WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French unions vote to end transport strikes
பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தை முடிக்க வாக்களிக்கின்றன
By Alex Lantier
24 October 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
அக்டோபர் 22ம் தேதி பாரிஸ் புறநகரான
Montreuil இல்
CGT
தொழிற்சங்க தலைமையகத்தில் கூடிய தொழிற்சங்க அலுவலர்கள், படிப்படியாக சிறப்பு திட்டங்கள் (Régime
Spéciaux) அகற்றப்படுவதற்கு எதிராக திட்டமிட்டப்பட்டுள்ள
வேலைநிறுத்த அழைப்புக்களை குறைந்தபட்சம் அக்டோபர் 31 வரை நிறுத்திவைக்கப்பட வேண்டும் என்று வாக்களித்துள்ளனர்.
இத்தகைய வேலைநிறுத்தங்கள் நவம்பர் நடுப்பகுதி வரை நடக்கப்போலதில்லை. இந்த முடிவு வேலைநிறுத்த இயக்கம்
மேலும் பரவுதலை தடுக்க வேண்டும் என்ற பிரெஞ்சுத் தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் உறுதியான முயற்சிகளுக்கு
சிகரம் வைத்தாற்போல் உள்ளது.
அக்டோபர் 18ம் தேதி, தேசிய இரயில்வே நிறுவனத்தின் (SNCF)
தொழிலாளர்களில் 75 சதவிகிதத்தினரும், பாரிஸ் பொதுப்போக்குவரத்து
RATP
தொழிலாளர்களில் 60 சதவிகிதத்தினரும் பிரான்சை பெருமளவில் முடக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.
சக்தி துறைத் தொழிலாளர்களில் பெரும் பிரிவினரும் --Electricite
de France, Gaz de France நிர்வாகத்தின்படி 43
சதவிகிதம், CGT
யின்படி 80 சதவிகிதம்-- வேலைநிறுத்தத்தை மேற்கொண்டனர். இந்தப் பெரிய வேலைநிறுத்தங்கள் 1995 வேலைநிறுத்தங்களை
விட அதிகம் பேர் பங்கு பெற்றவை ஆகும்; அந்த வேலைநிறுத்தங்கள் அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த அலன்
யூப்பேயை சிறப்புத் திட்ட சலுகைககள் பலவற்றை அழிக்க முற்பட்ட அவருடைய ஓய்வூதிய சீர்திருத்தச் சட்டத்தின்
பல விதிகளை அகற்றுமாறு கட்டாயப்படுத்தியது.
ஆனால் திங்கள் கிழமை வேலைநிறுத்தங்கள் பெரும்பாலும் குறைந்துவிட்டன. பாரிஸ்
புறநகர இரயில் வேலைநிறுத்த தொடர்ச்சியானது,
SUD-RATP தொழிற்சங்கக் கூட்டமைப்பு புதனன்று நீடித்த
வேலைநிறுத்தங்களுக்கான அதன் அழைப்பை முடிவுக்குக் கொண்டு வரும் என்று அறிவித்த பின்னர் குறைவாகிவிடும் என்று
எதிர்பார்க்கப்படுகிறது. ஒரு சில நாட்களுள் மிகச் சக்திவாய்ந்த வகையில் நூறாயிரக்கணக்கான தொழிலாளர்கள்
திரட்டப்பட்டது காற்றில் கரைந்துவிட்டது.
தொழிற்சங்கங்களும் வேலைநிறுத்த இயக்கமும்
ஒரு அரசியல்ரீதியாக சுயாதீனமான தொழிலாளர்கள் இயக்கத் தலைமை இல்லாத
நிலையில், தொழிற்சங்கம் எப்படி தொழிலாள வர்க்கத்தின் போராட்டத்தை நெரிக்க முடியும் என்பதற்கு சிறந்த
நிரூபணமாக இந்நிகழ்வுகள் உள்ளன. தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் முக்கிய இலக்குகள் வேலைநிறுத்தங்களுக்கு
ஊக்கம் கொடுக்காமல் இருப்பது, அரசியல் ரீதியாக அவர்களை மற்ற தொழிலாளர்களிடம் இருந்து பிரித்து
வைப்பது, அரசாங்கத்திற்கு எதிராக அரசியல் போராட்டம் எதையும் தடுப்பது என்பதாகும்; இத்துடன் இது
வேலைநிறுத்த நாட்கள் முழுவதும் அரசாங்கத்துடன் நெருக்கமான தொடர்பைத்தான் கொண்டிருக்கிறது.
மே 2007 தொடக்கத்தில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி
தேர்ந்தெடுக்கப்பட்டதில் இருந்து தொழிற்சங்கங்களின் அடிப்படை அரசியல் மூலோபாயம் இவ்வகையில்தான் இருந்து
வருகிறது. கோடை காலத்தில் சார்க்கோசி முக்கிய தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களான
CGT, CFDT, FO
போன்றவற்றின் தலைமைகளை பலமுறையும் சந்தித்து,
CFDT தலைவர்
François Chérèque,
மற்றும் FO
தலைவர் Jean-Claude Mailly
ஆகியோருடன் சிறப்பு உணவு விடுதிகளில் விருந்து உட்கொண்டதாகவும் ஒப்புக் கொண்டுள்ளனர்.
கோடை காலத்தில் பொதுத்துறை தொழிலாளர்களுக்கு எதிரான சார்க்கோசியின்
அதி ஆத்திரமூட்டல் கருத்துக்கள் --குறிப்பாக பொதுத்துறையில் 22,000க்கும் மேலான வேலைகள் அழிப்பு மற்றும்
போக்குவரத்து வேலைநிறுத்தங்களின்போது "குறைந்தபட்ச சேவையை" கட்டாயப்படுத்தும் சட்டங்கள்-- ஆகியவை
குறைகளை சந்தித்தனவே அன்றி, வேலைநிறுத்தங்களை சந்திக்கவில்லை.
தற்போதைய மக்கள் அணிதிரள்வு, செப்டம்பர் 9ம் தேதி பிரதம மந்திரி
பிரான்சுவா பிய்யோன் இன் சிறப்புத் திட்ட (Régime
Spéciaux) சலுகைகளுக்கு ஒரே சீர்திருத்தத்தின் மூலம்
முற்றுப்புள்ளி வைத்துவிட வேண்டும் என்று கூறியதனால் தொழிற்சங்கத்தால் நிர்பந்திக்கப்பட்டதாகும். பிய்யோன்,
"அதைச் செய்வதற்கு தயாராக" இருந்தார் என்று வலியுறுத்தினார், அது எளிதானது." சார்க்கோசியும்
பிய்யோனும் பின்னர் ஓய்வுதியங்கள் குறைப்பிற்கு ஆதரவைத் தேடும் முயற்சியில் பொதுப்பணித்துறை தொழிலாளர்களின்
ஓய்வூதியங்கள் விவசாயிகளின் ஓய்வூதியங்களைவிட அதிகமாக இருக்கின்றன என்று சொற்ஜாலத்துடன் தாக்கினர்.
ஆயினும், இது பொதுத்துறை தொழிலாளர் தொகுப்பினரிடம் சினத்தை அதிகப்படுத்தியதால் இது அவர்கள்மீதே
திரும்பப்பாய்ந்தது.
இந்த அறிவிப்புக்களுக்கு பின்னரும்கூட, தொழிற்சங்கத் தலைவர்கள் அரசாங்கத்தின்
கொள்கை வழிக்கு தொடர்ந்து ஆதரவு கொடுத்தனர்.
CFDT இன் தலைவரான
François Chérèque,
"சிறப்புத் திட்டத்தை நாம் சீர்திருத்தவில்லை என்றால், அவை திவாலாகிவிடும், ஓய்வூதியங்கள் அளிக்கப்பட
மாட்டாது" என்று கூறினார். CGT
யின் ஓய்வூதிய பேரம் பேசுபவரான
Jean-Christophe Le Duigou "ஒரு நிறுவனத்துடன் ஒரு
நேரத்தில் பேச வேண்டும், ஒரு தொழிற்துறையுடன் ஒரு நேரத்தில் பேச வேண்டும்." என்று
பேச்சுவார்த்தைகளுக்கு அழைப்பு விடுத்தார். அவ்விதத்தில் சீர்திருத்தங்கள் ஏற்கப்பட்டுவிடும் என்றும் அது அரசியல்
அளவில் வெடிப்புத் தன்மையுடைய ஓய்வூதிய குறைப்பை சட்டம் அல்லது ஆணை முலம் செயல்படுத்துவதை தவிர்க்கும்
என்றும் நம்பினார்.
செப்டம்பர் 18 சார்க்கோசி தன்னுடைய உரையில் பரந்த சமூகச் செலவின
குறைப்புக்கள் பற்றிய திட்டங்களை அறிவித்த பின்னரும்கூட, தொழிற்சங்கங்கள் அரசாங்கத்தின் வழிவகைக்கு
தொடர்ந்து ஆதரவைக் கொடுத்தன. CFDT
இன் ஓய்வூதியங்கள் பேரம் பேசுபவரான Jean Louis
Malys கம்யூனிஸ்ட் கட்சி நாளேடான
L'Humanite
இடம் செப்டம்பர் 29 அன்று "சிறப்புத் திட்ட சலுகைகளில் இருக்கும் நிலை தொடரப்பட வேண்டும் என்பது
நினைத்தும் பார்க்க முடியாதது" என்றார்.
ஆனால், இரயில்வே தொழிலாளர் கூட்டமைப்புக்கள் அக்டோபர் 1ம் தேதி கூடி
அக்டோபர் நடுப்பகுதியில் இருந்து வேலைநிறுத்த நடவடிக்கைகள் எடுப்பது என முடிவெடுத்தன; அக்டோபர் 13
அன்று "நடவடிக்கை தினம்" என்றும் அக்டோபர் 18 அன்று ஒரு நாள் வேலைநிறுத்தம்
என்றும் திட்டமிடப்பட்டது.
இரயில்வேக்களின் மிகப் பெரிய தொழிற்சங்கமான
CGT பின்னர்
வேலைநிறுத்ததை மட்டுப்படுத்தும் வகையில் முக்கிய பங்கை எடுத்துக் கொண்டது; சார்க்கோசியின் பெரும்
செல்வாக்கு என்பதன் அர்த்தம் அவருடைய சீர்திருத்தங்களின் ஒட்டுமொத்த திசைவழியையும் எதிர்ப்பதை அரசியல்
ரீதியாக நிலைநிறுத்த முடியாது என்ற கருத்தை வளர்த்தது ஆகும். அக்டோபர் 13 அன்று
Journal du Dimanche
இனால் 1995 வேலைநிறுத்தங்கள் போன்றவை நடக்குமா
என வினாவப்பட்டதற்கு, CGT
இன் இரயில் தொழிற்சங்கத் தலைவர் Dider Le
Reste கூறினார்: "ஒரு புதிய சமூகமும் மாறிய பொதுக்
கருத்தும் உள்ள வேறு பின்னணியில் நாம் உள்ளோம்." ஆனால், "தொழிலாளர்கள் மிக வலுவாக தங்கள்
நிலைப்பாட்டை வேலைநிறுத்தங்களின்போது வெளிப்படுத்துவர்" என்ற நம்பிக்கையையும் தெரிவித்தார்.
அக்டோபர் 18 வேலநிறுத்தத்தை முடிவற்றதாக்குவதற்ககான அழுத்தத்தின்கீழ்
CGT
விரைவில் வந்தது - பிற தொழிற்சங்கங்கள் மூலம், குறிப்பாக
SUD-Rail
என்னும் இரயில்வேக்களின் இரண்டாம் மிகப் பெரிய தொழிற்சங்கத்தின் மூலம் அழுத்தத்திற்கு வந்தது.
Liberation
உடன் அக்டோபர் 10 பேட்டி கண்டதில், CGT
தலைவர் பேர்னார்ட் திபோ முடிவற்ற வேலைநிறுத்தத்திற்கு வாதிடுபவர்கள் "போதிய அனுபவம் அற்றவர்கள்"
என்று குறை கூறினார். CGT
அலுவலர்கள், 24 மணி நேரத்திற்கு மேல் நீடிக்கும் வேலைநிறுத்தத்திற்கு எதிராக மக்கள் கருத்து திரும்பும் என்று
கூறினர்.
அக்டோபர் 18ல் தொடங்கிய வேலைநிறுத்தங்களில்,
CGT
வேலைநிறுத்தம் பரவாமல் இருக்கும் வகையில், மட்டுப்படுத்தப்பட்ட தன்மையுடையதாக இருப்பதில் உறுதியாக
இருந்தது. அதிலும் குறிப்பாக பெரிய நகர மையங்களான பாரிஸ், லியோன், மார்சைய் போன்றவற்றில் இரயில்
தொழிலாளர்கள், CGT
உறுப்பினர்கள் உட்பட, அக்டோபர் 18 அன்று வேலைநிறுத்தங்கள் தொடர வேண்டும் என்று வாக்களித்தனர்.
CGT
அதிகாரத்துவம் இந்த தொழிலாளர்களின் கூட்டங்களை புறக்கணித்தது.
இதுவரை காலவரையற்ற வேலைநிறுத்ததிற்கு அழைப்பு கொடுத்திருந்த
FGAAC இரயில்
டிரைவர்கள் தொழிற்சங்கம் வெள்ளியன்று அரசாங்கத்துடன் ஒப்பந்தைத்தை பேசிமுடித்து வேலைநிறுத்தத்தில் இருந்து
விலகியது. பழமைவாத நாளேடான Le Figaro,
"SNCF
போக்குவரத்தில் முன்னேற்றம் என்பது FGAAC
வேலைநிறுத்த இயக்கத்தில் இருந்து வெளியேறியதால்தான் முடிந்தது" என்று எழுதியது. இதன்பின்
CGT, ்
FGAAC ஐ அரசாங்கத்துடன் "பின்புற வழியாக விவாதங்கள்"
கொண்டதற்காக பாசாங்குத்தனமான கண்டனங்களை வெளியிட்டது.
பழமைவாத நிதிய நாளேடான
Les Echos
குறிப்பிட்டது: "CGT
ஐ பொறுத்த வரையில் நிலைமை சங்கடமாயிற்று. "பின்புற விவாதம்" பற்றி வியப்படைந்ததாக அது பாசாங்கு
செய்தது; FGAAC
வெளியேறியது மட்டுப்படுத்தப்பட்ட வேலைநிறுத்தத்திற்கான இதன் திட்டங்களை "காப்பாற்றியது" என்பதால் இது
இலாபமும் அடைந்தது." சுருங்கக் கூறின், FGAAC
இன் தலைமையின் காட்டிக் கொடுப்பு, CGT
ஐ வேலைநிறுத்தத்தை முடிக்குமாறு தொழிலாளர்களை கட்டாயப்படுத்த
வைத்தது.
அக்டோபர் 22
Montreuil TM
CGT
தலைமையகத்தில் நடந்த கூட்டம் அனைத்து அரசியல் நோக்கர்களுக்கும் தெளிவாக இருந்ததை வகைப்படுத்தித்தான்
கூறியது --எட்டு இரயில் தொழிற்சங்க கூட்டமைப்புக்களின் தலைவர்களும் வேலைநிறுத்ததிற்கு அழைப்பு கொடுப்பதை
விரும்பவில்லை; ஏனெனில் அவை தங்கள் கட்டுப்பாட்டை விட்டு விரைவில் விஞ்சிவிடும் என்று பெரிதும் அஞ்சினர்.
தொழிலாளர்கள் மீது இறுதி அவமதிப்புக்கள் காட்டுவது
CFDT இன்
Chérèque
இடம் விடப்பட்டது; ஒரு TF1 TV
பேட்டியாளரிடம் அவர் கூறினார்: "இந்தச் சொற்றொடருக்காக மன்னிக்கவும், இன்று எந்தக் காரணமும்
இல்லாமல் நாம் ஒவ்வொருவர் மீதும் சிறுநீர் கழிக்கிறோம்; பல்லாயிரக்கணக்கான மக்கள் வேலைக்கு போவதை
தடுத்து அவர்களுடைய வாழ்க்கையை துன்பமானதாக்குகிறோம்; அப்படியிருக்க, நாம் ஐக்கியப்பட்டால் வலுவாக
இருப்போம்." இந்த "ஐக்கியம்" CFDT
உடன் ஐக்கியம் என்ற பொருளைத்தரும்; வேலைநிறுத்ததின்போது அது சார்க்கோசியின் பிற்போக்கு
சீர்திருத்தங்களுடன் ஒட்டுப்போடுவதற்கு அவருடன் அதிக பேச்சுவார்த்தைகள் நடத்தவேண்டும் என்று அழைப்பு
விடுத்தது.
சார்கோசியின் "சட்டரீதியானதன்மை"
ஒரு தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி என்னும் முறையில் சார்க்கோசியின்
"சட்டரீதியானதன்மை" பற்றி சமீபத்தில் அதிகம் பேசப்படுகிறது. அக்டோபர் 17
Le Monde
உடன் நடத்திய பேட்டியில்
CGT தலைவர்
திபோ,
"எவரும் எதிர்த்து வாதிடாத ஒரு சட்டரீதியானதன்மையை" சார்க்கோசி கொண்டுள்ளார் என்றும், வேலைநிறுத்தம்
"ஒரு அரசியல் வேலைநிறுத்தம் அல்ல" என்பதால், இது "தொழிற்சங்கங்கள் தங்கள் பணியை கைவிட வேண்டும்"
என்ற பொருளைத் தராது என்றார்.
உண்மையில், நூறாயிரக்கணக்கான இரயில்வே ஊழியர்கள், ஆற்றல் துறை
தொழிலாளர்கள், பொதுத் துறைத் தொழிலாளர்கள் ஆகியோர் சார்க்கோசியின் சட்டரீதியானதன்மையை
நேரடியாக எதிர்க்கும் வகையில் அவருடைய அரசாங்கத்தின் சமூகக் கொள்கைகளுக்கு எதிராக வேலைநிறுத்தம்
செய்துள்ளனர். மேலும் அக்டோபர் 18ம் தேதி இது புதிய பாசிச தேசிய முன்னணியின் தலைவரான
Jean-Marie Le Pen
ஆலும் அங்கீகரிக்கப்பட்டது; அவர் "தடுக்கப்பட வேண்டிய, அரசியல் வேலைநிறுத்தத்திற்காக பழைமைத் தன்மை
மிகுந்த சோசலிஸ்ட் தொழிற்சங்கங்களை" கண்டித்தார்.
பழமைவாதி மற்றும் திராணியற்ற சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரான்சில் உள்ள முழு
இடது ஆகியவற்றுடனான பரந்தளவிலான பெருகிய வெறுப்பிலிருந்து, தானாகவே சார்க்கோசி
தேர்ந்தெடுக்கப்பட்டார். அனைத்து மக்களுக்கும் அனைத்தும் என தேர்தல் காலத்தில் சார்க்கோசி
உறுதியளித்தார்; ஆனால் மக்களின் பரந்த அடுக்குகள் தங்களுடைய வறுமை நிலைக்கோ பிற தொழிலாளர்களின்
வறுமைக்காகவோ, தங்கள் அடிப்படைச் சமூக உரிமைகள் அழிக்கப்படுவதற்காகவோ வாக்களிக்கவில்லை.
வரலாற்று ரீதியாக பிரெஞ்சுத் தொழிலாளர்களுக்கு ஏற்படுத்தப்பட்டுள்ள நலன்கள் மற்றும் நிலைமைகளை
அழிப்பதற்கான உத்தரவு ஆணை எதையும் சார்க்கோசி பெறவில்லை. ஓர் உறுதியான போராட்டம் மக்கள்
அனைவருக்கும் உற்ற தலைமையை கொடுக்கும் மற்றும் அது உண்மையில் ஆட்சி எப்படி தனிமைப்பட்டுள்ளது என்பதையும்
காட்டும். இதைத்தான் எல்லாவற்றிற்கும் மேலாக CGT,
கம்யூனிஸ்ட் கட்சி
ஸ்ராலினிஸ்ட்டுக்களும் மற்ற தொழிற்சங்கங்களும் தவிர்க்க
விரும்புகின்றன.
பிரெஞ்சு செய்தி ஊடகம் பெரும்பான்மையான பிரெஞ்சு மக்கள் (55 சதவிகிதத்தினர்)
வேலைநிறுத்தங்கள் "நியாயமானவை" என நினைக்கவில்லை என்ற கண்டுபிடிப்பை கருத்துக் கணிப்பில் வெளிப்படுத்தியுள்ளன.
ஆனால் பிற கருத்துக் கணிப்பாளர்ள் 54 சதவிகித மக்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டவர்களுக்கு "ஆதரவு அல்லது
பரிவு உணர்வு" இருப்பதாக கண்டறிந்துள்ளனர். இந்த புதிர், கருத்துக் கணிப்புக்களில் இருக்கும் சொற்களின் வேறுபாடுகளினால்
விளக்கப்படுகிறது. உண்மையில் பிரெஞ்சு மக்கள் பல முறையும் 1995, 2003, 2006 என்று அரசியல் வேலைநிறுத்தங்களுக்கு
பெரும் ஆதரவு கொடுத்துள்ளனர்.
பிரெஞ்சு உத்தியோகபூர்வ "இடதின்" பொறிவு, மற்றும் சார்க்கோசியின் சமூகச் செலவீன
வெட்டுக்களின் பின்னே பிரெஞ்சு ஆளும் உயரடுக்கு கிட்டத்தட்ட முழு ஐக்கியத்தை கொண்டிருப்பதாலும் குறிக்கப்படும்
தற்போதைய அரசியல் நிலைமையானது, மக்களுடைய நனவில் அதன் தாக்கங்களை விடுவதில் தோல்வியுறவில்லை.
ஆனால் இது தொழிற்சங்கவாதிகளின் முன்னோக்கின் திவால்தன்மையைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது -
சார்க்கோசியின் வெட்டுக்களுக்கு எதிரான போராட்டம் உழைக்கும் மக்களின் பரந்த அடுக்குகள் அணிதிரட்டப்படுவதற்கு
ஒரு வெளிப்படையான அரசியல் அழைப்பை இப்பொழுது அவசியமானதாக்குகிறது.
பிரான்சில் தொழிலாளர்களுக்கான உண்மையான ஆபத்து போக்குவரத்து வேலைநிறுத்தங்களின்
போது பல நாட்கள் தங்கள் பணியிடங்களுக்கு காலதாமதமாக செல்வதால் பாதிக்கப்படுவர் என்பதில் இல்லை.
அவர்களின் வாழ்க்கைத் தரங்கள் மீதாக தாக்குதல்களை சார்கோசி வெற்றிகரமாக நடத்திவிடுவார் என்பது --
உதாரணமாக, 2008 நகரசபை தேர்தல்களுக்கு பின்னர் ஓய்வுதியக் குறைப்புக்கள் என்பது (தன்னுடைய
செப்டம்பர் 18 உரையில் சார்க்கோசி வெளிப்படையாக ஒப்புக் கொண்டுள்ளபடி), தற்போதைய சிறப்பு திட்ட
சலுகை வெட்டு ஒரு முன்னோடிதான் என்பது --தொழிலாளர்களை இன்னும் கூடுதலான வகையில் வெளியே
ஆக்கிரோஷமான முறையில் போர்களை தொடக்குவதில்தான் இழுத்துவிடும்.
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் சூழ்ச்சிக்கையாளல்கள் தற்போதைய இரயில்
வேலைநிறுத்தங்களை முன்னேறவிடாமல் தடுத்துவிட்டாலும், மேலும் பல போராட்டங்கள் இருக்கின்றன.
தொழிலாளர்கள் இன்றைய போராட்டங்களில் இருந்து ஒரு படிப்பினையை பெறுதல் அவசியமாகும்; எல்லாவற்றிற்கும்
மேலாக ஒரு சோசலிச அரசியல் நோக்குநிலை மற்றும் தொழிற்சங்கங்களுடன் ஒரு உடைவு ஆகியவை வரவிருக்கும்
போராட்டங்கள் வெற்றியடைவதற்கு மிகவும் அவசியமானதாகும். |