World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

Tamils arrested in Australia under Howard's draconian "anti-terrorism" laws

ஆஸ்திரேலியாவில் ஹோவர்டின் கடுமையான "பயங்கரவாத-எதிர்ப்பு" சட்டங்களின் கீழ் தமிழர்கள் கைது

By Mike Head
7 May 2007

Use this version to print | Send this link by email | Email the author

சிட்னி மற்றும் மெல்போர்னில் தொடர்ச்சியான கூட்டரசு மற்றும் மாநில அரசின் போலீஸ் நடவடிக்கைகளை ஒட்டி, மே 1ம் தேதி "பயங்கரவாத" குற்றச் சாட்டுக்களின் பேரில் இரண்டு முக்கிய ஆஸ்திரேலிய தமிழ் சமூக உறுப்பினர்கள் கைது செய்யப்பட்டனர்; இன்னும் பல கைதுகள் வரும் என்று போலீசார் பகிரங்கமாக அறிவித்துள்ளனர்.

இலங்கையில் உள்ள பிரிவினைவாத LTTE க்கு ஆதரவாளர்கள் என்று அமெரிக்காவிலும் பிரான்சிலும் இதேபோல் பல கைதுகள் நிகழ்ந்ததை அடுத்து இந்த நடவடிக்கை இங்கு ஏற்பட்டுள்ளது. கடந்த ஆண்டு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச நாட்டை மீண்டும் உள்நாட்டுப் போரில் தள்ளும் வகையில் LTTE க்கு எதிராக 2002ம் ஆண்டு போர்நிறுத்த ஒப்பந்தத்தை மீறிய வகையில் இராணுவத் தாக்குதல்களுக்கு ஆணையிட்டதன் மூலம் நாட்டை உள்நாட்டு யுத்தத்தில் மூழ்கடித்தார். உட்குறிப்பாக ராஜபக்சவுக்கு ஆதரவு கொடுத்துள்ள நிலையில், வாஷிங்டன் தலைமையில் மேலைநாடுகள் இப்பொழுது புலம்பெயர்ந்து வாழும் தமிழர்கள் மத்தியில் LTTE ஆதரவு வலைப்பின்னல்களை முடக்க முற்பட்டுள்ளன.

ஆஸ்திரேலியாவில் LTTE ஒரு பயங்கரவாத அமைப்பு என்று பட்டியலிடப்படவில்லை என்றாலும்கூட, ஒரு முன்னாள் தமிழ் செய்தித்தாளின் ஆசிரியர், 32 வயதான ஆரூரன் வினாயகமூர்த்தி மற்றும் 36 வயதான சிவராஜா யாதவர் இருவரும் "பயங்கரவாத அமைப்பிற்கு" நிதி கொடுத்தல், ஆதரவளித்தல் மற்றும் உறுப்பினராக இருத்தல் என்ற குற்றச் சாட்டுக்களை எதிர்கொள்ளுகின்றனர். இரு குற்றச் சாட்டுக்களுக்கு அதிகபட்சம் 25 ஆண்டுகள் சிறைவாசம், இதைத்தவிர இன்னும் 10 ஆண்டுகள் சிறைவாசம் என்ற வகையில் இவர்கள் நீண்டகால சிறைத் தண்டனையை பெறக் கூடும். இதற்கிடையில், பல மாதங்கள் விசாரணை வருவதற்காக இவர்கள் சிறையில் வாடுவர்.

ஹோவர்ட் அரசாங்கத்தின் "பயங்கவராத எதிர்ப்பு" சட்டங்களின்கீழ் முஸ்லிம்கள் அல்லாதவர்களில் இவ்விருவரும் முதன் முதலாகக் கைது செய்யப்பட்டுள்ளனர். இஸ்லாமிய சமூகத்தை பாதிக்கவும், அரக்கத்தன்மையுடையதாக காட்டுவதற்கு மட்டும் அல்லாமல், ஆஸ்திரேலிய அரசாங்கத்தால் அரசியல் முறையில் ஆபத்து என்று கருதப்படுபவர் எவர்மீதும் குற்ற நடவடிக்கைகள் சட்டபூர்வமாக எடுக்கப்பட முடியும் என்று இக்கைதுகள் நிரூபணம் செய்துள்ளன.

இருவருக்கும் எதிரான குற்றச்சாட்டுக்கள் பற்றிய விவரங்களை போலீஸ் அதிகாரிகள் கொடுக்க மறுத்துள்னர்; ஆனால் ஆஸ்திரேலியாவில் எவ்வித பயங்கரவாத நடவடிக்கை அல்லது திட்டத்திற்கான சான்றுகளும் இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டுள்ளனர். மாறாக அவர்கள் உதவித் தொகை திட்டங்களுக்கு நிதி திரட்டுகின்றனர் என்ற குற்றத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்; இதில் 2004 சுனாமி பாதிப்பாளர்களுக்கு திரட்டிய உதவி அடங்கும்; LTTE க்கு நிதியத்தில் ஒரு பகுதி செல்லும் என்பதை இவர்கள் அறிந்ததாக கூறப்படுகிறது; LTTE, சுனாமி பாதிப்பிற்குட்பட்ட வடக்கு, கிழக்குப் பகுதிகளில் கட்டுப்பாட்டைக் கொண்டுள்ளது.

"பயங்கரவாத நடவடிக்கை" மற்றும் "பயங்கரவாத அமைப்பு" என்று 2002ல் இயற்றப்பட்ட சட்டத்திற்கு அதிக அளவிலான வரையறைகளை கொடுக்க அரசாங்கத் தரப்பு பெரிதும் நம்பியிருக்கும். ஓர் அரசாங்கத்தை "மிரட்ட", "வற்புறுத்த" முயற்சிக்கும் வெளிநாட்டு அரசியல் குழுவிற்கு ஆதரவு தருதல், நிதி திரட்டல் ஆகியவற்றில் ஈடுபட்டால் எவரும் தண்டிக்கப்படாலாம்; இதில் நாட்டின் உள்கட்டுமானத்தை இடையூறு செய்தல், சேதப்படுத்துதல் ஆகியவையும் அடங்கும். இந்த விதிகள் ஒரு குழு உத்தியோகபூர்வமாக "பயங்கரவாதக்குழு" என்று அறிவிக்கப்படா விட்டாலும், மனிதாபிமான திட்டங்களில் தொடர்பு கொண்டிருந்தாலும் பொருந்தும்.

இத்தகைய தெளிவற்ற வரையறைகளின் கீழ், நிறவெறிபாகுபாடு எதிர்ப்பு இயக்கம், ஐரிஷ் குடியரசிற்கு ஆதரவு, அல்லது கிழக்கு தீமூரிய சுதந்திரக் குழுக்கள் என்று எவருக்கு உதவியிருந்தாலும் பயங்கரவாதிகள் என்று அவர்கள் முன்னர் சிறையிடப்பட்டிருக்க முடியும். இச்சட்டங்கள் தற்பொழுது ஹெஸ்பொல்லா நடத்தும் தெற்கு லெபனான் திட்டங்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்படுகின்றன; அங்கு கடந்த ஆண்டு இஸ்ரேலிய மின்னல்வேகத் தாக்குதல்களால் பேரழிவு நேர்ந்துள்ளது. "பயங்கரவாதம்" அல்லது "சுதந்திரம்" என்று உத்தியோகபூர்வமாக ஓர் இயக்கம் குறிப்பிடப்படுவது முற்றிலும் அப்பொழுது அரசாங்கத்தை அமைத்துள்ளவர்களின் அரசியல் தேவைகள் மற்றும் கணிப்புக்கள் ஆகியவற்றை பொறுத்து உள்ளது.

LTTE ஆஸ்திரேலியாவில் சட்டவிரோதமாக ஆக்கப்படவில்லை என்றாலும், நிதிக்காரணங்களுக்காக ஐ.நா. பாதுகாப்புக் குழுவினால் 400க்கும் மேற்பட்ட ஏனைய குழுக்கள், மற்றும் தனி நபர்களுடன் சேர்த்து "பயங்கரவாதத் தன்மை" உடையது என்று குறிக்கப்பட்டுள்ளது. பட்டியலில் உள்ள மற்றவற்றில், பெரும்பாலும் புஷ் நிர்வாகத்தின் வேண்டுகோளின்படி சேர்க்கப்பட்டவை, ஸ்பானிய, பால்கன், பெரூவிய, ஐரிஷ், குர்திஸ், அப்கான், ஈராக்கிய மற்றும் பாலஸ்தீனியக் குழுக்கள் அடங்கியுள்ளன. இக்குழுக்களுக்கு ஆதரவு தரும் அமைப்புக்களின் சொத்துக்கள் பறிமுதல் செய்யப்படலாம்; அவற்றின் உறுப்பனர்கள் சிறையில் அடைக்கப்படலாம்.

சமீபத்திய சோதனைகளும் கைதுகளும் இரண்டு ஆண்டுகளாக நடைபெற்றுவரும் செயல்களின் ஒரு பகுதியே ஆகும். இவை கூட்டாட்சி ஹோவர்ட் அரசாங்கம் மற்றும் மாநில லேபர் விக்டோரியா, நியூ செளத் வேல்ஸ் அரசாங்கங்களால் கூட்டாக நடத்தப்படுகின்றன. நவம்பர் 2005ல் மத்திய மற்றும் மாநில போலீஸ், உளவுத்துறை அதிகாரிகள் பல தமிழர்களின் இல்லங்கள், வணிக இடங்கள் ஆகியவற்றில் சோதனை நடத்தினர்; இதில் ஐவர் காவலில் வைக்கப்பட்டு பின்னர் குற்றச் சாட்டு ஏதும் இன்றி விடுவிக்கப்பட்டனர். அதே மாதத்தில் 18 முஸ்லிம்கள் கைதுசெய்யப்பட வகை செய்திருந்த முஸ்லிம்கள் மீதான திடீர்ச்சோதனை போல், பின்னர் குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்படும் என்று போலீசார் கூறினர்.

2005 சோதனைகள் இரண்டு தொடர்புடைய நோக்கங்களை கொண்டிருந்தன. முதலாவது ஆஸ்திரேலியாவில் பயங்கரவாதம் பற்றி அச்சங்களை அதிகப்படுத்தி, கூட்டாட்சி மற்றும் மாநில சட்டமன்றங்களில் பயங்கரவாத எதிர்ப்பு புதிய கடின சட்டங்கள் இயற்றுவதை நியாப்படுத்துதல் ஆகும். இந்த போலீஸ் அரசாங்க நடவடிக்கைகளில் விசாரணையின்றி காவலில் வைத்தல், நாட்டுத் துரோகம், மற்றும் ஈராக், ஆப்கானிஸ்தானில், ஆசிய பசிபிக் பகுதியில் ஆஸ்திரேலிய இராணுவ தலையீடுகள் போன்ற அரசாங்கத்தின் கொள்கையை பற்றிய விமர்சனத்தை வாய் மூடப்பண்ணக் கூடிய "பயங்கரவாதத்தை ஆதரித்தல்" ஆகியன உள்ளடங்கும்.

இரண்டாவது நோக்கம் ராஜபக்சவின் கோரிக்கையை நிறைவேற்றுவது ஆகும்; தான் பதவியேற்றிருந்த மாதத்தில் அவர் LTTE மீது சர்வதேசரீதியில் கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கோரியிருந்தார் முன்பு பிரதமராக இருந்து, பின்னர் ஜனாதிபதியான. ராஜபக்சவினால் அமைக்கப்பட்டிருந்த உறுதியற்ற சிறுபான்மை அரசாங்கம், வாழ்க்கைத்தரங்கள் பெரும் சரிவிற்குட்படல் மற்றும் ஆழ்ந்த சமூக சமத்துவமின்மை நிலவுதல் இவற்றிற்கு எதிரான அதிருப்தியை திசை திருப்பும் வகையில் வகுப்புவாத உணர்வுகளை சிறுபான்மை தமிழ் மக்களுக்கு எதிராக தூண்டிவிடுவதில் முனைப்புக் காட்டி நின்றது.

LTTE ஐ தன்னுடைய வலிமையான கிழக்கு பகுதிகளில் இருந்து கணிசமாக விரட்டியுள்ள இலங்கை இராணுவத் தாக்குதல்கள் பெருகியுள்ள நிலையின் நடுவில் வந்துள்ள இம்மாதக் கைதுகள் ராஜபக்ச ஜனாதிபதி பொறுப்பை ஏற்றுக்கொண்டதில் இருந்து கிட்டத்தட்ட 4,000 பேர் புதுப்பிக்கப்பட்ட போரில் மடிந்துள்ளதாகவும், 300,00 மக்கள், பெரும்பாலும் தமிழர்கள், இடம் பெயர்ந்துள்தாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கு விடையிறுக்கும் வகையில் LTTE யினர் தொடர்ந்து பஸ் குண்டுகள், நவீனமற்ற வான் தாக்குதல்கள் ஆகியவற்றை நடத்தியுள்ளனர்; இதில் சமீபத்தியது கடந்த வாரம் நடத்தப்பட்டபோது கொழும்பு முழுவதும் பெரும் பீதிக்கு உள்ளாயிற்று.

கடந்த ஆகஸ்ட் மாதம் புஷ் நிர்வாகம் ராஜபக்சவுக்கு ஆதரவு தரும் வகையில் LTTE க்கு ஆதரவு கொடுப்பதாக டஜனுக்கு மேலானவர்களை கைது செய்து தன் குறிப்பை காட்டியது. இவ்வாண்டு ஏப்ரல் கடைசியில், அமெரிக்க போலீசார் மற்றொரு LTTE எனக் கருதப்படுபவரை "வெளிநாட்டு பயங்கரவாத அமைப்பிற்கு பொருள் உதவி கொடுக்கிறார்" என்றுகூறி கைது செய்தது. கடந்த மாதம் பிரெஞ்சுப் போலீசார் டஜன் நபர்களை LTTE ஆதரவாளர்கள் எனச் சந்தேகிக்கப்படுகின்றனர் எனக் கூறிக் கைது செய்ததனர்; இவர்களில் சிலர் பின்னர் "பயங்கரவாத அமைப்புடன் குற்றத் தொடர்புடையவர்" என்று குற்றம் சுமத்தப்பட்டனர். செய்தி ஏடுகளின் தகவல்படி, பிரான்சின் பயங்கரவாத-எதிர்ப்பு முகவாண்மை அதன் ஒத்த பணிகளை செய்து வரும் அமெரிக்க, பிரிட்டன், நெதர்லாந்து, ஜேர்மனி, இத்தாலி, கனடா, ஆஸ்திரேலிய அமைப்புக்களுடனும் இணைந்து செயல்படுவதாக தெரிகிறது.

உலக சோசலிச வலைத் தளமானது LTTE இன் தமிழ் பிரிவினைவாத அரசியல் வேலைத்திட்டத்தை அடிப்படையிலேயே எதிர்க்கும் அதேவேளை, உள்நாட்டு யுத்தத்திற்கான பிரதான பொறுப்பும், 70,000 பேர் உயிரிழப்பும் கொழும்பில் உள்ள சிங்கள அரசியல் அமைப்புடன் அமைந்திருக்கிறது. அது 1948 சுதந்திரமடைந்ததிலிருந்து தொழிலாள வர்க்கத்தையும் கிராமப்புற மக்களையும் பிளவுபடுத்தும் ஒரு வழிமுறையாக தமிழ் விரோத பாரபட்சத்தை தனக்கு அடிப்படையாக கொண்டிருக்கிறது. 1983ல் இந்த கொள்கை ஒரு உள்நாட்டு யுத்தமாக வெடித்ததுடன் அடுத்தடுத்து வந்த அரசாங்கங்கள் அதன் பின்னர் இருந்து நச்சுத்தனமான வகுப்புவாத யுத்தத்தை தொடுத்தது.

ஆஸ்திரேலியாவின் தலைமை அரசாங்க வக்கில் பிலிப் ருட்டாக் இவ்வார கைது நடவடிக்கைகளில் போலீசார் தங்கள் இலக்கின்படி, அரசியல் அழுத்தமோ, உத்தரவுகளோ இல்லாமல், செயல்பட்டுள்ளதாக கூறியுள்ளார். ஆனால் விக்டோரியா மாநிலத்தின் துணை போலீஸ் ஆணையாளரான Kieren Walshe, போலீஸ் அரசியல் இயக்கத்தின்கீழ் செயலாற்றியதாக ஒரு செய்தியாளர் கூட்டத்தில் குறிப்பிட்டுள்ளார்: "ஆஸ்திரேலிய அரசாங்கமும் விக்டோரிய அரசாங்கமும் பயங்கரவாதத்தை எதிர்ப்பதில் முனைப்பு கொண்டுள்ளனர் என்பதை நாம் ஏற்க வேண்டும்" என்றார் அவர்.

தன்னுடைய பங்கிற்கு இலங்கை அரசாங்கம் ஆஸ்திரேலிய அதிகாரிகளுடன் பல மாதங்களாக இணைந்து செயலாற்றி வருவதாக பெருமைப்படுத்தி கொண்டுள்ளது. "அங்கு மேலும் பல கைதுகளை நாங்கள் எதிர்பார்க்கிறோம்" என்று வெளியுறவுத் துறை மந்திரி பலிதா கோஹோன ஆஸ்திரேலிய ஒலிபரப்புக் கூட்டுஸ்தாபன ரேடியோவிடம் கூறினார். "மற்றும் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பவர்கள் பற்றியும் நாங்கள் அறிவோம்; ஆஸ்திரேலிய அரசாங்கம் அவர்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவும் ஊக்குவிப்போம்" என்று அவர் கூறினார்.

ஆஸ்திரேலிய சோதனைகள் அறிவிக்கப்பட்டு முடிந்தவுடன், வெளியுறவு மந்திரி அலெக்சாந்தர் டெளனர் போலீஸ் அதிகாரிகள் மற்றும் மக்கள் செய்தி ஊடகத்துடன் இணைந்து LTTE ஐ ஒரு பயங்கரவாத அமைப்பு என்று முத்திரையிட்டதில் சேர்ந்துகொண்டார்; இருவருக்கு எதிரான குற்ற நடவடிக்கைகளில் இது ஒரு சட்டப் பிரச்சினை இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களுடைய குற்றங்களை பற்றி அறிவிப்பதற்கு போலீசார் ஒரு செய்தி ஊடக மாநாட்டை நடத்தினர். விக்டோரிய போலீஸ் தலைமை ஆணையர் Christine Nixon 2004 சுனாமி உதவித்திட்டத்திற்கு பணம் திரட்டுவது என்ற பதாகையில் இவர்கள் மக்களை ஏமாற்றியதாக குற்றம் சாட்டியுள்ளார். இதன் பின்னர் இவ் வழக்கை பற்றிய முன்கருத்து தெரிவிக்கும் வகையில் ஆஸ்திரேலிய பணம் LTTE க்கு செல்லுகிறது என்று டெளனர் அறிவித்தார்.

நீதிமன்றத்தில் குற்றம் சாட்டப்பட்டவர்களுடைய வக்கீலான ரோப் ஸ்டாரி போலீசார் செய்தியாளர் கூட்டம் நடத்தியதின் மூலம் தீர்ப்புக் கூறும் வரை குற்றம் சாட்டப்பட்டவர்கள் நிரபராதிகள் என்று கொள்ளப்பட வேண்டிய சூழலை மாசுபடுத்தியற்கு எதிர்ப்புத் தெரிவித்தார்; மேலும் பிணையில் எடுப்பதற்கான மனுத் தாக்கல் செய்வதற்கியலாத வகையில் எத்தகைய குற்றச்சாட்டுக்கள் எழுப்பப்பட்டுள்ளன என்பதை கூறுவதற்கும் போலீசார் மறுப்பதாக அவர் கூறினார். நீதிபதி Clive Alsop தனக்கு "அரசியல் அறிக்கைகள்" பற்றி அக்கறை இல்லை என்று அறிவித்தார்.

மீண்டும் "பயங்கரவாதம்" பற்றிய ஆதாரமற்ற குற்றச் சாட்டுகள் அடிப்படை அரசியல், சட்டபூர்வ, குடியுரிமை உரிமைகளுக்கு எதிராக நேரடித் தாக்குதல் நடத்துவதற்கு பயன்படுத்தப்படுகின்றன. ஆஸ்திரேலிய உள்நாட்டு, வெளிநாட்டு கொள்கைகளுக்கு அச்சுறுத்தல் என்று கருதப்படும் எவர்மீதும் இலக்கு வைக்க வாஷிங்டனால் தொடக்கப்பட்ட போலித்தனமான "பயங்கரவாதம் மீதான போர்" என்பதை சுரண்டுவதற்கு, இந்த அபிவிருத்திகள் ஆஸ்திரேலிய அரசாங்கத்திற்கான அசாதாரணமான நம்பிக்கையை வெளிச்சம் போட்டுக் காண்பிக்கிறது.