:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
Broader issues facing US film and
television writers
அமெரிக்கத் திரைப்பட மற்றும் தொலைக் காட்சி எழுத்தாளர்களை எதிர்கொண்டிருக்கும்
பரந்த பிரச்சினைகள்
By the Editorial Board
2 November 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
Writers Guild of America (WGA)
மற்றும் Alliance of Motion Pictures and
Television Producers (AMPTP) இரண்டு அமைப்புக்களின்
சார்பாக பேச்சுவார்த்தைகளை நடத்தியவர்கள் அவற்றின் மூன்று ஆண்டு கால ஒப்பந்தம் முடிவதற்கு ஆறு மணி
நேரம் முன்னதாகவே பேச்சுக்களை முறித்துக் கொண்டனர். ஒரு கூட்டாட்சி மத்தியஸ்தர் இருந்தபோதிலும், இரு
தரப்பும் DVD
ஆக இன்னும் எஞ்சிய பயன்படுத்தலில் பகிர்வு, மற்றும் திரைப்பட, தொலைக்காட்சிகள் இணையதளத்திற்கு மாற்றப்படும்போது
கிடைக்கும் கட்டணங்களில் பகிர்வு என்ற முக்கிய பிரச்சினைகளில் தொடர்ந்து மாறுபட்டு இருக்கின்றனர் எழுத்தாளர்கள்
DVD
விற்பனையில் 22 ஆண்டுகளுக்கு முன்பு ஏற்கப்பட்டிருந்த ஒப்பந்த அடிப்படையில் ஒரு அற்பமான தொகையைத்தான் பெறுகின்றனர்.
பலபில்லியன் டாலர் நிறுவனங்களை பிரதிநிதித்துவம் செய்யும்
AMPTP, இந்தப்
பிரச்சினைகளிலும் சிறிதும் விட்டுக் கொடுக்கத் தயாராக இல்லை. அதன் செய்தித் தொடர்பாளர் நிக் கெளண்டர்
தொழிற்சங்கத்திற்கு விடுத்த ஒரு அறிவிப்பில், "நாங்கள் ஒர் உடன்பாடு காண விரும்புகிறோம்... ஆனால்
நம்மிடையே இருக்கும் இடைவெளியை இட்டு நிரப்ப உங்கள்
DVD பற்றிய
திட்டம் விவாதத்திற்கு இருக்கும் வரையில், கூடுதல் நடவடிக்கை சாத்தியமில்லை" என்று தெரிவித்து விட்டார்.
WGA, எழுத்தாளர்கள்
DVD க்களின் விற்பனை
மற்றும் இணையதளத்தின் மூலம் அல்லது டிஜிட்டல் வழியில் (குறிப்பாக விளம்பரத்துடன் கொடுக்கப்பட்டால்)
அனுப்பப்படும் நிகழ்வுகளுக்கான ஊதியங்களின் எச்சங்களும் இரு மடங்காக அதிகாரிக்கப்பட வேண்டும் என்று
கோரியுள்ளது. கடந்த ஜூலையில் இருந்து தயாரிப்பாளர்கள்
DVD எஞ்சிய
தொகையை அதிகரிப்பது பற்றிய கருத்தைக் கேட்க மறுப்பதுடன், எழுத்தாளர்கள் இந்தச் சலுகைகளை முற்றிலும் கைவிட்டுவிட
வேண்டும் என்றும் கேட்டனர். பின்னர் அந்தக் கோரிக்கையை அவர்கள் அக்டோபர் 16ல் கைவிட்டனர்.
ஆனால் அக்டோபர் 26ம் தேதி தயாரிப்பாளர்கள், ஓய்வூதியத்திலும் சுகாதார
நிதிகளிலும் திரும்பப்பெறல் வேண்டும் என்ற ஒரு புதிய கோரிக்கையுடன் வந்தனர். இவை இரண்டாம் நிலையானதாக
இருந்தால், விவாதத்தில் அவையும் முக்கியமானவையாகும்.
கெளண்டரின் அறிக்கைக்கு புதனன்று தொழிற்சங்கம் விடையிறுத்தது: "எழுத்தாளர்களை
பொறுத்த ஒவ்வொரு பிரச்சினையும், இணையதள மறுபயன்பாடு உட்பட, புதிய ஊடகத்திற்கு எழுதுதல்,
DVD க்கள்,
அதிகார வரம்பு ஆகியவை [AMPTP]
யினால் அசட்டை செய்யப்பட்டுள்ளது. இது முற்றிலும் ஏற்கத் தக்கது அல்ல."
வியாழனன்று மாலையில் லொஸ் ஏஞ்சல்ஸில் எழுத்தாளர்கள் தங்கள் விருப்பங்களை
ஆராயக் கூடுகின்றனர் வெள்ளிக்கிழமை வெளிநடப்பு ஏற்படக்கூடும் என்பது அநேகமாக பார்க்கக் கூடியதாக
இருக்கிறது.
கடந்த வாரம் இரு கடலோரப்பகுதிகளில் இருந்தும் எழுத்தாளர்கள்
தொழிற்சங்கத்திற்கு வேலைநிறுத்த இசைவை பெரும்பான்மையான வாக்குகளில் கொடுத்தனர். எழுத்தாளர்கள்
வேலைநிறுத்தம் செய்ய முடிவெடுத்தால், 1988ல் ஐந்து மாத கால வேலைநிறுத்த மறியல்களை தொடர்ந்து இது
முதல்தடவையாக இருக்கும்; அப்பொழுது தொலைக்காட்சி இணையங்கள் உட்பட ஸ்டூடியோக்கள் கிட்டத்தட்ட 500
மில்லியன் டாலர்கள் இழப்பிற்கு உள்ளாயின.
தொலைக்காட்சிக்கான தயாரிப்புக்கள் ஒரு எழுத்தாளர்களின் வேலைநிறுத்தத்தால்
உடனடியாகப் பெரிதும் பாதிப்பிற்கு உட்படும். அக்டோபர் 31 ஒப்பந்தம் முடிவடைவதற்கு முன்பு கதைகளை
முடிப்பதற்கு பெரும் பரபரப்பு காணப்பட்டது. அவை இன்னமும் படமாக்கப்படலாம். ஆனால் ஒரு நீடித்த
வேலைநிறுத்தம் என்பது பெரும்பாலான தொலைக்காட்சி நிகழ்ச்சிகள், குறிப்பாக தொடர் கதைகள், தொடர
முடியாது என்ற நிலையை ஏற்படுத்திவிடும்.
வாஷிங்டன், சேக்ரமென்டோ மற்றும் அமெரிக்க அரசியல், செய்தி ஊடக
நடைமுறையின் ஒவ்வொரு பிரிவுடனும் நன்கு தொடர்புகளைக் கொண்டுள்ள மிகப் பெரிய நிறுவனங்களுக்கு எதிராக
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்கள் கடுமையான போராட்டத்தை எதிர்கொண்டுள்ளனர்.
AMPTP யில் இருக்கும் முக்கிய பெயர்கள்
Warner Brothers Entertainment
தலைவர் Barry Meyer, CBS
நிறுவனத்தின் CEO, Leslie Moonves, New
Corp. தலைவரான
Peter Chermin
மற்றும் டிஸ்னியில் தலைமை நிர்வாகி Robert Iger
ஆகியோரை அடக்கியுள்ளன. இந்த தனிநபர்கள் ஒவ்வொரு ஆண்டும் எத்தனை மில்லியன் டாலர்களை
சம்பாதிக்கின்றனர்? அவர்கள் எத்தனை பெரிய அரசியல் செல்வாக்கை கொண்டுள்ளனர்?
எழுத்தாளர்கள் இந்தப் பூசலில் தங்கள் கண்களை அகல விரித்துத்துக் கொண்டு,
பெரிய உட்பொருள்களையும் நன்கு ஆராய வேண்டும்.
எழுத்தாளர்கள் மற்றும் பிற திரையுலகக் கலைஞர்கள்
DVD விற்பனை
மற்றும் புதிய டிஜிட்டல் ஊடகத்தில் பெறப்படும் வருமானத்தில் அதிக பங்கைக் கோருவது முற்றிலும்
நெறியானதுதான். உண்மையில் இந்தப் போராட்டத்தை இறுதிவரை
WGA தலைமை
தொடரும் என்று நம்புவதற்கான காரணமும் இல்லை. ஏற்கெனவே தொழிற்சங்கத் தலைமை
AMPTP யிடம் "DVD
க்கள், புதிய செய்தி ஊடகம், அதிகார வரம்புப் பிரச்சினைகள் பற்றிய இயக்கங்களை கொண்டிருத்தல் உட்பட "
அதன் புதிய முன்மொழிவுகள் விவாதத்தில் இருந்து ஒன்பது திட்டங்களை எடுத்துவிட்டோம்" என்று அறிவித்துள்ளது.
ஒரு வெற்றிகரமான போராட்டத்திற்கு மிக அதிகமான முறையில் எழுத்தாளர்கள்,
இயக்குனர்கள், நடிகர்கள், தொழில்நுட்ப ஊழியர்கள், திரைத் தொழிலில் மற்றவர்கள் ஆகியோரின் அணிதிரளல்
தேவைப்படும். அதற்கும் மேலாக இதற்கு திரைத் தொழிலில் முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பும், சோசலிச நனவை
புதுப்பித்தலும் தேவையாகும். இத்தொழில்துறையில் வேலைசெய்பவர்கள் பொதுவாக பரந்துபட்ட நன்மையின்
சாத்தியத்திலிருந்து திரைப்படம், தொலைக்காட்சி மற்றும் கலாச்சாரத்தை எண்ணிப்பார்ப்பது தேவையாக
இருக்கிறது.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி படப்பிடிப்புநிலையங்ககளின் பிடிவாதத் தன்மை,
தங்களுடைய மகத்தான இலாபங்களில் ஒரு சென்ட் கூட பிறருக்கு விட்டுக் கொடுக்க மறுக்கும் நிலை இன்னும் ஆழ்ந்த
பிரச்சினையைத்தான் சுட்டிக் காட்டுகிறது: சக்திவாய்ந்த பொழுதுபோக்கு, தகவல் கொடுக்கும் துறையை தனியார்
உடைமை தன்னுடையதாக்கிக் கொண்டிருக்கும் முறை அடிப்படையில் திரைப்படம் மற்றும் ஊடகத் தொழிலாளர்களின்
உடனடித் தேவைகளை தீர்ப்பதற்கு இயைந்து போகாது என்பது மட்டுமல்லாமல், மக்கள் அனைவருடைய ஜனநாயக
அபிலாசைகள் மற்றும் கலாச்சார தேவைகளையும் பூர்த்தி செய்ய முடியாது என்பதையும் காட்டுகிறது.
எழுத்தாளர்களுடைய ஊதியங்களும் ஓய்வூதியங்களும் ஒரு கையளவு பொழுதுபோக்கு
மற்றும் செய்தி ஊடகப் பெருநிறுவனங்களின் தயவில் உள்ளன என்பது மட்டும் அல்ல; அன்றாடம் தொலைக்காட்சி
மற்றும் திரைப்படத் திரைகளை காணும் மக்களுடைய நிலைப்பாடும் அவர்களுடைய கரங்களிலேயே உள்ளன.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தொழில்துறை இப்பொழுது அமைந்திருக்கும்
நிலையில் ஒரு செல்வம் கொழிக்கும் உயரடுக்கின் தன்னல இலாப நோக்கத்தை திருப்தி செய்வதற்குத்தான் உள்ளது.
இறுதியில் தணிக்கையாளர்கள் மற்றும் படப்பிடிப்பு நிலைய உரிமையாளர்களுடனான முரண்பாடுகள் பலவும்
காட்டியுள்ளபடி, உண்மையான சமூகம் பற்றிய திறனாய்வு இந்த அமைப்பில் காண முடியாதது ஆகும். அமெரிக்க
திரைப்படங்களும் தொலைக் காட்சி நிகழ்ச்சிகளும் உலகம் முழுவதும் அவற்றின் தொழில்நுட்ப முன்னேற்றம் மற்றும்
பெரும் உற்சாக சுறுசுறுப்பிற்கும் பாராட்டப்படுகின்றன; ஆனால் எந்த அளவிற்கு இவை பெருநிறுவன, அரசாங்க,
இராணுவ நலன்களுக்கு கட்டுப்பட்டு பணிசெய்ய வேண்டும் என்பது எழுத்தாளர்களையும், திரைப்படக் கலைஞர்களையும்
பெரும் இழிவிற்கு ஆளாக்குகிறது; உலகம் முழுவதிலும் பலரையும் அப்படித்தான் ஆழ்த்துகிறது.
எழுத்தாளர்களின் போரட்டம் திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பில்
எந்த அளவிற்கு மகத்தான படைப்பாற்றல், முயற்சி ஆகியவை தேவை என்பதை நினைவுறுத்துகிறது. இந்த
ஊடகங்களில் படைப்பாற்றல் மற்றும் கலைத் திறமைக்கு பஞ்சம் ஏதும் இல்லை; ஆனால் அவற்றின் முழுத் திறனும்
தற்பொழுது இருக்கும் பொருளாதார வடிவமைப்பிற்குள் ஒரு பொழுதும் அடையப்பட முடியாதது ஆகும்.
உற்பத்தியாளர்களுடைய விசுவாசமான கூற்றுக்கள் ஒருபுறம் இருக்க, அவர்களின்
நிலைப்பாடு எந்த அளவிற்கு அவர்களுடைய உண்மையான அணுகுமுறை, படைப்பாற்றல்மீது உள்ளது என்பதை
நிரூபணம் செய்கிறது. பெருநிறுவனங்களின் இயக்குனர்கள் மற்றும் ஒதுக்கு நிதியினர் கலாச்சார மதிப்பிற்கு எதையும்
தயாரிப்பதில்லை. அவர்களுடைய ஒட்டுண்ணித்தன நடவடிக்கைகள் பரந்த மக்கள்தொகுப்பின் இழப்பில்தான்
செயல்படுத்தப்படுகின்றன; தற்போதைய வீடுகள் அடைமானக் கரைப்புக்களும் அதைத்தான் காட்டுகின்றன.
அமெரிக்கா ஒரு மகத்தான சமூக, அரசியல் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளது.
நிதிய நிலைமை பெருகிய முறையில் உறுதியற்றதாக உள்ளது; மில்லியன் கணக்கான மக்கள் தம் வருமானத்திற்குள்
வாழ போராடிக்கொண்டிருக்கிறார்கள். புஷ் நிர்வாகம் ஒரு சட்ட விரோத போரைத் தொடர்வதிலும்,
அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான முறையான தாக்குதல்களாலும் உற்ற முறையில் இழிவாகப் பரந்த முறையில்
கருதப்படுகிறது. ஒரு போலீஸ் அரசாங்கத்தை அமைப்பதற்கான சாரத்தை இது அமைத்துக் கொண்டிருக்கிறது;
அதே நேரத்தில் சித்திரவதைகள் மற்றும் துஷ்பிரயோகங்களை உலகெங்கிலும் இருக்கும் "பயங்கரவாதிகள் எனச்
சந்தேகிக்கப்படுபவர்கள்" மீது பயன்படுத்துகிறது.
யதார்த்தத்தை பிரதிபலிக்க வேண்டும் என்பதற்காக தங்கள் வாழ்க்கையை
அர்ப்பணிக்கும் அனைவரும் ஜனநாயகக் கட்சி மற்றும் அமெரிக்க தாராளவாதம் ஆகியவற்றின் திவால்தன்மை பற்றியும்
தக்க உணர்வை அதிகரித்த வகையில் கொள்ள வேண்டும். திரைப்படத் தயாரிப்பாளர்கள் பலர், இப்பொழுது
திரைப்படம் மற்றும் தொலைக்காட்சி எழுத்தாளர்களுடன் மோதலைக் கொண்டிருப்பவர்கள் ஜனநாயகக் கட்சிக்கு
பெரும் நிதியங்களைக் கொடுத்துள்ளனர். இரு முக்கிய கட்சிகளும் ஆப்கானிஸ்தான் மற்றும் ஈராக்கில் நடக்கும்
போருக்கு உடந்தையாகும்; இப்பொழுது அவை ஈரானுக்கு எதிரான மற்றொரு பேரழிவு தரக்கூடிய போரை
நடத்த நாட்டை இட்டுச் செல்லுகின்றன. உழைக்கும் மக்கள் தங்கள் அரசியல் சுயாதீனத்தை பிரகடனம் செய்து,
இந்த பெருவணிக மற்றும் அடக்குமுறைக் கட்சிகளில் இருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும்.
திரைப்பட மற்றும் தொலைக்காட்சிக் கலைஞர்கள் இந்த யதார்த்தங்களை
எதிர்கொள்வதற்கு கடமைப்பட்டிருப்பர்.
சோசலிச இயக்கத்தின் புத்துயிர்ப்பு முற்றுமுழுதாக இன்றியமையாததாகும். இடதுசாரி
முன்னோக்குகள் பல எழுத்தாளர்களை, இயக்குனர்களை, நடிகர்களை அமெரிக்கத் திரைப்படத் தொழிலில் 1930,
1940 களில் பெரிதும் ஊக்குவித்தன; அக்காலக்கட்டம்தான் ஹொலிவூட் திரைப்பட தயாரிப்பின் பொற்காலம் என்று
கருதப்படுகிறது. கணக்கிலடங்கா எழுத்தாளர்கள் தங்கள் படைப்புக்களை பெரும் சமூகப் பிரச்சினைகளான பாசிசம்,
போருக்கு எதிரான போராட்டங்கள், தொழிலாள வர்க்கத்தின் போராட்டங்கள், முதலாளித்துவத்திற்கு எதிர்ப்பு
என்ற வகையில் பார்த்தனர். மக்கார்த்திய கம்யூனிச சூனிய வேட்டைகள் பேரழிவு தரக்கூடிய தாக்குதலை திரைப்படத்
தயாரிப்பிலும் அமெரிக்க வாழ்வின் ஒவ்வொரு கூறுபாட்டிலும் கொண்டது.
திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர்களுடன் ஒரு போராட்டத்தை பொறுப்பெடுக்கையில்,
எழுத்தாளர்கள் பொழுதுபோக்கு தொழில் ஒட்டுமொத்தத்தின் எதிர்காலத்தை எண்ணிப்பார்க்க வேண்டியது அவசியமானதாக
இருக்கிறது. பெருகிய முறையில் திரைப்பட, தொலைக்காட்சி கலைஞர்களின் தேவைகள் மற்றும் மக்களின் கலாச்சார,
அரசியல் நலன்கள் ஆகியவை, பில்லியனர்களின் சிறு குழு ஒன்றினால் பொழுது போக்கு மற்றும் செய்திகள் மீது செயற்படுத்தப்படும்
ஏகபோக தடையை எதிர்பாராது சந்திக்கின்றன.
இத்தகைய மகத்தான பொழுது போக்கு, செய்தி ஊடகப் பெருநிறுவனங்கள்
இப்பொழுது வெளிப்படையாக அவற்றை தங்களுடைய சொந்த நலனுக்காக செயல்படுத்திக் கொண்டிருப்பவர்களுடைய
கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு, உண்மையான பொதுப் பணியாக, மக்களுடைய நலன்களுக்கு அர்ப்பணித்துள்ள
விதமாக மாற்றப்பட வேண்டும். இந்த நிபந்தனை ஒன்றுதான் உண்மையிலேய படைப்பாற்றல் செழிப்பதற்கு
பயனுடையது.
எங்களது கண்ணோட்டத்தில், பொதுவாக எழுத்தாளர்களும் திரைப்படக்
கலைஞர்களும், தற்போதைய போராட்டத்தை இன்னும் பரந்த சமூக மற்றும் அரசியல் சூழமைவில் கட்டாயம்
காணத் தொடங்க வேண்டும். |