World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Bush visits New Orleans on Katrina anniversary: returning to the scene of the crime

நியூ ஓர்லியன்ஸில் கத்ரீனா ஆண்டு நினைவு தினத்திற்கு புஷ் விஜயம்: குற்றம் நடந்த இடத்திற்கு மீண்டும் வருதல்

By David Walsh
30 August 2007

Use this version to print | Send this link by email | Email the author

கத்ரீனா பெரும்புயல் இரண்டாம் ஆண்டு நினைவு தினத்தை ஒட்டி புதனன்று ஜோர்ஜ் டபுள்யூ புஷ் நியூ ஓர்லியன்ஸிற்கு சென்றிருந்தபோது அங்கு இருந்த தொழிலாளர் வர்க்க மக்கள் சீற்றத்துடனும் எதிர்ப்புடனும் எதிர் கொண்டனர்; கத்ரீனா பெரும் சோகம் 1,800 மக்களுக்கும் மேலானவர்களின் உயிரைக் குடித்ததுடன், அப்பகுதியை பாரிய பேரழிவிற்கும் உட்படுத்தியது ஆகும்.

புஷ் நிர்வாகத்தின் புறக்கணிப்பு மற்றும் அலட்சியம் இரண்டும் ஏராளமானோர் இறப்பதற்கும் மக்கள் இடர்பாடுகளுக்கும்தான் வழிவகுத்திருந்தது; இன்றும்கூட நியூ ஓர்லியன்ஸ் மற்றும் வளைகுடா கடற்கரையில் உள்ள கணக்கில் அடங்காத ஆயிரக்கணக்கானவர்களுடைய பரிதாப நிலைக்கும் அது தொடர்ந்து பொறுப்பாகவுள்ளது.

கிட்டத்தட்ட அனைத்து செய்தி ஊடகத் தகவல்களும் ஒப்புக் கொண்டுள்ளபடி, நியூ ஓர்லியன்ஸின் கணிசமான பகுதிகள் இன்னும் அழிவில்தான் உள்ளன; 40 சதவிகித மக்கள் திரும்பி வரவில்லை; அரச வீடுகள் மறு கட்டுமானத்திட்ட உதவிக்கு விண்ணப்பித்தவர்களில் மிகச் சிறிய பிரிவினருக்குத்தான் உதவி வந்துள்ளது; கொலை விகிதம் இருமடங்காகியுள்ளது; தற்கொலைகள், வீடுகளில் வன்முறை, கற்பழிப்பு ஆகியவை தீவிரமாக உயர்ந்துள்ளன; வீடற்ற மக்களின் எண்ணிக்கை இருமடங்காகி உள்ளது; நகரத்தின் கைவிடப்பட்ட 80,000 இருப்பிடங்கள் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ள இடங்களில் பலரும் வாழ்ந்து வருகின்றனர்.

அட்லான்டாவை தளமாகக் கொண்டுள்ள Southern Education Foundation ஆகஸ்ட் 29ம் தேதி வெளியிட்ட அறிக்கை ஒன்றில் கூட்டாட்சி எதிர்கொண்டுள்ள விதத்தைப் பற்றி கூறியுள்ளது. "1930களின் பெருமந்த நிலைக் காலத்திற்கு பின்னர் அமெரிக்கா இத்தகைய பள்ளிகளில் இருந்து அதன் மாணவர்கள் பலரும் வெளியேற்றப்பட்ட நிகழ்வை கண்டதில்லை." என்று அது குறிப்பிட்டுள்ளது.

ஒரு பெரிய அமெரிக்க நகரம் பேரழிவிற்கு உட்பட்ட வகையில் சேதமுற்றது; ஒரு மக்களின் முழு பிரிவினரும் வறுமையில் மூழ்கடிக்கப்பட்டது; நகரத்தை மீட்பதற்கும் தொழிலாள வர்க்க மக்களின் நிலையை மேம்படுத்தவும் கூட்டாட்சி அரசாங்கம் எந்த ஒருங்கிணைந்த முயற்சியையும் மேற்கொள்ளவில்லை. இந்த நிலையில், பெரும் புயலின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் அன்று புஷ் உள்ளூர் உயரடுக்கினருடன் கொஞ்சிக் குலாவி, பொய் கூறியதுடன், உயர்தத்துவங்களையும் கூறிக்கொண்டிருந்தார்.

செவ்வாய்க்கிழமை இரவு ஜனாதிபதி தன்னுடைய பயணத்தை நியூ ஓர்லியன்சில் உள்ள நன்கு அறியப்பட்ட Dooky Chase என்ற இடத்தில் பல பிரமுகர்களுடன் இரவு விருந்து என்ற முறையில் தொடங்கினார்; இந்த விடுதி இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு பெரும்புயல் வந்தபோது மூடப்பட்டுவிட்டது; ஒரு சில வாரங்களில் மீண்டும் திறக்கப்படலாம் என்று திட்டமிடப்பட்டுள்ளது. மறுநாள் காலை, புஷ், நகரத்தின் விஞ்ஞானத்துக்கும் தொழில்நுட்பத்திற்குமான Dr.Martil Luther King Jur. Charter School இல் உரையாற்றினார். அதன்பின், புஷ் மிசிசிபிக்குப் பயணித்தார்; அங்கு அவர் Bay Saint Louis, Pass Christian இரண்டுக்கும் இடையே இருக்கும் US 90 என்ற பாலத்திற்கு முன் புகைப்படத்திற்காக காட்சி கொடுத்தார்; இந்தப் பாலம் புயலின் போது அழிக்கப்பட்டிருந்தது; ஓரளவு செப்பனிடப்பட்டு மே 2007ல் இருந்து செயல்படுகிறது.

புஷ்ஷின் வருகையை எதிர்கொள்ளும் வகையில் புதனன்று ஆயிரம் மக்கள் எதிர்ப்புத் தெரிவித்து நியூ ஓர்லியன்ஸின் வறுமை மிகுந்த Lower 9 ஆவது பிரிவில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் நடத்தினர்; இப்பகுதி இன்னும் அழிவில்தான் உள்ளது. புஷ் கொலைகாரர் என்று கூறிய அடையாள அட்டைகள் நிறைந்திருந்த இடத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் அரசாங்கம் செயல்படாததற்காக அதை கண்டித்தனர். அணியில் இருந்த Gina Martin, அசோசியேடட் பிரஸ்ஸிடம், "நிறைவேற்றும் நோக்கம் இல்லாத பல உறுதிமொழிகளை கொடுப்பதற்கு மீண்டும் புஷ் இங்கு வந்துள்ளார். எங்களை அரசாங்கம் கைவிட்டுவிட்டது. இது நின்றுவிடப் போவதும் இல்லை." என்றார்.

அருகில் நின்றிருந்த 64 வயதான Clarence Russ, "ஏராளமான பணம் செலவிடப்பட்டது எனத் தெரிகிறது, ஆனால் அவை எங்கு போயின? எங்கள் ஒருவருக்கும் ஒன்றும் கிடைக்கவில்லை." என அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். தகவல் சேவையின்படி இவருடைய வீடு, "ஓரளவுதான் செப்படனிப்பட்டது; மற்றபடி இவ்விடம் ஒருவரும் இல்லாத பகுதியாகத்தான் உள்ளது.

ஒரு உள்ளூர் பாப்டிச திருச்சபை ஊழியரான Rev. Marshall Truehill செய்தி ஊடகத்திடம் கூறினார்: "மக்கள் சீற்றத்துடன் உள்ளனர்; இன்னும் கூடுதலாக, விரைந்து செயல்படவேண்டும் என்ற தகவலை அரசியல்வாதிகளுக்கு அவர்கள் கொடுக்க விரும்புகின்றனர். எவரும் விருந்துக்குச் செல்லவில்லை."

செய்தி ஊடகங்கள் பரந்திருந்த சீற்றம், பெரும் திகைப்பு, அவநம்பிக்கைத்தனம் ஆகியவை பற்றித்தான் தகவல்களை கொடுக்கின்றன. அங்கு வசிப்பவர்கள் சிலர் "ஆர்ப்பாட்டக்காரர்களுக்கு எந்தப் பயனும்" இல்லை என்று உணர்ந்ததை அசோசியேட்டட் பிரஸ் குறிப்பிட்டது. ஏனெனில் ஆர்ப்பாட்டத்தால் புஷ்ஷிற்கு ஏதும் நேராது என்பதால் மட்டும் அல்ல; ஜேம்ஸ் ஷானே என்னும் குடியருப்பவர் "எதிர்ப்பு எங்களுக்கு எதையும் கொடுத்துவிடாது. அது ஒன்றும் எங்களுக்கு உதவப்போவது இல்லை." என கூறினார்.

புஷ்ஷின் கருத்துக்கள் உண்மையற்ற தோற்றத்தைத்தான் கொடுத்தன. இப்பகுதி விரைவில் மீட்கப்பட்டுவிடும் என்ற நம்பிக்கையுணர்வுடன் வழி நெடுக அவர் பேசினார். வியாழன் இரவில் புகழ் பெற்ற ஆன்மீக உணவு விடுதியில் ஜனாதிபதி ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த கவர்னரான Kathleen Blanco, நியூ ஓர்லியன்சின் மேயர் ரே நாகின் மற்றும் "சமூகத்தின் பல சிறப்பான தலைவர்களையும், நியூ ஓர்லியன்ஸ் மக்களிடையே நம்பிக்கைத்தன்மையை கொண்டு வரும் அமைதியான பல வீரர்களையும்" வாழ்த்துவதாக புஷ் தெரிவித்தார்.

சார்ட்டர் பள்ளியில், மிக அதிகக் கருத்துக்களை உதிர்த்த புஷ், விளக்கியதாவது: "என்னுடைய அணுகுமுறை இதுதான்: நியூ ஓர்லியன்சே உனக்கு நல்ல எதிர்காலம் உண்டு. ஒரே சமூகத்தில் வாழும்போது மக்களுக்கு முன்னேற்றத்தை காண்பது சில நேரங்களில் கடினமாகும். நானும் லோராவும் இங்கு வந்துள்ளோம்; நாங்கள் இங்கு வசிக்கவில்லை; ஏதோ ஒரு நேரத்தில் வந்திருக்கிறோம். இங்கு இந்த இடம் பெரும்புயலுக்கு பின்னர் எப்படி இருந்தது, இப்பொழுது எப்படி உள்ளது என்பதை நினைத்துப் பார்ப்பது எளிதுதான். இந்த நகரம் மீண்டு வருகின்றது இன்றை விட நாளைக்கு அது இன்னும் சிறந்ததாகத்தான் இருக்கும்."

வசிக்கும் மக்களில் பலருக்கும் முன்னேற்றத்தை காண்பது கடினமாக இருக்கிறது; ஏனெனில் அவர்களைப் பொறுத்த வரையில் எந்த முன்னேற்றமும் இல்லை. Institute For Southern Studies நடத்திய சமீபத்திய ஆய்வு ஒன்றின்படி, "கத்ரீனா மீட்பு முயற்சி தோற்றுக் கொண்டிருக்கிறது. ஆகஸ்ட் நடுப்பகுதி (2007) வரை, 60,000 பேர் இன்னும் அரசாங்க அவசரகால நிர்வாக குழுவின் தற்காலிக வாகனங்களில் தான் வசித்துக் கொண்டிருக்கின்றனர்; ஏனெனில் உதவித் திட்டங்கள், காப்பீட்டுத் தொகைகள் ஆகியவை நிறுத்தப்பட்டுள்ளன. பள்ளிகளும் மருத்துவமனைகளும் மூடப்பட்டுள்ளன; நல்ல வேலைகள் கிடைப்பது அரிது; அன்றாட அச்சுறுத்தல்களான சுகாதாரம், நல்வாழ்வு ஆகியவை பற்றி கவனிக்கப்படுவதில்லை."

Los Angeles Times குறிப்பிடுவதாவது: "Lower 9th Ward க்கு புஷ் செல்லும் பாதையை ஒட்டி இன்னும் கூடுதலான பேரழிவு பற்றிய சான்றுகள் உள்ளன: முழுக் குடியிருப்புக்களும் காலி செய்யப்பட்டுவிட்டன; மறு கட்டுமானத்திற்கான அடையாளம் ஏதும் தெரியவில்லை; கடைகள் மூடித்தான் உள்ளன."

அமெரிக்க வரலாற்றிலேயே மிக மோசமான இயற்கை மற்றும் சமூகப் பேரழிவுகள் ஒன்றின் பாதிப்பில் இன்னமும் சுழன்று கொண்டிருக்கும் நியூ ஓர்லியன்ஸ் மக்களிடம் புஷ் அவர்கள் கைவிட்டுவிடப்படவில்லை என்று கூறும் தேவையை குறிப்பிடும் வகையில் உணர்ந்திருந்தார். "நாங்கள் இன்னும் கவனம்தான் காட்டுகிறோம். நாங்கள் புரிந்து கொள்ளுகிறோம்." "எனவே இங்கு வசிக்கும் மக்களிடம் உங்களுடைய பிரச்சினைகளை புரிந்து கொள்ளுகிறோம், அதைப் பற்றிக் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறோம் எனக் கூற விரும்புகிறேன்." என பின் சேர்த்துக் கொண்டார்.

இதே கருத்தைத்தான் மீண்டும் மிசிசிப்பியிலும் அவர் கூறினார்; அப்பகுதியில் உள்ள மக்கள் "ஜனாதிபதியும் வாஷிங்டனில் இருக்கும் மற்றவர்களும், மிசிசிப்பி அதிகாரிகளை தவிர, இங்கு என்ன நடந்துள்ளது என்பதை மறந்து விடுவார்கள் என நினைக்கின்றனர். நானும் லோராவும் இங்கு வந்த காரணங்கள் பலவற்றுள் ஒன்று இங்கு இருக்கும் மக்களுக்கு நாங்கள் உங்களை மறக்கவில்லை, மறக்கமாட்டோம் என்று கூறுவதற்குத்தான்."

உண்மையில் பேரழிவில் இருந்து மீட்பது என்பது கூட்டாட்சி அரசாங்கத்தின் பிரச்சினை அல்ல, மாநில, உள்ளூர் அரசாங்கங்கள் மற்றும் தனியார் அமைப்புக்கள், தனி நபர்கள்தான் சுமை தாங்க வேண்டும் என்று வாதிக்கும் முயற்சிதான் இது. இதற்கு அப்பால், அமெரிக்க ஜனாதிபதி வாஷிங்டன் கத்ரீனா பெரும்புயல் பேரழிவை, இன்னும் அதைத் தொடர்ந்து கொண்டிருக்கும் விளைவுகளை ''மறக்கவும் மாட்டார்'' என்பதைக் கூறியது பாரிய முறையில் உட்குறிப்பை வெளிப்படுத்தியது. மிசிசிப்பி மக்களின் "கவலைகள்" உண்மையில் நியாயமானதுதான். அமெரிக்க ஆளும் உயரடுக்கு அதன் சாதாரண குடிமக்களின் விதியை இவ்வித திமிர்பிடித்த அசட்டைத்தனத்தில்தான் கருதுகிறது.

இத்தகைய ஆண்டுநினைவுகள் வரும்போதுதான், பெயரளவிற்கு புஷ் நிர்வாகம் கத்ரீனா பாதிப்பாளர்களை நினைவுபடுத்திக் கொள்ளுகிறது. தன்னுடைய 2007ம் ஆண்டு கூட்டாட்சி அறிக்கையில் ஒரு இடத்தில் கூட இப்பேரழிவைப் பற்றி ஜனாதிபதி குறிப்பிடவில்லை என்பது பரந்த அளவில் பேசப்பட்டது. "பெரும்புயல்", "கத்ரீனா", "நியூ ஓர்லியன்ஸ்" அல்லது "வளைகுடா கடலோரம்" ஆகியவை ஒரு குறிப்பைக் கூட பெறவில்லை.

ஒரு குறிப்பிட்ட சமூக தட்டினருக்கு இது ஒளி மின்னலாகும். மீட்பு, வளமை புதுப்பிக்கப்படுதல் என்று புஷ் கூறும்போது அது சிதைந்த மனதை காட்டவில்லை. மிகப் பெரிய ஒப்பந்தக்காரர்கள், சூதாட்டவிடுதி மற்றும் ஓட்டல் நடத்துபவர்கள், நிலச்சந்தை அபிவிருத்தியாளர்கள், ஊக வணிகர்கள் மற்றும் பலவிதமான மோசடிக்காரர்களுக்கு கத்ரீனா ஒரு பெரிய வரம் போல் அமைந்தது. பில்லியன் கணக்கான டாலர்கள் அவர்களுடைய பைகளுக்கு சென்றன.

The Institute For Southern Studies அறிக்கையின்படி $3.5 பில்லியன் வரி நீக்கங்கள் Gulf Opportunity அல்லது GO பகுதிகளில், 91 சிறு பிரிவுகள், தொகுதிகள் என்று அலபாமா, லூயிசியானா, மிசிசிப்பி ஆகிய இடங்களில் வணிகம் செய்தவர்களுக்கு சென்றது. ஆனால் பல நீக்கங்களும் கத்ரீனாவில் தப்பியவர்களுக்கு உதவியாக இருந்ததா என்ற வினாதான் எழும். உதாரணத்திற்கு 10 ஆடம்பர வீடுகள் அலபாமா பல்கலைக் கழகத்தின் கால்பந்து மைதானத்திற்கு அருகில் கட்டப்படுவதற்கு ஒதுக்கியதை எடுத்துக் கொள்ளுங்கள்; இது வளைகுடாக் கடலோரத்தில் இருந்து நான்கு மணி நேரப் பயண தூரத்தில் உள்ளது."

"மறு கட்டுமானம், மீட்பு ஆகியவற்றிற்கான கூட்டாட்சி ஒப்பந்தங்கள் ஊழல், மோசடி, தவறாகப் பயன்படுத்தப்பட்டது ஆகியவற்றை காட்டியுள்ளன. இப்பிரச்சினையில் முக்கிய கண்காணிப்பாளர்களில் ஒருவர் கலிபோர்னியாவின் ஜனநாயகக் கட்சியின் தேசிய சட்டமன்ற பிரதிநிதியான ஹென்ரி வோக்ஸ்மன் ஆவார்; இவருடைய அலுவலகம் ஆகஸ்ட் 2006ல் ஒரு அறிக்கையை வெளியிட்டது; அது 19 கத்ரீனா தொடர்புடைய $8.75 பில்லியன் மதிப்புடைய ஒப்பந்தங்கள் கணிசமான முறையில் கூடுதல் செலவினங்கள், அனாவசியச் செலவினங்கள் அல்லது தவறான நிர்வாக நிலைமை ஆகியவற்றை கொண்டிருந்தன" என்று அடையாளம் கண்டது.

கத்ரீனா பேரழிவு இன்னமும் ஒரு வெளிக்காயமாகத்தான் உள்ளது. ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் 2005 நிகழ்வுகளுடன் தொடர்புடைய பிரச்சினைகள் ஏதும் தீர்க்கப்படவிலவலை. புஷ், ஆளுனர் பிளான்கோ, நகரமேயர் நாகின் அனைவரும் இந்த மகத்தான பேரழிவில் சதி உடந்தை கொண்டிருப்பவர்கள், இரண்டு ஆண்டுகாலத்திற்கு பின் இன்னும் பதவியில் இருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

அமெரிக்க நிறுவன அமைப்புக்களின் இழிசரிவுத் தன்மைக்கு இது தக்க வர்ணனையாகும். CBS News ஆகஸ்ட் 29 நடத்தி கருத்துக் கணிப்பின்படி ஆராயப்பட்டவர்களில் 20 சதவிகிதத்தினர்தான் கூட்டாட்சி அரசாங்கம் இதை எதிர்கொண்ட முறை போதுமானது என்று கூறினர்; 77 சதவிகிதத்தினர் அரசாங்கம் இன்னும் பலவற்றை செய்திருக்கலாம் என்றுதான் தெரிவித்தனர். பாதிக்கும் குறைவானவர்கள்தான் பகுதியின் மீட்பில் முன்னேற்றம் இருப்பதாகக் கூறினார். பெரும் துன்பியலின் பரப்பைக் கொடுக்கும் வகையில் வினா கேட்கப்பட்டவர்களில் 29 சதவிகிதத்தினர் கத்ரீனாவினால் நேரடியாகப் பாதிக்கப்பட்டவர்களை தங்களுக்குத் தெரியும் என்று கூறினர்.

ஆயினும்கூட எந்த உயர் அதிகாரி மீதும் பொறுப்பு சுமத்தப்படவில்லை; அப்படி ஒரு நடவடிக்கை வருவதாகவும் தெரியவில்லை. நியூ ஓர்லியன்ஸில் புஷ்ஷின் மடைத்தனங்கள் பற்றித் தகவல்கள் தெரிவிக்க வேண்டிய நிர்ப்பந்தத்தில், அமெரிக்கச் செய்தி ஊடகத்தில் ஒருவரும் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர்கள் வெறும் வெற்று அறிக்கைகள் வெளியிட்டது பற்றியும் ஏதும் கூறவில்லை.