபடுத்தத் தவறிவிட்டதால், அவர் என்னை தவறாகப் புரிந்து கொண்டிருக்கிறார் என்று நினைக்கிறேன்." இது ரைசிடம் நேரடியாக தொலைபேசியில் தான் கூறிய கருத்துக்கள் பற்றி குஷ்நெர் கூறியதற்கு எதிரிடையாக உள்ளது.

குஷ்நெரின் பயணத்திற்கு ஆதரவு கொடுத்த சார்க்கோசி ஒரு செய்தி தொடர்பாளர் மூலம் செய்தி ஊடகத்திற்கு தெரிவித்தார்: "ஈராக்கில் பிரான்ஸ் கட்டாயம் இருக்க வேண்டும்; பல அரேபிய நாடுகளிலும் பிரான்ஸ் இருக்க வேண்டும்; சர்வதேச அளவில் ஏற்கப்படும் வெளிநாட்டுக் கொள்கை ஒன்றை பிரான்ஸ் கட்டாயம் சித்தரிக்க வேண்டும்."

பாக்தாத்திற்கு குஷ்நெர் விஜயம் மத்திய கிழக்கில் அமெரிக்கா, பிரெஞ்சு ஏகாதிபத்திய நலன்கள் சிலவற்றிற்கு, குறைந்த அளவில் என்றாலும், கொடுத்திருந்த சலுகைகள் பலவற்றின் அறிவிப்போடு ஒரே நேரத்தில் வந்ததாகும்.

அமெரிக்கா ஈராக்கின்மீது படையெடுத்ததை அடுத்து பிரான்சின் எண்ணெய் நலன்கள் முற்றிலும் பாதிப்பிற்கு உள்ளாயின. ஆனால் ஆகஸ்ட் 10ம் தேதி Le Monde பிரான்சின் பெரும் எண்ணெய் நிறுவனமான Total அமெரிக்க எண்ணெய் நிறுவனத்தில் ஒன்றான Chevron உடன் ஈராக்கின் தெற்குப் பகுதியில் இருக்கும் மிகப் பெரிய Majnoon எண்ணெய் வயல்களில் செயற்பாடு நடத்துவது பற்றி ஒப்பந்தம் செய்துள்ளதாக அறிவித்தது; இது ஈராக்கிய அரசாங்கத்தால் இயற்றப்பட்ட ஒரு எண்ணெய் சட்டத்தின் ஊடே செல்வதற்கான உரிமையின் பின்னர் நடந்தது. ஆகஸ்ட் 14ம் தேதி, பத்திரிகை தகவல்கள் Chevron, Total இரண்டும் ஈராக்கிய எண்ணைய் உரிமைகள் மீதாக கூட்டாக விண்ணப்பிக்க உடன்பட்டிருந்ததாக கூறின.

ஆகஸ்ட் 11ம் தேதி அமெரிக்காவில் விடுமுறையை கழித்துக் கொண்டிருந்த சார்க்கோசி புஷ் குடும்பத்தின் மைன் இல் உள்ள, கென்னபங்போர்ட் வளாகத்திற்கு அழைக்கப்பட்டார். Voice of America கொடுத்த தகவல் ஒன்றின்படி, புஷ்ஷும் சார்க்கோசியும் ஈராக் போர் பற்றியும் ஈரானிய யூரேனிய திட்டங்கள் பற்றியும் விவாதித்தனர்.

குஷ்நெருடைய விஜயம் பிரெஞ்சு ஆளும் வட்டங்களுள் மத்திய கிழக்கில் அமெரிக்க ஏகாதிபத்தியம் நேரடியாக தோற்றல் என்பது அப்பகுதியில் இருக்கும் பிரெஞ்சு நலன்களுக்கு பேரழிவு விளைவுகளை தருவதாக போய்விடும் என்ற பெருகிய கவலைகள் கொண்டிருப்பதை, மற்றவற்றுடன் சேர்ந்து அடையாளம் காட்டுகிறது. அரேபிய மக்களிடையேயும் பிற பகுதிகளில் இருக்கும் மக்களிடையேயும் ஏகாதிபத்திய எதிர்ப்பு, மற்றும் காலனித்துவ எதிர்ப்பு உணர்வுகள் ஆகியவற்றை ஊக்குவிக்கும் வெளிப்பாடானது சோசலிஸ்ட் கட்சியின் தலைமை உட்பட பிரெஞ்சு மேற்தட்டின் எந்தப் பிரிவும் பார்க்க விரும்பும் முடிவான விஷயமாக இருக்கிறது.

ஈராக்கில் ஒரு அமெரிக்கத் தோல்வி என்பது பல விளைவுகளை ஏற்படுத்தும். பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தால் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக மகத்தான செல்வாக்கற்ற சமூக நல வெட்டுக்கள் செய்யப்பட வேண்டும் என்று பணிக்கப்பட்டுள்ள சார்க்கோசி, பிரான்சில் உள்ள பலரும் கருதும் வகையில் தன்னுடைய திட்டங்களை "அமெரிக்க முன்மாதிரி" என்பதுடன் தொடர்புடையதான கடுமையான உழைப்பு மற்றும் தடையற்ற சந்தை என்ற வாயரற்றலுடன் இணைத்த வகையில், நியாயப்படுத்த முற்பட்டுள்ளார். சார்க்கோசி மற்றும் அவருடைய சீர்திருத்த திட்டம் இரண்டையும் பொறுத்தவரை அமெரிக்க ஏகாதிபத்தியத்திற்கு முக்கிய பின்னடைவு என்பது மகத்தான அரசியல் அடியாகப் போய்விடும்.

தற்போதைக்கு, பிரெஞ்சு ஆளும் மேற்தட்டு ஏனைய மத்திய கிழக்கு நாடுகளின் கொள்கைகளை வடிவமைக்க, இதையொட்டி ஈராக்கிற்குள்ளே வன்முறையை கட்டுப்படுத்த தன்னுடைய அரசியல் செல்வாக்கை பயன்படுத்த முயற்சித்துக் கொண்டிருப்பதுபோல் தோன்றுகிறது.

ஈராக்கிற்கு குஷ்நெர் பயணித்தது பற்றிய தன்னுடைய தலையங்கத்தில் கன்சர்வேடிவ் நாளேடான Le Figaro, எழுதியதாவது: "பிரான்சும், அதனுடன் இணைந்து ஐரோப்பாவும் சரியான நேரத்தில் ஈராக்கில் உறுதித்தன்மையை நிலைநிறுத்தும் பங்கிற்குத் தயார் என்பதைக் காட்ட வேண்டிய நேரம் வந்துள்ளது. ஈராக் புதைகுழியில் இருந்து வெளியேறுவதற்கான மூலோபாய உத்திகள் அமெரிக்க தேர்தல் பிரச்சாரத்தில் மேலாதிக்கம் செலுத்தும் நிலையில், இது இன்னம் அவசரமானதாகும்." அது முடிவுரையாக கூறியது: "தவிர்க்க முடியாமல் அமெரிக்கா திரும்பிச் செல்லும்போது இராஜதந்திர விளையாட்டு தொடங்கும் நாளுக்கு தேவையானதை தயாரிப்பது முக்கியமான விஷயம் ஆகும்."

Le Monde ல் வந்துள்ள அறிக்கை ஒன்றில் கட்டுரையாளர் டானியல் வெர்னே ஈராக்கில் பிரான்சின் விருப்பத் தேர்வுகள்" என்ற தலைப்பில் தொடுத்துள்ள வினா: "ஈராக்கின் உள்நாட்டு நிலைமையில் செயல்விளைவை ஏற்படுத்த விரும்புவது கற்பனைக் கருத்து என்றால், இப்பகுதி முழுவதும் போர் ஏற்படுத்தியுள்ள பேரழிவு விளைவுகளை எதிர்கொள்ளும் வகையில் பிரான்ஸ் செயல்படுவதற்கு வழிவகைகள் உள்ளனவா?". ஈராக்கில் ஒரு இராணுவத் தீர்வு வரமுடியும் என்று பிரான்ஸ் நம்பவில்லை என்பதை வலியுறுத்திய அவர் ஈரானும் சிரியாவும், "இன்றும் புதைசேற்றில் இருந்து மேற்கை காப்பாற்றுவதற்கு உதவி செய்ய வேண்டும் என்ற ஆர்வத்தை கொண்டிருக்கவில்லை. எனவே, "பாரிஸ் அனைத்தையும் ஒன்றாகப் பிணைப்பதற்கு நல்ல நிலையில் உள்ளது" என்று வெர்னே கூறியுள்ளார்.

மத்திய கிழக்கின் முதலாளித்துவ சர்வாதிகார ஆட்சிகளுடன் நிலைமைக்குத் தீர்வு காண்பதற்கான ராஜீய உடன்பாடுகள் திட்டம் என்பவை பெருகிய முறையில் அவநம்பிக்கை தன்மையையும், குறைகாணும் தன்மையையும்தான் கொண்டுள்ளன.

"ஈராக் மீது பந்தயம்" என்ற Le Monde இன் தலையங்கம் ஈராக்கை இன, குறுகிய பற்று வழிவகைகளில் குருதி சிந்தியும்கூட பிரிவினை செய்வதற்கு ஆதரவு கொடுத்துள்ளது. பிரெஞ்சு தூதர்கள் "தற்போதைய உள்நாட்டுப் போர் ஏதேனும் ஒரு முகாமின் வெற்றி அடையப்படும் வரை பொறுத்திருக்க வேண்டும் என்ற மனவிருப்பை கொண்டிருக்கின்றனர்... இதற்கு பொருள் ஷியைட்டுக்களுக்கு வெற்றி என்பதாகும்." ஈராக்கிய ஷியைட் அரசியல்வாதிகள் பலர்மீதும் முக்கியமான செல்வாக்கை கொண்டுள்ள அரசாங்கம் இருக்கும் ஈரான்தான் இந்த நெருக்கடியில் "முக்கிய வினையாளர்" என்று அது முத்திரையிட்டுள்ளது.

அத்தகைய இரக்கமற்ற நடைமுறை மூலோபாயம் கூட வெற்றி பெறுமா என்பது சந்தேகத்திற்கு உரியதுதான் என்று தலையங்கம் அவசரமாக கவலைப்படுகிறது. தெஹ்ரானுடன் நடத்தும் பேச்சுவார்த்தைகளில் பிரான்சிற்கு "ஆதாயம் தரும்" நிலைப்பாடு ஏதேனும் உள்ளதா என்பது பற்றியும் அது பகிரங்கமாக சந்தேகத்தை தெரிவித்துள்ளது. "லெபனான் பற்றி ஈரானுடன் பிரான்ஸ் ஏற்கனவே பேச்சு வார்த்தைகளைக் கொண்டுள்ளது: இப்பொழுது ஈராக்கிற்கு ஆதரவை நாம் நாட முடியுமா? அப்படியானால் தெஹ்ரானிடம் அதன் அணுத் திட்டங்கள் பற்றி நாம் எப்படி அழுத்தம் கொடுக்க முடியும்?"

மத்திய கிழக்கில் வருங்கால நிலை பற்றிய இத்தகைய முன்னோக்கு --துண்டாடுதல் மற்றும் சர்வதேச மூலதனம் அங்கு கூட்டாக சுரண்டுதல் என்பவை-- ஈரான், சிரியா மற்றும் பல பகுதி சக்திகளுடன் பேச்சுவார்த்தைகள் மூலம் ஒப்பந்தம் காண்பதில் கணிசமான ராஜீயவகை தடைகளை எதிர்கொள்ளுகிறது.

பிரான்ஸ் மற்றும் அமெரிக்க பதட்டங்களில் சற்றே சாந்தப்படுத்துவது, அதுவும் சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்பட்டற்கு பின்னர் என்பது, மத்திய கிழக்கில், குறிப்பாக ஈரானில் அமெரிக்க, பிரெஞ்சு ஏகாதிபத்தியங்களுக்கு இடையே இருக்கும் கடுமையான பிளவுகளை மறைக்க இயலாது.

American Enterprise Institute (AEI) என்னும் புதிய கன்சர்வேட்டிவை அமைப்பு மே 7ம் தேதி ஒரு அறிக்கையை வெளியிட்டது; 2000-2007 ம் ஆண்டுகளில் ஈரானில் உள்ள முக்கிய முதலீட்டாளர்கள் பற்றி அதில் இருந்தது. இப்பட்டியலில் பிரான்சின் பெயர் முதலில் இருந்து, அது $30 பில்லியனை முக்கிய கார் நிறுவனங்களான Renault, Peugeot, Citroen, தொலைத் தொடர்பு நிறுவனம் Alcatel மற்றும் முக்கிய எண்ணெய் நிறுவனம் Total ஆகியவை உள்ளன. AEI இன் துணைத் தலைவர் Danielle Pletka இந்த நிறுவனங்கள் சர்வாதிகாரத்திற்கு அதிகாரமளிக்கின்றன என்று கண்டித்தார். "தங்களுக்கு நல்ல இலாபம் இருந்தால், ஆட்சி கொடூரமானதாக இருந்தால் என்ன, அவர்கள் உயர்வாய் உருவப்படுத்தி காட்டுவர்."

மிகப் பெரிய அளவில் பிரெஞ்சு முதலீடுகள் ஈரானில் இருந்தாலும், பிந்தையது "ஆட்சி மாற்றம்" வருவதற்கு இலக்கு வைக்கப்பட்டுள்ளது, மற்றும் அந்நாடு அமெரிக்க அதிகாரிகள் மற்றும் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர்களால் தொடர்ச்சியாக குண்டுவீச்சு அல்லது இராணுவ நடவடிக்கைகள் வரும் என்று அச்சுறுத்தப்பட்டுள்ளது.

Associated Press ஆகஸ்ட் 9ம் தேதி US Securities and Exchange Commission (SEC), ஈரான் மற்றும் சிரியாவில் கொண்டுள்ள நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு Total மீது அது கணிசமான அழுத்தம் கொடுத்துள்ளதை தெரிவிக்கிறது. 200 பக்கங்களுக்கும் மேலாக இருக்கும் இக்கடிதப் பரிமாற்றங்கள் அசோசியேட்ட் பிரஸ்ஸினால் பரிசீலிக்கப்பட்டன; அவற்றில் மே 2003ல் SEC ஆல் "அமெரிக்காவில் இருக்கும் முதலீட்டாளர்கள், ஈரானுக்கும் லிபியாவிற்கும் அமெரிக்க பொருளாதார தடைகளின் (டோடலின்) அத்துமீறல்கள் பற்றிய குறிப்பிடத்தக்க வரலாற்றை காணக்கூடும்" என்று வழங்கப்பட்ட எச்சரிக்கைகளும் உள்ளடங்கும். சிரியாவில் தன்னுடைய பணிகளை குறித்து விவரிக்கையில் SEC, அமெரிக்க குற்றச்சாட்டான சிரியா பேரழிவு ஆயுதங்களை தயாரித்து வருகிறது என்பதை, டோடல் வலியுறுத்திக் கூற வேண்டும் என்று ஜூன் 2005ல் எழுதிய கடிதத்தில் SEC வலியுறுத்தியுள்ளது.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved