:
ஆசியா
:
இலங்கை
SEP-ISSE meeting in Sri Lanka
A socialist program to oppose war and
its economic burdens
இலங்கையில் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான
அனைத்துலக மாணவர் அமைப்பின் பொதுக் கூட்டம்
யுத்தத்தையும் அதன் பொருளாதார சுமைகளையும் எதிர்க்க ஒரு சோசலிச வேலைத்
திட்டம்
2 November 2007
Use this version
to print | Send this link by email
| Email
the author
நவம்பர் 13ம் திகதி, சோசலிச சமத்துவக் கட்சியும் (சோ.ச.க.) சமூக சமத்துவத்திற்கான
அனைத்துலக மாணவர் (ஐ.எஸ்.எஸ்.இ.) அமைப்பும், இலங்கையில் உக்கிரமடைந்து வரும் யுத்தம், உழைக்கும் மக்கள்
மீது சுமத்தப்பட்டுவரும் பொருளாதார சுமைகள் மற்றும் அடிப்படை ஜனநாயக உரிமைகள் மீதான தாக்குதல்களுக்கு
எதிராக பொதுக் கூட்டமொன்றை நடத்துகின்றன.
கொழும்பு அரசாங்கம் 2002 யுத்த நிறுத்தத்தை பகிரங்கமாக மீறியுள்ளதோடு
தீவை மீண்டும் யுத்தத்திற்குள் தள்ளியுள்ளது. ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ, ஆப்கானிஸ்தானிலும் ஈராக்கிலும் புஷ்
நிர்வாகத்தின் குற்றங்களின் வரிசையில் சேர்ந்து, "பயங்கரவாதத்தின் மீதான யுத்தத்தை" நடத்துவதாக கூறிக்கொள்கின்றார்.
யதார்த்தத்தில், இராணுவமானது தமிழ், சிங்கள மற்றும் முஸ்லிம் உழைக்கும் மக்களின் செலவில் நாட்டின் ஆளும்
கும்பலின் இலாபத்திற்காக ஒரு இனவாத யுத்தத்தில் ஈடுபட்டுள்ளது.
இறப்பின் எண்ணிக்கை ஏற்கனவே 6,000ற்கும் மேற்பட்டது என மதிப்பிடப்பட்டுள்ளது.
பல நூற்றுக்கணக்கானவர்கள் "காணாமல் போயுள்ளனர்". 250,000 இற்கும் மேற்பட்டவர்கள்
இடம்பெயர்ந்துள்ளனர். இராஜபக்ஷவின் அரசாங்கம் பில்லியன்கணக்கான ரூபாய்களை யுத்தத்திற்காக செலவிடும்
அதேவேளை, உண்மையான சம்பளம், அரசாங்க மானியங்கள் மற்றும் பொதுச் சேவைகளை வெட்டித் தள்ளியுள்ளதோடு
நகரங்களிலும் கிராமங்களிலும் உள்ள சாதாரண உழைக்கும் மக்களின் வாழ்க்கையை தாங்கமுடியாததாக்கியுள்ளது.
தொழிலாளர்கள் தமது வாழ்க்கைத் தரம் மற்றும் அடிப்படை உரிமைகளை காக்க முயற்சிக்கும்
போதெல்லாம், அரசாங்கம் அவர்களை "பயங்கரவாதிகளின் ஆதரவாளர்கள்" அல்லது "தாய் நாட்டுக்கு
துரோகம் செய்பவர்கள்" என முத்திரை குத்துகின்றது. இராஜபக்ஷ எந்தவொரு அரசியல் எதிர்ப்பையும் நசுக்கும்
இலக்குடன், 2004ல் மீண்டும் அமுல்படுத்தப்பட்ட அவசரகாலச் சட்டத்தை தொடர்ந்தும் பேணிவருவதோடு புதிய
விதிகளையும், சட்டங்களையும் அறிமுகப்படுத்தியுள்ளார்.
யுத்தத்திற்கு எதிரான ஒரு அரசியல் வேலைத் திட்டம் இன்றி, தொழிலாளர்களால்
அவர்களின் மிகவும் அடிப்படையான உரிமைகளையும் காக்க முடியாது. கடந்த ஆண்டுகளில் வேலைநிறுத்தங்கள் மற்றும்
எதிர்ப்பு ஆர்ப்பாட்டங்களின் கசப்பான படிப்பினை அதுவேயாகும். உத்தியோகபூர்வ அனைத்து அரசியல் கட்சிகளும்
யுத்தத்திற்குப் பின்னால் அணிதிரண்டுள்ளன அல்லது போலி சர்வதேச சமாதான முன்னெடுப்புகள் சம்பந்தமாக மாயைகளை
வளர்க்கின்றன. இந்தக் கட்சிகளை சார்ந்த தொழிற்சங்கங்கள், அனைத்தும் யுத்தத்திற்காக அர்ப்பணிக்கப்பட
வேண்டும் என்ற அரசாங்கத்தின் கோரிக்கைக்கு சவால்விட மறுப்பது ஆச்சரியத்திற்குரியதல்ல.
சோசலிச சமத்துவக் கட்சி, இனப் பிளவுகளுக்கு எதிராக, தொழிலாள வர்க்கத்தின்
பின்னால் ஒடுக்கப்பட்ட வெகுஜனங்களை அணிதிரட்டி ஒரு சுயாதீனமான இயக்கத்தை கட்டியெழுப்ப
போராடிக்கொண்டிருக்கின்றது. நாம் தொழிலாளர்களை ஐக்கியப்படுத்துவதற்கான முதற் படியாக, வடக்கு மற்றும்
கிழக்கில் இருந்து இராணுவத்தை நிபந்தனையின்றி உடனடியாக வெளியேற்றுமாறும் முதலாளித்துவ ஆட்சியை
தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்தால் ஒரு ஸ்ரீலங்கா மற்றும் ஈழம் சோசலிசக் குடியரசினால்
பதிலீடு செய்யுமாறும் அழைப்பு விடுக்கின்றோம்.
ஒரு சில செல்வந்தர்களின் இலாபத்துக்காக அல்லாமல், பரந்த வெகுஜனத்தின்
உடனடித் தேவைகளை இட்டுநிரப்புவதற்காக பொருளாதாரத்தை சோசலிச அடிப்படையில் முழுமையாக மறு ஒழுங்கு
செய்ய சோ.ச.க. அழைப்பு விடுக்கின்றது. இந்த வேலைத் திட்டத்தை, தெற்காசியா மற்றும் அனைத்துலகிலும்
சோசலிசத்தை கட்டியெழுப்புவதற்கான பரந்த போராட்டத்தின் பாகமாக மட்டுமே புரிந்துகொள்ள முடியும்.
இடம்: கொழும்பு பொது நூலக கேட்போர் கூடம்
காலம்: நவம்பர் 13, மாலை 4 மணி |