:
செய்திகள்
ஆய்வுகள் :
மத்திய கிழக்கு
US imposes unilateral sanctions on Iran: One step closer
to war
ஈரான்மீது ஒருதலைப்பட்சமான பொருளாதாரத் தடைகளை அமெரிக்கா சுமத்துகிறது:
போருக்கு நெருக்கமாக ஓர் அடி
By Bill Van Auken
26 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
சர்வதேச உறவுகளின் வரலாற்றில் முன்னொருபோதுமிருந்திராத ஒரு நடவடிக்கையில்,
செவ்வாயன்று வாஷிங்டன் ஈரானின் சீருடை அணிந்த முக்கிய பாதுகாப்புப் படைப்பிரிவிற்கு எதிராகவும், அதேபோல
20க்கும் மேற்பட்ட ஈரானிய நிறுவனங்கள் மற்றும் நாட்டின் மூன்று முக்கிய வங்கிகள் மீதும் ஒருதலைப் பட்சமாக
மிகக் கடுமையான பொருளாதாரத்தை முடக்கும் தடைகளை சுமத்தியுள்ளது.
அமெரிக்க வெளியுறவு அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மற்றும் கருவூலத் துறைச் செயலர்
ஹென்ரி போல்சனும் அறிவித்துள்ள இப்பொருளாதார தடைகள், பூசலுக்கு உரிய ஈரானின் அணுசக்தித்திட்டம் பற்றிய
பேச்சுவார்த்தைகள் மூலம் முடிவு காண்பதை தவிர்க்கும் நோக்கத்தை கொண்ட வேண்டுமேன்றே செய்யப்பட்ட ஆத்திரமூட்டலை
பிரிதிநிதித்துவம் செய்வதுடன் அந்நாட்டின் மீது அமெரிக்கப் போர் ஒன்றை கிட்டத்தட்ட தவிர்க்க முடியாததாக
ஆக்கியுள்ளன.
இந்த நடவடிக்கைகளை அறிவிக்கையில் --1979 ஈரானிய புரட்சியின் போது அமெரிக்க
தூதரகத்தை கைப்பற்றியபோது வாஷிங்டன் சுமத்தியதைவிட கடுமையான தண்டனைகள் என்று கருதக்கூடியவை-- ரைஸ்,
"அதன் பொறுப்பற்ற நடந்து கொள்ளும் முறைக்காக ஈரான் அதிகமாக விலை கொடுக்கும் வகையில் இவை
வடிவமைக்கப்பட்டுள்ளன" என்று கூறினார்.
இப்பொருளாதாரத் தடைகள் ஈரானின் புரட்சிக் காவலர் படைக்கு எதிராக முதலில்
செலுத்தப்படுகின்றன; அமெரிக்க அரசாங்கம் அதை இப்பொழுது "பேரழிவு ஆயுதங்களை பெருக்குபவர்கள்" என்று
முத்திரையிட்டுள்ளது; இதன் Quds Force
சிறப்புப் பிரிவு "பயங்கரவாதத்திற்கு ஆதரவு" கொடுக்கிறது என்றும் முத்திரை இடப்பட்டுள்ளது.
புரட்சிக் காவலர் படை என்பது கிட்டத்தட்ட 125,000 வீரர்களை கொண்ட
அமைப்பு ஆகும்; இது சட்டத்தை செயல்படுத்துதல், எல்லை ரோந்து மற்றும் அயல்நாட்டினர் படையெடுப்பிற்கு
எதிர்ப்பு ஆகியவற்றிற்கு பொறுப்புக் கொண்டுள்ளது. அது ஈரானின் மக்கள் குடிப்படைக்குழுவையும் அமைத்துள்ளதுடன்
கிட்டத்தட்ட 12 மில்லியன் தன்னார்வ உறுப்பினர்களுக்கு இராணுவப் பயிற்சியையும் அளித்துள்ளது.
புரட்சி காவலர் படைக்குள்
Quds Froce
ஒரு சிறப்பு பிரிவு ஆகும்; இது வெளிநாட்டு நடவடிக்கைகளை மேற்கொள்ளுகிறது. வாஷிங்டனின் நேரடி ஒப்புதலுடன்
இது நிறைய நாடுகளில் செயல்பட்டுள்ளது.
பொஸ்னியாவில், அமெரிக்க ஆதரவைக் கொண்டிருந்த முஸ்லிம் அரசாங்கத்திற்கு இது
ஆயுதங்களை கொடுத்தது; ஆப்கானிஸ்தானில் சோவியத் இராணுவத்திற்கு எதிராக போரிட்டிருந்த சக்திகளுக்கு
உதவியது; பின் தலிபானுக்கு எதிராக போராடுபவர்களுக்கு உதவியது; ஈராக்கில் இது சதாம் ஹுசைனின்
பாத்திஸ்ட் ஆட்சிக்கு எதிராக குர்திஷ் கொரில்லாக்களுக்கு உதவியது.
மற்ற இடங்களில், அமெரிக்காவில் எதிர்க்கப்படும் அமைப்புக்களுக்கு இது
உதவியுள்ளது; முக்கியமாக இஸ்ரேலிய ஆக்கிரமிப்பை எதிர்க்கும் ஹெஸ்போல்லா, லெபனானில் உள்ள பெரும் ஷியா
இயக்கம் மற்றும் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள பாலஸ்தீனிய பகுதிகளில் இருக்கும் அமைப்புக்கள் ஆகியவற்றிற்கு உதவியுள்ளது.
இத்தகைய முத்திரைகளை ஓர் இறைமை பெற்ற நாட்டின் உத்தியோகபூர்வ இராணுவ
படைகளின்மீது சுமத்தியதன் மூலம், புஷ் நிர்வாகம் ஈரானின் உள்விவகாரங்களில் அப்பட்டமான தலையீட்டை
செய்கிறது. இவ்வாறு செய்கையில், அது போருக்கான போலித்தனமான சட்ட வடிவமைப்பை நிறுவ முற்படுகிறது;
இரண்டு மாற்றீட்டு போலிக்காரணங்களை கூறுகிறது -- பேரழிவு ஆயுதங்கள், பயங்கரவாதம் என ஈராக் மீதான
அமெரிக்கப் படையெடுப்பின்போது புனையப்பட்ட மற்றும் பிரச்சாரப்படுத்தப்பட்ட காரணங்களோடு
ஒத்ததாயிருக்கின்றன.
ஈரான் அதன் அணுசக்தி திட்டங்களை அணுவாயுதங்களை கட்டமைப்பற்காக
தொடர்கிறது என்று வாஷிங்டன் குற்றம் சாட்டியுள்ளது. இக் குற்றச்சாட்டை தெஹ்ரான் மறுத்துள்ளது; சமாதான
நோக்கங்களுக்காகத்தான், குறிப்பான ஒரு மாற்றீட்டு சக்தியின் ஆதார வளர்ச்சிக்குத்தான் இத்திட்டம்
பயன்படுத்தப்படுகிறது என்று ஈரான் வலியுறுத்துகிறது.
இரண்டாவது முக்கிய காரணத்தை பொறுத்தவரையில், புஷ் நிர்வாகமும் சில மூத்த
அமெரிக்க தளபதிகளும் பலமுறையும் ஈரான் மற்றும் குறிப்பாக
Quds Force ம்
ஈராக்கில் அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளின்மீது தாக்குதல் நடத்தும் போராளிகளுக்கு நிதியங்கள் மற்றும்
பயிற்சியும் அளிப்பதாக திரும்பத் திரும்ப குற்றம் சாட்டியுள்ளனர்.
ஒரு ஆணித்தரமான சான்றை இதுவரை வாஷிங்டன் இன்னும் இந்த குற்றச்சாட்டுக்களுக்கு
ஆதராமாக அளிக்கவில்லை; இத்தகைய நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளவர் ஒரு ஈரானிய முகவர் என்று நம்பத்தகுந்த
முறையில் எந்த ஆதாரத்தையும் கொடுக்கவில்லை. தாக்குதல்களுக்கான பொறுப்பை தெஹ்ரான் மறுத்துள்ளது; இவை
சுன்னி எழுச்சிப் போராளிகள் பெரும்பான்மையினாரால் நடத்தப்படுகிறது என்றும் ஈரானியர்கள் நீண்டகாலமாக
தொடர்பு கொண்டிருக்கும் ஷியா இயக்கத்தினரால் அல்ல என்றும் கூறியுள்ளது.
புரட்சிக் காவலர் படைக்கு எதிரான பொருளாதார தடைகள் ஈரானிய
பொருளாதாரத்திற்கு கணிசமான சேதம் ஏற்படுத்தப்பட வேண்டும் என்ற நோக்கத்தை கொண்டுள்ளவை. காவலர்
படைகளின் பங்கு ஈரானின் நீண்ட தாக்கம் கொண்ட பொருளாதார நடவடிக்கைகளிலும் உள்ளடங்கியுள்ளது.
உதாரணத்திற்கு, இதன் பொறியியல் பிரிவு $2 பில்லியன் மதிப்புடைய நாட்டின்
முக்கிய எரிவாயு வயல் வளர்ச்சி ஒப்பந்தத்தில் இருந்து $1.3 பில்லியன் ஒப்பந்தம் பாகிஸ்தானுக்கு புதிய
எரிவாயுக் குழாய்த்திட்டம் அமைத்தல் என்பது வரை தொடர்பு கொண்டுள்ளது; மேலும் தெஹ்ரான் பெருநகர
விரிவாக்க கட்டமைப்பு, தலைநகரத்திற்கும் இஸ்பஹானுக்கும் இடையே உயர் வேக இரயில் தொடர்பை
கொண்டுவருதல், கடற்போக்குவரத்துத் துறைமுகங்கள் கட்டமைப்பு மற்றும் ஒரு பெரிய அணை கட்டுதல் ஆகியவையும்
இதன் பொறுப்பில் உள்ளன.
அமெரிக்க வங்கிகளில் இருக்கும் சொத்துக்களை முடக்குதல் அல்லது அமெரிக்க
வணிகர்கள் ஈரானிய புரட்சிக் காவலர் படைகளுடனும், மற்றும் பெயரிடப்பட்டுள்ள ஈரானிய வங்கி மற்றும் பிற
நிறுவனங்களுடன் தொடர்பு கொள்வதை தடைசெய்ய அனுமதிக்கும் பொருளாதார தடைகளின் உடனடித் தாக்கம்
மிகக் குறைவுதான்; ஏனெனில் அமெரிக்க ஆதரவு பெற்றிருந்த சர்வாதிகாரி ஷா பதவியை விட்டு 1979 புரட்சியின்
போது விரட்டப்பட்டபோது வாஷிங்டன் இத்தகைய தடைகளை அந்நாட்டின் மீது சுமத்தி ஈரானிய சந்தையில் இருந்து
பல அமெரிக்க வங்கிகள், நிறுவனங்களை வெளியேறச்செய்திருந்தது.
வெளிநாட்டு வங்கிகள், நிறுவனங்களை மிரட்டுதல், அச்சுறுத்தல்
ஐக்கிய நாடுகள் சபையில் தீர்மானம் இயற்றி அதன் மூலம் ஆதாயம் கிடைக்கும்
என்பதைவிட மிக அதிக ஆக்கிரோஷம் படைத்த இந்த நடவடிக்கைகளின் நோக்கம் வெளிநாட்டு வங்கிகள் மற்றும்
நிறுவனங்களை அவர்கள் ஈரானுக்குள் தொடர்ந்து நடவடிக்கைகளை மேற்கொள்வது அமெரிக்காவால் சுமத்தப்படும்
அபராதங்களை சந்திக்க நேரிடும், அமெரிக்கச் சந்தையில் இருந்து விலக்கப்படும் என்ற அச்சுறுத்தலுடன்
மிரட்டுவதற்காகும்.
நிதிமந்திரி (கருவூலச் செயலர்) போல்சன் "உலகம் முழுவதும் இருக்கும்
பொறுப்பான வங்கிகள் மற்றும் நிறுவனங்கள்" பெயரிடப்பட்ட வங்கி, நிறுவனங்கள் மற்றும் புரட்சிக் காவலர்
பிரிவுகளுடன் இணைந்துள்ள அனைத்து அமைப்புக்களுடனும் அனைத்து தொடர்புகளையும் துண்டிக்க வேண்டும் என்று
அழைப்பு விடுத்துள்ளார். அமெரிக்க அதிகாரிகள் பாதுகாப்புப் பிரிவின் உறவுகள் பரந்த முறையில் இருப்பதால்
ஈரானுடனான எந்தப் பொருளாதார உறவும் அமெரிக்கா பதிலடி கொடுக்கும் என்ற அச்சத்தை கொண்டுள்ளது
என்று வலியுறுத்தியுள்ளனர்.
அமெரிக்க நடவடிக்கையானது பிரதம மந்திரி கோர்டன் பிரெளனின் பிரிட்டிஷ் அரசாங்கத்திடம்
இருந்து விரைந்து ஒப்புதலைப்பெற்றது; சில செய்தி ஊடகத் தகவல்களின்படி அது பின்னர் எப்படியும் நடக்கவிருக்கும்
ஈரான்மீதான அமெரிக்க வான்வழித் தாக்குதல்களில் தானும் சேர்ந்து கொள்ளும் விருப்பத்தை அடையாளம்
காட்டியுள்ளதாக கூறுகின்றன. ஈராக் படையெடுப்பிற்கு வழிவகுத்ததில் பிளேயர் கொண்டிருந்த பங்கை தானும் ஆற்றத்
தயார்செய்யப்பட்டிருப்பதாக பிரெளன் தோன்றுகிறார் போலும்; இதற்காக ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக்
குழுவில் மற்றும் ஒரு பொருளாதாரத் தடைகள் தொகுப்பைக் கொண்டுவருவதற்கான அழுத்தம் கொடுக்க பிரிட்டன்
தயாராக உள்ளது; இந்த நடவடிக்கை ரஷ்யா, சீனாவால் எதிர்க்கப்படுகிறது; இவை இரண்டும் ஈரானில் கணிசமான
நலன்களை கொண்டுள்ளதுடன் பாதுகாப்புக் குழுவில் தடுப்பதிகாரத்தையும் கொண்டுள்ளன. 2003ல் புஷ், ஐ.நா
ஈராக்மீது இராணுவ நடவடிக்கைக்கு ஒப்புதல் தீர்மானம் இயற்றத்தவறியதை ஒரு போலிக்காரணமாகக் காட்டி
ஒருதலைப்பட்சமாக போரை தொடக்கினார்.
ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகள் வாஷிங்டன் ஆணை பற்றி அதிகம் பேசாமலேயே
உள்ளன. ஜேர்மனியின் வெளியுறவு மந்திரி பிராங்க் வோல்டர் ஸ்ரெய்ன்மெர் வியாழனன்று ஈரானுக்கு எதிரான
கூடுதல் நடவடிக்கைகள் பற்றிய எந்த முடிவும் IAEA
கொடுத்துள்ள வினாக்களுக்கு ஈரான் கொடுக்கும் பதில்கள் பற்றிய மதிப்பீடு முடியும் வரை காத்திருக்க வேண்டும்
என்றார். ஜேர்மனிய நிறுவனங்கள் $5.7 பில்லியன் மதிப்புள்ள பொருட்களை ஈரானுக்கு கடந்த ஆண்டு ஏற்றுமதி
செய்துள்ளன; ஜேர்மனிய பொருளாதார அமைச்சரகம் தெஹ்ரானுக்கு $1.2 பில்லியன் ஏற்றுமதி கடன்
உறுதிமொழிகளை கொடுத்தது.
ஈரானின் புதிய அணுசக்தி பற்றிப் பேச்சுவார்த்தை நடத்துபவரான
Saeed Jalili,
அவருக்கு முன்பு பதவியில் இருந்த Ali Larijani
இருவரும் இவ்வாரம் ஐரோப்பிய ஒன்றியத்தின் வெளியுறவுக் கொள்கை இயக்குனர்
Jasvier Solana
உடன் ரோமில் இரண்டு நாட்கள் தெஹ்ரானின் அணுசக்தித் திட்டம் பற்றி விவாதித்தனர். புதன் அன்று
பேச்சுவார்த்தைகள் முடிந்தவுடன், ஈரானிய பேச்சுவார்த்தையாளர்கள் சொலனாவுடனும் இத்தாலிய பிரதம மந்திரி
ரோமனோ பிரோடியுடன் ஒரு கூட்டு செய்தியாளர் மாநாட்டில் ரோமில் பேசினர். இரு கட்சிகளும்
பேச்சுவார்த்தைகளை "ஆக்கபூர்வமானவை" என்று விவரித்தன; "பேச்சுவார்த்தை ஒன்றுதான் ஈரானின் அணுசக்தித்
திட்டம் பாதுகாப்புக் குழுவில் முடிவெடுப்பதற்கு முன் தீர்வு காண்பதற்கு ஒரே வழியாகும் என்றும் இத்தாலி
இவ்வழிவகையை ஊக்குவிக்கிறது" என்றும் பிரோடி கூறினார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகளுக்கு ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புட்டின்
கடுமையான எதிர்ப்பை கொடுத்துள்ளார். போர்த்துகலில் உச்சி மாநாடு ஒன்றில் ஐரோப்பிய ஒன்றியத்
தலைவர்களுடன் பேச்சுவார்த்தைகளுக்கு வந்திருந்த அவர் ஈரானுடைய அணுசக்தித்திட்டம் பற்றிய கருத்துவேறுபாடுகள்
பேச்சுவார்த்தைகள் மூலம் தீர்க்கப்பட வேண்டும் என்றும், வடகொரியாவில் பின்பற்றப்பட்ட தன்மையில் அவை
இருக்க வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
"நிலைமையை ஏன் மோசமாக்கி பொருளாதாரத்தடைகள், இராணுவ நடவடிக்கை
என்று அச்சுறுத்துவதின் மூலம் மேலே செல்ல முடியாத நிலைக்குக் கொண்டுவருகிறீர்கள்?" என்று புட்டின் கூறினார்.
புஷ்ஷை பற்றி மேலும் கூறும் வகையில், "ஒரு பைத்தியக்காரன், கையில் ரேசர் பிளேடை ஆட்டிய வகையில் சுற்றி
வருவது, நிலைமையை தீர்ப்பதற்கு சிறந்த வகை ஆகாது" என்றார்.
அமெரிக்க பொருளாதாரத் தடைகளை ஈரான் உதறித் தள்ளிவிட்டது. "மதிப்பிற்கு
உரிய ஈரானிய தேசத்திற்கும் எங்கள் சட்டபூர்வ அமைப்புக்களுக்கும் எதிராக அமெரிக்கா தொடர்ந்துள்ள
விரோதப்போக்குடைய கொள்கைகள் சர்வதேச விதிகளுக்கு எதிரானவை; அவற்றிற்கு மதிப்பு கிடையாது." என்று
வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித்தொடர்பாளர் மொகம்மது அலி ஹொசீனி
கூறினார். "இத்தகைய கேலிக்கூத்தான நடவடிக்கைகள்,
அமெரிக்கர்களை தாமே ஈராக்கில் ஏற்படுத்திக் கொண்டுவிட்ட நெருக்கடியில் இருந்து மீட்க முடியாதவை."
"ஈரானில் தனியார்மயமாக்கப்படல்" என்று துபாயில் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
நடத்திய மாநாடு ஒன்றில் பேசிய ஈரானின் வணிகர்கள், தொழில் அதிபர்கள் மற்றும் சுரங்கங்கள் மன்றத்தின்
தலைவரான மகம்மது நஹ்வன்டியன் பொருளாதாரத் தடைகள் "செலவினங்களை அதிகரிக்கக்கூடும்" என்றாலும்,
"ஈரானின் மற்ற நாடுகளுடனான மகத்தான வணிக உறவுகளை நிறுத்தாது, ஊறுபடுத்தாது" என்று கூறினார்.
ஆனால், பொருளாதாரத் தடைகளின் முக்கியநோக்கம் பொருளாதாரம் என்பதைவிட
அரசியலாகத்தான் இருக்கும் போலும். அழுத்தங்களை அதிகரிக்கும் வகையில், அவை அணுசக்தி பூசல் பற்றி
பேச்சுவார்த்தைகள் மூலம் வரும் எந்த முடிவும் ஏற்படாமல் கதவைத் தாளிடும் வகையில் இருப்பதுடன் அமெரிக்க
இராணுவ நடவடிக்கைக்கும் வழிவகுக்கிறது.
அவ்விதத்தில் அவை ஈரானுக்கு எதிரான பெருகிய முறையில் முறையாக வரும்
அச்சுறுத்தல்களுடன் இணைந்துள்ளது; கடந்த வாரம்கூட புஷ்ஷின் எச்சரிக்கை "முன்றாம் உலகப் போர்" பற்றி
இருந்தது; ஷெனி கடந்த ஞாயிறன்று, ஈரான் அதன் தற்போதைய போக்கை தொடர்ந்தால் "தீவிர விளைவுகளை
எதிர்கொள்ள நேரிடும்" என்றும் அமெரிக்கா "பயங்கரவாதத்திற்கு ஆதரவு கொடுக்கும் ஒரு நாடு தன்னுடைய
ஆக்கிரோஷ விழைவுகளை முடிக்கும் வரை வெறுமே பார்த்துக் கொண்டிருக்காது" என்றும் அச்சுறுத்தல் விட்டார்
ஈரான் மீதான அமெரிக்க போர்த் தயாரிப்புக்கள் பற்றிய புதிய சான்றுகள் எப்படி
கிட்டத்தட்ட $200 பில்லியன் பட்ஜேட் வேண்டுகோள், கடந்த திங்கள் காங்கிரசிற்கு அனுப்பப்பட்டது, ஈராக்
மற்றும் ஆப்கானிஸ்தானத்தில் போர் தொடரப்படுவதற்கான நிதியங்களில் இருந்தது என்பதின் மூலம்
வெளியாகியுள்ளது.
B-2 Stealth Bombers
குண்டு வீச்சு விமானத்தில் "நிலவறை தகர்க்கும்" (bunker-busting)
குண்டுகளை பொருத்துதலுக்கு கிட்டத்தட்ட $88 மில்லியன் அளிப்பதும் இதில் அடங்கியுள்ளது. சில சட்டமியற்றுபவர்கள்
மற்றும் காங்கிரசின் உதவியாளர்கள் இத்தகைய ஆயுதங்கள் அதிக பயனற்றவை என்றும் ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும்
நடக்கும் தற்போதைய எதிர்ப்புரட்சி நடவடிக்கைகளில் இவை பயன்படாது என்றும், குண்டுகள் ஒருவேளை ஈரானின்
நிலத்தடி அணுசக்தி வசதிகளைத் தாக்குவதற்கான நோக்கத்தை கொண்டிருந்திருக்கலாம் என்றும் சுட்டிக்
காட்டியுள்ளனர்.
புஷ் நிர்வாகம் மற்றொரு போருக்குத் தயாரிப்பு நடத்தி வருகையில், காங்கிரஸில்
இருக்கும் ஜனநாயகக் கட்சியினர் மீண்டும் விருப்பத்துடன் இதற்கு உடந்தை என்று வெளிவந்துள்ளனர். பொருளாதாரத்
தடைகளை நிர்வாகம் சுமத்தியுள்ளது உண்மையில் ஜனநாயகக் கட்சி தலைமையில் இருக்கும் மன்றத்தில் இயற்றப்பட்ட
ஒரு சட்டத்தில் இடம் பெற்றுள்ளது -- அதுவும் மிகப் பெரிய பெரும்பான்மையான 397-16 என்ற வாக்கில்; அது
ஈரானில் அணுவிசை தவிர மற்ற அமெரிக்க நிறுவனங்கள் வணிகம் செய்வதின்மீது பொருளாதாரத் தடைகளை
விதித்துள்ளது.
ஜனநாயகக் கட்சித் தலைவர்கள் இந்த நடவடிக்கைகள் ஈரானின் அணுவாயுதத்
திட்டங்களுக்கான நிதியங்களை குறைக்கும் நோக்கத்தை உடையவை என்று கூறினாலும், உண்மை நோக்கம்
வெளிப்படையானதுதான். ஈரான் சந்தையில் இருந்து முடக்கப்பட்டு வெளியேற்றப்பட்ட அமெரிக்க எண்ணெய்
நிறுவனங்கள் தங்கள் போட்டியாளர்களுக்கு எந்த நலன்களும் மறுக்கப்பட வேண்டும் என்றுதான் விரும்புகின்றன.
இறுதிப்பகுப்பாய்வில், அணுவாயுத அச்சுறுத்தல்கள், பயங்கரவாதம் ஆகியவை பற்றிய
பிரச்சாரங்கள் இருந்தபோதிலும், ஈரானுக்கு எதிரான ஒரு அமெரிக்கப் போர் பாரசீக வளைகுடாவில் இருக்கும்
மூலோபாய எண்ணெய் இருப்புக்களின்மீது அமெரிக்க முதலாளித்துவ மேலாதிக்கக் கட்டுப்பாட்டை
கொள்ளுவதற்காகத்தான் தொடங்கப்படும். |