World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : அவுஸ்திரேலியா & தென்பசுபிக்

Socialist Equality Party in Australia achieves party registration

ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சிக்கு பதிவு அங்கீகாரம் கிடைக்கிறது

Statement by the Socialist Equality Party
26 September 2007

Back to screen version

தன்னுடைய பெயரிலேயே வருவிருக்கும் கூட்டாட்சித் தேர்தல்களில் போட்டியிட அனுமதிக்கும் வகையில் ஆஸ்திரேலிய சோசலிச சமத்துவக் கட்சிக்கு கூட்டாட்சியின் பதிவு செய்யப்பெற்ற கட்சி என்ற அங்கீகாரம் கிடைத்துள்ளது. செப்டம்பர் 17ம் தேதி கட்சி உறுப்பினர்களின் ஒருங்கிணைந்த முயற்சியை அடுத்து ஆஸ்திரேலிய தேர்தல் குழு (Australian Electoral Commission-AEC) சோசலிச சமத்துவ கட்சியை பதிவு செய்துள்ளது.

இதன் விளைவாக, பிரதிநிதிகள் மன்றத்தில் ஒவ்வொரு சோசலிச சமத்துவ கட்சி வேட்பாளரும் தன்னுடைய பெயருக்கு முன்னால் "சோசலிச சமத்துவ கட்சி" என்று பட்டியலிடப்படுவார். செனட் மன்றத்தில் சோசலிச சமத்துவக் கட்சி வேட்பாளர்களை நிறுத்தினால் கட்சியின் பெயர் மாநிலம் முழுவதும் அனைத்து வாக்காளர்களுக்கும் வழங்கப்படும் வாக்குச்சீட்டில் "வரிக்கு முன்னால்" தோன்றும். போர், சமூக சமத்துவமின்மை மற்றும் பெருகிய முறையில் அடிப்படை ஜனநாயக உரிமைகளின் மீதான தாக்குதல் இவற்றை எதிர்த்து 2007 கூட்டாட்சி தேர்தலில் கட்சி தைரியமாக தலையிடுவதற்கு இந்த முடிவு பாதை அமைத்துக் கொடுக்கிறது.

கடந்த இரண்டு தசாப்தங்களாக, தொழிற்கட்சி மற்றும் தாராளவாத-தேசிய கூட்டணிக்கான ஆதரவு சரிந்துள்ள நிலையில், சிறிய, மூன்றாம் கட்சிகள் தேர்தலில் பங்கு பெறும் திறனிற்கு பெருகிய முறையில் பல தடைகளை எதிர்கொண்டுள்ளன.

சமீபத்தில் Commonwealth Electoral Act ல் கொண்டுவரப்பட்ட திருத்தங்கள் சட்ட ஆலோசனை, முழுநேர ஊழியர்கள், பெரிய உறுப்பினர் எண்ணிக்கை, கணிசமான இருப்புக்கள் ஆகியவை இல்லாமல் ஒரு அரசியல் கட்சியை நிறுவுதல் அல்லது அதற்கான அங்கீகாரம் பெறுதல் என்பது கிட்டத்தட்ட முடியாத ஒரு போராட்டமாகத்தான் இருக்கும் என்ற நிலையைக் காட்டின.

அதே நேரத்தில் "உங்கள் வாக்குகள் விலைமதிப்பற்றவை" என்ற விளம்பர பிரச்சாரத்தை பகிரங்கமாக ஆஸ்திரேலிய தேர்தல் குழு மேற்கொண்டு இருக்கையில், வாக்குப் போடும் உரிமையே தாக்குதலுக்கு உட்பட்டுவிட்டது. கூட்டாட்சித் தேர்தல்களுக்கான தேதி அறிவிக்கப்பட்ட உடனேயே வாக்காளர்கள் பட்டியல் மூடப்பட்டுவிடும் என்று ஹோவர்ட் அரசாங்கம் சமீபத்தில் ஒரு சட்டத்தை இயற்றியது; இது புதிய வாக்காளர் பதிவு செய்வதை திறமையுடன் மூடி நடைமுறையில் நூறாயிரக்கணக்கானவர்களின், குறிப்பாக இளம் வாக்காளர்களின், வாக்குரிமையை தடைக்கு உட்படுத்தியது.

சிக்கலாய் சுழன்று செல்லும் ஜனநாயக-எதிர்ப்பு வழிகள்

தேர்தல் சட்டத்தின் ஜனநாயக-எதிர்ப்பு விதிகளின்படி, குறைந்தது 500 உறுப்பினர்களுடைய பெயர்களும், விலாசங்களும் ஆஸ்திரேலிய தேர்தல் குழுவிடம் சரிபார்த்தலுக்காக கொடுக்கப்பட வேண்டும் 500 உறுப்பினர்கள் கூட இல்லாத கட்சிகள் (முற்றிலும் ஒருமுறையற்ற எண்ணிக்கை) கட்சி என்று பதிவு செய்வதற்குத் தகுதியைப் பெறமுடியாது.

புதிய, "சிறிய" கட்சிகள் பதிவு செய்ய விரும்புபவை "ஒரு கடினமான catch-22" நிலையை எதிர்கொள்ளும். தங்களுடைய பெயரிலேயே தேர்தல்களில் போட்டியிட்டு ஆதரவை ஈர்ப்பதற்கு தடைகள் உள்ளன என்றால் அவை எப்படி திறமையுடன் பதிவிற்கு தேவையான நூற்றுக்கணக்கான உறுப்பினர்களை அடையமுடியும்?

கட்சி 500 அல்லது அதற்கு மேற்பட்ட உறுப்பினர்களைக் கொண்டாலும், ஆஸ்திரேலிய தேர்தல் குழு உறுப்பினர்கள் பட்டியலை சரிபார்ப்பதற்கு பயன்படுத்தும் வழிவகைகள் முற்றிலும் ஒருதலைப்பட்சமானவை ஆகும். பெயர்கள் கொடுக்கப்பட்டபின், தொடர்பின்றி 20 பெயர்கள் தேர்ந்தெடுக்கப்படுகிறது. மூன்று தொலைபேசித் தொடர்புகளுக்குகள் 20 பேரில் 19 பேர் தொடர்பு கொள்ளப்படவில்லை என்றால் அல்லது பின்னர் ஒரு கடிதத்திற்கு விடையிறுக்கவில்லை என்றால் கட்சியின் அடையாளப்பட்டியல் ஏற்கப்படமாட்டாது.

குறிப்பிட்ட விண்ணப்பம் கோரும் கட்சிகளில் இருந்து வரும் பட்டியல் மாதிரிகள் முதல் அல்லது அதற்குப் பின் நடத்தப்படும் பரிசீலனையில் இருந்து தோற்பது அசாதாரணமானது அல்ல. இந்த ஆண்டு இதுவரை குறைந்தது மூன்று கட்சிகளாவது, மனித உரிமைக்கான கட்சி, Brandon Raynor இன் தாராளவாத பசுமைக்கட்சி, மலிந்த எரிபொருளுக்கான கட்சி (Human Rights Party, Brandon Raynor's Green Liberals, Cheaper Petrol Party) என்பவை, கட்சித் தகுதி மறுக்கப்பட்டுள்ளன; அவற்றின் பட்டியல்கள் "உறுப்பினர் மோசடிக்கான" சோதனையில் தோற்றுவிட்டன என்று காரணம் காட்டப்பட்டது. ஆஸ்திரேலிய தலைநகரப் பகுதியில் Australian Democrats பதிவில் இருந்து நீக்கம் செய்யப்பட்டுள்ளது; இதற்குக் காரணம் அவர்கள் குறைந்தது 100 உறுப்பினர்கள் பட்டியலை கொடுக்க முடியாததுதான்.

சோசலிச சமத்துவக் கட்சி தன்னுடைய கட்சிப் பதிவு விண்ணப்பத்தை ஆகஸ்ட் 1ம் தேதி அளித்தது. இரு உறுப்பினர்களை தொடர்பு கொள்ள முடியாததால், முதல் உறுப்பினர் மாதிரி (20 பேர் அடங்கியது) தோற்றுப் போயிற்று. ஆஸ்திரேலிய தேர்தல் குழு இந்த "காணாமற்போன உறுப்பினர்கள்" அடையாளம் பற்றித் தகவல்தர மறுத்தாலும், எமது கட்சிப் பிரச்சார உறுப்பினர்கள் விரைவில் அவர்களை சற்றே நீண்ட வழியான தள்ளுபடி செய்தல்மூலம் கண்டுபிடித்தனர்; அதே நேரத்தில் ஆஸ்திரேலிய தேர்தல் குழு அவர்களை தொடர்புகொள்ள தீவிரமாக முயற்சிக்கவில்லை என்பதையும் அறிந்தனர். உறுப்பினர்களில் ஒருவர், பிரிஸ்பேனில் இருப்பவர் ஆகஸ்ட் 16ம்தேதி ஆஸ்திரேலிய தேர்தல் குழு இடம் இருந்து ஒரு கடிதம் பெற்றார்; உடனடியாக சோசலிச சமத்துவக் கட்சியின் தேசிய அலுவலகத்துடன் தொடர்பு கொண்டார்; உறுப்பினர் படிவத்தில் தொடர்பு விவரத்தில் இது பற்றி அவர் தெளிவாகக் கொடுத்திருந்தும் தன்னுடைய அலுவலகத்தில் வேலைநேரத்தில் ஆஸ்திரேலியத் தேர்தல் குழுவிடம் இருந்து தொலைபேசி தொடர்பு வரவில்லை என்று பெரும் கோபம் கொண்டார். இதுவும் மற்றவையும் சோசலிச சமத்துவக் கட்சியால் ஆஸ்திரேலிய தேர்தல் குழுவிற்கு கொடுக்கப்பட்டிருந்தது; அவர் வேறு இடத்திற்கு சென்றிருந்து தனது தபால் பெட்டியை கவனிக்காது விட்டிருந்தாலும் அல்லது ஆஸ்திரேலிய தேர்தல் குழுவுடைய கடிதம் தொலைந்து போயிருந்தாலும் சோசலிச சமத்துவக் கட்சியுடைய முழு உறுப்பினர் விண்ணப்பமும் ஆபத்திற்கு உட்பட்டிருக்கும்.

தேர்தல் சட்டங்கள் மிகவும் குளறுபடியாக, பல தடுக்கும் வழிவகைகளை கொண்டு எதிர்பாராதவிதமாக கட்சிகளை கவிழ்த்துவிடும் தன்மை பெற்று இருப்பதால், கட்சிகள் அபராதங்கள் கட்ட நேரிடும், ஏன் சிலர் சிறைக்குக் கூட செல்ல வேண்டியிருக்கும். ஆகஸ்ட் 2003ல் வலதுசாரி ஜனரஞ்சகவாத One Nation Party யை சேர்ந்த Pauline Hanson, David Ettridge இருவரும் வெளியே வரமுடியாதபடி அல்லது அபராதம் செலுத்தமுடியாது மூன்று ஆண்டுகள் சிறைத் தண்டனை விதிக்கப்பெற்றனர்; காரணம் குற்ற நடவடிக்கையின்படி தேர்தல் மோசடி நடத்தியதாக கருதப்பட்டனர். 500 உறுப்பினர்கள் கொண்ட பட்டியில் ஒன்றை அவர்களுடைய விலாசங்களுடன் கொடுத்திருந்தனர்; ஒரு நீதிமன்றம் பின்னர் ஒரு அமைப்பு விதிமுறையின்படி அவர்கள் ஆதரவாளர்கள்தான் என்று கூறிவிட்டது. One Nation தலைவர்கள் இருவரை சிறையில் அடைத்தது, "இரக்கமற்ற, நெறிதவறிய, ஜனநாயக-எதிர்ப்பு முறைகள் கட்சிகளுக்கு எதிராக கையாளப்படலாம்" என்ற எச்சரிக்கையை கொடுக்கிறது; அதுவும் ஹான்சன் போல் இல்லாமல் ஒரு உண்மையான முற்போக்கான மாற்றீட்டை இருக்கும் அரசியல் நடைமுறைக்கு எதிராகவும், இலாபமுறைக்கும் எதிராகவும் முன்வைக்கும் கட்சிகளுக்கு எதிராகக் கையாளப்படலாம்" என்று சோசலிச சமத்துவக் கட்சி விளக்கியது.

அப்பொழுதில் இருந்து இன்னும் கூடுதலான திருத்தங்கள் தேர்தல் சட்டத்திற்கு வந்தவை, ஜனநாயக-எதிர்ப்பு விதிகளை அதிகப்படுத்திக் கொண்டு "மூன்றாம்" அல்லது "சிறு" கட்சிகள் தேர்தல்களில் பங்குபெறுவதை தடுக்கின்றன.

டிசம்பர் 21, 2006ல் ஆஸ்திரேலிய தேர்தல் குழு 19 பதிவுசெய்யப்பட்ட அரசியல் கட்சிகளுக்கு (தற்பொழுதோ, முன்போ பாராளுமன்ற பிரதிநிதித்துவம் இல்லாதவற்றிற்கு) அவை இன்னும் ஐந்து நாட்களில் பதிவில் இருந்து நீக்கப்பட்டு விடும் என்று எழுதியது. அந்த முன்னோடியில்லாத நடவடிக்கை, தேர்தல், வாக்கெடுப்பு திருத்தம் (தேர்தல் நேர்மை, மற்ற நடவடிக்கைகள்) 2006 சட்டத்தின்படி, இயற்றப்பட்டது, இவ்வாண்டு தொடக்கத்தில் திறமையாக 11 கட்சிகள்தான் கூட்டாட்சி பதிவுடன் இருக்க முடியும் என்ற பொருளை கொடுத்தது: அவை, ஆஸ்திரேலிய தொழிற்கட்சி, தாராளவாதிகள், தேசியவாதிகள், ஜனநாயகவாதிகள், பசுமைக் கட்சியினர், Family First, Country Labour Party, Democratic Labour Party, Nuclear Disarmament Party, One Nation மற்றும் Peter Andren Independent Group. இது கிட்டத்தட்ட 21 மில்லியன் மக்கள் இருக்கும் நாட்டில் உள்ள நிலை!

பதிவு நீக்கப்பட்ட அமைப்புக்கள் புதிய "பெயரிடும் விதிகளின் கீழ்" மறுபடியும் விண்ணப்பிக்குமாறு கட்டாயப்படுத்தனர்; அவற்றின் பதிவிற்கு எதிராக அறைகூவல் அதிகரிக்கும் வகையில் தளங்கள் விரிவாக்கப்பட்டுள்ள நிலையில் அவை அவ்வாறு செய்ய வேண்டும்.

சோசலிச சமத்துவ கட்சி கடைசியாக 1998ல் ஒரு கூட்டாட்சிக் கட்சியாக பதிவு செய்யப்பட்டது; ஆனால் பெப்ருவரி 2002ல் One Nation உடைய தலைவர்களுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகள் ஏற்பட்டபோது தானே விரும்பி பதிவு நீக்கம் செய்து கொண்டது. சமீபத்திய தேர்தல் சட்டத்தின் திருத்தங்கள் பற்றி விரிவான சட்ட ஆலோசனை பெற்ற பின், சோசலிச சமத்துவக் கட்சி ஒரு புதிய பிரச்சாரத்தை இவ்வாண்டு மே மாதம் கூட்டாட்சி பதிவிற்காக தொடக்கியது.

500 உறுப்பினர்களுக்கும் அதிகமான எண்ணிக்கை உடைய பட்டியலைக் கட்சி சமர்ப்பித்தது; மற்ற தேவைகளையும் சட்டத்தின்கீழ் பூர்த்தி செய்தது. இதன் பின்னர் இதன் பதிவிற்கான விண்ணப்பம் ஆஸ்திரேலிய தேர்தல் குழுவினால் தேசிய நாளேடுகளில் ஆகஸ்ட் நடுப்பகுதியில் விளம்பரப்படுத்தப்பட்டு செப்டம்பர் 14ம் தேதி வரை எதிர்ப்புக்கள் கூறப்படலாம் என்று அறிவிக்கப்பட்டது. எந்த சவாலும் முன்வராததால் செப்டம்பர் 18ம் தேதி கட்சி முந்தைய தினத்தில் இருந்து உத்தியோகபூர்வமாகப் பதிவு செய்யப்பட்டுவிட்டதாக உறுதியளிக்கப்பட்டது.

பிரதிநிதிகள் மன்றத்திற்கும் செனட் உறுப்பினர் பதவிகளுக்கும் தன்னுடைய வேட்பாளர்களை அறிவிக்கும் பிரச்சாரத்தை சோசலிச சமத்துவக் கட்சி விரைவில் தொடக்கும். WSWS வாசகர்கள் மற்றும் கட்சியின் ஆதரவாளர்கள் அனைவரையும் அவர்களுடைய முழு ஆதரவையும் இப்பிரச்சாரத்திற்கு உள்ளூர் தேர்தல் குழுக்களில் சேர்வதன் மூலம், கட்சி அறிக்கையை, முறையான வேட்பாளரின் அறிக்கைகளை தங்கள் பகுதிகளில் வினியோகிப்பது ஆகியவற்றின் மூலம் கொடுக்குமாறு நாங்கள் கேட்டுக் கொள்ளுகிறோம். இவ்விதத்தில் 2007 கூட்டாட்சித் தேர்தலில் ஒரு சோசலிச மாற்றீட்டிற்கு மிகப் பரந்த தொழிலாள வர்க்கப் பிரிவுகளில் இருந்து ஆதரவை திரட்டக் கோருகிறோம்.

சோசலிச சமத்துவக் கட்சி தேர்தல் பிரச்சாரத்திற்கு உங்கள் ஆதரவைத் தருவதற்கு இங்கே கிளிக் செய்யவும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved