World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French workers oppose "tax" on medical treatment

மருத்துவ பராமரிப்பின் மீதான "வரிக்கு" பிரஞ்சு தொழிலாளர்கள் எதிர்ப்பு

By our reporters
18 October 2007

Back to screen version

சமூகப் பாதுகாப்பு செலவினங்களில் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் அறிவிக்கப்பட்ட வெட்டுக்கு எதிரான தொழிலாளர்களின் முதல் அணிதிரளலில் அக்டோபர் 13 அன்று பாரிசில் மொன்பரனாஸ் இலிருந்து சுமார் 15,000 பேர் அணி வகுத்தனர்.

இவ் ஆர்ப்பாட்டமானது ஊனமுற்றோர் மற்றும் வேலையில் காயமுற்று பாதிக்கப்பட்டோரின் தேசிய கூட்டமைப்பு (National Federation of Handicapped and Work Injury Victims - Fnath) மற்றும் கல்நார் (Asbestos) இழையால் பாதிக்கப்பட்டோருக்கான தேசிய பாதுகாப்பு சங்கம் (National Association for the Defence of Asbestos Victims - ANDEVA) ஆகியவற்றால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது. முதலாளிகள் மற்றும் அரசாங்கத்தின் குற்றகரமான அலட்சியப்போக்கின் விளைவாக அடுத்த 20 ஆண்டுகளில் கூடுதலாக 100,000 பேர் பாதிக்கப்படுவர் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அது கம்யூனிஸ்ட் கட்சி தலைமையிலான தொழிலாளர் பொது சம்மேளனத்தாலும் (CGT) ஆதரிக்கப்பட்டது.

பெரும் CGT பிரிவுகளுக்கு அப்பால், பல்வேறு தீவிரப்போக்குடைய குழுக்களும் சரியாக விளம்பரப்படுத்தப்படாத இந்நிகழ்ச்சியில் பங்கேற்றனர். சில அணிசேரா அல்லது தொழிற்சங்கத்தில் சேராத இளம் உறுப்பினர்களும் பங்கேற்றனர். குறைவான வருகையில் இன்னொரு அம்சம் பிரான்சில் நடைபெற்றுக்கொண்டிருக்கும் ரக்பி உலக கோப்பை பற்றி செய்தி ஊடகங்களில் நன்கு வரவேற்கும் செய்தி ஒருங்குவிப்பு இருந்தது. குறுகிய வெறியுடன் வர்க்கப் போராட்டத்தை மூச்சுத்திணறடிக்கச்செய்யும் இம்முயற்சியை எதிகொள்வதற்கு தொழிற்சங்கங்கள் முயற்சி ஒன்றும் செய்யவில்லை மற்றும் தொழிற்துறை நடவடிக்கையால் விளையாட்டுக்கள் இடையூறுக்குள்ளாகமாட்டா என உத்தரவாதங்களை வழங்கின.

உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் , "பிரான்ஸ்: சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்திற்கு புதிய அரசியல் முன்னோக்கு தேவை" என்ற அறிக்கைகளை ஆயிரக் கணக்கில் வழங்கினர்.

இந்த ஆர்ப்பாட்டமானது மருத்துவரால் குறிப்பிடப்படும் மருந்து ஒவ்வொன்றுக்கும் 50 சென்ரீம் (பைசாவிற்கு இணையானது) நிலையான கட்டணம் ஒன்றை அறிமுகப்படுத்துவதற்கு எதிரான சிறப்பான எதிர்ப்பாகும். இது 2008ல் நடைமுறைக்கு வரும் மற்றும் குறிப்பிட்ட மருத்துகளுக்கான திரும்பத்தரும் நிதிகளின் குறைத்தல்களை பின்பற்றும் மற்றும் கடந்த காலகட்டத்தில் மருத்துவ ஆலோசனைகளுக்காக நிலையான கட்டணம் நிர்ணயிக்கப்பட்டது. இருந்தும் இக்கட்டணங்கள் ஒரு ஆளுக்கு ஒரு ஆண்டுக்கு 50 யூரோக்கள் என்று மட்டுப்படுத்தப்பட்டன, ஆனால் அவர்கள் நோயாளிகள் பெரும் சுமைகளுக்கு ஆளாகக்கூடியவகையில் கதவை திறந்துவிட்டுள்ளனர்.

இந்தக் கட்டணங்கள் ஒப்பீட்டளவில் எங்கும் கிடைக்கக்கூடியாக இருந்த இலவச மருத்துவ பராமரிப்பிற்கான சமூகப்பாதுகாப்பு காப்பீட்டை நம்பியிருக்கும் தொழிலாளர்களை கடுமையாக பாதிக்கும். ஆயினும், பெரிதும் பாதிக்கப்பட்டவர்கள் நீண்டகாலம் நோய்வாய்ப்பட்டவர்கள், நோய்கள் மற்றும் ஊனமுற்றவர்கள் ஆவர். விபத்தில் பாதிக்கப்பட்டோர் சம்மேளனம் 50 சென்ரீம் கட்டணத்தை "நோய்வாய்ப்பட்டிருப்பவர் மீதான வரி" என்று சுருக்கிக் கூறியது.

அரசாங்கம் முன்கூட்டியே 12 பில்லியன் யூரோக்கள் என மதிப்பிட்ட 2007க்கான சமூகப் பாதுகாப்பு செலவீன பற்றாக்குறையை (2006ல் 8.7 பில்லியன் யூரோக்கள்) வருவதுவரட்டும் என குறைப்பதற்கு நோக்கங் கொண்டுள்ளது. சமூகப் பாதுகாப்பு முறையின் மருத்துவ அங்கமான, மருத்துவ செலவு செய்த பணத்தை திருப்பிப் பெறுவத்றகான அரசாங்க தேசிய காப்பீட்டுக் கழகம் (CNAM) இந்நடவடிக்கைகளை எதிர்க்கிறது: மருந்துகளை குறித்து எழுதுபவர்கள் நோயாளிகள் அல்லர் என்பதால், மக்களை அதற்கு மிகவும் பொறுப்பாக்குவதில் அவர்கள் எவ்வித தர்க்கரீதியான பொருத்தத்தையும் கொள்ளவில்லை, நீண்டகாலப் போக்கில் அவர்கள் மருத்துவ சிகிச்சையை கைவிடுமாறு நோயாளிகளுக்கு அழுத்தம் கொடுப்பர்.

சுகாதார பராமரிப்பின் மீதான வரிவிதிப்பின் மீது தொழிலாளர் கொண்ட கோபமானது சார்க்கோசியின் ஜூலை பட்ஜெட்டில் செல்வந்தர்களுக்கான 15 பில்லியன் யூரோக்கள் ஆத்திரமூட்டும் வரிச்சலுகைகளால் மேலும் பெருகியது. இந்த அவமதிப்பானது ஏர்பஸ் உள் வியாபார ஊழலால் மேலும் அதிகரித்தது, அதில் Arnaud Lagardère போன்ற சார்க்கோசியின் நெருங்கிய நண்பர்கள் 90 மில்லியன் யூரோக்களை இலாபமாக்குவதற்கு ஏர்பஸ் பங்குகளை அரசாங்கத்தின் தலையில் இறக்கிவைத்தனர். அதேபோன்று EADS ல் (ஏர்பஸ்ஸின் தாய் நிறுவனத்தில்) 1200 உயர் மேலாளர்கள் இந்த பேரத்தில் சம்பந்தப்பட்டிருப்பதாக சந்தேகிக்கப்படுகிறது.

பொது சுகாதாரக் காப்பீடுகளில் இந்த அத்துமீறல்களுக்கு எதிரான எதிர்ப்பிற்கான தொழிற்சங்கத்தின் ஆதரவு மட்டுப்படுத்தப்பட்டதாகும். போக்குவரத்து துறையில் உள்ள தொழிற்சங்கங்கள் தங்கள் கவனம் முழுதையும், 1.9 மில்லியன் இரயில்வே, நகரப் போக்குவரத்து, எரிவாயு மற்றும் மின்சாரத் தொழிலாளர்கள் மற்றும் ஏனையோருக்கான ஓய்வூதியத்திட்டங்களான, சிறப்புத்திட்ட (Régimes spéciaux) ஓய்வூதிய முறையை பாதுகாப்பதற்கான அக்டோபர் 18 ஒரு நாள் எதிர்ப்பு வேலைநிறுத்தத்தின் மீது ஒருங்குவித்துள்ளன. இவ்வெதிர்ப்பானது சார்க்கோசி அரசாங்கத்தின் முழு வேலைத்திட்டத்திற்கும் எதிராக அதனை தோற்கடிப்பதற்கு தொழிலாள வர்க்கத்தின் முழு சக்தியையும் அணிதிரட்டுவதை காட்டிலும் சக்தியின் கணிசமான முக்கிய பகுதியை கைவிடுவதற்காக வடிவமைக்கப்பட்டது.

அக்டோபர் 18 வேலை நிறுத்தம் அன்று உண்மையில் பொதுப் போக்குவத்தை ஸ்தம்பிக்கச் செய்யும் என்பதற்கான அனைத்து அறிகுறிகளும் தென்படுகின்றன: அது தேசிய மற்றும் சர்வதேசிய அமைப்புக்கள் அளவில் மற்றும் அதேபோல பிராந்திய மற்றும் நகராட்சி வலைப்பின்னல்களிலும் போக்குவரத்து தொழிலாளர்களால் பெருமளவில் ஆதரிக்கப்படும்.

பிரச்சினைகள் தொழிற்சங்கங்களால் தனித்தனியாகப் பிரிக்கப்படுவது அரசாங்கத்திற்கும் ஜனநாயக மற்றும் சமூக உரிமைகள் மீதான அதன் தாக்குதலுக்கும் எதிரான ஒரு ஐக்கியப்பட்ட தொழிலாள வர்க்க எதிர்ப்பைத் தடுக்கும் மூலோபாயத்தின் பகுதியாகும். மாறாக, அரசாங்கத்தின் விட்டுக்கொடாத தன்மை குந்தகமற்றதாக இருக்க முடியாது: எலீசே மாளிகையில் சார்க்கோசியின் தனிச்செயலர் Claude Guéant, சார்க்கோசி, இறுதிவரை போகும் எண்ணத்தில் இருக்கிறார்... பின்வாங்குவது சாத்தியமில்லை" என்று அறிவித்தார். 1995லோ ஓய்வூதிய சீர்திருத்தத்திற்கு பரந்த வெகுஜனங்களின் எதிர்ப்பால் அலன் யூப்பே-இன் பழமைவாத அரசாங்கம் ஆட்டம் கண்டபோது, Guéant "பிரான்ஸ் மாறிவிட்டது, நாம்தான் தீர்மானிக்கின்றோம்" என்று வலியுறுத்தினார்.

ஒருநாள் வேலைநிறுத்தத்தின் பயனற்றதன்மையும் சார்க்கோசி அரசாங்கத்துடனான எந்தவித சீரிய மோதலையும் தடுப்பதற்கான ஆவலும் தொழிற்சங்கங்களை மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு வெறும் வேண்டுகோள் விடுக்கவே விடுகின்றன. CGT தலைவர் Bernard Thibault, நடவடிக்கை தொடர்பாக சந்தர்ப்பத்திற்கேற்றவாறு, "அக்டோபர் 18க்குப் பின்னர் விரைவில் இன்னொரு வேலைநிறுத்தம் இருக்கும்" என்று கூறிக் கொண்டு, அதேவேளை "சீர்திருத்தத்தை தீர்மானிக்கும், அதன் பின்னர் அதோடு ஒத்துச்செல்லுமாறு எங்களைக் கேட்கும் போக்கை" உடையது அரசாங்கம் என்று புகார் செய்தார்.

அதன் பங்கை பொறுத்தவரை, அரசாங்கமானது மருந்துக் குறிப்பெழுதும் கட்டணங்களை அல்ஷீமெர் நோய்கள் மற்றும் புற்றுநோய் ஆராய்ச்சி நிதிக்கான ஒரு மனிதாபிமான உதவியாக மறைக்க முயற்சிக்கின்றது. சுகாதார அமைச்சர் Roselyne Bachelot மருந்துகளுக்கு திரும்பப் பெறும் நிதிகளில் வெட்டுக்கள் "சில குடும்பங்களை பொறுத்தவரை ஒரு கடும் தாக்கம், உண்மைதான், ஆனால் அது புதிய தேவைகளை நிறைவேற்றுவதற்கு நம்மை அனுமதிக்கும் மிதமான முயற்சி" என்று விளக்கினார். எங்கும் அவசர மருத்துவ ஆராய்ச்சிக்கு செலவிட பொதுமக்களின் சுகாதார பராமரிப்பை திருடும் அக்கறையின்மையானது அரசாங்கத்தின் செல்வாக்கை விரைந்து அரிப்பதில் பங்களிக்கும் காரணியாகும். கருத்துக் கணிப்பு வாக்கெடுப்பு மக்கள் தொகையில் 70 சதவீதத்தினர் சுகாதார சீர்திருத்தங்களை எதிர்க்கின்றனர் எனக் காட்டுகிறது.

பேரணியில், CGT பணியாட்கள் WSWS ஆதரவாளர்களை தங்களது பிரிவினர் ஒன்று கூடியுள்ள இடங்களுக்கு செல்ல வேண்டாம் என்று கேட்டுக் கொண்டனர். சார்க்கோசியின் சமூக வேலைத்திட்டங்களுடன் உடனியைந்து போகும் தொழிற்சங்கங்களை அம்பலப்படுத்தும் WSWS அறிக்கையை அவர்கள் ஆட்சேபித்தனர் மற்றும் சார்க்கோசியுடன் தொழிற்சங்க ஒத்துழைப்பு" பற்றிய குற்றச்சாட்டுக்களை மறுக்க முயற்சித்தனர். பாரிஸ் ஆர்ப்பாட்டத்தில் துண்டறிக்கைகளாக விநியோகிக்கப்பட்ட அறிக்கை உலக சோசலிச வலைதள அறிக்கை மட்டுமேயாகும் மற்றும் அது தொழிலாள வர்க்கம் எதிர்கொள்ளும் அரசியல் பிரச்சினைகளை முன்னெடுக்கிறது, சோசலிச மற்றும் சர்வதேசிய கோட்பாடுகளின் அடிப்படையில் தொழிலாள வர்க்கத்தின் ஒரு சுயாதீனமான இயக்கத்தை முன்மொழிகிறது.

ஆர்ஜெண்டினாவிலிருந்து வந்த மரினா சார்க்கோசியின் ஆட்சியை "நவ பாசிஸ்டுகளை போல் ஆளுகின்ற அதே அடையாளங்களை" கொண்டிருப்பதாக அடையாளப்படுத்தினார். என்னை எதிர்வினையாற்ற வைத்தது அரசியல் மற்றும் கலாச்சார மரபுகளை கொண்ட பிரான்சில் இது நிகழ்கிறது என்பதுதான். அணிதிரளுதல் பேரளவினதாக இருந்தால் மற்றும் தொழிற்சங்கங்கள் அதனை ஒழுங்கமைத்தால், ஒருவேள அரசாங்கம் பின்வாங்கலாம். தொழிற் சங்கங்கள் அரசாங்கத்துடன் முற்றுமுழுதாக கட்டாயம் ஒத்துழைக்கக் கூடாது. ஒரு முறை அது ஆரம்பித்துவிட்டால், முழுவதும் இழப்புத்தான். தொழிலாள வர்க்கம் என்பது வேலையில்லாதோர் மற்றும் பணியாற்றும் தொழிலாளர்கள் முதலியோர் ஆவர். ஐக்கியம் கட்டாயம் மேலோங்கியிருக்க வேண்டும். ஆர்ஜெண்டினாவில் செல்வம் நிறைய இருக்கிறது -நாட்டு மக்களின் ஒரு பகுதியினராலும் உலகின் ஏனைய பகுதியினராலும் நாங்கள் சுரண்டப்படுகிறோம். நாம் இனக்குழுக்களுக்கிடையிலான, மற்றும் மதங்களுக்கிடையேயான, அனைத்து யுத்தங்களையும் கட்டாயம் நிறுத்த வேண்டும்."

கிறிஸ்டியானா, "அரசாங்கம் பின்வாங்கும்...என்று நம்புகிறேன்.. ஒன்று தெளிவானது, அது எதிர்க்கப்படவேண்டும்" என தெரிவித்தார்.

மொன்பரனாஸ் இல் உள்ள தொழில்நுட்பவியலார் கூறியதாவது, "சார்க்கோசியின் வேலைத்திடத்தின் அனைத்து கூறுகளும் கட்டாயம் நம்மை தீவிரமயமாக்கும். ஆர்ப்பாட்டங்கள் பயன்மிக்கவை. ஏனையவையும் உண்டு. தொழிற்சங்கங்கள் அரசாங்கத்துடன் கட்டாயம் ஒத்துழைக்கக் கூடாது. நாம் போட்டியில் இருக்க கூடாது: தொழிலாளர்கள் அனைவரும் ஒரே வர்க்கம், சர்வதேச வர்க்கம் ஆவர்; நாம் கட்டாயம் ஐக்கியத்தில் இருக்க வேண்டும் அல்லாவிடில் நாம் வெல்ல முடியாது. நாம் ஏகாதிபத்தியத்திற்கு எதிராக கட்டாயம் போராட வேண்டும். சர்வதேசிய ரீதியாகப் போராடுவது ஒரு வரலாற்றுத் தேவை ஆகும். நாம் கட்டாயம் ஒரு சர்வதேச கட்சியை கட்ட வேண்டும், அதற்கு காலம் எடுக்கலாம்."


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved