WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French workers speak out against social welfare cuts
சமூகநலச் செலவினங்கள் குறைப்புக்களுக்கு எதிராக பிரெஞ்சு தொழிலாளர்கள் கருத்து
By a reporting team
20 October 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
அக்டோபர் 18ம் தேதி சமூக உரிமைகள், வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றின் மீதான
மிகப் பெரிய தாக்குதல்களின் ஒரு பகுதியாக வலதுசாரி நிக்கோலா சார்கோசியின் அரசாங்கம் பொதுத்
தொழிலாளர்களின் ஓய்வூதிய நலன்கள் மீது தாக்குதலை நடத்துவதற்கு எதிராக நூறாயிரக்கணக்கான பிரெஞ்சு
தொழிலாளிகளும் மற்றவர்களும் அணிவகுத்துச் சென்றனர்.
WSWS நிருபர் குழு ஒன்று பாரிசில் ஆர்ப்பாட்டக்காரர்களை
பேட்டி கண்டது.
Suez விசை நிறுவனத்தில் வேலை
பார்க்கும் ஜமெல்:
"தொழிலாளர்களின் சிறப்பு திட்ட ஓய்வூதியங்கள்தான் என்னை போராடத் தூண்டுகிறது.
அரசாங்கம் எங்கள் சம்பளப் பங்களிப்புக்கள் 37.5 ஆண்டுகளில் இருந்து 41 ஆண்டுகள், பின்னர் 42 ஆண்டுகள்
இருக்க வேண்டும் என விரும்புகிறது. அரசாங்கம் தகர்க்க விரும்பும் எங்கள் சமூக உரிமைகள் இவையாகும். இதன்
பின்னர் போக்குவரத்துத் துறைக்கான "குறைந்தபட்ச சேவை" அதுவாக இருக்கும், அதாவது, அவர்கள் அழிக்க
விரும்புவது வேலைநிறுத்த உரிமையாக இருக்கும்.
"மக்கள் விழித்துக் கொண்டால், அரசாங்கத்தைப் பின்வாங்குமாறு கட்டாயப்படுத்த
முடியும். முதல் வேலை ஒப்பந்தத்திற்கு (CPE)
எதிரான போராட்டம் 2006ல் நடைபெற்றபோது, மக்கள் மகத்தான
அளவில் திரண்டு எழுந்ததால் அவர்கள் பின் வாங்கினர்.
"ஓய்வு பெற்றவர்களுக்கு, முதியவர்களுக்கு மற்றும் நோய்வாய்ப்பட்டிருப்பவர்களுக்கு
அவர்கள் கொடுக்க வேண்டிய பணத்தில் கைவைக்கப்படக்கூடாது. முதலாளிகளுக்கு கொடுக்கும் வரிக் குறைப்புக்களை
பாருங்கள். அங்கிருந்துதான் பணம் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும். சோசலிஸ்ட் கட்சியும் ஜனாதிபதி [நிக்கோலஸ்]
சார்கோசியும் ஒன்றுதான். ஒரே கொள்கைதான்."
ஆசிரியர் அலன்:
சமத்துவமற்ற தன்மைதான் என்னைப் போராடத் தூண்டுகிறது. ஒருவேளை அரசாங்கம்
பின்வாங்கக்கூடும். பல வேறுபட்ட நோக்கங்களுக்காக மக்கள் ஐக்கியப்பட வேண்டும். அரசாங்கப் பொறுப்பை எடுத்துக்
கொண்டு ஐந்து மாதங்களுக்குள், அரசாங்கம் வீடற்ற மக்களை தெருக்களில்தான் நிறுத்தியுள்ளனர். சீர்திருத்தங்களுக்கு
எதிராக மக்கள் இல்லை; ஆனால் அதற்காக எல்லாவற்றையும் பொறுத்துக் கொள்ள முடியாது.
"மக்களுடைய வாழ்க்கைத் தரத்தை குறைக்காமல் பொருளாதாரம் போட்டித் தன்மையில்
வைக்கப்பட முடியும். ஆனால் அரசாங்கம் தொழிலாளர்களுக்கு சம்பளம் கொடுப்பதற்கு பதிலாக பங்குதாரர்களுக்கு
இலாபம் கொடுக்க விரும்புகிறது. போட்டித் தன்மை சரிதான், அது முன்னேற்றத்தை ஊக்குவிக்கும்; ஆனால் நியாயமான
போட்டியாக இருக்க வேண்டும். அனைத்து நாடுகளுக்கும் விதிகள் ஒன்றுபோல் இல்லை. இது ஒரு காடாக இருக்கிறது.
"நலிந்தவர்கள்தான் போருக்கான விலையைக் கொடுக்கிறார்கள், தலைவர்கள்
அல்ல, அவர்கள் இலாபம்தான் அடைகிறார்கள் என்பதை அனைத்துப் போர்களும் எப்போதும் நமக்குக் காட்டியுள்ளன."
ஒரு இரயில்வே தொழிலாளியான கார்ல்
"நான் சார்க்கோசியின் கொள்கைக்கு எதிரானவன். இரண்டாம் உலகப் போருக்குப்
பின் அடைந்த அனைத்து சமூக நலன்களையும் இது தகர்க்கிறது. நிறுவனங்கள் தங்கள் பணப்பையை பெரிதாக்கிக்
கொள்ளும்போது, தியாகம் செய்யவேண்டும் என்று சாதாரண மக்கள் ஏன் எப்பொழுதும் கேட்கப்படுகிறார்கள்?
போட்டி சிறந்ததுதான், ஆனால் அது மனிதர்களிடையே போட்டி என்று இருக்க வேண்டும். சீனா போன்ற நாடுகளுடனான
போட்டி பற்றி நாம் பேசவில்லை. எப்படி அங்கே மக்கள் வாழ்கிறார்கள் என்று பாருங்கள். பெரு நிறுவனங்களுக்கு
முறையாக எதிராக இருந்தாகவேண்டும் என்று இல்லை; ஆனால் பெருநிறுவனங்கள் பற்றி ஒரு சமூகக் கொள்கை நமக்குத்
தேவை.
"அனைத்து நாடுகளின் தொழிலாளர்களையும் ஒன்றுபடுத்தும் கட்சி என்பதில் நான்
உடன்படுகிறேன். இதுபோல் ஒன்று வேண்டும் என்றுதான் பல ஆண்டுகளாக நம்பிக்கை கொண்டிருக்கிறோம். அதைக்
கட்டியமைப்பது கடினம். ஆனால் ஒரே போராட்டத்தில் நாம் அனைவரும் ஐக்கியப்பட்டு இருக்க வேண்டும்."
வேலையிழந்த தொழிலாளி:
"போராட வேண்டும் என்ற முடிவிற்கு நான் வந்துள்ளதற்கு காரணம் முதலாளித்துவ
தடையற்ற சந்தைக் கொள்கையாகும். நாசத்தையும், அழிவையும் நோக்கி நாம் சென்று கொண்டிருக்கிறோம்.
அரசாங்கத்தை பின் வாங்க வைப்பதற்கு, காலவரையற்ற ஒரு பொது வேலைநிறுத்தம் நமக்குத் தேவைப்படுகிறது.
1995ல் அது பலனளித்தது. அதேதான் இப்பொழுதும் நமக்கு வேண்டும்."
வெள்ளி காலை பாரிசின்
Gare du Nord
ல் பேட்டி காணப்பட்ட இரயில்வே தொழிலாளி Juan
Aliart:
"தொழிலாளர்கள் வேலைக்கு திரும்புகிறார்கள் என்று நிர்வாகம் கூறுகிறது. பரந்த
கூட்டங்களில் வேலைநிறுத்தம் தொடரப்பட வேண்டும் என்பதற்காக விவாதங்கள் நடைபெற்று வருகின்றன. ஏற்கனவே
TGV
யின் இரு பராமரிப்பு தொழிற்சாலைகள், Thalys,
Eurostar [உயர் வேக இரயில்கள்] வேலைநிறுத்தம் தொடர
வேண்டும் என்று வாக்களித்துள்ளது. Moulin Neuf
தொழிற்கூடமும்தான்.
"டிரைவர்களும் டிக்கட் பரிசோதகர்களும் பரந்த கூட்டங்களில் விவாதித்தனர்.
அவர்களுடைய முடிவுகளை நண்பகலுக்குள் அறிவோம்.
FGAAC [சுதந்திர இரயில் டிரைவர்களுடைய தொழிற்சங்கம்,
அரசாங்கத்துடன் ஒரு சமரச உடன்பாட்டை ஏற்படுத்திக் கொண்டிருந்தது] தங்கள் தொழிற்சங்கம்
கையெழுத்திட்டிருந்த ஆவணத்துடன் உடன்பாடு கொள்ளவில்லை; அதேபோல் அவர்கள் விடுத்த வேலைநிறுத்தத்தை
நிறுத்தும் அழைப்பையும் ஏற்கவில்லை. இப்பொழுது அவர்கள் ஒருவரோடு ஒருவர் பூசலிட்டுக் கொண்டிருக்கின்றனர்.
அவர்கள் 55 வயதுவரை பணியில் இருப்பர் அவர்களுடைய இணை ஓய்வூதியம், (Complementary
pension) முதலீட்டின் அடிப்படையை தளமாக கொண்டு
இருக்கும். அவர்கள் தங்கள் Gare de Nord
பிரதிநிதியை தேசியத் தலைமையுடன் பேசித் தீர்க்கவும் அனுப்பியுள்ளனர்.
"இங்கே CGT [கம்யூனிஸ்ட்
கட்சித் தலைமை நடத்தும் தொழிற்சங்க கூட்டமைப்பு] இன் அங்கத்தவர்கள் பணியிடங்களில் வேலை நிறுத்தத்தை
தொடர வாக்களித்துள்ளனர்; அதே போல்தான் டிக்கட் சோதனை அலுவர்களும் மற்றவர்களும் முடிவெடுத்துள்ளனர்.
CGT
அதிகாரத்துவத்திற்கும் FGAAC
மற்றும் அதன் உறுப்பினர்களுக்கும் இடையே பிளவு உள்ளது. அவர்கள் உண்மையான கிளர்ச்சி எழுச்சியில் உள்ளனர்.
"அரசாங்கம், CGT
பொதுச் செயலாளர் பேர்னார்ட் திபோவுடன் பேச்சுவார்த்தை நடத்தும் என்று நாங்கள் கருதிகிறோம்; அதிகாரத்துவம்
நெருக்கடியில் இருந்து தப்பிக்க ஒரு சில குறைந்த சலுகைகளை பெற முயலும். அது தவறாகப் போகுமானால்,
தொழிற்சங்கங்கள் மற்றும் CGT
யிடம் நம்பிக்கை ஏதும் இனி இராது. அரசாங்கம்
FGAAC ஆதரவைக் கொண்டுள்ளது;
CGT யும் இப்பொழுது
செய்துகொண்டிருப்பதைவிட இன்னும் அதிகமாக, போராட்ட வேகத்தை குறைக்க சில போலிக் காரணங்களை
கொடுக்கப்போகிறது."
CGT ஏன் அப்படிச் செய்யவேண்டும்
என்று ஒரு WSWS
நிருபர் கேட்டார். அதற்கு அவர் மூன்று காரணங்களை கொடுத்தார்:
"முதலில் CGT
யின் தலைமை, CFDT
(சோசலிஸ்ட் கட்சியிடன் இணைந்துள்ள தொழிற்சங்கக் கூட்டமைப்பு) போலவேதான் செயல்படுகிறது. நான் அதில்
1995ல் இருந்தேன். அப்பொழுது கோலிச பிரதம மந்திரியாக இருந்த அலன் யூப்பேயுடன் அது சேர்ந்து
கொண்டு, போராட்டத்தை தவிர்த்தது. அதுதான் SUD
தொழிற்சங்கம் தோற்றுவிக்கப்பட காரணமாக இருந்தது.
இரண்டாவதாக, பல சந்தேகத்திற்குரிய விஷயங்கள் உள்ளன;
தொழிற்சங்கங்களுக்கு நிதி வழங்குவதாக கூறப்படும், கள்ள நிதியான
(Slush fund) Medef (முதலாளிகள்
கூட்டமைப்பு) நிதி பற்றிய பிரச்சினையும் உள்ளது. CGT
மிகப் பெரிய செலவுகள் நிறைந்த கருவியைக் கொண்டிருக்கிறது மற்றும் அதை நடத்துவதற்கே அதிகப் பணம் தேவைப்படும்.
"மூன்றாவதாக, CGT,
கூட்டு நிர்வாக அமைப்புக்களில் UNEDIC, ASSEDIC
(முதலாளிகள்-தொழிற்சங்க கூட்டு நிதியம், வேலையற்றோர் நலன்களுக்கு
வழங்கப்படுவது) சேர்ந்து கொள்ள விரும்புகிறது."
நிர்வாகம் கள்ளத்தனமாக தொழிலாளர்களை மீண்டும் வேலைக்கு திரும்புமாறு செய்வதை
தடுக்கும் வகையில் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்கள் குழுக்கள் பணிமனைகளிலேயே இரவைக் கழித்ததாக
WSWS
இடம் Juan
தெரிவித்தார். |