:
ஆசியா
:
இலங்கை
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு
25 வருடங்கள்
விஜே டயஸ்
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள் என்ற தலைப்பில் விஜே டயஸ் ஆல் 1997ல்
எழுதப்பட்ட இந்த ஆய்வுக் கட்டுரைத் தொடர், சிங்களத்திலும் தமிழிலும் கம்கறு மாவத்தை மற்றும் தொழிலாளர்
பாதை பத்திரிகைகளில் வெளிவந்ததாகும். விஜே டயஸ், நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதியான சோசலிச
சமத்துவக் கட்சியின் (சோ.ச.க.) பொதுச் செயலாளரும் உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழு
உறுப்பினருமாவார்.
சிங்கள மொழியில் ஏற்கனவே புத்தகமாக வெளிவந்துள்ள இந்த ஆய்வில் 1987 வரையான
வரலாறு அடங்குகிறது. இக் காலகட்டத்தில் புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு.க.க.) என்ற பெயரில் இலங்கையில்
செயற்பட்டுவந்த ட்ரொட்ஸ்கிச இயக்கமே சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடி இயக்கமாகும். புரட்சிக்
கம்யூனிஸ்ட் கழகமானது, இலங்கையில் முதலாளித்துவ அரசாங்கங்களின் தமிழர் விரோத இனவாதத்திற்கும் அதே
போல் 1983ல் ஆரம்பிக்கப்பட்ட இனவாத யுத்தத்திற்கும் எதிராக தொடர்ந்தும் போராடி வந்துள்ளது.
சோசலிச சமத்துவக் கட்சி, சிங்கள-தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்களை
அனைத்துலகவாத சோசலிச வேலைத்திட்டத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுத்தி, இந்தியத் துணைக் கண்ட சோசலிசக்
குடியரசின் ஒரு பாகமாக சிறீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிதம் செய்யப் போராடுகின்றது. இது
அனைத்துலக ரீதியில் சோசலிசத்தைக் கட்டியெழுப்புவதற்கான போராட்டத்தின் ஒரு பாகமாகும்.
இந்த ஆய்வு நூல் மேற்சொன்ன பணியை இட்டு நிரப்புவதற்கான வெகுஜன இயக்கத்துக்கு
அத்தியாவசியமான சோசலிச அரசியல் நனவை கட்டியெழுப்புவதற்கான அடித்தளத்தை வழங்கும். மனித குலத்தின் பெரிதும்
சிறந்த எதிர்காலத்தை ஊர்ஜிதம் செய்து கொள்வதற்காகப் போராடும் மாக்ஸிஸ்ட்டுக்கள் வரலாற்றைத் திரும்பிப்
பார்ப்பது மிகவும் அவசியமான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவே ஆகும். இந்நூலின் அணுகுமுறையும் அதுவே.
அந்த வகையில், இந்த நூல் ஒரு தொடராக உலக சோசலிச வலைத்தளத்தில் வெளியிடப்படுகின்றது.
அறிமுகம்
1997ல் இருந்து தொழிலாளர் பாதையில் ஒரு கட்டுரைத் தொடராக வெளிவந்த
இந்த நூல், அன்றைய சமயத்தில் 25 ஆண்டுகளாக தயார் செய்யப்பட்டு தொடுக்கப்பட்டதும் உக்கிரம் கண்டதுமான
தமிழர் விரோத இனவாத யுத்தத்தின் நிலைமைகளை தெளிவுபடுத்துவதை இலக்காகக் கொண்டிருந்தது. இந்த நூலில்
யுத்தத்தின் முதல் 15 ஆண்டுகளுள்- அதாவது 1987 வரை- இடம் பெற்ற அபிவிருத்திகள் பற்றிய ஆய்வுகள்
இடம்பெறுகின்றன.
யுத்தத்திற்கான திட்ட வரைவுகள் 1970ல் ஆட்சிக்கு வந்த ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி-சமசமாஜ-கம்யூனிஸ்ட்
கட்சிகளை கொண்ட கூட்டரசாங்க ஆட்சிக் காலத்தில் இருந்து தயார் செய்யப்பட்டது. இதன் காரணமாக சிங்களப்
பேரினவாத, பெளத்த மதவாத அரசியலமைப்புச் சட்டத்தின் மீள் நிர்மாண வேலைகளின் ஆண்டான 1972, இந்த
யுத்தத்தின் தொடக்க ஆண்டாகக் கொள்ளப்பட்டது. யுத்தத்தின் தொடக்கத்தை அதன் பேரில் தீர்க்கப்படும் முதலாவது
வேட்டின் நாளில் இருந்து கணிப்பது பொதுவில் சரியானது போல் தோன்றினாலும் அது யுத்தத்தின் நிஜ நோக்கங்களை
மூடி மறைக்க இட்டுச் செல்கின்றது. எப்போதும் ஒரு யுத்தம் தொடங்குவது முதலாவது துப்பாக்கி வேட்டு தீர்க்கப்படுவதற்கு
முன்னதாக ஒரு நீண்ட காலமாக நிலைபெற்று, குமுறி வந்த பொருளாதார - அரசியல் காரணிகளின் பெறுபேறாகவே
ஆகும். இத்தகைய ஒரு வரலாற்று நோக்கு இல்லாதவிடத்து யுத்தம் நீடிப்பதும் அது விபரிக்கப்படுவதும் நெறிகெட்ட
பேர்வழிகளின் கடைகெட்டதும் அக்காலத்துக்கே உரியதுமான தொழிற்பாட்டின் ஒரு பெறுபேறாகவே இருக்கும்.
யுத்தம் உட்பட வரலாற்று நிகழ்வுகளின் காரணிகளை வர்க்க அடிப்படையிலான
சமுதாயத்தின் அங்கத்தவரான மனிதனின் உற்பத்தி நடவடிக்கைகளில் இருந்து தலையெடுக்கும் பிரச்சினைகளுள் இருந்து
ஆய்வு செய்யும் மார்க்சிசம், வரலாறு தொடர்பான குறுகியதும் அர்த்தமற்றதுமான கற்பனாவாத விதிமுறைகளை
நிராகரிக்கின்றது. ஆதலால், வரலாற்று நிகழ்வுகள் பற்றிய பயனுள்ளதும், பரந்ததுமான நிஜ விளக்கத்தை அது
உருவாக்குகின்றது.
யுத்தம் உட்பட சமூகப் பேரழிவுகளில் இருந்து மனித இனத்தை விடுதலை செய்யும்
பொருட்டு அத்தகைய நிஜ அறிவு அவசியமாகும். இந்த நிஜ அறிவில் இருந்து தனிமைப்பட்டுள்ள சமுதாயம், கிழண்டிப்
போன சமூகத் தலையிடிக்கு மருந்தாக தலையணையை மாற்றும் போலிச் சிகிச்சைகளை சிபார்சு செய்யும் போலி
வைத்தியர்களை பின்பற்றி ஏமாற்றப்பட்டு நட்பகலிலும் படுகுழியில் வீழ்ந்து கொள்கிறது.
இன்றைய மனிதன் உலகப் பொருளாதார சமூக அமைப்பின் பங்காளியாவான். அது
அவனின் தனிப்பட்ட திட்டமிடலாக இல்லாத போதிலும், அவனது சமூக நடைமுறை மூலம் அவனை சூழ்ந்து கொண்டு,
புறநிலை ரீதியாக வளர்ச்சி கண்டுள்ள நிலைமையில், இந்த உலக மனிதனைச் சிருஷ்டிக்க மூலாதாரமாக விளங்கிய
முதலாளித்துவ அமைப்பே இன்னமும் அவன் மீது ஆதிக்கம் செலுத்துகின்றது. முதலாளித்துவ வளர்ச்சியின் ஆரம்பக்
கட்டத்திலேயே, அதாவது இற்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்னர் கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கையில் மார்க்சும்
எங்கெல்சும் சுட்டிக்காட்டியதாவது: "முதலாளித்துவ வர்க்கத்தின் உற்பத்தியில் பொருட்களுக்குத் தொடர்ந்து மேலும்
மேலும் விரிவடைந்து செல்லும் சந்தை அவசியமாகியுள்ளது. இந்த அவசியம் முதலாளித்துவ வர்க்கத்தைப் புவிப்பரப்பு
முழுதும் செல்லும்படி விரட்டுகின்றது. அது எல்லா இடங்களுக்கும் சென்று ஒட்டிக்கொள்ள வேண்டியதாகிறது. எல்லா
இடங்களிலும் தொடர்புகளை நிறுவிக்கொள்ள வேண்டியதாகிறது."
1848ம் ஆண்டிலேயே முதலாளித்துவ அமைப்பின் உலகளாவிய அபிவிருத்தியை இந்த
விதத்தில் தீர்க்க தரிசனமாகக் கண்டமை விஞ்ஞான ரீதியான விதிமுறைகளைக் கடைப்பிடித்த இருவரதும் சிறப்புக்கும்
சாட்சி பகர்கின்றது. ஆனால், இன்று முதலாளித்துவ அமைப்பு அந்த தீர்க்க தரிசனமான முடிவுகளையும் தாண்டி,
வளர்ச்சி கண்டுள்ளது. இன்று சந்தை மட்டுமன்றி உற்பத்தி முறையே பூகோளமயமாகி உள்ளது. உற்பத்தி மூலதனம்
பூகோளத்தின் உரித்துக்கள் மீது மட்டுமன்றி ஏழு சமுத்திரங்களையும் சுற்றி வளைத்தும் விண்வெளியை வெற்றி கண்டும்
உற்பத்தி கூடத்தை ஸ்தாபிதம் செய்வதில் ஈடுபட்டுள்ளது. இதற்கு அவசியமான விஞ்ஞான, தொழில் நுட்ப
அபிவிருத்திகளால் அதை வளப்படுத்தியுள்ளது.
மார்க்சியம் என்பது வழிபாட்டுக்குரிய சூத்திரங்களைக் கொண்ட ஒரு நூல் அல்ல.
மார்க்சியம் உருவானது, ஹேகலின் காரண காரியங்களை மட்டும் கொண்ட இயக்கவியல் விதிமுறையை அவரின்
உயர்ந்த நினைவுச் சின்னத்தின் சிகரத்தினுள் சிறைப்பிடித்து வைக்கச் செய்வதற்கு எதிராக இடம்பெற்ற புரட்சிகர
சிந்தனைக் கிளர்ச்சியினாலாகும். பொருள்முதல்வாதத்தின் இயந்திர ரீதியான எல்லைகளை தாண்டிச் சென்ற
மார்க்சும் எங்கேல்சும் ஹேகலின் இயக்கவியலை புறநிலை ரீதியான கருத்தியல் வாதத்தில் இருந்து விடுவித்து இரு
கால்களில் நிற்க வைத்தனர். விஞ்ஞான ரீதியான ஆய்வுகளைக் கொண்ட விதிமுறை என்ற விதத்தில் அது இயக்கவியல்
பொருள்முதல்வாதத்துக்கான கதவுகளைத் திறந்துவிட்டது. தனது இருப்பின் பல்வேறு கட்டங்களைத் தாண்டிச் சென்று
இயற்கையினைப் போலவே சமூகத்தின் எதிர்கால வாழ்க்கையையும் முன்னேற்றத்தையும் அடையக் கூடிய, எதிர்கால
தலைமுறைகளுக்கு முன்நோக்கு ரீதியாக வழிகாட்டுவதற்கான வெளிச்சத்தை அது வழங்கியது. சோசலிச சமத்துவக்
கட்சி அந்த விஞ்ஞான ரீதியான வெளிச்சத்தின் மூலம் எதிர்காலத்தை நோக்குகிறது. அந்த நோக்கின் மூலம்
தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்கள், இளைஞர்கள் மற்றும் புத்திஜீவிகளையும் போஷித்து
வளர்த்தெடுக்கத் தினமும் பாடுபடுகின்றது. அது எமது கட்சிக்கு புறநிலை ரீதியான விதத்தில் கையளிக்கப்பட்டுள்ளதும்
அதனால் நனவான முறையில் பொறுப்பேற்கப்பட்டுள்ளதுமான பணியாகும்.
இந்த முன்னுரையில் இதைக் குறிப்பிடக் காரணம் பல்வேறு காலகட்டங்களில் மார்க்சிச
இயக்கம் கடைப்பிடித்து வந்த விதிமுறைகளை, அந்தக் காலகட்டத்துக்கு உரிய சூழ்நிலையில் இருந்து வேறுபடுத்தி
காட்டுவதன் மூலம், இன்று தொழிலாளர் வர்க்கம் கடைப்பிடிக்க வேண்டிய புரட்சிகர வேலைத் திட்டத்தில் இருந்து
அந்த சமூகச் சக்திகளை தடம்புரளச் செய்ய மேற்கொள்ளப்படும் முயற்சிகளுக்கு குறைவே இல்லை. தீவிரவாதக்
கோலம் பூண்டு மார்க்சிசத்துக்கு உரிமை கொண்டாடும் அத்தகைய சகல முயற்சிகளும் எப்போதும் பிற்போக்குக்குச்
சேவை செய்ய பயன்படுத்தப்படுகின்றது.
சோசலிச சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம்
(பு.க.க.) தமிழ் தேசிய இனத்தின் ஜனநாயக உரிமைகளை அடையும் பொருட்டு கடைப்பிடித்து வந்த விதிமுறைகள்
தொடர்பாக "புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்திற்கு இருமுனை மின்சூழான தேசிய இனப் பிரச்சினை" என்ற தலைப்பில்
அஹிங்சக பெரேரா என்பவர் 1996 செப்டெம்பரில் தியச சஞ்சிகைக்கு எழுதிய கட்டுரை, இத்தகைய
முயற்சிகளுக்கு நல்ல உதாரணமாகும். பின்னர் இந்தக் கட்டுரை "சிங்களவர்களுக்கு இல்லாத, தமிழர்களுக்கு உள்ள
பிரச்சினை என்ன?" என்ற தலைப்பில் அந்த ஆசிரியரால் வெளியிடப்பட்ட கட்டுரைத் தொகுப்பிலும்
சேர்க்கப்பட்டிருந்தது.
தேசிய சுயநிர்ணய உரிமையை (வெவ்வேறான தேசிய அரசுகளை அமைத்துக்கொள்ள
தேசிய இனங்களுக்கு உள்ள உரிமை) காப்பதை புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் கைவிட்டதை எதிர்த்து, லெனினின்
மேற்கோள்களுடன் எழுதப்பட்ட அஹிங்சக பெரேராவின் கட்டுரையின் நிஜ இலக்கு மேலே குறிப்பிடப்பட்ட நூலில்
அடங்கியுள்ள முதலாவது கட்டுரையிலேயே அம்பலமாகியுள்ளது. அது பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் அரசியல்
பொதிக்காக வக்காலத்து வாங்கி, அதற்கு பொதுமக்களின் ஆதரவைத் திரட்டுவதேயன்றி வேறு ஒன்றும் அல்ல.
அஹிங்சக பெரேரா அதில் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "உண்மையில் இன்றைய
அரசாங்கம் தேசிய இனக்குழு பிரச்சினைக்கு தனது தீர்வு பிரேரணைகளை முன் வைத்தமைக்கு காரணம் இந்தக்
கட்டுரையின் தொடக்கத்தில் மிகவும் சுருக்கமான முறையில் சுட்டிக்காட்டிய தேசிய, அனைத்துலக ரீதியாகத்
தோன்றும் புறநிலை நிலைமைகளுக்கு அமையவேயன்றி அரசாங்கத்தின் வெறும் நல் நெஞ்சத்தினாலோ அல்லது மனித
நேயத்தினாலோ அல்ல. அதன்படி இனக்குழு நெருக்கடிக்கான தீர்வுக் கதவாக திறந்துகொண்டுள்ள அவகாசத்தை
பயன்படுத்தும் தீர்க்கமான காரணியாக இருந்து கொண்டிருப்பது அதன் பேரில் கிடைக்கும் பொதுஜன
அபிப்பிராயமாகும். யுத்தத்துக்கு எதிராக அதிகாரப் பரவலாக்கத்தின் ஊடாகக் கிட்டும் பரந்த அளவிலான
சமாதானத்திற்காக பொதுஜன அபிப்பிராயத்தை விழிப்படையச் செய்வது தீர்வை நோக்கிச் செல்லும் முக்கிய
பாதையாகும். ஆதலால் ஜனநாயக முற்போக்கு சக்திகளின் பணி இன்று தீர்க்கமாகியுள்ளது என்ற எமது நம்பிக்கை
இந்த அரசியல் நிலைமையையே அடிப்டையாகக் கொண்டுள்ளது." (சிங்களவர்களுக்கு இல்லாத தமிழர்களுக்குள்ள
பிரச்சினை என்ன? பக்கம் -10)
தியச குழுவினரும் அஹிங்சக பெரேராவும் பொறுப்பேற்றுக் கொண்டுள்ள
கொந்துராத்து என்ன என்பது இங்கு நன்கு தெளிவாகின்றது. அதாவது, இன்றைய அரசாங்கம் இனக்குழு
பிரச்சினைக்கு தீர்வு யோசனைகளை முன்வைத்துள்ளதாகக் கூறி "அது யுத்தத்துக்கு எதிரான அதிகாரப் பரவலாக்கம்
மூலம் கிடைக்கும் பரந்தளவிலான சமாதானத்தின் பேரிலானது" எனப் பூதாகாரப்படுத்திக் காட்டுவதன் மூலம்
மக்களின் கண்களை இருட்டடிப்புச் செய்வதாகும்.
அஹிங்சக பெரேராவின் இக்கட்டுரை 1995 செப்டெம்பரில் எழுதப்பட்டதாகக்
குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று பொதுஜன முன்னணி அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் விடுதலைப் புலிகளுடன்
கொண்டிருந்த தேன்நிலவுகள் முடிவடைந்து யூ.என்.பி. வடக்கு-கிழக்கு மாகாணங்களுக்குள் இராணுவத்தை திணித்து
நாடாத்தியதைக் காட்டிலும் படுமோசமான முறையில் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தம் உக்கிரம் கண்டு நான்கு
மாதங்கள் கழிந்திருந்தது. இதைக் கண்டும் அஹிங்சக பெரேரா ஒரு குருடனைப் போல் அரசாங்கத்தினால்
முன்வைக்கப்பட்டுள்ள "இனக்குழு பிரச்சினைக்கு அதனது தீர்வு யோசனைகள்" பற்றிப் பேசுகின்றார். அந்தத் தீர்வு
யோசனைகளுக்காக வக்காலத்து வாங்கும் ஒரு பொதுஜன அபிப்பிராயத்தின் பேரில் ஜனநாயக, முற்போக்கு
சக்திகள் சேவை செய்ய வேண்டும் என்ற பாணியில் உழுத்துப் போன தொண்டைக் கயிற்றை இழுத்துக் கொண்டு
பொது மக்களைத் தலைமூழ்கிப் போகச் செய்ய முயற்சிக்கின்றார்.
மேற்சொன்ன உதாரணத்தில் குறிப்பிடப்பட்டுள்ளபடி அஹிங்சக பெரேரா பொதுஜன
முன்னணி அரசாங்கத்தின் "தீர்வு யோசனைகள்" "இனக்குழு நெருக்கடிக்கு தீர்வுகாணும் வழியாக திறந்துள்ள
அவகாசம்" என இனங்காட்டுகின்றார். பு.க.க.வுக்கு எதிராக அஹிங்சக பெரேரா எழுதியுள்ள கட்டுரையின்படி
தமிழ் தேசிய இனத்தைச் சேர்ந்த மக்களின் பிரச்சினைகளுக்கான தீர்வு அவர்களுக்கென ஒரு தனித் தேசிய அரசினை
நிறுவுவதாயின், பொதுஜன முன்னணி அரசாங்கம் தனது தீர்வுப் பொதியின் மூலம் திறந்து விட்டுள்ளது அத்தகைய
"தீர்வு வழி" யேயாகும். இந்த வழி தடுமாறிப் போன பேர்வழியின் கூற்றுக்கள் தமிழ் மக்களுக்கு எதிரான
"சமாதானத்திற்கான யுத்தம்" என்ற பொதுஜன முன்னணி அரசாங்கத்தின் வாயடிப்புகளையும் தாண்டிச் செல்லும்
வாய்வீச்சக்களாகும். இது ஜே.வி.பி. காரர்கள் உள்ளடங்கலான சகல இனவாதிகளும் தீர்வுப் பொதியை பற்றிக்
கூறிவரும் ஜனநாயக விரோத பிற்போக்கு முதலாளித்துவ இலங்கை அரச சார்பிலான வினோதமான
வக்காலத்துக்களை அறிந்தோ அல்லது அறியாமலோ திரும்பக் கூறுவதாகும். அது மட்டுமன்றி இந்த தீர்வுப் பொதி
கரட் கிழங்கினை முன்வைத்துக் கொண்டு சமாதானத்துக்கான யுத்தம் எனக் கூறிக்கொண்டு, பொதுஜன முன்னணி
அரசாங்கம் கடைப்பிடிக்கும் வழியிலான விதிமுறைகளை கடைப்பிடிக்க அங்கீகாரம் பெற்றுக்கொண்டு தலை தூக்கும்
சிங்கள வீரவிதான, பயங்கரவாதத்துக்கு எதிரான தேசிய இயக்கம், ஜாதிக சிந்தனை கும்பலும் இன்னும் பல
சிங்கள பேரினவாத, பாசிச அமைப்புக்களும் வளர்ச்சி காண ஆலவட்டம் பிடிப்பதாகவும் உள்ளது. இது ஆளும்
வர்க்கத்தின் அவசியங்களுக்கு சுலபமானது. தமிழ் மக்களை இரத்த வெள்ளத்தில் மூழ்கடிப்பதையும் நாடு முழுவதையும்
இராணுவ சப்பாத்தினால் நசுக்குவதையும் இலக்காகக் கொண்டு போடப்பட்ட இந்த தீர்வுப் பொதி வேஷத்தின்
நிஜக் கோலம் அஹிங்சக பெரேராவின் அறிக்கை மூலம் அவர் எதிர்பாராத விதத்தில் அம்பலமாகியுள்ளது.
முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் அரசியல் ஆளுமையை ஒழித்துக் கட்டுவதற்கு
புறம்பாக, இந்தப் பிற்போக்கு அமைப்பின் பல்வேறு சீர்திருத்தங்கள் மற்றும் திருத்தங்களின் பேரில் கோஷம்
எழுப்பி வந்த தேசியவாத சீர்திருத்த இயக்கங்கள், பூகோளமயமாகியுள்ள அவ்வாறே நெருக்கடிக்குள்
தள்ளப்பட்டுள்ள இன்றைய முதலாளித்துவ அமைப்பினுள் இயங்கிக் கொண்டுள்ள முதலாளித்துவ அரசாங்கங்களுக்கு
ஆதரவளிப்பதோடு, எதிர்கால காட்டுமிராண்டி முதலாளித்துவ ஆட்சியாளர்களுக்கும் வழியமைத்துக் கொடுக்கின்றன.
அஹிங்சக பெரேராவும் தியச குழுவினரும் சமூக முன்னேற்றத்திற்கு எதிரான இந்தப் போக்கினை
பிரதிநிதித்துவம் செய்கின்றனர். அந்த விதத்தில் இந்த இயக்கம் ஏகாதிபத்திய அவசியங்களுடன் அணிதிரண்டு
கொண்டுள்ளது.
உலக மார்க்சிச இயக்கம் பயன்படுத்திய வார்த்தைகளையும், சுலோகங்களையும்
நேரம் காலத்தைக் கணக்கில் கொள்ளாது முறைகேடான முறையில் பயன்படுத்திக் கொண்டு, தமது பாண்டித்தியத்தை
வெளிப்படுத்துவதில் ஈடுபடும் முதலாளித்துவச் சார்பு பல்கலைக்கழக விரிவுரையாளர்களும் அவ்வாறே அவர்களால்
பயிற்றப்பட்ட தீவிரவாதக் கோலம் பூண்ட சீடர்களும் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும் மக்களையும்
இளைஞர்களையும் தவறான திசையில் இட்டுச் செல்ல சேவையாற்றும்படி முதலாளி வர்க்கத்தினால் என்றும் சேவைக்கு
அழைக்கப்படுகின்றார்கள் என்பதை நாம் மறந்து போய்விடக் கூடாது. சிறப்பாக ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின்
மிச்ச சொச்சங்களால் சோவியத் சோசலிச குடியரசு ஒன்றியம் வீழ்ச்சிக்குள் தள்ளப்பட்டு, கலைக்கப்பட்டதன்
பின்னர் மார்க்சியத்தின் செல்லுபடியற்ற தன்மை பற்றியும் சோசலிச பதிலீட்டின் காலாவதி பற்றியும் பேசும்
ஏகாதிபத்தியவாத உலக அமைப்பின் பிரச்சார பேர்வழிகளாக இவர்களில் பலரும் மாறினர். இது முதலாளித்துவ
வெகுஜனத் தொடர்புச் சாதனக்காரர்களின் குறைபாடுகளை நிறைவு செய்யக் கிடைத்த உதிரிப் பாகங்களாக
ஏகாதிபத்திய முதலாளித்துவ அமைப்பு வெற்றி கொண்ட மிகவும் தற்காலிகமான 'வெற்றி'யாக விளங்கியது.
மேலே குறிப்பிட்ட மேற்கோள் இடம்பெற்ற கட்டுரையின் அதே பக்கத்தில், அஹிங்சக
பெரேரா ஒரு கேள்வியை எழுப்பி அதற்கு பின்வரும் விதத்தில் பதிலும் அளித்துள்ளார்: "ஒரு முதலாளித்துவ
அரசாங்கம் ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக உரிமைகளை ஓரளவில் தன்னும் அங்கீகரிக்கும் விதத்தில் அணுகுமானால்
நாம் அதை எதிர்க்க வேண்டுமா? இல்லை. ஒரு போதும் இல்லை." அதைத் தொடர்ந்து வரும் இரண்டு
வசனங்களில் அவர் ஒரு முதலாளித்துவ அரசாங்கம் ஒடுக்கப்படும் மக்களின் உரிமைகள் தொடர்பாக "ஒரு
அளவிலேனும்" அக்கறை காட்டத் தள்ளப்படுவது ஏன்? எனவும் அத்தகைய ஒரு நிலைமையின் கீழ் தீவிரவாதி ஏன்
குத்துக்கரணம் அடிக்க வேண்டும் என்பதையும் பின்வருமாறு விளக்குகின்றார்: "உண்மையிலேயே ஒரு முதலாளித்துவ
அரசாங்கம் ஜனநாயக உரிமைகளை அங்கீகரிக்கத் தள்ளப்படுவது அதன் பேரில் உருவான பொதுஜனக் குரல்
காரணமாகவேயாகும். அங்கு எமது நிலைப்பாடு அரசாங்கம் அங்கீகரித்த அந்த உரிமைகளை உண்மையாகவே
வெற்றிகொள்ளும் பொருட்டு போராடுவதேயாகும்." இதன்படி மக்களின் குரலுக்கு செவிமடுக்கும் நற்பண்பைத் தவிர
வேறு பொருளாதார, அரசியல் வர்க்க அவசியங்கள் முதலாளி வர்க்கத்துக்கு கிடையாது. எந்த விதத்திலாவது
"மக்கள் குரலுக்கு" செவிமடுத்து முதலாளித்துவ அரசாங்கம் உரிமைகளை அங்கீகரிப்பதற்கும் அவற்றை வெற்றி
கொள்வதற்கும் இடையே போராட்டங்களால் இட்டு நிரப்ப வேண்டிய ஒரு இடைவெளி இருந்து கொண்டுள்ளதை
பெரேராவின் வார்த்தைகள் தெளிவுபடுத்துகின்றது. அப்படியானால் உரிமைகள் தொடர்பான அங்கீகாரம்
எனப்படுவது ஒரு பயங்கரமான மோசடி என்பதை பொது மக்களுக்கு அம்பலப்படுத்தாமல் அதற்கு எதிரான
போராட்டத்தை ஒழுங்கமைப்பது எப்படி? தீவிரவாதியின் போராட்டப் பேச்சு, முதலாளித்துவ அரசாங்கம்
மக்களின் உரிமைகளை அங்கீகரிக்கும் என்ற நப்பாசைகளுக்கு அமைவான ஒரு பிற்போக்கு மோசடி என்பது நன்கு
தெளிவாகின்றது.
இதனாலேயே பொருத்தம் பொருத்தமின்மையை கணக்கில் எடுக்காது லெனினின் நூலில்
இருந்து எடுத்துக் காட்டும் மேற்கோள்களின் பின்னால் பதுங்கிக்கொள்ள தீவிரவாதிகளுக்கு நேரிட்டுள்ளது.
மார்க்சிய இயக்கத்தின் முன்னோடிகளை மேற்கோள் காட்டும் போது அந்த
மேற்கோள்கள் எந்த நேரம், காலத்தில் முன்வைக்கப்பட்டவை என்பது தொடர்பாகவும் அதன் செல்லுபடியான
தன்மையையிட்டும் எப்போதும் கவனம் செலுத்துவது மார்க்சிய மரபாகும். லெனினின் பத்திரங்களில் இருந்து
எடுக்கப்படும் மேற்கோள்கள் அவற்றுக்கு உரிய காலத்தில் அவர் ஈடுபட்டிருந்த அரசியல் போராட்டத்தின் தன்மை
தொடர்பான உறவுகளில் இருந்து தள்ளி வைப்பதற்கு அஹிங்சக பெரேரா பிரமாண்டமான வரலாற்று திரிப்பு
மோசடிகளில் ஈடுபட வேண்டியுள்ளது.
"பு.க.க.வுக்கு இருமுனை மின்சூழாகியுள்ள தேசிய இனப்பிரச்சினை" என்ற தலைப்பில்
எழுதப்பட்டு அவரின் நூலிலும் சேர்க்கப்பட்டுள்ள கட்டுரையில் பெரேரா பின்வருமாறு கூறுகின்றார்: "மார்க்சிச
லெனினிச இயக்கம் தேசிய இனப் பிரச்சினை தொடர்பான சிக்கல்களை சோசலிசப் புரட்சியின் பணியாகக்
கொள்ளவில்லை என்பதும், அதை முதலாளித்துவ ஜனநாயகத்தின் பணியாகவே சுட்டிக்காட்டியது என்பதும்
பிரசித்தமானது. ஆனால் பின்தங்கிய நாடுகளின் முதலாளித்துவ வர்க்கங்களுக்கு தேசிய இனப் பிரச்சினை
உள்ளடங்கலான முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகளைத் தீர்த்து வைக்க முடியாது என்ற ட்ரொட்ஸ்கியின்
மரபுகளை அடிப்படையாகக் கொண்ட பு.க.க. பின்தங்கிய, பலவீனமான, வங்குரோத்து சிங்கள, தமிழ் முதலாளி
வர்க்கத்தினால் ஜனநாயகப் புரட்சியின் பணிகளை இட்டு நிரப்ப முடியாது என்ற நிலைப்பாட்டில்
நின்றுகொண்டுள்ளது."
ட்ரொட்ஸ்கியை மார்க்சிச கோட்பாட்டு மரபுகளில் இருந்து அப்புறப்படுத்திக்
காட்டும் கடைகெட்ட முயற்சியை இந்த இரண்டு பந்திகளும் தெளிவுபடுத்திக் காட்டுகின்றன. இந்த ஸ்டாலினிச திரிப்பு
பாரம்பரியங்களின் செல்வாக்குகள் அஹிங்சக பெரேராவை எந்தளவுக்கு ஈவிரக்கமற்ற முறையில் ஜே.வி.பி.
உட்பட்ட அனைத்து அமைப்புக்களுடனும் அணிதிரள வைத்துள்ளது என்பதை எடுத்துக்காட்டுகின்றன.
இன்றைய உலகின் தீவிரவாதிகள் எனப்படும் சகலரும் ஸ்டாலினிச அதிகாரத்துவத்தின்
முழு நாற்றமெடுப்புக்கு மத்தியிலும் ட்ரொட்ஸ்கியின் பேரில் காட்டிக் கொள்ளும் கொலைகாரத்தனமான ஆத்திரத்தில்
இருந்து விடுபட முடியாதவர்களாயினர். இதற்கான காரணம் என்ன? ட்ரொட்ஸ்கியின் முழு அளவிலான சமூக ஆய்வுகளின்
வெளிச்சத்தின் எதிரில் தாம் அவரின் காலின் பெருவிரல்களில் தன்னும் தொங்கிக்கொள்ள முடியாமல், பூமியின் மண்ணில்
வீழ்ந்து கொண்டு மலையுச்சிக்கு பாய நேரிட்டுள்ளதை புரிந்துகொண்டுள்ளனர். ஆதலால் அவர்கள் ட்ரொட்ஸ்கியை
பின்பற்றுபவர்கள் மீதும் ஆத்திரம் கொண்டுள்ளனர்.
அந்த ஆத்திரத்தை பெரேரா பின்வருமாறு வெளிக்காட்டிக் கொண்டுள்ளார்: "இலங்கையின்
முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகள் சோசலிச புரட்சியின் நிகழ்ச்சி நிரலில் சேர்ந்து கொண்டுள்ளது எனவும்
அதைத் தவிர முதலாளித்துவ ஜனநாயக புரட்சியின் பணிகளை இட்டுநிரப்புவதற்கான வேறு வழிகள் இல்லை எனவும்
பு.க.க. வலியுறுத்தி வருகின்றது. இதனால் பு.க.க. ஜனநாயகப் புரட்சியின் பணிகளைத் தீர்த்து வைக்கக் கூடிய
ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுடன் அமைக்கப்படும் தொழிலாளர் வர்க்கத்தின் சர்வாதிகாரத்துக்காகப் போராடிக்
கொண்டுள்ளதாகக் கூறுகின்றது. இந்த நிலைப்பாட்டின் மூலம் பு.க.க.வும் தேசிய இனப் பிரச்சினைக்கு தீர்வு
காண்பதை சோசலிசப் புரட்சி வரை ஒத்திப் போட்டுள்ளதை தெளிவுபடுத்திக் கொண்டுள்ளது."
இதைப் பற்றிக் குறிப்பிடுகையில், முதலில் பல்வேறு தேசிய, இனக் குழுக்களுக்கு
சமத்துவமான ஜனநாயக உரிமைகளை ஸ்தாபிதம் செய்யும் தீர்வினை ஒத்திப் போடுவது, அத்தகைய தீர்வினை
உத்தரவாதம் செய்யக் கூடிய சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கத்தின் சுயாதீன சோசலிச அரசியல்
வேலைத்திட்டத்துக்கு குழிபறிக்கும் தீவிரவாதிகளையும் உள்ளடக்கிய கடைகெட்ட தலைமைகளின் செயற்பாடேயன்றி அது
பு.க.க. வின் அல்லது சோசலிச சமத்துவக் கட்சியின் செயற்பாடு அல்ல. அந்தத் துரோகம் அன்று தொடக்கம்
இன்றுவரை அனைத்துலக சோசலிச முன்நோக்கிற்கு எதிராக முதலாளி வர்க்க ஆட்சி தொடர்பாக நப்பாசைகளைப்
பரப்பிக்கொண்டுள்ள அந்த எதிர் சக்திகளின் ஆதிக்கத்தின் கீழ் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும்
மக்களையும் தள்ளுவதன் மூலம் சாதிக்கப்பட்டு வந்துள்ளது. இது இலங்கையிலும் இந்தியத் துணைக் கண்டத்திலும்
மட்டுமன்றி உலகம் பூராவும் உள்ள மக்கள் முகம் கொடுக்கும் பிரச்சினைகள் தொடர்பான உண்மையாகும்.
இந்தக் கடைகெட்ட தலைவர்களின் அழிவு நிறைந்த பிடியில் இருந்து விடுபட
தொழிலாளர் வர்க்கத்தையும் அதைச் சூழ ஒடுக்கப்படும் மக்களையும் சோசலிச புரட்சி முன்நோக்கின் மூலம் ஆயுதபாணிகளாக்கி
அதன் அடிப்படையில் போராடுவதன் மூலம் மட்டுமே இதற்கான தீர்வு காலாவதியாகி இழுபட்டுப் போவதைத் தடுக்க
முடியும். அது தொடர்பாக அன்று பு.க.க.வும் இன்று சோ.ச.க. வும் வலியுறுத்துவதையிட்டு அஹிங்சக பெரேரா
குறிப்பிடுவது சரியானது. அவ்வாறே அந்த உண்மை பொதுமக்களுக்கு படுபயங்கரமான விளைவுகளையும்
கொணர்ந்துள்ளது. இதையிட்டு பிரச்சினையே கிடையாது. முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் பின்னால் வயிறளக்கும்
நடவடிக்கைகளின் மூலம் தேசிய இனப் பிரச்சினைக்குத் தீர்வைத்தேடும் சகல முயற்சிகளதும் வங்குரோத்தும், பிற்போக்கும்
உலகின் அனைத்து இடங்களிலும் அவ்வாறே இலங்கையிலும் ஒரு விடயத்தை நிரூபித்துக் காட்டியுள்ளது.
ட்ரொட்ஸ்கிசம், ட்ரொட்ஸ்கிசவாதிகளின் பேரில் ஆத்திரத்தைக் கொட்டும் விதத்தில்
அஹிங்சக பெரேரா இந்த குத்துக்கரணத் தொழிலில் ஈடுபட்ட வண்ணம் வெளியிட்டுள்ள மற்றொரு அறிக்கை வருமாறு:
"1917ல் ஏப்பிரல் ஆய்வுகள் மூலம் லெனின் ட்ரொட்ஸ்கியின் மரபுகளை ஒப்புக் கொண்டாரா இல்லையா என்பது
விவாதத்துக்குரிய ஒரு விடயமாகும். அது வேறொரு இடத்தில் தீர்வு காணப்பட வேண்டிய பிரச்சினையாகும்.
எவ்வாறெனினும் லெனின் ஏப்பிரல் ஆய்வுகளை முன்வைத்தது பெப்பிரவரி புரட்சியின் பின்னராகும் என்பதை நினைவில்
கொள்ள வேண்டும்."
பெரேரா இந்த ஒரு சில வசனங்களைக் கையாள்வது பு.க.க. ட்ரொட்ஸ்கிசத்தின்
அடிப்படையில் காலூன்றி நின்று ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவுடன் தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரம் ஏற்படும்
வரை ஜனநாயகப் புரட்சியின் பணிகளை ஒத்திவைத்துள்ளது எனக் கூறுவதன் இறுதியிலாகும்.
லெனின் 1917 ஏப்பிரல் மாதத்தில் போல்ஷிவிக் கட்சிக்கு சமர்ப்பித்த ஆய்வுகளின்
முக்கிய அத்திவாரமாக விளங்கியது அனைத்துலக சோசலிசப் புரட்சியின் ஒரு பாகமாக ரூஷ்ய பொதுமக்கள்,
தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்துக்காக வழிநாடத்தப்படாது போகின் ரூஷ்யா முகம் கொடுக்கும்
ஒடுக்கப்படும் தேசிய இனங்களதும் அவ்வாறே விவசாயிகளதும் எந்த ஒரு ஜனநாயகப் பணியையும் இட்டு நிரப்
முடியாது போகும் என்பதாகும். மார்க்சிசம் லெனினிசத்துக்கும் ட்ரொட்ஸ்கிசத்துக்கும் இடையே ஒரு சீனப் பெரும்
சுவரை நிர்மாணிக்க முயன்ற ஸ்டாலினிஸ்டுகள் உட்பட்ட அனைத்து கைக்கூலி "நிபுணர்களும்" பல்லாயிரக்கணக்கான
பத்திரங்களின் மூலம் கொள்ளையடிக்க எடுத்த முயற்சிகளின் திரிப்புக்கள் பெரேராவின் ஆலோசனைகளில்
அடங்கியுள்ளன.
லெனின் ஏப்பிரல் ஆய்வுகளை முன்வைத்தது பெப்பிரவரிக்குப் பிறகும் ஏப்பிரல்
தொடங்கவும் முன்னதாக ரூஷ்யாவின் 1917 பெப்பிரவரி புரட்சியின் பின்னராகும். இது உண்மையாகும். அதில்
உள்ளடங்கியிருக்கும் விடயங்கள் ஸார் மன்னன் ஆட்சி பெப்பிரவரியில் வீழ்ச்சி கண்டதன் பின்னர், மென்ஷிவிக் மற்றும்
சமூகப் புரட்சிக் கட்சிகளின் உள்ளும் போல்ஷிவிக் கட்சியினுள்ளும் ஸ்டாலின் தலைமையிலான குழுவின் உதவியோடு
ஆட்சியில் இருந்து வந்த முதலாளித்துவ வர்க்கத்தினரால் ரூஷ்ய மக்கள் முகம் கொடுத்த எந்தவொரு பிரச்சினைக்கும்
தீர்வு காண முடியாது போன நிலையிலாகும். அவர்கள் வழங்கியுள்ள மோசடி வாக்குறுதிகளால் ஏமாந்துவிடக்
கூடாது, ஒடுக்கப்படும் மக்களின் ஆதரவைக் கொண்ட தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தின் மூலமே தீர்வு காண
முடியும். ஆதலால் "கோட்பாடு இருளானது. உண்மை பசுமையானது" எனக் கூறிக்கொண்டு லெனின் தமது
தலைமையின் கீழ் அதுவரை காலமும் கடைப்பிடித்து வந்த "தொழிலாளர், விவசாயிகளின் ஜனநாயக
சர்வாதிகாரம்" என்ற கலப்பட ஆட்சி சுலோகத்தைத் தொடர்ந்தும் கடைப்பிடிப்பவர்களை போல்ஷிவிக்
நூதனசாலைக்கு அனுப்ப வேண்டும் எனக் கூறி நிராகரித்தார். லெனினின் ஏப்பிரல் ஆய்வுகளின் அடிப்படையில்
ட்ரொட்ஸ்கியின் இணைத் தலைமையின் கீழ் வெற்றி கொண்ட 1917 அக்டோபர் புரட்சியின் பின்னர் மட்டுமே ரூஷ்ய
மன்னர் ஆட்சியினுள் அடைபட்டுக் கிடந்த ஒடுக்கப்பட்ட இனங்களதும் அவ்வாறே பிரமாண்டமான அளவிலான
விவசாயிகளதும் ஜனநாயக உரிமைகள் ஊர்ஜிதம் செய்யப்பட்டன. இந்த உலக வரலாற்று முக்கியத்துவம் மிக்க
நிகழ்வு "விவாதத்துக்கிடமானது", "வேறோர் இடத்தில் தீர்த்துக்கொள்ளப்பட வேண்டும்" என்ற பாணியிலான
நிபுணத்துவ வெற்று வார்த்தைகளுக்குள் பதுங்கிக் கொண்டு நழுவுவதற்கு சகல மோசடி மார்க்சிச-லெனினிஸ்டுகளும்
முயன்றுள்ளனர். ஆனால், நிஜ உலகின் அபிவிருத்திகள் மீண்டும் மீண்டும் அந்தப் பிரச்சினையைத் தட்டிக்கழிக்க
இடமளிக்கவில்லை. ட்ரொட்ஸ்கிச நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் சரியான தன்மையின் சவாலை அவர்கள்
திரும்பத் திரும்ப எதிர்கொள்ள நேரிட்டுள்ளது. அந்த விடயத்தில் அஹிங்சக பெரேரா முதலாளித்துவ கல்வி
நிறுவனமான இன்றைய பல்கலைக்கழக அமைப்பின் அரசியல் விஞ்ஞான பாடவிதானத்தின் கீழ் தனது முன்னோடிகளின்
கரடுமுரடான கறுப்பு துவாயின் மூலம் மூஞ்சியை மட்டுமன்றி மூக்கையும் பொத்திக்கொள்ள முடியாது போயுள்ள
உடல்சார் பலவீனங்களையும் வெளிக்காட்டிக் கொண்டுள்ளார்.
முதலாளித்துவ சமுதாயத்தை புரட்சிகரமான முறையில் மாற்றியமைக்கும் பணிக்கு
முரணான விதத்தில், முதலாளித்துவ ஆட்சியின் கீழ் சீர்திருத்தங்களை வெற்றி கொள்ளும் வயிறளப்பு ஊதாரித்தனத்தில்
தலைமூழ்கிப் போன பெரேரா, மற்றொரு தீர்ப்பினை பின்வரும் இலட்சணத்தில் முன்வைக்கின்றார். அதுவும் ரூஷ்யப்
புரட்சியுடன் தொடர்புபட்ட விதத்தில் லெனினின் ஆக்கங்களில் இருந்து மேற்கோள் காட்டும் திரிப்பாகும்.
"எமது அடிப்படையானதும் நிஜமானதுமான பாட்டாளி வர்க்கப் புரட்சியின்
சோசலிசப் பணிகளின் இடை விளைவாக முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பிரச்சினைகளை தீர்ப்போம்.
சீர்திருத்தங்கள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் இடைவிளைவாகும் என நாம் எப்போதும் கூறி வந்துள்ளோம்"
(லெனின்- 'கம்கறு மாவத்த' மார்ச் 1996).
இந்த மேற்கோள்களின் பின்னர் பெரேரா பின்வருமாறு கேள்வி எழுப்பி பதிலும்
அளிக்கின்றார்.
"இது எதைத் தெளிவுபடுத்துகின்றது? கோட்பாட்டு நிலைப்பாடு எடுப்பது மட்டும்
போதுமானது அல்ல. மார்க்சிச இயக்கம் வகிக்கும் கோட்பாட்டு நிலைப்பாடுகளை மிகவும் சரியான நடைமுறை
மூலோபாயத்தின் ஊடாக நடைமுறைப்படுத்துவதிலும் அது திறமை காட்ட வேண்டும். அவ்வாறே போராட்டத்தின்
இடைவிளைவாக வெற்றி கொள்ளும் சீர்திருத்தங்களை அங்கீரிப்பதன் மூலம் லெனின் இறுதி வெற்றி கிட்டாததால்
இதற்கு அப்பால் கிட்டும் தற்காலிக வெற்றிகளுக்கு காலால் உதையும் பரிதாபத்தை எதிர்த்து வந்துள்ளதை
காட்டுகின்றது."
ரூஷ்யாவில் முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சியின் பணிகளைத் தீர்த்து வைத்தது
பற்றியே லெனின் குறிப்பிடுகின்றார். மேற்கோளாகக் காட்டியுள்ள அவரின் வசனங்கள், 1917 அக்டோபர்
புரட்சியின் மூன்றாவது ஆண்டு நிறைவின் பேரில் 1920ல் நிகழ்த்திய உரையிலேயே அடங்கியுள்ளன. முதலாளித்துவ
ஜனநாயகப் புரட்சியின் பணிகள் ரூஷ்யாவினுள் 1917 பாட்டாளி வர்க்கப் புரட்சியின் சோசலிச நடவடிக்கைகளின்
ஒரு பாகமாகவே தீர்த்து வைக்கப்பட்டது என்றே லெனின் குறிப்பிடுகின்றார். அந்தப் புரட்சியுடன் தொடர்பற்ற
விதத்தில் அதைத் தவிர்த்து அல்லது அதற்கு மேலாக பாய்ந்து கொள்வதன் மூலம் அடையக் கூடிய தீர்வு
இருந்ததில்லை என்பதே அதன் அர்த்தம். இல்லையா? இது அன்று புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் இன்றைய சோசலிச
சமத்துவக் கட்சியும் வலியுறுத்தும் நிலைப்பாட்டில் இருந்து வேறுபடுவது எப்படி?
லெனினின் இரண்டு வசனங்களின் உள்ளும் அவர் திட்டவட்டமான முறையில் வெளிப்படுத்தும்
சீர்திருத்தங்களிடையே முக்கியமானது, தொழிலாளர் வர்க்க சர்வாதிகாரத்தின் கீழ் ஒடுக்கப்படும் தேசிய இனங்கள்
தமது தலைவிதியை தீர்மானித்துக்கொள்ள வழங்கப்பட்ட ஜனநாயக உரிமைகளும் விவசாயிகள் காணிகளை
பெற்றுக்கொள்ளும் உரிமைகளுமாகும். அந்த இரண்டு நடவடிக்கைகளும் இன்னமும் அனைத்துலக சோசலிச
வேலைத்திட்டத்தின் அடிப்படையில் இடம்பெறும் உலகளாவிய பொது சோசலிச திட்டமிடலை அல்லது விவசாயத்தில்
கூட்டுமயத்தினை நோக்கிச் செல்லாத முதலாளித்துவ ஜனநாயத் தீர்வுகளாகும். அவை சோசலிச திட்டமிடலை
நோக்கி மாற்றமடையும் சமூகத்தின் ஒடுக்கப்படும் மக்களை, அந்த முற்போக்கு விதிமுறைகளையிட்டு நனவூட்டி,
வெற்றிகொள்ளும் தொடர்ச்சியின் இடைமருவு கட்டங்களாகும். எனவேதான் அவை சோசலிசப் புரட்சியின் இடைச்
சக்திகளாக வகுக்கப்பட்டுள்ளன. இந்தச் சோசலிசத் தொடர்ச்சியின் அபிவிருத்திகளுக்குப் பிற்காலத்தில் தடைகளை
ஏற்படுத்திய ஸ்டாலினிச அதிகாரத்துவம், விவசாயிகள் தொடர்பாகவும் அவ்வாறே ரூஷ்யாவினுள் வாழ்ந்த
ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களின் ஜனநாயக உரிமைகள் சம்பந்தமாகவும் 1920களின் கடைப்பகுதியில் இருந்து
மேற்கொண்ட கொலைகாரத்தனமான அத்துமீறல்களின் அழிவுகள் அன்றையை விட இன்று பழைய சோவியத் யூனியனுள்
வெளிப்பாடாகியுள்ளது.
லெனின் குறிப்பிட்ட "சீர்திருத்தங்கள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் இடைச்
சக்தியாக நாம் எப்போதும் குறிப்பிட்டுள்ளோம்" என்ற கூற்று மார்க்சிச இயக்கத்தின் வரலாற்றில் நீண்ட தூரம்
பயணம் செய்த விளைவுகளைக் கொண்டதாகும். முதலாளித்துவ அமைப்பினுள் வெற்றிகொள்ளும் சீர்திருத்தங்களை
ஒவ்வொன்றாக திரட்டி ஒழுங்கு முறையாக மூட்டை கட்டிக் கொண்டு பயணம் செய்வதன் முடிவில் சோசலிசத்தை
நோக்கிச் செல்ல முடியும் என்ற சீர்திருத்தவாத வேலைத் திட்டத்தை மார்க்சிச இயக்கத்தினுள் முதற்தடவையாக
வெளிவெளியாக தெரிவித்தவர், 1880களில் ஜேர்மன் சமூக ஜனநாயக இயக்கத்தின் தலைவரான எட்வாட்
பேர்ண்ஸ்டைன் ஆவர். அன்றில் இருந்து இன்று நூறு ஆண்டுகளுக்கும் அதிகமான காலம் கழிந்து சென்றுள்ள போதிலும்,
அக்காலப் பகுதியினுள் உலகின் பல்வேறு இடங்களிலும் பேர்ண்ஸ்டைன்வாதத்தின் நாசங்கள் எடுத்துக் காட்டப்பட்ட
போதிலும், அந்த முதலாளித்துவச் சார்பு சீர்திருத்தவாதத்தின் அதிர்வுகள் இன்னமும் ஒலித்தபடியுள்ளன. சிறப்பாக
சீர்திருத்தவாதிகளுக்கு 'சேலைன்' குழாய்களாக விளங்கிய ஸ்டாலினிச கொர்பச்சோவின் பெரஸ்ரொய்கா
முகமூடியும் கழற்றி வீசப்பட்டு, அந்த அதிகாரத்துவம் வீழ்ச்சி கண்ட 1989-91 காலப்பகுதியின் பின்னர்,
புரட்சிகர சோசலிச முன்நோக்கிற்கு எதிரான கூச்சல்கள் துள்ளிக் கிளம்பின.
முதலாம் உலக யுத்த காலத்தில் ஏகாதிபத்திய யுத்தத்தினை கட்டியணைத்துக் கொண்ட
பேர்ண்ஸ்டைனின் சமூக சீர்திருத்தவாத இயக்கம் மீண்டும் தலையெடுத்தது, படுமோசமான கம்யூனிச எதிர்ப்பு
இயக்கத்துக்கு தோள் கொடுத்த வண்ணம், இரண்டாம் உலக யுத்தத்தின் பின்னைய காலத்திலாகும். ஆனால், அதன்
புதிய பாய்ச்சலை ஸ்டாலினிச ஆட்சி வீழ்ச்சி கண்டதன் பின்னர் நன்கு துலாம்பரமாகக் காணமுடிந்தது. இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னர் 40 நாடுகளின் பிரதிநிதிகளைக் கொண்டுள்ளதாக கூறிக் கொண்ட இந்தப் பிற்போக்கு
இயக்கம் 1999 அளவில் 143 நாடுகளின் அமைப்பைத் திரட்டிக்கொள்வதில் வெற்றி கண்டது. சோசலிச முகமூடி
அணிந்து கொண்டிருந்த குட்டி முதலாளித்துவ தீவிரவாத இயக்க கும்பல் அடியோடு அந்த வழியில் தடம் புரண்டு
போயிற்று. 'தியச'வும் இதில் ஒரு இயக்கமாகும்.
அஹிங்சக பெரேரா அந்த சமூக புரட்சி எதிர்ப்பு எதிரொலியின் ஒரு நோக்குனர்
ஆவார்.
முதலாளித்துவ அமைப்பினுள் தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் வெற்றி
கொள்ளும் சீர்திருத்தங்கள் புரட்சிகர வர்க்கப் போராட்டத்தின் துணை விளைவு மட்டுமே என மார்க்சிஸ்டுகள்
வலியுறுத்தியது, 19ம் நூற்றாண்டின் கடைப்பகுதியில் தலை நீட்டிய முதலாளித்துவச் சார்பு பேர்ண்ஸ்டைன் வாதத்துக்கு
எதிராகவாகும். தொழிலாளர்களும் ஒடுக்கப்படும் மக்களும் முதலாளித்துவத்தின் உழைப்புச் சுரண்டலுக்கும்
பாகுபாடுகளுக்கும் அடக்குமுறைகளுக்கும் எதிராக முன்வைக்கும் கோரிக்கைகளில் ஒரு அளவைத் தன்னும் வழங்க
முதலாளித்துவ ஆளும் வர்க்கம் தள்ளப்படுவது, தமது சொத்துடைமைகளையும் அவ்வாறே ஆட்சி அதிகாரத்தையும்
சவாலுக்கு உள்ளாக்கும் வெகுஜன இயக்கம் தோன்றுமோ என்ற கிடுநடுக்கத்தினாலாகும். இந்தக் கிடுநடுக்கம்
நனவான புரட்சிகர தலைமையிலான வர்க்கப் போராட்டம் உள்ள நிலைமையிலேயே உருவாகின்றது. அங்ஙனம்
இல்லாது போகுமிடத்து பொது மக்களின் கோரிக்கைகளையிட்டு ஆளும் வர்க்கத்தின் பிரதிபலிப்புக்கள் வெறும்
ஏமாற்று மோசடிகளாக விளங்கும்.
ஆளும் வர்க்கம் சமூக சீர்திருத்தங்களை தமது ஆதிக்கத்தில் உள்ள சமூக அமைப்பின்
மரணத்தை ஒத்திப் போடும் ஒரு உபாயமாகக் கையாள்கின்றது. அஹிங்சக பெரேராவும் அவ்வாறே தீவிரவாதிகள்
எனப்படும் வகையறாக்களும் சீர்திருத்தவாத கும்பல்களுடன் சேர்ந்து, புரட்சிகர மூலோபாயங்களை
உதறித்தள்ளிவிட்டு முதலாளித்துவ ஆளும் வர்க்கத்தின் சாப்பாட்டு மேசையில் இருந்து கொட்டும் மிச்ச சொச்சங்களை
தின்று திருப்தி அடைய வேண்டும் என மக்களுக்கு கூறுகிறார்கள். இதைத் தொழிலாளர் வர்க்கம் தனது
உபாயமாகவும் தந்திரமாகவும் கடைப்பிடிக்க வேண்டும் என்கிறார்கள். எஜமானரின் பாதுகாப்புக்காக நின்று
கொண்டுள்ளதாகக் காட்டிக்கொள்ள அடிக்கடி குரைத்துக்கொண்டு சாப்பாட்டு மேசையை சுற்றி
வட்டமிட்டுக்கொள்ளும் நாய் வேலையில் இருந்து இது வேறுபடுவது எப்படி? நாய்க்கு எஜமானை ஒழித்துக் கட்டும்
நோக்கம் ஒருபோதும் ஏற்படுவதில்லை. அல்லது அதனது உபாயம், தந்திரம் எல்லாமே எஜமானின் கீழ் வயிற்றை
நிரப்பிக் கொள்ளுவதேயாகும். மனித இனத்தின் முன்னேற்றத்தை ஊர்ஜிதம் செய்யக் கூடிய சோசலிசப் புரட்சியின்
முன்னணிப் படையணியான தொழிலாளர் வர்க்கத்துக்கு அஹிங்சக பெரேரா போன்றவர்கள் சிபார்சு செய்வது,
இத்தகைய ஒரு தரித்திரம் பிடித்த விதிமுறைகளை என்றும் கடைப்பிடித்து ஒழுக வேண்டிய கொள்கையையேயாகும்.
முதலாளித்துவ ஆட்சியாளர்களின் வாலைப் பிடித்துக்கொண்டு அதற்கு கீழ் தெரியும்
சீர்திருத்தவாத அசிங்கத்தை விரல்களில் கணக்கிட்டுக் கொண்டு, மூச்சு வாங்குவதையும் கணக்கில்கொள்ளாமல் ஓடும்
நரி ஆதிவாசி தீவிரவாதிகள் எனப்படுபவர்களுக்கு எதிராக, போல்ஷிவிக் கட்சி 1905 புரட்சியின் பின்னர் ஸார்
ஆட்சியாளர்கள் முன்வைத்த முதலாளித்துவ பாராளுமன்றவாத டூமா தொடர்பாக வகித்த நிலைப்பாட்டை
புரிந்துகொள்வது அவசியம்.
அதனை ஸார் ஆட்சியாளர்களிடமிருந்து கிடைத்த ஒரு சீர்திருத்தமாக போல்ஷிவிக்குகள்
கட்டி அணைத்துக் கொள்ளவில்லை. முதலில் அதன் மோசடியை அம்பலப்படுத்தியதோடு அதில் சேர்ந்து
கொள்வதையும் போல்ஷிவிக்குகள் லெனினின் தலைமையில் நிராகரித்தனர். பின்னர் உலகளாவிய ரீதியில் தொழிலாளர்
வர்க்கப் போராட்டத்தின் சாதகமான பின்னணி நிலைமைகளின் கீழ் புரட்சிகர மூலோபாயத்துக்கு கீழ்ப்பட்ட ஒரு
உபாயமாக லெனினின் சிபார்சுகளுக்கு இணங்க தொழிலாளர் வர்க்கத்துக்கு போதிக்கும் பொருட்டு போல்ஷிவிக்
கட்சி டூமாவில் சேர்ந்து கொள்ள தீர்மானம் செய்தது. இதற்குக் காரணம், டூமாவினுள் இருந்து கொண்டே அதனது
ஈடாட்ட நிலையையும் தொழிலாளர் வர்க்கத்தினதும் ஒடுக்கப்படும் மக்களதும் பிரச்சினைகளுக்கு தீர்வு காண
வேண்டிய சமூகப் புரட்சியின் அவசியத்தையும் வலியுறுத்துவதற்காகும். போல்ஷிவிக் கட்சியின் இந்த விதிமுறை
நடைமுறைக்கிடப்பட்டது. ஜே.வி.பி. அன்று பொதுஜன எதிர்ப்பு மக்கள் படுகொலை நடவடிக்கைகளில் ஈடுபட்ட
வண்ணம் தானே எதிர்ப்புக் காட்டிய மாகாண சபைகளுள் இன்று நுழைந்து கொண்டு, அவற்றின் அதிகார
இயந்திரத்தை "ரிமோட் கொன்ட்ரோல்" மூலம் இயக்கும் அடிப்படையில் காலூன்றிக்கொண்டு நடைமுறைக்கிட்டு வரும்
பொதுஜன முன்னணி மாகாண சபைகளின் நிர்வாகத்தில் பங்காளிகளாக செயற்படும் விதத்திலானது அல்ல. 'ரிமோட்
கொன்ட்ரோல்' பேச்சு முதலாளித்துவ அமைப்புக்கு நெருக்குவாரம் கொடுப்பதன் மூலம் அதை அடிபணியச் செய்ய
முடியும் என்ற நப்பாசையை வளர்க்கிறது.
அஹிங்சக பெரேரா குறிப்பிடுவதன்படி, ஆளும் வர்க்க ஆட்சியாளர்களின் தியாக
மனப்பான்மையின் மீது நம்பிக்கை வைத்து முதலாளி வர்க்கம் வழங்கும் மோசடி வாக்குறுதிகளைக் கொண்டு
நடைமுறைப்படுத்தும் நொண்டிச் சாட்டு பயனற்ற விதிமுறைகளை போல்ஷவிக் கட்சி அடிப்படையாகக்
கொண்டிருந்ததே கிடையாது. அக்கட்சி மக்களாதரவுடன் சமூகப் புரட்சிக்கு தலைமை வழங்குவதாக மாறியதற்கு
இலங்கையில் இருந்து உதாரணம் காட்டுவதாயின் ட்ரொட்ஸ்கிச போல்ஷிவிக்-லெனினிஸ்ட் கட்சி 1947ல்
நடைமுறைக்கிடப்பட்ட சோல்பரி அரசியலமைப்பு சட்ட சீர்திருத்தத்தை "பொது மக்களுக்கு எதிரான சதி" என
கண்டனம் செய்தது. அத்தோடு அதில் உள்ளடங்கியிருந்த முதலாளித்துவ மோசடியை அம்பலப்படுத்தும் அதே
வேளையில் அந்தச் சீர்திருத்தத்தின் கீழ் அமைக்கப்பட்ட பாராளுமன்ற ஆசனங்களுக்குப் போட்டியிட்டமை
லெனினிஸ்டுகள் என்ற முறையில் அத்தகைய புரட்சிகர உபாயத்தைக் கடைப்பிடிப்பதாகவும் விளங்கியது. சமசமாஜக்
கட்சி அன்று எடுத்த நிலைப்பாட்டுக்கும் பின்னர் அது பாராளுமன்றவாதத்தில் மூழ்கிப் போனதற்கும் இடையிலான
வேறுபாடு, ஆகாயத்திற்கும் பூமிக்கும் இடையிலான வேறுபாட்டுக்கு சமமானதாகும். போல்ஷிவிக்-லெனினிஸ்டுகள்
அன்று பின்பற்றிய உபாயம், உலக சோசலிச முன்நோக்கின் மூலோபாயத்தைக் கொண்டிருந்த அதே வேளை,
சமசமாஜக் கட்சி பின்பற்றிய வழிமுறை, தேசியவாத முதலாளித்துவ ஆட்சிக்கு அடிபணிந்து போனதே இதற்கு
காரணமாகும். லெனினின் புரட்சிகர மூலோபாயத்துக்கு கீழ்ப்படிந்த இத்தகைய உபாயங்களின் அவசியத்தை அவர்
எழுதிய 'இடதுசாரி கம்யூனிசத்தின் இளம்பிள்ளை கோளாறு' என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்.
முதலாளித்துவ ஒற்றையாட்சி முறையைக் காக்கும் இனவாத யுத்தத்தை ஈவிரக்கமின்றி
எதிர்த்தும் வடக்கு, கிழக்கில் இருந்து அரச படைகளை வாபஸ் பெறச் செய்யவும் பொதுமக்களை அணிதிரட்டும்
பொருட்டு இடைவிடாது பிரச்சாரம் செய்த புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகமும் சோசலிச சமத்துவக் கட்சியும்
முன்னெடுத்த போராட்டம் தொடர்பாக ஆத்திரத்தைக் கொட்டும், இரண்டு கடைவாய்களின் ஊடாகவும் வீணி ஓடும்
காக்காய்வலிப்பு நோயாளியைப் போல அஹிங்சக பெரேரா இடைவிடாமல் பின்வருமாறு கூறுகின்றார்:
"ஜே.வி.பி. அதி தீவிரவாத சிங்கள இனவாத நிலைப்பாட்டில் இருந்து, சிங்கள முதலாளிகளின்
மத்தியமயமாக்கப்பட்ட ஒற்றையாட்சி முறையைக் கட்டிக் காக்கும் பொருட்டு கையாட்களாக செயற்பட்டு,
இலங்கைப் பாட்டாளி வர்க்க இயக்கத்தை இந்தத் தலைவிதிக்குள் தள்ள செயற்பட்டு வரும் அதே சமயம்,
பு.க.க. மனித சமுதாயத்தின் சகல அடிப்படைப் பிரச்சினைகளுக்குமான தீர்வு, உலகப் பொருளாதாரத்தின்
மட்டத்திலும் அனைத்துலகப் புரட்சிகர போராட்டத்தின் சாதனங்களூடாகவும் தேடிக் கொள்ளப்பட வேண்டும் என்ற
அனைத்துலகவாத விதிமுறையை முன்தள்ளி இங்கேயே வீழ்ந்து கொண்டுள்ளது."
இது ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டுக்கு எதிராக இரண்டு கட்டப்
புரட்சி வேலைத்திட்டத்தைக் காக்கும் பொருட்டு நீண்ட காலமாக எகாதிபத்தியச் சார்பு ஸ்டாலினிச வர்க்கச்
சமரசவாதிகள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டாகும். இந்தக் குற்றச்சாட்டை இன்று இருட்டில் இருந்து கொண்டு மீண்டும்
உச்சரிப்பவர்கள் ட்ரொட்ஸ்கிச சமூக விஞ்ஞான ரீதியான கோட்பாட்டு முடிபுகள், எந்த நாட்டில் அல்லது எந்த
தேசத்தில் இந்த நூற்றாண்டின் எந்தக் காலகட்டத்தில் பொய்யாக்கப்பட்டுள்ளது என்பதை புறக்கணிக்கின்றனர்.
நேரம் அல்லது அவகாசத்தினுள் அத்தகைய எந்த ஒரு உதாரணத்தைத் தன்னும் எடுத்துக் காட்ட முடியாதெனில்
இரண்டு கண்களால் அல்ல மூன்று, நான்குகளாலும் கனவு காண்பவர்கள் பொய்யர்கள். இதைத் தவிர வேறு எதுவும்
நிரூபிக்கப்படவில்லை.
மேலே மேற்கோளாகக் காட்டிய அஹிங்சக பெரேராவின் வாக்கியங்களின்படி
பு.க.க. "முன் தள்ளியிருந்ததும்'' ட்ரொட்ஸ்கிஸ்டுகள் இன்றும் கடைப்பிடிக்கின்றதுமான விதிமுறைகளை "மனித
சமுதாயத்தின் சகல அடிப்படை முக்கியத்துவமும் வாய்ந்த பிரச்சினைகளுக்கான தீர்வை அனைத்துலக புரட்சிகரப்
போராட்டத்தின் சாதனங்களுள் தேடிக்கொள்ள வேண்டும்" என்பது உண்மையே. அது மார்க்சிச இயக்கத்தின்
நீண்டதும் விஞ்ஞான அடிப்படையிலானதுமான விதி முறையாகும். 1917 அக்டோபரில் ரூஷ்யத் தொழிலாளர் வர்க்கம்
ஆட்சியைக் கைப்பற்றிக்கொள்ளும் போதும் ஆட்சியைக் கைப்பற்றியதன் பின்னரும் லெனினும் ட்ரொட்ஸ்கியும் அந்த
அனைத்தலக சோசலிச வேலைத்திட்டத்துக்கு வெளியே பாய்ந்து கொண்டதில்லை. தொழிலாளர் வர்க்க
சர்வாதிகாரத்தை ஸ்தாபிதம் செய்ததன் பின்னர் ரூஷ்யாவினுள் தலைநீட்டிய பதவிகளையும் வசதி வாய்ப்புக்களையும்
கட்டிக் காக்க முயன்ற அரச அதிகாரத்துவ தரப்பினருக்கு எதிராக, அவர்கள் இருவரும் ஒரே குரலில் ரூஷ்ய
தொழிலாளர் வர்க்க அரசு திரிப்புக்களுக்கு உள்ளாகும் சாத்தியத்தை வலியுறுத்தியதோடு அதை வெற்றி கொள்ளுவது
உட்பட சோவியத் யூனியனின் எதிர்கால முன்னேற்றமும் தலைவிதியும் அனைத்துலகப் புரட்சியின் வெற்றியில்
தங்கியுள்ளதாகவும், ரூஷ்யாவைப் போலவே உலக தொழிலாளர் வர்க்கத்திற்கும் போதித்து வழிநடத்தப்
போராடினர். 1919ல் மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தை ஸ்தாபிதம் செய்யும் போராட்டத்துக்கு அவர்கள் இருவரும்
இணைத் தலைவர்கள் என்ற ரீதியில் தோள் கொடுத்ததும் அந்த அடிப்படையிலேயேயாகும். மூன்றாம் அகிலத்தின்
உலக சோசலிசப் புரட்சி முன்நோக்குக்கு எதிராக தேசியவாத "தனிநாட்டில் சோசலிசம்" பற்றிய
கோட்பாட்டை கொணர்ந்து ரூஷ்யாவினுள் தமக்குக் கிடைத்த வசதி வாய்ப்புக்களுடன் சேர்ந்து ரூஷ்யத்
தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களின் நிஜ பிரச்சினைகளுக்கு புறமுதுகு காட்டியது, ஸ்டாலின் உட்பட்ட அதிகாரத்துவ
தரப்பினரே ஆகும். அனைத்து குட்டி முதலாளித்துவ தீவிரவாதிகளும் முதலாளித்துவ அமைப்பினுள் வயிறளப்பதைக்
காக்கும் பொருட்டு எச்சில் சோற்றை நக்கும் வயிற்றுமாரி முறைமையை காக்கும் திட்டத்துடன் சமூகப்
பிரச்சினைகளுக்கு உரிய நிஜமானதும் வர்க்கப் போராட்டத்தின் உரைகல்லின் மூலம் ஊர்ஜிதம் செய்யப்படுகின்றதுமான
தீர்வான அனைத்துலக சோசலிச புரட்சி பற்றிய முன்நோக்குக்கு பல்லிளிப்போர் கடைப்பிடிப்பது லெனினின்
அனைத்துலகவாத பாரம்பரியங்கள் அல்ல. அதற்கு எதிராக எழுப்பப்படும் ஸ்டாலினின் தேசிய சோசலிசத்தின்
பாரம்பரியங்களையேயாகும். அவர்கள் தமக்கு முதலாளித்துவ அமைப்பினுள் இப்போது உரித்தாகியுள்ள
வசதிவாய்ப்புகள் நிறைந்த வயிற்றுமாரி வாழ்க்கை முறையும் குழம்பிப் போகலாம் என்ற பீதி காரணமாக விஞ்ஞான
பூர்வமான புரட்சிகர முன்நோக்கினையும் அதைக் கடைப்பிடிப்பவர்களையும் ஒன்றிணைந்து எதிர்க்கிறார்கள்.
இந்த விடயத்தை மேலும் தெளிவுபடுத்தும் பொருட்டு அஹிங்சக பெரேரா தேசிய
இனங்களின் சுயநிர்ணய உரிமையை (பிரிந்து சென்று தனி அரசு அமைக்க ஒடுக்கப்படும் தேசிய இனங்களுக்கு உள்ள
உரிமை) பாதுகாத்துக் கொண்டு தூக்கிப்பிடிக்கும் மேலும் சில அறிக்கைகளை நெருக்கமாக ஆய்வு செய்வது
பொருத்தமானது. அவர் பின்வருமாறு குறிப்பிடுகின்றார்: "ஒடுக்கப்படும் தேசிய இனங்களிற்கான சுயநிர்ணய உரிமை
தேசிய இனம் என்ற விதத்தில், முகம் கொடுக்கும் இந்த விசேட ஒடுக்குமுறைகளில் இருந்து ஒடுக்கப்படும் தேசிய
இனத்தின் தொழிலாளர் வர்க்கம் உட்பட்ட அனைத்து வர்க்கங்களையும் சேர்ந்த மக்களதும் சார்பு ரீதியிலான
சுதந்திரத்தை உத்தரவாதம் செய்கின்றது." தேசிய சுயநிர்ணய உரிமையின் கீழ் தமிழ் மக்களுக்குக் கிடைக்கும்
சார்பு ரீதியான சுதந்திரம் எனப்படுவதை ஊர்ஜிதம் செய்து காட்டும் பொருட்டு பெரேரா அந்த பெருமூச்சுக்கு
ஒரு முன்மாதிரியையும் எடுத்துக் காட்ட முயற்சிக்கின்றார். "சிங்கள மையமான முதலாளித்துவ ஆட்சி முறையானது
-அதாவது பிரித்தானிய ஆட்சியில் இருந்து சுதந்திர ஆட்சி முறை- சோல்பரி, 1972 முதலிய அரசியல்
அமைப்புக்கள் மூலம் தேசிய ரீதியில் ஸ்தாபிதம் செய்யப்பட்ட போதிலும் முதலாளித்துவ மற்றும் ஏகாதிபத்திய
சுரண்டலில் இருந்து சுதந்திரம் பெற தேசிய பாட்டாளி வர்க்கத்தின் தலைமையில் ஒடுக்கப்படும் மக்களால் முடியாது
போய்விட்டது. ஆனால் சிறப்பாக சிங்கள தேசிய இனத்தின் உரிமைகளை அதன் மூலம் ஊர்ஜிதம் செய்து கொள்ள
முடிந்தது."
1948ம் ஆண்டின் சுதந்திரத்தினதும் தமிழர் எதிர்ப்பு இனவாத யுத்தத்தின்
தூண்டுகோலான 1972 அரசியலமைப்புச் சட்டத்தினதும் படுகொடூரமான பேரழிவுகளில் இருந்து இதுகாறும் வேண்டியமட்டும்
அனுபவம் பெற்றுள்ள சிங்கள தொழிலாளர் ஒடுக்கப்படும் மக்கள், "சிங்கள தேசிய உரிமைகளை ஊர்ஜிதம் செய்யும்"
இந்த பிரயோசனமற்ற வாய்ச்சவாடல்களில் ஈடுபட்டுள்ளவர்களை இராப்பகலாக குற்றம் சாட்டுவது நிச்சயம்.
இந்தப் பொய்க்கு பல்வேறு வகையறாக்களைச் சேர்ந்த சாயங்களை தடவி, பொதுமக்களைத் திரும்பத் திரும்ப
பிற்போக்குப் பொறிக்குள் இவர்கள் மாட்டி வைத்துள்ளனர் என்பதே உண்மையாகும். சரியான முன்நோக்கும்
தலைமையும் இல்லாததால் தம்மை அகப்படுத்திக் கொண்டுள்ள பொறிகளை அவர்கள் சபிக்காமலும் இல்லை. பொதுஜன
முன்னணி போன்ற காலாவதியான முதலாளித்துவ மாட்டுவண்டிகளை பொதுமக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணும்
வாகனமாகச் சாயந் தீட்டப் பங்களிப்பு செய்யும் சகல போலி வைத்தியர்களையும் அவர்கள் திட்டித் தீர்ப்பது உக்கிரம்
அடையும் நாளில் உருவாகும் பெறுபேறுகள் சம்பந்தமான பயங்கர கனவுகளை இன்றே தெரிந்து கொள்ளுங்கள்!
1948, 1972 அரசியல் மாற்றங்கள் என்ற விதத்தில் தூக்கிப் பிடிக்கப்பட்ட
ஏகாதிபத்திய சார்பு ஆட்சியின் சேணிட்ட கழுதைகளை இழுப்பதன் காரணமாக "சிங்கள தேசிய உரிமைகளை
ஸ்தாபிதம் செய்துகொள்ள முடிந்தது" என தாம் அணிந்துகொண்டுள்ள கோட்டு சூட்டுக்கு அப்பால் வாழும் மக்கள்
அனுபவிக்கும் தரித்திரம் பிடித்த வாழ்க்கை நிலைமைகளைக் கண்டுகொள்ள முடியாத சுயநலம் பிடித்த குட்டி
முதலாளித்துவ உதவாக்கரைகளால் மட்டுமே இதனைக் கூறமுடியும்.
ஆதலால், அவர்கள் எதுவிதமான வெட்கமும் இல்லாமல் தமிழ் மக்களையும் அதே
பாதையில் பயணம் செய்யும்படி சிபார்சு செய்கிறார்கள். நனவான - விழிப்பான எந்த ஒரு தமிழ்
தொழிலாளியோ அல்லது தமிழ் இளைஞனோ அவர்களுக்கு விரல் நீட்டி "சுயநிர்ணய உரிமைக்கு தோள் கொடுத்துக்
கொண்டு இப்போது நீங்கள் 1948லும் 1972லும் முதலாளித்துவ சீர்திருத்தங்கள் மூலம் சிங்களப் பொதுமக்களுக்கு
பெற்றுக் கொடுத்துள்ள தலைவிதிக்கு எம்மையும் இழுத்துச் செல்ல முயற்சி எடுத்தால், நீங்கள் சேவகம் செய்வது
ஏகாதிபத்தியச் சார்பு முதலாளித்துவ ஆட்சியை எம் மீதும் திட்டவட்டமான முறையில் திணிப்பதற்கு இல்லையா என்ற
கேள்வியை எழுப்பினால் அஹிங்சக பெரேரா வழங்கும் பதில் என்ன? அந்த பதிலை எம்மால் ஊகித்துக் கொள்ள
முடியும். அவர் பகிரங்கமாக தெரிவிக்காது போனாலும் அது பின்வரும் விதத்தில் அமைந்து இருக்கும்: "சிங்களத்தை
அரச மொழியாக்கும் இனவாத வேலைத் திட்டத்தின் கீழ் பல்கலைக் கழகத்தில் பயின்ற நான் தற்சமயம் தியச
சஞ்சிகையின் ஆசிரியன்! என்னைப் போன்று நூற்றுக் கணக்கானவர்கள் அல்ல ஆயிரக்கணக்கானவர்கள் உள்ளனர்.
இலட்சோப இலட்சம் எண்ணிக்கையினரான ஏனைய தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களுக்கும் அவர்களின் குழந்தை
குட்டிகளுக்கும் இடி விழட்டும். அவ்வாறே தமிழ் மக்களான உங்களுக்கும் இடி விழட்டும். எனக்கு அதையிட்டு அக்கறை
கிடையாது. சுயநிர்ணய உரிமையை கட்டிக் காக்கும் விதத்தில் நான் முன்வைக்கும் தீர்வு, என்னைப் போன்ற ஒரு
சில நூறு அல்லது ஆயிரம் பேர்களுக்கு வாழ்க்கைக்கான வழியை வழங்கிய, முதலாளித்துவ அமைப்பிற்கு சேவகம்
செய்யும் பொருட்டு ஏற்படுத்தப்பட்டதாகும்." "அத்தகைய தீர்வுகள் மூலம் உங்களின் வயிறளப்பு நடவடிக்கைகளுக்கு
வாய்ப்புக் கிடைத்தது போல், சுயநிர்ணய உரிமையின் கீழ் தனிநாட்டை அமைத்ததன் பின்னர் தமிழ் குட்டி
முதலாளித்துவ கையாட்கள் சிலரை பெரும் புள்ளிகள் ஆக்குவதன் மூலம் எமக்கு கிடைக்கும் நன்மை என்ன?" என்ற
கேள்வியை எழுப்பி தமிழ் தொழிலாளர்கள், ஒடுக்கப்படும் இளைஞர்கள் தொடர்ந்தும் எதிர்ப்புக் காட்டுவதில்
ஈடுபட்டால்? இதற்கு அஹிங்சக பெரேராவின் பதிலானது, பொதுஜன முன்னணியின் அரசியல் பொதியை
நிராகரித்தால் அவர்களுக்கு எதிராக யுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்க வேண்டும் என்பதாக இருக்காதா?
சுயநிர்ணய உரிமையை காக்கும் வேஷம் போடும் புள்ளிகளின் நிஜ எதிர்ப்புரட்சி இலக்கு அத்தகையதாகும்.
அஹிங்சக பெரேரா தமது கட்டுரைத் தொகுதியில் முன்வைக்கும் அர்த்தமற்ற
கருத்துக்கள் அனைத்தையும் தூக்கி வீச முடியும் எனினும் அதற்கு இத்தகைய ஒரு முன்னுரையுள் கிடைக்கும் இடவசதி
மிகவும் வரையறுக்கப்பட்டது. ஆதலால் அத்தகைய ஒரு முயற்சியில் நாம் இங்கு ஈடுபடப் போவதில்லை. எனினும்
ட்ரொட்ஸ்கிஸ்டுகள் பக்கச் சார்பான முறையில் சோசலிச சமத்துவக் கட்சியின் விதிமுறைகள் அவரின் வழிகாட்டலுக்கு
அப்பால் சென்றுள்ளதாகக் காட்ட எடுக்கும் பித்தலாட்டமான முயற்சியையிட்டு சிறிதேனும் இங்கு குறிப்பிடாமல்
இருக்க முடியாதுள்ளது.
நான்காம் அகிலத்தின் அடிப்படை வேலைத்திட்டமான முதலாளித்துவத்தின் மரண ஓலமும்
நான்காம் அகிலத்தின் பணிகளும் என்ற நூலில் இருந்து அஹிங்சக பெரேரா பின்வரும் வாக்கியங்கள் சிலவற்றை
மேற்கோளாகக் காட்டுகின்றார்.
"பாட்டாளி வர்க்கத்தின் வரலாற்று அமைப்புக்களின் காட்டிக் கொடுப்பின்
செல்வாக்கின் கீழ், நான்காம் அகிலத்தின் புற எல்லையில் சில குழுவாத சிந்தனைகளும் பல்வேறு வகையறாக்களைச்
சேர்ந்த உட்குழுக்களும் தோன்றுகின்றன. அல்லது ஊற்றெடுக்கின்றன. அவற்றின் அடிப்படையாக இருப்பது, அரைகுறை
மற்றும் இடைமருவு கோரிக்கைகளுக்கான, அதாவது தொழிலாளர் வர்க்கத்தின் நிகழ்கால அடிப்படை
அவசியங்களுக்கும் தேவைகளுக்குமான, போராட்டங்களை நிராகரிப்பதாகும். புரட்சிக்கு தயார் செய்தல்
என்பதாக குழுவாதிகள் கருதுவது, சோசலிசத்தின் மகத்துவத்தை தாம் புரிந்து கொள்வதையேயாகும்.
"குழுவாதிகள் இரண்டு நிறத்திலேயே வேறுபாட்டை கண்டு கொள்ள முடியும். அதாவது
சிவப்பு, கறுப்பு என்ற இரண்டு நிறங்களுக்கிடையே மட்டுமே. தாம் காயமடைவதை தவிர்த்துக்கொள்ளும் பொருட்டு
இவர்கள் யதார்த்தத்தை இலகுவாக்குகின்றார்கள்." (முதலாளித்துவத்தின் மரண ஓலமும் நான்காம் அகிலத்தின்
பணிகளும். பக்கம்: 46)
புரட்சிக்காகத் தயார் செய்வதை அக்கறையுடன் கூடிய ஒரு குழுவாதியாக அஹிங்சக
பெரேரா பெயர் சூட்ட எந்தவிதமான வாய்ப்பும் கிடையாது. புரட்சிக்கு எதிரான எதிரி வர்க்கத்துடன் கூட்டுச்
சேர்ந்துகொண்டுள்ள சந்தர்ப்பவாதியும் புரட்சியையிட்டு பெரிதும் அக்கறையுள்ளவனாகக் காட்டிக்கொள்ளும் பேரில்
போராட்டத்தில் இருந்து ஓட்டம் பிடிக்கும் குழுவாதியும் ஒரே நாணயத்தின் இரு பக்கங்கள் என்பதை நாம் புரிந்து
கொண்டுள்ளோம். அஹிங்சக பெரேரா இதில் முதலாவது வகையறாவைச் சேர்ந்தவர்.
ஆனால், நாணயத்தின் இருபுறத்திலும் குறிப்பிடப்பட்டுள்ள உருவங்கள் ஒரே
உலோகத்தில் வரையப்பட்டுள்ளதால் அந்த இரட்டை செயற்பாடுகளின் சமமான இலட்சணங்களை தவிர்க்க முடியாது.
"குழுவாதிகளால் வேறுபாட்டை இரண்டு நிறங்களுக்கு இடையே மட்டுமே காண
முடியும்" எனக் குறிப்பிட்ட ட்ரொட்ஸ்கி "பொதுவில் இந்த மலட்டு அரசியல்வாதிகளுக்கு இடைமருவு கோரிக்கைகளின்
உருவில் ஒரு பாலத்தின் அவசியம் கிடையாது" எனவும் "அது அவர்களுக்கு அக்கரை செல்லும் அவசியம்
கிடையாததால் ஆகும்" எனவும் அப்பத்திரத்தில் மேலும் தெளிவுபடுத்தியுள்ளார்.
பிற்போக்கானதும் மனிதப் பேரழிவும் நிறைந்த யுத்த நிலைமையில் இருந்து சமாதான
சமத்துவ வாழ்க்கை முறையை நோக்கி சிங்கள, தமிழ் மக்களை வழிநடாத்தி, அக்கரைக்கு இட்டுச் செல்லும்
பொருட்டு, இடைமருவு கோரிக்கைகளை (Transitional
demands) எழுப்புவதன் மூலம் ஒரு பாலத்தை அமைப்பதுடன் தொடர்புபட்ட விதத்தில்
இப்பிரச்சினைக்குத் தீர்வு காணும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம்.
சிங்கள இனவாத முதலாளித்துவ வர்க்கமும் அதன் கொழும்பு ஆட்சியாளர்களும் தமிழ்
தேசிய இனத்துக்கு எதிரான அடக்குமுறையை யுத்த மட்டத்துக்குக் கொணர்ந்துள்ளது. அது கறுப்பானது. அந்நிலையில்
இருந்து விடுபடும் பொருட்டு தமிழ் ஆயுதம் தாங்கிய குழுக்கள் தனிநாடு அமைக்கும் பெயரில் போராடி வருகின்றன.
அது பலருக்கு சிவப்புச் சாயமாகியுள்ளது அல்லவா? இது எம்முன்னால் தோன்றியுள்ள
இருதரப்பாகும். புரட்சியாளனுக்கு இந்த இரண்டில் ஒன்றை தேர்ந்தெடுப்பதை விட வேறு வழியில்லையா?
இருந்துகொண்டுள்ளது. இதைத் தேடிக் கண்டுகொண்டாக வேண்டும்.
இந்த மாற்று வழியை சிவப்புப் பக்கமாகப் பெயரிட்டுக் கொண்டுள்ள தரப்பினருக்கு
தேசிய சுயநிர்ணய உரிமையை காக்கும் பெயரில் 'ஹாய்' போட்டுக் கொண்டு கறுப்பு பக்கத்தை பிரதிநிதித்துவம்
செய்யும் இனவாத யுத்தத்தின் அலுகோசுகளின் தீர்வுப் பொதி மோசடிக்கு செவி சாய்ப்பது எவ்வளவு
கொள்கையற்ற ஒன்றாகும். அதுவே தியச குழவினராலும் அஹிங்சக பெரேராவினதும் நெறி கெட்ட
தொழிலாகும்.
இதற்கு முரண்பட்ட விதத்தில் புரட்சியாளர்கள் இடைமருவு கோரிக்கைகள் ஊடாக ஒரு
பாலத்தை சிங்களம், தமிழ் பேசும் இரு தேசிய இனத்தையும் சேர்ந்த தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களைக்
கொண்டு நிர்மாணிக்க வேண்டும். அது அவர்களை எதிரும் புதிருமாக நிறுத்தி, யுத்தத்தைத் தூண்டிவிட்டுள்ள
முதலாளித்துவ அமைப்பைத் தூக்கி வீசும் இலக்கிலான சோசலிச ஐக்கியத்தை ஸ்தாபிதம் செய்யும் பொருட்டாகும்.
அதற்காக அவர்கள் இனவாத யுத்தத்துக்கும் அவ்வாறே பிரிவினைவாதத்துக்கும் எதிராக அனைத்துலகத் தொழிலாளர்
வர்க்க ஐக்கியத்தின் பேரிலான சுலோகத்தை முன்வைக்கின்றார்கள். வடக்கு- கிழக்கில் இருந்து இலங்கை அரச
படைகளை வாபஸ் பெறு! இனவாத யுத்தத்துக்கு ஒரு ஆளோ ஒரு சதமோ கொடாதே! என சோசலிச
சமத்துவக் கட்சி முன்வைத்துள்ள இடைமருவு சுலோகம் அத்தகைய புரட்சிகர மூலோபாயத்தின் அடிப்படையில்
முன்வைக்கப்படுகின்றது. குறுங்குழுவாதிகளைப் போலவே சந்தர்ப்பவாதிகளும் எந்த ஒரு காலத்திலும் சரி இந்தச்
சுலோகங்கள் தொழிலாளர்- ஒடுக்கப்படும் மக்களிடையே ஊடுருவச் செய்யப் போராடியது கிடையாது.
அதற்குக் காரணம் அவர்கள் இனவாத யுத்தத்தை விற்றுப் பிழைப்பதன் மூலம்
பராமரிக்கப்படும் தேசிய சுயநிர்ணயத்தின் பிரச்சாரகர்களாக மோசடி தீவிரவாத வேஷம் போட்டுக்
கொண்டுள்ளனர். இதற்குக் காரணம் அதை ஒரு வாழ்க்கைப் பிழைப்பாகக் கொண்டுள்ளதேயாகும்.
அரசியல் தீர்வுப் பொதிக்கும், அதன் சிருஷ்டி கர்த்தாவான பொதுஜன முன்னணிக்கும்
சார்பாக வக்காலத்து வாங்குவதன் மூலம் தெற்கில் இருந்து வயிறளக்கும் இந்த சிடுமூஞ்சிக்காரர்கள் வடக்கு-
கிழக்கு மாகாண மக்களிடையே எதுவிதமான அரசியல் நடவடிக்கைகளிலும் ஈடுபடாத பேர்வழிகளாவர்.
எனவேதான், அவர்கள் கொழும்பு ஆட்சியாளர்களுக்கும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பு தலைமையிலான தமிழ்
முதலாளித்துவ பகுதியினருக்கும் இடையேயான சமரசத்தின் மூலம் ஏகாதிபத்திய, முதலாளித்துவ சுரண்டல்களுக்கு ஒரு
உறுதியான களத்தை இலங்கையில் நிர்மாணித்துக் கொடுக்கத் தலை கீழாக நின்று வருகின்றார்கள். அது பிரித்தானிய
மாஜி இராஜாங்க அமைச்சர் லியாம் பொக்ஸ் தொடக்கம் செலிங்கோ குறூப் கம்பனிகளின் அதிபரான லலித்
கொத்தலாவலை உட்பட்ட இலங்கையின் முன்னணி வர்த்தகப் பிரமுகர்கள் தட்டினரின் அப்பட்டமான நிலைப்பாடாக
அம்பலமாகியுள்ளது. பொதுஜன முன்னணியைப் போலவே யூ.என்.பி.யும் ஆளுக்காள் போட்டியிட்டுக் கொண்டு
அரசாங்கத்தினதும் எதிர்க் கட்சியினதும் அங்கீகாரத்துடன் விடுதலைப் புலிகளுடன் பேச்சுவார்த்தை நடாத்தி, தமிழர்
பிரச்சினைகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனக் கூச்சலிடத் தொடங்கியுள்ளனர். சிங்கள பேரினவாத அமைப்பான
ஜே.வி.பி.யும் ஒற்றையாட்சி முறையைக் கட்டிக் காக்கச் சபதம் பூண்டுள்ளதாகக் கூறிக்கொள்ளும் அதே வேளையில்
தமிழ் மக்கள் வாழும் பிராந்தியங்களுக்கு சுயாட்சி வழங்க இணங்கியுள்ளமை இந்தப் பிற்போக்குச் சக்திகளின்
அணிதிரள்வின் ஒரு வெளிப்பாடாகவேயன்றி சிங்கள அல்லது தமிழ் தொழிலாளர், ஒடுக்கப்படும் மக்களின் ஜனநாயக,
வாழ்க்கை உரிமைகளையிட்டு அவர்களுக்குள்ள அக்கறையினால் அல்ல.
எவ்வாறெனினும் தமிழ் மக்களுக்கு எதிரான யுத்தத்தைத் தொடக்கி வைத்தவர்களும்
அந்த யுத்தத்தை மேலும் உக்கிரமாக்கி முன்னெடுத்தவர்களும் அதற்குத் தாளம் போட்டவர்களும் இந்த விதத்தில்
யுத்தத்தை நிறுத்தி, தீர்வு காணத் தள்ளப்பட்டுள்ளது ஏன்? யுத்தம் அதனது தர்க்க விதிகளுக்கு அமைய முன்சென்று
கொண்டுள்ள அதே வேளையில் அதன் ஆரம்ப நோக்கங்களுக்கு எதிரான பெறுபேறுகளைக் கொணர்ந்துள்ளதாக ஆளும்
வர்க்கம் புரிந்து கொண்டுள்ளதாலாகும்.
யுத்தத்திற்காகவே யுத்தம் செய்யும் ஆளும் வர்க்கம் கிடையாது. யுத்தமானது ஆளும்
வர்க்கத்தின் அவசியங்களை இட்டு நிரப்பும் பொருட்டு கையாளப்படும் மற்றொரு அரசியல், இராணுவ வேலைத்
திட்டமாகும். அது உலக யுத்தத்திற்கு மட்டுமன்றி இனவாத யுத்தத்திற்கும் பொருத்தமான ஒரு பொது
உண்மையாகும்.
தமிழ் பேசும் மக்களுக்கு எதிராகப் பாகுபாடு காட்டுவதையும் ஒடுக்குமுறைக்கு
உள்ளாக்குவதையும் 1948ல் இருந்து மேலும் மேலும் மோசமடையச் செய்த யூ.என்.பி. ஸ்ரீலங்கா,
கூட்டரசாங்கங்களும், 1983ன் பின்னர் அதனை ஒரு யுத்தத்தின் மட்டத்துக்கு தூக்கிப் பிடித்தன. இது
பூகோளமயமான முதலாளித்துவ பொருளாதார அமைப்பை ஒன்றிணைக்கும் போது ஏற்படக்கூடிய அரசியல்
நெருக்கடிக்கு தீர்வுகாணும் முறையில் இடம்பெற்றது. திறந்த பொருளாதார கொள்கைகளின் பேரழிவுமிக்க
தாக்கங்களுக்கு முகம் கொடுக்கும் தொழிலாளர் வர்க்கமும் ஏழை மக்களும் இதற்கு எதிராகக் கிளர்ந்து எழுந்து
எதிர்ப்புக் காட்டுவதை முன் கூட்டியே சிதறடிக்கும் பொருட்டு இனக்குழு பாகுபாடுகள் கையாளப்பட்டது. இதன்
மூலம் முதலாளித்தவ அரசின் இராணுவமயமாக்கத்துக்கு வழி திறப்பது அதன் இலக்காகியது. ஆனால்,
ஆரம்பிக்கப்பட்ட இனவாத யுத்தம் யூ.என்.பி. அரசாங்கத்தின் கீழ் 11 ஆண்டுகளும் பொதுஜன முன்னணி
அரசாங்கத்தின் கீழ் மேலும் சில ஆண்டுகளும் தொடர்ந்து இடம்பெற்று வருகையில், அதன் மூலம் முதலாளித்துவ
பொருளாதாரத்துக்கும் நிர்வாக ஸ்திரப்பாட்டுக்கும் ஆபத்தான சவாலை உருவாக்குவதை தவிர்க்க முடியாது
போயிற்று.
அரசாங்க வருடாந்த வருமானத்தில் மூன்றில் ஒரு பங்கு பொசுங்கிப் போனதோடு
இக்காலப் பகுதியினுள் நாட்டின் மொத்த தேசிய உற்பத்தியில் 22600 கோடி ரூபாக்களுக்கும் அதிகமான
தொகையை நாசமாக்கியுள்ள யுத்தம், முதலாளித்துவ வர்க்கத்தினால் தொடர்ந்தும் சகிக்க முடியாத ஒரு பெரும்
சுமையாகியது. நாட்டின் கடற்பரப்பில் 2/3 பங்கும், நிலப்பரப்பில் 1/3 பங்கும் முதலாளித்துவ வர்த்தக
நடவடிக்கைகளுக்கு பொருத்தமற்றதாக்கப்பட்டது. அத்தோடு நாட்டின் ஏனைய பகுதிகளுக்கு ட்ரான்ஸ்நஷனல் கூட்டுத்
தாபனங்களின் மூலதனத்தை தருவிப்பதற்கு ஒரு பெரும் தடையாகவும் யுத்தம் மாறியது. இதனால் முதலாளித்துவ
வர்த்தக சமூகத்துக்கு பெரும் வாய்ப்புகள் இல்லாத நிலைமை உருவாகியது.
அது மட்டும் அல்ல. அரச இராணுவமயமாக்கம் அதிகரித்த அளவுக்கு அரசின் ஈடாட்ட
நிலையும் உக்கிரம் கண்டது. பொதுவில் வளர்ச்சி கண்டு வந்த சமூக வன்முறைகளை ஊக்குவித்ததும் இந்த யுத்தமே.
சிங்கள தமிழ் இனக் குழுக்களின் பிராந்தியங்களின் எல்லைப் பகுதிகளில் மட்டுமல்லாது தலைநகர் உட்பட்ட நாட்டின்
தென் பகுதி நகரங்களிலும் சமூக வாழ்க்கை ஆபத்துக்குள்ளாகியது. யுத்த பேரிகைகளால் அடிபணியச் செய்ய
முடியாது போன பொது மக்களிடையே நாளாந்தம் யுத்த எதிர்ப்பு மனோநிலை வளர்ச்சி கண்டது.
இது, யுத்தத்தின் விளைவுகள் முதலாளித்துவ அமைப்பும் ஆட்சியும் உணரும் விதத்தில்
வளர்ச்சிகண்டு பரவி வந்த விதத்தை மிகவும் சாராம்சமாகக் குறிப்பது மட்டுமேயாகும்.
இனவாதக் கூலிப்படைகளாக மாறிய பல்வேறு தமிழ்க் குழுக்கள், கும்பல்களுக்கு
பலிகடாக்களை வழங்குவதன் மூலம் தமிழீழ விடுதலைப் புலிகளைத் தனிமைப்படுத்தி, சிதறடிப்பதன் மூலம்
முதலாளித்துவ ஒற்றையாட்சி அரச முறையைக் கட்டிக் காக்கும் அரசியல் தீர்வுப் பொதி மோசடி
இந்நிலைமையிலேயே குழி பறிந்து போயுள்ளது. சுயநிர்ணயத்தினதும் சுயாட்சியினதும் இனிப்பு வர்த்தகர்களின்
வியாபாரத்தை முன்னெடுத்துக் கொண்டு அதன் பின்னால் முக்கிய முதலாளித்துவக் கட்சிகள் இரண்டையும் ஒன்றாக
அணிதிரட்டி, விடுதலைப் புலிகளுடன் சமரசம் செய்வதன் மூலம் முதலாளித்துவ இலாபம் கறப்பதை உக்கிரமாக்கும்
வேலைத் திட்டத்தில் ஏகாதிபத்தியவாதிகளும் இலங்கை வர்த்தகர்கள் கும்பலும் யூ.என்.பி. பொதுஜன முன்னணி
அரசியல்வாதிகளும் தள்ளப்பட்டிருப்பதற்குக் காரணம் இதுவேயாகும்.
இலங்கையின் இனவாத யுத்தம் முதலாளித்துவ வர்த்தகர்களின் இலாபம் சுரண்டும்
வழிகளுக்கு குறுக்கே நின்று கொண்டுள்ளது. இது முதலாளித்துவ அமைப்பு நீண்டு வரும் ஒரு வீழ்ச்சிக் காலப்
பகுதியினுள் நுழைந்துகொண்டுள்ள ஒரு நிலையில் இடம்பெற்று வருகின்றது. இதன் பெறுபேறுகளினால் ஆத்திரம் அடையச்
செய்யப்பட்டு தமது போட்டியாளர்களை படுகுழிக்குத் தள்ளிய வண்ணம் உலகம் பூராவும் அலையும் நிதி மூலதனம்,
யுத்தத்துக்கு பின்னைய உலக அமைப்பை உடைத்து எறிந்தும், புதிய அணிதிரள்வு கூச்சல் போட்டும், கட்டியெழுப்பியும்
உலகின் அனைத்து இடங்களிலும் அரசியல் ரீதியிலும் இராணுவ ரீதியிலும் தலையிட்டு வருகின்றது. ஒரு இடத்தில் அது
பிரிவினைவாத முதலாளித்துவ அரசியல் போக்குகளுக்கு (சேர்பியாவில் கொசோவா பிரிவினைவாதிகளுக்கு
ஆதரவாகத் தலையிட்டது போல்) ஊக்கம் அளிக்கிறது. அதனை வளர்த்து எடுத்து போஷிக்கின்றது. மற்றொரு
இடத்தில் ஆத்திரம் கொண்ட முதலாளித்துவ அரசியல் போக்குகளை சமரசம் அடையச் செய்து, (அயர்லாந்திலும்
பாலஸ்தீனத்திலும் போல்) காலனித்துவத்துக்கு வழி வகுக்கின்றது. இது காரியவாதியை (Pragmatist)
குழப்பமடையச் செய்யும் உலக நிலைமையாகும். வரலாற்றுப் பொருள்முதல்வாதத்தை அடிப்படையாகக்
கொண்ட மார்க்சிஸ்டுகளால் மட்டுமே ஒரே வழியான உலக சோசலிச முன்நோக்கின் கீழ் இந்த நச்சு வட்டத்தில்
இருந்து வெளியேறுவதற்கான பாதையைத் தேடிக் கண்டுபிடிக்க முடியும்.
முழு உலக முதலாளித்துவ அமைப்பின் நீண்டு வந்த வீழ்ச்சி நிலைமையினுள், இந்த
சிக்கலடைந்து போயுள்ள உலக அரசியல் நூல் பந்தை, புதிய பிற்போக்கு உலக அமைப்பை நோக்கிய பல்வேறு
ஏகாதிபத்திய முகாம்களின் செயற்பாட்டுடன் தொடர்புபடுத்தாமல் சீராக்கிக் கொள்ள முடியாது.
'தியச' குழுவினரும் அஹிங்சக பெரேராவும் இன்றைய உலக நிலைமையை எங்ஙனம்
விளக்குகின்றார்கள்? அவர்கள் சொல்வது என்ன? "உலகப் பொருளாதாரம் நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும்
அது வீழ்ச்சி கண்டு போய்விடவில்லை. அது அழுகி நாற்றம் கண்டு போய்விடவும் இல்லை. அது நெருக்கடிகளுக்கு
முகம் கொடுத்தவாறே அபிவிருத்திகளையும் உரித்தாக்கிக் கொண்டுள்ளது" என்கின்றனர். நீண்ட தூரம் செல்லாமல்
ஆசியாக் கண்டத்திலேயே கிழக்கு, வடகிழக்கு திசைகளில் உள்ள ஒரு தொகை நாடுகளைப் பிடித்துக் கொண்டு
1997ன் அரை இறுதிக் காலப்பகுதியில் பரவி வந்த பொருளாதார வீழ்ச்சிகளை இத்தகைய மடைத்தனமான
விபரங்களைக் கொண்டு விவரங்களுக்குள் இருத்துவது எப்படி? இது உலக முதலாளித்துவ நெருக்கடியினதும்
வீழ்ச்சியினதும் வெளிப்பாடு இல்லையா? அங்ஙனம் இல்லையெனில் இப்பிராந்தியம் உலகப் பொருளாதாரத்தில் இருந்து
பிரிக்கக் கூடிய விதத்தில் சீனப் பெருஞ்சுவர் நீண்டு செல்ல வேண்டும் அல்லது பரந்து இருக்க வேண்டும்.
"நெருக்கடிக்கு முகம் கொடுத்தாலும் வீழ்ச்சி கண்டு போய்விடவில்லை". அவ்வாறே "நெருக்கடிக்களுக்கு முகம்
கொடுத்தவாறே அபிவிருத்திகளையும் உரித்தாக்கிக் கொண்டுள்ளது". இந்த யதார்த்த உலகிற்கு தீவிரவாதிகள் தமது
இரு கண்களையும் இறுக்கி மூடிக்கொண்டு விடும் மாயக் கட்டுக்கதைகளில், முதலாளித்துவத்தின் ஸ்திரப்பாடு மற்றும்
சதாகாலமும் அதன் செல்லுபடியான தன்மை தொடர்பான குருட்டுத்தனமான பயபக்தியைத் தவிர வேறு எதுவும்
அடங்கியுள்ளனவா?
முதலாளித்துவ வர்க்கத்தின் காதில் தொங்கிக் கொண்டு கால்களை அளக்கும்
தீவிரவாதக் குருடன் நிஜ உலகில் சிருஷ்டிக்கப்பட்டுள்ள ஆதாள பாதாளங்களைத் தவிர்த்துக் கொள்வதில் தோல்வி
கண்டுவிடுகின்றான். அதில் இருந்து மீட்சி பெற அவன் மீண்டும் தான் சதாகாலமும் இருந்து வருவதாக எண்ணும்
முதலாளித்துவ காது மடலின் உதவியையே நாடுகின்றான். இதன்படி அஹிங்சக பெரேரா மார்க்சிச ஆய்வுகளையிட்டு
பல்லிழித்துக் கொண்டு பின்வருமாறும் கூறுகின்றார்: "புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க.) அரசியல்
ஆய்வுகளைப் பார்க்குமிடத்து உலகப் பொருளாதாரம் இன்றோ நாளையோ வீழ்ச்சி காணும் போல்
தோன்றுகின்றது."
இதை நினைத்த மாத்திரத்தில் வட-கிழக்கு ஆசியாவில் தாய்லாந்து, மலேசியா,
இந்தோனேஷியா, பிலிப்பைன்ஸ் மட்டுமன்றி சிங்கப்பூரும் 1998ல் முகம் கொடுத்த பொருளாதார வீழ்ச்சியின்
எதிரில், பொதுஜன முன்னணி தலைவியும், பிரதி நிதி அமைச்சர் ஜீ.எல். பீரிஸ் கட்டவிழ்த்துவிட்ட வாயடிப்புக்களே
நினைவுக்கு வருகின்றது: "ஆசியன் நெருக்கடியில் இருந்து நாம் தப்பி விட்டோம்" என அவர்கள் அறிவித்தார்கள்.
அது எத்தனை மாதத்துக்கு செல்லுபடியானது? 1999ம் ஆண்டு ஆரம்பமாவதற்கு முன்னரே இலங்கைப்
பொருளாதாரத்தினுள் அந்த வீழ்ச்சிகளின் தாக்கங்கள் ஊடுருவிக் கொள்ள ஆரம்பித்தன. பொருளாதார வளர்ச்சி
வேகம், அவர்களின் புள்ளி விபரங்களின்படி அவர்கள் 1999ல் எதிர்பார்த்த நூற்றுக்கு 6 சதவீதத்தில் இருந்து அதன்
சரி அரைவாசியாக வீழ்ச்சி கண்டது.
தீவிரவாதிகள் முதலாளி வர்க்கத்தின் பாதார விந்தங்களை நக்கிக் கொண்டு
உபதேசம் செய்து வரும் பொருளாதார அபிவிருத்தி பற்றியும் ஒரு சில வார்த்தைகள் கூறியாக வேண்டும்.
பொருளாதார அபிவிருத்தி எனக் கொள்வது வெறுமனே நவீன தொழில் நுட்பத்தைப் பயன்படுத்தி, உழைப்பின்
விளைதிறனை அதிகரிக்கச் செய்வது மட்டுமேயானால் முதலாளித்துவப் பொருளாதாரம் அதை நிறைவேற்றிக்
கொண்டுள்ளது. ஆனால், தீர்க்கமான முறையில் சிந்திக்கும் ஆற்றல் படைத்த முதலாளித்துவப் பொருளியலாளர்கள்
கூட தீவிரவாதிகளின் இந்த அனுபவவாத அர்த்தப்படுத்தலை நிராகரித்துள்ளார்கள். அவர்கள் சமூக- கலாச்சார
அபிவிருத்தி தொடர்பான நோக்கில் இருந்து பொருளாதர வளர்ச்சியைப் பற்றிய பேச்சை வேறுபடுத்திவிட முடியாது
எனக் கூறுகின்றனர். அதன்படி ஒரு புறத்தில் சமுதாயத்தில் உள்ள பிரமாண்டமான பெரும்பான்மையினரின் வறுமை
அதிகரித்துச் செல்கின்றது. மறுபுறத்தில் கடை கெட்ட சுகபோகங்களில் ஜீவியம் நடத்தும் விரல்விட்டு எண்ணக் கூடிய
கோடீஸ்வரர்களின் கரங்களில் செல்வம் இமயமாகக் குவிகின்றது. இதை பொருளாதார அபிவிருத்தி எனப்படுவதாக
ஒப்புக் கொள்ள இவர்கள் மறுக்கிறார்கள். சமூக நலன்புரி பற்றிய மனித நேயத்துக்கு அர்ப்பணம் செய்யாது
போயினும் அத்தகைய சமூகத் துருவப்படுத்தலானது முதலாளித்துவ அமைப்பு தனக்கு ஏற்படுத்தும் மரண
ஆபத்துக்களையிட்டு நனவு பூர்வமாக அவர்கள் அந்த விதத்தில் அதைத் தெளிவுபடுத்துகின்றனர். தமது கண்ணுக்கெட்டிய
தூரம் விரலை நீட்டிக்கொண்டு தமது சுயநலன்களை பூர்த்தி செய்துகொள்ளும் விதத்தில் முதலாளிகளுக்கு இன்று ஆற்ற
வேண்டிய சுயநலம் கொண்ட சேவைகள் என்ன என்பதையிட்டு மட்டும் அக்கறை காட்டும் வயிற்றுமாரி தீவிரவாதிகள்
இதைக் காண்பதில்லை. தியச சஞ்சிகை அத்தகையவர்களைக் கொண்ட ஒரு பதுங்கு குழியாகும்.
சமூகத் துருவப்படுத்தல் காரணமாகத் தோன்றும் வர்க்கப் போராட்டம், முதலாளித்துவ
அமைப்பைத் துடைத்துக் கட்டும் சோசலிசத் திசையில் வளர்ச்சி காண்பதைத் தடுக்கும் பொருட்டு முதலாளித்துவ
அரசியல்வாதிகளும் அவர்களின் திட்டமிடலாளர்களும் இராப் பகலாகச் செயற்படுகின்றார்கள். சோசலிச சமூக மாற்றத்தின்
முன் நிபந்தனையான தொழிலாளர் வர்க்கத்தின் அனைத்துலகவாத ஐக்கியத்தைச் சிதறடிக்கும் பொருட்டு நானாவிதமான
பொறிக் கிடங்குகளைத் தோண்டுவதில் இந்த விதத்திலேயே இவர்கள் ஈடுபடுகின்றார்கள். தீவிரவாதிகள் இந்தத்
திட்டத்தின் கையாட்களாவர்.
தேசிய அல்லது இனக்குழு பிரிவினைக் கூப்பாடுகளில் ஈடுபடுவதன் மூலம் அரசியல்
ரீதியில் பின்தங்கிய மக்கட் குழுக்களை தூண்டிவிடுவது அந்தந்தத் தேசிய-இனக்குழு முதலாளித்துவக் கையாட்களை
பயன்படுத்தி, நடைமுறைப்படுத்தக் கூடிய இலகுவான பிற்போக்கு விதிமுறையாகும். இதை முதலாளித்துவ ஆளும்
வர்க்கங்கள் புரிந்து கொண்டது இன்று, நேற்றல்ல.
அன்றைய உணவு வேளையை பூர்த்தி செய்வதோடு அல்லாது மனித இனத்தின்
முன்னேற்றத்துக்காகப் பாடுபடும் மாபெரும் மார்க்சிசப் புரட்சியாளன் கடந்த கால வர்க்கப் போராட்டங்களின்
படிப்பினைகளை மகத்தான வழிகாட்டியாகக் கொள்கிறான்.
உலக முதலாளித்துவ அமைப்பின் முதலாவது வீழ்ச்சி நிலைமையின் கீழ் காலனித்துவத்தின்
மூலம் தேசிய அடக்குமுறையை மேலும் விஸ்தரித்து, இறுக்கமாக்குகின்ற முதலாவது உலக யுத்தத்தைக் கடைப்பிடித்த
ஏகாதிபத்தியவாதிகளே, அந்த உலக யுத்தத்தின் மத்தியில் அணிதிரட்டப்பட்ட ரூஷ்யத் தொழிலாளர் வர்க்கத்துக்கும்
அவ்வாறே ஒடுக்கப்பட்ட தேசிய இனங்களுக்கும் தலைமை வழங்கியதன் மூலம் போல்ஷிவிக் கட்சி சோசலிசப்
புரட்சியை வெற்றிகொண்டதைத் தொடர்ந்து, தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமையின் பிரபலமானதும்,
பரந்ததுமான பிரச்சாரகர்களாக மாறினர். இந்த உலகலாவிய மாற்றங்கள் தொடர்பாக ட்ரொட்ஸ்கி வழங்கிய
விளக்கங்களைத் தாண்டிச் செல்லும் விளக்கங்கள் வேறு எவரும் வழங்க முடியும் என்பது சந்தேகத்துக்கு இடமானது.
ட்ரொட்ஸ்கி பின்வருமாறு குறிப்பிட்டார்: "பிரமாண்டமான ஏகாதிபத்திய மக்கட்
படுகொலைகள் இப்பிரச்சினை தொடர்பாக உக்கிரமான மாற்றங்களை உண்டுபண்ணியது. சகல முதலாளித்துவ சமூக,
தேசாபிமானக் கட்சிகள் தேசிய சுயநிர்ணயத்தைக் கட்டி அணைத்துக் கொண்டன. ஆனால் அது தவறான முடிவாகும்.
போட்டியிட்டுக் கொண்ட அரசாங்கங்கள் முதலாவதாகப் பரஸ்பரம் யுத்தத்திலும் அதைத் தொடர்ந்து சோவியத்
ரூஷ்யாவுக்கு எதிராகவும் இந்த மாதிரியை பயன்படுத்தும் பொருட்டு சகல விதத்திலும் துடித்தன. போலந்து,
உக்ரேயின், லிதுவேனியா, ஸ்லோவியா, பின்லாந்து, காக்கேசியன் மக்களின் தேசிய உரிமைகள் தொடர்பான
பதட்டம் நிறைந்த விளையாட்டுக்களில் ஈடுபட்ட ஜேர்மன் ஏகாதிபத்தியம் முதலில் ஸாரிசத்துக்கு எதிராகவும் பின்னர்
பெரிதும் பரந்த அளவில் எமக்கு எதிராகவும் இந்த மாதிரியை பயன்படுத்தினர். முதலில் தேச கட்சிக்காரர்கள்
ஸாரிசத்தின் அனுசரணையோடு ஆஸ்திரிய- ஹங்கேரியிலும் ஜேர்மனியிலும் துருக்கியிலும் மக்களின் "விடுதலை"யைப்
பிரகடனம் செய்தனர். இதன் பின்னர் ஸாரிசத்தின் ஆதரவு அவர்களுக்கு இல்லாமல் போனதைத் தொடர்ந்து
ரூஷ்யாவின் எல்லைப் புற அரசுகளின் "சுயவிடுதலை"க்காக நின்று வந்தனர்.
"வன்முறை, அடக்குமுறை மூலம் சிருஷ்டிக்கப்பட்ட ஸார் மன்னனின் மரபுரிமையில்
இருந்து கிடைத்த சோவியத் குடியரசு, தேசிய சுயநிர்ணய
உரிமையையும் தேசிய சுதந்திரத்தையும் பிரகடனம் செய்தது. சோசலிசத்தை நோக்கிய இடைமருவு காலகட்டத்தில்
இந்த மாதிரியின் சிறப்பு முக்கியத்துவத்தைப் புரிந்து கொண்டென்றாலும் எமது கட்சி ஒரு நிமிடம் தன்னும்
சுயநிர்ணயத்தின் ஜனநாயக அடிப்படைக் கொள்கைகளை ஏனைய சகல வரலாற்று அவசியங்களுக்கும் பணிகளுக்கும்
மேலான ஆளுமை படைத்த காரணியாக்கிக் கொண்டதில்லை". முதலாவதாக உலகளாவிய முதலாளித்துவ
பொருளாதாரம் வீழ்ச்சி கண்டுபோன நிலமையினுள் ஏகாதிபத்தியவாதிகள் தேசிய இனங்களின் சுயநிர்ணய உரிமை
தொடர்பான சுலோகத்தைத் தமது பிற்போக்குத் தேவைகளுக்காக கோலம் காட்டிய விதமும் மாக்ஸிஸ்ட்டுக்கள்
அந்த மோசடி சம்பந்தமாக வகித்த புரட்சிகர நிலைப்பாட்டையும் இது தெளிவுபடுத்திக் காட்டுகின்றது. இது
லெனின் உயிர் வாழ்ந்த காலத்தில் -1918க்கும் 21 க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில்-- ட்ரொஸ்கி எழுதி
வெளியிட்ட ஒரு தொகை கட்டுரைகளில் அடங்கியுள்ள கருத்தாகும். அவர் அதில் "எமது கட்சி" என அழைப்பது
லெனினுடன் இணைந்து தாம் இணைத்தலைவர் பதவி வகித்த முன்னர் போல்சவிக் கட்சி எனப் பிரபல்யம் பெற்ற
சோவியத் ருஷ்யாவின் கம்யூனிஸ்ட் கட்சியாகும்.
உலக முதலாளித்துவ அமைப்பின் முதலாவது பொருளாதார வீழ்ச்சியின் பேரழிவை
முதலாவது ஏகாதிபத்திய யுத்தத்தினால் தணித்துவிட முடியவில்லை. அதன்பின்னர் இத்தாலியில் பாசிசமும் ஜேர்மனியில்
நாசிசமும் அவ்வாறே சீனா, இந்தியா போன்ற காலனித்துவ நாடுகளில் பிரமாண்டமான மக்கள் படுகொலைகள்
ஊடாக அள்ளுப்பட்டுச் சென்ற அந்தப் புயல் 1939 இல் ஆரம்பமான இரண்டாம் உலக யுத்தத்திற்கான கதவுகளைத்
திறந்துவிட்டது. உலக முதலாளித்துவ அமைப்பினது ஸ்திரப்பாட்டை ஹிரோஷிமா, நாகசாகி நகரங்களில் அணு
குண்டுகளை வீசியதன் மூலம் பல தலமுறைகளுக்கு மக்களை ஸ்தம்பிக்கச் செய்ததோடு, யுத்ததினால் நூறு கோடி
மக்களை கொன்று தள்ளிய பின்னரே மீண்டும் ஸ்தாபிதம் செய்ய முடிந்தது. இத்தகைய மிகவும் பிரமாண்டமான மனித
இனத்தின் பேரழிவு பற்றி ஒரு அணுவளவு தன்னும் அக்கறையின்றி யுத்தத்துக்குப் பின்னய உலகப் பொருளாதாரச்
செழிப்பின் மூலமும் அதன்மூலம் கண்ணை மூடச் செய்ய கட்டவிழ்த்த தேசியவாதப் பொருளாதார அரசியல் பாடைக்கு
தோள் கொடுப்பதன் மூலமும் வயிற்றை நிரப்பிக்கொண்ட குட்டிமுதலாளித்துவ தீவிரவாத கைக்கூலிகள் "முதலாளித்துவ
அமைப்பு நெருக்கடிக்குள் தள்ளப்பட்டாலும் வளர்ச்சி கண்டுள்ளதாக" உறுதியாக உளறுகின்றார்கள்.
ஆனால், இப்போது இரண்டாவது, உலகளாவிய ரீதியிலான முதலாளித்துவ
பொருளாதார வீழ்ச்சிக்கு நாம் முகம் கொடுக்கின்றோம். அது இந்த நூற்றாண்டின் ஆரம்பத்தில் போலல்லாது
பூகோளமயமான உலக முதலாளித்துவ பொருளாதாரத்தின் மூலம் இவ்வுலகின் சகல மூலை முடுக்குகளையும் ஈர்த்துக்
கொண்டதும் தழுவிக்கொண்டதுமான நிலமையின் கீழ் இடம்பெற்றுக் கொண்டுள்ள ஒன்றாகும். ஆதலால், இரண்டாம்
உலக யுத்தத்தின் பின்னைய உலக அமைப்பு நெருக்கடிக்கு உள்ளாகியுள்ளது. அதைப் புனரமைப்புச் செய்யும் பணியில்
ஏகாதிபத்தியவாதிகள் ஈடுபட்டனர். இது இடம் பெறுவது மனித இனத்தின் மனங்களைத் திருப்தி செய்யும் இலக்கில்
அல்ல. முதலாளித்துவ, ஏகாதிபத்திய அமைப்பு எப்போதும் செய்தது போல் தமது இலாப மூட்டையை நிரப்பிக்
கொள்ளும் இலக்கில் ஆகும்.
தேசிய, இனக்குழுக்களை மட்டுமல்ல மத, ஜாதிகளது சுயநிர்ணய உரிமை
ஆகியவற்றைப் பற்றியும் கூச்சலிட்டுக் கொண்டு தத்தமது அதிகார குட்டி அரசுகளை கட்டியெழுப்ப
ஏகாதிபத்தியவாதிகள் அந்தந்த மக்கட் குழுக்களின் முதலாளித்துவ கும்பல்களையும், கோஷ்டிகளையும் பயன்படுத்திய
வண்ணம் தொழிற்பட்டு வருவதை இன்று நாலாபுறத்திலும் கண்டு கொள்ள முடியும். இந்தப் பிற்போக்கு சக்திகளே
லெனினது சுலோகங்களை அதற்குரிய இசைவான நிலையில் இருந்து பிடுங்கி எடுத்து, விறகாக்கி பின்னர் விறகு
கட்டுக்களாக்கிய தீவிரவாத கையாள் வேலைக்கு அழைத்துள்ளன.
இந்தப் பிரச்சினையுடன் தொடர்புபட்ட விதத்தில் லெனின் தனது முன்னோக்கினை
வரலாற்றுப் பொருள் முதல்வாதத்தின் அடிப்படையில் அனைத்துலக சக சிந்தனையாளர்களின் ஒத்துழைப்புடன்
அபிவிருத்தி செய்த விதத்தை விளக்கும் பெறுமதி வாய்ந்த சந்தர்ப்பமாக மூன்றாம் கம்யூனிஸ்ட் அகிலத்தின்
இரண்டாவது மாநாட்டில் "தேசிய காலனித்துவ பிரச்சினை" தொடர்பான பாரம்பரியங்களை நிறைவேற்றியமை
விளங்குகின்றது. உத்தேச விடயம் பற்றி தாமே வரைந்த மூலப் பாரம்பரியங்களை ஆணைக்குழுவின்
கலந்துரையாடல்கள் ஊடாக திருத்திக் கொண்ட லெனின், அதன் அறிக்கையை மாநாட்டில் சமர்ப்பிக்கையில்
பின்வருமாறு கூறினார்:
"பிரச்சினை பின்வரும் விதத்தில் எழுப்பப்பட்டது. விடுதலைக்கான பாதையில் காலடி
வைத்துள்ளதும் யுத்தத்தின் பின்னர் முன்னேற்றத்தை நோக்கி ஏதேனும் அபிவிருத்தி கண்டுள்ள பின்தங்கிய தேசங்களைப்
பொறுத்த மட்டில் பொருளாதார அபிவிருத்தியில் முதலாளித்துவக் கட்டத்தை தவிர்க்க முடியாது அங்கீகரிப்பதை
நாம் சரியெனக் கொள்வோமா? அப்படி அல்ல என நாம் பதில் அளித்தோம்... காலனித்துவ, பின்தங்கிய
நாடுகளில் நாம் சுயாதீனமான போராட்டப் படையணிகளையும், கட்சி அமைப்புக்களையும் நிர்மாணிப்பதோடு
மட்டுமன்றி விவசாயிகளின் சோவியத் சபைகளை அமைக்கும் பொருட்டு உடனடியாக பிரச்சாரத்தை அரம்பிக்க
வேண்டும். அவை முன்னோடி முதலாளித்துவ நிலமைகளுடன் ஒத்துப்போக ஆர்வம் காட்டுவதோடு மட்டுமன்றி
கம்யூனிஸ்ட் அகிலம் சரியான கோட்பாட்டு அடிப்படையில் காலூன்றி நின்றுகொண்டு, முன்னேறிய நாடுகளின்
தொழிலாளர் வர்க்கத்தின் ஆதரவோடு பின்தங்கிய நாடுகளில் முதலாளித்துவ கட்டத்தை நோக்கிச் செல்லாமல்
சோவியத் அமைப்பை நோக்கிச் செல்லக் கூடியதும் அபிவிருத்தியின் சில கட்டங்களுக்கு ஊடாக கம்யூனிஸத்தை
அண்மிக்கும் வல்லமையையும் எடுத்துக்காட்ட வேண்டும்".
இது பின்தங்கிய நாடுகளைப் பொறுத்த மட்டில் ட்ரொட்ஸ்கி 1905ம் ஆண்டளவு நீண்ட
காலத்துக்கு முன்னரே முன்வைத்த நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின் சாராம்சம் அன்றி வேறென்ன? முதலாவது
உலக யுத்தத்துக்கு முந்திய காலத்தில் லெனின் கொண்டிருந்த கருத்தை, யுத்த நிலமையின் மத்தியில் உருவான
பிரமாண்டமான பொருளாதார, அரசியல் மாற்றங்களுக்கு மத்தியில் லெனினால் மிஞ்சிச் செல்லப்பட்டது என்பதற்கு
மேலும் சாட்சியம் அவசியமா? லெனினே தள்ளி வைத்த கருத்துக்களையும், சுலோகங்களையும் ட்ரொட்ஸ்கிசத்துக்கு
எதிராகப் போட்டடித்துக் கொண்டும் இரண்டு கட்டப் புரட்சிக் கோட்பாட்டுக்கு உயிரூட்டிக் கொண்டும் ஸ்டாலினிச
அதிகாரத்துவம் முன்னெடுத்த பிற்போக்கு நடவடிக்கைகள் சோவியத் யூனியனில் மட்டுமன்றி உலகம் பூராகவுமுள்ள
தொழிலாளர் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு கொணர்ந்த பேரழிவுகளைக் கண்டும் தீவிரவாதிகள் அந்த விதிமுறையிலேயே
ஈடுபட்டுக் கொண்டுள்ளனர். ஒரே கல்லில் இரண்டு குருவிகளை வீழ்த்தும் வேட்டைக்காரனைப்போல் அஹிங்சக
பெரேரா, சுயநிர்ணய உரிமையை முன்வைத்து தமிழ் தொழிலாளர்-ஒடுக்கப்படும் மக்களை தமிழ் முதலாளித்துவ
ஆட்சியின் கீழ்க் கொணர முயற்சிக்கும் அதே வேளையில், அரசியல் தீர்வுப் பொதியைத் தூக்கிப்பிடித்து கொழும்பு
முதலாளித்துவ ஆட்சியாளர்களின் ஜனநாயக நன் நெஞ்சத்தை பூதாகாரப்படுத்திக் காட்டி, அதனது இராணுவத்
திட்டங்களுக்கும் செங்கம்பளம் விரிக்கின்றார்.
பூகோளமயமான முதலாளித்துவ அமைப்பின் கீழ் முன்னர் ஒரு போதும் இல்லாத
விதத்தில் தொழிலாளர் வர்க்கத்தின் சமூகப்பெறுமானம் உலகம் பூராகவும் முன்னேற்றம் கண்டுள்ளது. அத்தோடு,
அந்த வர்க்கத்தின் உலகப் புரட்சிகரப் பணியும் முன்னணிக்கு வந்துள்ளது. ஒடுக்கப்பட்ட விவசாயிகளின் எண்ணிக்கை
இன்னமும் பெரும்பான்மையாக உள்ள பின்தங்கிய நாடுகளில் கூட தொழிலாளர் வர்க்கத்தின் அரசியல் தலைமைப்
பாத்திரம் இதன் மூலம் புதிய மட்டத்துக்கு உயர்ந்துள்ளது.
இந்த உலக வரலாற்று நிலமையானது நிரந்தரப் புரட்சிக் கோட்பாட்டின்
அடிப்படையில் சோசலிச முன்னோக்கினாலும் தலைமையினாலும் தொழிலாளர் வர்க்கத்தையும் ஒடுக்கப்படும்
மக்களையும் ஆயுதபாணிகளாக்கும் பணியை வேண்டி நிற்கிறது. அது ஒவ்வொரு இனக் குழுக்களுக்கும் தனித்தனி குட்டி
அரசுகளைத் திணிப்பது அன்றி, உலக சோசலிசத்தை ஈட்டிக் கொள்ளும் முன்னோக்காக விளங்க வேண்டும்.
தீர்வுகாணப்படாத அனைத்து ஜனநாயகப் பணிகளையும், அதற்காக நடத்தும் போராட்டத்தின் மூலமே
வெற்றிகொள்ள முடியும். அந்தப் போராட்டத்தினை ஒவ்வொரு இனக் குழுக்களினுள்ளும் அடைபட்டுப் போய்
கிடக்கின்றதும் அதன் வளர்ச்சியின் பேரில் தேசியவாத மோசடிகளில் ஈடுபட்டுள்ள மோசடியாளர்களின்
அமைப்புக்களினால் அல்லாது அரசியல் ரீதியில் சுயாதீனமான, உலகத் தொழிலாளர் வர்க்கத்தின் தலைமைப்
பொறுப்பை ஏற்றுக் கொண்ட கட்சியினாலேயே அணிதிரட்ட முடியும். அது, அனைத்துலக குழுவினால் தலைமை
தாங்கப்படும் நான்காம் அகிலமே ஆகும்.
இந்த உலக அமைப்பின் மூலம் 1998ல் ஆரம்பிக்கப்பட்ட உலக சோசலிச வலைத்
தளம் (world socialist web site) தனது
புரட்சிகரப் பொறுப்புகளுக்கு தோள் கொடுக்கும் திட சங்கற்பத்தை மட்டுமன்றி யதார்த்தத்தையும் வெளிக்காட்டிக்
கொண்டுள்ளது. ஏற்கனவே தமிழ், சிங்கள மொழிகள் உட்பட 9 மொழிகளில் உலகத் தொழிலாளர் வர்க்கத்திற்கும்
ஒடுக்கப்படும் மக்களுக்கும் இடையே அனைத்துலக சோசலிசத்தின் முன்னோக்கினை தெளிவுபடுத்தும், ஸ்தாபிதம்
செய்யும் பணியில் அது ஈடுபட்டுள்ளது. முதலாளித்துவ அமைப்பின் கீழ் வர்க்க சமுதாயத்தை ஒழித்துக்கட்டக் கூடிய
சமூக சக்தியான தொழிலாளர் வர்க்கம் தோன்றியது போல், அந்த அமைப்பின் கீழ் அபிவிருத்தி செய்யப்பட்ட
புதிய விஞ்ஞான, தொழில் நுட்பங்களை தொழிலாளர் வர்க்கத்தை அதனது வரலாற்றுப் பணிக்கு அணிதிரட்டப்
பயன்படுத்த வேண்டும்.
நான்காம் அகிலத்தின் இலங்கைப் பகுதி என்ற விதத்தில் சோசலிச சமத்துவக் கட்சி
அந்தப் புரிந்துணர்வுடன் உலக சோசலிசத்துக்கான போராட்டத்தில் ஈடுபட்டுள்ளது. அதற்கு இணங்க தமிழ் தேசிய
இனத்தின் ஜனநாயக உரிமைகளை நசுக்கும் முதலாளித்துவ விதிமுறைகளை இனவாத யுத்தத்தின் மட்டத்துக்கு
உக்கிரமாக்கியுள்ள ஒரு நிலமையில் சோசலிச சமத்துவக் கட்சி, சிங்கள-தமிழ் தொழிலாளர் ஒடுக்கப்படும்
மக்களை அனைத்துலக சோசலிசத்தின் அடிப்படையில், இந்தியத் துணைக் கண்ட சோசலிசக் குடியரசின் ஒரு
பாகமாக சிறீலங்கா-ஈழம் சோசலிசக் குடியரசை ஸ்தாபிதம் செய்யப் போராடுகின்றது.
இந்த நூல் மேற்சொன்ன பணியை இட்டு நிரப்புவதற்கு இலாயக்கான வெகுஜன இயக்கத்துக்கு
அத்தியாவசியமான சோசலிச அரசியல் நனவை கட்டியெழுப்புவதற்காகவே எழுதப்பட்டது. ஆதலால், மரபு வழியான
வரலாற்று நூல்களின் அடிப்படையில் நாளும், காலமும் கழிந்து சென்ற விதத்தில் ஒழுங்குமுறையாக சம்பவங்களையும்,
விடயங்களையும் குவிப்பதற்குப் பதிலாக வரலாற்று நிகழ்வுகளில் இருந்து தற்காலத்தின் பேரில் புரிந்து கொள்ளக்
கூடிய படிப்பினைகளைச் சுருக்கமாகத் தன்னும் அந்தந்த இடங்களில் கவனத்துக்குக் கொணர முயற்சி செய்யப்பட்டுள்ளது.
நிகழ்காலம் வரலாற்றை உள்ளடக்கிக் கொண்டிருப்பதானது வரலாற்று நிகழ்வுகளின் வெளிப்பாடுகளதும், அத்துமீறல்களதும்
பெறுபேறாக நிகழ்காலம் சிருஷ்டிக்கப்பட்டுள்ளதேயாகும். நிகழ்காலத்தில் அவசியமான முற்போக்கு சமூக மாற்றங்கள்
தொடர்பாகவும் பெரிதும் சிறந்த எதிர்காலத்தை ஊர்ஜிதம் செய்து கொள்வது தொடர்பாகவும் அக்கறை
செலுத்தும் மாக்ஸிஸ்ட்டுக்கள் வரலாற்றைத் திரும்பிப் பார்ப்பது அவசியமான அறிவை பெற்றுக் கொள்வதற்காகவே
ஆகும். இந்நூலின் அணுகுமுறை அதுவே.
பாரம்பரிய வரலாற்று பேச்சாளர்களதும் அவர்களது கையாட்களாக இருந்து
கொண்டுள்ள முதலாளித்துவ பல்கலைக் கழகங்களின் ஆசிரியர்களதும், அவர்களின் சீடர்களினதும் எதிர்ப்பு இந்நூலுக்கு
எதிராக தொடுக்கப்படும் என்பதையிட்டு நான் கிடு நடுக்கம் கொள்ளவில்லை. ஆனால், வரலாற்று ஏடுகளைத்
தட்டிப் பார்க்கும் போது தன்னும் புதிய அணுகுமுறை அவசியம் என்ற அறிவோடு அந்தச் சவால்களுக்கு முகம்
கொடுக்க நான் தயாராகியது, அதை அறிந்து, தெரிந்து கொண்டேயாகும்.
இந்நூலில் இடம்பெற்றுள்ள கட்டுரைகளை சிங்களத்திலும் தமிழிலும் கம்கறு
மாவத்தை மற்றும் தொழிலாளர் பாதை பத்திரிகைகள் மூலம் இந்நாட்டுத் தொழிலாளர் ஒடுக்கப்படும்
மக்களுக்கு கொண்டு செல்லச் செயற்பட்ட சோசலிச சமத்துவக் கட்சி அங்கத்தவர்களுக்கும், ஆதரவாளர்களுக்கும்
எனது மனப்பூர்வமான நன்றியை இத்தருணத்தில் தெரிவித்துக் கொள்கின்றேன்.
விஜே டயஸ்
இலங்கை: இனவாத யுத்தத்திற்கு 25 வருடங்கள்
பகுதி 1: இனவாத யுத்தம் நிகழ்கால வாழ்க்கையில் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள
விதம்
பகுதி 2:
1972 அரசியலமைப்பும் தமிழர் விரோத தாக்குதல் உக்கிரமடைதலும்
பகுதி 3:
யுத்தத்திற்குப் பிந்திய அரசியலில் பிளவு: 1975ன் பின்னர்
பகுதி: 4:
1977ன் பின்னர் தமிழர் விரோத மக்கள் படுகொலைகள்
பகுதி
5 : 1983 கறுப்பு ஜூலை
பகுதி
6 : இனவாத யுத்தம் நடைமுறையில் ஆரம்பிக்கப்பட்டது |