WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
German Social Democrats, unions fear losing control
over the working class
ஜேர்மனிய சமூக ஜனநாயகவாதிகளும் தொழிற்சங்கங்களும் தொழிலாள வர்க்கத்தின் மீதான
கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என அஞ்சுகின்றன
By Ulrich Rippert
27 October 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
இவ்வார இறுதியில் ஹம்பேர்க் நகரில் நடக்க இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சியின்
தேசிய காங்கிரஸ், தொழிலாள வர்க்கத்தில் அது கொண்டிருக்கும் எஞ்சிய செல்வாக்கையும் இழந்து விடுமோ என்ற
அச்சத்தைத்தான் பெரிதும் கொண்டுள்ளது.
சமூக ஜனநாயகக் கட்சியின் தலைவர் குர்ட் பெக் மற்றும் தொழிற்துறை மந்திரி பிரான்ஸ்
முன்டபெயரிங் (SPD)
இருவருக்கும் இடையே உள்ள மோதலின் பின்னணி இதுதான்; இது செய்தி ஊடகம் முழுவதும் கடந்த சில வாரங்களில்
முக்கிய செய்தியாக இருந்தது. வேலையில்லாதோருக்கான உதவித்தொகை
I ä (Unemployment
Pay I-UPI), வயதான வேலையற்ற தொழிலாளர்களுக்கு
இன்னும் சில மாதங்களுக்கு அதிகமாகக் கொடுக்க வேண்டும் என்னும் பெக்கின் திட்டம் முன்னாள் சமூக ஜனநாயகக்
கட்சி-பசுமைக்
கட்சி கூட்டணி அரசாங்கம் அறிமுகப்படுத்திய ஹார்ட்ஸ்
IV, செயற்பட்டியல் 2010 (Hartz
IV, Agenda 2010)
ஆகியவற்றுடன் அடிப்படையில் எந்த உடைவையும் கொண்டிருக்கவில்லை;
ஆனால் செய்தி ஊடகமோ பெக்கின் கருத்து "செயற்பட்டியல் 2010" (Die
Welt) உடன் ஒரு உடைவு, "சமூக ஜனநாயக கட்சியின் சமூக
தொங்கு மஞ்சத்திற்கு திரும்பிவிட்டது" (சமூக ஒருமித்த உணர்வை அடிப்படையைக் கொண்ட கொள்கைகளுக்கு) (Handlesblatt)
என்ற பிரச்சாரத்தில் ஈடுபட்டது.
பெக்கின் திட்டம் வயதான வேலையில்லாதவர்களுக்கு அதிக மாற்றத்தைத் தராது;
அவர்கள் வேலையின்மை காப்பீட்டுத் தொகைக்கு தங்களுடைய பங்கு நிதியைத்தான் பல தசாப்தங்களாக கொடுத்து
வந்தனர். உதவித்தொகை I
நிதிகள் பெற்ற சில மாதங்களுக்கு பின்னர் அவர்கள் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை
II இனை பெறும்
அடிப்படையில் மிக வறுமையான நிலையில் வாழ்க்கையை தள்ளும் கட்டாயத்திற்கு உட்படுத்தப்படுவர். பல ஆண்டுகள்
தொழில்திறமை அனுபவங்களை கொண்டிருக்கும் பயிற்சி பெற்ற தொழிலாளர்களுடைய நிலையிலும் பெக்கின்
கருத்துக்கள் மாற்றத்தை ஏற்படுத்தாது; ஏனெனில் அவர்கள் பொதுநல எதிர்ப்பு சட்டத்தையொட்டி குறைவூதிய
வேலைகளை ஏற்கும் கட்டாயத்திற்கு உள்ளாகிறார்கள். அத்தகைய தொழிலாளர்கள் வேலை தேடுவதற்கு ஒரு சில
மாதங்களைத்தான் அவகாசமாகப் பெறுகிறார்கள். அதற்குள் அவர்களது சேமிப்புக்கள் முழுவதும்
செலவிடப்படவேண்டும் என்ற உண்மைகள் ஹார்ட்ஸ் IV
மற்றும் செயற்பட்டியல் 2010 சட்டங்களின் முழு சமூக-எதிர்ப்புத் தன்மையை மாற்றிவிடவில்லை.
உண்மையில், பெக்கின் திட்டம் ஒன்றும் புதிதல்ல. வடக்கு ரைன் வெஸ்ட்பாலியா
மாநில பிரதம மந்திரியான யூர்கன் றுட்கர்ஸ் (கிறிஸ்தவ
ஜனநாயக யூனியன் -CDU)
போன்ற கன்சர்வேடிவ் அரசியல்வாதிகள் இதை கோரிக்கையைத்தான் நீண்ட காலமாக முன் வைத்துள்ளார்கள்;
கிறிஸ்தவ ஜனநாயக யூனியனின் முந்தைய காங்கிரசிலும் இந்த நடவடிக்கைக்கு ஒப்புதல் கொடுக்கப்பட்டது.
பெக்கின் கருத்திற்கு முன்டபெயரிங்கின் எதிர்ப்பு மற்றும் இதையொட்டிய விவாதங்கள்
மிகப் பெரிய அளவில் செய்தி ஊடகத்தால் அதிகமாக்கப்பட்டது; எல்லாவற்றிற்கும் மேலாக சமூக ஜனநாயகக்
கட்சியின் தலைவர் மற்றும் Pfälz
மாநில பிரதம மந்திரியை சமூக ஒருமித்த உணர்வு கொண்ட அரசியல்வாதி என்று மீண்டும் கண்டுபிடிக்கப்படுவதற்கும்
உதவியுள்ளது. அத்தகைய கூற்றின் முழு வெற்றுத்தனம் இருந்தபோதிலும், இது பெக்கை ஜேர்மனிய தொழிற்சங்க
கூட்டமைப்புடன் (DGB)
வேறுபாடுகளை களைய உதவியுள்ளது. இவருடைய விவாதங்கள் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் கோரிக்கை
பட்டியலில் இருந்து நேரடியாக எடுக்கப்பட்டவை; பல தொழிற்சங்க அதிகாரிகள் பெக்கின் திட்டத்திற்கு
உடனடியான பாராட்டுக்களை தெரிவித்துள்ளனர்.
செயற்பட்டியல் 2010 கொள்கைகள் மற்றும் ஹார்ட்ஸ்
IV விதிகளின் விளவுகளுக்கு பகிரங்கமான எதிர்ப்பு சமீபத்திய
மாதங்களில் அதிகரித்து வருகிறது; மேலும் சமூக ஜனநாயக கட்சியிக்கும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும்
இடையே பெருகிய அழுத்தங்களுக்கும் வழிவகுத்துள்ளது. சில ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு அலுவலர்கள்
சமீபத்தில் அமைக்கப்பட்டுள்ள இடது கட்சியிடம் ஆதரவு கிடைக்குமோ என்று உளவறிகின்றனர்; சமூக ஜனநாயக
கட்சியின் தலைவர் தொழிற்சங்க கூட்டு அமைப்பில் ஒரு பிளவு ஏற்பட்டுவிடுமோ என்றும் பயப்படுகிறார்; அத்தகைய
நிலையை எப்படியும் தவிர்த்துவிட வேண்டும் என்று அவர் விரும்புகிறார். இந்த வார இறுதியில் கூடும் ஹம்பேர்க்
நகர காங்கிரஸ் சமூக ஜனநாயக கட்சிக்கும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புக்கும் இடையே புதிய
முன்னேற்றமடைந்த உறவுகள் இருப்பதாக பகிரங்கமாக காட்டிக்கொள்ளும் வகையில் திட்டமிடப்பட்டுள்ளது.
300 தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் மற்றும் தொழிற்சங்க தலைவர்கள்
எழுதியுள்ள ஒரு பகிரங்க கடிதமும் பெக்கிற்கு ஆதரவைக் கொடுக்கும் நோக்கத்தை கொண்டுள்ளது. "சமூக
ஒருமித்த உணர்வு" கொள்கைக்கு மீண்டும் திரும்ப வேண்டும் என்று இவர்கள் அழைப்பு விடுத்துள்ளனர். ஜேர்மனியில்
உள்ள சமூக வளர்ச்சி பற்றிய பார்வையுடன் கடிதம் தொடங்குகிறது; அவர்கள் அப்படி விரும்பினார்களோ
இல்லையோ, கடிதம் சமூக ஜனநாயக கட்சி பற்றி பேரழிவுகரமான விமர்சனமாக உள்ளது.
பகிரங்க கடிதம் கூறுகிறது: "குறைவூதிய பிரிவின் வளர்ச்சி, முகவர்கள் மூலமாக
வேலைக்கு ஆட்களை திரட்டும் அரசியல் ஆதரிப்பது, வேலை ஒப்பந்தங்களுக்கான காலவரையறையை
கட்டுப்படுத்துவது, பணிநீக்கம் செய்வதற்கு எதிராக இருந்த சட்டத்தை அகற்றியது மற்றும் அது போன்ற
நடவடிக்கைகள் தொழில்துறை சட்டத்தை சுதந்திரப்படுத்துதல் என்ற பெயரில் மேற்கொள்ளப்பட்டவை பணியில்
இருப்பவர்கள் மீது அழுத்தத்தை அதிகரித்துள்ளன." தொழிற்சங்கவாதிகள் தொடர்கின்றனர்: "தனியார்மயமாக்கும்
கொள்கைகள், ஹார்ட்ஸ் IV
விதிகள் எஞ்சியவற்றை செய்து முடித்தன. உண்மை ஊதியங்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து அதிக மாற்றத்தை
பெறவில்லை வறுமைநிலை ஊதியங்கள்தான் பெருகியுள்ளன... கிட்டத்தட்ட 7 மில்லியன் மக்கள் வேலையின்மையில்
உள்ளனர்; இதில் 5 மில்லியன் பகுதிநேரவேலைகள் என அழைக்கப்படுவதில் இருப்பவர்களும் அடங்குவர்."
குழந்தைகளின் வறுமைநிலை அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்க வகையில் அதிர்ச்சியை
கொடுக்கிறது. "2.7 மில்லியன் குழந்தைகளுக்கும் மேலானவை வறுமையில் வாழ்கின்றன. இன்னுமொரு 2.5
மில்லியன் குழந்தைகள் வறுமைக்கு அருகே நிற்கின்றன... பிறந்ததில் இருந்த குழந்தைகள் சமூக வாழ்வில் எந்தப்
பங்கும் இல்லாமல் உள்ளன. பொருள்சார் வறுமை மற்றும் சமூகப்பாதுகாப்பில் இருக்கும் பற்றாக்குறை,
கல்வியின்மை ஆகியவை சமூக முன்னேற்றத்திற்கான வாய்ப்பை தடுத்துவிட்டன."
அரசாங்கம குறைவூதிய பிரிவு வளர்வதற்கு ஆதரவு கொடுப்பது வறுமை ஊதியங்களுக்கு
(Poverty wages)
வகை செய்துள்ளது மட்டும் இல்லாமல், மூத்த குடிமக்களுடைய வறுமைக்கும் வகை செய்துள்ளது. பகிரங்கக் கடிதம்
வலியுறுத்துவதாவது: "அனைத்து தொழிலாளர்களிலும் மூன்றில் ஒரு பங்கினர் தங்கள் வயதான காலத்தில் வறுமையை
எதிர்கொள்ளுகின்றனர்...குறைவூதியங்கள் மற்றும் வேலையில்லாதோருக்கான உதவித்தொகை
I பெறும் காலம்
குறைக்கப்பட்டதன் மூலம் பெறப்படும் ஓய்வுதியங்கள் கருமித்தனமாக ஹார்ட்ஸ்
IV நிதிஉதவிகளையும்
விட மிகக் குறைவானவை ஆகும்."
இவை அனைத்தும் உண்மையே ஆகும். அதே நேரத்தில் இந்த பேரழிவுதரக்கூடிய
சமூகச் சரிவு தடையற்ற முறையில் சமூகத்தின் உயர்மட்டத்தில் செல்வக்குவிப்பு சென்றடையும் வழிவகையுடன் சேர்ந்து
வருகிறது. இத்தகைய சமூகச் செல்வம் கீழிருந்து மேலே செல்லும் வகையில் மறுபகிர்வை பாரியளவில் காண்பது
சமூக ஜனநாயக கட்சி அறிமுகப்படுத்திய, தொழிற்சங்கம் ஆதரிக்கும் கொள்கைகளால் ஏற்பட்டது ஆகும்.
சமூக ஜனநாயகக் கட்சியின்-பசுமைக் கட்சி கூட்டணி முதலில் 10 ஆண்டுகள் முன்பு
அதிகாரத்தை எடுத்துக் கொண்டபோது ஜேர்மனிய தொழிற்சங்கங்கள் அதைப் பாராட்டின. சமூக ஜனநாயக கட்சி-பசுமைக்
கட்சிக் கூட்டணிக்கு அடுத்த ஆண்டுகளில் அதன் சமூக-எதிர்ப்புக் கொள்கைகளை ஒட்டி மக்கள் எதிர்ப்பு
பெருகியபோது, தொழிற்சங்கங்கள் திட்டமிட்டு எதிர்ப்புக்களையும் ஆர்ப்பாட்டங்களையும புறக்கணித்தன. பின்னர்,
சமூக ஜனநாயக கட்சியின்
யின் வாக்காளர் தள ஆதரவு சரிந்தபின், ஜேர்மன் தொழிற்சங்க
கூட்டமைப்பு புதிய தேர்தல்கள் வேண்டும் என்ற அழைப்பிற்கு ஆதரவு கொடுத்து சமூக ஜனநாயக கட்சிக்காக
தேர்தல் பிரச்சாரத்தையும் நடத்தியது. இதன்பின்னர் சமூக ஜனநாயக கட்சி முக்கிய மந்திரிப்பதவிகளை 2005ல்
தேர்ந்தெடுக்கப்பட்ட பெருங் கூட்டணி அரசாங்கத்தில் (SPD-CDU-CSU)
எடுத்துக் கொண்டது (தொழிற்துறை மந்திரி முன்டபெயரிங் உட்பட); அப்பொழுதில் இருந்து சமூகக் கொள்கை
பிரச்சினைகளில் கூட்டணி கூடுதலாக வலதுசாரி பக்கம் செயற்பட்டும் வருகிறது.
சமீபத்திய ஆண்டுகளில் சமூக ஜனநாயக கட்சியின்,
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு இரண்டுமே
நூறாயிரக்கணக்கான உறுப்பினர்களை இழந்துள்ளன; தங்களுடைய பகிரங்க கடிதத்தில் குழுக்கள், "சமூக ஜனநாயக
கட்சி ஆலைகளில் கணிசமான ஆதரவை இழந்துவிட்டது" என்று எழுதுகிறது. இப்பொழுது அதிகாரத்துவங்கள்
தொழிலாள வர்க்கத்தின் மீது முழுக் கட்டுப்பாட்டையும் இழந்துவிடுவோமோ என்று அஞ்சுகின்றன.
சமூக ஜனநாயக கட்சியின்,
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு இவற்றின் சரிவு ஆழ்ந்த
அரசியல் மாற்றத்தின் அடையாளம் ஆகும். பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்திமுறையும், அதையொட்டிய உலகப்
பொருளாதாரத்தில் ஏற்பட்டுள்ள அடிப்படை மாற்றங்கள் சமூகச் சீர்திருத்த கொள்கைக்கான சகல
அடித்தளத்தையும் இல்லாதொழித்துவிட்டது. இன்றைய பொருளாதாரம் சர்வதேச நிறுவனங்கள், சர்வதேச நிதிய
அமைப்புக்கள் ஆகியவற்றினால் கட்டுப்படுத்தப்பட்டுள்ளன; அவை உலகம் முழுவதும் குறைவூதிய, குறைந்தவரிகள்
இருக்கும், குறைந்த செலவில் கிடைக்கும் மூலப்பொருட்கள் ஆகியவற்றிற்கு அலைவதுடன் ஒரு நாட்டை இன்னொரு
நாட்டின்மீது குறைந்த ஊதியம், குறைந்த வாழ்க்கைத் தரம் உலகம் முழுவதும் வருவதற்காக மோத விடுகின்றன.
இந்த நிலைமைகளில்
சமூக ஜனநாயக கட்சியின், செயற்பட்டியல் 2010 கொள்கை
மற்றும் ஹார்ட்ஸ் IV
விதிகள் இவற்றை செயல்படுத்திய அளவில் சமூக ஒருமித்த உணர்வுபடைத்த கட்சி என்பதில் இருந்து சமூகத்துடன்
மோதும் கட்சி என்று மாறியுள்ளது. சமூக ஜனநாயக கட்சியின் பணிக்கு ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பினால்
உதவியளிக்கப்பட்டுள்ளது; ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு ஊதியங்கள், ஜேர்மனி தொழிலாளர்களுடைய
நிலைமைகள் ஆகியவற்றைக் குறைமதிப்பிற்கு உட்படுத்தும் தொடர் நடவடிக்கைகளை ஏற்றுள்ளது.
இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு, சேவைத்துறை தொழிற்சங்கமான
Verdi
கொண்டுவந்த ஒரு பொதுப்பணி ஒப்பந்தத்தால் ஊதியத்தில் பெரும் சரிவு ஏற்பட்டதுடன், அரசதுறை ஊழியர்கள்,
அமைச்சரக ஊழியர்கள் ஆகியோருக்கு கூடுதலான பணிச் சுமைகள் பரந்தளவில் விளைந்தன. இந்த ஆண்டு வசந்த
காலத்தில் 50,000 தொழிலாளர்களை பதவியிறக்கும் நோக்கத்தை ஜேர்மன் ரெலிகொம் தொழிலாளர்கள்
எதிர்த்தவுடன் Verdi
தன் வேலைநிறுத்தத்தை அடையாள எதிர்ப்புக்களுடன் குறைத்துக்கொண்டு நிர்வாகத்தின் கோரிக்கைகளுக்கு
உடன்பட்டது; இது தொழிலாளர் பிரிவினரை ஒவ்வொரு வாரமும்
இன்னும் நான்கு மணிநேரம் கூடுதல் ஊதியமின்றி வேலைசெய்ய வைத்துள்ளது.
இதேபோன்ற உடன்பாடுகள்தான் தொழில்துறை தொழிற்சங்கமான
IG Metall
மற்றும் ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் ஏனைய தொழிற்சங்கங்களாலும் மேற்கொள்ளப்பட்டு இருக்கின்றன.
நாடு முழுவதும் தொழிற்சங்க அதிகாரிகள், தொழிற்சாலை தொழிலாளர் குழுக்கள் ஆகியவை தங்கள்
கையெழுத்துக்களை முற்றிலும் குறைமதிப்புடைய ஒப்பந்தங்களில் இட்டுள்ளனர்; அவை ஊதியக் குறைவு, பொதுநலச்
செலவினக் குறைவு ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டவை ஆகும்.
மிக சமீபத்திய சமூக ஜனநாயக கட்சியின்,
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு ஒற்றுமையின் பகிரங்க வெளிப்பாடு
தொழிலாளர் வர்க்கத்தின் மீது ஆழ்ந்த தாக்குதல்களை நடத்துவதைத்தான் காட்டியுள்ளது. இதுதான் பேர்லினில்
சமூக ஜனநாயக கட்சியின் தலைமயகத்தில் இருந்து புதிதாகக் கண்டுபிடிக்கப்பட்டுள்ள மனச்சாட்சியில் இருந்து வெளிவரும்
வார்த்தை ஜாலங்களின் உண்மையான முக்கியத்துவம் ஆகும்.
சமூக ஜனநாயகக் கட்சியின் தொழிலாள வர்க்கத்தின் மீது கொண்டிருக்கும்
உண்மையான அணுகுமுறை வெறித்தனமாக தாக்குதல்களை வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள இரயில் டிரைவர்கள்மீது
சமூக ஜனநாயகக் கட்சியின்
தலைவர் பெக் காட்டியிருப்பதில் இருந்து அறியலாம். இரயில் டிரைவர்கள்
சிறிதும் நடைமுறைக்கு பொருந்தாத கோரிக்கைகளை முன்வைப்பதாகவும், அதையொட்டி "ஒற்றுமை கொள்கையை
குழப்புகின்றனர்" என்றும் பெக் குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னர் இரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தத்தை
"நிறுவன உறவுகளில் இருக்கும் அமைதியான உறவுகளை சீர்குலைக்கிறது" என்றும் கூறியுள்ளார் --பணிநீக்கம் உட்பட
வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளவர்கள் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என்ற அழைப்பிற்கு இந்த
குற்றச்சாட்டு ஒப்பாகும்.
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்புத் தலைவர்கள், இரயில் டிரைவர்கள் முன்பு
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பின் (DGB)
தொழிற்சங்கங்களான Transnet, GDBA
இவற்றுடன் கொண்டிருந்த உடன்பாட்டில் இருந்து நீங்கிவிட்ட உண்மையினால் பெரும் சீற்றம் அடைந்துள்ளனர்; அந்த
இரு அமைப்புக்களும் சமீபத்திய ஆண்டுகளில் வேலைத் தகர்ப்புக்கள், ஊதியக் குறைப்புக்கள் ஆகியவற்றை முறையாக
ஆதரித்துள்ளன. ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு அலுவலர்கள் இரயில் டிரைவர்களுடைய வேலைநிறுத்தம்
தொழிலாளர்களின் மற்ற பிரிவினரிடையேயும் இடைவிடாமல் நடந்துவரும் ஊதிய, பொதுநலச் செலவினக்
குறைப்புக்களுக்கு எதிராக எழுச்சியை ஏற்படுத்தக் கூடும் என்றும் அச்சப்படுகின்றனர்.
இரயில் டிரைவர்கள் 1990 களின் நடுப்பகுதியில் இருந்து, முன்பு ஜேர்மனிய இரயில்வேக்களில்
இருந்த 370,000 வேலைகளில் பாதிக்கும் மேலானவை தகர்க்கப்பட்டுவிட்டன என்றும், ஊதியம் தேக்கம் அடைந்து
உண்மையில் கடந்த இரு ஆண்டுகளில் 10 சதவிகிதச் சரிவையும் கண்டுள்ளது என்று தங்கள் ஊதிய உயர்வுக்
கோரிக்கையை நியாயப்படுத்தியுள்ளனர். அதே நேரத்தில் இரயில்வேக்களின் பெரிய அதிகாரியான ஹார்முட்
மேடோர்ன் தன்னுடைய ஊதியத்தை கடந்த ஆண்டு 100% உயர்த்திக் கொண்டார் (மொத்தம் 3.18 மில்லியன்
யூரோக்கள்). மொத்தத்தில் இரயில்வே நிர்வாக குழுவின் எட்டு உறுப்பினர்கள் ஆண்டு ஒன்றுக்கு 20 மில்லியன்
யூரோக்களை ஊதியமாகப் பெறுகின்றனர்.
மற்ற நிறுவனங்களிலும் பல தொழிலாளர்கள் இதேபோன்ற அனுபவத்தைப் பெற்றுள்ளனர்;
இதுதான் வேலைநிறுத்தத்திற்கான பரந்த ஆதரவை விளக்குகிறது; ஆனால் அரசாங்கம், வணிகக் கூட்டமைப்புக்கள்,
செய்தி ஊடகம், நீதிமன்றங்கள் ஆகியவற்றின் முன்னணி பல வாரங்கள் வேலைநிறுத்தங்களுக்காக தொழிலாளர்கள் மீது
குற்றம் சாட்டியுள்ளது.
ஊதிய வெட்டுக்கள் மற்றும் ஜேர்மனியில் சமூகநலக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கான
பரந்த எதிர்ப்பு என்பதின் வெளிப்பாடாகத்தான் இரயில் டிரைவர்களுடைய வேலைநிறுத்தம் உள்ளது; ஆனால் இது
வெற்றிகரமாக நடத்தப்பட வேண்டும் என்றால் சமூக ஜனநாயக கட்சி,
ஜேர்மன் தொழிற்சங்க கூட்டமைப்பு இரண்டிற்கும் எதிரான பரந்த
அரசியல் எதிர்ப்பு முழுத் தொழிலாள வர்க்கத்தின் ஐக்கியம் மற்றும் ஆதரவு ஆகியவற்றைப் பெற்று
நடத்தப்பட்டால்தான் சாதிக்கப்பட முடியும்.
ஊதியங்கள், வேலை வெட்டுக்கள் ஆகியவற்றிற்கு எதிரான போராட்டம் மற்றும்
சமூக, ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பு என்பவற்றிற்கு அடிப்படையில் ஒரு புதிய அரசியல் மூலோபாயம்
தேவைப்படுகிறது; அது பெருவணிகத்தின் இலாப நலன்களைவிட தொழிலாளர் பிரிவினரின் தேவைகளுக்கு தான்
முக்கியத்துவம் கொடுக்கும். தங்கள் பழைய, தேசிய அமைப்புக்களில் இருந்து தொழிலாளர்கள் முறித்துக் கொண்டு,
ஐரோப்பா மற்றும் உலக முழுவதுமாக இணைத்துக் கொண்டு ஒரு சோசலிச அடித்தளத்தில் சமூக மறு
சீரமைப்பிற்காக போராடுவதால்தான் சாதிக்கப்பட முடியும். |