World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு : துருக்கி

Turkish government gives green light for military intervention in northern Iraq

வடக்கு ஈராக்கில் இராணுவ தலையீட்டிற்கு துருக்கி அரசாங்கம் பச்சைக்கொடி காட்டுகிறது

By Peter Schwarz
15 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

எல்லை கடந்து சென்று ஈராக் மீது ஓர் இராணுவ நடவடிக்கை எடுக்க துருக்கி அரசாங்கம் பச்சை கொடி காட்டி இருக்கிறது. அருகிலுள்ள வடக்கு ஈராக்கில் பிரிவினைவாத குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு (PKK) எதிராக தலையிட ஜனாதிபதி அப்துல்லாஹ் குல் தலைமையிலான ஒரு நெருக்கடி கால குழு அக்டோபர் 9ம் தேதி, இராணுவத்திற்கு அனுமதி அளித்தது.

பிரதம மந்திரி ரெசிப் டேயெப் எர்டோகான் இன் அலுவலக செய்தியின்படி, "அண்டை நாடுகளில் இருந்து வரும் பயங்கரவாதக் குழுக்களின் இருப்பை இல்லாதொழிக்க, எல்லை தாண்டிய நடவடிக்கைகள் உட்பட அனைத்து விதமான சட்ட, பொருளாதார மற்றும் அரசியல் நடவடிக்கைகள் கையாளப்படுவதற்காக" அரசாங்கம் ஓர் ஆணை அளித்துள்ளது. யுத்தத்திற்கு செல்வதற்கான முழு அதிகாரங்களையும் அரசாங்கம் அக்டோபர் 15ம் தேதி பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கிறது.

பாராளுமன்ற தேர்தல் வெற்றிக்கு சில வாரங்களுக்கு பின்னர், வேட்பாளர்கள் பதவியேற்று, ஜனாதிபதி பதவியில் குல் அமர்ந்ததும், வட ஈராக்கில் தடையில்லாமல் நடவடிக்கைகள் எடுக்க நீண்ட காலமாக வலியுறுத்தி வரும் இராணுவ ஜெனரல்களின் நெருக்கடிக்கு நீதி மற்றும் அபிவிருத்திக் கட்சி (AKP) அடிபணிந்தது. நெருக்கடி கால கூட்டத்தில் பங்கெடுத்து கொண்ட துருக்கிய படைத்தலைவர் ஜெனரல் யாசர் புயூகனித் (Yasar Büyükanit) கடந்த மே மாதம் முதலாகவே இத்தகைய அதிகாரங்களை கோரி வருகிறார்.

இராணுவத் தளபதிகளுக்கு பச்சைக்கொடி காட்டி இருப்பதன் மூலம், மிதவாத இஸ்லாமிய AKP அரசாங்கமும் உள்நாட்டு கொள்கைகளிலும் இராணுவத்தின் கரங்களை பலப்படுத்தி இருக்கிறது. சமீபத்திய மாதங்களில், அவர்களின் அதிகாரங்கள் மீது பல குறிப்பிடத்தக்க பின்னடைவுகளை ஏற்க இராணுவம் நிர்ப்பந்திக்கப்பட்டது.

எல்லை தாண்டிய நடவடிக்கைகளுக்காக யாசர் புயூகனித் தலைமையிலான படைத்துறை அதிகாரியின் அழுத்தத்தை பிரதம மந்திரி எர்டோகானும் மற்றும் அந்நேரத்தில் அவரின் வெளியுறவுத்துறை மந்திரியாக இருந்த குல்லும் ஆரம்பத்தில் எதிர்த்தனர். பதவி கவிழ்ப்பு குறித்த அச்சுறுத்தலுடன் இராணுவம் குல்லின் தேர்வை எதிர்க்க முயன்றபோது, AKP புதிய தேர்தலுக்கு அழைப்பு விடுத்ததுடன், அதில் ஓர் ஆழ்ந்த வெற்றியையும் தேடிக் கொண்டது. பெரும்பான்மையான வாக்காளர்கள் AKP இற்கு ஆதரவளித்தனர், ஏனெனில் அவர்கள் இராணுவத்தின் ஆசைகளுக்கு எதிர்ப்பலமான ஒரு ஜனநாயக சக்தியாக AKP இனை எண்ணிப் பாராட்டினர். ஆனால் தற்போது, அதுபோன்ற நம்பிக்கைகள் வெறும் நப்பாசைகள் என நிரூபிக்கப்பட்டுள்ளது.

உண்மையில், ஈராக்கில் இராணுவ நடவடிக்கைகளுக்காக இராணுவத்திற்கு சுதந்திரம் அளித்ததன் மூலம், AKP தன்னை இராணுவத்தின் ஒரு பிணைக்கைதியாக உருவாக்கி கொண்டுள்ளது. "இது மிகவும் ஆபத்தான ஒரு உரிமை, இது பிரதம மந்திரி டேயெப் எர்டோகானுக்கு பல சிக்கல்களை உருவாக்கும்." என Süddeutsche Zeitung பத்திரிகை கருத்து தெரிவித்துள்ளது.

வட ஈராக்கில் துருக்கிய இராணுவம் எப்போது, எந்த அளவில் தலையிடும் என்பது இன்னும் தெளிவில்லாமலேயே இருக்கிறது. எவ்வாறிருப்பினும், எவ்விதமான பெரிய அளவிலான நடவடிக்கைகளும் ஈராக், துருக்கி மற்றும் மத்திய கிழக்கு முழுமைக்கும் பாரிய விளைவுகளை ஏற்படுத்தும். துருக்கிய அரசாங்கத்தின் இந்த முடிவால், வட ஈராக்கில் குடிமக்களும் மற்றும் அகதிகளும் மேலும் துன்பப்படுவார்கள் என்பதுடன் கிழக்கு துருக்கியில் வாழும் குர்திஷ் மக்களும் இதனால் பாதிக்கப்படுவார்கள். இது துருக்கிய அரசியல் வாழ்வில் இராணுவத்தின் நிலையை வலுப்படுத்தும் என்பதுடன், நாட்டை நேரடியாக இரத்தம் தோய்ந்த படுகொலைகளுக்கு இட்டுச்செல்லும்.

நேட்டோ (NATO) உறுப்பினரான துருக்கி இப்பகுதியில் ஒரு மிகப் பெரிய இராணுவ பலத்தை கொண்டுள்ளது, ஆனால் இதுவரை ஒரு மிகவும் கட்டுப்படுத்தப்பட்ட வெளிநாட்டு கொள்கையை கடைப்பிடித்து வந்துள்ளது. துருக்கியின் மிகவும் தீவிரமான இராணுவ பங்கு, ஈராக் யுத்தத்தால் ஏற்கனவே குழப்பத்தில் மூழ்கடிக்கப்பட்டிருக்கும் மத்திய கிழக்கில் மேலாதிக்கம் செலுத்த முயலும் பிற பிராந்திய சக்திகளுடனான அதனது போட்டியை தீவிரமாக்கும்.

ஈராக்கிய மலைகளில் நிறுத்தப்பட்டிருப்பதாக கணக்கிடப்பட்டுள்ள சுமார் 3,000 குர்திஷ் தொழிலாளர் கட்சி (PKK) போராளிகளை மட்டும் நசுக்க துருக்கிய ஜெனரல்கள் விரும்பவில்லை. ஆனால் அவர்கள் வட ஈராக்கில் சுதந்திர குர்திஷ் அரசு ஒன்று உருவாகுவதை தடுக்க விரும்புகிறார்கள். அமெரிக்க ஆக்கிரமிப்பால் ஏற்பட்ட படுவீழ்ச்சியில் இருந்து இவ்வாறான ஒரு தனி அரசு உருவாகுவதற்கான சாத்தியப்பாடுகள் காணப்படுகின்றன. இது போன்ற ஒரு அரசு துருக்கியில் உள்ள குர்திஷ்கள் மத்தியில் உள்ள பிரிவினைவாத மனப்போக்கை ஊக்குவிக்கும் என கருதப்படுவதுடன், நாட்டின் ஆதிக்கத்திற்குட்பட்ட பிராந்திய ஐக்கியத்திற்கும் அச்சுறுத்தலாக அமையும் என அஞ்சப்படுகிறது.

துருக்கிய தாக்குதல், மெளசூத் பர்ஜானியின் கீழிருக்கும் வட ஈராக் பிராந்திய அரசாங்க படைகளுடன் ஒரு நேரடி எதிர் தாக்குதலுக்கு இட்டுச்செல்லும். துருக்கிய திடீர் படையெடுப்பை தடுப்பதற்கு பர்ஜானியும் மற்றைய வட ஈராக் குர்திஷ்களின் பிற பிரதிநிதிகளும் தங்களின் துருப்புகளை பயன்படுத்தபோவதாக பல மாதங்களுக்கு முன்னர் அச்சுறுத்தினர்.

ஈராக்கில் தலையிடுவது குறித்து துருக்கி கருத்தை மாற்றி கொள்ள வேண்டுமென அமெரிக்க அரசாங்கம் சில காலம் வேண்டி கொண்டிருந்தது. அமெரிக்க ஆக்கிரமிப்புக்கு நம்பத்தக்க ஆதரவாளர்களில் மிகவும் நம்பிக்கையானவர்களாக ஈராக்கிய குர்திஷ் தலைவர்கள் இருந்தனர். மற்றும் வடக்கு ஈராக் தற்போதும் கூட ஸ்திரமாக இருப்பதாக கருதப்படுகிறது. மறுபுறம் பார்க்கும் போது, ஒரு துருக்கி தாக்குதல் என்பது ஈராக்கில் ஒரு புது யுத்தமுனையை தோற்றுவிக்கலாம்.

சமீபத்திய ஆண்டுகளில் அன்காரா மற்றும் வாஷிங்டன் இடையேயான உறவுகள் குறிப்பிடத்தக்க அளவில் உறைவடைந்துள்ளது. உள்நாட்டு காரணங்களை முன்னிட்டு ஈராக்கிய குர்திஷ் தலைவர்கள் குர்திஷ் தொழிலாளர் கட்சியை வெளியேற்ற கடுமையான நடவடிக்கை எடுக்க முடியாதுள்ளதுடன், அளிக்கப்பட்ட வாக்குறுதிகளின்படி, அமெரிக்காவோ அல்லது குர்திஷ் பிராந்திய அரசாங்கமோ குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு எதிராக எவ்வித நடவடிக்கையும் தொடரவில்லை. மேலும், தெஹ்ரான் ஆட்சியை நிலை குலைக்க குர்திஷ் தொழிலாளர் கட்சியுடன் நெருங்கிய தொடர்புடையதாக குற்றஞ்சாட்டப்பட்ட ஓர் ஈரானிய குர்திஷ் அமைப்பான குர்திஷ்தான் சுதந்திர வாழ்க்கை கட்சிக்கு (Party for a Free Life in Kurdistan (PJAK) அமெரிக்கா ஆதரவளிக்கிறது.

துருக்கிய அரசாங்கம் தமது நிலைப்பாட்டை மாற்றுவதற்கான காரணம், கடந்த 12 ஆண்டுகளில் குர்திஷ் தொழிலாளர் கட்சியால் மிக பெரிய தாக்குதல் நடத்தப்பட்டதாகும். குர்திஷ் தொழிலாளர் கட்சியால் நடத்தப்பட்ட தாக்குதலின் விளைவாக கடந்த வார இறுதியில் சுமார் 15 துருக்கி படையினர் கொல்லப்பட்டனர். அதற்கு ஒரு வாரம் முன்னதாக, "கிராம பாதுகாவலர்" என்போர் உள்பட 12 கிராமவாசிகள் ஒரு சிற்றூர்தியில் சுட்டு கொல்லப்பட்டனர். இருப்பினும், இந்த பிந்தைய தாக்குதலுக்கு குர்திஷ் தொழிலாளர் கட்சி பொறுப்பேற்க மறுத்துவிட்டது.

இத்தாக்குதல்களை வலதுசாரி துருக்கிய ஊடகளும் மற்றும் கட்சிகளும் இனவாத கூச்சல்களுடன் எதிர்ப்பு தெரிவித்தன. தினசரி செய்திதாள்களின் தலைப்பு பக்கங்களில் அன்றாடம் இறப்பு பற்றிய செய்திகள் வெளியாயின. ஈராக் மீதான ஒரு தாக்குதலுக்கு பரபரப்பு பத்திரிகையான Hürriyet பெருங்குரல் எழுப்பியது. கொல்லப்பட்ட படையினரின் இறுதி மரியாதையில் அங்காரா மற்றும் டிரப்ஜான் நகரில் ஆயிரக்கணக்கானவர்கள் பங்கெடுத்து கொண்டனர். பேராசிரியர்கள் மற்றும் மாணவர்கள் மெளன ஊர்வலம் நடத்தினர். இஸ்தான்புல்லிலும் இதன் எதிரொலிப்பு இருந்தது.

இந்த பிரச்சாரத்தில் அமெரிக்க எதிர்ப்பு குரல் மிகவும் வெளிப்படையாக இருந்தது. துருக்கி தேசியவாத CHP (மக்கள் குடியரசு கட்சி) தலைவர் டெனிஸ் பேகல், துருக்கியைப் பிரிக்க அமெரிக்கா குர்திஷ் தொழிலாளர் கட்சியை பயன்படுத்துவதாக குற்றஞ்சாட்டினார். பாசிஸ்ட் MHP (தேசியவாத அமைப்பு கட்சி) தலைவர் டெவ்லெட் பஹ்செல், வடக்கு ஈராக் மீதான ஒரு தாக்குதலுக்காக ஒரு பகிரங்க வாக்கெடுப்பு நடாத்த அழைப்பு விடுத்தார்.

92 ஆண்டுகளுக்கு முன்னர் துருக்கியால் ஆர்மீனியர்கள் மீது நடத்தப்பட்ட படுகொலைகளை, "இனப்படுகொலை" என்று வரையறைப்படுத்திய அமெரிக்க பிரதிநிதிகள் சபையின் வெளியுறவுத்துறை குழுவால் நிறைவேற்றப்பட்ட ஒரு தீர்மானம் மேலும் விரோதத்தை மட்டுமே வளர்க்க சேவை செய்தது. இந்த தீர்மானம் அடுத்து முழு சபையின் வாக்கெடுப்புக்கு உட்படுத்தப்பட உள்ளது.

துருக்கிய தேசியவாதிகளுக்கு, ஆர்மீனியன்களின் படுகொலை என்பது ஒரு தடைசெய்யப்பட்ட (பேசக்கூடாத) பிரச்சனையாகும். இனப்படுகொலை என்ற இந்த வார்த்தையை உபயோகிக்கும் எவரும் சட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்டு அதன் விளைவாக சிறைத் தண்டனையை அல்லது மரண அச்சுறுத்தல்களையும் கூட பெறுவார்.

தீர்மானம் நிறைவேற்றுப்படுவதை தடுப்பதற்கு, ஈராக்கிலுள்ள அமெரிக்க ஆக்கிரமிப்பு படைகளுக்கு ஒரு முக்கிய வினியோக பாதையாக Incirlik நகரில் இருந்து வரும் இராணுவ தளத்தை மூடுமாறு அன்காராவில் அச்சுறுத்தல்கள் விடுக்கப்பட்டது. அமெரிக்க ஜனாதிபதி ஜோர்ஜ் டபிள்யூ. புஷ், வெளிவிவகார அமைச்சர் கொண்டலீசா ரைஸ் மற்றும் பாதுகாப்பு மந்திரி ரோபர்ட் கேட்ஸ் ஆகியோர் அன்காராவுடனான பதட்டங்கள் தீவிரமடைவதை எவ்விதத்திலும் தவிர்க்க, ஆர்மேனிய தீர்மானம் நிறைவேற்றப்படுவதை தடுக்க முயன்றனர்.

துருக்கியின் அதிகரித்த வெளியுறவு கொள்கை ஈடுபாடு அப்பகுதிகளில் அமெரிக்கா அதன் சொந்த நலன்களை விரிவுபடுத்தி கொள்ள ஒரு பரவலான வாய்ப்பாக வாஷிங்டனில் கருதப்படுகின்றது.

Foreign Affairs என்ற இதழின் ஜூலை-ஆகஸ்ட் பதிப்பில் வெளியான ஒரு கட்டுரை குறிப்பிடுவதாவது: "பல தசாப்தங்களாக முடங்கி இருந்த துருக்கி, தற்போது மத்திய கிழக்கில் ஒரு முக்கிய இராஜாங்க பாத்திரம் வகிப்பாளராக வளர்ந்து வருகிறது." இந்த நாடு சரியாக "கவனிக்கப்படுமேயானால்.... மத்திய கிழக்கிற்கு ஒரு பாலமாக துருக்கியை பயன்படுத்திக் கொள்ள வாஷிங்டனுக்கும் மற்றும் அதன் மேற்கத்திய கூட்டாளிகளுக்கும் ஒரு வாய்ப்பாக அமையும்."

எவ்வாறிருப்பினும், குர்திஷ் தொழிலாளர் கட்சியின் பங்கு தொடர்பான துருக்கியின் கவலைகளை முக்கியமாக கவனத்திற்கெடுத்தால் என தொடரும் இந்த கட்டுரை - இது போன்ற ஒரு நடவடிக்கை கட்டுப்பாட்டுக்கு உட்பட்டதே என குறிப்பிடுகிறது.

இந்த விடயத்தில், அமெரிக்க வெளியுறவு கொள்கை ஒரு முக்கிய குழப்ப நிலையை எதிர்நோக்குகின்றது. அது துருக்கிய இராணுவத்திற்கும் குர்திஷ் தேசியவாதிகளுக்கும் இடையே முடிவெடுக்க வேண்டும். இவர்களின் ஆதரவு ஈராக்கில் உள்ள அமெரிக்காவிற்கு மிக அவசியமாகும். குர்திஷ் தொழிலாளர் கட்சிக்கு எதிராக செயல்பட துருக்கிய இராணுவத்திற்கு அமெரிக்கா சுதந்திரம் அளிக்குமேயானால், அதன் விளைவு வடக்கு ஈராக்கின் தவிர்க்க முடியாதபடி ஸ்திரமற்றநிலைக்கு இட்டுச்செல்லும். துருக்கி இராணுவம் அதன் பங்கிற்கு, ஈராக்கில் குர்திஷ் தேசியவாதிகளுக்கு எவ்விதமான சலுகைகள் வழங்குவதையும் எதிர்ப்பதில் பிடிவாதமாக இருக்கிறது.

அரசாங்கம் மற்றும் இராணுவத்திற்கு இடையில் இருக்கும் குழப்பங்களை பொருட்படுத்தாமல், வாஷிங்டனுடன் உடன்பாடுகொண்டிராத அதனது சொந்த நலன்களை அன்காரா கூடிய கவனத்திற்கு எடுத்துக்கொண்டுள்ளது. ஈரானிய அணுசக்தி திட்டத்தை எதிர்ப்பதற்கான தேவையின் மீது துருக்கிய அரசாங்கம் வாஷிங்டனுடன் ஒத்து வருகிறது, ஆனால் நீண்ட காலமாக இருந்து வரும் குர்திஷுடனான அதன் குழப்பங்களை தீர்க்க தெஹ்ரான் மற்றும் சிரியா ஆகிய இரண்டின் ஒத்தழைப்பையும் விரும்புகிறது. ஈரான் மற்றும் சிரியா இரண்டுமே செல்வாக்குள்ள குர்திஷ் சிறுபான்மையினரின் இருப்பிடமாக இருக்கின்றன மற்றும் பிரிவினைவாதிகளின் செயல்பாடுகளின் விளைவுகளும் அச்சமூட்டுகின்றன.

துருக்கியும் அதன் பொருளாதார ஒத்துழைப்பை ஈரானுடன் அதிகரித்து வருகிறது. அமெரிக்காவின் விருப்பத்திற்கு மாறாக, துருக்கி அரசாங்கம் திட்டமிட்டுள்ள நபுக்கோ குழாய் அமைப்பு என்ற ஒரு பெரிய திட்டத்தில் ஈரானின் இயற்கை வாயு வளங்களை இணைத்துக் கொள்ள விரும்புகிறது. இந்த குழாய் அமைப்பு பால்கன் வழியாக மேற்கு ஐரோப்பாவை துருக்கியுடன் இணைக்கும்.