World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்French President Sarkozy visits Morocco பிரெஞ்சு ஜனாதிபதி சார்க்கோசி மொராக்கோ விஜயம் By Alex Lantier அக்டோபர் 22-24 தேதிகளில் பிரெஞ்சு ஜனாதிபதி நிக்கோலா சார்க்கோசி உத்தியோகபூர்வ விஜயம் ஒன்றை மொரோக்கோவிற்கு மேற்கொண்டு அரசர் ஆறாம் மகம்மதை சந்தித்தார். 70 உயர் வணிக நிர்வாகிகளுடன் சென்றிருந்த சார்க்கோசி மொராக்கோவில் உள்ள பிரெஞ்சு நிறுவனங்களுக்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்புடைய ஒப்பந்தங்களை உறுதிப்படுத்தினார். "மத்தியதரைக் கடல் ஒன்றியம்" என்பதற்கான திட்டங்களையும் முன்வைத்த அவர், அது பிரான்ஸ், சில ஐரோப்பிய நாடுகள் மற்றும் மகரெப் பகுதி நாடுகளை ஒன்றாகக் கொண்டு வரும் என்று கூறினார். ஐரோப்பிய உற்பத்தியாளர்களுக்கு ஒரு மலிவான கூலி உழைப்பிற்கான நடைமேடை போல் மொராக்கோ தோன்றியுள்ளது; அதைத்தவிர, ஜிப்ரால்டர் நீரிணை வழியே உலகம் முழுவதிலும் இருந்து வந்து செல்லும் சரக்குகளை மற்ற இடத்திற்கு மாற்றிவிடும் வணிகத் தளமாகவும் வெளிப்பட்டுள்ளது. மொரோக்கோ மக்களின் பிரெஞ்சு மொழி அறிவு அங்கு பிரெஞ்சு வணிகத்திற்கும் அழைப்பு மையங்கள் சேவை மொராக்கோவில் நிறுவப்படுவதற்கும் வழிவகுத்துள்ளது. மொரோக்கோவின் ஏற்றுமதி, இறக்குமதி வணிகங்கள் இரண்டிலுமே பிரான்ஸ் மிகப் பெரிய பங்காளி நாடாக உள்ளது; மொரோக்கோவில் உள்ள வெளிநாட்டு நேரடி முதலீட்டின் 60 சதவிகிதத்திற்கும் மேலானது இதன் கட்டுப்பாட்டில் உள்ளது. அமெரிக்காவுடன் மொரோக்கோ நெருக்கமான அரசியல் பிணைப்புக்களைக் கொண்டுள்ளது; தனக்கு தேவையான ஆயுதங்களில் பெரும்பகுதியை அமெரிக்காவிடம் இருந்துதான் வாங்குகிறது. எனவே சார்க்கோசியின் பயணம் பெரும்பாலும் ஒரு வணிகப் பயணத்தை ஒத்து இருந்தது; பிரெஞ்சு நிறுவனங்களுக்கு ஒப்பந்தங்கள், உடன்பாடுகள் ஆகியவற்றை போட்டியிட்டுப் பெறும் தன்மையை கொண்டிருந்தது.சார்க்கோசியின் விஜயத்தின்போது, மொரோக்கோ அரசாங்கம் பிரான்சின் கட்டுமான நிறுவனம் Alstom க்கு 2 பில்லியன் யூரோக்கள் ஒப்பந்தம் ஒன்று கொடுக்க ஒப்புக் கொண்டது; இதன் தலைமை நிர்வாக அதிகாரி Kron சார்க்கோசியுடன் மொராக்கோவிற்குப் பயணித்திருந்தார்; இந்த ஒப்பந்தம் ஜிணீஸீரீவீமீக்ஷீக் கும் Casablanca விற்கும் இடையில் ஒரு TGV (அதிகவேக இரயில்)-ஐ கட்டமைப்பதற்காகும். மேலும் மொராக்கோ 500 மில்லியன் யூரோ விலையுள்ள FREMM (்Fregate Multi-Mission) என்னும் போர்க்கப்பல் ஒன்றையும் பிரான்சின் கப்பல்கட்டும் நிறுவனமான Lorient இடம் இருந்து 2012ல் பெறுவதற்கு உடன்பட்டுள்ளது. பிரெஞ்சு அணுசக்தி நிறுவனமான Arevas வின் தலைமை நிர்வாக அதிகாரியான Anne Lauvergeon மொராக்கோவில் பொஸ்பேட்டுக்கள் மற்றும் யூரேனிய தாதுப் பொருட்களை நிலத்தடியில் இருந்து எடுப்பதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டதாக கூறப்படுகிறது. பிரெஞ்சு அதிகாரிகளும் Areva நிர்வாகமும் மொராக்கோவில் Marrakech க்கு அருகில் குடிமக்கள் பயன்பாட்டிற்கான அணுக்கருவுலை ஒன்றைக் கட்டமைப்பது பற்றிய பேச்சுக்களையும் நடத்தியுள்ளன. வட ஆபிரிக்க நாடுகளுக்கு அணுசக்தி உலைத்திட்டங்களை பிரெஞ்சு அரசாங்கமும் Areva வும் விற்றல் என்ற பெரும் திட்டத்தின் ஒரு பகுதியாகும் இது. Liberation எழுதியுள்ளபடி, இத்தகைய உலைகள் ஜூலை 2007ல் அல்ஜீரியா மற்றும் லிபியாவிற்கு வழங்கப்பட்டன. ஆனால் பிரான்சின் விமானப் பிரிவு நிறுவனமான Dassault குறிப்பிடத்தக்க பின்னடைவை அடைந்தது; ஏனெனில் மொரோக்கோ Dassault ன் புதிய Rafale ஜெட்டுக்களுப் பதிலாக அமெரிக்க F16 போர் விமானங்களை வாங்க விரும்பிவிட்டது. Tanger-Med I துறைமுக வளாகத்தை பார்வையிடுவதற்கான தனது அக்டோபர் 23 வருகையின் போது சார்க்கோசி, தனது பிரதான கொள்கை பற்றிய உரையை அதற்காக தயாரித்து ஒதுக்கி வைத்திருந்தார். அடுத்துள்ள Tanger-Med II வளாகத்தை கட்டுவதற்கு ஒப்பந்தம் எடுப்பதற்காக போட்டியிடும் பிரெஞ்சு கட்டுமானப்பிரிவு ஒப்பந்த நிறுவனமான Bouygues ஆல் கட்டப்பட்ட துறைமுகமானது, 2010 அளவில் 200,000 வாகனங்களை உற்பத்திசெய்யவிருக்கின்ற, அதேபோல் 2012 அளவில் 400,000 வாகனங்களை உற்பத்தி செய்ய இருக்கும் பெரிய ரெனோல்ட் - நிசான் நிறுவனத்தை ஆதரிப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. பிரெஞ்சு கப்பல் நிறுவனமான CGA-CGM, Tanger-Med II terminal ஐ அபிவிருத்தி செய்யும் நிறுவனத்தில் 40 சதவீதம் முதலீட்டை சொந்தமாகக் கொண்டிருந்தது.Tangier ல் சார்க்கோசி ஒரு "மத்தியதரைக்கடல் ஒன்றியம்" கட்டமைக்கப்பட வேண்டும் என்ற தன்னுடைய அழைப்பை மீண்டும் வலியுறுத்தினார்: இது பிரான்ஸ், சில தேர்ந்தெடுக்கப்பட்ட ஐரோப்பிய நாடுகள் (ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி, கிரேக்கம்) ஆகிய நாடுகளையும் Maghreb நாடுகளையும் ஒன்றாகக் கொண்டுவரும். பெருநிறுவன ஒத்துழைப்புக்களுக்கு அழைப்புவிடுத்ததை தவிர, சார்க்கோசியின் திட்டங்களில் கணிசமாக வேறு ஏதும் இல்லை. "சமத்துவமற்ற நிலைக்கு எதிராக, நீதிக்காக போராட்டம் நடத்தாவிட்டால் சமாதானம் இருக்காது" என்று சார்க்கோசி விடுத்த அழைப்பு வெற்றுத்தனமாக ஒலித்தது; ஏனெனில் இவர் பிரெஞ்சு தொழிலாளர்களின் ஓய்வூதியங்கள் மற்றும் சமூகப் பாதுகாப்பு உரிமைகளில் பெரும் குறைப்புக்களுக்குத்தான் தயார் செய்து கொண்டிருக்கிறார். அதே நேரத்தில், தனக்கு ஒரு 140 சதவிகித ஊதிய உயர்வை ஆதரித்து, ஆண்டு ஒன்றுக்கு 240,000 யூரோக்களை வழங்க அனுமதித்துக் கொண்டிருக்கிறார்; பிரான்சில் சராசரி ஊதியத்தைப் போல் இது 10 மடங்கு அதிகமாகும். புலம்பெயர்தல் பிரச்சினை குறித்து --மொரோக்கோவுடன் இது ஒரு முக்கிய பிரச்சினையாகும்;ஏனெனில் 500,000 மொரோக்கியர்கள் பிரான்ஸில் வாழ்கின்றனர்-- சார்க்கோசி சற்றே அவநம்பிக்கை தன்மையுடன் "மனிதன் எங்கு வேண்டுமானாலும் சுதந்திரமாக செல்லலாம் என்பது ஒன்றாக கட்டமைக்கப்பட வேண்டும்" என்று அழைப்பு விடுத்தார். எந்த அளவிற்கு சார்க்கோசி புலம்பெயர்பவர்களுக்கு "சுதந்திரத்தை" கொடுத்துள்ளார் என்பது சமீபத்திய காலத்தில் மிகத் தெளிவாயிற்று. ஒரு "தேர்வு செய்யப்பட்ட புலம்பெயர்தல்" ஊடாக தேர்ச்சிபெற்ற தொழிலாளர்களை மட்டும் ஆட்சேர்ப்பு செய்துகொள்ள அவர் திட்டமிடுகிறார். இதைத்தவிர பிரான்சில் இருக்கும் தங்கள் உறவினர்களுடன் சேர்ந்து கொள்ளுபவர்களை அவமானப்படுத்தும் வகையில் DNA சோதனை போன்றவற்றை விதித்துள்ளார். இவருடைய புலம்பெயர்தல், இணைப்பு, தேசிய அடையாள மந்திரியான Brice Hortefeux மிகப் பெரிய வகையில் சட்டவிரோதமாக குடியேறுபவர்களை சுற்றி வளைத்து தடுப்புக் காவலில் வைக்க இப்பொழுது உள்ளூர் அதிகாரிகளுக்கு அழுத்தம் கொடுத்து வருகிறார். பிரான்சின் நீதித்துறை மந்திரியான ரஷீடா டாற்ரி --இவருடைய தந்தையார் மொரோக்கோவில் இருந்து புலம்பெயர்ந்தவர்-- மொரோக்கோவிற்கு சார்க்கோசியுடன் வந்திருந்தார்; மொரோக்கோவின் நீதித்துறை அதிகாரிகளுடன் மொரோக்கோ மூலம் பிரான்சிற்கு சட்டவிரோத புலம்பெயர்தலை தடுப்பதற்கான திட்டங்களை வரைந்தார். புலம்பெயர்தல் பிரச்சினை மொரோக்கன் உயரடுக்கின், பிராந்திய மக்களைப் பற்றிய அச்சத்தின் அடையாளம் ஆகும். அமைப்பின் Le Matin என்னும் நாளேடு அக்டோபர் 28 அன்று Ikbal Sayah எழுதிய ஒரு தலையங்கத்தின் மூலம் மக்கள் தொகை வளர்ச்சியை ஒட்டி தெற்கு மற்றும் கிழக்கு மத்தியதரைக் கடல்பகுதி மக்கள் "2025 க்குள் 40 மில்லியன் வேலைகளை தோற்றுவிக்க வேண்டும், அப்பொழுதுதான் பிராந்தியத்தின் பொருளாதார வளர்ச்சி விகிதங்கள் இரு மடங்காக பெருகி 6 அல்லது 7 சதவிகிதத்தை ஆண்டு ஒன்றிற்கு அடையமுடியும்" என்று கூறியுள்ளது. "அமெரிக்காவின் ஆயுதமேந்திய ஒருதலைப்பட்ச முறை தோல்வியற்ற நிலையில், இப்பகுதியை எதிர்நோக்கியுள்ள பெரிய அறைகூவல்களை தீர்ப்பதற்காக இந்த பிராந்தியம் ஐரோப்பிய மத்தியதரைக் கடல் பங்காளித்துவத்தை நம்ப வேண்டியிருக்ககூடும்" என்றும் எழுதியுள்ளது. இந்த அறைகூவல்களை மொரோக்கோ குறிப்பிடத்தக்க வகையில் நெருக்கடியாக எதிர்கொள்ளுகிறது. CIA World Factbook, மொத்த உள்நாட்டு தலைவீத வருவாய் 4,600 அமெரிக்க டாலர்கள் என்றும், இது அருகில் இருக்கும் அல்ஜீரியாவில் 60 சதவிகிதம், துனிசியாவில் 52 சதவிகிதம் என்று பட்டியலிட்டுக் கொடுத்துள்ளது. இதன் மொத்த கல்வியறிவு விகிதம் 52 சதவிகிதம் ஆகும்; இதில் மகளிர் நிலை 40 சதவிகிதம்தான். இன்னமும் மக்களில் 40 சதவிகிதத்தினர் வேலைவாய்ப்புக்கு சார்ந்திருக்கும் மொரோக்கோவின் விவசாயத்தின் பெரும்பகுதி, மழையை நம்பியிருக்கிறது --அதாவது பாசன வசதிகள் கிடையாது. பயிர்களின் விளைவு வானிலையைத்தான் பெரிதும் நம்பியிருக்க வேண்டும். 1995ம் ஆண்டு கடுமையான வறட்சிக்கு பின்னர் கோதுமை, பார்லி விளைச்சல் 80 சதவிகிதம் சரிந்தது. சார்க்கோசியின் உரையில் மிகவும் குறிப்பிடத்தக்க பகுதிகள், அதுவும் முக்கியமாய் மூன்றாம் உலகப் போருக்கான வாய்ப்பு பற்றிய அமெரிக்க ஜனாதிபதி புஷ்ஷின் சமீபத்திய கருத்துக்களின் வெளிச்சத்தில், வடக்கே இருக்கும் கிறிஸ்துவ ஐரோப்பாவிற்கும், தெற்கே இருக்கும் முஸ்லீம் ஆபிரிக்காவிற்கும் இடையே ஒரு பெரும்போர் மூளுமா என்ற சிந்தனையில் ஈடுபடுவதுதான். மத்தியதரைப் பகுதி நாடுகளை "தங்கள் முயற்சிகள் முழுவதையும் ஒரு மத்தியதரைக் கடல் ஒன்றியத்தை கட்டமைக்க சேர்க்க வேண்டும்; ஏனெனில் இங்கு பங்காற்றப்போவது உலகின் சமநிலைக்கான முற்றிலும் தீர்க்கமான விஷயமாகும். மத்தியதரைப் பகுதியில், நாகரிகங்களும் சமயங்களும் கொடூரமான போர்களில் ஈடுபடுமா (மற்றும்) வடக்கும் தெற்கும் ஒன்றையொன்று எதிர்த்துநிற்குமா என்பது பற்றிய முடிவு எடுக்கப்படும். இங்குதான் அனைத்தையும் நாம் வெல்வோம் அல்லது அனைத்தையும் இழப்போம்." மொரோக்கோ மக்கள்மீது சார்க்கோசியின் அடிப்படை அணுகுமுறை தளபதி Hubert Lyautey என்னும் 1912ல் இருந்து 1925 வரை மொராக்கோவில் Resident-General ஆக இருந்தவரைப் பற்றி குறிப்பிடத்தக்க வகையில் புகழ்ந்ததின் மூலம் நன்கு வெளிப்படுகிறது. சார்க்கோசியின் தலைகீழ் உலகப் பார்வையில், Lyautey "மொராக்கோ மக்களைக் காப்பதைத் தவிர...வேறு எந்த இலக்கையும் கொண்டிருக்கவில்லை; ஏனெனில் அவர் அவர்களை நேசித்தார், மதித்தார்." உண்மையில், 1897ல் மடகஸ்காரில் பிரெஞ்சு ஏகாதிபத்தியத்தின் வெற்றியை வழிநடத்திய Lyautey பிரெஞ்சு டாக்டர் Emile Mauchamp, Marrakech ல் கொலை செய்யப்பட்ட விவகாரத்தைப் பயன்படுத்தி அருகே கடலில் கப்பலில் காத்திருந்த பிரெஞ்சுப் படைகள் தரையில் இறங்குவதற்கு ஒரு போலிக் காரணமாக எடுத்தக் கொண்டு, 1907ல் பிரான்ஸ் மொரோக்கோவை கட்டுப்பாட்டில் எடுக்கும் இறுதி நிகழ்வை ஒழுங்கமைத்தார். மொராக்கோவில் Lyautey ஆட்சியில் கலகங்கள், எழுச்சிகள் ஆகியவற்றிற்கு எதிராக பிரெஞ்சுப் படைகள் தொடர்ச்சியாகப் போராடின. ஒரு மத்தியதரைக்கடல் ஒன்றியத்திற்கான பிரெஞ்சுத் திட்டங்களின் ஏகாதிபத்திய தன்மை பிரான்சின் நாளேடான Le Monde இனால் உட்குறிப்பாக ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது; இது பற்றிய தன்னுடைய தலையங்கத்திற்கு அது "Mare Nostrum" என்று ரோமானிய பேரரசு மத்தியதரைப் பகுதிக்கு கொடுத்த "நம் கடல்" என்பதின் இலத்தின் மொழியாக்கத்தை கொடுத்துள்ளது; இன்னும் நன்கு அறிமுகமான வகையில் இத்தாலிய பாசிச சர்வாதிகாரி பெனிற்றோ முசோலினியால் இரண்டாம் உலகப்போருக்கு முன்னால் அது ஏற்கப்பட்டிருந்தது. இருப்பினும், சார்க்கோசியின் திட்டங்களுக்கு ஐரோப்பிய ஒன்றியத்தில் சக்தி வாய்ந்த எதிர்ப்புக்கள் இருப்பது பற்றி Le Monde உம், "பிரிட்டிஷ், ஜேர்மனியர்கள், ஸ்கான்டிநேவியர்கள் முதலியோர் சேராதது இந்த ஒன்றியத்தின் வெற்றிக்கு உறுதி கொடுக்குமா?" என்று கவன ஈர்ப்பு செய்தது. மத்தியதரைக் கடல்பகுதி ஒன்றியம் முயற்சி உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் இருக்கும் பிரான்சின் பெரிய போட்டியாளர்கள் பலருக்கும் எதிராக பொருளாதார அல்லது அரசியல் திட்டங்களுக்கு எதிராக இயக்கப்படும். இத்துவக்க முயற்சி முஸ்லிம்-எதிர்ப்பு உணர்வு பற்றிய பாரிஸ் மீதான குற்றச் சாட்டுக்களில் இருந்து காத்துக் கொள்ளவும் ஒரு கேடயமாக விளங்குகிறது; ஏனெனில் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் துருக்கி நுழைவதை அது எதிர்க்கிறது; பெரிய பிரித்தானியா அதை வரவேற்கிறது. இந்த நடவடிக்கை ஜேர்மனியை இன்னும் நேரடியாக இலக்கு வைத்துள்ளது. பிரெஞ்சு நிறுவனங்களுக்கு வட ஆபிரிக்க உழைப்பை இன்னும் மலிவுவிலை உழைப்பாக கிடைக்கச் செய்வதன் மூலம் அது ஜேர்மனிய முதலாளித்துவத்திற்கு கிழக்கு ஐரோப்பாவில் மலிவுகூலி உழைப்பு பகுதிகளில் கூடுதலான முதலீட்டை செய்வதில் இருக்கும் பொருளாதார நலன்களை குறுகியதாக்க முற்படுகிறது. வட ஆபிரிக்காவில் குறிப்பாக அல்ஜீரியாவில் கிடைக்கும் எண்ணெய், மற்றும் எரிவாயு, ரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்படுவனவற்றிற்கு ஒரு மாற்றீடாகும்; ரஷ்யாவுடன் ஜேர்மனி மிக நெருக்கமான சக்தி பிணைப்புக்களை கொண்டுள்ளது. |