WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
French railway strike betrayed
பிரெஞ்சு இரயில்வே வேலைநிறுத்தம் காட்டிக் கொடுக்கப்பட்டது
By Antoine Lerougetel
24 November 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
சிறப்புத் திட்ட ஓய்வுதியங்கள் பாதுகாக்கப்படுவதற்காக மேற்கொள்ளப்பட்ட
போக்குவரத்து வேலைநிறுத்தத்தை தனிமைப்படுத்தி காட்டிக் கொடுப்பதில் பிரான்சின் தொழிற்சங்கங்கள் வெற்றி பெற்று
விட்டன. ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் அரசாங்கத்தை தோற்கடிக்கும் முன்னோக்கை இழந்த நிலையில்,
பிரான்ஸ் முழுவதும் நடந்த தொழிலாளர் பொதுக் கூட்டங்கள் வேலைக்கு திரும்ப வேண்டும் என்று வாக்களித்துவிட்டன.
கிட்டத்தட்ட 10 சதவிகித இரயில்வே தொழிலாளர்கள் சில இடங்களில் அதிக எண்ணிக்கையில், இன்னும் வேலை நிறுத்தத்தில்
ஈடுபட்டுள்ளனர்.
செவ்வாய்க் கிழமையன்று ஒரு மில்லியன் தொழிலாளர்களுக்கும் மேலானோர் பங்கேற்ற
மகத்தான ஒரு நாள் வேலைநிறுத்தம் மற்றும் 70,000 க்கும் மேற்பட்டோரை போக்குவரத்து தொழிலாளர்களுடன்
தெருக்களுக்கு அழைந்து வந்த பொதுத்துறை ஊழியர்களால் நடத்தப்பட்ட ஆர்ப்பாட்டங்கள், தொழிற்சங்கங்களால்
சார்க்கோசியின் பிற்போக்கு சமூகக் கொள்கைகளுக்கு எதிரான உண்மையான ஒருங்கிணைந்த அரசியல் தாக்குதலை
தடுக்கின்ற வழிவகைகளாக கருதப்பட்டன.
ஓய்வூதிய உரிமைகள் மீது திட்டமிட்ட தாக்குதல் நடத்துவதை முன்கூட்டி திரும்பப் பெறாமல்
நிர்வாகம் மற்றும் அரசாங்கத்துடன் புதனன்று ஒரு பேச்சுவார்த்தையில் நுழைவதற்கு வேலைநிறுத்தத்தை செயலற்றதாக
ஆக்குதல், மற்றும் அடுத்த சில நாட்களில் மிக உறுதியாக இருக்கக் கூடிய தொழிலாளர்களை தனிமைப்படுத்துதல்
ஆகியன கம்யூனிஸ்ட் கட்சியின் ஆதிக்கத்தில் இருக்கும் CGT,
மற்றும் SUD-RAIL
உள்ளடங்கலான தொழிற்சங்கங்களின் முடிவால் தயாரிக்கப்பட்டன.
LCR போன்ற தீவிர அமைப்புக்கள்
செயல்ப்படும் SUD
அமைப்பானது அரசாங்கத்தின் சீர்திருத்தங்கள் திரும்பப் பெறாவிட்டால் பேச்சு வார்த்தைகளில் பங்கு பெறுவதில்லை
என்று முன்பு கூறியிருந்தது. குறிப்பாக 37.5 ல் இருந்து 40 ஆண்டுகள் பணியாற்றல் முழுஓய்வூதியம் பெறுவதற்குத்
தேவை என்ற நீடிப்பு, முன்கூட்டிய ஓய்வு பெறுதலுக்கு கடுமையான அபராதங்கள் மற்றும் ஊதியங்கள் என்பதற்கு
பதிலாக விலைவாசிக் குறியீட்டுடன் ஓய்வூதியங்களை இணைத்தல் என்ற மூன்று பிரதான அம்சங்கள் கூடாது என்று அது
கூறியிருந்தது.
SUD-RAIL அமைப்பானது,
அரசாங்கம், SNCF
அரசாங்க இரயில் நிறுவனம் மற்றும் RATP
பெருநகர் போக்குவரத்து நிர்வாகம் ஆகியவற்றுடன் வட்ட மேசைப் பேச்சில் கலந்து கொள்ள உடன்பட்டது.
பிரான்ஸ் முழுவதும் நடைபெற்ற வேலைநிறுத்தக்காரர்களின் பொதுக் கூட்டங்களில் இந்தப் பேச்சு
வார்த்தைகளுக்கான ஒப்புதலை தொழிற்சங்க அதிகாரத்துவம் பெற்றது; சார்க்கோசியின் பிடிவாதமான
அறிவிப்புக்கள் அவர் முக்கிய பிரச்சினைகளில் விட்டுக் கொடுக்க தயாராக இல்லை என்று கூறியும்கூட இத்தகைய
முடிவிற்கு தொழிற்சங்கம் வந்தது.
சார்க்கோசியின் பெருவணிக ஆதரவாளர்களுக்கு பெரும் கவலையை வேலைநிறுத்தம்
கொடுத்த நேரத்தில் இந்த மாற்றம் வந்துள்ளது.
MEDEF என்னும் முதலாளிகளின் முக்கிய சங்கத்தின் தலைவரான
Laurence Parisot
RTL
ரேடியோவிடம் கூறினார்: "நம்முடைய பொருளாதாரத்திற்கு இது உண்மையான பேரழிவு ஆகும்... இதை ஒரு நில
அதிர்ச்சி போல் நான் காண்கிறேன். வேலைநிறுத்தத்தினால் ஏற்பட்ட இழப்பு கணக்கிட முடியாதது ஆகும்....
பிரான்சில் இந்த அல்லது அந்த நடவடிக்கையை எத்தனை முதலீட்டாளர்கள் கைவிட்டுவிட்டனர் என்று யாருக்குத்
தெரியும்?"
வேலைநிறுத்தத்தினால் பொருளாதாரத்திற்கு நாள் ஒன்றிற்கு 400 மில்லியன்
யூரோக்கள் இழப்பு என்று அரசாங்கம் கூறியுள்ளது.
The Economist கூறியதாவது: "வேலைநிறுத்தத்தின்
நாட்கடப்பும், தீவிரமும் மூத்த நோக்கர்களைக்கூட வியப்பில் ஆழ்த்தியுள்ளது."
தொழிற்சங்கங்கள், இரயில்வே தொழிலாளர்களை கட்டுப்படுத்த முடியாமல்
போய்விடுமோ என்பதுதான் சார்க்கோசியின் பெரிய அச்சமாக இருந்தது. கன்சர்வேடிவ் நாளேடான
Figaro,
நவம்பர் 22ம் தேதி, "நாட்டின் தலைவர் வேலைநிறுத்தம் முடியும் வரை தொழிற்சங்கங்களின் ஆதரவைப் பெற
விரும்பவில்லை" என்ற தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியது.
ஜனாதிபதியின் பெயர்கூறப்படாத ஆலோசகர் ஒருவரை அது மேற்கோளிட்டது:
"நேற்று வேலைநிறுத்தம் முடிந்துவிடும் என்று எதிர்பார்த்திருந்தோம்; இப்பொழுது "வெண் புகை" வெளிவரும் வரை
காத்திருக்க வேண்டியுள்ளது."
கட்டுரையில் தொடர்ந்து கூறப்பட்டுள்ளதாவது: "நாட்டின் தலைவர்
தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள் கொண்டிருக்கும் கடினச் சூழ்நிலையில் அவற்றிற்கு எதிராக
கடுமையான சொற்களை கூறவிரும்பவில்லை. தன்னுடைய சீர்திருத்தங்களான, தொழில் விதிமுறைகள், வேலைவாய்ப்பு
நிறுவனங்களை வேலையின்மைக்கான நலம்சார் அலுவலகங்களுடன் இணைத்தல், தனியார் பிரிவு ஓய்வூதியங்கள்,
விடுமுறைக்கால பயிற்சி ஆகியவற்றைத் தொடர அவற்றின் உதவி தேவை என்பது இவருக்கு தெரியும். "சிறப்புத்
திட்டங்கள் மற்ற சீர்திருத்தங்களுக்கு ஒரு வேட்கையூட்டலாகும். பொறுப்பான தொழிற்சங்கங்கள் நமக்குத்
தேவை." என்று எலிசேயின் செய்தித் தொடர்பாளர்
David Martignon வாதிட்டுள்ளார்."
விலைவாசி உயர்வுகளை ஒட்டி தன்னுடைய செல்வாக்கில் சரிவு ஏற்பட்டுள்ளது பற்றி
சார்க்கோசி கவலை கொண்டுள்ளார்; இந்த உயர்வு "அதிகம் உழையுங்கள், அதிகம் ஊதியம் பெறுங்கள்" என்ற
இவருடைய முக்கிய தேர்தல் பிரச்சார கோஷத்தை கேலிக்கூத்தாக ஆக்கியுள்ளது. எலிசே, பிரெஞ்சு மக்கள்
வயிற்றைக் கட்டி வாழவேண்டும் என்று ஏற்கனவே எதிர்பார்ப்பதாக
Figaro
கட்டுரை கூறியுள்ளது. "நாம் ஏற்கனவே பட்ஜெட்டிற்கு வாக்களித்து விட்டோம்; நம்மிடம் மந்திரக்கோல் ஏதும்
இல்லை என்பதை எலிசே உணர்ந்துள்ளது" என்று
Figaro
இடம் ஒரு மந்திரி தெரிவித்தார்:
"நாம் திட்டமிடுவது அனைத்தும் போதாது. அவர் ஒரு தத்துவஞானியின் உரைகல்லை தேடிக் கொண்டிருக்கிறார்,
அவரால் காணமுடியவில்லை."
பிரெஞ்சு சமூகத்தை செல்வந்தத்தட்டுக்கள் மற்றும் முதலீட்டாளர்கள் செல்வத்தை
பெருக்கிக் கொள்வதற்கான சொர்க்கமாக ஆக்குவதற்கு மறுஒழுங்கமைப்பதுதான் சார்க்கோசியின் நம்பிக்கையாக
எப்போதும் இருந்து வருகிறது, இது தொழிற்சங்கங்களின் ஆதரவுடன் கட்டாயம் செய்யப்பட வேண்டும்.
ஒரு எதிர்ப் போக்கை உடையது போல் காட்டிக் கொண்டு,
SUD மற்றும் அதில்
உள்ள தீவிரப் போக்குகுடைய குழுக்கள் மற்ற தொழிற்சங்கங்களின் முயற்சிகளுடன் ஒத்துழைத்து வேலைநிறுத்தத்தை
காட்டிக் கொடுப்பது என்ற முடிவில் ஈடுபடுட்டுள்ளன. நவம்பர் 22ம் தேதி பைனான்சியல் டைம்ஸ்
தெரிவித்ததாவது: "SUD
தீவிர உள்ளூர் குழுக்கள் கூட வியாழனன்று வேலைநிறுத்தத்தை முடிக்கும் நடவடிக்கைக்கு ஆதரவாக வாக்களித்தன.
புதன் கிழமைப் பேச்சு வார்த்தைகளில் இருந்தே உறுப்பினர்கள் வேலைநிறுத்தம் முடிவிற்கு வரவேண்டும் என்று
கூறிவருகின்றனர். "உண்மையை நாம் எதிர்கொள்ள வேண்டும். நேற்றைய பேச்சுவார்த்தைகளில் இருந்து நிலைமை
மாறிவிட்டது. வேலைநிறுத்தம் என்பது ஒரு தீர்வு ஆகாது. வேலைநிறுத்த மூலோபாயம் இப்பொழுது எல்லாம்
வெற்றி பெறுவது இல்லை." என்று பாரிஸ் போக்குவரத்துப் பிரிவு
RATP யின்
தொழிற்சங்க பிரதிநிதியான Philippe Touzet
கூறினார்.
வியாழனன்று, SUD
இன் RATP
கிளை வெளியிட்ட அறிக்கை ஒன்று "அதிக நம்பிக்கைத்தன்மை அற்ற நிலையில்
அது வேலைநிறுத்தத்தை தொடர்வதாகவும், இன்னும் இந்த நடவடிக்கையை தொடர்ந்துகொண்டிருக்கும்
உறுப்பினர்கள்மீது கொண்டுள்ள மரியாதையின் காரணமாக மட்டுமே ஆகும்" என்று கூறினார்.
SUD-RAIL செய்தி அறிக்கை
நவம்பர் 22ல் வெளிவந்தது, தான் போக்குவரத்து வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்துள்ளவர்களுடன்
தொடர்ந்து கூட்டு உள்ளது என்று உறுதிபடுத்தியுள்ளது. "இன்னும் கூடுலான ஒருங்கிணைந்த திரட்டு வெளிவருவதற்கு
நாம் காத்திருப்போம்; நம்முடைய சிறப்பு திட்ட சீர்திருத்தத்தை எதிர்கக் கூடிய வகையில் அது இருக்க வேண்டும்;
மீண்டும் தொழிலாளர்களை அப்பொழுது நடவடிக்கைக்கு அழைப்போம்." என்று அது கூறியது.
CGT யின்
Didier Le Reste
வேலைநிறுத்தம் தொடர்வதற்கு பரிந்துரைக்கவில்லை; இளநிலை அதிகாரத்துவத்தினர் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி,
சோசலிஸ்ட் கட்சியின் அரசியல் காரியாளர்கள் மற்றும் பொதுக் குழுக்களில் உள்ள பல்வேறு இடது
தீவிரப்போக்கினர் ஆகியோரிடம் வேலைநிறுத்தத்தை முடிவிற்கு கொண்டுவர சம்பிரதாயபூர்வமாக ஒரு
முடிவெடுக்குமாறு விட்டது. அடுத்த கட்ட பேச்சுவார்த்தைகள்
SNCF க்கு
நவம்பர் 29 அன்று தொடங்கி டிசம்பர் 18 அன்று முடியும்;
RATP க்கு
நவம்பர் 26 தொடங்கி, டிசம்பர் 13 அன்று முடியும்.
CGT தலைவரான
Bernard Thibault
தன்னுடைய தொழிற்சங்கத்திற்கு, பேச்சுவார்த்தைகளுக்கு பின்னர் வரும் விடுமுறைக் காலத்தை இடையூறுசெய்வதற்கு
நோக்கம்கொள்ளவில்லை என்று கூறினார்.
உண்மையை தலைகீழாக மாற்றி, கம்யூனிஸ்ட் கட்சியின் நாளேடான
L'Humanite,
"போக்குவரத்துப் பிரிவில் பேச்சுவார்த்தைகள் தொடங்கிவிட்டன. அவர்கள் வேலைநிறுத்தம் மூலமாக நீடித்த
நாட்கள் கடுமையாகப் போராடி வெற்றியை அடைந்துள்ளனர்; இது
SNCF, SNCF தொழிலாளர்களால் ஒரு முதல் முன்னேற்றத்தை
பிரதிநிதித்துவப்படுத்துகிறது."
LCR இன் ஒலிவியே பெசன்ஸ்நோ
தொழிற்சங்கம் வேலைநிறுத்தத்தை காட்டிக் கொடுத்ததை திரையிட்டு அதற்கு ஒப்புதலும் கொடுத்துள்ளார். வியாழனன்று
பணிக்குத் திரும்புதல் பற்றி அவர் கூறினார்: "இது ஒன்றும் ஒரு தோல்வி அல்ல; அறவழியிலோ, முக்கிய பிரச்சினையிலோ:
இரயில்வே தொழிலாளர்களின் ஆரம்ப கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை என்றாலும் இதுதான் நிலைமை"
என்றார். "இரயில்வே தொழிலாளர்களின் பொதுக் கூட்டங்களின் முடிவுகளுடன் தான் ஒற்றுமையாக இருப்பதாகவும்"
அவர் தெரிவித்தார்.
இதற்கு மாறாக, நவம்பர் 23ல்
Liberation
இரயில் தொழிலாளர்கள் காட்டிக் கொடுக்கப்பட்டது பற்றிய தன்மையை பற்றி எழுதியுள்ளது.
Marseilles
வேலைநிறுத்தக்காரரும் SUD
உறுப்பினருமான ஒருவர் "இது மூளைக் கொதிப்பைத் தருகிறது....இதற்காகவா எட்டு நாட்கள் வேலைநிறுத்தம்.
ஒரு சில அற்பமான சலுகைகளை, பட்டாணிக் கடலை போல்." என்று கூறினார்.
CGT இன் வலுவான கோட்டையான
Gare de Lyon
இரயில் நிலையத்தில், மூன்று தொழிலாளர் கூட்டங்களில் இரண்டு வேலைநிறுத்தம் தொடர வாக்களித்தன; "இது
CGT
பிரதிநிதிகளுக்கு பெரும் அதிருப்தியை கொடுத்தது" என்று
Libération கூறியுள்ளது.
SNCF ல் காட்டிக்கொடுப்பதற்கு
முன்பே, RATP
தொழிற்சங்கங்கள் மற்றும் நிர்வாகம், அரசாங்கம் ஆகியவற்றிற்கு இடையே சந்திப்புக்கு ஆதரவை நாடுவதில்
தொழிலாளர்கள் ஈடுபட்டிருந்தனர். "சீழ்க்கை ஒலிகள். பின் ஏளனக் கூச்சல்கள்.
RATP முகப்புக்
கூடங்களில் ...CGT
அதிகாரி முத்தரப்புப் பேச்சு வார்த்தைகளில் இருந்து வந்தபோது தன்னுடைய அறிக்கையை முடிப்பதற்கு கஷ்டப்பட்டார்.
'துரோகி', "காட்டிக்கொடுத்துவிட்டார்கள்" என்று கூட்டத்தில் பெரும்பாலானவர்கள் கூச்சலிட்டனர்; அவர்களில்
பெரும்பாலானவர்கள் CGT
உறுப்பினர்கள்தான். சூழ்நிலை முழுவதும் பெரும் அதிர்விற்கு உட்பட்டிருந்தது.
சிறு குழுக்கள் ஆங்காங்கே கூடி சூடாக விவாதம் நடத்தினர். ஒருபுறத்தில்
Jean-Pierre
"வாந்தியெடுக்க விரும்புகிறேன்" என்று கூறி உட்கார்ந்திருந்தார். |