WSWS :Tamil
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
India's elite touts Tata's Corus Steel takeover as
proof India a "global player"
"உலகச் சந்தையில்" இந்தியா சிறந்துள்ளது என்பதற்கு கோரஸ் எஃகு நிறுவனத்தை
டாட்டாக்கள் எடுத்துக் கொண்டது பற்றி இந்தியாவின் உயரடுக்கு உயர்வாக பாராட்டுகிறது
By Poopalasingam Thillaivarothayan, SEP candidate in
the Welsh Assembly Election (South Wales Central Region)
25 April 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
அண்மையில் ஆங்கில-டச்சு கோரஸ் எஃகு பெருநிறுவனத்தை டாட்டா எஃகு $13.2
பில்லியனுக்கு வாங்கியது இந்தியாவின் பெருநிறுவன, அரசியல் உயரடுக்குகளை "எழுச்சி பெறும் இந்தியா" பற்றி
மிகப் பூரிப்புடன் பேசிக் கொள்ளுவதில் திருப்திப்படுவதற்கு வகை செய்துள்ளது.
பிரிட்டிஷ் எஃகு நிறுவனம் (British
Steel) வழியே, பிரிட்டனின் தொழில்துறை முக்கியத்துவத்தை
ஒரு காலத்தில் அடையாளம் காட்டிய பல நிறுவனங்கள் வழி வந்துள்ள ஒரு நிறுவனத்தை இந்தியாவின் முதல் பெரிய,
ஒரு குடும்ப உடைமையிலான நவீன முதலாளித்துவ நிறுவனங்களின் துணை அமைப்பு ஒன்று வாங்கியுள்ளது, இந்தியா இப்பொழுது
"உலகளவில் ஒரு பெருநிறுவன சக்தி" என்பதற்கு உதாரணமாக காட்டப்படுகிறது. பெருநிறுவன இந்தியா இப்பொழுது
உலகெங்கும் படரக்கூடிய அதன் சர்வதேச நிறுவனங்களுக்கு எழுச்சியைக் கொடுத்துள்ளது.
டாட்டா தலைவர் ரட்டன் டாட்டா இப்படி வாங்கியது, "அதன் கரைதாண்டி சர்வதேச
சந்தையில் உலகளவு நிறுவனம் என்ற நிலையை எட்டியுள்ளது என்பதைக் காட்டுவதற்கான முதல் கட்டம்" என்று கூறியுள்ளது,
இது இந்தியாவின் வணிக, தொழில்துறை மந்திரியினாலும் எதிரொலிக்கப்பட்டுள்ளது. கமல்நாத் கூறினார்: "அது இப்பொழுது
இருவழிப் பாதையாகியுள்ளது. இந்தியா வெளிநாட்டு முதலீட்டை எதிர்பார்ப்பது மட்டும் இல்லாமல், இந்திய
நிறுவனங்களும் மற்ற நாடுகளில் முதலீட்டாளர்களாக மேற்தோன்றிவருகின்றன."
ஆனால் கோரஸை டாட்டா அடைந்துள்ளது பெருமளவு கடன்கள் மூலம் நிதியம் பெற்றவகையில்தான்
என்றும், பல முதலீட்டு பகுப்பாய்வாளர்கள் பிரேசிலின்
Companhia Siderurgica National (CSN) ஐயுடன்
போட்டியிட்டு நிறுவனத்தை அதன் மதிப்பைவிடக் கணிசமாகக் கூடுதல் விலைக்கு வாங்கியுள்ளதாக கூறுகின்றனர். ஒரு
பங்கிற்கு பிரிட்டிஷ் 608 பென்ஸ்கள் கோரஸிற்கு கொடுக்கப்பட்டது, 2005 அக்டோபரில் ஒரு பங்கிற்கு 455
பென்ஸ்கள் என்று முதலில் அது தயாராக கொடுக்க இருந்த விலையைவிட 33.6 சதவிகிதம் அதிகமாகும்.
நிறுவனத்தின் உள் இருப்புக்களில் இருந்து கோரஸை வாங்குவதற்கு டாட்டாக்கள் 4
பில்லியன் டாலர்கள் மட்டுமே கொடுத்ததாக தெரிகிறது; இதன் பொருள் இந்த வாங்குதலில் மூன்றில் இரு பங்கு
பெரு வங்கிகளில் இருந்து கடனாகப் பெறப்படும் நிதியத்தில் இருக்கும்; இதில்
Lloyds Bank, Deutsche Bank,
மற்றும் ABN
Amro ஆகியவை அடங்கும்.
இதையொட்டி, 2005-06 நிதிய ஆண்டில் மொத்த வருமானம் 21.9 பில்லியன்
டாலர்களுடன் 96 நிறுவனங்களையும் உடைய டாட்டா வணிகப் பேரரசு பெரிதும் ஒரு குடும்பத்திற்கு உடைமையான
நிறுவனம் என்பதிலிருந்து, கோரஸ்ஸை எடுப்பதற்கு நிதியளித்த வெளிநாட்டு கட்டுப்பாட்டில் இருக்கும் வங்கிகளின்
இடைவிடா மற்றும் நேரடி கட்டுப்பாட்டிற்குள் மாற்றப்படும்.
இப்படி கோரஸை வாங்குவதில் இறுதியில் இலாபத்தைக் காண்பதில் மிகப் பெரிய
சவால் டாட்டாக்களை எதிர்கொண்டுள்ளது, பங்குச் சந்தை அதை எதிர்கொண்ட விதத்தில் பிரதிபலித்தது.
வாங்கப்பட்டது அறிவிக்கப்பட்ட மறுதினம், டாட்டா எஃகு நிறுவனத்தின் பங்குகள் மும்பை பங்குச் சந்தையில் 10.7
சதவிகிதம் குறைந்தது.
கோரஸிற்கு அதிக விலையை தன் நிறுவனம் கொடுத்திருக்கக்கூடும் என்ற கருத்தை
ரட்டன் டாட்டா நிராகரித்தார்; ஆனால் வேலை வெட்டுக்கள் இராது என்று கூற மறுத்துவிட்டார்.
தொழிலாளர்கள் பணிநீக்கம் செய்யப்படமாட்டார்கள், ஆலைகள் மூடப்படமாட்டாது என்று அவர் உறுதியளிக்க
முடியுமா என்று பைனான்சியல் டைம்ஸ் கேட்டதற்கு டாட்டா கூறினார்: "அத்தகைய உறுதிமொழிகளை
நான் கொடுப்பது தவறாகையால் அப்படி முயலமாட்டேன்...ஆனால் முதலில் வேலைகள் என்று கருதும் நிறுவனம்
எங்களுடையது அல்ல என்று கூறுவேன்."
கோரஸ் தொழிலாளர்களுடைய வேலைகளுக்கு அச்சுறுத்தல் உள்ளது என்பது டாடா
எஃகு நிறுவனத்தின் நிர்வாக மேலாளர் பி.முத்துராமனால் குறிப்பிடப்பட்டது. அவர் கூறினார்: "வேலைகளுக்கான
சிறந்த பாதுகாப்பு நிறுவனத்தை போட்டியுடையதாக செய்வதுதான். இன்று கோரஸ் போட்டித்தன்மை குறைவாக
உள்ளது."
இதற்கிடையில், பைனான்சியல் டைம்ஸ் மேற்கோளிட்டுள்ள ஒரு நிதியப்
பகுப்பாய்வாளர், கோரசின் "நியாயமான மதிப்பு" பங்கிற்கு 450 பென்ஸ்கள் என்று மதிப்பிட்டுள்ளார்; இதன்
உட்குறிப்பு நிதிய நீர்மை "தொகுப்புக்கள்" குறிக்கும் விலையைவிட அதிக விலைக்கு வாங்குதல் என்பதாகும்;
அதாவது, ஆலைகள் மூடல், பணி நீக்கங்கள், ஊதிய வெட்டுக்கள் ஆகியவை செயல்படுத்தப்படும்.
பிரிட்டன், நெதர்லாந்து, ஜேர்மனி, பிரான்ஸ், நோர்வே மற்றும் பெல்ஜியத்தில்
47,000 தொழிலாளர்களை கொண்டிருக்கும் கோரசை பரபரப்புடன் எடுத்திருப்பது டாட்டா எஃகு நிறுவனத்தை
அதன் தற்பொழுது உலகில் 56 வது பெரிய எஃகு தயாரிப்பாளர் என்பதில் இருந்து ஐந்தாம் பெரிய
தயாரிப்பாளர் என்று உயர்த்திவிடும்.
இணைப்பிற்கு முன்னால் டாட்டா எஃகின் ஆண்டு உற்பத்தித் திறன் 5.3 மில்லியன்
டன்கள் என்று இருந்தது; இப்பொழுது அதன் உற்பத்தித் திறன் ஐந்து மடங்கு அதிகமாக 25 மில்லியன் டன்கள் என்று
இருக்கும்.
அதன் மிகக் குறைவான திறன் இருந்திருந்த போதிலும், டாட்டா எஃகு அமைப்பு
கோரசின் ஆண்டு செயற்பாட்டு இலாபத்திற்கு இணையாக, 5.3 மில்லியன் டன்களை விற்று 840 மில்லியன்
டாலர்களை ஈட்டியது; கோரசோ 18.6 மில்லியன் டன்கள் விற்பனையில் 860 மில்லியன் டாலர்களைத்தான்
இலாபமாக ஈட்ட முடிந்தது.
டாட்டாவின் அதிக இலாபம் வரும் வீதம் இன்னும் கூடுதலான தொழில்நுட்பத்தினை
பயன்படுத்தியதால் விளைந்த உயர்ந்தளவு உற்பத்தித் திறனால் ஏற்ப்பட்டது அல்ல. மாறாக இந்தியாவில் குறைந்த
விலை இரும்புத் தாதுப் பொருட்கள் மற்றும் டாட்டாவின் தொழிலாளர் தொகுப்பு பெற்று வந்த குறைவூதியங்களால்
செலவினங்கள் மிகக் குறைவாக இருந்ததுதான் காரணம் ஆகும்.
இப்படி கோரஸ் செல்வாக்கை வளர்க்கும் பொருட்டு டாட்டா எஃகு
வாங்கியுள்ளதற்கு இரண்டு முக்கிய நோக்கங்கள் உள்ளன. முதலாவது, இதையொட்டி ஐரோப்பிய மற்றும் வட
அமெரிக்க எஃகுச் சந்தைகளில் இடம் பெற முடியும்; அந்த சந்தைகள் இங்குள்ள குறைவான எஃகு பொருட்கள்
மூலம் ஊடுருவ இயலாதவை ஆகும். இரண்டாவது, கார் மற்றும் பிற தொழில்களில் பயன்படுத்தப்படும் உயர்ந்த ரக
எஃகு உற்பத்தி செய்வதற்குத் தேவையான நவீன தொழில்நுட்பத்தை அடையலாம் என்பதாகும்.
ஒப்புமையில் அதிக விலையற்ற இரும்புத் தாதுப் பொருட்கள் மற்றும் குறைந்த
தரமுடைய எஃகை இந்தியாவில் இருந்து ஐரோப்பாவில் உள்ள கோரஸிற்கு ஏற்றுமதி செய்வதின் மூலம் கோரஸின்
செலவினங்களை வெட்ட முடியும் என்றும் டாட்டா நம்புகிறது. ஆனால் தன்னுடைய பெரிய ஐரோப்பியத் துணை
நிறுவனத்தை போதுமான வகையில் காப்பதற்கு டாட்டா எஃகு தன்னுடைய தற்பொழுதைய 5 மில்லியன் டன்கள்
என்னும் உற்பத்தித் திறனை மும்மடங்கு அதிகரிக்க வேண்டும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது.
சிறு வெற்றிகளில் போதை ஏறுதல்
கோரஸை டாட்டா வாங்கியது இந்தியாவின் பெருநிறுவன செய்தி ஊடகத்தை போதை
கொள்ளச் செய்தது. "இந்தியாவிற்கு ஐந்து பென்ஸ்கள் ஒரு இங்கிலாந்து பவுண்டைக் கொடுக்கின்றன" என்ற
தலைப்பில், The Economic Times
வியந்து கூறியது: "முன்னாள் பிரிட்டிஷ் ஸ்டீல் மற்றும் மாட்சிமை
தங்கிய பேரரசியின் பேரரசின் ஒரு பெருமிதச் சின்னமான கோரஸ் இப்பொழுது [இந்திய] மூவர்ணத்தின் கீழ்
பறக்கும்." "உலகின் 5 ம் இடம், இந்தியாவின் 1ம் இடம்" என்ற தலைப்பில்
The Financial Express
இந்த இணைப்பை பற்றிய தகவலை வெளியிட்டது.
"கையெழுத்திட்டு, எஃகு உறுதியளிக்கப்பட்டது" என்று
The Hindustan Times தலைப்பு கொடுத்தது.
இப்படி தேசியவாத வேகமாகப் பேசியது எவ்வகையிலும் இந்தியச் செய்தி ஊடகத்துடன்
கட்டுப்படுத்தப்படவில்லை. The Associated
Chamebrs of Commerce and Industry of India (ASSOCHAM)
"இந்திய தொழில்துறைக்கு பெரும் வெற்றிகளை" டாட்டாக்கள் கொண்டுவந்துள்ளது என்று கூறிப்பிட்டு அரசாங்கத்தின்
இணைப்புக்கள், கையகப்படுத்துதல் இன்னும் கூடுதலான வகையில் பெருநிறுவன இணைப்புக்களுக்கு ஊக்கம் அளிக்கும்
வகையில் நிதிய ஊக்கம், வரிச் சலுகைகளை வழங்க வேண்டும் என்று கூறியது.
இந்திய தொழிற்துறைக் கூட்டமைப்பு(CII)
யின் தலைவர் ஆர். சேஷசாயி கூறினார்: "கோரஸ் குழு
Plc. ஐ
வெற்றிகரமாக டாட்டா ஸ்டீல் அடைந்துள்ளது இந்தியத் தொழில்துறை வயதிற்கு வந்துள்ளதை காட்டுகிறது;
நம்முடைய இணைப்புக்கள், கையகப்படுத்துதல் தரங்களை வேறு ஒரு நிலைக்கு எடுத்துச் செல்லுகிறது. இந்தியத்
தொழில்துறையின் நம்பிக்கை மற்றும் திறமைக்கு இது தக்க சான்று ஆகும்." இந்தியாவில் காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி அரசாங்கம் வெற்றிக் கொண்டாட்டத்தில் சேர்ந்து கொண்டது. "வெளியுலகில்
வணிகத்திற்குப் போட்டியிடுவதற்கு இந்தியத் தொழில்துறை நம்பிக்கை கொண்டுள்ளது" என்று நிதி மந்திரி சிதம்பரம்
அறிவித்தார். "வெளிநாட்டில் நிறுவனங்களை வாங்கி அவற்றைத் திறமையுடன் நிர்வகிக்குப்பதற்குத் தேவையான
வளங்களை நம் தொழில்துறை திறன் கொண்டுள்ளது". உண்மையில் செல்வாக்கிற்காக பெறப்பட்ட இந்த வாங்குதல்
வெற்றிபெறும் என்பதற்கான உறுதி ஏதும் கிடையாது. டாட்டா எஃகின் கட்டுப்பாட்டை மீறிய பல காரணிகள்,
எஃகுவிற்கு உலகத் தேவை போன்றவை டாட்டா மற்றும் அதன் பெருநிறுவன, அரசாங்க ஆர்வலர்களை இப்படி
நேரிட்டதே என வருத்தப்பட வைக்கலாம். மேலும் "பூகோள ஆட்டக்காரர்" என்று பாய்ச்சல் எடுத்து வருவதற்கு
டாட்டா எஃகு உலக நிதிய மூலதனத்தின் பண முதலைகளுடைய உறுதியான கண்காணிப்பின் கீழ் வந்துள்ளது.
உலக நிதியச் சந்தைகளை டாட்டா நம்பியிருக்க வேண்டும் என்பது இந்தியாவில் கடன்
எழுப்புவதற்கான செலவை வரக்கூடிய காலங்களில் இன்னும் கூடுதலாக்கலாம். உயரும் பணவீக்கத்தை எதிர்ப்பதற்கு
இந்திய ரிசர்வ் வங்கி குறுகிய கால வட்டிவிகிதத்தை கடந்த ஆண்டு நான்கு முறை உயர்த்தி மிக அதிகமாக 7.75
என்று செய்துள்ளது. இந்தியாவில் கடுமையாக இருக்கும் பணச் சந்தை உள்நாட்டு வளர்ச்சி விகிதத்திலும் பாதிப்பை
ஏற்படுத்தக்கூடும்; இதையொட்டி டாட்டா எஃகின் நிதிய நிலைமை இன்னும் கூடுதலாகக் குறைமதிப்பிற்கு உட்படக்கூடும்.
கோரஸை வாங்கியது ஒரு சூதாட்டத்திற்கு ஒப்பாகும் என்று நம்பிய கடன் திறன் பற்றி தரம் கூறும் நிறுவனமான
Standard * Poor's
இப்பிரச்சினையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாண்டு, இதில் பண ஆபத்துக்கள் இருப்பதால் டாட்டா எஃகு மற்றும்
அதன் நிறுவனங்கள் இப்பொழுது "கடன் கண்காணிப்பிற்குள்" இருக்கும் என்று கூறியுள்ளது.
S&P பகுப்பாய்வாளர்
அன்ஷுகான் டனேஜாவின் கருத்தின்படி, "அடையப்பட்டுள்ள நிறுவனத்தின் அமைப்பு மற்றும் டாட்டா எஃகு கோரஸை
வாங்கக் கொடுத்த நிதியை ஒட்டி அதன் நிதி நீர்மைத் திறன் ஆகியவை அதன் நிதிய ஆபத்து தன்மையில் எதிர்மறை
விளைவைக் கொடுக்கக் கூடும்." இந்தியாவில் வெளிநாட்டு முதலீடுகள் விரைவாகப் பெருகியதை சமீபத்திய ஆண்டுகள்
பார்த்து வந்துள்ளன; இதையொட்டி உற்பத்தி பணிப் பிரிவுகளில் பொருளாதார வளர்சி விகிதம் தீவிரமாக உள்ளது;
ஆனால் விவசாயத் துறையில் அல்ல; அதில்தான் நாட்டு மக்களில் 60 சதவிகிதத்தினர் வாழ்க்கைக்கு நம்பியிருக்கின்றனர்.
இதே காலத்தில் இந்திய நிறுவனங்கள் வெளிநாடுகளில் அடைந்துள்ளதும் வியத்தகு
முறையில் அதிகரித்துள்ளன. 2005ல் 100 வெளிநாட்டு நிறுவனங்கள் 2.37 பில்லியன் டாலர்கள் கொடுத்து
பெறப்பட்டுள்ளன; 2006ல் 23.1 பில்லியன் டாலர்கள் மதிப்புள்ள 166 நிறுவனங்கள் வாங்கப்பட்டுள்ளன. இந்த
ஆண்டு இரண்டு அடையப்பட்டவை, டாட்டாவில் 13 பில்லியன் டாலர்களில் கோரசை வாங்கியது மற்றும் பிர்லா
குழுவின் ஹிந்தால்கோ தொழில் நிறுவனம் கனடிய அலுமினிய பெருநிறுவனமான
Novelis Inc
ஐ 6 பில்லியன் டாலர்களுக்கு வாங்கியது இரண்டும் கிட்டத்தட்ட 20 பில்லியன் டாலர்கள் என்று
மதிப்பிடப்பட்டுள்ளன.
அதே நேரத்தில் இந்தியா இன்னும் கூடுதலான முறையில் மூலதன வரத்தை தன்னுடைய
வளர்ச்சி விகிதத்தைத் தக்க வைக்கவும் தன்னுடைய 7 பில்லியன் டாலர் நடப்பு நிதிக் கணக்கு பற்றாக்குறைக்கான
செலவிற்கும் நம்பியிருக்க வேண்டியுள்ளது.
இந்திய உயரடுக்கு சிறிய எண்ணிக்கையிலான நிறுவனங்கள் எழுச்சி பெற்றுள்ளதை
இந்தியாவின் உயர் எழுச்சி எனப்பாராட்டும்போது, உண்மை என்னவென்றால் அனைத்து இந்தியர்களில் மூன்றில் ஒரு
பங்கிற்கு அதிகமானவர்கள், கிட்டத்தட்ட 400 மில்லியன் மக்கள் பெரும் வறுமையில் நாளொன்றுக்கு 1 டாலருக்கும்
குறைவான வருவாயில் வாழவேண்டிய நிலையில் உள்ளனர். கடந்த 16 ஆண்டுகளில் பல இந்திய அரசாங்கங்களின்
புதிய தாராளக் கொள்கைகளின் இடைவிடாப் பாதிப்பினால், பெரும்பாலான மக்களின், குறிப்பாக கிராமப்புற
இந்தியாவில், வாழ்க்கை இன்னும் ஆபத்தான நிலையில் உள்ளது.
மேலும் கல்வியறிவு இன்மையும் சுகாதாரக் கேடும் -- இந்திய மொத்த உள்நாட்டு
உற்பத்தியில் 3 சதவிகிததிற்கும் குறைவாகத்தான் கல்வி, சுகாதரப்பாதுகாப்பு ஆகியவற்றிற்கு செலவழிக்கிறது --
பொது உள்கட்டுமானத்தின் சிதைவுற்ற தன்மையும் தற்பொழுதைய பொருளாதார விரிவாக்கத்திற்கு உறுதியான
வரம்புகள் இருப்பதைத்தான் காட்டுகின்றன.
CPI-M தலைமையிலான மேற்கு
வங்க இடது முன்னணி ஸ்ராலினிச அரசாங்கம் ஒரு டாட்டா குழு துணை நிறுவனம் கார் ஆலையை கட்டுவதற்காக அவர்களுடைய
நிலங்களை அபகரிக்க முயன்றபோது, தங்கள் ஒரே வாழ்வாதாரத்தை காப்பதற்கு, மேற்கு வங்கத்தில் ஆயிரக்கணக்கான
கிராமப்புற வறியவர்கள், போராடியதில், இந்தியாவை சூழ்ந்துள்ள சமூக முரண்பாடுகள், சமீபத்தில் கடும் குவிமையப்படுத்தலுக்கு
வந்தது
இந்தியாவின் பெரும் முன்னோடி தொழில்துறை நிறுவனங்களில் டாட்டா குழுவும்
ஒன்றாகும். 1870களில் நிறுவப்பட்ட இது, சுதந்திரம் அடைதற்குள்ளேயே இந்தியாவில் பெரு நிறுவனங்கள் என்ற
வகையில் வளர்ந்துவிட்டது. காங்கிரஸ் கட்சியுடன் நீண்டகாலத் தொடர்புகளை அனுபவித்துள்ள இது, விடுதலைக்குப்
பின் பல தசாப்தங்களும் அரசாங்கத்தின் தேசியக் கட்டுப்பாடு, இறக்குமதி மாற்று போன்ற கொள்கைகளால் அதன்
பாதுகாப்புச் சந்தைகள் காக்கப்பட்ட நிலையில் செழித்து வந்துள்ளது.
இன்று டாட்டா குழு ஒரு மாபெரும் இணையக் குழுவாகும்; இதன் துணை நிறுவனங்கள்
கார்களில் இருந்து தகவல் தொழில்துறை வரை வேறுபட்ட பிரிவுகளில் உள்ளன.
ஆயினும்கூட, கோரசை டாட்டாக்கள் வாங்கியதானது இந்திய முதலாளித்துவத்தின்
வருகையை கட்டியம் கூறுகிறது எனப்படுவது மிகையான கூற்றாகும். உலக மக்களின் 15 சதவிகிதத்தினருக்கும் மேலானவர்களுக்கு
தாயகமாக இருக்கும் இந்தியா அனைத்து உலக வணிகத்திலும் 1 சதவிகிதத்தைத்தான் கொண்டுள்ளது; உள்நாட்டு
உற்பத்தி தலைவீத வாங்கும் திறனின் சரிசமநிலை, என்பது முன்னேற்றம் அடைந்துள்ள முதலாளித்துவ நாடுகளில் காணப்படுவதைவிட
பத்தில் ஒரு பங்குதான் இங்கு உள்ளது.
டாட்டா எஃகை பொறுத்தவரையில், அது இப்பொழுது ஒரு நீண்ட கால,
பலவீனப்படுத்தக்கூடிய கடனில் உறுதியாக சிக்கியுள்ளது. இந்தியாவிலும் ஐரோப்பாவிலும் டாட்டாக்களில்
தொழிலாளர்கள், பணிநீக்கங்கள், "ஆலைகளை இணைத்து ஒன்றாக்கல்" என்ற வடிவங்களில் நிறுவனத்தின் கூடுதலான
பேரவாவிற்கு, விலை கொடுக்க நேரிடும் என்பதில் ஐயமில்லை. |