WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: corruption scandal hits employers' federation,
unions
பிரான்ஸ்: ஊழல் அவதூறுகள் முதலாளிகள் கூட்டமைப்பு மற்றும் தொழிற்சங்கங்களை
தாக்குகின்றன
By Alex Lantier
22 October 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
Medef ( பிரெஞ்சு முதலாளிகள்
கூட்டமைப்பு) -இன் உயர்மட்ட உறுப்பினர் Denis
Gautier-Sauvagnac ஆல் அளிக்கப்பட்ட மிக அதிக
ரொக்கத் தொகைகள் பற்றிய போலீஸ் விசாரணை பிரான்சின் அரசியல் அமைப்புமுறையை பாதித்துள்ளது.
போலீஸ் விசாரணை பற்றிய அடிப்படை உண்மைகள் இன்னமும் வந்து கொண்டே
இருக்கின்றன. செப்டம்பர் 26ம் தேதி பழமைவாத நாளேடான
Le Figaro
வில் இதுபற்றிய விவரம் முதலில் வந்தது; Medef
கூட்டமைப்பின் முக்கிய அங்கமான உலோகத் தொழிற் கலையின் தொழில் மற்றும் தொழிற்சாலைகளின் சங்கத்தின் (Union
of Industries and Crafts of Metallurgy -UIMM)
தலைவராக இருக்கும் Gautier-Sauvagnac,
பெயர் வெளியிடப்படாத நபர்களுக்கு கொடுப்பதற்காக குறைந்தது 5.64 மில்லியன் யூரோக்கள் பணத்தை
UIMM
கணக்குகளில் இருந்து ரொக்கமாக எடுத்ததாக குறிப்பை கொடுத்தது. இப்படி எடுக்கப்பட்ட ரொக்கங்கள் நிதி
அமைச்சகத்தின் கறுப்புப்பணத்தை வெள்ளையாக்குவதற்கு எதிரான விசாரணையாளர்களால் ஆராயப்படுவதாக
Le Figaro
கூறியுள்ளது.
விசாரணையாளர்கள் அக்டோபர் 12ம் தேதி
UIMM பணப்பெட்டியில்
இருந்து 2 மில்லியன் யூரோக்களை கைப்பற்றினர்; போலீஸ் அந்தக் கணக்கை தேடவேண்டும் என்று
UIMM தெரிவித்திருந்தது.
அக்டோபர் 14ம் தேதி
Gautier-Sauvagnac மொத்தத்தில் எடுத்த ரொக்கப் பணத்தின்
மதிப்பு 17 மில்லியன் யூரோக்கள் என்று போலீஸ் மதிப்பீடுகள் கருதுவதாக
Le Monde
மேற்கோளிட்டது. அக்டோபர் 15ம் தேதி Le
Figaro
இந்த ரொக்கப்பணம் 30 வங்கிக் கணக்குகளை கடந்து வந்ததாக எழுதியது.
அக்டோபர் 16ம் தேதி வணிக நாளேடான Les
Echos இந்தத் தொகைகள், 1968ல் வேலை நிறுத்தத்திற்கு
பின்னர் UIMM
ஆல் ஏற்படுத்தப்பட்ட இரகசிய நிதியான 160 மில்லியன் யூரோக்கள்
கொண்ட வேலைநிறுத்த-எதிர்ப்புநிதி உள்பட, பல UIMM
நிதியங்களில் இருந்து எடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டது.
Gautier-Sauvagnac மற்றும்
UIMM
தலைமை இதை எதிர்கொண்ட விதம் ஆணவம் நிறைந்ததாக இருந்தது. ஒரு "சுருக்கமான விசாரணைக்கு" நீதிபதி
ஒருவரின் முன் அழைக்கப்பட்டபோது, ரொக்கப்பணங்கள் "சமூக உறவுகளை ஒழுங்குபடுத்துவதற்காக"
எடுக்கப்பட்டவை என்று Gautier-Sauvagnac
கூறினார் என்று செய்தி ஊடகத் தகவல்கள் கூறுகின்றன. இதைத் தவிர வேறு அதிக விவரங்களை அவர்
தெரிவிக்கவில்லை போலும். ஆனால் "சமூக உறவுகள்" பற்றிய அவரது குறிப்பு, போலீஸ் மற்றும் செய்தி
ஊடகத்தால் வேலைநிறுத்த நடவடிக்கைகளை நிறுத்துவதற்கு அல்லது தொழில் சட்ட சீர்திருத்தங்களுக்கு
உடன்படுவதற்கு கொடுக்கப்பட்ட பணம் என்று விளக்கம் கருதப்படுகிறது.
Le Monde
உடன் அக்டோபர் 15 அன்று நடத்திய நீண்ட பேட்டி ஒன்றில்
UIMM தலைவர்
Daniel Dewavrin
"சமூக உறவுகளை சீராக்குவதற்காக" கொடுக்கப்பட்டவைதான் இந்த ரொக்கங்கள் என்று உறுதிப்படுத்தினார்.
அத்தகைய ரொக்கப் பணங்கள் தன்னுடைய தலைமைக் காலத்தில், 1999 முதல் 2006 வரை வாடிக்கையானது
என்றும் உண்மையில் UIMM
ல் எப்பொழுதுமே இருந்துள்ளது என்றும் கூறினார்.
UIMM தலைமையின்
நடத்தையானது, அவர்கள்மீது குற்றவியல் நடவடிக்கைகள்
தவிர்க்கப்படும் என்ற உயர்மட்ட உத்தரவாதங்களை பெற்றிருக்க
வேண்டும் என்று புலப்படுத்துகின்றன. உண்மையில், Le
Figaro
தன்னுடைய ஆரம்ப கட்டுரைக்காக பேட்டி கண்ட ஒரு நீதிபதி இந்த
விஷயத்தை ஒரு "சூடான உருளைக் கிழங்கு" (Hot
potato) என்றும் நீதித்துறை மந்திரியின் இசைவு இல்லாமல்
எந்த முடிவும் எடுக்கப்படமாட்டாது என்றும் கூறினார்.
அக்டோபர் 17 அன்று
Liberation ல் வந்த கட்டுரை ஒன்றில்,
மற்றொரு நீதிபதி, போலீஸ் 16ம் தேதி UIMM
தலைமையகத்தை முதலில் சோதனையிட்டது --தகவல் வெளிவந்து முழுதாக மூன்று வாரங்களுக்கு பின்னர்-- என்று
கூறியதாக குறிப்பிட்டது. போலீசார் "சான்றுகளை அழிப்பதற்கு துணை நிற்க விரும்பியிருந்தால், வேறுவிதத்தில்
அவர்கள் நடந்து கொண்டிருக்க மாட்டார்கள்" என்று நீதிபதி முடிவாகக் கூறினார். மற்ற நீதிபதிகளையும்
மேற்கோளிட்டு, Liberation,
சாட்சியம் கொடுக்க வற்புறுத்தும் முழு அதிகாரத்துடன் ஒரு விசாரணை நீதிபதியை அரசாங்கம் நியமிக்க மறுப்பது
வேண்டுமென்றே UIMM
ஐ பாதுகாக்கும் முடிவு என்று எழுதியுள்ளது.
UIMM விவகாரம் வெளிவந்துள்ள நேரம்,
பிரெஞ்சு அரசியல், வணிக அமைப்புமுறையின் உயர் உறுப்பினர்களால் சரியான முறையில் அமைக்கப்பட்டுள்ளது.
அக்டோபர் 7ம் தேதி Journal du Dimache
பதிப்பின்படி, நிதி அமைச்சகம் UIMM
கணக்குகளில் இருந்து கள்ளத்தனமாக பணம் திருப்பி எடுக்கப்படுவதை 2004ல் இருந்து விசாரணை செய்து வருகிறது
என்றும், அப்பொழுதுதான் UIMM
ன் கணக்குகள் வெள்ளைப்பணமாக்குவது பற்றிய
BNP-Paribas தொடர்புகள் இருந்திருக்க வேண்டும் என்றும்
கூறப்படுகிறது. அப்பொழுது பொருளாதார, நிதி மந்திரியாக இருந்த பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா
சார்க்கோசி, விசாரணையாளர்களிடம் குற்றச்சாட்டைப் பதிவு செய்வதை நிறுத்திவைக்க வேண்டும் என்றார். இது
Le Nouvel Observateur
ல் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது; இந்த விவகாரம் கடைசி மூன்று நிதி மந்திரிகளான, சார்க்கோசி, தீயேரி
பிரெட்டோன் மற்றும் கிறிஸ்டியான் லாகார்ட் ஆகியோரால் நெருக்கமாகக் கண்காணிக்கப்பட்டது என்றும் அது
கூறுகிறது.
தொழிலாள வர்க்கத்தின் மீது தாக்குதலுக்கான தந்திரோபாயங்களை சார்க்கோசி
தயாரித்துச் செயல்பட இருக்கையில், பிரெஞ்சு முதலாளித்துவத்தின் உயர் அடுக்குகளுக்குள் உள்முரண்பாடு என்ற
உறுதியான கூறுபாடு உள்ளது. Unedic
வேலையின்மை மற்றும் காப்பீட்டு முறையின் உயர் மேலாளர்
Gautier-Sauvagnac,
சார்க்கோசியின் முக்கிய திட்டமான ANPE
(வேலையில் அமர்த்தும் பொது நிறுவனம்),
Unedic உடன் இணைக்கப்படுவதை எதிர்ப்பதாக
அறிவிக்கப்படுகிறது. மேலும் Medef
க்குள் அதன் தலைவரான Laurence Parisot
க்கு அவர் முக்கிய அரசியல் போட்டியாளர் ஆவார்;
Parisot,
UIMM இன் ஆதரவு
இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார்; ஆனால் சந்தை விற்பனைப் பிரிவு, சுற்றுலாத் துறை மற்றும் நிதிய
நிர்வாகிகள், குறிப்பாக BNP Paribas
இன் உயர் மட்ட நிறையேற்று அதிகாரி Michel
Pebereau போன்றோரால் தேர்ந்தெடுக்கப்பட்டவராவர்.
இந்த ஊழலை செய்தி ஊடகம் எதிர்கொண்டவிதம் அதன் பிரதான இலக்குகள்
தொழிற்சங்க அதிகாரத்துவத்துள் உள்ளன என்பதை தெரிவிக்கிறது.
தொழிற்சங்கங்களுக்கு நிதியூட்டல்
Gautier-Sauvagnac இன்
ரொக்க அளிப்புக்கள் தொழிற்சங்க அதிகாரத்துவத்திற்கு கொடுக்கப்பட்ட தொகைகள் என்ற சாத்தியக்கூறு, ஊழலைப்
பற்றிய செய்தி ஊடக ஊகத்தில் மேலாதிக்கம் கொண்டுள்ளது. பிரெஞ்சு முதலாளித்துவ செய்தி ஊடகம், பல தொழிற்சங்க
அதிகாரிகள் வணிகர்களிடம் இருந்து தொழிற்சங்க ஊதியங்கள், தொழிற்சங்க உள்ளூர் வாடகைகள் போன்றவற்றை
கொடுப்பதற்கு பணத்தை பெறுவது பற்றி பெயரிடாமல் பல குறிப்புக்களை கொடுத்துள்ளது. அக்டோபர் 8 கட்டுரையில்
Le Figaro
எழுதியது: "தெளிவாய் தெரியாத நடைமுறைகள் எப்பொழுதுமே ஆழ்ந்த முறையில் சீர்திருத்தப்பட முடியாதவை"
என்று ஒரு தொழிற்சங்க பேரம் பேசுவர் மற்றவரிடம் மேற்கோளிடுகிறார். இந்த உடன்பாட்டில் கையெழுத்திட
தீவிரமாக நீங்கள் விரும்ப முடியாதே? என வினாவப்பட்டதற்கு கொடுக்கப்பட்ட விடை, "உண்மையில்
இல்லைத்தான். ஆனால் வேண்டாம் என நான் கூறினால் தொழிற்சங்க கூட்டமைப்பிற்கான வாடகையை எப்படிக்
கொடுக்க முடியும்?"
தொழிற்சங்கங்களுக்கு நிதி கொடுப்பது பற்றி திரும்பவேலை செய்வதற்கு மற்றும்
அரசுடன் அவர்களை பொதுவாக பிணைப்பதற்கும் பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் பிரிவுகளில் நடக்கும் அரசியல்
பிரச்சாரத்தின் ஒரு பகுதிதான் இது.
CGT (Confédération générale du travail) ,
CFDT
(Confédération Française
Démocratique du Travail) FO (Force ouvrière),
்CFTC
(Confédération française des travailleurs chrétiens),
மற்றும் CGC
(Confédération générale des cadres)
என்னும் அரசாங்கத்தால் அங்கீகரிக்கப்பட்டுள்ள ஐந்து பிரெஞ்சு
தொழிற்சங்க கூட்டமைப்புக்களும் பிரெஞ்சு சமூக அமைப்பில் முக்கியமான பங்கை கொண்டுள்ளன. சமூகக்
கொள்கை, தொழிலாளர் சட்டம், சமூக பாதுகாப்பு, வேலையின்மை காப்பீட்டு நீதி போன்றவற்றின் முக்கிய
கூறுகள் மீது Medef
லிருந்து வரும் வணிகப் பிரதிநிதிகளிடம் பொது உடன்பாடுகளை முக்கிய பேச்சுவார்த்தைகள் மூலம் காண்கின்றன:
இவ்வாறு அவை சார்க்கோசி திட்டமிட்டுள்ள நலன்புரி அரசை தகர்க்கும் செயலை வரைவதிலும் அதற்கு
உடன்படுவதிலும் முக்கியமான பங்கை ஆற்றுகின்றன.
சீர்திருத்தங்கள் பற்றிய அடிப்படை அரசியல் அதிருப்தியானது, கடந்த தசாப்தத்தில்
பல முறையும் அரசால் தயாரிக்கப்பட்டு, தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் உடன்பாடு கொள்ளப்பட்டது,
எவ்வாறாயினும், துல்லியமாய் ஒரு அரசியல் விலை கொடுக்க செய்தது. சமூகச் சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக
தொழிற்சங்கங்கள் பெருகிய முறையில் ஒத்துழைப்பு அல்லது பெயரளவு எதிர்ப்புக்களை செய்கையில், அவற்றின்
உறுப்பினர் தளம் பெருமளவில் சரிந்து விட்டது; 1980ல் தொழிலாளர் எண்ணிக்கை 20 சதவிகிதம் என்பதில் இருந்து
இன்று கிட்டத்தட்ட 8 சதவிகிதம் என்று குறைந்துள்ளது. இதன்விளைவாக இருக்கும் உறுப்பினர்களின் கட்டணத் தளத்தில்
தொழிற்சங்கங்கள் செயல்படுவது மிகவும் கடினமாகும்.
வணிகம் மற்றும் தொழிற்சங்கம் கூட்டாக செயலாற்றும் முறையான
Paritarism
என்பது அரசாங்கத்தால் மேற்பார்வையிடப்படுகிறது; இது தொழிற்சங்கங்களின் பெரிதும் குறைந்துவிட்ட
நிதியங்களால் பெருகிய முறையில் தடுமாறுகிறது.
தொழிற்சங்கங்களே சில சமயம் அவற்றின் நிதியங்களின் சந்தேகத்திற்குரிய
சட்டத்திற்குட்பட்ட தன்மை பற்றி ஒப்புக் கொள்ளுகின்றன. 2003ம் ஆண்டு
Le Monde
மேற்கோளிட்ட ஒரு கடிதத்தில் ஐந்து தொழிற்சங்கங்களின்
நிதிச் செயலாளர்களும் "நிதி நிலமையில் விளிம்பில் நிற்கும் நிலை" பற்றிக் குறைகூறி, இது "தொழிற்சங்க
செயற்பாடுகளை செயல்படுத்துவதில் ஓரளவு பணச்சலவை அல்லது மோசடி செய்யும் ஆபத்தை அதிகம்
ஏற்படுத்திவிட்டது" என்று குறைகூறினர்.
தொழிற்சங்கங்களின் நிதியங்கள் பற்றி நம்பகரமான புள்ளிவிவரங்கள் கொடுப்பது
கடினமாகும். அப்பொழுது உள்துறை மந்திரியாக இருந்த
Pierre Waldeck Rousseau 1884ல் இயற்றிய
சட்டத்தின் கீழ் அவை பாதுகாப்பு பெறுகின்றன; தொழிற்சங்கங்கள் மற்றும் முதலாளிகள் சங்கங்கள் தங்கள்
நிதியங்களைப் பற்றி அறிக்கை கொடுப்பதில் குறைந்த விதிகள்தான் நிர்ணயிக்கப்பட்டு இருந்தன. பெரும்பாலான
தொழிற்சங்க கூட்டமைப்புக்கள் வாடிக்கையான நிதி அறிக்கைகளை வெளியிடுவதில்லை, தங்களுடைன் இணைந்துள்ள
சங்கங்களில் இருந்தும் பெறுவதில்லை. ஆனால் அவர்களுடைய வருமானங்களில் குறைந்த சதவிகிதம்தான் உறுப்பினர்கள்
கட்டணத்தில் இருந்து வருகிறது என்பது பரந்த அளவில் கருதப்படுகிறது.
2006 TM
Hadas-Lebel, தொழிற்சங்கங்கள் பற்றி அவற்றின்
ஒத்துழைப்புடன் நடந்த ஆய்வு ஒன்றில், மொத்த வரவு/செலவு திட்டத்தில் கட்டணங்கள் பாக்கி பற்றிய கீழ்க்கண்ட
மதிப்பீடுகள் கொடுக்கப்பட்டன; CGT 34
சதவிகிதம்; FO 57
சதவிகதம்; CFDT 50
சதவிகதம்; CFTC
20
சதவிகிதம்; CGC
40 சதவிகிதம். வரவு/செலவு திட்டத்தின் எஞ்சிய பகுதிகள் சமூகப் பாதுகாப்பு நிதிகளை நிர்வகிக்கும்
தொழிற்சங்க அதிகாரிகளில் இருந்து வருவதாக கருதப்படும்; அதைத்தவிர பிற அரசாங்க உதவிகள்,
பெருநிறுவனங்கள் வேறு இடத்திற்கு அனுப்பியுள்ள தங்கள் ஊழியர்களுக்கு கொடுக்கும் சம்பளம், பிற வகை மூலம்
பணம் அடையப்படும்.
இதன் விளைவாக, தொழிற்சங்கங்களுக்கு அரசாங்கம் நிதியம் கொடுக்க வேண்டும்
என்பதற்கு பெருகிய ஆதரவு உள்ளது. சார்க்கோசியே தன்னுடைய செப்டம்பர் 18 சமூகக் கொள்கை உரையில்
இப்பிரச்சினை பற்றிக் கூறினார்: "எந்த முன்கருத்தும் இன்றி
Paritarism
பற்றி விவாதிக்க நான் தயார்."
சார்க்கோசியின் அழைப்பு, பல முறையும் செய்தி ஊடகத்தில்
UIMM ஊழல் பற்றிக்
குறிப்பிடப்படும்போது தெரிவிக்கப்பட்டது ஒன்றும் புதுமையானது அல்ல. பாராளுமன்றத்தால் பல சட்டங்கள்
முன்வைக்கப்பட்டுள்ளன; குறிப்பாக 2001ல் இருந்து 2004 வரை தொழிற்சங்கங்களுக்கு அரசாங்க நிதியம்
உத்தியோகபூர்வமாக அளிக்கும் வகையில் அவை பற்றிய விவாதங்கள் இருந்தன.
தொழிற்சங்கங்கள் முன்வைத்த வாதம்
Les Echos
வினால் அக்டோபர் 17 கட்டுரை ஒன்றில் விவரிக்கப்பட்டது; "தீமையில் இருந்து நன்மையும் வரக்கூடும்". இதில்
கூறப்பட்டது; "பொது நிதியம் அளிப்பது ஒரே நல்ல விருப்பத்தேர்வு ஆகும் [...] அத்தகைய அமைப்பு முறை
அரசில் இருந்து தங்கள் சுதந்திரத்தை சமரசத்திற்கு உட்படுத்திவிடும் என்று தொழிற்சங்கங்கள் விரோதப் போக்கை
கொண்டுள்ளன. ஆனால் UIMM
விவகாரம் இந்த வாதத்தை தகர்த்துவிடுகிறது; ஒரு பெரு வணிகக் குழுவிடம் நிதிபெறுவது, அரசிடமிருந்து நிதி பெறுவதைவிட,
இன்னும் கூடுதலான முறையில் "சமரசத்திற்கு" உட்படுத்திவிடாதா? ஒவ்வொரு தொழிற்சங்கமும் எந்த அளவிற்கு
தொழிலாளர் சக்திகளால் பிரதிநிதித்துவம் செய்யப்படுகிறது என்று நிலைநாட்டும் வேலைத்தளங்களில் வாக்குகளின்
படி, தொழிற்சங்கங்களுக்கு இடையே அரசாங்க நிதி பிரித்துக் கொடுக்கப்பட வேண்டும் என்று
Les Echos
கூறியுள்ளது.
குறைந்தது ஒரு தொழிற்சங்கம்,
CGT ஆனது
UIMM
பற்றி எதிர்கொண்டவிதம் தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கூறுபாடுகளுக்கு அத்தகைய முன்மொழிவுகள்
ஈர்க்கக்கூடியவைகளாக உள்ளன என்றுதான் காட்டுகிறது.
CGT இன் தலைவரான
Bernard Thibault,
Gautier-Sasuvagnac
இடம் இருந்து பணம் பெற்றிருக்கிறது என்பதை குறிப்பாக மறுத்துள்ளார். "Gautier-Sauvagnac
இரகசியமாய் CGT
க்கு பணம் கொடுத்து வந்திருக்கிறார் என்றால் அது அள்ளிக் கொட்டுவதற்கான அகப்பை ஆகும்; ஆனால் அதைப்பற்றி
நான் கூறுவதற்கில்லை." இதன் பின் அவர் தொழிற்சங்கங்களில் பிரதிநிதித்துவம் பற்றிய விதிகள் சீர்திருத்தப்பட
வேண்டும் என்றும் அது நிதியம் அளிப்பதில் சீர்திருத்தம் வருவதற்கு முன்னோடியாக இருக்க வேண்டும் என்றும் கூறினார். |