World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிGermany: Social Democratic chairman attacks train drivers ஜேர்மனி : சமூக ஜனநாயக கட்சி தலைவர் இரயில் டிரைவர்களைத் தாக்கிப்பேசுகிறார் By Ulrich Rippert நாடு முழுவதும் இரயில் டிரைவர்களின் கடந்த வியாழன் தொடங்கிய வேலைநிறுத்தத்தை தொடர்ந்து சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) தலைவர் குர்ட் பெக், வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்களுக்கும் அவர்களது தொழிற்சங்கத்திற்கும் எதிரான கடுமையான தாக்குதலை செய்துள்ளார். N24 செய்தி நிலையத்துடன் பேசிய பெக், GDL எனப்படும் ஜேர்மன் இரயில் டிரைவர்கள் தொழிற்சங்கம் மீண்டும் மோசமான சக்தியை பயன்படுத்தி பிறரை பற்றிப் பொருட்படுத்தாமல் தங்களுக்கு சிறப்புச் சலுகைகள் கிடைக்கும் முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது என்று கூறினார். ''இரயில்வே தொழிலாளர்களின் மொத்த எண்ணிக்கையில் 'ஒரு சிறு சதவிகிதத்தைத்தான்' GDL பிரதிபலிக்கிறது, இது ஒரு இரயில் டிரைவர்களின் சிறிய பிரிவு" என்றும் அவர் கூறினார். இந்த சிறுபான்மை, இரயில்வேயில் வேலைசெய்து கொண்டிருக்கும் அனைவரின் "ஐக்கியத்திலிருந்து" முறிப்பதற்கு முயல்கிறது என்றார்.Transnet, GDBA போன்ற மற்ற இரயில் தொழிற்சங்கங்கள் நியாயமான உடன்பாட்டை அடைந்துள்ளன என்று கூறிய அவர், "இப்பொழுது சிலர் பிறரைப் பற்றி அக்கறை கொள்ளாமல் தங்களுக்கு சிறப்புச் சலுகைகள் வேண்டும் என்று கோருகின்றனர்" என்றார். நிர்வாகம் உறுதியாக இருந்து இவர்களுக்கு விட்டுக்கொடுக்கக்கூடாது என்று பெக் கோரியுள்ளார்.இத்தாக்குதல் மூலமாக அரசியல்வாதிகள், செய்திஊடகத்தின் பெரும்பாலானவை, ஜேர்மன் தொழிற்சங்கக் கூட்டமைப்பு (DGB) ஆகியவை வேலைநிறுத்தம் செய்துவரும் டிரைவர்கள்மீது அவதூறை கூறி, அவர்களை தனிமைப்படுத்தி அவர்கள் சரணடைய வேண்டும் என்று தொடுத்துள்ள பிரச்சாரத்தில் சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் தன்னையும் இணைத்துக் கொண்டுள்ளார். வியாழனன்று வேலைநிறுத்தத்தின்போது அனைத்து தொலைக்காட்சி நிலையங்களில் இருந்தும் புகைப்படக் குழுக்கள் நூற்றுக்கணக்காக காத்திருக்கும் வாடிக்கையான பயணிகள், இன்னும் பல பயணிகளையும் பேட்டி கண்டு அவர்கள் வேலைநிறுத்தத்தை எதிர்க்கிறார்களா எனக் கண்டறிய முயன்றனர். வெள்ளிக்கிழமை அன்று செய்தித்தாட்களின் தலைப்புக்கள் அனைத்தும் கிட்டத்தட்ட ஒரே மாதிரியாக "பெரும்பாலான மக்கள் GDL வேலைநிறுத்தத்திற்கு எதிரானவர்கள் (Süddeutsche Zeitung), "மக்களுடைய உணர்வில் மாறுதல்கள் ஏற்பட்டுள்ளன" என்ற வகையில் வந்திருந்தன. ஆனால் இதுவும் அவற்றிற்கு போதவில்லை. பெக்கின் தாக்குதல் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்களுக்கு எதிரான ஒரு சூனிய வேட்டையைத் தூண்டிவிடும் நோக்கத்தை கொண்டுள்ளது. கடந்த சில நாட்களாக பல இரயில்வே நிலையங்கள் அச்சுறுத்தும் கடிதங்களை பெற்றுள்ளன; நிர்வாகம் வேலைநிறுத்தத்திற்கு எதிராக பயணிகளின் ஒரு பகுதியினர் ஈடுபடும் நிகழ்வுகள், வன்முறை ஆகியவற்றில் தலையிட வேண்டாம் என்று இரயில் பாதுகாப்பு பிரிவிற்கு உத்தரவு இட்டுள்ளது. பேர்லினில் இருக்கும் Ostbahnhof ரெயில்வே நிலையத்தில் வேலைநிறுத்தக் குழு அதன் பாதுகாப்பு உறுதி கொடுக்கப்படமாட்டாது என்ற நிலையில் மறியலை கைவிட்டது. இரயில் டிரைவர்களுடைய போராட்டத்தை பாதுகாப்பதற்கு சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் தொழிற்சங்கத் தலைமையகத்தில் இருக்கும் வேலைநிறுத்தத்தை முறிப்பவர்களை சக்திவாய்ந்த வகையில் எதிர்ப்பது மிக முக்கியமானது ஆகும். "ஐக்கியம்" எனப்படும் வார்த்தைஜாலங்கள், பெக் மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு (DGB) தலைவர்களை பெரும் சீற்றத்திற்கு உட்படுத்தியுள்ளது என்னவெனில், DGB தொழிற்சங்கம் Transnet மற்றும் சிவில் ஊழியர்கள் சங்கமான GDBA (சில டிரைவர்களுக்கு அது பிரதிநிதியாகவும் உள்ளது) ஆகியவற்றுடன் கூட்டுச் சேர்ந்து பேச்சுவார்த்தைகள் நடத்துவதில் இருந்து இரயில் டிரைவர்கள் (GDL) முறித்துக் கொண்டதுதான். இந்த அமைப்புக்கள் கடந்த சில ஆண்டுகளில் உண்மை ஊதியங்கள் குறைக்கப்படுவதற்கும் திட்டமிட்டு வேலைகளை தகர்ப்பதற்கும் உடன்பட்டுள்ளன. Transnet, GDBA இவற்றின் "ஐக்கியம்" என்பது ஜேர்மன் ரெயில்வே (DB) நிர்வாகக்குழுவுடன் இவர்கள் நெருக்கமாக ஒத்துழைத்தல், நிர்வாகம் மற்றும் கூட்டாட்சி அரசாங்கத்தின் தனியார்மயமாக்கல் திட்டங்களுக்கு ஆதரவு தருதல் என்று பொருளாகும். Transnet இன் தலைவர் நோர்பர்ட் ஹான்சென்தான் ஜேர்மன் ரெயில்வேயின் மேற்பார்வைக் குழுவின் தலைவர் ஆவார்; இந்த பதவிக்காக மிக கணிசமாக வெகுமதியை அவர் பெறுகிறார்.1994ல் இரயில்வேயில் "சீர்திருத்தங்களுக்கு" பின்னர் அதில் பாதிக்கும் மேலான வேலைகள் அழிக்கப்பட்டுவிட்டன; இப்பொழுதுள்ள 185,000 தொழிலாளர் பிரிவும் இன்னும் பல வெட்டுக்களை எதிர்நோக்கியுள்ளது. பணிச் சுமைகள் தொடர்ந்து அதிகப்படுத்தப்படுகின்றன; ஆனால் வருமானங்களோ தேக்க நிலையை அடைந்து கடந்த இரு ஆண்டுகளில் 10 சதவிகிதம் சரிந்துள்ளன. இந்த மோசமான நிலைமைகள் எல்லாம் தொழிற்சங்கங்களால் "சமுதாய அளவில் ஏற்கத் தக்கவை" எனக் கருதப்படுகின்றன; இத்தாக்குதல்கள் Transnet, GDBA தொழிற்சங்கங்கள் கையெழுத்திட்ட ஒப்பந்தங்களில் அனுமதி பெற்றவை ஆகும். வேலைக் குறைப்புக்கள் மற்றும் தொடர்ந்து மோசமாகும் பணிநிலைமைகள் Transnetஐ பல அங்கத்தவர்களை இழக்கும் நிலைக்கு தள்ளியுள்ளன; தன்னுடைய அதிகாரத்துவத்திற்கு பணம் அளிக்கக்கூட முடியாத நிலைக்கு அது தள்ளப்பட்டுள்ளது. சமீபத்தில் ஒரு தொலைக்காட்சி குறும்படம் ஒன்று டிரான்ஸ்நெட்டிற்கும் இரயில் நிர்வாகத்திற்கும் இடையே இருக்கும் முக்கிய உடன்பாடு ஒன்றை காட்டுகிறது; அதில் டிரான்ஸ்நெட் அலுவலர்கள் மற்றும் பல தொழிற்குழுக்களில் உள்ள முழுநேர ஊழியர்களுக்காக ஊதியங்கள் ஜேர்மன் ரெயில்வேயால் இரகசியமாக கொடுக்கப்படுவதாக காட்டப்பட்டுள்ளது. இதற்கு பதிலாக டிரான்ஸ்நெட் இரயில்வேக்கள் தனியார்மயமாக்குதலுக்கு ஆதரவை ஜேர்மன் ரெயில்வே நிர்வாகக் குழுவுடன் இணைந்து செயல்படுகிறது. டிரான்ஸ்நெட்டை இந்த குறும்பட அறிக்கை "மேஹ்டோரினின் அடக்கப்பட்ட தொழிற்சங்கம்" (மேஹ்டோர்ன் இரயில்வேயின் தலைமை நிர்வாக அதிகாரியாவார்) என்று அழைத்துள்ளது. அத்தகைய உள்விவகாரங்கள் பகிரங்கமாக ஆக்கப்படுவது பற்றி கோபமான அறிக்கை ஒன்றை வெளியிட்டதை தவிர, டிரான்ஸ்நெட் குறும்படத்தில் வந்துள்ள கருத்துக்களை மறுத்து உண்மையைக் காட்டும் வகையில் ஒரு ஆதாரத்தைக்கூட அறிக்கையாக வெளியிடவில்லை. ஆனால் நிர்வாகத்துடன் இத்தகைய "ஐக்கியம்" என்பது டிரான்ஸ்நெட்டோடு நின்று விடவில்லை. மற்றொரு தொழிற்சங்கத் தலைவர், வேலைநிறுத்த டிரைவர்களை தாக்குவதில் களைப்பே காணாதவர் மற்றும் "ஐக்கியத்தை" குலைப்பதாக அவர்களை கண்டிப்பவர் பொதுத்துறை தொழிற்சங்கமான Verdi யின் தலைவரான Frank Bsirske ஆவர். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர்தான் TVoD எனப்படும் பொதுச்சேவை கூட்டு உடன்பாடு ஒன்றை கையெழுத்திடப்படுவதற்கு பொறுப்பானவராவார். அவ் உடன்படிக்கையின்படி மத்திய, பிராந்திய மற்றும் உள்ளூர் அரசாங்க தொழிலில் இருக்கும் ஊழியர்களின் நிலைமைகளை கணிசமாக மோசமாக்கியது. அதிற்கு முன்பு அவர் பேர்லினில் புறநகர போக்குவரத்து முறையில் 3,000 வேலைகள் தகர்ப்பு மற்றும் 10% ஊழியக் குறைப்பிற்கு உடன்பட்டார். இந்த வசந்தகாலத்தில், Deutsche Telekom இல் உள்ள 50,000 ஊழியர்கள் ஒரு குறைவூதிய துணைநிறுவனம் ஒன்றினுள் தள்ளப்படுவதை எதிர்த்தபோது, Verdi அடையாள எதிர்ப்பு நடவடிக்கைகளுக்கான வேலைநிறுத்தம் என்பதுடன் நிறுத்திக் கொண்டது. அதன் பின் தொழிற்சங்கம் பல ஊழியர்களையும் துணைநிறுவனத்தினுள் குறைந்த ஊதியத்தில் தள்ளியதுடன் ஒவ்வொரு வாரமும் அதிக மணி நேரம் உழைக்கவும் கட்டாயப்படுத்தியது; அதே நேரத்தில் அவர்களுடைய ஊதியங்களும் குறைக்கப்பட்டன. இந்த விவகாரத்தில் பெக்கோ அல்லது ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்போ (DGB) டெலிகொம் தொழிலாளர்கள் பிரிவினைக்கு உட்படுகின்றனர், துணைநிறுவனத்தினுள் தள்ளப்பட்டவர்களுக்கு தனியான, பின்னர் கணிசமான மோசமான கூட்டு உடன்படிக்கை ஏற்பட்டது பற்றி எதிர்ப்புத் தெரிவிக்கவில்லை. இப்பொழுதுதான் ஊதிய உயர்வுகள் வரும்போது அவர்கள் "ஐக்கியம்" பற்றி பேச முன்வருகின்றனர். இவ்விதத்தில் கணக்கில் அடங்கா உதாரணங்கள் "பெருநிறுவன ஐக்கியம்", "சமூகப் பங்காளித்துவம்" பற்றி உள்ளன. பதினெட்டு மாதங்களுக்கு முன்பு IG Metal தொழிற்சங்கத்தின் பிரதிநிதிகள் வொல்ப்ஸ்பேர்க்கில் உள்ள Volkswasgen இல் நிர்வாகம் கொடுக்கும் சலுகைகளை ஏற்றுக்கொண்டு ஊதியக் குறைப்புக்கள், வேலை வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு உடன்பட்டபோது அது ஒன்றும் விதிவிலக்கு அல்ல, இது ஒரு விதிமுறையின் அப்பட்டமான, குறிப்பிடத்தக்க வழமைதான் என்பது தெளிவாயிற்று. இரயில் டிரைவர்கள் இந்த பொதுநலச் செலவுக் குறைப்புக்கான கூட்டணியில் இருந்து வெளியேறியது வரவேற்கத்தக்கதே ஆகும். அவர்களுடைய ஊதிய கோரிக்களைகள், பல செய்தி ஊடகங்களில் வேண்டுமென்றே தவறாகச் சித்தரித்துக் காட்டப்படுபவை, மற்றும் சுயாதீன கூட்டு உடன்படிக்கைக்கான கோரிக்கை முற்றிலும் நியாயமானவையாகும். ஜூன் மாதத் தொடக்கத்தில் உலக சோசலிச வலைத் தளம் ஏற்கனவே, "மற்றவர்கள் சிறைப்படுத்தப்பட்டிருக்கும் இரும்புக் கவசத்தில் இருந்து உடைத்துக்கொண்டு வரவிரும்புவர்கள் ஒன்றும் ஐக்கியத்தை முறிப்பவர்கள் அல்ல, மாறாக சங்கிலித் தளைகளை முறிக்க விரும்புகிறவர்கள்" எனக் குறிப்பிட்டது. இப்பொழுது அனைத்து திசைகளில் இருந்தும் இரயில் டிரைவர்களுக்கு எதிராக மடையென வெறித்தனமாக திறந்தவிடப்பட்டுள்ள தாக்குதல் தொடர்ந்து சீர்குலையும் பணி, வாழ்க்கை நிலைமைகளுக்கு எதிராக போரிட விழையும் அனைவரையும் மிரட்டி மெளனப்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தைக் கொண்டுள்ளது. எனவேதான் இரயில் டிரைவர்களுடைய வேலைநிறுத்தத்திற்கு இயன்ற அளவு ஆதரவு கொடுத்தல் மிகவும் முக்கியமானது ஆகும். சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களான பெக், முன்டபெரிங் இரயில் டிரைவர்களுக்கு எதிரான இந்த ஆத்திரமூட்டும் கருத்துக்கள் எவ்வாறு சமூக ஜனநாயகக் கட்சித் தலைவர் தன்னுடைய கட்சி சக நண்பரான வேலைவாய்ப்புத்துறை மந்திரி பிரன்ஸ் முன்டபெரிங் உடனான பூசலில் அணுகுவார் என்பதையும் வெளிப்படுத்தியுள்ளார். இரண்டு சமூக ஜனநாயகக் கட்சி தலைவர்களுக்கும் இடையே உள்ள பூசல் செய்தி ஊடகத்தில் பல வாரங்கள் பல பக்கங்களை நிரப்பின. 2010 பொதுநல செயற்பட்டியல் மற்றும் தொழிலாளர் "சீர்திருத்தங்களில்" மாறுதல்கள் (குறைந்த அளவிலேனும்) வேண்டும் என்று பெக் விரும்புகிறார். பலகாலம் பணிபுரிந்த தொழிலாளர்கள் வேலையின்மை ஊதியத்தை இப்பொழுது இருப்பதை விட சற்று கூடுதலாக பெற வேண்டும் என்கிறார். ஆனால் அத்தகைய கருத்திற்கு முன்டபெரிங் உறுதியான எதிர்ப்பை தெரிவித்துள்ளதுடன் அது "தொழிலாளர் சந்தைச் சீர்திருத்தங்கள் மிருதுவாக ஆகிவிடும்" என்றும் எச்சரித்துள்ளார். முன்டபெரிங்குடன் கருத்து வேறுபாடுகள் இருந்தாலும், பெக் செயற்பட்டியல் 2010ல் உள்ள கொள்கைகள் பற்றி உறுதியாக உள்ளார். முன்டபெரிங் போலவே பெக்கும் "Hartz IV" சட்டங்களில் இயைந்துள்ள வலியுறுத்தும் நடவடிக்கைகளை தக்க வைப்பதில் ஆர்வம் காட்டுகிறார்; அவை திறமையுடைய தொழிலாளர்கள் குறுகிய காலம் வேலையில்லாமல் இருந்தாலும் பின்னர் குறைவூதிய வேலைகளை ஏற்க வேண்டும் என்று கட்டாயப்படுத்துகிறது. வேலையே இல்லாதவர்களை பற்றி பெக் என்ன நினைக்கிறார் என்பது சில காலத்திற்கு முன்பு வெளிப்பட்டது; தன்னுடைய தொகுதியான மைன்ஸில் சுற்றுப் பயணம் செய்தபோது, அவர் ஒரு வேலை இல்லாதவரை பார்த்து அவர் வேலை பெறுவதற்கு தலைமுடியை வெட்டிக் கொண்டு, குளித்துவிட்டு வேலை தேடவைண்டும் என்று சாடினார். இப்பொழுது பெக்கின் பார்வை ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் மீது விழுந்துள்ளது. வேலையற்றோருக்கான நலன்கள் அதிகரிக்கப்பட வேண்டும் என்ற தொழிற்சங்கங்களின் கோரிக்கையை ஏற்றுக்கொண்டு, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரத்துவம் இன்னும் நெருக்கமாக சமூக ஜனநாயக கட்சியுடன் ஒத்துழைக்க வேண்டும் என்று கூறுகிறார். மேலும், இன்னும் சமீப காலத்தில், சில தொழிற்சங்க அலுவலர்கள் ஒஸ்கார் லாபொன்டைனின் இடதுகட்சி பக்கம் நகர்ந்துள்ளனர். ஒரு அரசியல் பிளவு ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பை வலுவிழக்கச் செய்துவிடும் என்று பெக் அஞ்சுகிறார்; அத்தகைய வளர்ச்சி ஆபத்தானது என்று நினைக்கிறார். இரயில் டிரைவர்களுடைய வேலைநிறுத்தம் சமூகத்தின் பரந்த அடுக்குகளில் தீவிரமயமாக்கலை உருவாக்கும் என்பதால், சமூக ஜனநாயக கட்சித் தலைவர்கள் தொழிற்சங்க கருவியை சமூகத் தாக்குதல்களை நடத்துவதற்கு அசாதாரண வகையில் முக்கிய கருவியாக கருதுகின்றனர். டிரைவர்களுடைய வேலைநிறுத்தம் இவ்விதத்தில் ஒரு முக்கியமான அரசியல் படிப்பினையை கொண்டுள்ளது. மனிதாபிமானமற்ற பணி நிலைமைகள் மற்றும் ஊதிய, வேலை வெட்டுக்களுக்கு எதிரான போராட்டத்திற்கு சமூக ஜனநாயக கட்சி, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு தொழிற்சங்கங்களின் அதிகாரத்துவ கருவிகளுடன் ஒரு உடைவு வேண்டும் என்பதை அது தெளிவாக்கியுள்ளது. இது இடது கட்சிக்கும் பொருந்தும்; அதுதான் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைபு அதிகாரத்துவத்துடன் நெருக்கமான தொடர்பைக் கொண்டுள்ளது; பல மட்டங்களிலும் சமூக ஜனநாயக கட்சியுடன் நெருக்கமாக ஒத்துழைக்கவும் விழைகிறது. GDL இன் சில பிரிவுகள் செய்ய முயலுவதுபோல், சமூக ஜனநாயக கட்சி, ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு அதிகாரத்துவத்துடன் போராட்டத்தை தவிர்ப்பது முடியாது. வேலைநிறுத்தத்திற்கான தயார்நிலை மற்றும் போர்க்குணம் ஆகியவற்றை இரயில் டிரைவர்கள் கொண்டிருப்பது வரவேற்கத்தக்கது; ஆனால் இது ஒரு அரசியல் முன்னோக்கை தக்கவைத்து வளர்ப்பதின் மூலம்தான் முடியும்; அந்த முன்னோக்கு ஊழல் மிகுந்த சமூகப் பங்காளித்துவத்தை எதிர்க்க வேண்டும்.இன்னும் கூடுதலான வேலைநிறுத்த நடவடிக்கைகளை தவிர, அடிப்படையில் ஒரு புதிய அரசியல் மூலோபாயத்தை பற்றிய அரசியல் விவாதம் தொடக்கப்பட வேண்டும். பெருவணிகத்தின் இலாப நலன்களுக்கு மாறாக, தொழிலாளர்களின் தேவைகள் மற்றும் சோசலிச இலக்குகள் மையப்படுத்தப்பட்டு தொடரப்பட வேண்டும். பொதுவாக உற்பத்தியானது, குறிப்பாக Deutsche Bahn போன்ற முக்கிய அமைப்புக்களில் பெருநிதிய பிரபுத்துவத்தின் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு முற்றுமுழுதாக சமூகத்தின் சேவை என்பதன் கீழ் கொண்டுவரப்பட வேண்டும். இவ்விதத்தில் பிரான்சில் வேலைநிறுத்தம் செய்யும் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளுவது முக்கியமாகும்; அதே போல் பிரிட்டனில் வேலை நிறுத்தம் செய்யும் அஞ்சல் தொழிலாளர்களுடன் தொடர்பு கொள்ளுவதும் முக்கியமாகும். ஜேர்மன் ரெயில்வேயின் தலைவர் மற்றும் அவருடைய எட்டு நிர்வாகக் குழு உறுப்பினர்கள் தங்கள் வருமானங்களை 100 சதவிகிதத்திற்கும் மேலாக 20 மில்லியன் யூரோக்களுக்கு உயர்த்திக் கொள்ளக்கூடிய ஒரு சமுதாயத்தில், அதே நேரத்தில் தங்கள் ஊழியர்களின் பணி நிலைமைகள் ஊதியங்கள் ஆகியவற்றை தீவிரமாக மோசமடையச் செய்யும் நடவடிக்கைகளில் ஈடுபடுவது என்பது சமூகரீதியானதோ, ஜனநாயகத்தனமோ ஆகாது. பெரும்பாலான உழைக்கும் மக்களுடைய நலன்களை காக்கும் வகையில் ஒரு சமூகச் சீரமைப்பை செய்வதற்கு ஐரோப்பிய மற்றும் உலகம் முழுவதிலும் இருந்து ஒத்துழைப்பும் ஒரு சர்வதேச சோசலிசக் கட்சி கட்டமைப்பதும் மிக இன்றியமையாதது ஆகும். |