WSWS
:Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
ஜேர்மனி
Germany: Interviews with striking train
drivers
ஜேர்மனி: வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டுள்ள டிரைவர்களுடன் பேட்டிகள்
By our reporters
29 October 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
கடந்த வாரம் வியாழன் மற்றும் வெள்ளியன்று கடைசியாக ஜேர்மன் டிரைவர்கள் மேற்கொண்ட
வேலைநிறுத்தம் பெரும்பாலான ஜேர்மனிய பிராந்திய மற்றும் புறநகர் தடங்களில் போக்குவரத்தை முற்றிலும் நிறுத்தியது;
குறிப்பாக நாட்டின் கிழக்கு பகுதி இந்நிலைக்கு உள்ளாகியது. வார இறுதியில்,
Deutsche Bahn (German Railways DB)
தங்களுக்கு தனி ஒப்பந்தம் மற்றும் பல ஆண்டுகளாக சரிந்து கொண்டிருக்கும் வருமான நிலையில் கணிசமான ஊதிய
உயர்வையும் கோரியுள்ள இரயில் டிரைவர்களுக்கு எந்தவித அளிப்பும் கிடையாது என்று திட்டவட்டமாக கூறிவிட்டது.
பிராங்க்பேர்ட் அம் மைன், பேர்லின் மற்றும் எசன் பகுதிகளில் இருக்கும் வேலைநிறுத்த டிரைவர்களை
WSWS நிருபர்கள்
பேட்டி கண்டனர்.
பிராங்பேர்ட்
வேலைநிறுத்தம் தீவிரமடைந்து, வேலைநிறுத்ததத்திற்கு எதிராக அரசியல் வாதிகள்
மற்றும் செய்தி ஊடகத்தால் செய்யப்படும் பிரச்சாரம் பெருகி இருப்பினும், பிராங்பேர்ட் இரயில் நிலையத்தில்
இருக்கும் பெரும்பாலான இரயில் பயணிகள் வேலைநிறுத்தம் செய்துவரும் டிரைவர்களுக்கு ஆதரவைக் கொடுத்தனர்.
பல நேரமும் பயணிகள் மறியலில் ஈடுபட்டிருக்கும் டிரைவர்களுக்கு தங்களின் ஆதரவை, "அங்கேயே தொடருங்கள்"
அல்லது "தொடர்ந்து நடத்துக!" என்று கூறினர்.
WSWS உடன் உரையாடல் நடத்திய
இரயில் டிரைவர்கள், மறியலை அதிகரித்திருக்கையில்,
SPD மற்றும் அதன் தலைவர்
Kurt Beck இன்
அணுகுமுறை பற்றி அவர்கள் குறிப்பாக இகழ்ந்து பேசினர்.
இரயில் டிரைவர் Uwe
Hannsen பிரான்சில் இருப்பது போலன்றி ஜேர்மனியில் அரசியல்
வேலைநிறுத்தங்கள் தடைக்குள்ளாகி இருப்பது பற்றி வருந்தினார். வேலைகொடுப்பவர்கள் அடிப்படை உரிமைகள் மீது
உறுதியான அரசியல் தாக்குதல்களைத்தான் நடத்துகின்றனர். வேலைநிறுத்த உரிமைக்கு எதிரான தற்போதைய
தாக்குதலும் தன்னை கவலைக்கு உட்படுத்தியுள்ளதாக அவர் வலியுறுத்தினார்.
ஹான்சென்
"என்னுடைய கருத்தில், ஜேர்மனியில் இந்த வேலைநிறுத்தம் தெளிவாக ஒரு அரசியல்
பின்னணியை கொண்டுள்ளது. முதலாளிகள் பொதுவாக --Deutsche
Bahn மட்டும் இல்லை-- எங்களை வேலைநிறுத்தம் செய்யும் உரிமையை
தடைசெய்து, குறைமதிப்பிற்கு உட்படுத்த முயல்கின்றனர். அமெரிக்க நிலைமையை ஒட்டியுள்ள வேலை முறையை -
ஆள் நியமித்தல், நீக்கம் செய்தல் என்று அங்கு இருப்பது போல்-
இங்கு தோற்றுவிக்க முயல்கின்றனர்.
"இப்பொழுது நாங்கள் வாலைச் சுருட்டிக் கொண்டு இதை ஏற்றால், பின்
முதலாளிகள் தாங்கள் விரும்புவதை அடைந்துவிடுவர்: வேலைநிறுத்த உரிமைக்கு எதிரான முதல் வெற்றி மற்றும்
கூட்டாக பேரம் செய்யும் உரிமைக்கு எதிரான வெற்றி என்று. அதன் பொருள் ஒரு நியாயமான முறையில்
ஜேர்மனியில் கூட்டாக பேரம் பேசுதலுக்கு முற்றுப்புள்ளி வைத்தல் என்பது தொடங்கிவிடும். ஒரு கட்டத்தில் இது
இரயில் டிரைவர்களை மட்டும் அல்ல, அனைவரையும் பாதிக்கும். ஒரு தொழிற்சங்கம் ஒரு குறிப்பிட்ட பணியாளர்
குழுவிற்காக கூட்டு பேரம் நடத்த முற்பட்டால் அல்லது தன்னுடைய இலக்குகளை அடைவதற்காக வேலைநிறுத்த
நடவடிக்கையில் இறங்கிய உடனேயே அது தடை செய்யப்பட்டு விடும்.
"இதைத் தொடர்ந்து பணியாளர்களுக்கு அழுத்தம் கொடுப்பதற்கும் வேறு எந்த
வழிவகையும் கிடையாது; அதனால் முதலாளிகள் தாங்கள் விரும்புவதைச் செய்ய முடியும். ஆனால் இதை இன்னும்
எவரும் புரிந்து கொள்ளவில்லை என்று தோன்றுகிறது. சுரங்கத் தொழிலாளர்களுக்கு இவ்விதத்தில்தான் இங்கிலாந்தில்
தாட்சர் அரசாங்கத்தின்கீழ் நடந்தது. முழு தொழிற்சங்க அமைப்புக்களும் அங்கு உடைக்கப்பட்டன. இப்பொழுது
இரயில்வேக்களில் இங்கு அது முயற்சிக்கப்படுகிறது. முதல் முயற்சி இரயில் டிரைவர்கள்மீது உள்ளது. பிரான்சில்
அவர்கள் இரயில்வே ஓய்வூதியத் தொழிலாளர்கள் ஊதியத்தின்மீது இதைத்தான் செய்ய விரும்புகின்றனர். அனைத்துமே
பூகோளமயமாக்கல் மற்றும், நியாயமானது என்ற பெயரில் செய்யப்படுகிறது.
"டிரான்ஸ்நெட்டில் [இரயில் தொழிற்சங்கம்] இருக்கும் திருவாளர் ஹான்சன் பற்றி
நாங்கள் எதையும் கூறவேண்டிய தேவையில்லை. அந்த நபர்
Deutsche Bahn
இன் கண்காணிப்புக் குழுவில் உள்ளார்; அவர்களிடமிருந்து 1.7 மில்லியன் யூரோக்கள் பெறுகிறார். எப்படி
விஷயங்கள் பற்றி அவர் முடிவெடுக்கிறார், தன்னுடைய உறுப்பினரைகளையே விற்று விடுகிறார் என்பதை அது
நிர்ணயிக்கிறது. என்னுடைய பார்வையில் அவர் ஒன்றும் ஒரு தொழிற்சங்க பிரதிநிதி அல்ல; அவர் முதலாளிகளுடைய
எடுபிடி. இரயில்வேக்கள் தனியார்மயமாக்குதலை அவர் ஆதரிப்பதில் வியப்பு ஏதும் இல்லை; அதையொட்டித்தான்
அவர் முடிவுகளை எடுக்கிறார். இது ஒரு முடிந்துவிட்ட பேரம்."
பேர்லின்
இரயில் தொழிலாளர்களிடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுகிறது.
WSWS நிருபர்கள்
பேசிய இரயில் ஊழியர்கள் அனைவரும் டிரான்ஸ்நெட் அல்லது
GDBA
தொழிற்சங்கத்தால் தாங்கள் சரியாகப் பிரதிபலிக்கப்படுவதில்லை என்றுதான் உணர்ந்தனர். இந்த சங்கங்கள்
நிர்வாகத்துடன் தங்களை வலுவாக அடையாளம் கொண்டுள்ளன.
Deutsche Lokomotivführer (German Train
Drivers Union, GDL) சங்கம் இவ்விதத்தில் முன்னணியில்
உள்ளது. ஆயினும், WSWS
இடம் பேசிய பலர் அரசாங்கத்தில் நம்பிக்கையை தெரிவித்து, அது
Deutsche Bahn
தலைமை நிர்வாகி Mehdorn
மீது ஒரு முன்னேற்றமான உடன்பாட்டை வழங்க அழுத்தம் கொடுக்கும் என்று கருதுகின்றனர்.
பிராங்க்பேர்ட்டில் இருக்கும் தொழிற்சங்கத்தில் இல்லாத இரயில் டிரைவர் ஒருவர்,
வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு தான் ஆதரவு கொடுப்பதாகக் கூறினார். தன்னுடைய பெயரை அவர் தெரிவிக்க
விரும்பவில்லை; ஏனெனில் நிர்வாகம் அவரை, நிர்வாகத்தின் செய்திப் பிரிவில் இருந்து எவரேனும் அருகில் இருந்தால்
அன்றி, செய்தி ஊடகத்துடன் பேசக்கூடாது என்று தடை செய்துள்ளது.
விடுமுறை மற்றும் கிறிஸ்துமஸ் போனஸில் வெட்டுக்கள் என்பது ஒவ்வொரு ஆண்டும்
அவருக்கும் 2,500 யூரோக்கள் குறைவு என்ற பொருளைத்தரும் என்றார். மேலும் நீண்ட பணி நேரமும் இவர்
உழைக்க வேண்டும். இவருடைய பெண்ணும் ஒரு இரயில் டிரைவர்தான்; புறநகர்ப் போக்குவரத்துப் பிரிவில்
உள்ளார்; அவரும் குறைந்த ஊதியத்தைத்தான் பெற்று அதில் வாழ்க்கையை நடத்த வேண்டும்.
"GDL
தன்னுடைய சொந்தக் கூட்டு ஒப்பந்தத்தை கொண்டிருப்பது முக்கியமாகும்; ஏனெனில் டிரான்ஸ்நெட் வலுவாக
நிர்வாகத்துடன் பிணைந்துள்ளது. இது ஒரு சுயாதீனமான தொழிற்சங்கம் அல்ல. எனவேதான் மற்ற இரயில்வே
ஊழியர்களிடையே ஒற்றுமை அதிகமாக உள்ளது. அவர்கள் இப்பொழுது இரயில் டிரைவர்கள் வெற்றிபெற்றார்கள்
என்றால், தங்களுக்கும் அதிக ஊதியம் வேண்டும் என்ற கோரிக்கைகள் வெற்றிபெறும் வாய்ப்பு அதிகம் என்று
நினைக்கின்றனர். அதற்குத்தான் நிர்வாகம் துல்லியமாக அஞ்சுகிறது. எனவேதான் அவர்கள் எஞ்சின் டிரைவர்கள் மீது
கடுமையாக இருக்கின்றனர்.
"மேலும் மற்ற பணியாளர்களும் டிரான்ஸ்நெட்டில் இருந்து வெளியேறி ஒரு
சுயாதீனமான தொழிற்சங்கத்தில் சேர வேண்டும். இப்பொழுது ஒரு சில மாற்றீட்டு வழிவகைகள்தான் உள்ளன."
அரசாங்கம் இந்த தொழிற்துறை பூசலில் தொழிலாளர்கள் சார்பாக தலையிட
வேண்டும் என்று அவர் நினைத்தார்; ஏனெனில் அரசாங்கம்தான் முக்கிய பங்குதாரர். ஆனால் தனியார்மயமாக்கும்
திட்டங்களை பற்றி அவர் அதிக குறைகளைத்தான் கண்டுள்ளார். "சாதாரண இரயில் தொழிலாளி
தனியார்மயமாக்குதலுக்கு எதிர்ப்பை கொண்டுள்ளார். சந்தைக் கொள்கைகளுடன் இயைந்திருக்காத சமூக
கடப்பாடுகளை நாம் கொண்டுள்ளோம்."
இலாபம் ஈட்டும் பொருட்டு இரயில்வேக்கள் தவறான முறையில் பயன்படுத்தப்பட்டு
வருகின்றன Deutsche Bahn
குழு உறுப்பினர்கள் தங்களுக்கு மட்டும் மிகச்சிறப்பான ஊதிய உயர்வைக் கொடுத்துக் கொண்டிருக்கையில், அரசியல்
அல்லது செய்தி ஊடகத்தில் இருப்பவர்கள் எவரும் பதைபதைத்து இவ்வுயர்வு மிக அதிகம் என்று கூறவில்லை.
கோலோனில் இருந்து இதே காரணங்களுக்காக பெயரை வெளியிட விரும்பாத
மற்றொரு இரயில் டிரைவர், தன்னுடைய சக ஊழியர்களுடன் தன்னுடைய ஒற்றுமையை வெளிப்படுத்தினார். பெரிதும்
அழுத்தம் தரும் வகையில் பணிநிலைமைகள் உள்ளன என்று அவர் வலியுறுத்தினார். தன்னுடைய பணி ஆவணத்தை காட்டி
எவ்வளவு ஷிப்ட் மாற்றங்கள் உள்ளன என்றும் காட்டினார். ஒவ்வொரு வாரமும் அவர் வேறு நகரத்தில் இரவில்
தங்க வேண்டும். சில நேரம் 12 மணிநேர வேலைக்கு பின்னர், ஒன்பதே மணி நேர ஒய்விற்குப் பின் அவர் அடுத்த
ஷிப்டுக்கு செல்ல வேண்டியுள்ளது. இம்மாதம் அவர் நான்கு வார இறுதிநாட்களில், மூன்று இறுதிநாட்கள் உழைக்க
வேண்டியிருந்தது. பல இரயில் டிரைவர்களுடைய வேலை ஆவணங்கள் இதைவிட மோசமான நிலையைத்தான் காட்டின.
இரயில் டிரைவர்கள் வேலைநிறுத்தத்திற்கு ஆதரவை இவர் கொடுக்கிறார்; ஏனெனில்
அவர்கள் ஒரு முன்னோடியான பங்கை வகிக்கின்றனர். ஏனைய இரயில் தொழிலாளிகள் இவர்களுடைய வேலைநிறுத்தம்
வெற்றிபெற்றால் ஊக்கம் அடைவர். "டிரான்ஸ்நெட் இரயில் தொழிலாளிகளை பிரதிபலிக்கவில்லை. குறிப்பாக
ஒட்டுனர்கள் மற்றும் அவர்களுடைய சீரற்ற பணி நேரம் பற்றி அது சிறிதும் கவலைப்படவில்லை,
பிரதிபலிக்கவில்லை." அரசாங்கம் தலையீடு செய்தால் நலன் ஏதும் வரும் என்று அவர் நினைக்கவில்லை.
"அரசாங்கமும் இரயில்வேக்களின் சொந்தக்காரர் என்ற முறையில் தன்னுடை நலன்களை கொண்டுள்ளது."
GDL மறியலில் கலந்து கொண்ட,
1990ல் இருந்து தொழிற்சங்க உறுப்பினராக இருக்கும் ஒரு நாற்பது வயதான டிரைவர், மிக முக்கியமான
கோரிக்கை கூட்டாக உடன்பாட்டிற்கு பேரம் நடத்தும் உரிமைதான் என்றார். இரயில் டிரைவர்களுக்கு முற்றிலும்
வேறுபட்ட நடவடிக்கைகள் உள்ளன; அவை பொதுவான கூட்டு ஒப்பந்தத்தில் பிரதிபலிப்பது இல்லை. அவர்கள்
வேலைநாட்களில் ஒவ்வொரு நிமிடமும் சரியாக திட்டமிட்டு செயல்படுத்தப்படுகிறது.
Chemnitz நீதிமன்றம் சமீபத்தில்
அளித்துள்ள தீர்ப்பு அவருக்கு அதிர்ச்சியை கொடுத்துள்ளது; இத்தீர்ப்பானது, நீண்ட தூரம் மற்றும் சரக்கு
போக்குவரத்தில் வேலைநிறுத்தங்களை சங்கம் மேற்கொள்ள தடை விதித்துள்ளது. "முறையீட்டில் நீதிமன்ற உத்தரவு
உறுதிப்படுத்தப்பட்டால், சர்வாதிகார நடவடிக்கைகள் பற்றித்தான் பேச முடியும். மற்ற தொழிற்சங்கங்கள் இதை
எதிர்க்கவில்லை என்றால் --அப்படித்தான் தோன்றுகிறது-- அவை பயனற்றவை என்று போய்விடும். நிர்வாகத்தின்
நலன்களுடன்தான் அவர்கள் வலுவாகப் பிணைத்துக் கொள்ளுவர்.
பல பயணிகளும் தங்கள் ஒற்றுமையை வெளிப்படுத்தினர். ஆனால் பலருக்கும்
வேலைநிறுத்தத்தின் முக்கியத்துவம் பற்றி தெரியவில்லை. இதை ஒரு வாடிக்கையான தொழிற்துறை பூசல் என்றுதான்
அவர்கள் காண்கின்றனர். சிலர் நனவுடன் இரயில் டிரைவர்களுடைய உயர் ஊதியக் கோரிக்கைக்கு ஆதரவு
கொடுத்துள்ளனர். "கடைசியாக கிட்டத்தட்ட முழுகிக் கொண்டிருக்கும் ஊதியங்கள் பற்றி எவரேனும் ஏதும் செய்ய
முன்வந்துள்ளனர்" என்று ஒரு பயணி குறிப்பிட்டார்.
ஒரு ஓய்வு பெற்ற பொறி இணைப்பாளர், திரு முல்லர், டிரான்ஸ்நெட்டை
விமர்சித்தார்; தொழிற்சங்கத்தை Deutsche Bahn
யின் தலைமை நிர்வாகியான Mehdorn
உடைய "செல்லப்பிள்ளை" என்று குறிப்பிட்டார். முல்லரை பொறுத்தவரையில்
Chemintz
நீதிமன்ற உத்தரவு நீதிமன்றங்களின் சுதந்திரத்தின் முடிவைக் காட்டுகிறது என்று பொருள் என்றார்.
வேலைநிறுத்தங்கள்தான் இரயில்வேக்கள் தனியார்மயமாக்குதலை தாமதப்படுத்தும் என்ற கருத்தையும் அவர்
தெரிவித்தார். "தனியார்மயமாக்கல் எந்த நலனையும் செய்யவில்லை. நீர், எரிவாயு அல்லது எந்தப் பிரிவை
தனியார் மயமாக்கினாலும், அதில் நன்மை ஏற்படவில்லை." 30 சதவிகித ஊதிய உயர்வு பற்றி நிர்வாகம் இத்தனை
ஆத்திரம் ஏன் அடைகிறது என்பது தனக்குப் புரியிவில்லை என்றார். ஒரு இளைய எஞ்சின் டிரைவர், ஒரு குடும்பத்தை
காப்பாற்ற முடியுமா என்று இன்று மிகக் கடினமாக சிந்திக்க வேண்டி இருக்கும்.
மறியல் இடத்திற்கு ஒரு வேலையில்லாத ஆசிரியர் அவருடைய இரயில் இரண்டு மணி
நேரம் தாமதமாக வந்திருந்த போதிலும், வேலைநிறுத்தம் செய்பவர்களுக்கு நல்வாழ்த்துக்கள் கூறுவதற்காக
வந்திருந்தார். "ஒவ்வொரு பணியிடத்திலும் நிலைமை இப்படித்தான் உள்ளது. இறுதியில் எவரேனும் போராடத்
துணிந்திருப்பது நல்லதுதான்."
பேர்லின்
Ostbahnof ல்
ஒரு சர்ச்சை
WSWS நிருபர்கள் பேர்லின்
Ostbahnof
நுழைவாயில் அருகே மறியலிடத்தில் வேலை நிறுத்தத்திற்கு ஆதரவு கொடுக்கும் அறிக்கை ஒன்றை வினியோகிக்க தொடங்கியபோது,
இரயில்வே பாதுகாப்பு ஊழியர்கள் உடனடியாக அங்கு வந்து இவர்களை வெளியேறுமாறு கூறினர். மறியல் செய்யும்
இரயில் டிரைவர்கள் தங்கள் தடையற்ற பேச்சு உரிமை பற்றி வலியுறுத்தினாலும், பாதுகாப்பு பிரிவினர் பயணிக்காதவர்கள்
கட்டிடத்தைவிட்டு உடனே அகல வேண்டும் என்று கூறினர். இறுதியில் இரண்டு இரயில் டிரைவர்கள் நிலையத்திற்கு வெளியே
விவாதத்தை தொடர்வதற்கு வந்துவிட்டனர்.
அவர்களில் ஒருவர் தன்னுடைய வேலைப் பணி ஆவணத்தை காட்டினார்; அதில் வாரத்திற்கு
55 மணி நேரம் இருந்தது; தடங்களில் கட்டமைப்பு வேலைகளினால் எப்படி அதிக ஷிப்ட்டுக்கள் வேலை செய்ய
வேண்டியுள்ளது என்றும், நோயினால் திடீரென வராமல் இருப்பவர்களு பதிலாக வேலை செய்வதால் இப்படி நேரிடுகிறது
என்றும் குறிப்பிட்டார். வேலையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளவர்கள் எண்ணிக்கை மிகவும் குறைவாக இருக்கிறது என்றும் பல
நேரமும் உரிய, தேவையான ஊழியர்கள் இருப்பது இல்லை என்றும் குறிப்பிட்டார். "சக ஊழியர்கள் நோய்வாய்ப்பட்டால்
மற்றவர்கள் அதிக வேலை செய்ய வேண்டியுள்ளது" என்று கூறிய அவர் இரக்கமற்ற முறையில் டிரைவர்கள் உடலளவிலும்,
பணத்தளவிலும் சுரண்டப்படுவது பற்றி உதாரணங்களை கூறினார்.
தான் படித்துக் கொண்டிருக்கும்
Emile Zola
வின் நாவலான L"argent (காசு)
பற்றி உற்சாகமாக அவர் பேசினார். இந்த நூல் மிகவும் நவீன கருத்தை கொண்டுள்ளது என்று அவர் கூறினார். "
இல்லாத பணத்துடன் செயல்படுவோர், பேராசை கொண்டோர் பங்குச் சந்தையால் ஆதாயம் பெறுவர் என்பதை
விளக்குகிறது". தனியார்மயமாக்கப்பட்ட Deutsche
Telekom ல் உள்ள பங்குகள் இதற்கு தற்காலத்திலிருந்து மிகச்
சிறந்த உதாரணம் என்று அவர் கூறினார்.
இவரது இளவயது சக ஊழியர் இச்சர்ச்சையின் வரவிருக்கும் போக்கு பற்றி கவலை
தெரிவித்தார். "1982ல் பிரிட்டனில் வேலைநிறுத்தம் செய்த தொழிலாளர்களுக்கு எதிராக தொழிற்சங்கங்கள்
நொருக்கப்பட்டபொழுது, தாட்சர் நடந்து கொண்டது போன்ற நிலைமை வருமோ என அஞ்சுகிறேன்.
Chemnitz
நீதிமன்றத் தீர்ப்பின் முக்கியத்துவம் என்ன? அந்த திசையைத்தான் அது சுட்டிக் காட்டுகிறது." |