World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Ninety percent of voting Writers' Guild of America members authorize strike

அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் வாக்குரிமை உடைய உறுப்பினர்களில் 90சதவிகிதத்தினர் வேலைநிறுத்தத்திற்கு ஒப்புதல் கொடுக்கின்றனர்

ஙிஹ் ஸிணீனீரஸீ க்ஷிணீறீறீமீ
24 October 2007

Use this version to print | Send this link by email | Email the author

அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் (WGA) வாக்குரிமை பெற்ற உறுப்பினர்கள் திரைப்பட, தொலைக்காட்சி தயாரிப்பாளர் கூட்டு (Alliance of Motion Picture and Television Producers - AMPTP) உடனான தற்போதைய ஒப்பந்தம் முடிந்த மறுநாளான நவம்பர் 1 முதல் சங்கம் வேலைநிறுத்தம் செய்யலாம் என்று ஒப்புதல் கொடுத்துள்ளனர்.

அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் கிழக்கு மற்றும் மேற்கு கடலோரக் கிளைகளின் மொத்த எண்ணிக்கை கிட்டத்தட்ட 12,000 ஆகும். இரு கடலோரப் பகுதிகளிலும் இருக்கும் எழுத்தாளர்களில் 6,000 பேர் வாக்களித்தனர். வேலைநிறுத்தத்திற்கு இசைவு கொடுத்து 90.3 சதவிகிதத்தினர் வாக்களித்துள்ளனர். இச்சங்கத்தின் வரலாற்றில் இது மிகப் பெரிய எண்ணிக்கையாகும்; 2001ல் ஒப்பந்தத்திற்கு இசைவு கொடுக்கப்படுவதற்கு வாக்களித்த 3,128 விட கணிசமாகக் கூடுதல் எண்ணிக்கையாகும்.

AMPTP யின் தலைவரான நிக் கெளண்டர், இந்த வாக்கை அதிகம் கருத்திலெடுக்காதவகையில், "வேலைநிறுத்தத்திற்கான வாக்கு என்பது வாடிக்கையாக நாட்டில் ஒவ்வொரு தொழிற்சங்கமும் பயன்படுத்தும் தந்திரோபாயம்தான்; பொதுவாக வாக்குகள் வேலைநிறுத்தத்திற்கு பெரும் ஆதரவைத்தான் கொடுக்கும்." என்றார்.

ஆனால் அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர்கள் பெரும்பாலானவர்களின் மத்தியிலுள்ள சீற்றத்தை இவர் குறைமதிப்பிடுகிறார். அவர்களுடய சராசரி வருமானம் ஆண்டு ஒன்றுக்கு $5,000க்கு சற்று மேலாகத்தான் உள்ளது. வேலைநிறுத்த ஆதரவு வாக்கு எழுத்தாளர்கள் கொண்டுள்ள வெறுப்புணர்வை பற்றி ஓரளவு குறிப்பை காட்டியுள்ளது. மாபெரும் நிறுவனங்களின் பாகங்களாகிய ஸ்டூடியோக்கள் மகத்தான இலாபம் ஈட்டுவதை அவர்கள் காண்கின்றனர்; ஸ்டூடியோ நிர்வாகிகள் ஊதியமாக பல மில்லியன் டாலர்கள் பெறுவதையும் காண்கின்றனர்.

"அங்கு ஏராளமான கோபமுற்ற எழுத்தாளர்கள் உள்ளனர்" என்று லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் உறுப்பினர் ஒருவர் WSWS இடம் கூறினார். "மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, எங்களுடைய தலைமையில், பட உற்பத்தியாளர்கள் DVD மற்றும் இணையதளத்தில் இருந்து கிடைக்கும் மேலதிக தொகை தொடர்பான ஏமாற்றத்தைத்தான் கொடுத்தனர். அப்படியும் நாங்கள் தொடர்ந்து உழைத்து, ஆர்வத்துடன் இருந்தோம். பல பட உற்பத்தியாளர்களும், ஸ்டூடியோ நிர்வாகிகளும் TV காட்சிகளை விரைவாக நிரப்புவதற்காக பட வசனங்களை இறுதி தவணையான அக்டோபர் 31க்குள் முடித்துவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் என்பதை நான் அறிவேன். 1988ல் நடைபெற்றது போல் மற்றொரு வேலைநிறுத்தம் கூடாது என்ற அச்சத்தை அவர்கள் கொண்டுள்ளனர்; அந்த வேலைநிறுத்தம் $500 மில்லியன் இழப்பை ஏற்படுத்தியது."

தன்னுடைய மிக முக்கியமான ஆத்திரமூட்டும் பேரம்பேசும் முன்வரைவு ஒன்றை AMTP கடந்த வாரம் கைவிடுவதாக அறிவிப்பதற்கு முன்பு, சங்கத்தின் தலைமையகத்திற்கு எத்தனை வேலைநிறுத்த ஆதரவு வாக்குகள் அனுப்பப்பட்டிருந்ததன என்பது தெளிவாகத் தெரியவில்லை: DVD களில் விற்பனைகளில் இருந்து கிடைக்கும் மேலதிக தொகைகள் திரைப்படம், தொலைக்காட்சி நிகழ்ச்சிகளின் செலவினங்களை எடுப்பதற்கு முன் வழங்கப்படமாட்டா என்பவையே அவை.

முதல் திட்டத்தின்கீழ், எழுத்தாளர்கள் உரிமைத் தொகையை விற்பனையில் இருந்து நிகர இலாபத்தை நிறுவனங்கள் பெற்ற பின்னர்தான் பெறுவர், மொத்த வருமானம் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட மாட்டாது. ஆனால் ஹாலிவூட்டின் கணக்குவழக்குகள் உண்மையில் இருந்து வெகுதொலைவில் உள்ளன என்பதில் புகழ் பெற்றுள்ளது; ஒரு திரைப்படம் அல்லது தொலைக்காட்சித் திட்டம் நூறாயிரக் கணக்கான மில்லியன் டாலர்கள் வருமானம் கொண்டுவந்தும் பல நேரமும் அது நஷ்டம் என்றுதான் சொல்லிக்கொள்ளும்.

ஒரு கேளிக்கை பிரிவு வக்கீல் வணிக ஏடுகளுக்கு கூறியதாக மேற்கோளிடப்பட்ட வகையில், "இந்த நகரத்தில் [ஹாலிவுட்] "நிகர இலாபங்கள்" என்பதை விட ஒரே மிகஅழுக்கான சொல் ''கடினமான நடிப்பு'' (casting couch) எல்லா முக்கிய நட்சத்திரங்களும், இப்பிரச்சினையில் ஸ்டூடியோக்கள் மீது வழக்குத் தொடர்ந்தவர்களும் இப்பொழுது மொத்த வருமானத்தில் சதவிகிதம் கேட்கின்றனரே ஒழிய நிகர இலாபத்தில் அல்ல."

உண்மை என்னவென்றால், DVD களுக்கு சந்தை கடந்த 20 ஆண்டுகளில் மகத்தான முறையில் பெருகியுள்ளபோதிலும், அவை ஒரு ஸ்டூடியோவின் முக்கிய வருமானத்தின் ஆதாரமாக இருந்தாலும், எழுத்தாளர்களுக்கான மிஞ்சிய விகிதம் 1985ல் இருந்து மாறாமல் உள்ளது: அதாவது மொத்த விற்பனை வருமானத்தில் 20 சதவிகிதம்தான். மாறாக, ஸ்டூடியோக்கள் செலவினங்கள் அதிகரிக்கையில் இப்பொழுதுள்ள முறை நீடித்தால்தான் தாங்கள் தப்பிப் பிழைக்க முடியும் என்று கூறுகின்றன.

எழுத்தாளர்களுக்கும் ஸ்டூடியோக்களுக்கும் இடையே பூசலில் மற்றொரு விடயம் இணையதளம் போன்ற புதிய தொழில்நுட்பத்தின் மூலம் ஸ்டூடியோக்கள் பெரும் வருமானங்களை முக்கியமாக அடைவது. இணையதளங்களில் (Cyberbase) காட்டப்படும் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளுக்கு எழுத்தாளர்கள் ஊதியம் ஏதும் பெறுவதில்லை; ஆனால் இணைய தளங்களும் ஸ்டூடியோக்களும் பெரும் பணத்தை பெறுகின்றனர். பல நேரங்களில் எழுத்தளர்கள் இக்காட்சிகளுக்கு விளம்பரங்களை இலவசமாக எழுதுமாறும் கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

WSWS இடம் சற்று விரிவாகவே பேசிய ஒரு எழுத்தாளர் கூறியது: "தொலைக்காட்சி நிகழ்வுகள் உற்பத்தியின் ஒரு பகுதியாகவே டிஜிட்டல் தகவல்களுக்கான (Podcasts) சிறு காட்சிகளுக்கும் வசனம் எழுதுமாறு எழுத்தாளர்கள் கட்டாயப்படுத்தப்படுகின்றனர். எழுத்தாளர்களின் வாதம் விளம்பரங்கள் பற்றியது ஆகும். எழுத்தாளரின் வேலை ஒரு நல்ல நிகழ்ச்சிக்கு எழுதி, நல்ல வசனங்களை அளிப்பதுதான். அதைப் பிரசாரம் செய்வதின் சுமையும் எழுத்தாளர்மீது போடப்பட்டால், தயாரிப்பாளர்கள் எங்களை (சில சமயம் எங்களை வற்புறுத்துகின்றனர்) விளம்பரப்பிரிவிலும் ஈடுபடுத்த முற்படுகின்றனர்; இது நிகழ்ச்சிக்கு எழுதுவதில் இருந்து முற்றிலும் வேறுபட்டது ஆகும்.

"ஒரு தொடர் எனக்குக் கொடுக்கப்படுகிறது என்றால், இந்த அதிகப்படி வேலையையும் நான்தான் செய்யவேண்டும் என்று எதிர்பார்க்க வேண்டியுள்ளது. ஒரு டிஜிட்டல் தகவலை இணைக்க என்னை அழைக்கிறார்கள் என்று வைத்துக் கொண்டால், என்னுடைய உணர்வு அதற்கான விளம்பரமும் நான்தான் எழுத வேண்டும், எனக்கு அதற்காகப் பணம் கிடைக்கும் என்பதாகும். எனக்கு பணம் கொடுக்கப்பட்டால், மகிழ்ச்சியுடன் அதைச் செய்வேன், ஏன் செய்யக்கூடாது? விளம்பரத்திற்கு வேலைசெய்தால் தயாரிப்பாளர்கள் நமக்கு அதற்கெனத் தனியாகப் பணம் கொடுக்க வேண்டும்.

"இத்தகைய விளம்பரம் இப்பொழுது எதிர்பார்க்கப்படுகிறது. மூன்று டிஜிட்டல் தகவல்கள் செய்யவேண்டும், எந்த ஊதியமும் கொடுக்கப்படமாட்டாது என்றால் அது தவறாக எங்களைப் பயன்படுத்திக் கொள்ளுவது போல் ஆகும்.

"எழுத்தாளரின் பணியை மக்கள் கூட்டத்திற்கு தயாரித்தது போல் செய்ய முடியாது. நாம் உற்பத்தி செய்வதில் ஒரு சிறு பகுதி எனக்குச் சொந்தம் என்றால், நாங்கள் கூலிக்கு எழுதுபவர்கள் என்பதற்குப் பதிலாக தயாரிப்பில் ஒரு பகுதி என்று உணர்வோம்.

"இப்பொழுது DVD க்காக கூடுதலான வேலைசெய்யவேண்டும் என கேட்டால், நாங்கள் எஞ்சிய தொகையில் இருந்தும் ஒரு பங்கு கொடுக்கப்பட வேண்டும். தொலைக்காட்சி நிகழ்வுகள் ஏராளமானவற்றை விற்பதற்கு அவர்கள் முயல்கின்றனர். எழுத்தாளர்கள் இதில் இருந்து ஏதேனும் பெறமுடியுமா என்றால், நாங்கள் மிகக் குறைவாகத்தான் பெறுவோம் என்று நான் WSWS க்கு உத்தரவாதம் கொடுக்க முடியும்."

ஹாலிவுட்டில் எழுத்தாளர்கள் சங்கம் அடுத்த ஜூன் 30 முடிவடையும் 100,000 உறுப்பினர் கொண்ட திரைப்பட நடிகர்கள் சங்க ஒப்பந்தம் வரை காத்திருக்க வேண்டும், (அதே நாளில்தான் இயக்குனர்கள் சங்கத்தின் ஒப்பந்தமும் முடிகிறது). அதன் பின் வேலைநிறுத்தம் செய்தால் நல்ல பேரம் பேசமுடியும் என்ற பேச்சு உள்ளது.

தொழிற்சங்க அதிகாரிகள் இத்தகைய கருத்துக்களை பரப்புவதற்கு காரணம் அவர்கள் AMPTP உடன் ஒரு போராட்டத்தை தவிர்க்க விரும்புகின்றனர் என்தாலேயே. சங்கத்தின் அனைத்து உறுப்பினர்களும் தங்கள் வேலைநிறுத்தத்தை அறிவித்து பின் துறையில் உள்ள சங்கத்தில் உள்ள, சங்கத்தில் இல்லாத மற்றைய தொழிலாளர்களை அதற்கு ஆதரவு கொடுக்குமாறு கேட்க வேண்டும். எழுத்தாளர்கள் லொஸ் ஏஞ்சல்ஸில் உள்ள எழுத்தாளர் தொழிலாள வர்க்கம் முழுவதற்கும் அழைப்புவிட வேண்டும்; அரசியல்வாதிகளிடம் அல்ல; ஏனெனில் அவர்களுடைய ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி பிரதிநிதிகள், தொழிற்சங்க முன்னாளை அதிகாரத்துவ மேயர் Antonio Villaraigosa உட்பட, ஸ்டூடியோக்கள் அல்லது மற்று நிறுவனங்களில் செல்வாக்கிற்கு உட்பட்டுத்தான் உள்ளனர்.

கேளிக்கை துறையில் பாரிய மாறுதல்கள் வந்துள்ளன. 1988 எழுத்தாளர்கள் வேலைநிறுத்தக் காலத்தில், ஸ்டூடியோக்கள் மற்றும் இணையதளங்கள் ஒரே தொகுப்பாக செயல்படவில்லை; இப்பொழுதோ அவை சர்வதேச பெருநிறுவன அமைப்புக்களின் கீழ் உள்ளன. இருபது ஆண்டுகளுக்கும் முன்பு பரிசோதனை முறையில்தான் இருந்தாலும் கேபிள் மூலம் வந்த போட்டி அதிக தொந்தரவைக் கொடுக்கவில்லை. ஆனால் இப்பொழுது கேபிள் தொலைக்காட்சி மகத்தான நிறுவனமாக மாறி ABC, CBS, NBC, Fox என்பதை தவிர வேறு எதையும் பார்க்கமுடியாது என்ற நிலையில் உள்ள பார்வையாளர்களிடம் கடும் போட்டியை செய்யவேண்டியுள்ளது. இருபது ஆண்டுகள் முன்பு iPod அல்லது DVD பற்றி எவர் கேள்விப்பட்டுள்ளனர்?

எழுத்தாளர்கள் சங்க அதிகாரத்துவம் ஸ்டூடியோ சொந்தக்காரர்களுடன் ஒரு அழுகிய உடன்பாட்டிற்கு வரத்தயாராக இருக்கலாம் என்ற குறிப்பு உள்ளது; அப்படித்தான் அவர்கள் மூன்று ஆண்டுகளுக்கு முன்பு DVD மேலதிகதொகை பற்றிய பிரச்சினை வந்தபோது செய்தனர்; எழுத்தாளர்களுக்கு ஒன்றும் கிடைக்கவில்லை.

அமெரிக்க எழுத்தாளர் சங்கத்தின் மேற்குபிரிவு தலைவரான Patric Verrone, Hollywood Reporter இடம் "எமது உறுப்பினர்களின் கணீரென்ற குரல் ஸ்டூடியோ தலைமை நிர்வாகிகள் மற்றும் குளிர்ச்சியான மூளை உடையவர்களை இப்பிரச்சினை பற்றி பேரம் பேச வைக்கும் என்று நம்புகிறேன்...இன்னும் 10 நாட்குள் பேரத்தை முடிப்பதற்கு உள்ளன; எங்கள் கண்ணோட்டத்தில் இருந்து வேலைநிறுத்தம் நடைபெறும் என்பது சாத்தியமல்ல."

கடந்த பேச்சுவார்த்தைகளின்போது தொழிற்சங்கம் தன்னுடைய உறுப்பினர்களை ஒப்பந்தக் காலக்கேடு கடந்தும் வேலை செய்யுமாறு உத்தரவிட்டது. இறுதியில் அவர்கள் DVD வருவாயில் இருந்து நியாயமான ஊதியத்திற்கான போராட்டத்தில் தோல்வி அடைந்துவிட்டனர்.