World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : மத்திய கிழக்கு

Report: Strategic air base being readied for war on Iran

அறிக்கை: ஈரான் மீதான போருக்கு மூலோபாய வான்தளம் தயாராகிறது

By Bill Van Auken
31 October 2007

Back to screen version

திங்கட்கிழமையன்று ஸ்கொட்லாந் செய்தித்தாள் ஒன்று, மத்திய கிழக்கில் வான்வழித் தாக்குதல்களுக்காக அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்படும் முக்கிய தளம் ஈரானுக்கு எதிரான போருக்காக தயார் செய்யப்பட்டுக் கொண்டிருப்பதாக தகவல் கொடுத்துள்ளது.

The Herald பெயரிடப்படாத இராணுவ அதிகாரிகளை மேற்கோளிட்டு, பென்டகன் ஈரானின் அணுசக்தி நிலையங்கள்மீது தாக்குதலுக்கான தயாரிப்பில் "இந்திய பெருங்கடலில் இருக்கும் பிரிட்டிஷ் பாதுகாப்பில் உள்ள தீவான, டியாகோ கார்சியாவில் இரகசியமாக சிறப்பு ஸ்டெல்த் குண்டுவீச்சு விமானங்களை நிறுத்திவைக்கும் கொட்டகைத் தளங்களை இரகசியமாக நவீனப்படுத்திக் கொண்டுவருகிறது" என்று தெரிவித்துள்ளது.

டியாகோ கார்சியாவில் உள்ள விமானத் தளம், 2003ல் ஈராக்கின் மீது "அதிர்ச்சி மற்றும் திகில்" குண்டுவீச்சிற்கு அமெரிக்க இராணுவத்தால் பயன்படுத்தப்பட்டது; மேலும் 2001 ம் ஆண்டில் ஆப்கானிஸ்தான் மீது கனத்த குண்டுமழை பொழியும்போதும் பயன்படுத்தப்பட்டது. 1991ல் முதலாவது வளைகுடாப் போரின் பொழுது ஈராக்கிற்கு எதிராக நடத்தப்பட்ட வான்வழி தாக்குதல்களுக்கு பயன்படுத்தப்பட்ட ஒரே தளமும் இதுதான்.

செய்தித்தாள் குறிப்பு, விமானக் கொட்டகைகள் புதுப்பிப்பு, Massive Ordinance Petetrators (MOP) எனப்படும் புதிய நிலவறைத் தகர்ப்பு குண்டுகளை வீசுவதற்காக B1 விமானங்களை தீவில் இருந்து அனுப்புவதற்கான திட்டத்துடன் இணைந்தது என்று கூறுகிறது.

6000 பவுண்டுகள் உயர் வெடி மருந்துகளை கொண்ட 30,000 பவுண்டுகள் வெடிகுண்டு MOP விமானப் படையின் ஆயுதத்திலேயே மிகச் சக்தி வாய்ந்த அணுசக்தியற்ற ஆயுதம் ஆகும். இப்பொழுது இருக்கும் அணுசக்திப் பயன்பாட்டை கொண்டு நிலவறைகளை தாக்கித் தகர்க்கும் ஆழத்தை விட அதிகமான முறையில் இது ஆழமான இலக்குகளை தாக்கித் தகர்த்துவிடும் திறனை உடையது. விமானப் படை கடந்த மார்ச் மாதம் நியூ மெக்சிகோவில் உள்ள சோதனைத்தளமான White Sands -ல் இருந்த கருவிகளில் ஒன்றின் வெற்றிகரமான சோதனையை நடத்தியதாகக் கூறப்படுகிறது.

இராணுவ ஆய்வாளர்கள் இந்த குண்டு, தெஹ்ரானுக்கு தெற்கே 200 மைல் தூரத்தில் Natanz ல் பூமிக்கு 100 அடி கீழே இருக்கும் ஈரானின் அணுவாயுத நிலையத்தை தகர்க்கும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது என்று சுட்டிக்காட்டுகின்றனர்.

"(பென்டகனின் கூற்றுப்படி) இது விரைவில் பெறப்பட இருக்கிறது, நாங்கள் ஈரான்மீது குண்டுவீசும் சாத்தியமுள்ளது என்பது ஒரு சக்திவாய்ந்த இணைநிகழ்வு ஆகும்" என்று GlobalSecurity.org யின் முக்கிய பாதுகாப்பு ஆய்வாளரான ஜோன் பைக் Kansas City Star இடம் இவ்வாண்டின் முற்பகுதியில் கூறினார்: "இந்த குண்டுக்காக ஒரு பணி தயாராகிக் கொண்டிருக்கிறது."

டியகோகார்சியாவில் இருக்கும் தளம் உயர்தர வசதியைப் பெறும் என்னும் தகவல் புதிய ஆயுதத்திற்காக 88 மில்லியன் டாலர்கள் ஒதுக்கீட்டை, ஈராக் மற்றும் ஆப்கானிஸ்தான போருக்கு கூடுதல் நிதிஒதுக்கலில் பென்டகன் சேர்த்துள்ளதை அடுத்து வந்துள்ளது.

இந்த வேண்டுகோள், கிட்டத்தட்ட 200 மில்லியன் டாலர்கள் மொத்தம் இருக்கும் போர் நிதியத்தில், 83.5 மில்லியன் டாலர்கள் MOP குண்டுத் தயாரிப்பிற்காகவும், மற்றொரு 4.2 மில்லியன் டாலர்கள் ஆயுதத்தை ஏவும் B-52 தாக்குதல் விமானத்தில் சில மாறுதல்கள் செய்வதையும் உள்ளடக்கியுள்ளது.

MOP ஐ, "பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் உடனடியாக தேவைப்படும், மிக முக்கியமான பூகோள தாக்கும் திறன் என்று பென்டகன் விளக்கியுள்ளது.

புஷ் நிர்வாகம் குண்டுக்கும் குண்டுவீச்சு விமான வடிவமைப்புக்களுக்குமான நிதியக் கோரிக்கை, "தளத்தில் இருக்கும் இராணுவத் தலைவர்களின் அவசர செயற்பாட்டு தேவைக் கோரிக்கைகளை எதிர்கொள்ளும் வகையில்" இருக்கும் என்று தெரிவித்துள்ளது.

இந்த "அவசர செயற்பாட்டு தேவை" என்பதின் தன்மை என்ன என்று குறிப்பாக நிர்வாகம் விவரங்களை கொடுக்கவில்லை என்றாலும், காங்கிரஸ் உறுப்பினர்களை விடை வெளிப்படையாகத்தான் உள்ளது என்று தெரிவித்தனர். வேர்ஜீனியாவின் ஜித் மோரன், மன்றத்தின் இராணுவக் குழுவின் ஜனநாயகக் கட்சி உறுப்பினர் Reuters Agency இடம் தெரிவித்தார்: "இது ஈரான் பற்றியது என்று நான் நினைக்கிறேன்; ஏனெனில் இந்த ஆயுதத்தை ஈராக்கில் பயன்படுத்தப் போவது இல்லை; ஆப்கானிஸ்தானத்திலும் உபயோகப்படுத்த வேண்டிய அவசியம் இல்லை; அங்கு நமக்குத் தெரிந்த வகையில் நிலத்தடி ஆயுதக் கிடங்கு நிலையங்கள் இல்லை."

இதற்கிடையில், ஈரானின் வெளியுறவு அமைச்சரகத்தின் செய்தித் தொடர்பாளர் மகம்மது அலி ஹோசினி நிருபர்களிடம் வாரந்திர கூட்டம் ஒன்றில் ஞாயிறன்று அமெரிக்க ஒற்று விமானங்கள் கூடுதலான வகையில் ஈரானின் தெற்கு எல்லைகள் மீது பறந்து வருவதாகவும், அவை நாட்டின் வான் வழியை மீறுகின்றன என்றும் கூறினார்.

செய்தித் தொடர்பாளர் நாட்டின் இறைமை தொடர்ந்து மீறப்பட்டால் நாட்டின் ஆயுதப்படை"தக்க விடையிறுக்கும்" என்று கூறினார்.

ஹோசினி மேலும் கூறியதாவது: "ஈராக்கிய அரசாங்கம் இருதரப்பு உறவுகளின் முக்கியத்துவம் பற்றி நன்கு அறிந்திருக்கும் என்று நாம் நம்புகிறோம்; எனவே தன்னுடைய நாடு, நிலப்பகுதி ஆகியவற்றை அண்டை நாடுகளுக்கு எதிராக வேவு பார்க்கும் தளமாகப் பயன்படுத்த அனுமதிக்காது."

செய்தியாளர்களிடம் செவ்வாயன்று பேசிய வெள்ளை மாளிகையின் செய்தித் தொடர்பாளர் Danas Perino, "ஈரான்மீது ஜனாதிபதி தாக்குதலை தொடர உள்ளார் என்று மக்கள் நினைக்க வேண்டியது இல்லை. நாம் அதைத் தெளிவாக்க வேண்டும் என்று நான் நினைக்கிறேன்."

Helen Thomas என்னும் பல பத்திரிகைகளிலும் கூட்டாக வெளியிடும் கட்டுரையாளர் வினா ஒன்றை எழுப்பியதற்கான விடையிறுப்பாகத்தான் இத்தகவல் வந்தது; அவர் பெரினோவைக் கேட்டார்; "ஈரான் மீது அவர் தாக்குதல் நடத்தப்போகிறார் என்று நாடு முழுவதும் பரந்த அளவில் அச்சமும் ஊகமும் உள்ளது என்பதை ஜனாதிபதி அறிவாரா?"

செய்தித்துறை செயலரான பெரினோ, "மக்கள் அச்சப்படவேண்டாம், அவர் தூதரகப் பாதையில்தான் சென்று கொண்டிருக்கிறார்" என்று விடையிறுத்தார்.

பல வாரங்களாக அதிகரித்துக் கொண்டிருக்கும் அச்சுறுத்தல்களை அடுத்து --"ஒரு அணுசக்தி பயங்கரம்", "மூன்றாம் உலகப் போர்", என்று புஷ்ஷின் சொந்த முன்கணிப்புக்கள், துணை ஜனாதிபதியின் எச்சரிக்கையான வாஷிங்டனின் கோரிக்கைகளுக்கு தலைவணங்காவிட்டால் ஈரான் "தீவிர விளைவுகளை எதிர்கொள்ள நேரிடும்" என்பது, மற்றொரு அமெரிக்க ஆக்கிரமிப்புப் போர் மூளலாம் என்ற அச்சம் ஆதாரமுடையது என்பதைத்தான் காட்டுகிறது.

புதிய தகவல்கள், இறப்பு மற்றும் பேரழிவு கொண்ட கடும் தாக்குதல் பற்றிய இந்த அச்சுறுத்தல்களை நிறைவேற்றுவதற்கு அமெரிக்க இராணுவத்தால் எடுக்கப்பட்டுக் கொண்டிருக்கும் ஸ்தூலமான நடவடிக்கைகளின் வெளிப்பாடாக இருக்கின்றன.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved