World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Tens of thousands march in US cities

Antiwar protest organizers promote Democratic Party

பல்லாயிரக்கணக்கானவர்கள் அமெரிக்க நகரங்களில் அணிவகுத்துச் செல்லுகின்றனர்

போர் எதிர்ப்பு அமைப்பாளர்கள் ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு

By Bill Van Auken
29 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

சனிக்கிழமையன்று அமெரிக்க நகரங்கள் முழுவதிலும் பல்லாயிரக்கணக்கான மக்கள் ஈராக்கில் போருக்கு முடிவு கட்டக் கோரியும், ஈரானுக்கு எதிரான அமெரிக்க இராணுவவாதத்தின் புதிய வெடிப்பு பற்றிய வளர்ந்துவரும் அச்சுறுத்தலை எதிர்த்தும் அணிவகுத்துச் சென்றனர்.

இந்த எதிர்ப்புக்களில் மிகப் பெரியவை சான் பிரான்சிஸ்கோ, நியூ யோர்க் மற்றும் சிகாகோவில் நடைபெற்றன. போஸ்டன், லொஸ் ஏஞ்சல்ஸ், பிலடெல்பியா மற்றும் சியாட்டில், மேலும் நாடுமுழுவதிலும் டஜன் கணக்கான சிறு நகரங்கள், பேரூர்கள் ஆகியவற்றிலும் ஆர்ப்பாட்டங்கள் நடை பெற்றன.

இந்த எதிர்ப்புக்களில் பல தொழிலாளர்கள், மாணவர்கள், மற்றவர்கள் என்று பலரும் பங்கு பெற்றாலும், சிலர் முதல்தடவையாக தெருக்களுக்கு வந்து ஆர்ப்பரிக்கின்றனர் என்றாலும், முந்தைய நாடுதழுவிய எதிர்ப்புக்களுடன் ஒப்பிடும்போது இந்நிகழ்வுகள் கணிசமாக குறைந்த எண்ணிக்கையானோர்களையே ஈர்த்துள்ளன என்பது வெளிப்பட்டுள்ளது.

நியூ யோர் நகரத்தில், ஆர்ப்பாட்டக்காரர்கள் யூனியன் சதுக்கத்தில் இருந்து ஃபோலி சதுக்கம் வரை கொட்டும் மழையிலும் செல்வதற்கு அணிவகுத்து திரண்டனர். ஆனால் நான்கரை ஆண்டுகளுக்கு முன்பு இந்தப் போர் தொடங்கியதில் இருந்து இது ஒரு சிறு அளவிலான போர் எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் என்பதற்கு வானிலை மட்டும் காரணம் அல்ல.

அடிப்படையில், இந்த எதிர்ப்புக்கள் முன்வைக்கும் பிரச்சினை அமைப்பாளர்களின் திவாலாகிவிட்ட அரசியல் முன்னோக்கை காட்டுகிறது; அது போரை நிறுத்துவதற்கு காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் மீது செல்வாக்கு மற்றும் அழுத்தம் கொடுப்பதை நோக்கித்தான் முற்றிலும் நோக்குநிலை கொண்டிருக்கிறது.

பிரதிநிதிகள் மற்றும் செனட் இரண்டின் தலைமையையும் ஜனநாயகக் கட்சியிடம் ஒப்படைத்த 2006 தேர்தல்கள் நடைபெற்று ஓராண்டு முடியும் தறுவாயில், இக்கட்சி போர்களை ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் முடிப்பதற்கான நடவடிக்கைகளில் விருப்பம் கொண்டிருக்கவில்லை என்பது தவிர, ஈரானுக்கு எதிராக மற்றொரு போருக்கான தயாரிப்பிலும் உடந்தையாக இருக்கிறது என்பதுதான் உண்மையில் வெளியாகியுள்ளது.

இச்சூழ்நிலைகளின் கீழ், அமைதிக்காவும் நீதிக்காகவும் ஐக்கியப்படல் (United for Peace and Justice--UFJP) அமைப்பால் ஏற்பாடு செய்துள்ள கூட்டணியால் முன்னிலைப்படுத்தப்படும் கண்ணோட்டம் அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் இராணுவவாதம் மற்றும் மூலோபாய நோக்கங்களுக்கு தன்னை நம்பகமான ஆதரவாளர் என்று நிரூபித்த வகையில் பிரமைகளை வளர்த்தெடுக்கவே சேவைசெய்கிறது.

சிகாகோவில் நடக்கவிருந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்பு UFPJ அமைப்பாளர்கள் ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் வரிசையில் முன்னனியில் இருக்கும் செனட்டர் பரக் ஒபாமா, இலிநோய் செனட்டர் டிக் டர்பின் மற்றும் சிகாகோ மேயரான ரிச்சர் டாலே ஆகியோரை கூட்ட அரங்கத்தில் பங்கு பெறுமாறு அழைப்பை விடுத்திருந்தனர்.

கடந்த மாதம், ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்டால் 2013க்குள் ஈராக்கில் இருந்து அமெரிக்க துருப்புக்கள் திரும்பப் பெற்றுவிடும் என்பதை உறுதிகூற ஒரு விவாதத்தில் ஒபாமா மறுத்தது, புஷ் நிர்வாகம் ஈரானின் புரட்சிப் பாதுகாப்பு படையை "ஒரு பயங்கரவாத அமைப்பு" என்று முத்திரையிடக் கோரிய தீர்மானத்திற்கு ஆதரவாக செனட்டில் வாக்களித்தவர்களில் டர்பின் ஒருவர் (அதையொட்டி அமெரிக்கத் தாக்குதலுக்கு போலிக் காரணம் நிறுவப்பட்டது), ஆகியவை அமைப்பாளர்களை "போர் எதிர்ப்பு பெரும்பான்மையினரில்" ஒரு பகுதி என்று இவர்களை குறிப்பிடுவதில் இருந்து தடுத்து நிறுத்தவில்லை.

டாலே தன்னுடைய பங்கிற்கு, அவருடைய பாதுகாப்பு மற்றும் சிகாகோ போலீசின் மிருகத்தனமான நடவடிக்கையை மூடிவைத்தல் ஆகியவற்றிற்காக பெருகிய முறையில் மக்கள் சீற்றத்தை எதிர்கொள்ளுகிறார்.

ஆனால் சனிக்கிழமை அன்று மூவரில் எவரும் ஆர்ப்பாட்ட எதிர்ப்பிற்கு வரவில்லை. அவர்களுடைய இடங்கள் ஜனநாயகக் கட்சியின் சற்று குறைந்த இடத்தில் இருக்கும் மூன்று முக்கியஸ்தர்களால் --இலிநோய் பிரதிநிதிகள் மன்றத்தில் உறுப்பினர்களாக இருக்கும் டானி டேவஸ், ஜோன் ஷாகோவ்ஸ்கி மற்றும் லூயி கடிரெஸ் ஆகியோரால் நிரப்பப்பட்டன.

நியூ யோர்க் நகரத்தில் ஜனநாயகக் கட்சியின் நகரக் குழு உறுப்பினர்கள் இருவர் அரங்கத்திற்கு அழைத்து வரப்பட்டனர்; ஆனால் ஜனநாயகக் கட்சியின் பெரிய அரசியல்வாதி ஒருவரும் பங்கு பெற விரும்பவில்லை.

இத்தகைய அரசியல் வெற்றிடம், பெரும்பாலும் இடது பேசும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரால் நிரப்பப்பட்டது. Proessional Staff Congress ன் தலைவரான Barbara Bowen, நியூ யோர்க் நகர பல்கலைக்கழகத்தின் ஆசிரியர், ஊழியர்களை பிரதிநிதித்துவப்படுத்தும் அமைப்பின் தலைவர், கூட்டத்தில் தெரிவித்தார்: "போரை நிறுத்துவதற்கு ஜனநாயகக் கட்சியினரை தேர்ந்தெடுக்கும் முறையை நாம் நிறுத்த வேண்டும். அவர்கள் நிறுத்த மாட்டார்கள். நாம்தான் போரை நிறுத்த வேண்டும்."

இதேவிதத்தில்தான் Transport Workers Union Local 100, நகரத்தின் பஸ் மற்றும் சுரங்கப்பாதை தொழிலாளர்களை பிரதிபலிக்கும் அமைப்பின் தலைவரான Roger Toussaint ஜனநாயக கட்சியினரை "திக்குத் தெரியாமல் அலைபவர்கள்" என்று குறைகூறி, போரை நிறுத்த ஒரே வழி "தொழிலாளர்கள் ஒன்றுபடுவதுதான்" என்றார்.

இப்படிப்பட்ட அலங்கார வகையிலான ஜனநாயக வாதிகள்மீது கண்டனங்கள் சேர்ந்தபோது, மிக உரத்த வகையில் கூட்டம் அவற்றிற்கு அளித்த போதிலும், போருக்கு எதிராக எப்படி ஒரு சுயாதீன இயக்கம் அமைக்கப்பட முடியும், எப்படிப்பட்ட உண்மையான முன்னோக்கு இருக்க வேண்டும், அல்லது ஜனநாயகக் கட்சி மற்றும் இருகட்சி முறைக்கு ஒரு அரசியல் மாற்றீடு என்பது பற்றி எவ்விதக் குறிப்பும் வெளிவரவில்லை.

மேலும் இவர்களை தொடர்ந்து UFPJ யின் தேசிய ஒருங்கிணைப்பாளர் Leslie Cagan உரை நிகழ்த்தினார்; எதிர்ப்பில் தொடர்புடையவர்கள் "தனக்கு என்ன அதிகாரம் இருக்கிறதோ அதை காங்கிரஸ் செய்ய வேண்டும் என்பதற்கு உத்தரவாதம் வேண்டும்--பணம் இந்த போருக்குள் செல்லாவண்ணம் பார்த்துக் கொள்ள வேண்டும்" என்று வலியுறுத்தினார்.

இந்தக் கண்ணோட்டம்தான் UFPJ யின் ஆர்ப்பாட்டம் பற்றி "காங்கிரஸ்தான் இலக்கு" என்ற தலைப்பில் வெளியிடப்பட்ட துண்டுப் பிரசுரத்திலும் தெளிவாக்கப்பட்டு இருந்தது. அதில் கூறப்பட்டதாவது: "ஈராக்கில் அமெரிக்கத் துருப்புக்களை நிறுத்தி வைப்பதில் வெள்ளை மாளிகை உறுதியாக இருக்கிறது; மேலும் ஈரானுடனான போர் பற்றிய ஒரு ஆபத்தான போக்கையும் தொடர்ந்துள்ளது. ஈராக்கில் இருந்து துருப்புக்களை மீண்டும் நாட்டிற்குள் கொண்டுவருவதற்கு வலுவான காங்கிரஸ் நடவடிக்கை தேவை; அதேபோல் வெள்ளை மாளிகை ஈரான்மீது போர் தொடுக்க தயாராவதும் நிறுத்தப்பட வேண்டும். காங்கிரசின் வெகுசில உறுப்பினர்கள் சரியான பாதை எது என்பதை தாங்களே சுயமாக செய்வர். அவர்கள் நம்மிடமிருந்து, நம்முடைய அண்டை வீட்டாரிடம் இருந்து, நம்முடைய சக ஊழியர்களிடம் இருந்து, நம்முடைய நண்பர்களிடம் இருந்து கேட்க வேண்டியிருக்கிறது."

பரந்த மக்களின் அழுத்தத்தின் தாக்கம் பற்றிய சான்று என்று கூறக்கூடியதன் வகையில், கலிபோர்னியாவின் பிரதிநிதி பார்பாரா லீ ஆல் எழுதப்பட்டு மற்றும் மன்றப் பிரதிநிதிகள் 90 பேர்களால் கையெழுத்திடப்பட்ட கடிதத்தை மேற்கோள்காட்டி, அமெரிக்கத் துருப்புக்களை திரும்பப் பெறுவதற்கு மட்டுமே நிதியளிப்பதற்கு வெளியில் ஈராக்கில் போருக்காக இனி எவ்வித பணமும் கொடுக்கப்படாது என உறுதி கூறும் துண்டறிக்கை சுற்றுக்கு விடப்பட்டது.

உண்மையில், இந்த நடவடிக்கை மன்ற நடவடிக்கையில் எடுத்துக் கொள்ளப்படுவதே சந்தேகத்திற்கு உரியதுதான்; மன்றத் தலைவரான நான்ஸி பெலோசி மற்றும் அவை பெரும்பான்மை தலைவர் ஸ்டேனி ஹோயர் இருவரும் பலமுறையும் போர் செலவிற்கு நிதிக் குறைப்பை தாங்கள் எதிர்ப்பதாகவும், புஷ் நிர்வாகத்தின் "எழுச்சி" செயல், 30,000 கூடுதலான படைகளை ஈராக்கிற்கு அனுப்புதலுக்கான செலவினங்களை அகற்றுவதையும் தாங்கள் எதிர்ப்பதாகவும் கூறியுள்ளனர்.

துண்டுப்பிரசுரமோ, காகனோ காங்கிரசில் இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் பலமுறையும் போர் தொடர்வதற்கான நிதியளிக்க வாக்களித்தனர் என்றும் மீண்டும் போராடத் தயார் என்ற உண்மை பற்றியும் எந்தக் குறிப்பையும் காட்டவில்லை.

இறுதிப்பகுப்பாய்வில், இந்த இரட்டைத்தனமான அணுகுமுறை ஜனநாயகக் கட்சியினர்மீது அழுத்தம் கொடுப்பதற்கு பயன்படாமல், இந்த ஏகாதிபத்திய கட்சி பற்றிய போலித் தோற்றங்களை வளர்ப்பதற்கும், போரை எதிர்க்கும் மில்லியன் கணக்கான மக்கள்மீது, இருக்கும் முழு அரசியல், சமூக மற்றும் பொருளாதார நிலைப்பாட்டிற்கு ஜனநாயகக் கட்சி மற்றும் அதன் 2008 ஜனாதிபதி தேர்தல் போட்டியில் தங்களை தாழ்த்திக் கொள்வதற்கான அழுத்தம்தான்.

ஈராக்கில் இருந்த அமெரிக்க முன்னாள் உயர் தளபதி ரிக்கார்டோ சான்சேஸ் ஆல், சில நாட்களுக்கு முன்பு ஆற்றப்பட்ட உரையை பற்றி பெரிதும் பாராட்டி காகனிடம் இருந்து வந்த அறிக்கை ஒன்றை UFPJ வெளியிட்டபொழுது, எதிர்ப்பை ஒழுங்குசெய்தவர்கள் பெருகிய முறையில் வலதுபுறம் மாறியுள்ளது பற்றிய மற்றொரு முக்கிய அறிகுறி, ஆர்ப்பாட்டத்திற்கு ஒன்றரை வாரம் முன்னதாக வந்தது. "பல ஆண்டுகளாக போர் எதிர்ப்பு இயக்கம் கூறிக் கொண்டிருப்பதைத்தான் தளபதி சான்சேஸ் கூறியுள்ளார். இப்போர் ஒருபோதும் நிகழ்ந்திருக்கக்கூடாது; நம்முடைய நாட்டை பேரழிவில் ஆழ்த்திவிட்டது."

உண்மையில் சான்சேசின் உரை "போரில் ஈடுபட்டிருக்கும் எமது துருப்புக்கள் கொல்லப்படல் மற்றும் நம் நாட்டை அழித்தல்" இவற்றுக்காக "ஒரு சார்பு அரசியல்" மற்றும் செய்தி ஊடகத்திற்கு எதிரான ஒரு தீவிர வலதின் கண்டனமாகும். அந்த உரையின் முக்கிய கருத்து, போரை "முடிவு வரும் என்று இல்லாத ஒரு கெட்ட கனா" என்று குறிப்பிட்டது, அரசியல் எதிர்ப்புக்கள் ஒடுக்கப்பட்டு நாடு முழுவதும் போரின் தேவைகளுக்கு ஏற்ப தாழ்ந்து நிற்க வேண்டும் என்ற கோரிக்கையை கொண்டிருந்தது. அவருடைய கருத்துக்களின் உட்குறிப்பு அரசியல் வாதிகள் உடன்பட்டு நடக்கவில்லை என்றால் இராணுவம் தன்னுடைய பொறுப்பிலேயே விவகாரங்களை எடுத்துக் கொண்டுவிடும் என்பதுதான்.

காகனும் UFPJ யும் இத்தகைய கருத்துக்களை "போர் எதிர்ப்பு" உணர்வு என்று தழுவுதல் உத்தியோகபூர்வ அமைப்பின் இருக்கும் அரசியல் நடைமுறைக்கு முற்றிலும் தாழ்ந்து நடக்கும் தன்மை மற்றும் எவ்வித சுதந்திர அரசியல் முன்னோக்கையும் அது கொண்டிருக்கவில்லை என்பதின் வெளிப்பாடுதான்.

போருக்கு பெருகிய முறையில் மக்கள் எதிர்ப்பு, அதே நேரத்தில் எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களில் கூட்டம் குறைவு என்று பார்த்தால் தோன்றும் முரண்பாடு கடந்த ஓர் ஆண்டில் ஏற்பட்ட அரசியல் நிகழ்வுகள் பற்றி பெருகிய முறையில் மக்கள் தங்களுடைய சொந்த முடிவுகளை பற்பல தரத்தில் அரசியலை பற்றி அடைந்துள்ளனர் என்றும் போரை நிறுத்துவதற்கு ஜனநாயகக் கட்சிக்கு முறையிடும் முன்னோக்கு பற்றி ஏமாற்றம் அடைந்துவிட்டனர் என்ற நிலைப்பாட்டின் மூலம்தான் விளக்கப்பட முடியும்.

ஏகாதிபத்தியம், இராணுவவாதம் ஆகியவற்றிற்கு எதிரான ஒரு உண்மையான போராட்டம் இந்த முன்னோக்கிற்கு முற்றிலும் சமரசத்திற்கு இடமில்லாத எதிர்ப்பின் மூலம்தான் நடத்தப்பட முடியும். அதற்கு போர், சமூக சமத்துவமின்மை மற்றும் இவற்றை தோற்றுவித்துள்ள முதலாளித்துவ அமைப்பிற்கு எதிரான ஒரு பொதுப் போராட்டத்தில் சர்வதேசரீதியில் உழைக்கும் மக்களை அரசியல் ரீதியாக அணிதிரட்டலும் அவர்களின் ஐக்கியமும் தேவைப்படுகிறது. அத்தகைய இயக்கத்தை கட்டியமைக்கும் போராட்டத்தில் முதல் படி ஜனநாயகக் கட்சி மற்றும் எதிர்ப்பு சூழலில் இருக்கும் அதன் ஆதரவாளர்களுடன் சமரசத்திற்கு இடமில்லாமல் முறித்துக் கொள்வதும் ஒரு சுயாதீன வெகுஜன சோசலிச அமைப்பை கட்டியமைப்பதும் ஆகும்.