World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
As General Motors contract vote proceeds, UAW prepares deeper concessions at Chrysler ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்தத்தின்மீது வாக்கெடுப்பு நடைபெறுகையில், ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கிறைஸ்லருக்காக ஆழ்ந்த விட்டுக்கொடுப்புகளை தயாரிக்கிறது By Jerry White ஒரு புதிய நான்காண்டு தொழில் உடன்பாடு பற்றி ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கும் (UAW) கிறைஸ்லர் LLC இற்கும் இடையேயான பேரப்பேச்சுவார்த்தைகள் செவ்வாய்கிழமைவரை தொடர்ந்தன. ஒரு உடன்பாடு காண்பதில் முன்னேற்றம் ஏதும் ஏற்படவில்லை என்றால் அமெரிக்காவின் மூன்றாம் பெரிய கார்த் தயாரிப்பாளர் நிறுவனத்திடம் புதனன்று காலை 11 மணிக்கு வேலைநிறுத்தம் செய்யப்போவதாக ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் கெடு வைத்துள்ளது. பெரும் விட்டுக்கொடுப்புகளை நிறுவனத்திற்கு வழங்கும் ஒப்பந்தத்தை ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்களை ஏற்க வலியுறுத்தும் நேரத்தில், கிறைஸ்லருடனான கலந்துரையாடலை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம் நடத்திவருகிறது; அச்சலுகைகளில் இரண்டு அடுக்கு ஊதியமுறை, குறைந்த நிதியுடைய தொழிற்சங்கம் நடத்தும் ஓய்வூதியம் பெறுவோருக்கான சுகாதாரப் பாதுகாப்பு நிதியம் அமைத்தல் மற்றும் ஊதிய உயர்வின்மை ஆகியவை அடங்கியுள்ளன. தொழிற்சங்கம் ஜெனரல் மோட்டார்ஸை முக்கிய பேச்சுவார்த்தைகள் நடத்த வேண்டிய நிறுவனமாக தேர்ந்தெடுத்திருந்தது. மரபார்ந்த வகையில் டெட்ராயிட்டின் மூன்று பெரிய கார்த் தொழிற்சாலைகளான ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட், கிறைஸ்லர் ஆகியவை ஜெனரல் மோட்டார்ஸுடன் கொள்ளப்படும் உடன்பாட்டின் பொது வரையறுப்புகளை ஏற்றுள்ளன. ஆனால் தனியார் பங்கு நிறுவனமான Cerberus Capital Management (செர்பெரஸ்) இனால் ஆகஸ்ட் மாதம் விலைக்கு வாங்கப்பட்டுள்ள கிறைஸ்லர் தான் இன்னும் ஆழ்ந்த சலுகைகளை அதன் 49,000 உறுப்பினர்கள் கொண்ட சங்கத்திடம் இருந்து, ஜெனரல் மோட்டார்ஸுக்கு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் விட்டுக்கொடுத்ததை விட அதிகமாக எதிர்பார்ப்பதாக மிகத் தெளிவாகக் கூறியுள்ளது. Detroit News இடம் பேச்சுவார்த்தைகளில் நெருக்கமாக தொடர்பு கொண்டிருந்தவர்கள் கூறிய கருத்தின்படி, கிறைஸ்லர் தன்னுடைய ஆலைகளில் வேலைகளை தக்க வைப்பது பற்றிச் சிறிதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை என்று தெரிகிறது. செய்தித்தாள் கூறியது: "குறிப்பாக கிறைஸ்லர் அதன் அமெரிக்க ஆலைகளின் வருங்கால உற்பத்திப் பொருட்கள் பற்றி உறுதியளிக்க மறுத்துவிட்டது; ஏனெனில் புதிய தனியார் கார்த் தயாரிப்பாளர் அமெரிக்க நடைமுறைகளை குறைப்பதில் வளைந்து கொடுக்கும் தன்மை இருக்க வேண்டும் என்றும் சர்வதேச அளவில் விரிவாக்கம் செய்யப்பட வேண்டும் என்றும் விரும்புகிறது." ஜெனரல் மோட்டார்ஸுடனான ஒப்பந்தத்தில் தொழிலாளர்களை திருப்தி செய்வதற்கு கூறப்பட்ட முக்கியமான கருத்தாக மோசடித்தனமான வேலை உறுதி என்பதை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் பயன்படுத்தியுள்ளது.வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தில் இல்லாத தொழிலாளர்களுக்கு அதன் அமெரிக்க ஆலைகளில் கொடுப்பதை தடை செய்யும் வகையில் ஏதேனும் வாசகம் இருந்தால் நிறுவனம் அதை எதிர்க்கிறது என்றும் கூறியுள்ளது. பெப்ருவரி மாதம், கிறைஸ்லர் தான் 2009ம் ஆண்டிற்குள் 13,000 வேலைகளை இல்லாதொழிக்க போவதாகவும், அதில் 11,000 மணித்தியால ஊதியம்பெறும் தொழிலாளர்களும், 2000 அலுவலகப் பணியாளர்களும் இருக்கும் என்றும் இது இலாபம் ஈட்டும் வகையைக் காண்பதின் ஒரு பகுதி என்றும் அறிவித்தது. இந்த வாரத் தொடக்கத்தில் நிறுவனம் தான் வேலை வெட்டுக்களை 5 சதவிகிதத்தால் அதிகரிக்கப்போவதாக, அதாவது தொழிற்சங்கத்தில் இல்லாத ஊதியம் பெறும் தொழிலாளர் தொகுப்பில் இருந்து அகற்ற விரும்புவதாகவும் அல்லது 500 பணிகளையும், அதன் ஒப்பந்த ஊழியர்களில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 1,100 வேலைகளை அகற்ற விரும்புவதாகவும் கூறியுள்ளது. பெரும்பாலான வேலைக் குறைப்புக்கள் நிறுவனத்தின் மிஷிகன் ஆபர்ன் ஹில்சில் உள்ள அதன் தலைமை அலுவகத்தில் ஏற்படும். கூடுதலான அலுவலகப்பணியாளர் வேலைக்குறைப்புக்கள் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கு கொடுக்கப்பட்டுள்ள சலுகைதான் இந்த அறிவிப்பு என்று சில பகுப்பாய்வாளர்கள் கூறியுள்ளனர்; இதையொட்டி தொழிற்சங்க அதிகாரத்துவம் அதன் உறுப்பினர்களிடம் நிறுவனம் முறையான சம்பளம் வாங்கும் ஊழியர்களையும் வெளியே அனுப்புகிறது என்று கூறி ஒப்பந்தத்திற்கு சம்மதம் வாங்கலாம் என்று கூறப்படுகிறது. தொழிற்சங்கத்தில் இருப்பவர்கள் மற்றும் மாதாந்த சம்பளம் வாங்குபவர்களின் எண்ணிக்கை மிகப் பெரிய அளவில் குறைக்கப்படுவதற்கு வேலை வெட்டுக்கள் ஒரு முன்னோடிதான். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தினால் ஏற்கப்பட்டுள்ள இரண்டு அடுக்கு ஊழிய முறை நடைமுறைக்கு வந்தால், கிறைஸ்லர் பல ஆயிரக்கணக்கான வயது அதிகமான, உயர் ஊதியம் பெரும் தொழிலாளர்களை வெளியே விரைவில் அனுப்ப முயற்சி செய்து அவர்களுக்கு பதிலாக மரபார்ந்த வகையில் இருப்பதை விட அரைப்பங்கு மட்டுமே ஊதியம் வாங்கும் புதிய தொழிலாளர்களை நியமிக்கும்; அவர்களுக்கு முதலாளிகள் கொடுக்கும் ஓய்வூதியமும் கிடையாது. நிறுவனம் அதன் மணித்தியால ஊதியம் பெறும் 78,000 ஓய்வு பெறுபவர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு பின் உயிரோடு இருக்கும் மனைவியருக்கும் மிகப் பெரிய அளவில் சுகாதாரக்காப்பு செலவினக் குறைப்புக்களை செய்யவிருக்கிறது; இது ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஜெனரல் மோட்டார்ஸ் மற்றும் போர்டிற்கு 2005ல் கொடுத்த விட்டுக்கொடுப்புகளுக்கு இயைந்து இருக்கும். ஓய்வூதியத் தொழிலாளர்கள், அவர்களை நம்பியிருப்பவர்கள் மீது செலவுச் சுமைகளை முதன்முதலாக ஏற்றும் இத்தகைய விதிகள் நிறுவனத்திற்கு ஆண்டு ஒன்றுக்கு $300 மில்லியன் சேமிப்பைக் கொடுக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் இந்த சுகாதாரப் பாதுகாப்பு வெட்டுக்களை கிறைஸ்லருக்கு 2005ல் கொடுப்பதாக இருந்தது. ஆனால் இந்த ஒப்பந்தம் கிட்டத்தட்ட போர்ட் தொழிலாளர்களால் நிராகரிக்கப்பட்ட பின், உள்ளூர் தொழிற்சங்க அதிகாரிகள் கிறைஸ்லர் தொழிலாளர்களிடையே பரந்த எதிர்ப்பு இருப்பதாகத் தெரிவித்தனர்; ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் அனைத்து தொழிலாளரும் இதனை நிராகரித்துவிடுவர் என்று நினைத்து முயற்சியை கைவிட்டார். இரு பக்கத்தினரும் ஒரு தொழிற்சங்கக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அறக்கட்டளை நிதியை நிறுவ உடன்பட்டனர்; அதாவது VEBA (Voluntary Employes' Beneficiary Association) என்ற அமைப்பை ஜெனரல் மோட்டார்ஸில் இருப்பதற்கு ஒத்தாற்போல் இருக்கும் அமைப்பை நிறுவுகின்றனர். இது கிறைஸ்லருக்கு ஓய்வூதிய சுகாதாரப் பாதுகாப்பு நலச் செலவுகளில் கிட்டத்தட்ட $18 பில்லியனை குறைத்துவிடும். ஆனால், கிறைஸ்லர் இந்த நிதியத்திற்கு ஜெனரல் மோட்டார்ஸை விட இன்னும் அதிகமான தள்ளுபடியை கோருகிறது; ஜெனரல் மோட்டார்ஸ் 400,000 ஓய்வு பெற்றவர்கள், அவர்களை நம்பியிருப்பவர்களுக்கு கொடுக்க வேண்டிய $50 பில்லியனில் 60 சதவிகிதத்தைக் கொடுக்க அனுமதிக்கப்பட்டது. ஜெனரல் மோட்டார்ஸ் பணமாக கொடுத்த அளிப்பு 50 சதவிகிதம்தான்; 10 சதவிகிதம் ஜெனரல் மோட்டார்ஸ் உடைய பங்குகளுக்கு பாதுகாப்பு என்று இருக்கும். இன்னும் கூடுதலான சாதகமான விடயங்களை கிறைஸ்லர் பெற முடியாது என்றால், டெட்ராயிட் நியூஸின் கருத்தின்படி ஒரு VEBA தனக்கு வேண்டாம் என்று தொழிற்சங்கத்திடம் கிறைஸ்லர் கூறியதாகவும், தானே தொடர்ந்து ஓய்வு பெற்றவர்களின் சுகாதாரப் பாதுகாப்பிற்கு பணம் வழங்குவதாக கூறியதாகவும் நிர்வாகத்தின் மூலோபாயத்தை நன்கு அறிந்தவர்வகள் கூறுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. " செர்பெரஸ் ஒருவேளை அறக்கட்டளை நிதியில் அதிக பணத்தை வைக்க விரும்பவில்லை போலும்; ஏனெனில் அது மனம் மாறி கிறைஸ்லரை விற்கக் கூடும்" என்று ஆலோசனை நிறுவமான Global Insight இல் தொழிற்துறை ஆய்வாளராக இருக்கும் ஆரன் பிராக்மன் டெட்ராயிட் நியூஸிடம் கூறினார். "செர்பெரஸ் ஒரு குறுகிய காலத்திற்கு மட்டுமே சொந்தக்காரராக இருக்கக்கூடம் என்ற நிலையில் அவர்கள் அதிக பணத்தை ஒரு நீண்ட காலத் தீர்விற்காக அளிக்க ஒருக்கால் விரும்பவில்லை போலும்." என்று பிராக்மன் கூறினார்.இதுதான் செர்பெரஸ் கிறைஸ்லரை எடுத்துக் கொண்டதின் சாராம்சம் ஆகும்; இந்நிறுவனம் நிறுவனங்களை வாங்கி, வேலைகளை அழித்து ஊதியங்களைக் குறைத்து அவற்றை பெரும் இலாபத்தில் விற்றுவிடும் இழிசெயலைச் செய்து வருவதாகும். முன்னாள் கார்த்தயாரிப்பு நிறுவனம் Visteon உடைய தலைமை நிர்வாகி அதிகாரியும், சில காலம் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்துடனான பேச்சுக்களில் போர்டின் பிரதிநிதி அலுவலராகவும் இருந்த Peter Pestillo செர்பரஸ் கிறைஸ்லரை வாங்கியவுடன் கூறியது போல், "நிறுவனம் ஒன்றும் மோசமான ஒப்பந்தங்களுடன் செயல்படுவதில்லை. அவர்கள் நிறுவனங்களை பளபளக்க செய்து பின்னர் விற்றுவிடுவர்." செர்பெரஸ் வாங்கியதை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஆர்வத்துடன் ஆதரித்திருந்தது. தொழிற்சங்கத்தின் தலைவர் ரோன் கெட்டில்பிங்கர் --சில வாரங்களுக்கு முன்பு அத்தகைய பேரத்தை "செர்பரஸ் போன்ற முதலீட்டு நிறுவனங்கள் தங்கள் செல்வத்தை அதிகரிப்பதற்காக நிறுவனங்களை தகர்ப்பவர்கள்தான்" என்று கூறியவர் -- முற்றிலும் மறுபக்கம் மாறி ஒப்பந்தம் "நம்முடைய உறுப்பினர்களுக்கு சிறந்த நலன்களை அளிக்கும்" என்று கூறினார். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்துக்கும் செர்பெரஸிற்கும் VEBA என்னும் தொழிற்சங்க கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அமைப்பை நிறுவதல் தொழிற்சங்கத்தின் இத்தகைய மாற்றத்திற்கு மையமானதாகும். (See "Why the United Auto Workers supports Cerberus' take-over of Chrysler") அறக்கட்டளை நிதியை நிறுவுதல் --மூன்று டெட்ராய்ட் கார்த் தயாரிப்பாளர்களுடனும் உடன்பாடுகள் ஏற்பட்டால் கிட்டத்தட்ட $70 பில்லியன் மதிப்புடையதாகும் --ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்திற்கு அமெரிக்காவிலேயே மிகப் பெரிய முதலீட்டு நிதிகள் ஒன்றின்மீது கட்டுப்பாட்டை கொடுக்கும்; சங்கத்தை ஒரு இலாப நோக்கு உடைய வணிகமாகவும் மாற்றி தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு மாபெரும் வருமானத்தை கொடுக்கும்; அதே நேரத்தில் அதன் உறுப்பினர்களுடைய நலன்களையே குறைத்துவிடும். கிறைஸ்லரில் தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுத்தால், அது கார்த் தொழிலாளர்களின் வேலைகள் மற்றும் வாழ்க்கைத் தரங்களை காப்பதற்காக இருக்காது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் அதிகாரத்துவம் தன்னுடைய நலன்களையே தொடர்கிறது; அவை தாம் பிரதிநித்துவப்படுத்துவதாக கூறிக்கொள்ளும் தொழிலாளர்களின் நலன்களில் இருந்து வேறுபட்டதும், விரோதமானவையும் ஆகும். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் ஏற்கனவே ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்தத்தில் இருக்கும் சலுகைகளைவிட அதிகமாக கொடுத்திருக்கக்கூடும் என்பதில் ஐயம் இல்லை. ஆனால் இரு பெருநிறுவன அமைப்புக்கள் செய்வது போல் இரு திறத்தாரும் VEBA உடன்பாட்டின் விதிகளைப் பற்றி பேரம் நடத்திக் கொண்டிருக்கலாம் எனத் தோன்றுகிறது. கிறைஸ்லருக்குப் பின் இருக்கும் தனியார் முதலீட்டாளர்களும் VEBA விற்கு நிதி அளிப்பது பற்றி முக்கியமற்ற கருத்துக்களைக் கொண்டிருக்கக்கூடும். ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவம் கிறைஸ்லர் தொழிலாளர்களிடம் ஒரு ஜெனரல் மோட்டார்ஸ் மாதிரியிலான ஒப்பந்தத்திற்கு அனுமதி பெறமுடியாது என்பது பற்றிய கவலையும் கொண்டுள்ளது. ஏனெனில் ஜெனரல் மோட்டார்ஸ் தொழிலாளர்கள் அதற்குக் கணிசமான எதிர்ப்பை தெரிவித்திருந்தனர். கிறைஸ்லரில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் வெளிநடப்பு செய்வது என்பது ஒரு குறுகிய, இழிந்த உத்தியாக, கார்த் தொழிலாளர்களின் நலன்களைக் காக்கும் சங்கம் எனக் காட்டிக் கொள்ளுவதற்காக இருக்குமே அன்றி, உண்மையில் சங்கம் அதன் உறுப்பினர்களை மற்றொரு வரலாற்றுரீதியான காட்டிக் கொடுப்பில் தள்ளவிடத் தயாரித்து வருகிறது. மேலும் ஒரு குறுகிய கால வேலைநிறுத்தம் நிறுவனத்தின்மீது கிட்டத்தட்ட எவ்விதப் பாதிப்பையும் ஏற்படுத்தாது; சொல்லப்போனால் கிறைஸ்லருக்கு அதன் கிடங்கில் இருக்கும் விற்பனையாகாத வண்டிகளை புதுப்பிப்பதற்காக வரவேற்கப்படும். ஏற்கனவே நிறுவனம் இந்த வாரம் அதன் அமெரிக்க இணைப்பு ஆலைகளில் ஐந்தை தற்காலிகமாக மூடுவதாக திட்டமிட்டுள்ளது. இவை மிஷிகனில் டெட்ராய்ட், வாரன்; ஓகையோவில் நெவார்க், இல்லிநோயில் பெல்வடெர் என்று உள்ளது; அதற்குக் காரணம் குறைந்த அளவு விற்பனை எனக் கூறப்படுகிறது. ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டால், தொழிலாளர்கள் அனைத்து தொழிலார்கள் குழுக்களை தேர்ந்தெடுப்பதன் மூலம் அப்போராட்டத்தை ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க அதிகாரத்துவத்தின் பிடிகளில் இருந்து எடுத்துக்கொள்ள வேண்டும். அக்குழு ஜெனரல் மோட்டார்ஸ், போர்ட் இன்னும் பிற கார்த் தொழிலாளர்களுடன் சேர்ந்து கார் நிறுவனங்களுக்கு எதிரான பொதுவான போராட்டத்தில் ஈடுபட வேண்டும். இதற்கிடையில் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் இன்னும் கூடுதலான சலுகைகளை போர்டிற்கு விட்டுக்கொடுக்க தயாரிப்புக்களை கொண்டுள்ளது. நிறுவனத்தின் நிதிய உறுதியற்ற தன்மை மற்றும் தொழிற்சங்கத்துடன் நெருக்கமான உறவு இவற்றைக் கருத்திற் கொண்டால் (ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தலைவர் கெட்டில்பிங்கர் கென்டக்கியிலுள்ள லூயிவில்லே ஆலையில் உள்ளூர் அதிகாரியாக இருந்து பின்னர் தொழிற்சங்கத்தின் போர்ட் பிரிவிற்குத் தலைவரானார்), இரண்டாம் இடத்தில் இருக்கும் கார்த் தயாரிப்பு நிறுவனம் அதற்கு மிகவும் தேவையான விதத்தில் ஒப்பந்தத்தை பெறும் என எதிர்பார்க்கலாம். நிறுவனம் மற்றும் தொழிற்சங்க அதிகாரிகள் இருவரின் கூற்றுப்படியும் போர்ட், பேச்சுவார்த்தைகளை சங்கத்துடன் மீண்டும் நடத்தும்போது, ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்க தொழிலாளர்கள் எண்ணிக்கை வெட்டு மற்றும் ஆலைகள் மூடலை போர்ட் இன்னும் கோரலாம். ஒருவேளை இன்னும் சீக்கிரமான ஓய்வு வயதையும், பணிநீக்க நலன்களையும், மணித்தியால ஊழியம்பெறும் 27,000 பேரிடம் இருந்து கோரலாம்; இத்தகைய முறையில்தான் கடந்த ஆண்டு ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் திட்டங்களை வடிவமைத்திருந்தது. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம்-ஜெனரல் மோட்டார்ஸ் ஒப்பந்தத்தின் மீதான வாக்கெடுப்பு புதனன்று முடிவடைகிறது. ஒப்பந்தம் ஏற்கப்படும் என்று தோன்றினாலும், குறைந்தது எட்டு உள்ளூர் பிரிவுகளான மிஷிகனில் ரோமுலஸ், நியூ யோர்க்கில் மசேனா, மிசோரியில் வென்ஸ்வில்லே, ஓகையோவில் டீபியன்ஸ் மற்றும் மாரியன் ஆகியவை ஒப்பந்தத்தை நிராகரித்ததாக தகவல்கள் வந்துள்ளன. சில மற்று உள்ளூர்ப் பிரிவுகளும் ஒப்பந்தத்திற்கு 40 சதவிகிதத்திற்கும் மேல் எதிர்ப்புத் தெரிவித்துள்ளன. ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கம் உள்ளூர் 2250 பிரிவு, St.Louis இற்கு வெளியே இருக்கும் வென்ட்ஸ்வில்லேயில் இருக்கும் 2,000 உறுப்பினர்களும், 69 சதவிகிதத்தினர் வாக்களித்த நிலையில் ஒப்பந்தத்தை நிராகரித்துள்ளனர். 2012ல் ஒப்பந்தம் முடிந்தவுடன் ஆலை மூடுவதற்கு இது வழிவகுக்கிறது என்ற கவலையை தொழிலாளர்கள் கொண்டுள்ளனர். தொழிற்சங்கம் ஒப்பந்தத்தில் "வேலைப் பாதுகாப்பை" சாதித்துள்ளது என்று கூறியும், தொழிலாளர்கள் அப்படித்தான் நினைக்கின்றனர். தொழிற்சங்கத்தினதும் செய்தி ஊடகத்தினதும் பெரிய பிரச்சார முயற்சிக்கு மத்தியில் இத்தகைய பரந்த எதிர்ப்பு கார்த் தொழிலாளர்களுக்கும் ஐக்கிய கார் தொழிலாளர்கள் சங்கத்தை கட்டுப்படுத்தும் ஊழல் மிகுந்த அதிகாரத்துவத்தினருக்கும் இடையே இருக்கும் பாரியபிளவின் வெளிப்பாடு ஆகும். |