:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
US auto workers shut down General Motors
அமெரிக்க கார் தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டார்ஸை மூடுகின்றனர்
By the editorial board
25 September 2007
Use this version to
print | Send this link by email |
Email the
author
இந்த அறிக்கை pdf
வடிவமைப்பிலும் உள்ளது. WSWS
வாசகர்கள் மற்றும் கார் தொழிலாளர்கள் இதை நகல் எடுத்து இயன்ற அளவு பரந்த வினியோகம் செய்யுமாறு
கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
ஜெனரல் மோட்டார்சின் 73,000 தொழிலாளர்கள் திங்களன்று அமெரிக்காவின்
மிகப் பெரிய கார் நிறுவனத்தில் வேலைநிறுத்தம் செய்தனர்; சுகாதாரப்பாதுகாப்பு, வேலைகள், ஊதியங்கள்
என்ற அடிப்படை நிலைமையை காப்பாற்றுவதற்கான போராட்டத்தில் 82 ஆலைகளையும் மூடுமாறு செய்தனர்.
United Auto Workers
தொழிற்சங்க தலைமை ஞாயிறு இரவு அறிவித்திருந்த காலை 11 மணி கெடு முடிந்த பின், ஆலைகளில் இருந்து
தொழிலாளர்கள் வெளியே குழுமியபோது, ஜெனரல் மோட்டார்ஸ் நிர்வாகத்தின் பல ஆண்டு தாக்குதல்களை எதிர்த்து
போர்க்குணமிக்க உறுதியுடனும் சீற்றத்துடனும் அவர்கள் நின்றது வெளிப்படையாயிற்று. தொழிற்சங்க தலைமையின் மீது
அவர்கள் நம்பிக்கையற்ற தன்மையை கொண்டிருந்த போதிலும்கூட, தொழிலாளர்கள் தொழில்துறை தொழிலாள
வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் சக்தியை வெளிப்படுத்துவதில் பெருமிதமும் திருப்தியும் அடைந்து தெளிவாக தெரிந்தது.
31 ஆண்டுகளில் முதல் தேசிய கார் வேலைநிறுத்தம் மற்றும் 1970ம் ஆண்டு நடந்த
67 நாள் வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஜெனரல் மோட்டார்சில் நடைபெறும் வேலைநிறுத்தம் கார்த் தொழிலாளர்களிடத்தில்
மட்டும் என்று இல்லாமல் அமெரிக்காவிலும் உலகம் முழுவதும் இருக்கும் உழைக்கும் வர்க்கத்திடம் அதிகரித்த முறையில்
வளர்ந்துள்ள எதிர்ப்பு உணர்வை சுட்டிக் காட்டுகிறது.
அமெரிக்க கார் தொழிலாளர்களின் போராட்டங்கள் வரலாற்று அளவில் அனைத்து
அமெரிக்க தொழிலாளர்களுக்கும் ஒரு முன்னோடியை ஏற்படுத்தியுள்ளன. 1950, 1960 களில் கார்
தொழிலாளர்கள் அமெரிக்காவில் தொழில்துறை தொழிலாளர்கள் மற்றும் ஓய்வு பெற்றவர்களுக்கு முழுமையாக
கொடுக்கப்பட்ட மருத்துவ வசதிகளை முதலில் அடைந்தனர். ஆனால் கடந்த மூன்று தசாப்தங்களாக டெட்ராயிட்டின்
மூன்று பெரிய கார்த்தயாரிப்பாளர்களும் தொழிலாளர்களின் வாழ்க்கைத்தரங்களை மிக மோசமாக குறைத்தல்
மற்றும் அமெரிக்காவில் செல்வம் கொழிக்கும் உயர்மட்ட 1 சதவிகிதத்தினரின் வருமானத்தை உயர்த்தும் வகையில்
செயற்பாடுகளை உந்துதலுடன் நடத்தி வருகின்றனர்.
அமெரிக்காவில் வர்க்கப் போராட்டம் முடிந்து விட்டது என்ற பேச்சு அனைத்திற்கும்
இந்த வேலைநிறுத்தம் முற்றுப்புள்ளி வைக்கிறது. இதன் திறமை --அனைத்து உள்நாட்டு ஜெனரல் மோட்டார்ஸ்
ஆலைகளிலும் உற்பத்தியை நிறுத்தி கனடா, மெக்சிகோவில் இருக்கும் ஜெனரல் மோட்டார்ஸ் ஆலைகளுக்கு
பொருட்களை நிறுத்தி வைத்தலும்-- பெருநிறுவன தலைமை நிர்வாகிகளோ, மட்டுப்படுத்தப்பட்ட தனியார் நிதிய
முதலீட்டாளர்களோ (hedge fund)
இல்லாமல் தொழிலாளர்கள்தான் சமுதாயத்தின் செல்வத்தை உற்பத்தி செய்கின்றனர் என்பதை நிரூபணம் செய்கிறது.
ஆனால் ஒரு அப்பட்டமான எச்சரிக்கையை விடுப்பது மிகவும் தேவையாகும்.
United Auto Workers
தொழிற்சங்கத்தின் அதிகாரத்துவம், வரலாற்று விட்டுக்கொடுப்புகளை
கோரும் ஜெனரல் மோட்டார்சின் கோரிக்கைகளை பின்தள்ளுவதற்காக செய்யும் போராட்டத்தை நடாத்தும் என
அதில் நம்பிக்கை வைக்க முடியாது. தொழிற்சங்க அதிகாரிகளின் கைகளில் வேலைநிறுத்தத்தை நடத்துவது
விடப்பட்டுவிட்டால், அது மற்றொரு காட்டிக் கொடுப்பிற்குத்தான் வகை செய்யும்.
இவ்வாறு நடந்துவிட அனுமதிக்கக்கூடாது. ஓய்வு பெற்ற நூறாயிரணக்கணக்கான
தொழிலாளர்கள் மற்றும் இப்பொழுது வேலையில் இருக்கும் 180,000 தொழிலாளர்கள் ஆகியோரின் கடுமையாக
போராடி பெற்றநலன்கள் பணயமாக உள்ளன; இதைத் தவிர மூன்று பெரிய கார் நிறுவனங்களில் வேலைக்கு வர
இருக்கும் அடுத்த தலைமுறையின் தொழிலாளர்கள் வாழ்வும் உள்ளது.
United Auto Workers
தொழிற்சங்க அதிகாரத்துவத்தின் கரங்களில் மூன்று தசாப்தங்கள் நிகழ்ந்த
காட்டிக் கொடுப்புக்களின் படிப்பினைகள் கற்றுக் கொள்ளப்பட வேண்டியுள்ளதுடன், இத்தொழிற்சங்க தலைமையில்
இருந்து சுயாதீனமான முறையில் தொழிலாளர்கள் தங்கள் வேலைநிறுத்த குழுக்களை தாங்களே ஆரம்பிக்க வேண்டும்
என்ற தேவை முதலில் எழுகிறது.
United Auto Workers
தொழிற்சங்க தலைவர் Ron Gettelfinger
சமீபத்தில் வேலைநிறுத்தம் தொடங்கியபின் நடத்திய ஒரு செய்தியாளர் கூட்டத்தில் கூறிய கருத்துக்களில் இருந்த
கோழைத்தனம் மற்றும் பணிந்துவிடும் நிலை இவற்றிற்கு முற்றிலும் மாறுபட்ட முறையில் தொழிலாளர்களின்
போர்குணமிக்க உணர்வு உள்ளது.
"எவருக்கும் விருப்பமில்லாத" ஒரு வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு கொடுப்பதற்கு
தன்னுடைய ஏமாற்றத்தை Gettelfinger
வெளிப்படுத்தினார். ஜெனரல் மோட்டார்சிற்கு உதவும் வகையில் தொழிற்சங்கம் அனைத்தையும் செய்துள்ளது என்றும்
சமீபத்தில் இது விட்டுக் கொடுத்துள்ள சலுகைகளை பட்டியலிட்டும் அவர் காட்டினார்; இதில் உறுதிபடுத்தப்பட்ட
ஆண்டு ஊதிய உயர்வுகள் அகற்றப்பட்டது, ஓய்வு பெற்ற ஊதியர்கள்மீது பில்லியன் கணக்கான சுகாதாரப் பாதுகாப்பு
சலுகைகள் அகற்றப்பட்டது, ஜெனரல் மோட்டார் உடன் இணைந்து
United Auto Workers
வேலைகளில் 34,000 மறுசீரமைப்பு திட்டங்களுக்காக அகற்றப்பட்டது
ஆகியவை அடங்கும்.
"இந்த நிறுவனம் பற்றி நாங்கள் பெரிதும் அக்கறை கொண்டுள்ளோம். இவர்களுக்கு
நாங்கள் ஏராளமாக செய்துள்ளோம். ஆனால் உங்களை மலையுச்சியில் இருந்து தள்ள வேண்டும் என்று எவரேனும்
விரும்புகின்றர் என்ற நேரம் வரும்போது, அதுதான் இப்பொழுது இங்கு நடைபெறுகிறது." என்றார். வோல்ஸ்ட்ரீட்
இன் இலாபத்திற்காக தொழிற்சங்கம் 400,000 ஓய்வு பெற்றவர்கள் மற்றும் அவர்களை சார்ந்துள்ளவர்களுக்கு
ஒப்பந்த, சட்டபூர்வ பொறுப்பான சுகாதார நலன்களை கொடுப்பதில் இருந்து ஏற்கனவே நிறுவனத்தை (GM)
விடுவித்துவிட்டது என்றும் முடிவுரையாக கூறினார்.
"இந்த வேலைநிறுத்தும் ஒன்றும்
VEBA (தொழிலாளர்களின்
சுயாதீன நல அமைப்பு) பற்றியது அல்ல", என்று
Voluntary Employees' Beneficiary Association
என்று நிறுவப்பட இருக்கின்ற அமைப்பை பற்றி அவர் வலியுறுத்தினர்; அந்த அமைப்பு கார் நிறுவனங்கள் தங்கள்
நிறுவனத்திலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான சுகாதாரப் பாதுகாப்பு வழங்கும் கடமைகளை தள்ளிவிட்டு ஒரு பல
பில்லியன் டாலருடைய அறக்கட்டளை நிதியத்தை (Trust
Fund), தொழிற்சங்கத்தின் கட்டுப்பாட்டின்கீழ் வரும் வகையில்
அமைக்க உள்ளது. தொழிற்சங்கம் உடனடியாக பேச்சுவார்த்தைகளை, "இந்த வேலைநிறுத்தத்தை, நல்ல
முறையில், பேசித் தீர்க்க" தொடரும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
Gettelfinger இன் கருத்துக்களின்
சாராம்சம், ஓய்வு பெற்ற ஊழியர்களின் சுகாதார நலன்களை தொழிற்சங்கம் வரலாற்று இகழ்வான வகையில்
நிர்வாகத்திற்கு விற்றுவிட்டதற்கு ஈடாக, ஒரு பெயரளவு "வேலைப் பாதுகாப்பு" முறைகளை ஒப்புக் கொண்டு என்பதாகும்;
இதை United Auto Workers
தொழிற்சங்கம் பயன்படுத்தி ஒரு கோபம்மிக்க, அவநம்பிக்கையுள்ள உறுப்பினர்களை
சமாதானப்படுத்திவிடும். "வேலைப் பாதுகாப்பு" விதிகள் என்பது மூன்று பெரு நிறுவனங்களின் (GM,
Ford, Chrysler) ஒப்பந்தங்களில் கிட்டத்தட்ட முப்பது
ஆண்டுகளாக முக்கிய அடையாளமாக இருந்து வருகிறது; வேலைப்பாதுகாப்பு என்ற இப்போக்கினால்தான்
UAW வேலைகள்
750,000 ல் இருந்து 180,000 என்று சரிந்துவிட்டன; இவற்றில் 100,000 வேலைகள் கடந்த நான்கு ஆண்டுகளில்
தகர்க்கப்பட்டுவிட்டன. ஜெனரல் மோட்டார்சில் வேலைகள் 1970 வேலைநிறுத்தத்திற்கு பின்னர் ஐந்து இலட்சத்தில்
இருந்து குறைந்து இன்று 73,000 என்று உள்ளது.
வேலையில் இருப்பவர்களும் கூட தங்கள் பணிநிலைமைகள் மோசமடைவதையும் தங்கள்
ஊதியங்கள் தேக்க நிலை அடைந்துள்ளதையும்தான் (1992ல் இருந்து பணவீக்க விகிதத்தை கருத்திற்கொண்டு ஆண்டு
ஒன்றுக்கு 1.5 உயர்வு என்றுதான் உள்ளது) கண்டுள்ளனர். அதே நேரத்தில் கார்த் தொழிலில் உள்ள நிர்வாகிகள்
தங்களை பெரும் செல்வந்தர்களாக ஆக்கிக் கொண்டுள்ளனர்; ஜெனரல் மோட்டார்சின் தலைமை நிர்வாக அதிகாரி
Rick Wagoner
கடந்த ஆண்டு மொத்த ஊதியமாக $10.2 மில்லியனை பெற்றார்.
ஒரு வேலைநிறுத்த கெடுவை, உத்தியோகபூர்வ ஒப்பந்தக்காலம் முடிந்தபின்
தொழிற்சங்கம் அறிவித்துள்ளது செய்தி ஊடகத்தை வியப்பில் ஆழ்த்தியது போல் தோன்றியது. தொழிற்சங்க
அதிகாரிகள், தொழிலாளர்கள் முற்றிலும் இருட்டில் வைக்கப்பட்ட நிலையில் பேச்சுவார்த்தைகள் பற்றி
இருந்தபோதிலும், வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடும் எண்ணம் இல்லை என்றுதான் கூறிவந்தனர். பெருந்திகைப்பை
அடுத்து United Auto Workers
தொழிற்சங்கம் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டது போல்
தோன்றுகிறது; நிர்வாகத்தின் இரக்கமற்ற பிடிவாதம், தன்னுடைய ஆட்குறைப்பையோ, வெளியே வேலை
ஒப்பந்தங்கள் கொடுப்பதையோ நிறுத்துவது மற்றும் ஒரு இரு-அடுக்கு ஊதிய முறையை சுமத்துதல் என்பவற்றிற்கும்
தொழிலாளர்களிடையே பெருகிய அமைதியின்மை, சீற்றம் ஆகியவற்றிற்கும் இடையே தொழிற்சங்கம் அகப்பட்டுக்
கொண்டது.
தொழிலாளர்களை பொறுத்தவரையில், வேலைநிறுத்தம் என்பது வேலைகள், ஊதியம்,
நல்ல பணிநிலைமைகள், சலுகைகள் இவற்றை அழிப்பதை தடுத்தி நிறுத்தி நல்ல முறையில் மாறுவதற்கான ஒரு
தொடக்கமாகும். ஆனால் United Auto Workers
தொழிற்சங்கத்திற்கு இது ஒரு தந்திரபாயம் நடவடிக்கைதான்;
நிர்வாகத்துடன் தன்னுடைய ஒத்துழைப்பு மறைப்பதற்கான வடிவமைப்பு; தொழிலாளர்களிடையே நம்பகத்தன்மையை
ஓரளவு மீட்பதற்கு ஒரு நடவடிக்கை; அதே நேரத்தில் மற்றொரு நிபந்தனையற்ற சரணுக்கு முன்னால்
தொழிலாளர்களுக்கு சீற்றத்தை வெளிப்படுத்துவதற்கான ஒரு வாய்ப்புகொடுப்பது என்ற விதத்தில் உள்ளது.
தற்போதைய பேச்சுவார்த்தைகளில்,
United Auto Workers
தொழிற்சங்கம் மீண்டும் தன்னுடைய உறுப்பினர்களுக்கு தெரியாத வகையில்
அதன் தொழிற்சங்கங்க செயல்களை கட்டுப்படுத்தும், மிக அதிக அளவு ஊதியம் பெறும் அதிகாரத்துவத்தினரின்
நலன்களை காக்க முற்பட்டுள்ளது. தொழிற்சங்கமும் நிர்வாகமும் ஏற்கனவே
VEBA திட்டத்தை
ஒப்புக் கொண்டுள்ளன; அதையொட்டி பல பில்லியன் டாலர்கள் தொழிற்சங்க கட்டுப்பாட்டின் கீழ் இருக்கும்
அறக்கட்டளைக்கு செல்லும்.
இது United Auto
Workers தொழிற்சங்கத்தை நிறுவனங்களின் அதிகாரத்துவ கூட்டு
என்ற நிலையில் இருந்து தன்னுடைய சொந்த பலத்தில் இலாபம் பெறும் வணிகமாக மாற்றும்; இதன் நலன்கள் இது
பெயரளவிற்கு பிரதிபலிக்கும் தொழிலாளர்களின் நலன்களுக்கு நேரடியான முறையில் முரணானவை ஆகும்.
அமெரிக்காவிலேயே மிகப் பெரிய முதலீட்டு நிதியம் என்று கூறக்கூடிய வகையில் வரும் அமைப்பின் மீது இது தனது
கட்டுப்பாட்டை கொண்டிருக்கும் என்றால் (வோல்ஸ்ட்ரீட் ஜேர்னல் கருத்தில் "நிதிய வட்டங்களில் முக்கிய பங்கை
பெறும் அமைப்பு எனப்படுகிறது) ஓய்வு பெற்றவர்களுடைய சலுகைகள் குறைக்கப்படுதல், வேலையில்
இருப்பவர்கள்மீது இன்னும் கடுமையான நிலையை சுமத்துதல் ஆகியவற்றிற்கான பொறுப்பை செய்வதால்
United Auto Workers
தொழிற்சங்கம் நேரடி நன்மைகளை பெறும்.
United Auto Workers
தொழிற்சங்க தலைவர் Gettelfinger
ரின் கூற்றான, "ஓய்வு பெற்றவர்கள் எதை பற்றியும் கவலைப்பட
தேவையில்லை" என்று கூறினாலும், Caterpillar
என்னும் கனரக இயந்திரங்கள் நிறுவனம் வங்குரோத்தடைந்ததும் இதையொட்டி ஓய்வு பெற்ற ஊழியர்கள், அவர்களை
நம்பியிருப்பவர்கள் ஆகியோர் தங்கள் மருத்து காப்பிற்காக அதிக பணமும், காப்பீட்டுக் கட்டணங்களும் செலுத்த
VEBA
கட்டாயப்படுத்தியதை United Auto Workers
ஒப்புக் கொண்டது. தொழிற்சங்கம் இதற்குப் பின் வந்து புதிதாக வேலைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு 50
சதவிகித ஊதிய வெட்டுக்களை திணிக்க உதவியதன் மூலம், தங்கள் களைத்திருந்த நிதியத்தை நிரப்பிக்கொண்டது.
தொழிலாளர்கள் ஜெனரல் மோட்டர்சினால் பலமுறையும் கூறும் கருத்துக்கள், செய்தி
ஊடகத்தால் ஆதரவு கொடுக்கப்படும் தொழில்துறை "வல்லுனர்கள்" பிரதிபலிக்கும் கருத்தான கெளரவமான
ஊதியங்கள், வேலைப் பாதுகாப்பு, சுகாதாரப் பாதுகாப்பு, ஓய்வூதிய்கள் ஆகியவற்றை கொடுக்க
போதுமானதான வளங்கள் இல்லை என்ற கூற்றுக்களை, ஆணித்தரமாக நிராகரிக்க வேண்டும். தொழிலாளர்களின்
உற்பத்தித்திறனில் ஏற்பட்டுள்ள மகத்தான பெருக்கம் --அறிவியல், தொழில்நுட்பம் ஆகியவற்றின் முன்னேற்றத்தால்
விளைந்துள்ள இயந்திர மனிதர்கள் (Robotics),
கணினிமயம் மற்றும் செயற்கைக் கோள்மூலமான தொடர்பு ஆகியவற்றால் ஏற்பட்ட நன்மைகள் -- மற்றும்
கார்த்தொழிலில் உலகந்தழுவிய உற்பத்திமுறை ஒருங்கிணைப்பு ஆகியவை தொழிலாளர்களின் உழைப்பால்
உற்பத்தியாகும் செல்வத்தை மிகப் பரந்த அளவில் அதிகரித்துள்ளது.
உண்மையான பிரச்சினை இதுதான்: உழைப்பினால் தோற்றுவிக்கப்படும் செல்வம்
மக்கட்தொகையில் பரந்த பெரும்பான்மையில் இருக்கும் தொழிலாள வர்க்கத்திற்கு பயன்படும் வகையில் நலன்களை
கொடுக்குமா, சமுதாயம் முழுவதும் பயன் அடையுமா அல்லது அது தொடர்ந்து பண வெறி பிடித்து பெரு
முதலீட்டாளர்கள், ஊகவணிகர்கள், உயர் நிர்வாக அதிகாரிகள் என்று திறமையற்ற தன்மைக்கு ஏற்ப பெரும்
பேராசை கொண்டவர்களின் ஏகபோக உரிமை நலன்களுக்காக பயன்படுத்தப்படுமா. பாரியளவில் அமெரிக்க
கார்த் தொழில் நிறுவனங்களில் உள்ள நெருக்கடி சமூகத்தை அழிக்கக்கூடிய வெறிபிடித்த எஜமானர்களின் தங்களை
செல்வக் குவிப்பு செய்துகொள்ளும் தன்மையினால் அதிகரித்துள்ளது.
ஜெனரல் மோட்டாஸ் தொழிலாளர்கள்
VEBA திட்டம்
மற்றும் United Auto Workers
தொழிற்சங்கம் ஆதரவு கொடுக்கும் எச்சலுகைகளையும் நிராகரிக்க
வேண்டும். பேச்சுவார்த்தைகள் நடத்தும் உரிமை
United Auto Workers தொழிற்சங்கத்தின் கரங்களில்
இருந்து அகற்றப்பட்டு தொழிலாளர்கள் ஜனநாயக முறையில் தேர்ந்தெடுக்கும் சுயாதீனக் குழுக்களிடம்
ஒப்படைக்கப்பட வேண்டும்
இதைத்தவிர, மணிக் கணக்கு மற்றும் மாதாந்த ஊதியம் பெறும் தொழிலாளர்களின்
குழுக்கள் அமைக்கப்பட வேண்டும்; இவை United
Auto Workers தொழிற்சங்கத்தில் இருந்து சுயாதீன முறையில்
இருக்க வேண்டும்; அவை வேலைநிறுத்தத்தை Ford,
Chrysler மற்றும் உதிரிப்பாகங்கள் விநியோக்கிக்கும்
தொழிற்சாலைகளுக்கும் பரப்ப வேண்டும்; வெகுஜனக் கூட்டங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் ஜெனரல் மோட்டர்ஸ்
தொழிலாளர்களுக்கு ஆதரவு திரட்டுவதற்காக நடத்தப்பட வேண்டும். அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள்
என்று சமூகங்களில் ஆலை மூடல்கள், வேலை இழப்புக்கள் ஆகியவற்றால் பாதிக்கப்படுபவர்களை ஒருங்கிணைக்கும்
பிரச்சாரத்தின் ஒரு பகுதியாக இருக்க வேண்டும்; வட அமெரிக்காவிலும் சர்வதேச அளவிலும் தொழிலாளர்களை
ஒன்றுபடுத்தும் திட்டத்தின் ஒரு பகுதியாக செயல்படுத்தப்பட வேண்டும்.
ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்கள் கனடா, மெக்சிகோ, ஆசியா, ஐரோப்பா
ஆகியவற்றில் உள்ள தங்கள் சகோதர, சகோதரிகளிடம் இருந்து ஐக்கிய நடவடிக்கைக்காக கோரிக்கை
விடவேண்டும். எஜமானர்களின் மூலோபாயமான பிரித்து ஆளுதல் என்பதற்கு தக்க விடை
United Auto Workers
தொழிற்சங்கத்தால் செய்யப்படும் தேசியவாதமோ அல்லது
வெளிநாட்டு-எதிர்ப்பு வெறியோ அல்ல; மாறாக சர்வதேச ஐக்கியம், ஒருங்கிணைப்பு என்று அனைத்து நாடுகளின்
தொழிலாளர்களும் ஒன்று சேருவதுதான்.
வேலைகள் பாதுகாக்கப்படல், வாழ்க்கை தரங்கள் பாதுகாக்கப்படல் என்பது ஒரு
தனி வேலைகொடுப்பவருக்கு எதிரான போராட்டம் அல்ல; மாறாக அது அமெரிக்காவில் இருக்கும் முழு
பொருளாதார அரசியல் நடைமுறைக்கு எதிரான ஒரு அரசியல் போராட்டம் ஆகும்; அம்முறை உயர்மட்டத்தில்
இருக்கும் ஒரு சிலரை மட்டும்தான் செல்வம் கொழிக்க வைப்பதற்காக தொழிலாள வர்க்கத்தின் தேவைகளை
தியாகம் செய்து விடுகிறது.
தொழிலாளர்களுடைய கட்சி என்று பாசாங்குத்தனம் காட்டும் ஜனநாயகக் கட்சி
மூன்று கார் பெருநிறுவனங்களும் நடத்தும் தாங்குதலுக்கு முற்றிலும் ஆதரவைக் கொடுக்கிறது. 2008 ஜனாதிபதி
வேட்புமனுக்கு ஜனநாயக கட்சியின் மூன்று முக்கிய போட்டியாளர்களான ஹில்லாரி கிளின்டன், பரக் ஒபாமா மற்றும்
ஜோன் எட்வர்ட்ஸ் ஆகியோர் ஜெனரல் மோட்டர்ஸ் தொழிலாளர்களுக்கு ஆதரவு தெரிவிக்கும் வகையில் பெயரளவு
அறிக்கையை விடுத்தாலும், அனைவருமே இலாப முறையை காப்பதற்கு ஆதரவு கொடுப்பவர்கள்தாம்; அதுதான்
தொழிலாளர்கள் மற்றும் அவர்கள் குடும்பங்கள் மீதான வேலைகள், வாழ்க்கை ஆகியவற்றின்மீதான பாதிப்பிற்கு
பொறுப்பு ஆகும்.
வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் தகர்ப்பு ஆகியவற்றிற்கு ஒரே விடை ஜெனரல்
மோட்டர்ஸ் மற்றும் முழு கார்த் தொழிலையும் பொதுமக்களுக்குரிய நிறுவனமாக மாற்றி, கார்த்தொழிலாளர்கள்
மற்றும் மொத்த தொழிலாளர் மக்கட் திரட்டின் ஜனநாயக கட்டுப்பாட்டின்கீழ் கொண்டுவருவதுதான். தொழில்துறையின்
நுட்பமான நடவடிக்கைகள் பற்றி நல்ல அறிவை தொழிலாளர்கள் பெறவேண்டும்; தக்க பயிற்சி உடைய பொறியியலாளர்கள்,
திறமை மிக்கவர்கள் என்று பொதுநலனுக்கு பாடுபவர்களுடைய உதவியை கொண்டு தொழிற்துறையை எஜமானர்களை
விட நல்ல முறையில் நடத்த வேண்டும்.
தொழிலாள வர்க்கத்தின் போரட்டம் வெற்றி பெறுவதற்கு ஜனநாயகக் கட்சியினர்,
இரு கட்சி முறை இவற்றில் இருந்து முழுமையான உடைவு தேவையாகும்; இதைத்தவிர உலகெங்கிலும் இருக்கும்
தொழிலாளர்களுடைய வேலைகள், வாழ்க்கைத்தரங்கள் ஆகியவற்றை நிதியச் சிறுதட்டினரின் சிறு அடுக்கு காணும் இலாபங்கள்,
சுய செல்வக் கொழிப்பை காட்டிலும் முன்னுரிமை கொடுக்கும் பரந்த சோசலிச கட்சி கட்டமைக்கப்படவும்
வேண்டும்.
* * *
உலக சோசலிச வலைத் தளமும் சோசலிச சமத்துவ கட்சியும் ஜெனரல் மோட்டர்ஸ்
தொழிலாளர்களை WSWS
ஐ படிக்குமாறும், ஆசிரியர் குழுவிற்கு தங்களுடைய கருத்துக்கள், அனுபவங்கள், வினாக்கள், வேலைநிறுத்த ஆய்வு
பற்றிய எங்கள் ஆய்வு கருத்துக்களையும் மின்னஞ்சல் மூலம் அனுப்புமாறு கேட்டுக் கொள்ளுகின்றது. |