இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. கூட்டம் நடைபெறவுள்ளது
26 May 2007
சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் அமைப்பும் (ஐ.எஸ்.எஸ்.ஈ.) மற்றும்
இலங்கை சோசலிச சமத்துவக் கட்சியும், கொழும்பு பொது நூலக மண்டபத்தில் எதிர்வரும் செய்வாய்க்கிழமை
பொதுக் கூட்டமொன்றை நடத்தவுள்ளன. ஈராக் மீதான அமெரிக்க ஆக்கிரமிப்பும் ஏகாதிபத்திய உலகப் போரின்
ஆபத்தும் என்ற தலைப்பில் இந்தக் கூட்டம் நடைபெறும்.
இலங்கையில் ஐ.எஸ்.எஸ்.ஈ. தலைவரான கபில பெர்னான்டோ, இலங்கையில் தமிழ்
சிறுபான்மையினருக்கு எதிரான உள்நாட்டு யுத்தம் உட்பட, யுத்தத்திற்கு முடிவுகட்டுவதற்கான அனைத்துலக சோசலிச
முன்நோக்கு பற்றிய பிரதான அறிக்கையொன்றை முன்வைப்பார்.
திகதியும் நேரமும்: மே 29, செவ்வாய்கிழமை மாலை 3 மணி.
இடம்: பொது நூலக மண்டபம், கொழும்பு |