WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
France: Riots break out in Paris suburbs after police crash kills youth
பிரான்ஸ்: போலீஸ் வாகனம் மோதி இளைஞர்கள் மரணம் அடைந்ததை அடுத்து பாரிஸில்
கலகம் வெடித்தது
By Alex Lantier
27 November 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
நவம்பர் 25, ஞாயிறன்று இரு இளைஞர்கள்,
Moushin, Larimi
ஆகியோர் Villiers-le-Bel
ல் மாலை 5 மணி அளவில் இறந்ததை அடுத்து பாரிஸ் புறநகரங்கள் தொடர்ச்சியாக இரு இரவுகள் கலகங்களினால்
அதிர்ந்தன. இந்த இளைஞர்கள் சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள்மீது ஒரு போலீஸ் கார் மோதியது,
அவர்கள் போலீஸாரால் பொருட்படுத்தப்படாமல் இறக்கும்படி விடப்பட்டனர்.
மோதல் நிகழ்ச்சி பற்றிய அடிப்படைத் தகவல்களில் கருத்து வேறுபாடுகள் ஏதும்
இல்லை. "இருபது மீட்டர்களுக்கும் மேலாக மோட்டார் பைக் சறுக்கிச் சென்றது; போலீஸ் காரின் முன்புறம்
உடைந்து பம்பர்களும் சிதைந்தன; வண்டியின் முன் கண்ணாடி நன்கு நசுங்கிப் போயிற்று" என்று
Le Monde
எழுதியுள்ளது. போலீஸ்காரர்கள் அந்த இடத்தில் இருந்து
விரைவாகத் தப்பி ஓடிவிட்டனர்.
Pontoise பகுதியின் அரசாங்க
வக்கீல் Marie-Therere Givry
போலீஸ்காரர்கள் சம்பவ இடத்தில் இருந்து உடனடியாகச் சென்றுவிட்டனர் என்றும் "அப்பகுதியில் அவர்கள் இருப்பது
ஆபத்தை விளைவிக்கக்கூடும்" என்பதால் இரவு வரை விசாரணையை தொடங்கவில்லை என்று கூறினார். இதைத்தவிர
தன்னுடைய கருத்தை அவர் அதிகமாக விவரிக்கவில்லை; ஆனால் கொதித்துப் போயிருந்த அப்பகுதி மக்களைப் பற்றி
அவர்கள் அஞ்சினர் என்பது இவருடைய கருத்தில் இருந்து தெளிவாயிற்று.
Villiers-le-Bel ல்
வசிக்கும் Younès B
என்பவரை Le Monde
மேற்கோளிட்டுக் கூறியது: "தங்கள் சக ஊழியர்களை அழைத்துச் செல்ல ஒரு
இரண்டாம் போலீஸ் குழு வந்தது. ஆனால் இரண்டு இளைஞர்களையும் பற்றி ஏதும் நடவடிக்கை எடுக்காமல்
சென்றுவிட்டது."
"எண்ணாமல் நிகழும் கொலை,
ஆபத்தில் இருப்பவர்களுக்கு உதவிசெய்யாமை" பற்றி ஒரு
விசாரணையை கிவ்ரி தொடக்கினார்; தேசிய போலீஸ் அமைப்பு முறை (Inspection
Generale de la Police Natioale
-IGPN)
பிறழ்ந்தது பற்றி இவ்விசாரணை ஆராயும்.
பெல்ஜியத்தின் RTL
தொலைக்காட்சி அப்பகுதியில் வசிக்கும் ஒருவரைப் பேட்டி கண்டது; அவர் கூறினார்: "ஒரு பெண்மணி
அடிபட்டவர்களுடைய உதவிக்கு வந்தார்; அவர் ஒரு செவிலியாவார். அவர்களுக்கு முதலுதவி அளித்தார்.
அப்பகுதியில் இருந்த இளைஞர்கள் வந்தவுடன் இவர் கூறினார், "அனைத்தும் முடிந்துவிட்டது; அவர்கள் மடிந்து
விட்டனர்." இப்பெண்மணி தனியாகத்தான் இருந்தார்; போலீசார் சென்று விட்டனர்.
இறுதியில் தீயணைக்கும் படையினர் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதற்கு வந்தனர்.
இறந்துவிட்ட ஒருவரின் சகோதரரான Omar Sehouli,
RTL
இடம் கூறினார்: "நான் ஒரு தீயணைக்கும் படையினரிடம் பேசினேன்; அவரை மேற்கோளிட வேண்டாம் என்று அவர்
கூறிவிட்டதால் பெயரைச் சொல்ல விரும்பவில்லை. 'நமக்கிடையே, நம்பகமான முறையில் நான் கூறவேண்டும்
என்றால், போலீஸ்காரர்கள் கோழைகள் என்பேன்."
இந்த நிகழ்வு வேண்டும் என்றே நடத்தப்பட்டது என்ற கணிசமான சந்தேகங்கள்
உள்ளன. Liberation
நாளேட்டின் நிருபர்களின் தகவல்படி, "செய்தி ஊடகம் 'எண்ணாது நிகழும் கொலை'"
என்ற சொற்றொடரைப் பயன்படுத்தியிருப்பது [பகுதி வாழ் மக்களிடையே]
குறிப்பிடத்தக்க வகையில் சீற்றத்தை ஏற்படுத்தியுள்ளது; அவர்களில்
பலரும் இந்த மோதல் வேண்டுமேன்றே போலீசாரின் தூண்டுதலில் நடந்தது என்றுதான் நம்புகின்றனர்."
Liberation
மேலும் கூறியதாவது: "இறந்தவர்கள் ஒருவருக்கும் போலீசாருக்கும் இடையே
பிளவு இருந்தது என்பது வெளிப்படை. லாராமியின் தகப்பனார் ... மற்ற பகுதிவாசிகளிடையே தன்னுடைய
மகனைக் கடந்த வாரம் ஒரு போலீஸ்காரர் அச்சுறுத்தியதை உறுதிப்படுத்தினார். இவருடைய மகனிடம்,
"எங்களுடன் நீ பேச வேண்டியிருக்கும்" என்று பேச்சுக்களை பறிமாறிக்கொள்ளும்போது ஒரு போலீஸ்காரர்
கூறியதை தந்தை விவரித்தார்.
அன்று மாலை கலவரம் வெடித்துப் படர்ந்தது; போலீசாருக்கும் பகுதிவாழ்
மக்களுக்கும் இடையே கடுமையான கைகலப்பாக ஆயிற்று. போலீஸின் கலகப் படைப் பிரிவினர் எறிகுண்டுகள்
(நெருப்பு உருண்டைகள் (flash-balls)
மற்றும் கண்ணீர்ப்புகை ஆகியவற்றை ஆர்ப்பாட்டக்காரர்கள்மீது பயன்படுத்தினர். ஆர்ப்பாட்டக்காரர்கள்
கற்களையும், கண்ணாடி பாட்டில்களையும் பதிலுக்கு எறிந்தனர்; பின்னர் அவர்கள் அருகில் இருந்த இரயில்
நிலையத்திற்குச் சென்றனர்; செல்லும் வழியில்
Villiers-le-Bel, Arnouville-les-Gonesse
என்று இரு இடங்களிலும் இருந்த போலீஸ் காவல் நிலையங்களையும் எரித்து, அங்கு இருந்த கணினிகளையும்
அழித்தனர்.
"பாரிஸ் பகுதி முழுவதிலும் இருந்தும் ஏராளமான போலீஸ் உதவிப் படைகள் குவிந்த
போதிலும், குண்டு துளைக்கான கவசங்கள், நெருப்புக் கோளக் கருவிகள், கண்ணீர்ப் புகை எறிகுண்டுகள் இவற்றுடன்
சிரமப்பட்டு ஒழுங்கை நிலைநாட்டினர். "அதிகம் நடமாடிவந்த" குழுக்கள் சிலவற்றின் நடவடிக்கையை தடுக்க
முயன்றனர் என்று அங்கு இருந்த போலீஸ் அதிகாரி கூறினார்; ஆனால் தடுக்கும் முயற்சிகள் பயனளிக்கவில்லை
என்றார். .... பகுதியில் வசித்து வந்த மக்களில் ஏராளமானவர்கள் போலீசாரை ஏசினார்கள்; போலீசாரும்
அதே முறையில் பதில் கொடுக்கத் தயக்கம் காட்டவில்லை" என்று
Le Monde
கூறியுள்ளது.
கிவ்ரி அலுவலகம் கொடுத்த புள்ளிவிவரப்படி, 40 போலீசார் காயமுற்றனர்; ஒரு
போலீஸ் ஆணையர் மண்டையோட்டில் படுகாயம் அடைந்ததும் இதில் அடங்கும். ஆர்ப்பாட்டக்காரர்களிடையே
காயங்களின் தீவிரம் எப்படி இருந்தது என்பது பற்றி பிரெஞ்சு பெருவணிகச் செய்தி ஊடகம் தகவல் ஏதும்
கொடுக்கவில்லை.
இதற்கு அடுத்த நாள், நூற்றுக்கணக்கான போலீசார் அப்பகுதிக்குள் கொண்டுவந்து
நிறுத்தப்பட்டனர்.
IGPN திங்களன்று ஒரு இடைக்கால
அறிக்கையை சமர்ப்பித்தது; இது தூண்டிவிடும் வகையில் போலீசார் நடந்து கொண்ட முறை பற்றி பூசி மெழுகும்
முயற்சியைத்தான் கொண்டுள்ளது. அனைத்து குற்றச் சாட்டுக்களில் இருந்தும் போலீசார் விடுவிக்கப்பட்டனர்; இந்த
நிகழ்வு ஒரு "போக்குவரத்து தற்செயல் நிகழ்வு" என்ற போலீசாரின் குறிப்பு உறுதி செய்யப்பட்டது; இளைஞர்கள்
"அதிக வேகத்தில் சென்றதால்" நேர்ந்த விபத்து என்றும் போலீஸ் கார் "சாதாரண வேகத்தில், அதிக வேகம்
இன்றியும், சங்கு ஒலிக்காமலும் சென்றது" என்று கூறப்பட்டுவிட்டது.
விபத்திற்காளானவர்களுக்கு தக்க முறையில் போலீஸ் உதவி செய்யாமல் இருந்து
விட்டனரா என்ற பிரச்சனை பற்றியதில் -- இதுபற்றி சாட்சிகளும் அதிகாரிகளும் அதுவரை ஏகமனதாக சாட்சியம்
கொடுத்திருந்தனர் - அறிக்கை அப்பட்டமாக "இது இவ்வழக்கில் மிகக் கடினமான பகுதியாகும்; இதுபற்றி
கூடுதலான விசாரணைகள் தேவை" என்று எழுதியுள்ளது. மேலும் "போலீசார் கடும் தவறு ஏதும்
இழைத்துவிடவில்லை" என்றும் கூறியுள்ளது.
அதிகாரிகள் இந்த அறிக்கைக்கு முழு ஆதரவைக் கொடுத்துள்ளனர். கிவ்ரி
அறிவித்ததாவது: "போலீஸ், இளைஞர்களுக்கு உதவி செய்யவில்லை என்று எவரையும் கூற நான் அனுமதியேன்."
தற்பொழுது அரசாங்கத்தின் சார்பாக சீனா சென்றுள்ள பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி "அனைவரும்
அமைதியாக இருக்க வேண்டும்; நீதி முறை இரு பக்கத்து பொறுப்பின் வரம்பையும் நிர்ணயிக்க அனுமதிக்கப்பட
வேண்டும்" என்று கோரியுள்ளார்.
Villiers-le-Bel
வாழ்மக்கள் திங்கள் பிற்பகல் அணிவகுத்துச் சென்றனர். அணியின் முன்னணியில் இருந்தவர்கள்
Koushin, Larimi
இருவருடைய புகைப்படங்களையும் ஏந்திச் சென்றனர்; "அமைதியில் ஆழட்டும். நவம்பர் 25, 2007ல்
உயிர்நீத்தனர். எக்காரணமும் இன்றி மரணம் அடைந்தனர்" என்ற கசப்பான வாசகங்கள் இருந்த அட்டைகள்
எடுத்துச் செல்லப்பட்டன.
திங்கள் இரவு
Villers-le-Bel, Cergy, Goussainville, Sarcelles, Garges-les-Gonesse,
Ermont என்ற ஆறு புறநகர்ப்பகுதிகளிலும் அதிக கலகங்கள்
மூண்டன. 36 கார்கள் எரிக்கப்பட்டதாக போலீஸ் கூறியது, இதைத் தவிர ஏராளமான குப்பைத் தொட்டிகளும்
எரியூட்டப்பட்டன; ஒரு மழலைகள் பள்ளி, ஒரு நூலகமும் எரிந்து போயின. முப்பது போலீசார் காயமுற்றவர்கள்
பட்டியலில் சேர்க்கப்பட்டனர்; இதில் இருவர் தீவிரக் காயம் அடைந்தனர். ஆனால் போலீஸ் அல்லாதவர்களைப்
பற்றி எந்த எண்ணிக்கையும் கொடுக்கப்படவில்லை.
ஆர்ப்பாட்டங்கள் தொடர்ந்து போலீசாரின் கட்டுப்பாட்டை விட்டுப் போய்விட்டால்,
நவம்பர் 2005 கலகங்களின் மறு நடவடிக்கை போன்ற நிலை ஏற்படக்கூடும் என்று அதிகாரிகள் அஞ்சினர்;
அச்சமயம் இரண்டு இளைஞர்கள் பாரிஸ் புறநகர்ப்பகுதியான
Clichy-sous-Bois
ல் போலீசாரிடம் இருந்து தப்பியோட முயற்சிக்கையில் மின்சாரத் தாக்குதலுக்கு உட்பட்டு மடிந்து போயினர்.
எனவே போலீசார் பகிரங்கமாக மகத்தான மோதலுக்கான தயாரிப்புக்கள் பற்றி அறிவித்துக்
கொண்டிருக்கின்றனர்.
ஒரு போலீஸ் அதிகாரி
Le Monde இடம் கூறினார். "இத்தனை போலிசார்
ஒன்றாய் கொண்டுவரப்பட்டது என்பது நீண்ட நாட்களுக்கு பின்னர் நடந்துள்ளது. 2005ல் கூட இப்படிப்பட்ட
நிகழ்வை நாங்கள் காணவில்லை. இப்பகுதி முற்றிலும் துண்டிக்கப்பட்டு உள்ளது."
இதில் பயன்படுத்தப்பட்டிருக்கும் பேச்சு 1950 களில் அல்ஜீயர் மக்களுக்கு எதிரான
பிரெஞ்சு காலனித்துவத்தின் போராட்டத்தை நினைவிற்கு கொண்டு வருவது ஒன்றும் தற்செயலானதல்ல. சார்க்கோசி
உள்துறை மந்திரியாக 2003ல் இருந்தபோது, வறிய புறநகர்ப்பகுதிகளில் போலீசார் திடீர்சோதனை
மேற்கொள்வதற்காக ஏராளமான அளவில் போலீசார் விரைந்து திரட்டப்படும் வகையில் திறன் இருக்க வேண்டும்
என்று கூறியது, இப்பொழுது பகுதி வாழ் மக்களுக்கும் போலீசாருக்கும் இடையே இடைவிடாத, குறைந்த
மட்டத்திலான போர் போன்ற உறவைக் கொடுத்துள்ளது; போலீசார் எவரையேனும் வேண்டும் என்றோ,
வேறுவிதத்திலோ கொன்றுவிட்டால் வெடித்து எழும் தன்மையைத்தான் இது கொடுத்துள்ளது.
மரணங்கள் வேண்டுமேன்ற நிகழ்த்தப்பட்டிருக்கக்கூடும் என்னும் பகுதிவாழ் மக்களின்
சந்தேகங்களில் முற்றிலும் நியாயமிருக்கிறது. இந்த போலீஸ் வன்முறை ஒரு குறிப்பான அரசியல் பின்னணியில்
வெளிப்பட்டுள்ளது -- தொழிற்சங்க அதிகாரத்துவம் சார்க்கோசி அரசாங்கத்தின் ஓய்வூதியக்குறைப்புக்களுக்கு
எதிராக நடைபெற்ற பெரும் போக்குவரத்து வேலைநிறுத்தங்கள் இரத்து செய்யப்பட்டுவிட்டன என்று அறிவித்ததற்கு
பின் இது வந்துள்ளது.
சமீப ஆண்டுகளில் ஒரு பெரிய வெகுஜன போராட்டம், உதாரணமாக 2003ல்
அப்பொழுது பிரதம மந்திரியாக இருந்த
Jean-Pierre Raffarin இன் ஓய்வூதிய வெட்டுக்களுக்கு
எதிராகவும், 2006ல் டொமினிக் டு வில்ப்பனின் முதல் வேலை ஒப்பந்தச் சீர்திருத்தத்திற்கு எதிராகவும்
நடைபெற்ற போராட்டம்-- நிறுத்தப்பட்டிருக்கிறது, அரசாங்கம் முஸ்லிம் மற்றும் ஏனைய புலம்பெயர்ந்தோருக்கு
எதிராக இன அல்லது மத வகையிலான தப்பு எண்ணங்களை தூண்டிவிடும் வகையில் நடந்துள்ளது; இப்பிரிவினர் வறிய
புறநகர்ப்பகுதிகளில் அதிகமாக வாழ்கின்றனர். 2003ல் இஸ்லாமிய வகையிலான முக்காடு போடுதலை பிரெஞ்சு
பொதுக் கல்வி நிலையங்களில் இருந்து தடை செய்யும் வகையில்
Raffarin ஒரு
சட்டத்தை தயாரித்தார். 2006ல் வில்ப்பனுடைய அரசாங்கம் புலம்பெயர்வோருக்கு எதிரான ஒரு கடுமையான
சட்டத்தை, முதல் வேலை ஒப்பந்த ஆர்ப்பாட்டங்கள் முடிந்த பின்னர் உடனே இயற்றியது.
இக்குறிப்பிட்ட கொலைகள் புலம்பெயரும் வெளிநாட்டு இளைஞர்கள் இருக்கும் பகுதியில்
கடினமாக போலீசாரை நடந்து கொள்ள அதிகாரிகள் கொடுத்த ஊக்கத்தினால் ஏற்பட்டதா என்பது பற்றி
நிர்ணயிப்பது கடினமாகும். ஆனால் புலம்பெயர்வோர்களுக்கு எதிரான கசப்பு உணர்வுகளுக்கு ஊக்கம் கொடுக்கும்
வகையில் மற்றொரு பிரச்சாரம் நடத்தப்படுகிறது என்பது பற்றி மறுக்க முடியாத அடையாளங்கள் உள்ளன.
Liberation, Le Nouvel Observateur
உட்பட, சில செய்தி ஊடகப் பிரிவுகள், சமீபத்தில் சார்க்கோசியால் மற்ற ஐரோப்பிய நாடுகளின் தலைவர்களுடன்
தூதரகப் பேச்சுவார்த்தைகள் நடத்தும் போது கூறப்பட்ட இழிந்த முறையிலான முஸ்லிம்-எதிர்ப்பு உளறல்
கருத்துக்களைத் தாங்கிய கட்டுரைகளை வெளியிட்டுள்ளன.
Liberation செய்தியாளரான
Jean Quatremer,
நவம்பர் 19ம் தேதி நிக்கோலோ சார்க்கோசி "தன்னுடைய விருந்தாளிகளுடன் முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வை உண்மையாக
வெளிப்படுத்தினார்" என்று எழுதியுள்ளது. "எனக்குக் கிடைத்த ஆதாரத் தகவல்களின்படி, நாட்டின் தலைவர் (அதாவது,
சார்க்கோசி), ஒரு குழப்பம் நிறைந்த இருபது நிமிஷ உரையைத் தொடக்கினார். ... அவை வெளிப்படையாக
ஐரோப்பாவில் தற்பொழுது இருக்கும் முஸ்லிம்களுக்கு எதிராக இருந்தது." இஸ்லாமிற்கும் ஐரோப்பாவிற்கும்
இடையே "நாகரிகங்களின் மோதல்" பற்றி பலமுறையும் சார்க்கோசி குறிப்பிட்டார்.
தன்னுடைய நவம்பர் 26 பதிப்பில் இது பற்றி வெளியிட்டுள்ள கட்டுரை ஒன்றில்
Le Nouvel Observateur,
ஒரு வீடியோ காட்சியையும் கொடுத்திருந்தது; அதில் சார்க்கோசி இஸ்லாமிய
பழக்கங்களை, ஈத் பெருவிழாவின்போது ஆடுகளைப் பலியிடுதல் போன்றவற்றை குறைகூறியிருந்தார். "வீட்டுக் குளியல்
தொட்டியில் பொதுவாக நாம் ஆட்டை வெட்ட மாட்டோம்" என்ற வகையில் சார்க்கோசி பேசியிருந்தார்.
தற்போதைய அரசியல் பின்னணியில், போலீசார் நடத்தும் விசாரணைகள்மீது எந்த
நம்பிக்கையையும் வைக்க இயலாது. போலீசாரின் கண்துடைப்பை எதிர்கொள்ள வேண்டிய நிலையில், அனைவரும்
"அமைதியாக இருப்பதற்கான" சார்க்கோசியின் அழைப்பு மிக வெறுப்பணர்வைத் தரும் இழிவைத்தான் கிளப்புகிறது.
போலீசாரின் சட்டபூர்வ பொறுப்பு மற்றும் முக்கிய அரசியல் வாதிகளின் அரசியல் பொறுப்புணர்வு ஆகியவற்றை நிலைநாட்டுவதற்கு
ஒரு சுதந்திரமான விசாரணை கட்டாயம் நடத்தப்படவேண்டும். |