World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

G7 meetings highlight deepening problems for US and world economy

அமெரிக்க, உலகப் பொருளாதாரங்களின் ஆழ்ந்த சிக்கல்களை G7 கூட்டங்கள் எடுத்துக்காட்டுகின்றன

By Nick Beams
23 October 2007

Back to screen version

கடந்த வெள்ளியன்று Dow Jones 360 புள்ளிகளுக்கும் மேலாக அல்லது 2.6 சதவிகிதம் வோல்ஸ்ட்ரீட்டில் சரிவுற்றது, குறைந்த பிணையுள்ள அடைமான கடன் மற்றும் கடன் நெருக்கடிகளால் தோற்றுவிக்கப்பட்ட பிரச்சினைகள் கடக்கப்பட்டுவிட்டன என்பதற்கு பதிலாக இப்பொழுதுதான் தொடங்குகின்றன என்ற அப்பட்டமான எச்சரிக்கையை கொடுத்தது. திங்களன்று சந்தை ஆனால் 45 புள்ளிகள்தான் சற்று உயர்ந்தது. இதை வோல்ஸ்ட்ரீட் "உற்சாகமற்ற தினம்" என்று விவரித்தது.

பங்குகளை விற்பதற்கு ஒரு காரணம், அமெரிக்க வளர்ச்சி குறையக்கூடும் என்பதாலும் பொருளாதாரம் ஒரு மந்த நிலைக்குக்கூட சரியலாம் என்பதாலும்தான். மிகப் பெரிய இயந்திர உற்பத்தியாளரான Caterpillar ஏற்கனவே அதைப் பொறுத்த வரையில் அமெரிக்கப் பொருளாதாரம் மந்த நிலையை அடைந்து விட்டது அல்லது அந்நிலைக்கு வெகு அருகில் உள்ளது என்று கூறியுள்ளது.

அனைத்து முக்கிய பொருளாதார செய்திகளும் அமெரிக்கப் பொருளாதாரம் ஒரு கீழ்நோக்கிய நிலைக்கு சென்று கொண்டிருக்கிறது என்ற கவலையை தெரிவித்துள்ளன. எண்ணெய் விலை ஒரு பீப்பாய்க்கு $90 ஆக சமீபத்திய நாட்களில் உயர்ந்துள்ளது; ஒரு பீப்பாய் $100 ஆக அதிக நாட்களாகாது என்ற முன்கணிப்பும் வந்துள்ளது.

அதே நேரத்தில், அமெரிக்கப் பொருளாதாரம் வீடுகள் விற்பனை வீழ்ச்சி அடைந்திருப்பதாலும் பெரும் பாதிப்பிற்கு உட்பட்டுள்ளது; அது இன்னும் மோசமாக வரவிருக்கும் மாதங்களில் போகக் கூடும். ஏனெனில் கூடுதலான மக்கள் தங்கள் அடைமானங்களில் பணம் செலுத்தாமல் போகும் நிலைமை கட்டாய விற்பனை, குறைந்த விலைகள் என்பவற்றிற்கு தள்ளிவிடும்.

Bloomberg இல் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று ஒரு மூத்த வோல்ஸ்ட்ரீட் ஆய்வாளர் Ivy Zelman 2009க்கு முன்னால் அமெரிக்க வீட்டு சந்தை மீள்வது மிகவும் கடினமானது என்று எச்சரிக்கை மதிப்பீட்டை தந்துள்ளார் என்று மேற்கோளிட்டுள்ளது.

மந்த நிலை வருவதற்கு 50 முதல் 60 சதவிகித வாய்ப்பு உள்ளது என்றும் தான் "இந்த அளவிற்கு சந்தை மோசமாக இருந்தை பார்த்ததில்லை என்றும் Ivy Zelman கூறினார். சிறிது காலமாகவே நெருக்கடி பற்றி Ivy Zelman எச்சரித்துள்ளார்; ஏனெனில் வீட்டு விலைகள் தனியார் வருமான உயர்வை விட மிக அதிகமாகும் போக்கைக் கொண்டிருந்தது; இதையொட்டி வீடுகளின் விலைகள் 16ல் இருந்து 22 சதவிகிதம் வீழ்ந்தால் நிலைமை இன்னும் மோசமாகக் கூடும் என்றும் அவர் கூறினார்.

இந்தப் பின்னணியில் ஆகஸ்ட்டில் நிதிய நெருக்கடி வெடித்தபின் முதல் தடவையாக எழுவர் குழுவின் (Group of Seven- G7) நிதி மந்திரிகளும் மத்திய வங்கியாளர்களும் வார இறுதியில் வாஷிங்டனில் கூடியபோது உலகம் முழுவதும் பெருகி வரும் பொருளாதார, நிதிய நெருக்கடிகளை சந்திப்பதற்கான நடவடிக்கைகளை முன்வைக்க முடியாதுபோனது. ஆனால் கூட்டமோ பெரும் சக்திகளுக்கு இடையே இருக்கும் பிளவுகள் ஆழமடைந்துள்ளன என்பதைத்தான் நிரூபிக்க உதவியது.

பிரான்ஸும் ஜேர்மனியும், இறுதிக் கூட்டறிக்கை டாலர் மதிப்பின் வீழ்ச்சியால் ஐரோப்பா எதிர்கொள்ளும் பிரச்சினைகளை பற்றிக் குறிப்பிட வேண்டும் என்று விரும்பின; ஆனால் இந்தத் திட்டம் அமெரிக்க கருவூல செயலாளர் ஹென்ரி போல்சனால் தடுப்பதிகாரத்தை பயன்படுத்தித் தள்ளப்பட்டுவிட்டது. மாறாக, கூட்டம் சீனா தன்னுடைய மக்கள் நாணயமான renminbi ஐ அமெரிக்க டாலருக்கு எதிராக உயர்த்திக் கொள்ள வேண்டும் என்ற எச்சரிக்கையை விடுத்ததுடன் நிறுத்திக் கொண்டது.

இத்தகைய செயலற்ற தன்மை வெளிப்படுத்தப்பட்டதை லண்டனை தளமாக கொண்ட பைனான்சியல் டைம்ஸில் செவ்வாயன்று கடுமையான தலையங்கத்தை வெளியிட்டது.

"நடவடிக்கைகள் எடுக்கப்பட முடியாது என்றால் வலுவான கருத்துக்கள் மிகப் பாதுகாப்பானவைதான். வாஷிங்டனில் தாங்கள் நடத்திய கூட்டங்களில் ஏழு நாடுகளின் நிதி மந்திரிகள் மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆளுனர்கள் டாலருக்கு ஆதரவாக எதையும் கூறவில்லை; அதைச் செய்யக்கூடிய அதிகாரம் அவர்களுக்கு ஓரளவு இருந்திருக்கும்; ஆனால் சீனாவின் renminbi உடனடியாக உயர்த்தப்பட வேண்டும் என்று கோரினர்; ஆனால் அதற்கு அவர்களிடம் அதிகாரம் ஏதும் இல்லை. இது சர்வதேச நிதிய முறையில் முடக்கம் ஏற்பட்டு விட்டதை நிரூபிக்கிறது" என்று தலையங்கம் தொடங்கியது.

யூரோவிற்கு எதிராக டாலரின் சரிவு (இப்பொழுது யூரோ வாடிக்கையாக $1.43 அதற்கும் மேலாக என்று உள்ளது) ஐரோப்பிய ஏற்றுமதிச் சந்தைகளை அச்சுறுத்திக் கொண்டிருப்பதுடன் இன்னும் டாலரின் மதிப்பு குறைவாகப் போனால் பெரும்பாதிப்பை ஏற்படுத்தும். இதற்கிடையில் அமெரிக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க விரும்பவில்லை; ஏனெனில் டாலரின் சரிவு அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு உலகச் சந்தைகளில் உயர்வைக் கொடுத்திருக்கிறது.

ஆனால் இந்தக் கொள்கை அமெரிக்க நிதிய இருப்புக்களில் முதலீடு செய்துள்ள வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு பெரும் பின்விளைவுகளை ஏற்படுத்தக் கூடும்; ஏனெனில் அவர்கள் தொடர்ந்து தங்கள் டாலர் இருப்புக்களில் இழப்புக்கள் ஏற்படுவதை பொறுத்துக் கொள்ள முடியாது; இந்த இருப்புக்களை விற்றுவிடத்தான் அவர்கள் முயல்வர். அமெரிக்க நிதிய முறையே கிட்டத்தட்ட நாளொன்றுக்கு $2 பில்லியன் உலகின் மற்ற பகுதிகளில் இருந்து உள்ளே வரவேண்டும் என்ற நிலையில் உள்ளது; டாலர் இருப்புக்கள் விற்பது என்ற வழிவகை "ஒரு கெட்ட கனா காட்சியை" போல் ஒரு வழிவகையை ஏற்படுத்திவிடும்; டாலரை மூடுவது என்பது வட்டி விகிதங்களை உயர்த்துதல் என்று ஆகும்; அது அமெரிக்க பொருளாதாரத்தில் ஒரு பெருமந்த நிலையை ஏற்படுத்திவிடும்.

ஞாயிறன்று நடத்திய உரை ஒன்றில் முன்னாள் அமெரிக்க மத்திய வங்கி தலைவரான அலன் கிரின்ஸ்பான் டாலரின் சரிவு அமெரிக்கப் பத்திரங்களை வாங்குவதில் பெருகிய விருப்பமின்மை வெளிநாட்டினரிடையே இருப்பதைப் பிரதிபலிக்கிறது என்று குறிப்பிட்டார்.

"எந்த அளவிற்கு இந்தக் கடமைகளை வெளிநாட்டினர் கொள்ளலாம் என்பதற்கு ஒரு வரம்பு உள்ளது" என்று கூறிய அவர் டாலரின் வீழ்ச்சி 1997ல் இருந்த மிகக் குறைவான அளவிற்கு கிட்டத்தில் இருக்கிறது என்பதையும் சுட்டிக் காட்டி, "இது அந்த வரம்பை அமெரிக்கா நெருங்கிக் கொண்டிருக்கின்றது என்பதற்கான அடையாளம்" என்றும் கூறினார்.

கிரீன்ஸ்பானின் எச்சரிக்கை அமெரிக்க கருவூலம் சர்வதேச முதலீட்டாளர்கள் மிக அதிக அளவு அமெரிக்க நிதிய இருப்புக்களை ஆகஸ்ட்டில் விற்றுவிட்டனர் என்று தகவல் கொடுத்ததை அடுத்து வெளிவந்தது ஆகும். அமெரிக்கப் பங்குகள், பத்திரங்கள் மற்றும் பலவித நிதிய ஆவணங்களில் வெளிநாட்டினரின் கொண்டிருக்கும் இருப்புக்கள் அம்மாதத்தில் $60.3 பில்லியன் குறைந்து விட்டது; ஜூலையிலோ அது $19.2 பில்லியன் அதிகமாகக் கொண்டிருந்தது.

இந்த ஆபத்துக்கள் இன்னும் கூடுதலான முறையில் சர்வதேச நாணய நிதியத்தில் இருந்து வெளியேறும் இயக்குனர் Rodrigo de Rato வால் அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளன: "ஏதேனும் தூண்டுதலில் அல்லது தானகவே டாலர் திடீரெனச் சரிவுற்றால், டாலர் சொத்துக்களில் நம்பிக்கை இழப்பு ஏற்படும் என்னும் அபாயங்கள் உள்ளன." என்று அவர் கூறினார்.

G7 கூட்டங்கள் கடந்த தசாப்தங்களில் சிறிது சிறிதாக வளர்ந்து இப்பொழுது மேல்மட்டத்திற்கு வந்து விட்ட தொடர்ச்சியான பெருகிய பல பொருளாதாரப் பிரச்சினைகளின் ஆதிக்கத்திற்கு உட்பட்டிருந்தன. ஆனால் அதிகரித்தளவில் ஒரு ஒருங்கிணைந்த எதிர்கொள்ளுதல் தேவை என்ற நேரத்தில் பெருகிய அமைதியின்மை, சோர்வு ஆகிய உணர்வுகள் இந்நேரத்தில் வந்துள்ளது; இதையொட்டி சர்வதேச நாணய நிதியம் உட்பூசல்களின் விளைவாக தேவையான கொள்கைகளை வகுக்க முடியாமல் உள்ளது.

பைனான்சியில் டைம்ஸில் உள்ள அறிக்கை ஒன்று மத்திய வங்கியாளர்கள் சொந்த முறையில் தற்போதைய கடன் நெருக்கடி "மிகப் பெரிய வணிக சமசீரற்ற நிலைகளின் விளைவில் எழக்கூடிய ஒழுங்கற்ற நிகழ்வுகளில் முதலாவதுதான் என்றும் அத்தகைய சமசீரற்ற தன்மை கடந்த தசாப்தத்தில் வெளிப்பட்டுவிட்டது. வட்டிவிகிதத்தை செயற்கையாக குறைவாக உலகம் முழுவதும் வைத்து பொறுப்பற்ற முறையில் கடன் கொடுப்பது ஊக்குவிக்கப்பட்டது" என்றும் அவர்கள் கருதுகின்றனர் என குறிப்பிட்டது.

பைனான்சியில் டைம்ஸின்படி, பதவிவிலகிச்செல்லும் கனேடிய மத்திய வங்கியின் ஆளுனர் டேவிட் டாட்ஜின் கருத்துக்கள் மற்றவர்கள் திரைக்குப் பின்னால் பேசுவதை பகிரங்கமாக வெளிப்படுத்துவதாக தெரிகிறது.

"நிதியத்தின் திறன், திறமைகள் ஆகியவை உலகச் சமசீரற்ற தன்மையை எதிர்கொள்ளும் தேவையைத் துல்லியமாக நாம் பயன்படுத்த வேண்டிய நேரம் இதுதான்" என்று டாட்ஜ் கூறினார். ஆனால் சர்வதேச நாணய நிதியத்தினுள் இருக்கும் பிளவுகளினால் தற்போதைய கொள்கை தொடர்பான ஒரு பொதுக் கருத்து ஒன்றிணைந்துவர வேண்டும் என்பது குறைந்து விட்டது.

"சமச்சீரற்ற நிலைகள் நீடித்தால், மிகக் குழப்பம் தரும் முடிவை சந்திக்கும் அபாயத்தை நாம் எதிர்கொள்ளுகிறோம்" என்று அவர் எச்சரித்தார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved