World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா Supreme Court refuses to hear case of German citizen tortured by US அமெரிக்காவினால் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்ட ஜேர்மனிய குடிமகனின் வழக்கை விசாரிக்க தலைமை நீதிமன்றம் மறுக்கிறது By Joe Kay 2004TM CIA யினால் சிறையில் அடைக்கப்பட்டு, சித்திரவதைக்கு உள்ளான ஒரு ஜேர்மனிய குடிமகன் கலீட் எல்-மஸ்ரி கொடுத்த மனு ஒன்றின் மீது எந்தவிதமான கருத்தும் தெரிவிக்காமல் அமெரிக்க தலைமை நீதிமன்றம் செவ்வாயன்று நிராகரித்தது. அரசாங்கத்தின் "இராஜாங்க இரகசிய முன்னுரிமை" என்பதை அரசாங்கம் மேற்கோளிட்டு ஒரு கீழ் நீதிமன்றம் முன்னாள் CIA இயக்குடன் ஜோர்ஜ் டெனட், பிற CIA அதிகாரிகள் மற்றும் தன்னை சிறைபிடித்த நடவடிக்கையில் தொடர்புடைய பல நிறுவனங்களுக்கு எதிராக எல்-மஸ்ரி தொடுத்த வழக்கில் கொடுத்த தீர்ப்பை இத்தீர்ப்பு மாற்றாமல் விட்டுவிட்டது. உயர்நீதிமன்றம் நிர்வாகம் கூறும் பரந்த அளவிலான அரசாங்க தீவிர இரகசியங்கள் என்பதை ஏற்று அரசாங்கத்தின் சட்டவிரோத, அரசியலமைப்பிற்கு முரணான கொள்கைகள் பற்றி நீதிமன்ற பரிசீலனையை தொடக்கும் என்பதை இத்தீர்ப்பு குறிப்பிட்டுக் காட்டுகிறது. ஒரு வழக்கை கேட்பதற்கு ஒன்பது பேரில் நான்கு நீதிபதிகளின் ஆதரவை இது கொண்டுள்ளது. கீழ் நீதிமன்றத்தின் தீர்ப்பு அப்படியே இருக்கட்டும் என்ற முடிவிற்கு எதிராக எதிர்ப்புத் தீர்ப்புக்கள் ஏதும் பதிவு செய்யப்படவில்லை. லெபனான் பின்னணியை கொண்ட காலிட் எல்-மஸ்ரி (Khalid El-Masri), மசிடோனிய அதிகாரிகளால் 2003ம் ஆண்டு இறுதியில் அவர் விடுமுறைக்காக அந்நாட்டிற்கு சென்றபோது சிறைப்பிடிக்கப்பட்டார். இரகசிய இடத்தில் வைக்கப்பட்டு இஸ்லாமிய தீவிரவாதிகளுடன் தொடர்பு இருந்ததாக கூறப்பட்ட குற்றச்சாட்டுக்களுக்காக மூன்று வாரங்கள் விசாரணைக்கு உட்பட்டார்; இவருடைய பெயர் ஆங்கில உச்சரிப்பு முறையில் Khalid al-Masiri என்னும் அல் குவைதா உறுப்பினர் எனக் கூறப்படுபவருடைய பெயரை ஒத்து இருப்பதால், இந்நிலை இவருக்கு ஏற்பட்டது. 2004ம் ஆண்டு தொடக்கத்தில் இவர் CIA இற்கு மாற்றப்பட்டார். அவருடைய வழக்கு மனுவின்படி, அமெரிக்க ஒற்றர்கள் அவரை அடித்ததுடன் பாலியல் வன்முறையையும் கொடுத்தனர்; அதன் பின் ஆப்கானிஸ்தானில் உள்ள ஒரு இரகசியச் சிறைச்சாலைக்கு அவர் போதை மருந்து கொடுக்கப்பட்டு, விமானத்தின் தளத்தில் சங்கிலிகளால் கட்டப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டார். ஒரு துர்நாற்றம் வீசும் அறையில் நான்கு மாத காலம் வைக்கப்பட்டார். ஒரு வக்கீல் அல்லது ஜேர்மனிய பிரதிநிதியுடன் தொடர்பு மறுக்கப்பட்ட நிலையில் தொடர்ந்து தாக்குதலுக்கும் உட்படுத்தப்பட்டார். ஒரு மாதத்திற்கும் மேலான எல்-மஸ்ரியின் உண்ணாவிரதம் மற்றும் தவறான நபரை பிடித்து வைத்துள்ளோம் என்று அமெரிக்க அரசாங்கம் அறிந்து பல வாரங்களுக்கு பின்னர், எல்-மஸ்ரி அல்பேனியாவில் வெறிச்சோடிய சாலை ஒன்றில் தூக்கி எறியப்பட்டு பின்னர் அல்பேனிய அதிகாரிகளால் ஜேர்மனிக்கு விமானத்தில் அனுப்பப்பட்டார். எல்-மஸ்ரியின் வழக்கு "வழமைக்கு மாறான கையளிப்பு" என்னும் இரகசியத் திட்டம், CIA செயல்படுத்திய தடுப்புகாவல் முறை பற்றி ஒரு பார்வையை கொடுக்கிறது. இம்முறையில் பிடிக்கப்பட்ட கைதிகள் ஒரு இரகசியச் சிறையில் இருந்து மற்றொரு இரகசியச் சிறைக்கு அனுப்பப்படுகின்றனர்; பல நேரமும் சித்திரவதை இருக்கும் நாடுகளுக்கு மாற்றப்படுகின்றனர்; அல்லது CIA இனாலேயே சித்திரவதை செய்யப்படுகின்றனர்; இவர்களை செஞ்சிலுவைச் சங்கம் அல்லது சட்டபூர்வ பிரதிநிதியாலோ பார்க்கமுடியாது. தலைமை நீதிமன்றம் அதன் முடிவு எடுப்பதற்கு சில நாட்கள் முன்பு, நியூயோர்க் டைம்ஸ் 2005ல் எழுதப்பட்ட புஷ் நிர்வாகத்தின் இரகசிய ஆணைக்குறிப்பு ஒன்றை வெளியிட்டது; அதில் CIA பயன்படுத்தும் வழிமுறைகள் சித்திரவதை அல்ல, "கொடூரமான, மனிதாபிமானமற்ற, இழிவான நடத்தும் முறைகள் இல்லை" என்று அறிவிக்கப்பட்டிருந்தது. டைம்ஸின் கருத்தின்படி நிர்வாகம் வெளிப்படையாகவே, "பயங்கரவாதிகள் என்று சந்தேகிக்கப்படுபவர்கள்மீது வலியைத் தரும் உள, உடல் ரீதியான முறைகள், மண்டையில் அடித்தல், மூழ்கடிப்பதுபோல் உணர்வை ஏற்படுத்துல், மிகக் குளிர் நிலையில் இருத்தப்படல் போன்றவையும் அடங்கியிருந்தன." என்று கூறப்பட்டிருந்தது. எல்-மஸ்ரி அடைத்து வைக்கப்பட்டிருந்த CIA சிறை வலைப்பின்னல் பற்றியும், 2005ம் ஆண்டு குவான்டநாமோ குடாவில் இருந்த கைதிகளை குறுகிய காலத்திற்கு விடுவித்த பின்னர் எவ்வாறு CIA மீண்டும் அதன் நடவடிக்கைகளை தொடங்கியது என்பது பற்றியும் டைம்ஸ் குறிப்பிட்டுள்ளது. நிர்வாகம் இந்த இரகசியக் குறிப்பாணைகள் பற்றித் தகவல்களை "தேசியப் பாதுகாப்பு" என்ற நிலைப்பாட்டில் வெளியிட மறுத்துவிட்டது. டிசம்பர் 2005ல் எல்-மஸ்ரி டெனட், மற்றும் சில CIA அதிகாரிகள், கடத்தலில் தொடர்பு கொண்டிருந்த நிறுவனங்கள் ஆகியவற்றிற்கு எதிராக வழக்கை தொடர்ந்தார். அமெரிக்க அரசாங்கம் வழக்கில் குறுக்கிட்டு, வழக்கு நடந்தால் அரசாங்க இரகசியங்களை கையளிக்கவேண்டிவரும் என்று கூறியது; இக்கூற்று அமெரிக்க மாவட்ட நீதிமன்ற நீதிபதி TS Ellis III ஆல் மே 2006 ல் ஏற்கப்பட்டது. 2007ம் ஆண்டு மார்ச்சில் அமெரிக்க நான்காம் பிரிவு மேல்முறையீட்டு மன்றம் TS Ellis இன் தீர்ப்பை ஏற்றது. தலைமை நீதிமன்றம் எல்-மஸ்ரியின் வழக்கை கேட்பதில்லை என்ற முடிவிற்கு வந்தபின், மேல்முறையீட்டு மன்றத்தின் தீர்ப்பு உறுதியாகிறது. எல்-மஸ்ரியின் குற்றச்சாட்டுக்களின் அடித்தளத்தில் வழக்கை தள்ளும் விதத்தில் தன்னுடைய வாதத்தை அரசாங்கம் கொள்ளவில்லை; அமெரிக்க அரசாங்கத்தின் அதிகாரிகள் எல்-மஸ்ரியை தவறாக சிறைபிடித்ததை ஒப்புக் கொண்டுள்ளனர். அரசாங்க இரகசியங்கள் என்ற கூற்று எந்த ஆதாரத்தையும் காட்டாமல் வலியுறுத்தப்பட்டது; அதற்குக் காரணம் நீதிமன்றங்களில் எல்-மஸ்ரி சித்திரவதை விவரங்கள் வெளிவருவது தடுக்கப்பட வேண்டும் என்பதாகும். தலைமை நீதிமன்றத்தின் முடிவு, எல்-மஸ்ரி வழக்கிற்கு அப்பாற்பட்ட குறிப்புக்களை கொண்டது ஆகும். இராஜாங்க இரகசிய முன்னுரிமைகள் என்பதைப் பயன்படுத்தி தன்னுடைய சட்டவிரோத நடவடிக்கைகளை முறைக்கும் நிர்வாகத்தின் செயற்பாட்டுக் கூற்றை இது ஏற்கிறது. அமெரிக்க மனித உரிமைகளுக்கான சங்கம் (American Civil Liberties Union- ACLU) எல்-மஸ்ரியின் சார்பாக கொடுத்த கடிதத்தில் "செப்டம்பர் 11, 2001ல் இருந்த அரசாங்கம் இம்முன்னுரிமையை கூறி பல வழக்குகளில் நிர்வாகம் மோசமான நடத்தை, தீவிரக்குற்றங்கள் என்பதில் ஈடுபட்டுள்ளதை மறைக்கும் வகையில் பயன்படுத்தி வருகிறது." என குறிப்பிட்டிருந்தது. இந்த முன்னுரிமையை மேற்கோளிட்டு அரசாங்கம், தேசியப் பாதுகாப்பு அமைப்பின் தேவையற்ற தொலைபேசி ஒட்டுக் கேட்டல், தகவல்கள் திரட்டும் திட்டங்கள் ஆகிய உள்ளடங்கிய வழக்குகளை உடைக்கப் பயன்படுத்தி வருகிறது. முன்னாள் FBI மொழிபெயர்ப்பாளர் Sibel Edmonds செப்டம்பர் 11 தாக்குதல்கள் பற்றி அரசாங்கம் முன்கூட்டி அறிந்திருந்தது என்று கூறிய குற்றச்சாட்டை கொண்டுவந்ததை விசாரணை வழக்கில் நிராகரிப்பதற்காகவும் மேற்கோளிட்டது. 1953ம் ஆண்டு தலைமை நீதிமன்றத்தால் இராஜாங்க இரகசிய முன்னுரிமைகள் முறை அமெரிக்க அரசிற்கும் Reynolds இற்கும் இடையிலான வழக்கில் ஏற்கப்பட்டது; அதில் நீதிமன்றம் ஒரு B-29 விமானம் வீழ்ந்ததால் ஏற்பட்ட விபத்தின் அறிக்கைகளை கொல்லப்பட்ட குடும்பத்தினரிடம் கொடுக்கப்படாமல் இருக்கலாம் என்று தீர்ப்பு அளித்தது. அந்தச் சலுகையை மிகப் பரந்த முறையில் புஷ் நிர்வாகம் பயன்படுத்தி, குறிப்பிட்ட சான்றுகளுக்கு என்று இல்லாமல், முழு வழக்குகளையும் நிராகரிக்க வைக்கிறது. மஸ்ரியின் சார்பில் கொடுக்கப்பட்ட மனுவில் எழுதப்பட்டதாவது: "அரசாங்கம் வலியுறுத்தும் முன்னுரிமைகள், மேல் முறையீட்டு நீதிமன்றத்தால் எடுத்துக் கொள்ளப்பட்டது ...இந்த வழக்குகளை அரசாங்க பிரமாணத்தின் அடிப்படையில் மட்டும் நிராகரிக்க அனுமதிக்கிறது; முன்னுரிமை சான்றுகள் எனக் கூறப்படுபவை பற்றி எவ்வித நீதி ஆய்வும் இல்லாமல் இது நடைபெறுகிறது. எனவே பரந்த அளவிலான நிர்வாக முறைகேடுகள் நீதித்துறைப் பரிசீலனையில் இருந்து பாதுகாப்பிற்கு உட்படுகின்றன; கொடுமையை செய்தவர்கள் வழக்கை தவிர்ப்பதற்கு இம் முன்னுரிமையை பயன்படுத்துகின்றனர்." இக்கடிதம் மேலும், தலைமை நீதிமன்றத்தின் மறுபரிசீலனை இல்லாவிடின், "அரசாங்கம் சித்திரவதையில் ஈடுபட்டு அதை ஒரு இராஜாங்க இரகசியம் எனக் கூறலாம்; அப்படிப் பெயரிடப்பட்டபின் எவ்வித நீதிமன்றத்திற்கு விடையிறுக்க வேண்டிய பொறுப்பும் இருக்காது; எச் சூழ்நிலையிலும் அரசாங்கமே சட்டவிரோதம் எனக் கண்டிக்கத்தக்க செயற்பாடுகளும் இவ்விதத்தில் தவிர்க்கப்படலாம்." என குறிப்பிட்டது. ஒரு இணையான நிகழ்வில், ஜேர்மனிய அரசாங்கம் கடந்த மாதம் எல் மஸ்ரியின் கடத்தில், காவல் இவற்றில் தொடர்பு, பங்கு கொண்டிருந்த CIA அலுவலர்களை ஜேர்மனிக்கு அழைத்து வந்து விசாரிப்பது என்ற பேச்சிற்கு அழுத்தம் கொடுப்பதில்லை என்று அறிவித்துவிட்டது. ஜேர்மனியில் இவ்வழக்கு தொடர்பான குற்றவியல் விசாரணை அதிகாரிகள் கைது செய்யப்பட வேண்டும் என்ற பிடிப்பாணை வெளிவருவதற்கு வழிவகுத்தது. ஆனால் புஷ் நிர்வாகம், அதிகாரிகள் அங்கு அனுப்பப்படுவதை ஏற்பதற்கில்லை என்று தெளிவாக்கிவிட்டது; இதையடுத்து ஜேர்மனிய அரசாங்கம் தன்னுடைய குடிமக்கள் ஒருவர் சித்திரவதை செய்யப்பட்ட வழக்கில் கூட தனக்கு அக்கறை இல்லை என்று சுட்டிக்காட்டிவிட்டது. |