World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France: Immigration history museum opens without official inauguration

A sign of mounting opposition to Sarkozy's policies

பிரான்ஸ்: புலம்பெயர்ந்தோர் வரலாற்று அருங்காட்சியகம் உத்தியோகபூர்வ தொடக்கவிழா இன்றி திறக்கப்பட்டது

சார்கோசியின் கொள்கைகளுக்கு எதிர்ப்பு வலுத்து வருவதற்கான ஓர் அறிகுறி

By Ajay Prakash
5 November 2007

Use this version to print | Send this link by email | Email the author

புலம்பெயர்ந்தோர் வரலாற்று தேசிய மையம் (சிவீtங ஸீணீtவீஷீஸீணீறீமீ பீமீ றீலீவீstஷீவீக்ஷீமீ பீமீ றீவீனீனீவீரீக்ஷீணீtவீஷீஸீசிழிபிமி) அக்டோபர் 10ம் தேதி பொதுமக்களின் பார்வைக்கு திறக்கப்பட்டது. வலதுசாரி கோலிச அரசாங்கத்தின் ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசியால் இதற்கான எவ்வித உத்தியோகபூர்வ தொடக்க விழாவும் ஏற்பாடு செய்யப்படவில்லை.

எல்லாவற்றிற்கும் மேலாக, அரசாங்கத்தின் புலம்பெயர்ந்தோர் தொடர்பான கொள்கைகளுக்கு பெருமளவில் எதிர்ப்பு இருப்பதால், எவ்விதமான உத்தியோகபூர்வ தொடக்க விழாவும் அறிவிக்கப்பட்டால் தொழிலாளர்கள், மனித உரிமை குழுக்கள் மற்றும் புத்திஜீவிகளால் பொது ஆர்பாட்டங்கள் முன்னெடுக்கப்படலாம் என அரசாங்கம் அஞ்சியது. குறிப்பாக, தங்கள் குடும்பத்தினரை பிரான்சுக்கு அழைத்து வர விரும்பும் புலம்பெயர்ந்தோர் ஒரு மரபணு பரிசோதனையை செய்யவேண்டும் என்ற பிரெஞ்சு பாராளுமன்றத்தின் ஒப்புதலுக்காக இறுதி கட்டத்தில் இருக்கும் ஒரு பிரச்சனைக்குரிய குடிவரவு மசோதாவிற்கு அங்கு எதிர்ப்பு வலுத்து வருகிறது.

அரசாங்கம் புலம்பெயர்ந்தோர்க்கான சட்டங்களை மட்டும் கடுமையாக்கவில்லை; 2007ம் ஆண்டில் 25,000 நபர்களை நாட்டை விட்டு வெளியேற்றுவதற்கான அதன் இலக்கை எட்டும் வகையில், அது சட்ட விரோதமாக புலம்பெயர்ந்தோரை கண்டறிவதையும் தீவிரமாக்கி இருக்கிறது. கடுமையான சூழல் கட்டவிழ்த்துவிடப்பட்டுள்ளதால், புலம்பெயர்ந்தோர் பலர் போலீசிடம் இருந்து நம்பிக்கையற்றவிதத்தில் தப்பிக்க முயற்சித்து, தங்களின் வாழ்க்கையை இழந்திருக்கிறார்கள். அக்டோபர் 20ல், சுமார் 40 நகரங்களில் நடைபெற்ற ஆர்பாட்டங்களில் வதிப்பிட அனுமதிப்பத்திரமற்றவர்களுடன் இணைந்து பல்லாயிரக்கணக்கான மக்கள், இந்த புதிய குடிவரவு சட்டத்திற்கு எதிராக கலந்து கொண்டனர்.

புலம்பெயர்ந்தோர் வரலாற்று அருங்காட்சியகம் அமைப்பதற்கான திட்டம், லியோனல் ஜோஸ்பனின் பன்முக இடது அரசாங்கத்தின் ஆட்சியின் கீழ் ஆரம்பிக்கப்பட்டது. ஆனால், 2002 இல் நடந்த ஜனாதிபதி தேர்தலில் சோசலிஸ்ட் கட்சி வேட்பாளர் ஜோஸ்பனை தோற்கடித்து இனவாத, நவ-பாசிச தேசிய முன்னணி தலைவர் ஜோன் மரி லு பென் இரண்டாவது கட்ட வாக்களிப்பிற்கு தேர்ந்தெடுக்கப்பட்டபோது ஏற்பட்ட பாரிய அதிர்ச்சிக்கு பின்னர்தான் புலம்பெயர்ந்தோர் வரலாற்று தேசிய மையத்திற்கான குழு அமைக்கப்பட்டது.

சார்க்கோசியின் கட்சியான, UMP புலம்பெயர்ந்தோருக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்ற வாக்குறுதி மற்றும் அதன் தேசியவாத பிரச்சாரத்தின் மூலம் நவ-பாசிச வாக்காளரிடம் அழைப்புவிட்டதையிட்டு 2007ல் அதிகாரத்தை கைப்பற்றியது. அருங்காட்சியத்திற்கு ஓர் உத்தியோகபூர்வ தொடக்க விழா இருந்திருந்தால், அதன் தீவிர வலதுசாரி ஆதரவாளர்களால் ஏற்று கொள்ளப்படாமல் எதிர்ப்பை சந்தித்திருக்க கூடும்.

புலம்பெயர்ந்தோர் வரலாற்று தேசிய மையத்தின் செயல்கள் மற்றும் நோக்கத்தை தெளிவாக வரையறுக்கும் முயற்சியாக, அரசாங்கம் இரு போட்டி அமைப்புக்களை உருவாக்கி இருக்கிறது. அவையாவன: "புலம்பெயர்வு பற்றிய ஆய்வு பயிலகம்" மற்றும் 2008ல் ஆரம்பிக்க திட்டமிடப்பட்டுள்ள "அல்ஜீரியா யுத்தம் மற்றும் மொரோக்கோ, துனீசியா யுத்தங்களின் ஞாபகார்த்த அமைப்பு" ஆகியவையாகும். இந்த இரண்டாவது அமைப்பு பெப்ரவரி 2005-ம் ஆண்டு சட்டத்தில் குறிப்பிடப்பட்டு, அதுவும் "வெளிநாடுகளில் பிரான்சின் பிரசன்னத்தின் சாதகமான பங்கினை" பள்ளி பாடத்திட்டங்கள் அங்கீகரிக்க வேண்டும் என நிர்பந்தித்தது. இந்த முறைமை ஆசிரியர்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்களுக்கு எரிச்சலூட்டியதால், பின்னர் ஜனாதிபதி ஜாக் சிராக் சட்டத்தின் அந்த பிரிவை திரும்ப பெற்று கொள்ள வேண்டியதானது. எப்படியிருப்பினும் அமைப்பை உருவாக்குவதற்கான முன்மொழிவு சட்டமாக்கப்பட்டது.

புலம்பெயர்வு, ஒருங்கிணைவு, தேசிய அடையாளம் மற்றும் கூட்டு அபிவிருத்திகளுக்கான சார்கோசியின் அமைச்சர் Brice Hortefeux ஆல், புலம்பெயர்ந்தோர் வரலாற்று தேசிய மையம் பொதுமக்களுக்கு திறந்து விடப்பட்டதற்கு இரண்டு நாட்களுக்கு முன்னதாக புலம்பெயர்வு பற்றிய ஆய்வு பயிலகம் கடந்த அக்டோபர் 8ல் தொடங்கி வைக்கப்பட்டது. பிரெஞ்சு தினசரியான Libération இது தொடர்பாக குறிப்பிடுகையில், "குடிவரவு மற்றும் காலனித்துவம் தொடர்பான விடயங்களின் பணிவான ஆராய்ச்சியாளர்களுடன் வலதுசாரி சிந்தனையாளர்கள் கூடத்தினை உருவாக்க நிக்கோலா சார்க்கோசி முயற்சி செய்கிறாரா?" என்று கேள்வி எழுப்பி இருந்தது. (அக்டோபர் 2)

மேலும் அப்பத்திரிகை தொடர்கையில்: "சமூக புள்ளிவிபர ஆய்வுக்கான தேசிய பயிலகத்தின் ஒரு ஆய்வாளரான பட்ரிக் சைமனின் ஒத்துழைப்புடன் அந்த பயிலகம் அமைக்கப்படுவதற்கு எதிராக ஒரு சுற்றறிக்கை பரவி வருகிறது." என குறிப்பிட்டது. அந்த சுற்றறிக்கை குறிப்பிடுவதாவது: "அப்பயிலகத்திற்கான சுதந்திரம் எவ்விதத்திலும் உத்திரவாதமளிக்கப்படாத நிலையில், ஆராய்ச்சியை அரசியல் திசையமைவுகளுக்கேற்ப மாற்றுவதற்கான ஒரு புதிய கருவிதான் அந்த பயிலகம், அது தீர்மானிக்கும் பொருத்தமான பகுதிகளையும், தலைப்புகளையும் முன்னிறுத்தி அறிவியல் பணிகள் மேற்கொள்ளப்படும்." என தெரிவிக்கிறது.

இந்த அமைப்பின் தலைவராக வரலாற்றாளர் Hélène Carrère d'Encausse இருப்பார் என்பதால், இது குறித்தும் அந்த அறிக்கை மேலும் கவலை தெரிவித்தது. இந்த பெண்மணி தொழிலாள வர்க்கத்தின் வீட்டு குடியிருப்புகளை பல ஆண்டுகளாக அரசாங்கம் புறக்கணித்ததால் 2005ம் ஆண்டின் இலையுதிர்காலத்தில் நகர்புற இளைஞர்களின் கிளர்ச்சியை, ஒரு சிறுபான்மை ஆபிரிக்க குடியேற்றவாசிகளிடம் காணப்படும் பலதார திருமணத்துடன் ஒன்றிணைத்து தெரிவித்த இனவாத அறிக்கைகள் ஒரு பெரும் அதிர்வை ஏற்படுத்தின. (பார்க்க: "பிரான்ஸ்: அவசரகால நிலைமையை நியாயப்படுத்துவதற்கு கோலிச அதிகாரிகள் இனவெறியை தூண்டிவிடுகின்றனர்")

முன்மொழியப்பட்ட இந்த அமைப்பிற்கு விஞ்ஞானிகள் வட்டாரத்திலும் பரவலாக எதிர்ப்பு இருக்கிறது. சைமன் விவரிக்கையில், "நாங்கள் பொதுவாக சரியான விதத்தில் எடுத்து கொள்ளவே ஆதரவு தெரிவித்து வருகிறோம். ஆனால் குடிவரவு, ஒருங்கிணைவு, நினைவுச்சின்னம், காலனித்துவத்தின் வரலாறு ஆகியவைகளின் மீதான கேள்விகளில் அரசாங்கம் குறிப்பாக ஆராய்வதில் தீவிரமாக உள்ளது. அரசாங்கத்திற்கு கிடைக்கும் ஆராய்ச்சி அறிக்கைகளின் அடிப்படையில் முடிவுகள் அமைகிறது, ஆனால் இந்த ஆராய்ச்சி அறிக்கைகள் விஞ்ஞான சமூகத்தால் அளிக்கப்பட்டதாக இருக்க வேண்டும் என்பது அவசியமாகும்." என்று தெரிவித்தார். மேலும் அவர் ஒரு உதாரணத்திற்கு குறிப்பிடுகையில், அரசாங்கம் குடிவரவு மீதான புள்ளிவிபரங்களை பட்டியலிடுகையில், இது பிற நாடுகளை விட பிரான்ஸ் பெருமளவில் புலம்பெயர்ந்தோரை அனுமதிக்கிறது என்பதை காட்டியது, ஆனால் இதில் ஆய்வாளர்கள் மத்தியில் கருத்து வேறுபாடு இருந்தது என்று குறிப்பிடுகிறார்.

சமூக அறிவியல்களின் நவீன ஆய்வுகளுக்கான பள்ளியின் (School for Advanced Studies in the Social Sciences) ஆய்வு இயக்குனர் Gérard Noiriel மற்றும் பாரீஸ் 1 பல்கலைக்கழகத்தில் உள்ள 20ம் நூற்றாண்டு சமூக வரலாற்று மையத்தின் ஆய்வு இயக்குனர் Patrick Weil ஆகியோர் புலம்பெயர்வு வரலாற்று தேசிய மையத்தின் 12 உறுப்பினர் வரலாற்று குழுவில் உள்ள எட்டு பேரில் அடங்குவர். இவர்கள் ஜனாதிபதி சார்க்கோசியால் உருவாக்கப்பட்ட குடிவரவு, ஒருங்கிணைவு, தேசிய அடையாளம் மற்றும் கூட்டு அபிவிருத்தி அமைச்சகத்தை எதிர்த்து இவ்வாண்டு மே 18ல் தமது பதவியை இராஜினாமா செய்தனர். இவர்கள் இந்தக் குழுவில் 2003ல் இருந்து பணியாற்றி வந்தனர்.

"குடிவரவு மற்றும் தேசிய அடையாள '' அமைச்சு தேவையல்ல" என்ற தலைப்பிலான ஒரு சர்வதேச சுற்றறிக்கையை இவர்கள் வெளியிட்டார்கள். உலகளவிலுள்ள பல்கலைக்கழகங்களில் இருந்து சுமார் 16,000 இற்கும் மேலான வரலாற்றாளர்கள், கல்வியாளர்கள் மற்றும் கலைஞர்களால் இந்த அறிக்கை கையொப்பமிடப்பட்டு இருந்தது.

நவீன சமூகத்தின் முன்னோக்கை மாற்றுவதற்கு குடியேற்றமல்ல மாறாக கடந்த இரண்டு நூற்றாண்டின் தொடர்ச்சியான குடிவரவு காலகட்டங்கள், பிரான்சின் மொத்த அபிவிருத்தி, பரிமாற்றம் மற்றும் நலன்களுக்கு உதவி இருக்கும் நிலையில், புலம்பெயர்ந்த நமது சமகாலத்தவர்களுக்கு ஞாபகப்படுத்துவதே இந்த மையத்தின் நோக்கமாகும். வரலாற்று மாற்றங்களையும், தனிநபர் மாற்றங்களையும் மற்றும் பிரான்சின் ஒட்டுமொத்த நினைவுகளையும் புரிந்து கொண்டு ஏற்று கொள்வதன் மூலமும், பெருமைப்படக் கூடிய மற்றும் வெட்கப்படக் கூடிய இருதரப்பு நிகழ்வுகள் உட்பட ஒவ்வொருவரின் வரலாற்றையும் ஒருங்கிணைத்து கொள்வது, திரும்பதிரும்ப கூறப்படும் மற்றும் முன்கூட்டியே உள்ள கருத்துக்களை தாண்டிவர உதவும்." என அவர்கள் தங்கள் இராஜினாமா கடிதத்தில் விளக்கி இருந்தனர்.

Hortefeux இன் புதிய அமைச்சகம் இந்த நோக்கங்களை கேள்விக்குரியனவாக குறிப்பிடுவது ஏனென்றால், "அரசியலில், வார்த்தைகள் அடையாளங்களாக விளங்குகின்றன, மேலும் அவை ஆயுதங்களாகவும் திகழ்கின்றன. 'அடையாளத்தை' வரையறுப்பது ஒரு ஜனநாயக நாட்டின் பொறுப்பு அல்ல. பொது அமைச்சகம் ஒன்றின் கீழ் 'குடிவரவு' மற்றும் 'தேசிய அடையாளங்களை' இணைப்பது என்பது பிரெஞ்சு குடியரசின் வரலாற்றில் முன்னொருபோதும் இருக்கவில்லை: குடிவரவை பிரான்சுக்கு ஒரு 'பிரச்சனையாக' வரையறுப்பதும், பிரான்சுக்கு அது முக்கியமானது என குறிப்பிடுவதும் ஒரு புதிய ஜனாதிபதி முறையை உருவாக்குவதற்கான ஒரு நடவடிக்கையாகும்" என்று அவர்கள் தெரிவித்தனர்.

மேலும் அந்த வரலாற்றாளர்கள் கூறுகையில், "இந்த பிரச்சனைகளை தொடர்புபடுத்துவதாவது, குடிவரவையும் குறிப்பாக நெருக்கடியான காலங்களில் வெளிநாட்டவர் தொடர்பாக நம்பிக்கையின்மையையும் வெறுப்பையும் அடித்தளமாக கொண்ட ஒரு தேசியவாதத்தின் வரலாற்று மரபியலையும் குற்றம்சாட்டுவதையும் கொண்ட ஒரு பரந்த அதிருப்தியை ஒன்றிணைக்கின்றது" என்று தெரிவித்தனர். (பார்க்க http://www.upolin.org)

புலம்பெயர்வு வரலாற்று தேசிய மையம் குறித்து Patrick Weil கூறுகையில்: "அது அனைத்து பிரெஞ்சு மக்களுக்கான வரலாற்று நலன்களாகும், அடிப்படையில் ...நான் என்ன நினைக்கிறேன் என்றால்... குடிவரவு மற்றும் தேசிய அடையாளத்திற்கான அமைச்சகம் என்பது குடிவரவு சார்ந்த அவநம்பிக்கையின் அடையாளமாக இருக்கும் நிலையில், பிரான்சின் சார்பில் புலம்பெயர்விற்கான பங்களிப்பை இந்த அருங்காட்சியகம் காட்டுகிறது.... தவறான முற்கருத்துக்களின் அடிப்படையில் அல்லாமல் வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் இந்த வரலாற்று திட்டம் அமைந்திருப்பதால், அரசாங்கம் இதை அசெளகரியமாக உணர்கிறது." என்று தெரிவித்தார்.

பிரான்சில் இந்த அளவிற்கு புலம்பெயர்வு பற்றி ஏன் பேரார்வத்துடன் விவாதிக்கப்படுகிறது மற்றும் ஏன் பெரியளவில் அரசியலாக்கப்பட்டுள்ளது? என l'Express இதழ் Gérard Noiriel இடம் கேள்வி எழுப்பிய போது, அவர் கூறியதாவது: "அதுவொரு பெரிய வரலாறு. 1880 களில் இந்த வார்த்தை தோன்றியதில் இருந்து, குடிவரவு ஒரு பிரச்சனையாக இருந்து வருகிறது. தற்போது, அமெரிக்காவை போன்று நமது நாடும் பெருமளவில் புலம்பெயர்ந்தோருக்கு இடமளித்துள்ளது. இதனால், இது போன்ற ஒரு அருங்காட்சியகம் திறப்பது என்பது இங்கு மிகவும் சிக்கலானது அல்ல" என்று தெரிவித்தார்.

மறைக்கப்பட்ட வரலாறு

இந்த அருங்காட்சியகம், மறைக்கப்பட்ட குடிவரவு வரலாற்றை மற்றும் பிரெஞ்சு சமூகத்திற்கான அதன் பங்களிப்பை வெளிக்கொணர்கிறது. கடந்த 200 ஆண்டுகளாக பிரான்ஸ் அதிகளவிலான புலம்பெயர்ந்தோரை ஏற்றுக் கொண்டிருக்கிறது, முதன்மையாக புலம்பெயர்ந்தோர் முதன்முதலில் ஐரோப்பிய நாடுகளில் இருந்து வந்தனர். தொழிலாளர்களின் தேவை இருந்த நாடுகளில் புலம்பெயர்வு அதிகரிக்க தொழிற்புரட்சியும் பெரும் பங்கு வகித்தது.

பிரெஞ்சு காலனிகளில் இருந்து பெருமளவிலான ஆண்கள் முதலாம் மற்றும் இரண்டாம் உலக யுத்தத்தில் பங்கேற்றதுடன், யுத்த நடவடிக்கைகளில் உயிர் இழந்தனர். முதலாம் உலக யுத்தத்தில் 400,000 இற்கும் மேற்பட்ட புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் அணிதிரட்டியது. பணி அனுமதிப்பத்திரம் அவர்களுக்கு கட்டாயமாக்கப்பட்டதுடன், அது சுதந்திரமான நடமாட்டத்தையும் ஒரு முடிவுக்கும் கொண்டு வந்தது. அந்த காலத்தில், அரசாங்கம் பெருபான்மையான புலம்பெயர்ந்தோரை பிரெஞ்சு மக்களிடம் இருந்து பிரித்து முகாம்களில் தங்க வைத்தது.

முதலாம் உலக யுத்தத்தில் பிரான்ஸ் சுமார் 1.4 மில்லியன் இளைஞர்களை பறி கொடுத்ததால், நாட்டை புனரமைக்க கூடுதல் தொழிலாளர்களின் தேவை ஏற்பட்டது. 1921ல் பிரான்சில் புலம்பெயர்ந்தோர் எண்ணிக்கை 1.5 மில்லியனாக உயர்ந்தது, பின் 1926ல் 2.4 மில்லியனாக அதிகரித்தது, இதுவே 1931ல் சுமார் 3 மில்லியனை எட்டியது. 1930 களில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடிகளின் போது, அரசாங்கம் புலம்பெயர்ந்தோரை அவர் தம் தாய்நாட்டிற்கு அனுப்ப தயங்கவில்லை மற்றும் அவர்களை பாதுகாப்பு தடுப்புமுகாம்களிலும் தங்க வைத்தது.

இரண்டாம் உலக யுத்தத்தின் போது, நாஜி ஆக்கிரமிப்பாளர்களுடன் கூட்டிணைந்திருந்த விச்சி அரசாங்கம், நாஜி கொலை முகாம்களுக்கு யூதர்களை கொண்டுசெல்வதற்கு உதவ முன்வந்தது. அது புலம்பெயர்ந்தோரை அடக்கி ஒடுக்கியதுடன், வெளிநாட்டவர் விரோதத்தையும் ஊக்குவித்தது.

யுத்தத்திற்கு பின்னர், பிரெஞ்சு அரசாங்கம் நாட்டை புனரமைக்க காலனிகளில் இருந்து குடியேற அதன் கதவைத் திறந்துவிட்டது. புலம்பெயர்ந்தோர் கொடுமையான பாகுபாட்டை இதற்கு விலையாக ஏற்றனர்: அதாவது குறைவான கூலி மற்றும் வறுமை வாழ்வை ஏற்றனர். அரசாங்க வீடமைப்புகளை அமைக்கும் வரை, அவர்களில் பெரும்பான்மையானவர்கள் முகாம்களிலும், கொட்டகைகளிலும் வாழ்ந்தனர்.

1970 களின் ஆரம்பத்தில் இருந்து தற்போதுவரை, வேலைவாய்ப்பின்மை அதிகரிப்பு, அதே போன்று புலம்பெயர்ந்தோருக்கு எதிரான பிரச்சாரம் போன்றவற்றில் முதன்மையாக புலம்பெயர்ந்தோர் மீதே எப்போதும் குற்றஞ்சாட்டப்படுகிறது.

பிரெஞ்சு கல்வித்திட்டம் புலம்பெயர்ந்தோர் வரலாற்றை மறைப்பதில் மிகுந்த கவனம் செலுத்தும் நிலையில், பிரான்சில் புலம்பெயர்ந்தோர் பங்களிப்பை புரிந்து கொள்ளவும், ஆராய்வதற்குமான சாத்தியக்கூறுகளை புலம்பெயர்ந்தோர் வரலாற்று அருங்காட்சியகம் வழங்குகிறது மற்றும் வெளிநாட்டவர் விரோதத்தையும் மற்றும் இனவாதத்தை எதிர்க்கவும் இது உதவுகிறது.

தேசிய புள்ளிவிபர பயிலகமான INSEE (Institut national de la statistique et des études économiques) இன் 2006ம் ஆண்டு புள்ளிவிபரப்படி, பிரான்சின் மொத்த மக்கள்தொகையில் 8 சதவீதத்தினர், அதாவது சுமார் 4.9 மில்லியன் அன்னிய நாட்டில் பிறந்த புலம்பெயர்ந்தோரை பிரான்ஸ் கொண்டிருக்கிறது.

அரசாங்க குடிவரவு கொள்கை மற்றும் ''இடதுசாரிகளின்'' உடந்தை

2007ம் ஆண்டு தேர்தல் பிரசாரத்தில், சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் ஜனாதிபதி பதவிக்கான வேட்பாளர் செகோலென் ரோயால், சார்க்கோசியின் மற்றைய விடயங்களை போன்று குடிவரவு தொடர்பான திட்டத்தில் இருந்தும் ஒரு மேம்போக்காக வேறுபட்ட ஒரு வலதுசாரி திட்டத்தை கையாண்டனர். பாரிசின் சோசலிச கட்சி மேயர் Bertrand Delanoë, அருங்காட்சியகத்தின் உத்தியோகபூர்வமற்ற தொடக்க விழாவில் பேசுகையில் பின்வருமாறு குறிப்பிட்டு அரசாங்கத்தை சாடினார்: "இந்த அருங்காட்சியகம் பொதுவான எதிர்காலம் மற்றும் பகிர்ந்து கொண்ட வரலாறு ஆகிய இரண்டையும் வெளிகாட்டுவதாக உள்ளது; அரசாங்க கொள்கை பிரான்சை பிரிவுபடுத்துவதுடன், வெளிநாட்டினரை நமது பலியாடுகளாக மாற்ற கவர்ச்சியூட்டுகிறது" என்றார். மேலும், உண்மையில் அவர் குடிவரவை இல்லாதொழிக்கும் கொள்கைகளுக்கு அழைப்புவிட்ட சோசலிஸ்ட் கட்சி தேர்தல் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்ததன் மத்தியில் இதனை அவர் தெரிவித்தார்.

RESF (Réseau éducation sans frontières) மற்றும் UCIJ (Unis contre l'immigration jetable) போன்ற அமைப்புகளின் ஆதரவுடன் நடத்தப்பட்ட குடிவரவு மீதான அடக்குமுறைகளுக்கு எதிரான மாபெரும் போராட்டம், புலம்பெயர்ந்தோர் தொடர்பாக மக்கள் மத்தியில் இருக்கும் உண்மையான ஒற்றுமையை உணர்த்துகிறது. எவ்வாறிருப்பினும், அரசாங்கம் அதன் இனவாத மற்றும் குடிவரவு எதிர்ப்பு கொள்கைகளை இலகுவாக்க நெருக்கடி அளிக்கலாம் என்ற நப்பாசைகளை உருவாக்கிய அந்த "இடதுசாரிகளின்" சூழ்ச்சியால் இந்த போராட்டம் கைவிடப்பட்டது.

கம்யூனிஸ்ட் கட்சி, LCR, LO மற்றும் சோசலிஸ்ட் கட்சி ஆகியவற்றை சேர்ந்த இந்த சக்திகள், குடிவரவு கட்டுப்பாடு தொடர்பாக இடது மற்றும் வலதுசாரிகளிடம் இருக்கும் ஒற்றுமையையும் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் எல்லைப்படை அமைப்பின் மூலம் புலம்பெயர்ந்தோருக்கு எதிராக ஐரோப்பாவின் எல்லையை இராணுவமயமாக்கலையும் அம்பலப்படுத்த இவை மறுத்தன.

உலக சோசலிச வலைத் தளத்தின் அறிக்கை குறிப்பிட்டதாவது: "சார்க்கோசியின் தீவிர வலதுசாரி போன்ற ஆட்சி எழுச்சி பெற்றுள்ளது ஆளும் அரசியல் வாதிகளின் தனிப்பட்ட இழிவினோதங்களின் விளைவு என்று வெறுமனே விளக்கப்பட முடியாதது ஆகும். இது, உலக முதலாளித்துவம் மகத்தான மாறுதல்களை கொண்டுள்ளதற்கு --வளரும் நாடுகளில் குறைவூதிய உற்பத்தி ஆலைகள் வெளிவந்துள்ளது, ஈராக், ஆப்கானிஸ்தான், இன்னும் பரந்த அளவில் மத்திய கிழக்கு ஆகியவற்றில் அமெரிக்க ஏகாதிபத்தியம் எதிர்கொண்டுள்ள சங்கடம் ஆகியவற்றுக்கு- பிரெஞ்சு முதலாளித்துவ வர்க்கத்தின் கூட்டு விடையிறுப்பாகும். (பார்க்க "பிரான்ஸ்: சார்க்கோசிக்கு எதிரான போராட்டத்திற்கு ஒரு புதிய அரசியல் முன்னோக்கு தேவைப்படுகிறது")

புலம்பெயர்ந்தோர்க்கான வரலாற்று தேசிய அருங்காட்சியத்தை வடிவமைத்த மற்றும் ஏற்படுத்திய மக்களை மனிதபண்பு கொள்கைகள் ஊக்கப்படுத்துகின்றன. பன்னாட்டு பெருநிறுவன நலன்களின் அடிப்படையில் புலம்பெயர்வு சார்ந்த யுத்தங்கள் மற்றும் ஆக்கிரமிப்புகளுக்கு வழிவகுக்கும் சர்வதேச முதலாளித்துவ போட்டியை மற்றும் தேசிய அரசு என்ற முறையை முடிவுக்கு கொண்டு வருவதில் சார்கோசியின் கொடுமையான குடிவரவு கொள்கைகள் மேலோங்கி இருக்கும் என்பதால் அவர்கள் எதிர்க்கின்றனர். மேலும் இந்த பன்னாட்டு பெருநிறுவன நலன்கள், தொழிலாளர்கள் மற்றும் சமூகங்கள் ஒன்றையொன்று எதிராக நிறுத்தும்வகையில் தேசிய, இன மற்றும் மத பிளவுகளில் சார்ந்திருக்கின்றன.