:ஆசியா
: பாகிஸ்தான்
More in regret than anger
Bhutto calls for Pakistan's US-backed
military strongman to resign
கோபத்தில் என்பதை விட, வருத்தத்தில்
பூட்டோ, அமெரிக்க ஆதரவு பெற்ற இராணுவ வலிமை கொண்டவரை இராஜிநாமா செய்யக்
கோருகிறார்
By Keith Jones
14 November 2007
Back to screen version
பாக்கிஸ்தான் மக்கள் கட்சியின் வாழ்நாள் தலைவரான பெனாசீர் பூட்டோ பாக்கிஸ்தானின்
அமெரிக்க இராணுவ ஆதரவு பெற்ற வலிமையாளர் தளபதி பர்வேஸ் முஷாரஃப் பற்றியும் அவருடைய இராணுவ ஆட்சி பற்றியும்
கூறிய கண்டனங்களை பின்னோக்கி இயங்கவிடாது ஒரே பாதையில் இயக்குமாறு நிர்பந்திக்கப்பட்டுள்ளார்.
திங்களன்று முஷாரஃப்புடனான அதிகாரப் பகிர்வு தொடர்பான பேச்சுக்களை தான்
உடைத்துக் கொள்வதாக பூட்டோ அறிவித்தார் --இப்பேச்சு வார்த்தைகள் பல மாதங்களுக்கு முன்பு புஷ் நிர்வாகத்தின்
வலியுறுத்தலில் தொடக்கப்பட்டவை; இது இராணுவக் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் அரசாங்கத்திற்கு ஒரு ஜனநாயக முகப்பைக்
கொடுக்கும் என்று கருதப்பட்டது.
"அரசியல் அமைப்பை நிறுத்திவைத்து, அவசரகால சட்டத்தை சுமத்தி, நீதித்துறையை
நசுக்கும் எவருடனும் நாங்கள் வேலைசெய்ய முடியாது" என்ற பூட்டோ, "மேலும் பேச்சுவார்த்தைகளுக்கு இடமில்லை
என்றும் நாங்கள் சொல்கிறோம்." என்றார்.
இதன்பின் செவ்வாயன்று, ஐந்து நாட்களில் அரசாங்கம் இரண்டாவது முறையாக இவரை இராணுவ
ஆட்சிக்கு எதிரான ஆர்ப்பாட்டத்திற்கு தலைமை வகிப்பதை தடுக்க பாதுகாப்புபடைப் பிரிவுகளை பெருமளவில் அணிதிரட்டிக்
குவித்தது, பூட்டோ முஷாரஃப் ஜனாதிபதி மற்றும் பாக்கிஸ்தானின் ஆயுதப்படைகளின் தலைமை இரண்டையும் இராஜிநாமா
செய்ய வேண்டும் என்று கோரினார்.
"தளபதி முஷாரஃப் பதவியில் இருந்து இறங்க வேண்டும், வெளியேற வேண்டும், அகல
வேண்டும் என்று கூறுகிறேன்" என்று பூட்டோ, அடுத்த ஏழு நாட்களுக்கு லாகூரில் உள்ள அவருடைய வீட்டிலேயே காவல்
என்று உத்தரவிடப்பட்ட நிலையில், தொலைபேசி மூலம் செய்தியாளர்களுக்கு கொடுத்த பேட்டி ஒன்றில் கூறினார்.
இதுவரை பூட்டோ, இராணுவத் தலைமைப் பதவியில் இருந்து விலகுவேன், நெருக்கடியை
அகற்றுவேன் ஜனவரி 15 அளவில் தேசிய மற்றும் மாநிலத் தேர்தல்களை நடத்துவேன் என்று நீண்டகாலமாக கூறிவரும்
உறுதிமொழிகளை மட்டும் முஷாரஃப் நிறைவேற்ற வேண்டும் என்றுதான் கோரிவந்திருந்தார்.
இந்த நடவடிக்கை எடுப்பது பற்றி தான் புலம்ப நேரிட்டுள்ளது என்பதை பூட்டோ
தெளிவாக்கினார். 1999 இராணுவ ஆட்சி கவிழ்ப்பில் அதிகாரத்தை கைப்பற்றி, அரசாங்கத்தில் கொள்கைகளை
வடிவமைப்பதில் இராணுவத்திற்கு மேலாதிக்க உரிமையைக் கொடுக்கும் வகையில் அரசியலமைப்பை மீண்டும் திருத்தி எழுதிய
முஷாரஃப் பல முறை மோசடித் தேர்தல்களை நடத்தியதுடன், எதிர்ப்பை நசுக்குவதற்கு மிருகத்தனமான அடக்கு
முறையைக் கையாண்டார், உச்சக் கட்டமாக நவம்பர் 3ம் தேதி நடைமுறையில் இராணுவச் சட்டத்தை சுமத்தியுள்ளார்
என்று கூறிய பூட்டோ, "அவர் மிகக் குறைந்த அளவுதான் செயல்புரிந்துள்ளார், அதுவும் தாமதமாக செய்துள்ளார்.
அவர் வெறுமனே நேரத்தைக் கடத்துவதற்குத்தான் முயற்சிக்கிறார்... பாக்கிஸ்தானுக்கு உறுதித் தன்மை
தேவைப்படுகிறது. தளபதி முஷாரஃப்புடன் பிரதம மந்திரி என்ற முறையில் என்னால் செயல்பட முடியாது. அப்படி
செயல்பட்டிருக்க முடியும் என்று நான் அவாவுற்றேன்." என்று தெரிவித்தார்.
புஷ் நிர்வாகம் தன்னுடைய நீண்டகால நண்பரான முஷாரஃப்புடன் இணைந்து தான் பணியாற்ற
வேண்டும் என விரும்புகிறது என்பதை பூட்டோ அறிவார்; அவரும் பாக்கிஸ்தானிய மக்கள் கட்சித் தலைமையும் தங்களுடைய
சொந்த சலுகைகளின் பாதுகாப்பிற்கு இராணுவம் முக்கியம் என்பதையும் அறிவர்-- ஒரு தேசிய அரசு என்ற முறையில்
பாக்கிஸ்தானின் பெரும் சமத்துவமற்ற சமூக ஒழுங்கை, மற்றும் அதன் ஒருமைப்பாட்டை தக்க வைத்துக்கொள்ளுவதற்கு அது
தேவை என்பதை அறிவர்.
பல மாதங்களாக இராணுவ ஆட்சிக்கு எதிராக ஒரு மக்கள் இயக்கத்தை தொடங்குவதற்கு
எதிராகத்தான் இவர் ஆலோசனை கூறிவந்துள்ளார்; அது மரபார்ந்த அரசியல் உயரடுக்கின் கட்டுப்பாட்டை விரைவில்
மீறிச் சென்றுவிடும் என்றும் எச்சரித்துள்ளார்.
தலைமை நீதிமன்றம் இவருடைய போலி ஜனாதிபதி மறு தேர்தலை தள்ளுபடி செய்து தீர்ப்பு
கொடுப்பதை முன்கூட்டியே தவிர்க்கும் வகையில், முஷாரஃப் நடைமுறை இராணுவச் சட்டத்தை அறிவித்ததை ஒட்டி, புஷ்
தன்னுடைய நடவடிக்கைகளை எதிர்க்கட்சிகள் "நிதானம் காட்ட வேண்டும், அனைத்து "நிதானப் போக்குடைய சக்திகளும்"
தளபதி-ஜனாதிபதியுடன் இணைந்து "ஜனநாயகத்தை" மீட்க உதவ வேண்டும் என்னும் புஷ் நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு
ஏற்ப தன்னுடைய நடவடிக்கைகளை பூட்டோ மேற்கொண்டுள்ளார்.
அவ்வாறு செய்கையில், அவர் பொது மக்களுடைய பெருகிய இகழ்வை பெற்றுள்ளார்;
மேலும் PPP
க்குள்ளேயே பெருகிய விமர்சனத்தையும் எதிர்கொண்டுள்ளார்; ஒரு மிருகத்தனமான சர்வாதிகார ஆட்சியுடன் குலவுவது,
PPP
ஆதரவாளர்களை பெருகிய முறையில் தாக்கும் ஆட்சியுடன் குலவுவது எதிர்ப்பை தூண்டியுள்ளது.
திங்கள் மாலையிலும் செவ்வாயன்றும் ஆயிரக்கணக்கான பாதுகாப்பு படைப் பிரிவுகள்,
AK-47
துப்பாக்கியை ஏந்திய பலரும், லாகூரில் இருந்து தலைநகர் இஸ்லாமாபாத்திற்கு புறப்பட இருந்த பல நாட்கள் பிடிக்கும்
ஊர்வலத்தை தொடக்க இருந்த PPP
ஐ தடைசெய்வதற்காக அணிதிரட்டப்பட்டன. லாகூரில் பூட்டோ தங்கியிருந்த வீடு முள்வேலி மற்றும் வாகனங்கள், 900
போலீசார் ஆகியவற்றால் சூழப்பட்டிருந்தது. பூட்டோவின் மீது தாக்குதலை தடுக்கும் நடவடிக்கை என்று கூறப்பட்ட
வகையில் இது ஒரு மிரட்டும் செயலாகத்தான் போயிற்று; அருகில் இருந்த கட்டிடங்களிலும் துப்பாக்கி வீரர்கள்
நிறுத்தப்பட்டிருந்தனர்.
எதிர்க்கட்சி அரசியல்வாதிகள், வழக்கறிஞர்கள், மனித உரிமைகள் ஆர்வலர்கள் மற்றும்
தொழிற்சங்கத்தினர் ஆகியோர் இராணுவ ஆட்சியை மீறியதற்காக காவலில் அல்லது சிறையில் வைக்கப்பட்டுள்ளனர் என்பது
பற்றிய எண்ணிக்கையை துல்லியமாகக் காண்பது மிகக் கடினம் ஆகும். செவ்வாய் ஊர்வலத்தில் சேரவிருந்த
PPP ஆதரவாளர்களை
கைது செய்யும் வகையில் புதிய அலை நடவடிக்கைக்கு முன்னதாக,
New York Times
திங்களன்று மேலைத் தூதர்கள் இந்த எண்ணிக்கை 2,500 ஆக இருக்கலாம் என்று
தெரிவித்ததாக எழுதியுள்ளது. நீதித்துறையில் இருந்து அரசாங்க விருப்பப்படி பலரும் வெளியே அனுப்பப்பட்டுவிட்டனர்.
பெரும்பாலான தனியார் தொலைக்காட்சி நிறுவனங்கள் இன்னும் ஒளிபரப்பை தொடங்கவில்லை; அவை மிகக் கடுமையான
முறையில் இருக்கும் தணிக்கை விதிகளுக்கு உட்பட மறுக்கின்றன; அந்த விதிகள் அரசாங்கத்தின் கருத்திற்கு மாறாக
ஒளிபரப்புவர்களை சிறையில் அடைப்பதாக அச்சுறுத்துகிறது.
கடந்த வார இறுதியில் அரசாங்கம் தேசத்துரோகத்தில் இருந்து "பொது மக்களிடையே
கலகத்தை தூண்டிவிடும் அறிக்கைகள்" கொடுப்பது வரையிலான குற்றச்சாட்டுக்களின் மீது சாதாரண குடிமக்கள் இராணுவ
நீதிமன்றங்களால் விசாரணைக்குட்படுத்தப்படுவர் என்று கூறியது.
முஷாரஃப் இராஜிநாமா செய்யவேண்டும் என்று பூட்டோ விடுத்த அழைப்பைத் தொடர்ந்து,
மேற்குலக ராஜீயத்தூதர்கள் லண்டன் Financial
Times இடம்,
PPP தலைவரும் முன்பு
இரு முறை பிரதம மந்திரியாக இருந்தவருமான பூட்டோ உண்மையில் முஷாரஃப், இராணுவம் ஆகியவற்றுடன்
உடன்பாட்டிற்கான முயற்சிகளை மூடிவிடவில்லை எனத் தாங்கள் நினைப்பதாக தெரிவித்துள்ளனர். பெயரிட விரும்பாத ஒரு
தூதர் கூறியதாவது: "இரு புறத்திலும் அமெரிக்கா கொண்டிருக்கும் செல்வாக்கின் தன்மையைப் பார்க்கும்போது, ஒரு முழு
உடைவு என்பது நடக்காது என்பதுதான் என்னுடைய கருத்து." இதற்கிடையில்
Washington Post
மற்றொரு பெயரிட விரும்பாத மேலைநாட்டு தூதர் "பூட்டோ பொது உறவுகளில்
மிகவும் நிபுணத்துவம் பெற்றவர். தனக்குக் கிடைக்க இருக்கும் பதவியை அவர் ஒன்றும் தூக்கி எறியமாட்டார்" என்று
கூறியதாகத் தெரிவித்துள்ளது.
ஆனால் முஷாரஃப்பும் அவருடைய இராணுவ ஆட்சியும் பூட்டோவின் தந்திர உத்திகளுக்கு விடையிறுக்கும்
வகையில் கூடுதலான சீற்றத்தையும் அச்சத்தையும்தான் வெளிப்படுத்தியுள்ளனர்.
NBC மற்றும்
New York Times இரண்டிற்கும் செவ்வாயன்று பேட்டியளித்த
முஷாரஃப் மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் செய்தி ஊடகத்திற்கு எதிராக சாடியதுடன், பூட்டோவும் எட்டு ஆண்டுகள்
புலம்பெயர்ந்து அக்டோபர் 18ல் பாக்கிஸ்தானுக்கு திரும்பி வந்ததில் இருந்து "எதிரெதிராய் நிற்கும்" நிலைப்பாட்டை
தொடர்கிறார் என்றும் குற்றம் சாட்டினார்.
வாஷிங்டனின் முன்னோக்கில் பாக்கிஸ்தானிய மக்கள் மற்றும் இராணுவத்திற்கும் இடையே
மோதல் என்ற தீய கனா போன்ற காட்சி ஏற்பட்டுவிடுமோ என்ற பெரும் கவலையில், வாஷிங்டன் நிர்வாகம் துணை வெளிவிவகார
அமைச்சர், நெக்ரோபோன்ட் இஸ்லாமாபாத்திற்கு இவ்வாரக் கடைசியில் செல்லுவார் என்று அறிவித்துள்ளது.
இஸ்லாமாபாத்தில் இராணுவ ஆட்சியைத் தக்கவைத்துக் கொள்ளுவதில் புஷ் நிர்வாகம் பெரும்
பரபரப்பை கொண்டுள்ளது; ஏனெனில் அமெரிக்காவின் ஆப்கானிஸ்தானிய ஆக்கிரமிப்பு-- ஆப்கானிஸ்தானில் அமெரிக்கப்
படைகள் பயன்படுத்தும் எண்ணெயில் பாதி மற்றும் பல முக்கிய தேவைகள் பாக்கிஸ்தான் மூலம்தான் அனுப்பப்படுகின்றன --
மற்றும் ஈரானுடன் ஒரு இராணுவ மோதலுக்கான பென்டகனின் தயாரிப்பு என்ற இரண்டிலும் இராணுவ ஆட்சி முக்கிய
பங்கைக் கொண்டுள்ளது.
வெளிவிவகார அமைச்சின் கருத்தின்படி, முஷாரஃப்பிடம் நெக்ரோபோன்ட் கொடுக்க
இருக்கும் தகவல் முந்தையவர் ஜனவரி தொடக்கத்தில் நடைபெற உள்ள தேர்தல்களுக்கு முன்பு அவர் இராணுவ ஆட்சியை
அகற்ற வேண்டும் என்பதாகும். அரசாங்கத்தை குறைகூறினால் மக்கள் சிறையிலடைக்கப்படுவர், செய்தி ஊடகம்
தணிக்கைக்கு உட்படும் நிலையில், அனைத்துக் கூட்டங்களும் அணிவகுப்புக்களும் தடைக்குட்படுத்தப்பட்டுள்ள சூழ்நிலையில்
நடத்தப்படும் தேர்தலை, "நியாயமானது, சுதந்திரமானது" என்று உலகின்முன் கூறுவது மிகக் கடினம் என்று புஷ்
நிர்வாகமே நினைக்கிறது போலும்.
செவ்வாய்க்கிழமை மாலை
New York Times
ல் வந்த கட்டுரை ஒன்று, பெயரிடப்படாத புஷ் நிர்வாக அதிகாரிகளுள் ஒருவர், "நிர்வாகம் பெருகிய முறையில் தளபதி
முஷாரஃப் மற்றும் திருமதி பூட்டோ பற்றி ஏமாற்றத்தை கொண்டுள்ளது என்றும் இரகசியமான முறையில் பாகிஸ்தான்
இராணுவத்திடம் அதன் உயர் அதிகாரிகள் முஷாரஃப்பிற்கு கொடுக்கும் ஆதரவைக் குறைத்துள்ளனரா என நோட்டம்
பார்க்கிறது" என்றும் கூறியுள்ளது.
"இது ஒன்றும் எதையும் செய்யத் தூண்டும் பிரச்சினை அல்ல. அனைத்துத் தரப்பினருடைய
கருத்துக்களைப் பற்றியும் நன்கு உணர்ந்துள்ளோம் என்ற முயற்சிதான் இது" என்று ஒரு மூத்த அதிகாரி கூறினார்.
வேறுவிதமாகக் கூறினால், புஷ் நிர்வாகம் தளபதிகளை மாற்றும் வாய்ப்புக்களை ஆராய்ந்து
கொண்டிருக்கிறது; இராணுவக் கட்டுப்பாட்டில் இருக்கும் அரசாங்கத்தை அச்சுறுத்தக் கூடிய வகையில் ஒரு மக்கள் எழுச்சி
வருவதைத் தடுக்கும் வகையில் முஷாரஃப்பையே அகற்ற முடியுமா என்றும் ஆராய்ந்து கொண்டிருக்கிறது.
ஈராக் ஒருபுறம் இருக்க, பாக்கிஸ்தானில் நடைபெறும் நிகழ்வுகள் ஏற்கனவே அமெரிக்க
ஏகாதிபத்தியத்தின் செல்வாக்கு அது பற்றியுள்ள இடங்களில் இருந்து பெருகிய முறையில் நழுவிக் கொண்டிருக்கிறது
என்பதைத்தான் நிரூபணம் செய்கின்றன. |