World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: Left Party and Election Alternative seal their merger

ஜேர்மனி : இடது கட்சி மற்றும் தேர்தல் மாற்றீடு தங்களுடைய இணைப்பை உறுதிப்படுத்துகின்றன

By Dietmar Henning
9 April 2007

Back to screen version

கூட்டாட்சி பாராளுமன்றத்திற்கு (Bundestag) 2005ல் நடந்த தேர்தல்களில், சமூக ஜனநாயகக் கட்சியின் (SPD) முன்னாள் தலைவர் ஒஸ்கார் லாபொன்டைன் தேர்தல் மாற்றீட்டிற்கு (WASG) பிரச்சாரம் செய்கையில் விக்டர் ஹ்யூகோவின் மேற்கோள் ஒன்றை கையாண்டார் : "உரிய காலம் வந்துவிட்ட ஒரு கருத்தை விட அதிக சக்தி வாய்ந்தது ஏதும் இல்லை." இடது கட்சி- ஜனநாயக சோசலிச கட்சி (PDS) மற்றும் தேர்தல் மாற்றீட்டின் சமீபத்திய இரு மாநாடுகளும் "இங்கு கையாளப்படும் தந்திர உத்தியைவிட சிறிதும் ஊக்கம் தராதது எதுவும் இல்லை" என்ற கோஷத்தில் நடந்தது எனலாம். இரு அதிகாரத்துவ கருவிகளும் சமூக ஜனநாயகக் கட்சிக்கு மாற்றாக ஒரு மூன்றாம் அமைப்பிற்கு உயிரூட்டுவதற்கு ஒன்று சேர்ந்தன.

Dortmund நகரில் கூடிய ஒரு மாநாட்டில் இரு கட்சிகளும் ஒன்றாக ஒரு புதிய அமைப்பாக இணைந்து, இடதுகட்சி (Die Linke) என்ற பெயரில் அழைத்துக் கொள்ளுவதற்கு பிரதிநிதிகள் அதிக பெரும்பான்மை வாக்குடன் ஒப்புக் கொண்டனர். இடது கட்சி-ஜனநாயக சோசலிச கட்சி பிரதிநிதிகளில் 96.9 சதவிகித்தினர் இணைப்புக்கு ஆதரவு தந்த வகையில், தேர்தல் மாற்றீட்டில் இருந்த உறுப்பினர்களில் 88 சதவிகிதத்தினர்தான் ஆதரவைக் கொடுத்தனர்.

இந்த முடிவை கொண்டுவருவதற்கு கட்சித் தலைமைகள் பெரும் முயற்சிகளை மேற்கொண்டிருந்தன. ஒரே நேரத்தில் இரு கட்சிகளும் புதிய அமைப்பிற்கான அடித்தள முன்னோக்கை நிறுவும் வகையில் "அரசியலில் முக்கிய கருத்துக்கள்" பற்றி அவை உடன்பாடு கொண்டன. ஒரு கட்சி மாற்றம் ஏதாவது வேண்டும் என்று முடிவெடுத்தால், இது மற்ற கட்சியின் ஒப்புதலையும் பெற வேண்டும்; இதையொட்டி விந்தையான விவாதங்கள் எழுந்தன.

பேர்லின் நகர அரசாங்கத்தின் அரசியல் விவாதத்திற்கு வந்த உடனேயே, இரு கட்சிகள் மாநாடுகள் ஒரு சங்கடத்தை எதிர்கொண்டன. பேர்லினில் நடைமுறையில் ஏற்கனவே சாதிக்கப்பட்டதின் அனுபவத்தை கருத்திற்கொண்டு பிரதிநிதிகள் என்ன செய்யப்பட வேண்டும் என்பது பற்றி சமரசத்துடன் ஆராயவேண்டியதாயிற்று. அமைப்பு வலதுசாரி கொள்கைகளை நடைமுறைப்படுத்துவதை உறுதிப்படுத்த இடதுசாரி தன்மையுடன் ஒலிக்கும் சூத்திரங்களைக் கண்டுபிடிக்க வேண்டிய கட்டாயத்திற்கு அவர்கள் தள்ளப்பட்டனர்.

இடது கட்சி-ஜனநாயக சோசலிச கட்சி இரண்டும் பேர்லின் நகர அரசாங்கத்தில் சமூக ஜனநாயகக் கட்சி அரசாங்கத்துடன் கூட்டில் இணைத்துக் கொண்டதில் இருந்து, அது பிரதிநிதிகள் (குறிப்பாக தேர்தல் மாற்றீட்டின் அங்கத்தவர்கள்) பொதுவாக வெகுஜனத் திருப்திக்கான தமது பேச்சுக்களில் கண்டிக்கும் கொள்கைகளைத்தான் பின்பற்றி வந்தது. சமூகத்தின் கீழ்மட்டத்தில் இருந்து சமூகச் செல்வம் மேலிருப்பவர்களுக்குப் மறுபங்கீடு செய்யப்படுதல், பொதுத் துறையில் வேலை மற்றும் ஊதிய வெட்டுக்கள் இருப்பது, பள்ளிகள் சிறார் பாதுகாப்பு போன்ற சமூக உள்கட்டுமானத்தின் செலவினங்களை அதிகரிப்பது பொதுச் சொத்தை தனியார் முதலீட்டாளர்களுக்கு விற்பது போன்றவற்றை கண்டித்தனர்.

"அரசியலில் முக்கியக் கருத்துக்கள்" பற்றி ஒரு பிரதிநிதி கூட தீவிரமாக ஆராய்ந்தால், இடது கட்சி-ஜனநாயக சோசலிச கட்சி அமைப்பின் பேர்லின் வட்டார அமைப்பு மாநாட்டில் இருந்து உடனடியாக வெளியேற்றப்பட்டிருக்க வேண்டும். ஒருவரும் இதைக் கோரவில்லை என்பது உண்மையே. மாறாக, மிகக் குறைந்த அளவான உடன்பாட்டு அடிப்படையில் சூத்திரங்கள் இயற்றுவதில் முயற்சிகள் காட்டப்பட்டன.

உதாரணமாக, புதிய கட்சி அரசாங்கத்தில் பங்கேற்பதற்கு ஆதரவு கொடுத்திருந்த முதல் வரைவில், "பொதுத் துறைகளை மோசமாக்கும் வகையில் வேலை வெட்டுக்கள் மற்றும் சமூகப் பணிகள் குறைக்கப்படாத வகையில்" இலக்கு இருப்பதற்காக "முயன்றால்" போதும் என்று இருந்தது. ஆனால் "முயன்றால்" எனக் கூறும்போது, பேர்லின் இடது கட்சியின் நடவடிக்கைகளுக்கு உடனடி நியாயப்படுத்துதலுக்கு இடமளிக்கப்படுகிறது; ஏனெனில் அது எப்பொழுதுமே சிறந்த நோக்கங்களுடன் செயல்படுவதாகவும், வேறு கொள்கைகளை செயல்படுத்த முடியாத அளவிற்கு பேர்லினின் நிதி நிலைமை துரதிருஷ்டவசமாக உள்ளது என்றும் வலியுறுத்துகிறது.

தேர்தல் மாற்றீட்டின் மாநாட்டு பிரதிநிதிகள் இந்தப் பத்தியை கீழ்க்கண்ட முறையில் மாற்ற விரும்பினர்: "தன்னுடைய கட்சியமைப்பு விதிகளுக்கு உட்பட்ட வகையில்தான் இடது கட்சி ஏனைய கட்சிகளுடன் கூட்டணியில் சேரும். பொதுச் சொத்து தனியார்மயமாக்கப்படக்கூடாது. பொதுத்துறை ஊழியர்களின் எண்ணிக்கைக் குறைப்பு நிறுத்தப்பட வேண்டும்; அதேபோல் சமூகச் செலவினங்களில் குறைப்புக்களும் தடுக்கப்பட வேண்டும்."

இதை இடது கட்சி நிராகரித்தது; அதைத் தொடர்ந்து தேர்தல் மாற்றீட்டின் உறுப்பினர்கள் சிலர் ஒவ்வொரு வரியாக வாசித்து வாக்களிக்கப்பட வேண்டும் என்று விரும்பினர். தேர்தல் மாற்றீட்டு மாநாட்டின் முதல் சொற்றொடரை ஏற்றுக் கொண்ட அளவிலேயே சில எதிர்ப்புக் குரல்கள் எழுந்தன; ஒரு தேர்தல் குழு உறுப்பினர் அறிவித்தார்: "நாம் பலவற்றைப் பற்றியும் இங்கு வாக்களிக்கலாம்; ஆனால் இடது கட்சி ஏற்கனவே வாக்களித்துவிட்டது; அவர்கள் முதல் சொற்றடரைத்தான் ஒப்புக்கொண்டுள்ளனர்.

எதிர்பார்த்தது போலவே, பிரதிநிதிகள் இறுதியாக சற்றே வளைந்து கொடுக்கும் சூத்திரத்திற்கு உடன்பட்டனர்: "பொதுச் சொத்து தனியார்மயமாக்கப்படல் இயன்றளவு கூடாது" என்பதற்கு பதிலாக "பொது இருப்புக்கள் தனியார்மயமாக்கப்படக்கூடாது" என ஆக்கப்பட்டது. ஒரு அரசாங்க நிறுவனம், அரச வீட்டு நிறுவனம் அல்லது அவற்றைப் போன்றவை ஒரு முதலீட்டாளருக்கு விற்கப்படும்போது பேர்லின் மக்களுக்கு ஒருவேளை இதன் துல்லியமான வேறுபாடு விளக்கப்படும் போலும்.

இத்திட்டத்தில் உள்ள மற்ற பத்திகளும் இதேபோல் தெளிவற்ற வகையில் உள்ளன. ஆவணத்தின் அறிவிக்கப்பட்ட நோக்கங்களுக்கும் அதன் நடைமுறை முடிவுகளுக்கும் மிகப் பெரிய பிளவு உள்ளது; இதைப் பற்றி தேர்தல் மாற்றீடு மற்றும் இடது கட்சியில் எவரும் கவலைப்படவில்லை. ஜனநாயக சோசலிசம் முதலாளித்துவத்தை "கடந்துவிடும்", புதிய தாராளவாத கொள்கைகளை "பின்னுக்குத் தள்ளவிடும்" என்று லேலைத்திட்டம் கூறுகிறது; அதே நேரத்தில் இலாப நோக்குடைய முயற்சிகள் அனைத்தும் அனைவருடைய நலன்களுக்காகவும் செயல்பட முடியும் என்றும் கூறப்படுகிறது.

இடதுகட்சி என்றால் என்ன?

சொற்கள், காற்புள்ளிகள், இணைப்புக் குறி ஆகியவற்றை பற்றிய பூசல்கள் இரட்டைக் கட்சி மாநாட்டில் இருந்தமை புதிய கட்சியின் அடிப்படை வெற்றுத்தனத்தை வெளிப்படுத்துகிறது. இடதுகட்சி ஸ்தாபனமயமாக்கப்பட்ட மற்றைய கட்சிகளின் அரசியலுக்கு ஒரு மாற்றீட்டைக் கொடுக்கவில்லை. மாறாக, ஆளும் உயரடுக்கின் அவசரத் தேவை ஒன்றைத்தான் பூர்த்தி செய்கிறது. இது சமூக ஜனநாயகக் கட்சியின் வலதுசாரி வளர்ச்சியினால் ஏற்பட்டுள்ள வெற்றிடத்தை இட்டு நிரப்புவதற்கு பார்க்கிறது.

சமூக ஜனநாயகக் கட்சி- பசுமைக் கட்சியுடன் அரசாங்கத்தில் கூட்டணியில் இருந்த ஏழாண்டு காலத்தில், பல சமூக ஜனநாயகக் கட்சி உறுப்பினர்களும் வாக்காளர்களும் கட்சிக்கு எதிராக மிகவும் கோபத்துடன் தமது பின்முதுகை காட்டியுள்ளனர். கிறிஸ்தவ ஜனநாயகவாதிகளும் பெரும் கூட்டணியில் நுழைந்த அளவில் சமூக ஜனநாயகக் கட்சி இடதுசாரி அரசியலின் எஞ்சிய தன்மையையும் முற்றிலும் கைவிட்டது. இது ஒரு வெற்றிடத்தை ஏற்படுத்தியது; அது ஒரு புரட்சிகர சோசலிச எதிர்ப்பின் அபிவிருத்தியையும் மற்றும் ஒரு தீவிரமயமாக்கலையும் ஏற்படுத்தலாம். இதை எப்படியும் தடுப்பதற்குத்தான் இடது கட்சி கடுமையாக முயன்று வருகிறது. ஆளும் உயரடுக்கிற்கு பாதுகாப்பான அரவணைப்பு கொடுத்து மக்களிடையே பெருகிவரும் எதிர்ப்பை நெரிப்பதற்கும் அரசாங்க பொறுப்புக்களை வகிக்கவும் அது முயல்கிறது. பூர்ஷ்வா ஆட்சியின் கடைசி மூச்சுக்களைத்தான் இது பிரதிபலிக்கிறது.

தேர்தல் மாற்றீடு, 2004ம் ஆண்டு நேரத்திற்கு ஏற்ப நடந்து கொள்ளும் சமூக ஜனநாயகவாதிகள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தால் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக்கட்சி அரசாங்கத்தின் வலதுசாரிக் கொள்கைகளுக்கு எதிராக பெருகிய எதிர்ப்பின் விளைவாக தோற்றுவிக்கப்பட்டது. அமைப்பின் தலைவர் Oskar Lafontaine ஆவார்; 1999 வரை அவர் சமூக ஜனநாயக கட்சியின் தலைவராகவும் சமூக ஜனநாயக கட்சி- பசுமைக் கட்சி கூட்டணி 1998 தேர்தலில் வெற்றிபெற்றதற்கு காரணமாகவும் இருந்தவர். இடது கட்சி- ஜனநாயக சோசலிச கட்சி என்பது முன்னாள் கிழக்கு ஜேர்மனியின் அரசாங்க ஸ்ராலினிச சோசலிச ஐக்கிய கட்சியின் (SED- Socialist Unity Party) வழித்தோன்றல் ஆகும்.

சமூக ஜனநாயக கட்சியினதும் சோசலிச ஐக்கிய கட்சியினதும் வரலாறுகள் வேறுபாட்டிருந்தாலும், ஒரு விஷயத்தில் அவை பொதுவாக உள்ளன: தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன இயக்க வளர்ச்சியை தடுப்பதை தங்கள் பணியாக இரண்டும் கருதி, "சமூக உறுதித்தன்மையை" உறுதியளிக்கும் அமைப்புக்களாவும் தங்களை கருதிகொண்டன. இதுதான் அவர்களுடைய சமூக சீர்திருத்தஙகளின் நோக்கமாகும். வைமார் குடியரசின் ஜனாதிபதியான Friedrich Ebert இன் கருத்தில் "இரண்டுமே புரட்சியை ஒரு பாவச்செயல் போல் வெறுத்தன''.

இவ்விதத்தில் தேர்தல் மாற்றீடு அல்லது இடது கட்சி-ஜனநாயக சோசலிச கட்சி ஆகியவற்றில் எவ்வித மாறுதலும் வரவில்லை. இதுதான் "சமூக அமைதி" ஆபத்திற்குட்பட்டுள்ளது என்னும் அவர்களுடைய தொடர்ந்த எச்சரிக்கையின் உண்மையான பொருளுரையாகும்.

இடது கட்சி-ஜனநாயக சோசலிச கட்சியின் தலைவர் Gregor Gysi இதை கட்சி மாநாட்டில் தன்னுடைய உரையில் தெளிவாக கூறினார். முன்னாள் கிழக்கு ஜேர்மனி (GDR) இல் இருந்த சமூக நலன்களை பெரிதும் நீண்ட உரையில் பாராட்டிய பின்னர், சமூகத்தில் உயர்மட்டத்திற்கும் அடிமட்ட அடுக்குகளுக்கும் இடையே நூறு வேறுவகை உலகங்கள் இருந்தலும், இன்றோ "ஒரு மில்லியன் உலகங்கள்" வேலையின்மையில் வாடுபவர்களுக்கும் உயர்மட்ட நிர்வாகிகளுக்கும் இடைய உள்ளது. "நீண்ட காலத்தில், எந்தச் சமுதாயமும் இதைப் பொறுத்துக் கொள்ளாது" என்று அவர் கூறினார்.

அண்மையில் Die Linke பங்கு பற்றி ஒரு செய்தியாளர் பேட்டியில் Gysi குறிப்பிட்டுள்து போல், இடது கட்சியும் WASG யும், இன்னும் கூடுதலான வகையில் சமூக ஜனநாயகவாதிகள் ஆவதற்காக, தங்களை SPD மீது அழுத்தம் கொடுக்கும் கருவியாக கருதுவதில் வியப்பு இல்லை;

WASG தலைவர் Klaus Ernst, IG metall தொழிற்சங்கத்தின் முன்னாள் முழுநேர உறுப்பினராக இருந்தவர், செய்தியாளர்களிடம் கூறினார்: "வருங்காலத்தில் SPD மீண்டும் ஒரு சமூக ஜனநாயக கட்சியாக வரும் என்று விரும்புகிறேன். அப்பொழுது இடது கட்சிக்கும் SPD க்கும் இடையே பாலங்கள் கட்ட வேண்டும் எனக் கருதுபவர்களுக்கு பணி சுலபமாகும்.

இதே வழிவகையில், இணைக்கப்பட்ட கட்சியில் இருகட்சித் தலைமையின் பகுதியாக, Lothar Bisky உடன் விளங்க இருக்கும் Oskar Lafontaine, பிஸ்கி இரண்டு ஆண்டுகளில் ஓய்வு பெற்ற பின் அதன் ஒற்றை வருங்கால முழுத் தலைவராகக் கூடும் எனக் கூறப்படுகிறது. சமூக ஒழுங்கில் SPD யின் பங்கை இவர் பிரதிபலிப்பது போல் வேறு எந்த நபரும் பிரதிபலிக்கவில்லை.

Lafontaine உடைய கடந்த காலம், அவருடைய அரசியல் கருத்துக்கள், கடந்த சில ஆண்டுகளில் அவருடைய நடவடிக்கைகள் என்று அனைத்துமே SPD மற்றும் தொழிற்சங்கங்களின் கட்டுப்பாட்டை மீறி பொதுநல வெட்டுக்களுக்கான சமூக இயக்கங்கள் போய்விடக்கூடும் என்ற அச்சத்தின் உந்துதல் இருந்தன என்பதைக் காட்டுகின்றன. அவரால் தலைமை வகிக்கப்படும் ஒரு புதிய கட்சி இயக்கத்திற்கு அவரே தலைமையேற்று அதை தீமைபயக்காத சமூக ஜனநாயகவாத வழிவகைகளில் திசைதிருப்பிச் செல்லும். SPD பசுமைக் கட்சி அரசாங்கத்தின் கொள்கைகளால் ஏற்படக்கூடிய மக்களின் அரசியல், சமூக எதிர்ப்புத்தன்மையின் வெடிப்புத் தன்மை பற்றி அவர் தொடர்ச்சியாக எச்சரித்து வந்துள்ளார்.

சமூக அநீதியை பற்றிய இவருடைய கடுமையான கண்டனம் போலியாக திருப்திப்படுத்துவது ஆகும். இப்பொழுதுள்ள முதலாளித்துவ சமூகத்தின் பின்னணிக்குள்ளேயே மற்றொரு சமூக சமச்சீர் கொள்கையுடைய நிலை அடையப்படலாம் என்பதை அவர் எப்பொழுதுமே வலியுறுத்தியுள்ளார். இது ஒரு அரசியல் மோசடியாகும். உலகந்தழுவிய உற்பத்திமுறை சமூக சீர்திருத்தவாதக் கொள்கையின் அஸ்திவாரத்தை தகர்த்துவிட்டது. சர்வதேச முதலாளித்துவ சந்தைமுறைதான் ஒவ்வொரு நாட்டிலும் பொருளாதாரக் கொள்ககளுக்கு ஆணையிடுகிறது.

Lafontaine, Gysi போன்றோர், இன்றைய சூழ்நிலையிலும் 1970 சமூக சீர்திருத்தக் கொள்கைகள் மீண்டும் வரலாம் என்று கூறுபவர்கள், ஆபத்தான போலித் தோற்றங்களுக்கு ஊக்கம் கொடுப்பவர்கள் ஆவர். சர்வதேச சந்தைகளை தாராளமாக்கியுள்ளது, உலகெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களுடைய வாழ்க்கைத்தரங்களில் பேரழிவு தரக்கூடிய வீழ்ச்சிக்கு வழிவகுத்துள்ளது; லாபொன்டைன் நம்பை நம்ப வைப்பதற்காகக் கூறுவது போல் உரிய நேரித்தில் எவரும் எதிர்ப்புத் தெரிவிக்காத புதிய கருத்து ஒன்றும் அல்ல இது. சக்திவாய்ந்த சடப்பொருள் சக்திகளின் விளைவு ஆகும். 1970களின் தொடக்க காலத்தில் தொழிலாளர்கள் இயக்கங்கள் பாடுபட்டு பெற்ற சாதிப்புக்களுக்கு எதிராக உலகம் முழுவதும் முதலாளித்துவ வகுப்பினால் காட்டப்படும் அரசியல் தாக்குதல்களின் ஒரு கூறுபாடுதான் இது.

இத்தாக்குதலை எதிர்ப்பதற்கு சமூக ஜனநாயகவாதத்திடம் ஏதும் கிடையாது; எனவே ஊக்கத்துடன் அதற்கு ஆதரவை கொடுக்கிறது. இது ஒன்றும் லாபொன்டைன் இராஜிநாமாவிற்கு பின்னர் தொடங்கவில்லை; அதற்கு நீண்ட நாள் முன்பே தோன்றிவிட்டது. உண்மையில் பெருவணிக நலன்களை எதிர்ப்பதற்கு லாபொன்டைன் விரும்பினால் --அப்படித்தான் இப்பொழுது அவர் உரக்கக் கூறுகிறார் -- ஷ்ரோடர் அரசாங்கத்தில் SPD தலைவராகவும், நிதியமைச்சராகவும் இருந்தபோது இதை நிரூபித்திருக்க முடியும். அந்த நேரத்தில் தொழிலாள வர்க்கத்திற்கு ஒரு முறையீடு செய்வதற்கு அவர் தயாராக இருந்ததில்லை; ஏனெனில் முதலாளிகளுடைய அமைப்புக்களுடன் பூசல் என்பது முதலாளித்துவ ஒழுங்கிற்கு பெரும் பிரச்சினையை எழுப்பியாகும். இதற்கு பதிலாக அவர் பொறுப்பில் இருந்து விடுபட்டு, ஷ்ரோடர் விரும்பியதை செய்யும் வகையில் நீங்கிவிட்டார்.

இன்று, பொதுநலச் செலவினக் குறைப்புக்கள், வறுமை, போர் இவற்றிற்கு எதிரான பெருகிய எதிர்ப்பை கட்டுப்படுத்தும் வகையில் தன்னுடைய பணி உள்ளது என்று லாபொன்டைன் நினைக்கிறார்; இதற்காக நயமான உரைகளைக் கூறுகிறார். WASG மாநாட்டில் "அரசியலில் பெரும் வேலைநிறுத்தம்" என்பதறாக ஆதரவை, ரோசா லுக்சம்பேர்க் பற்றிய குறிப்பில் கூறுவது பற்றி அவருக்கு மன உளைச்சல் ஏதும் இல்லை. ஆனால் 90 ஆண்டுகளுக்கு முன்பு லாபொன்டைன் முற்றிலும் பிணைந்து, இணைத்துள்ள சமூக ஜனநாயகவாதத்தை ஒரு துர்நாற்றும் வீசும் பிணமென ரோசா லுக்சம்பேர்க்தான் குறிப்பிட்டார்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved