World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French students mobilise against university reform

பல்கலைக்கழக சீர்திருத்தத்திற்கு எதிராக பிரெஞ்சு மாணவர்கள் அணிதிரள்கின்றனர்

By Kumaran Rahul
12 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

நவம்பர் 8ம் தேதி, வியாழனன்று, பாரிஸ் பல்கலைக்கழகங்களில் இருந்து கிட்டத்தட்ட ஆயிரம் மாணவர்கள் LRU (Loi relative aux libertés et responsabilités des universités-- பல்கலைக் கழகத்தின் பொறுப்புக்கள் மற்றும் சுதந்திரம் தொடர்பான சட்டம், பல்கலைக் கழகங்களின் தன்னாட்சி பற்றிய சட்டம் என்று கூட அறியப்படுவதற்கு) க்கு எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் ஒரு ஆர்ப்பாட்டத்தில் பங்கு பெற்றனர்.

அவர்கள் இலத்தீன் வட்டார பகுதியில் இருக்கும் உயர்கல்வி அமைச்சரகத்திற்கு Place de la Bastille ல் இருந்து அணிவகுத்துச் சென்றனர். அவர்களின் பதாகைகள் "கல்வியை தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பு", "நாளை கல்வி என்பது 10 ஆண்டுகள் கடனில் மூழ்குதல் என்று பொருள்", "கலாச்சாரம் அதிக விலை உடையதாக இருக்கிறது. அது பற்றாக்குறையாக இருப்பது போல் அவ்வளவு விலையதிகம் இல்லை" போன்றவற்றை முழங்கின. உலக சோசலிச வலைத் தள ஆதரவாளர்கள் WSWS அறிக்கையான "பிரான்ஸ் : சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது" மற்றும் "French higher education law opens way for privatisation." என்ற கட்டுரைகளை துண்டுப் பிரசுரங்களாக வழங்கினர்.

அன்றே Rennes, Toulouse, Lille, Perpignan, Aix-en-provence, Caen, Nancy இன்னும் பல இடங்களிலும் பிரான்ஸ் முழுவதும் பல ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றன. பல எதிர்ப்பு அணிகளிலும், "உங்களை CPE யில் பற்றினோம்; Pécresse உங்களைப் பிடித்து விடுவோம்" (2006 ல் முதல் வேலை ஒப்பந்தம் மீதான இயக்கம் மற்றும் உயர்கல்வி மந்திரி Valérie Pécresse யைப் பற்றிய குறிப்புக்கள்), "Pécresse சட்டத்தை திரும்பப் பெறுக, மாணவர்-தொழிலாளர் ஒற்றுமை ஓங்குக", "Pécresse சட்டம், பல்கலைக்கழகத்திற்கு பெரும் துன்பம்" என்ற முழக்கங்கள் பதாகைகளில் இருந்தன.

நாடு முழுவதும் எதிர்ப்புக்களும், சாலைத் தடுப்புக்களும் பெருகி வருகின்றன. 84 பல்கலைக் கழகங்களில் 50க்கும் மேற்பட்டவை பெரும் கூட்டங்களை நடத்தியுள்ளன; இச்சட்டம் தள்ளுபடி செய்யப்பட வேண்டும் என்று கிட்டத்தட்ட 30 பல்கலைக் கழகங்கள் வாக்களித்துள்ளன.

பிரெஞ்சு பாராளுமன்றத்தால் ஆகஸ்ட் மாதம் ஏற்கப்பட்ட இச்சட்டம் பல்கலைக் கழகங்களுக்கு தங்கள் இருப்புக்கள், வரவு செலவுத் திட்டம், ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல், பாடத்திட்டங்களை வகுத்தல், வணிகங்களுடன் பங்காளித்தனத்தை தோற்றுவித்தல், தனியார் நிதிய நிறுவனங்களில் இருந்து கூடுதலான நிதியை பெறுதல் ஆகியவற்றிற்கு கூடுதலான தன்னாட்சியை கொடுக்கிறது. மேலும் பல்கலைக் கழக தலைவர்களுக்கு இது சிறப்பு அதிகாரங்களையும் வழங்குகிறது.

பாரிசில் நடந்த ஆர்ப்பாட்டங்கள், FSE (Fédération syndicale Etudiante), UEC (Union des Etudiants communistes), JC (Jeunesses communistes), LCR (Ligue Communiste Révolutionnaire) இன் இளைஞர் பிரிவு ஆகியவற்றை உள்ளடக்கிய CCAU- பல்கலைக் கழகங்களின் தன்னாட்சிக்கு எதிரான கூட்டால் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. UNEF (Union nationale des étudiants de France-- சோசலிஸ்ட் கட்சிக்கு நெருக்கமான முக்கிய மாணவர் சங்கம்) ல் இருந்து சில போராளிகளும் ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றனர். நிறைய பல்கலைக்கழக ஆசிரியர்களும் பங்கேற்றனர்.

உயர் கல்வி தனியார்மயமாக்கப்படுதல், தனியார் நிறுவனங்களின் ஆணைகள் செயல்படக்கூடிய ஆபத்துக்கள், கட்டண உயர்வு, சமூக சமத்துவமின்மை மோசமடைதல் ஆகியவை பற்றி ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்றவர்கள் எதிர்த்தனர். தனியார் நிறுவனங்களை பல்கலைக்கழக நிர்வாகக் குழுக்களில் இணைத்தல் மற்றும் பல்கலைக் கழகங்களுக்கு அவர்கள் நிதியுதவி அளித்தல் ஆகியவை வணிகத் தேவைகளை பூர்த்தி செய்யும் பாடத்திட்டங்களுக்குத்தான் நிதியம் அளிக்கப்படும் என்ற நிலையை ஏற்படுத்திவிடும் என்ற அச்சத்தை அவர்கள் தெரிவித்தனர். இதன் பொருள் இலக்கியம், வரலாறு, சமூகவியல் போன்றவற்றிற்கு நிதி கிடைக்காமற் போகலாம் என்றும் அப்பிரிவு படிப்புக்கள் நசுக்கப்படலாம் என்பதும் ஆகும்.

Liberation நவம்பர் 9ம் தேதி பதிப்பின்படி, "பல்கலைக் கழக தன்னாட்சி சட்ட வரைவு பற்றிய பேச்சுவார்த்தைகள் தொடங்கியிருந்த வசந்த காலத்திலேயே சில பல்கலைக்கழகங்களில் இயக்கம் தொடங்கி விட்டது. கோடை காலத்தில் அது முடிந்திருந்தது. அக்டோபர் 18 போக்குவரத்துத் துறை வேலைநிறுத்தத்துடன் மோசமாகியிருக்கும் சமூகச் சூழ்நிலை, இதற்கு ஒர் ஊக்கத்தை கொடுத்துள்ளது."

அரசாங்கம் மாணவர்கள் எதிர்ப்புக்கள், தடுப்புக்கள் ஆகியவை அடிப்படையில் தீவிர இடது அரசியல் இயக்கம் ஏற்பாடு செய்துள்ளது எனக் கண்டித்துள்ளது; அது மாணவர்களுடைய நலனைப் பாதிக்கும் வகையில் தன்னுடைய இலக்குகளை தொடர்கிறது என்றும் கூறியுள்ளது. பல்கலைக் கழக நிர்வாகங்கள் சார்க்கோசியின் நிலைப்பாட்டின் பின்தான் உள்ளனர். பல்கலைக் கழக தலைவர்கள் சங்கத்தின் முதல் துணைத்தலைவர், Jean-Pierre Finance இன் கருத்தின்படி, சிறு அளவிலான தீவிர இடது மாணவர்கள் "கல்விச் சாலைகளில் இருந்து வெளியே வந்து மாணவர்களை திரட்ட தற்பொழுதைய சமூக அழுத்தங்களைப் பயன்படுத்திக் கொள்கின்றனர். இத்தோடு அரசாங்கத்தின் சீர்திருத்தம் பற்றிய அறிவிப்புக்களுக்கும் தங்களுடைய அன்றாட வாழ்விற்கும் இடையே இருக்கும் பரந்த பிளவு தொடர்பான சீற்றத்தை காட்டும் மாணவர்களையும் கூட சேர்த்துக் கொள்ள வேண்டும்" என்று கூறினார்.

Valérie Pécresse நவம்பர் 7,8 தேதிகளில் மாணவர்களை விவாதங்களுக்காக சந்தித்தார். மாணவர்களிடம் இச்சட்டம் பேசித்தீர்த்து முடிவிற்கு வந்துவிட்டது என்றும் அதை மாற்றும் பிரச்சினைக்கு இடமில்லை என்றும் இவ்வம்மையார் அவர்களுக்கு நினைவுபடுத்தினார். தங்கும் இடம் பற்றிக் கூறுகையில் ஆளும் UMP பிரதிநிதி Laurent Hénart 2008 வரவு-செலவுத் திட்டத்தில் 11 மில்லியன் யூரோக்கள் இதற்காக ஒதுக்கப்பட வேண்டும் என்று கொண்டு வரும் தீர்மானத்திற்கு தான் ஆதரவு கொடுப்பதாகவும் இவர் கூறினார்.

நவம்பர் 7, புதனன்று, Pécresse உடன் கூட்டம் முடிந்தபின் UNEF இன் தலைவரும் சோசலிஸ்ட் கட்சியுடன் நெருக்கமான தொடர்பு உடையவருமான, Bruno Julliard கூடுதல் நிதித் திட்டம் "அணிதிரளலுக்கு கொடுக்கப்பட்டிருக்கும் தெளிவான சலுகை ஆகும்" என்று கூறினார். இந்த கூடுதல் நிதியம், "போதுமானது இல்லை என்றாலும்", "ஒரு நல்ல அடையாளம்" என்று அவர் செய்தி ஊடகத்திடம் கூறினார். "நான் பெற்ற முதல் படிப்பினை மாணவர்கள் திரண்டு ஆர்ப்பரிப்பது சரியானதே என்பதாகும். அவர்கள் ஏனைய சலுகைகளையும் பெற தொடர்ந்து, அணிதிரள வேண்டும் ."

இது UNEF நிலைப்பாட்டில் இருந்து குறிப்பிடத்தக்க மாற்றத்தை பிரதிநிதித்துவம் செய்கிறது. பாராளுமன்றத்தில் சட்டம் ஏற்கப்பட்டபோது, UNEF அதற்குத் தன்னை அனுசரித்துக் கொண்டது. அவர்கள் அதை எதிர்க்கவில்லை. "எல்லாவற்றிற்கும் மேலாக, சட்டத்தை இரத்துசெய்தல் அதனால் மட்டுமே அடையப்பட முடியாது, அது மாணவர்களை திரளச்செய்துவிடாது." என்று ஜூலியா கருத்துத் தெரிவித்தார். UNEF அரசாங்கத்தின் அதி உறுதித்தன்மையை கண்டித்துள்ளது; அது இயக்கம் தீவிரமயமாதலை தூண்டிவிடும் என்று அது அஞ்சுகிறது.

பல்கலைக்கழகங்களுக்கு கூடுதலான சுய ஆட்சி வழங்கல் என்பது மார்ச் 2000த்தில் லிஸ்பனில், ஐரோப்பிய ஒன்றியத்தால், "ஐரோப்பாவை 2010க்குள் மிகப் போட்டித் தன்மை நிறைந்த பெரும் அறிவுத் தள இயக்கம் கொண்ட பொருளாதாரமாக உலகில் மாற்றுவது" என்ற லிஸ்பன் மூலோபாயத்தின் ஒரு பகுதி ஆகும். அத்தகைய சீர்திருத்தம் ஐரோப்பிய ஒன்றியத்தின் முதலாளித்துவ வர்க்கத்திற்கு ஒரு இலக்காக பல ஆண்டுகளாக இருந்துவருகிறது; ஏற்கனவே பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளில் இது செயல்படுத்தப்பட்டு விட்டது.

பிரெஞ்சு வணிக வட்டங்களில் உள்ள முக்கிய கவலை, உலக அறிவார்ந்த தளத்தை கொண்ட பொருளாதாரத்தில் போட்டியிடுவதற்கு இத்தகைய சீர்திருத்தங்களை கொண்டுவருவதில் பிரான்ஸ் பின்தங்கி உள்ளது என்பதாகும். தன் போட்டியாளர்களுக்கு பின்தங்கிய நிலையில் உள்ள பிரெஞ்சு முதலாளித்துவத்திற்கு இத்தகைய சீர்திருத்தத்தை செய்வது மிக முக்கியமானது என்று அவர்கள் வாதிக்கின்றனர்.

தன்னுடைய கொள்கைகளுக்கு எதிராக அதிகரித்த வகையில் எதிர்ப்பு அலைகள் வந்துள்ள நிலையிலும், சார்க்கோசி தன்னுடைய சீர்திருத்த திட்டங்களை தொடரப்போவதாக வலியுறுத்தியுள்ளார். நவம்பர் 6ம் தேதி வாஷிங்டனில் French-American Business Council ல் இருந்த பெரு வணிக முதலாளிகளுக்கு அவர் கூறினார்: "கவலைப்படத் தேவையில்லை. பிரான்ஸ் கடந்த காலத்தில் மிக அதிகம் பின்தங்கி விட்டது; இன்னும் அதிகமாகப் பின்வாங்க பிரான்சினால் முடியாது."

மாணவர் எதிர்ப்புக்களுக்கு, சோசலிஸ்ட் கட்சி எந்த ஆதரவையும் கொடுக்கவில்லை; இதன் நிலைப்பாடு UNEF உடையதை போல்தான் உள்ளது. சட்டத்தின் கொள்கைக்கு இது ஆதரவு கொடுத்து, முற்றுகையிடல்கள் பற்றிய பெரும் பிளவுடைய பிரச்சினையின்மீது கவனத்தை ஒருமுகப்படுத்துகிறது. கன்சர்வேடிவ் நாளேடான Le Fegaro, நவம்பர் 9ம் தேதி பதிப்பில் MJS ச் (Mouvement des jeunes socialistes, சோசலிஸ்ட் கட்சியின் இளைஞர் பிரிவு) சேர்ந்த Antoine Détourné ஐ மேற்கோளிட்டு, "முற்றுகையிடல், இயக்கத்தை அதிகரிக்கச் செய்யும் ஒருவழிவகையாக இருக்கலாம்; ஆனால் இன்று பல்கலைக்கழகங்களை முற்றுகை இடுவதன் மூலம் மாணவர்களை நம்பவைக்க முடியுமென்பது தேவையற்றது" என்று எழுதியுள்ளது.

உண்மையில், முற்றுகையிடல்கள் போன்ற பெரும் நடவடிக்கைகள் --இதைப் பொறுத்தவரையில் அராஜக மற்றும் குட்டி முதலாளித்துவ தீவிரப்போக்கினரால் திணிக்கப்படும் ஓரு போலித்தனமான விட்டுக்கொடாத தன்மை -- பிரெஞ்சு மற்றும் ஐரோப்பிய முதலாளித்துவத்தினர் மாணவர்கள், தொழிலாளர்கள் ஆகியோரின் உரிமைகள் வாழ்க்கைத் தரங்கள் ஆகியவற்றிற்கு எதிராக நடத்தும் தாக்குதலை முறியடிப்பதற்கு தேவையான அரசியல் முன்னோக்குகள் மீதான உண்மையான விவாதத்திற்கு தீங்கு விளைவிப்பனவாக இருக்கின்றன.

தங்கள் சங்கங்களால் மாணவர்கள் அரசியலில் தயாரிப்பு இல்லாமலும், ஒதுக்கி வைக்கவும் படுகின்றனர். அனைத்து மாணவர்கள் சங்கங்கள் மற்றும் கம்யூனிஸ்ட் கட்சி, LCR, ஆகியவை முற்றுகையிடல்களுக்கு ஆதரவு கொடுத்து இயக்கத்தை LRU -வை இரத்துச்செய்தல் என்பதுடன் குறைத்துக் கொள்ளுகின்றன. "அனைத்துமே தெருக்களில் முடிவெடுக்கப்பட்டுவிடும்" ("C'est dans la rue que tout se joue") என்ற முழக்கத்தின் கீழ் அதன் ஒட்டுமொத்த வேலைத்திட்டத்தின் ஏதாவதொரு கூறுபாட்டை எதிர்ப்பின்றி விட்டுக் கொடுக்க அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க முடியும் என்ற கருத்துருவில் அரசியல் பிரசினைகள் புதைக்கப்பட்டுவிடுகின்றன.

கடந்த ஆண்டு தொழிற்சங்கங்கள் முதல் வேலை ஒப்பந்தம் (CPE) க்கு எதிரான போராட்டத்தை மூச்சுத்திணறவைத்து கட்டுப்படுத்தும் வகையில் செயல்பட்டன; அது பிரதம மந்திரி டொமினிக் டு வில்ப்பனுடன் நேரடி மோதலை கொண்டிருந்தது. அவை CPE என்ற ஒற்றைப் பிரச்சினையுடன் வரம்பைக் குறைத்துக் கொண்டு சமூக, ஜனநாயக உரிமைகள் அழிக்கப்படுவதற்கு அரசாங்கத்தால் மேற்கொள்ளப்படும் உந்துதலை எதிர்ப்பதை தவிர்த்தன. இவ்விதத்தில் அவை சார்க்கோசி தேர்ந்தெடுக்கப்படுவதற்கும் அவரது நிர்வாகத்தற்கும் மற்றும் தொழிலாளர்கள், இளைஞர்களுக்கு எதிராக அரசாங்கத்தின் தாக்குதல் தற்போது விரைவுபடுத்தலுக்கும் வழியமைத்துக் கொடுத்தன.