World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Vote ‘no' on UAW sellout at GM!

Elect rank-and-file committees for contract fight!

UAW காட்டிக் கொடுப்பிற்கு "வேண்டாம்" என வாக்களியுங்கள்!

ஒப்பந்தத்திற்காக போராட கீழ்மட்ட தொழிலாளர் அணிகளின் குழுக்களை தேர்ந்தெடுங்கள்!

Statement of the Socialist Equality Party and World Socialist Web Site
1 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்கா முழுவதிலும் இருக்கும் GM ஆலைகளில் உள்ள United Auto Workers உள்ளூர் சங்கங்களில் ஒப்புதலளிப்பதற்காக நடக்கவிருக்கும் கூட்டத்தில் பின்வரும் அறிக்கை வினியோகிக்கப்பட உள்ளது. WSWS வாசகர்கள் மற்றும் கார் தொழிலாளர்களை இதன் நகல்களை எடுத்து இயலக்கூடிய வகையில் பரந்த அளவில் வினியோகிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

UAW முழு சரணாகதி அடைந்திருப்பதை கார்த் தொழிலாளர்கள் உறுதியுடன் நிராகரித்து ஜெனரல் மோட்டார்ஸிற்கு எதிரான போராட்டத்தை இடையீட்டுக்கு பின் மீண்டும் தொடர வேண்டும். பரீட்சார்த்த ஒப்பந்தம் என்பது பல தலைமுறைகளாக கார் தொழிலாளர்கள் பாடுபட்டுப் பெற்ற நலன்கள் அனைத்தையும் கிட்டத்தட்ட தகர்த்துவிடுதலுக்கு சமமாகும். இதற்கு ஒப்புதல் கொடுத்தால், மூன்று பெருநிறுவனங்களின் இப்பொழுதுள்ள, ஓய்வு பெற்ற மற்றும் வருங்கால தொழிலாளர்களுக்கு பேரழிவுகர விளைவுகளை கொண்டிருக்கும்.

UAW இன் தலைவரான ரோன் கெட்டில்பிங்கர் UAW உறுப்பினர்களின் ஊதியங்கள், ஓய்வூதியத் தொகைகள், சுகாதார நலன்கள் மற்றும் வேலைகள் ஆகியவற்றை பல பில்லியன் டாலர் மதிப்புடைய VEBA அறக்கட்டளை நிதியை கட்டுப்படுத்துவதற்கான உரிமைக்கும் தன்னையும் தனக்கு ஆதரவு தருபவர்களையும் மில்லியனர்கள் ஆக்கிக் கொள்ளுவதற்காகவும் விற்றுள்ளார்.

ஒரு உள்ளூர் தலைவர் கூட உடன்பாட்டிற்கு எதிராக வாக்களிக்கவில்லை என்ற உண்மை UAW வைக் கவனித்து வருபவர்களுக்கு வியப்பு அளிக்கவில்லை. ஆயினும்கூட இது தொழிலாளர்கள் நலன்கள் என்ற நிலைப்பாட்டில் இருந்து UAW மடிந்துவிட்டது, புதுப்பிக்க முடியாதது என்பதைத்தான் விளக்கிக் காட்டுகிறது.

ஒப்பந்தத்தை நிராகரித்தல் ஒரு முதற்படிதான். UAW வின் கரங்களில் இருந்து கார் தொழிலாளர்கள் போராட்டத்தை எடுத்துக் கொண்டு தங்கள் அடிமட்ட தொழிலாளர்களை குழுவிற்கு தேர்ந்தெடுத்து அனுப்பி மீண்டும் வேலைநிறுத்தத்தை தொடக்கி தொழிலாளர்களின் வேலைகள், வாழ்க்கத்தரங்கள் மற்றும் பணிநிலைமைகள் ஆகியவற்றை பாதுகாக்கும் கோரிக்கைகளை வடிவமைக்க வேண்டும். Ford, Chrysler, Delphi தொழிலாளர்களுக்கும், கனடா, இலத்தீன் அமெரிக்கா, ஆசியா மற்றும் ஐரோப்பாவிலும் இதே உலகளாவிய கார் பெருநிறுவனங்களின் தாக்குதலை எதிர்கொண்டுள்ள தொழிலாளர்களையும் இப்போராட்டத்தில் சேர அழைப்புவிடுக்க வேண்டும்.

தொழிலாளர்களின் நிலைமைகள் மற்றும் உரிமைகளின் பாதுகாப்பு முற்றிலும் புதிய அடிப்படையில் கட்டாயம் வளர்த்தெடுக்க வேண்டும். இதன் பொருள் எல்லாவற்றிற்கும் மேலாக, தொழிலாள வர்க்கத்திற்கான ஒரு புதிய அரசியல் இயக்கம், இரு பெருவணிகக் கட்சிகளில் இருந்து சுயாதீனமான முறையில் அமைக்கப்பட வேண்டும்; அதன் திட்டம் தொழிலாளர்களின் தேவைகளில் இருந்து ஆரம்பிக்க வேண்டுமே அன்றி இலாபங்கள், பங்குச் சந்தை நிலவரங்கள் என்ற பெருவணிக உயரடுக்கினரின் தேவைக்கேற்ப இருத்தல் கூடாது.

பாதுகாப்பு, நல்ல ஊதியமளிக்கும் வேலைகள், கெளரவமான ஓய்வூதியத் தொகைகள், முழு சுகாதாரப் பாதுகாப்பு நலன்கள் ஆகியவற்றை கொடுக்க போதுமான வளங்கள் இல்லை என்ற கூற்றை தொழிலாளர்கள் முற்றிலும் நிராகரிக்க வேண்டும். இலாபமுறை மற்றும் அதைக் காக்கும் இருகட்சிகளின் ஏகபோக உரிமை ஆகியவைதான் பெரும்பாலான மக்களின் தேவையை தற்கால கொள்ளை பிரபுக்களின் நலன்களுக்கு தாழ்த்துகின்றன என்பதுதான் பிரச்சினை. இதை மாற்றுவதற்கு சமத்துவம், உண்மையான ஜனநாயகம் இவற்றின் அடிப்படையிலான ஒரு சோசலிச வேலைத்திட்டத்திற்காக போராட தங்களின் சொந்த கட்சி தொழிலாளர்களுக்கு தேவைப்படுகிறது.

UAW வழங்கியுள்ள ஒப்பந்தத்தின் சுருக்கம், அரை உண்மைகள் மற்றும் பொய்கள் நிறைந்த ஒரு வெள்ளைப் பூச்சு ஆகும். வேலைப் பாதுகாப்பு பற்றி இது கூறியிருப்பது மோசடியாகும். சுகாதார நலன்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு ஓய்வூதியம் பாதுகாப்பாக உள்ளன என்று இது கூறியிருப்பது மிகவும் அடித்தளத்தில் போலித்தனம் நிறைந்தது ஆகும்.

ஒப்பந்தம் பற்றி வோல்ஸ்ட்ரீட் கொடுத்துள்ள தீர்ப்பு, இது வரலாற்று வீதாசாரங்களில் விற்றுவிட்ட நிலையைத்தான் உறுதிப்படுத்துகிறது. நிறுவனத்தின் பங்கு வாரத்தில் 7 சதவிகிதம் உயர்ந்தது. வியாழனன்று ேவால்ஸ்ட்ரீட் ஜேர்னல், கார்த்தொழிலாளர்களின் "ஊதியங்கள் மற்றும் நலன்கள் அமெரிக்க மத்தியதர வர்க்கத்திற்கான தரத்தை அமைக்கும்" பொழுதான சகாப்தத்தின் முடிவை இந்த ஒப்பந்தம் அடையாளம் காட்டுகிறது எனக் கூறியது.

GM கொண்டுள்ள ஒப்பந்தம் அமெரிக்க பெருநிறுவனங்கள் அனைத்திற்கும் ஒரு முன்னோடியை கொடுத்துள்ளது. ஏற்கனவே போர்டின் அதிகாரிகள் தொழிலாளர் செலவினங்களை குறைப்பதில் GM ஒப்பந்தம் அதிகமாகச் செயல்படவில்லை என்று குறைகூறியுள்ளனர்.

ஒப்பந்தத்தின் விதிகள்

* சுகாதார நலன்கள்

இந்த ஒப்பந்தம் 1950 களிலும் 1960 களிலும் தொழிலாளர்கள் போராடி வென்றெடுத்த ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்காக நிர்வாகம் கொடுத்து வந்த மருத்துவ நலன்களை முடிவிற்கு கொண்டுவருவதை கையாளுகிறது. VEBA வின் கீழ், நலன்கள் அனைத்தும் பங்குச் சந்தையில் நிலையற்ற தன்மைக்கும் இன்னும் கூடுதலான வெட்டுக்கள் வேண்டும் என்று அழுத்தம் கொடுக்கும் பெருமுதலீட்டாளர்களின் அழுத்தங்களுக்கும் உட்பட்டுவிடும்.

UAW அமெரிக்காவிலேயே மிகப் பெரிய முதலீட்டு நிறுவனங்களில் ஒன்றை கட்டுப்படுத்தும் ஒரு பெருநிறுவன அமைப்பாக மாற்றப்படும். பல மில்லியன் டாலர்கள், ஆலோசகர்கள், முதலீட்டு நிறுவனங்கள், வழக்குரைஞர்கள், தொழிற்சங்க அதிகாரிகள் ஆகியோருக்கு செல்லும்.

தொழிற்சங்கம் கூடுதலான இணை ஊதியங்கள் மற்றும் சார்ந்திருப்பவர்களுக்கான தகுதிமீது புதிய தடைகளும், இயலாமை நலன்களுக்கான GM ன் செலவினக் குறைப்புக்களுக்கான முயற்சிகளும் உள்ளடங்கலான மற்றைய நீக்கங்களையும் ஒப்புக் கொண்டுள்ளது.

UAW இன் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் சொத்துக்களின் குவிப்பு GM பங்குவிலையுடன் பிணைப்பு கொண்டிருக்கும்; இது தொழிற்சங்க அதிகாரத்துவத்தினருக்கு UAW உறுப்பினர்களின் ஊதியங்களையும் நலன்களையும் வெட்டி VEBA இன் சொத்துக்கள் மதிப்பை உயர்த்துவதற்கு உதவும் வகையில் நேரடி ஊக்கத்தை கொடுக்கும்.

* இரட்டை அடுக்கு முறை

கார்த் தொழிலாளர்கள் 1930களில் இருந்தது போன்ற ஒரு குறைந்த ஊதிய, கடும் உழைப்புப் பணி நிலைமைகளுக்கு திரும்புவதை செயல்படுத்தும் ஒரு தொழிற்சங்கத்திற்கு கட்டணங்கள் செலுத்தும் கட்டாயத்திற்கு ஆளாவர். புதிய தொழிலாளர்களின் ஊதியத்தை மணி ஒன்றுக்கு $14 டாலர்கள் குறைக்கும் வகையில், ஊதிய வெட்டுக்கள் டெல்பி முன்மாதிரியில் இருக்கும் என்று உடன்பாடு பீற்றிக் கொள்ளுகிறது மற்றும் சமமான வேலைக்கு சமமான ஊதியம் என்பதை மறுப்பதன் மூலம் ஐக்கியத்தைக் கீழறுத்துள்ளது.

கிட்டத்தட்ட 24,000 மூத்த தொழிலாளர்கள் வெளியே அனுப்பப்பட்டு, புதிதாக சேர்க்கப்படுபவர்கள் மரபார்ந்த ஊதிய விகிதத்தில் பாதியைத்தான் பெறுவர். நுழைவு மட்ட உற்பத்தி மற்றும் தேர்ச்சியுடைய தொழில் ஸ்தானங்கள் முக்கியமல்லாதவை என்று மீளவரையறுக்கப்படும், இதன் பொருள் தொழிலாளர்கள் குறைந்த ஊதியம் மற்றும் நலன்களைத்தான் பெறுவர் என்பதாகும்.

* ஊதிய முடக்கம்

தற்போதைய தொழிலாளர்களின் அடிப்படைச் சம்பளம் அப்படியே நிறுத்தப்பட்டுவிடும். இதன் விளைவாக வீட்டிற்கு எடுத்துச் செல்லும் ஊதியம் பணவீக்கத்தால் பெரும் சேதத்திற்கு உட்படும். வாழ்க்கைத் தரத்திற்கேற்ப சரி செய்யும் முறை என்று UAW தொழிலாளர்கள் 1949ல் பெற்றிருந்த வெற்றி இப்பொழுது கைவிடப்படுகிறது. COLA அதிகரிப்புக்களின் முதல் 10 சென்ட்டுகள் VEBA வை வலுப்படுத்துவதற்கு திசை திருப்பப்படும்; நிர்வாகத்தின் தற்போதைய தொழிலாளர்களுக்கான செலவினங்களை ஈடுகட்டவும் பயன்படுத்தப்படும்.

*ஓய்வூதியங்கள்

தற்போதைய தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களின் ஓய்வு ஊதியங்கள் VEBA விற்கு ஓய்வூதிய நிதியங்கள் திருப்பப்படுவதால், குறைமதிப்பிற்கு உட்படும். புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்களுக்கு ஓய்வூதியம் கிடையாது. மாறாக அவர்கள் ஒரு 401 (K) பெறுவர். அனைத்து கார் தொழிலாளர்களுக்கும் ஓய்வூதியத்தை அகற்றுவதில் இது முதற்கட்டமாகும்.

* வேலைகள்

வேலைகள் பாதுகாப்பிற்கு உத்தரவாதங்கள் என்பது போலித்தனமாகும். புதிய உற்பத்தி வழிவகைகளில் எந்த உறுதியும் மூன்று ஆலைகளுக்கும் கொடுக்க முடியாது என்று GM வெளிப்படையாக கூறியுள்ளது. இதன் பொருள் இந்த ஆலைகள் ஒன்று விற்பனைக்கு அல்லது மூடுதலுக்கு என்று இலக்காகியுள்ளன. மற்றவற்றை பொறுத்தவரையில் GM இன் உறுதிமொழிகள் இன்னும் கூடுதலான மிருகத்தனமான முறையில் வேகம் காட்டுதல், கட்டாய அதிக நேர வேலை மற்றும் பிற "வளைந்து கொடுக்ககூடிய" பணிவிதிகள் இவற்றை சுமத்துவதில் உள்ளூர் உடன்பாடுகள் எப்படி இருக்கும் என்பதை பொறுத்து இருக்கும்.

VEBA விற்கு உரிமையாளர் என்னும் முறையில் UAW முன்னைவிட வேலைவெட்டுக்களை எதிர்ப்பதில் குறைந்த ஊக்கத்தைத்தான் கொண்டிருக்கும்; ஏனெனில் அதன் வருமானம் அதன் கட்ட வேண்டிய பணங்களின் அடிப்படையை குறைவாகவே சார்ந்திருக்கும்.

இந்தக் காட்டிக் கொடுப்பு நிராகரிக்கப்பட வேண்டும். எல்லாவற்றிற்கும் மேலாக அரசியல் படிப்பினைகள் கற்றுக்கொள்ளப்பட வேண்டும். UAW வை ஒரு இலாபம் கொள்ளும் வணிகமாக மாற்றியது, நீண்டகாலமாக தொழிற்சங்கம் அடிமட்டத் தொழிலாளர்களின் நலன்களுக்கு பெருகிய முறையில் விரோதப் போக்காக ஆகுதல் மற்றும் அதன் உறுப்பினர்களுக்கு பதில் கூறவேண்டிய அவசியம் இல்லாத ஒரு சலுகை மிக்க அதிகாரத்துவத்தின் கருவியாக என்றுமில்லா வகையில் அதிகமாய் ஆகுதல் என்பதன் உச்சக் கட்டம் ஆகும்.

இந்தக் காட்டிக் கொடுப்பு UAW உடைய முழுப் பார்வை மற்றும் கொள்கையின் தோல்வி என்பது மட்டும் இல்லாமல் உத்தியோகபூர்வ தொழிலாளர் இயக்கம் முழுவதின் தோல்வியும் ஆகும்.

தொழிற்சங்கங்களின் தலைவர்கள், 1930களின் வர்க்கப் போராட்டங்களில் இருந்து வெளிவந்தவர்கள், தொழிலாள வர்க்கம் ஒரு தொழிற் கட்சியை கட்டமைக்கும் திட்டத்தை நிராகரித்து, தொழிற்சங்கங்களை ஜனநாயகக் கட்சியுடன் பிணைத்திருந்தனர். தொழிலாளர்கள் நலன்கள் இலாபமுறைக்கு தாழ்த்தப்பட்டதை இது குறிப்பாகக் காட்டியது; மேலும் அனைவருக்கும் பொருந்தும், அரசாங்கம் நடத்தும் சமூக திட்டங்களான சுகாதாரப் பாதுகாப்பு ஆகியவற்றிற்கான போராட்டங்கள் கைவிடப்பட்டதையும் காட்டியது. UAW தொழிற்சங்கங்களில் இருந்து சோசலிச மற்றும் இடதுசாரிக் கூறுபாடுகளைக் களையெடுத்தது மற்றும் அமெரிக்க மூலதனத்தால் தொழிலாள வர்க்கத்தின்மீது செலுத்தப்படும் பொருளாதார சர்வாதிகாரத்தை ஏற்றது.

UAW, அமெரிக்க கார்த் தொழிலின் நெருக்கடியை எதிர்கொண்டவிதம், எவ்வித வர்க்கப் போராட்டத்தையும் துறத்தல் என்பதோடு, பெருநிறுவனக் கொள்கையான தொழிலாளர்-நிர்வாகத்தின் பங்காளித்தனத்தை தழுவியதும் ஆகும். இந்த அடிப்படையில் 1978ல் இருந்து மூன்று பெரிய UAW வேலைகளில் 600,000 அழிக்கப்படுவதற்கு இது ஒத்துழைத்தது.

உற்பத்திமுறையில் உலகந்தழுவிய ஒருங்கிணைப்பு என்பது தொழிற்சங்கங்களின் சவப்பட்டியில் அடிக்கப்பட்ட இறுதி ஆணியாகும். இது அமெரிக்காவிற்கு மட்டும் அல்லாமல் சர்வதேச அளவிலும் பொருந்தும். தமது தேசியவாத வேலைத் திட்டங்களின் காரணமாக தொழிற்சங்கங்கள் தொழிலாளர்களுக்கு சலுகைகள் வாங்கிக் கொடுக்க நிர்வாகத்திற்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்புக்கள் என்பதில் இருந்து நிர்வாகத்திற்கு சலுகைகளைக் கொடுக்க தொழிலாளர்களுக்கு அழுத்தம் கொடுக்கும் அமைப்புக்களாக மாற்றமடைந்துள்ளன.

UAW அதிகாரத்துவத்தினுடைய கூற்றான ஜனநாயகக் கட்சி சுகாதாரப் பாதுகாப்பு முறையை தீவிரமாக மாற்றும் என்பது கேலிக்கூத்து ஆகும். குடியரசுக் கட்சியினரை போலவே ஜனநாயகக் கட்சியினரும் பெருநிறுவன வணிகர்களால் நிதியம் பெறுகின்றனர்; இதில் சுகாதாரப் பாதுகாப்பு ஏகபோக நிறுவனங்களும் அடங்கும்.

ஜனநாயகக்கட்சி உறுப்பினர்கள் அடங்கிய காங்கிரஸ் புஷ்ஷிற்கு ஈராக்கில் எண்ணெய்க்காக போராடுவதற்கு நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்களை வழங்கியுள்ளது; இது விரைவில் $ 1 டிரில்லியனை அடையும்: இதைத்தவிர ஆயிரக்கணக்கான அமெரிக்க துருப்புக்களின் உயிர்கள் மற்றும் நூறாயிரக் கணக்கான ஈராக்கிய உயிர்கள் இழக்கப்பட்டு விட்டன. இந்தப் பெரும் துயரார்ந்த ரத்தம் மற்றும் பொருள்வீணடிப்பின் முழுக் கஷ்டமும் தொழிலாள வர்க்கத்தால் சுமக்கப்படுகிறது.

பெருவணிக கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் இரு கட்சிகளில் இருந்தும் சுயாதீனமாக, மாறுபட்ட சமூக கோட்பாட்டை அடிப்படையாக கொண்ட ஒரு அரசியல் இயக்கம் தொழிலாள வர்க்கத்தால் கட்டாயம் கட்டமைக்கப்பட வேண்டும். பெருநிறுவன இலாபம் மற்றும் தனியார் சொத்து இவற்றிற்கு சேவைசெய்யாமல் பொருளாதார வாழ்வு உழைக்கும் மக்கள் மற்றும் சமூகம் முழுவதிற்குமான தேவைகளை பூர்த்தி செய்யும் வகையில் ஒழுங்கமைக்கப்பட வேண்டும்.

தற்கால சமுதாயம் தங்கியிருக்கும் பரந்த தொழில்கள் பெருநிறுவன நிர்வாகிகள், வோல் ஸ்ட்ரீட் ஊகவணிகர்கள் ஆகியோரின் தனிச் சொத்தாக இனியும் அனுமதிக்கப்படக்கூடாது. கார் தொழில் ஒரு பொதுப் பணித்துறையாக மாற்றப்பட்டு உழைக்கும் மக்களால் ஜனநாயக ரீதியாக கட்டுப்படுத்தப்பட வேண்டும்.

இந்த கொள்கைதான் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் உலக சோசலிச வலைத் தளம் ஆகியவற்றால் முன்னெடுக்கப்படுகிறது. கார் தொழிலாளர்களையும் பிற தொழிலாளர்களையும் WSWS உடன் தொடர்பு கொண்டு இந்த வேலைத்திட்டத்தை பற்றி விவாதிக்குமாறும் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு புதிய தலைமையை கட்டியமைக்குமாறும் நாம் கேட்டுக்கொள்கிறோம்.