:
செய்திகள்
ஆய்வுகள்
:
வட அமெரிக்கா
ஜிலீமீ க்ஷிவீக்ஷீரீவீஸீவீணீ ஜிமீநீலீ னீணீssணீநீக்ஷீமீsஷீநீவீணீறீ க்ஷீஷீஷீts ஷீயீ ணீஸீஷீtலீமீக்ஷீ
கினீமீக்ஷீவீநீணீஸீ tக்ஷீணீரீமீபீஹ்
Virginia Tech படுகொலை--மற்றொரு
அமெரிக்க துன்பியலின் சமூக வேர்கள்
By David Walsh
18 April 2007
Use this
version to print | Send this link by
email |
Email the
author
வேர்ஜீனியாவில் பிளாக்ஸ்பேர்க்கில் உள்ள
Virginia Tech
இல் நிகழ்ந்த படுகொலைகளுக்கு ஒரு நாளைக்கு பின்பும் பெரும் திகைப்பு
மற்றும் துயரத்துடன்கூட அமெரிக்க வாழ்க்கை பற்றிய சில சிந்தனைகள் தேவைப்படுகின்றன. நிகழ்வு மிகக் கொடூரமானதுதான்;
ஆனால் கடந்த 25 ஆண்டுகளாக அமெரிக்க சமூதாயத்தின் வளர்ச்சியை பார்த்து வருபவர்களுக்கு இது முற்றிலும் அதிர்ச்சியை
கொடுக்காது. மனச்சிதைவினால் ஏற்படும் இத்தகைய நிகழ்வுகள், மற்ற டஜன் கணக்கான கொலைகள் மற்றும்
கொலை முயற்சிகள் பணியிடங்களிலும் பள்ளிகளிலும் ஏற்படுவது, குறிப்பாக 1980களின் நடுப்பகுதியில் இருந்து மனஉளைச்சல்
தரும் வகையில் தொடர்ந்து நடைபெறுகின்றன;
Assoicated Press மற்றும்
School Violence Resource Center
திரட்டியுள்ள பட்டியலில் 1991ல் இருந்து மட்டும் 30 பள்ளி, கல்லூரி துப்பாக்கிச்சூடுகள் நடைபெற்றுள்ளன என தெரியவருகிறது.
பிளாக்ஸ்பேர்க் கொலைகளுக்கு உத்தியோகபூர்வ பிரதிபலிப்பு, முந்தைய ஒவ்வொரு
நிகழ்விலும் இருந்தது போலவே மேம்போக்காகவும் பொருத்தமற்றதாகவும்தான் இருக்கும் என்று நிச்சயமாக கணிக்க
முடியும்.
செவ்வாய் பிற்பகல்
Virginia Tech வளாகத்தில் நடைபெற்ற சிறப்புக்
கூட்டத்தில் ஜோர்ஜ் டபுள்யூ புஷ் கலந்து கொண்டது குறிப்பாகப் பொருத்தமற்றது ஆகும். அமெரிக்காவின் மிக மட்டமானவற்றின்,
அதன் செல்வச் செருக்கு மற்றும் ஊழல் நலிந்த ஆளும் வர்க்கத்தின் உருவமாகத் திகழ்பவர் இவர். டெக்சாஸ் மாநில
ஆளுனர் என்ற முறையில் புஷ் 152 மனிதர்கள் மரணதண்டனை பெறுவதற்குத் தலைமை வகித்தார்; ஜனாதிபதியாக
ஆயிரக்கணக்கான அமெரிக்கர்கள், பல்லாயிரக்கணக்கான ஆப்கானியர்கள் மற்றும் நூறாயிரக்கணக்கான ஈராக்கியர்களின்
இரத்த கறைகள் இவருடைய கைகளில் படிந்துள்ளது. இவருடைய நிர்வாகம் இடையறா வன்முறையையே அதன் உலகக்
கொள்கைகளின் அடித்தளமாக மேற்கொண்டு, படுகொலைகள், இரகசிய சிறைவைத்தல் மற்றும் சித்திரவதை
ஆகியவற்றை நியாயப்படுத்தியுள்ளது.
பிளாக்ஸ்பேர்க் கொலைகளை பற்றிப் பேசுகையில் புஷ் "தங்கள் விதி இவ்வாறு
முடிவதற்கு உயிரிழந்தவர்கள் ஏதும் செய்துவிடவில்லை. தவறான நேரத்தில் தவறான இடத்தில் அவர்கள் இருந்தனர்.
இப்பொழுது அவர்கள் மறைந்து விட்டார்கள் - துயரில் வாடும் குடும்பங்கள், துயரில் இருக்கும் வகுப்பு நண்பர்கள்,
துயறுற்றிருக்கும் ஒரு நாடு இவற்றை அவர்கள் விட்டுச் சென்றுள்ளனர்." என குறிப்பிட்டார். இவரும் இவருடைய
உற்ற நண்பர்களும் தங்களுடைய கொள்கைகளின் விளைவுகளில் இருந்து முற்றிலும் பாதுகாப்பாக இல்லாவிட்டாலும்,
ஈராக்கில் ஏராளமான மக்களின் மடிவு பற்றியும் அவர்கள் இத்தகைய முறையில் "அவர்களுடைய விதி இவ்வாறு
முடிவதற்கு அவர்கள் ஏதும் செய்துவிடவில்லை" என்று கூறலாம்.
தன்னுடைய மேலெழுந்தவாரியான கருத்துக்களில் இந்த நிகழ்வுகளை மறந்துவிடும்
ஆர்வத்தை ஜனாதிபதி கொண்டிருந்தது போல் தோன்றியது. "இத்தகைய வன்முறை, கஷ்டங்களில் பொருள் காண்பது
கடினம்" என்ற புஷ்ஷின் கருத்து வியப்பைக் கொடுக்கவில்லை. உள்ளுணர்வாக அவர் அறிகிறார், அல்லது அவருக்கு
உரை எழுதிப் கொடுப்பவர்கள் அறிகிறார்கள், வன்முறை மற்றும் கஷ்டங்கள் பற்றித் தீவிரமாக சிந்திப்பது
பிரச்சனைக்குரிய வினாக்களை எழுப்பும் என்றும்; இன்னும் பிரச்சனைக்குரிய விடைகள் வரும் என்பதையும்
அறிவார்கள். "இந்த துன்பியல் கொண்டுள்ள நாளில்,
Virginia Tech இயல்பு நிலைக்கு மீண்டும் வரும் என்பதை
நினைப்பது கூடக் கடினம்" என்று ஜனாதிபதி முடிவுரையாகக் கூறுகையில், தான் கூறவந்ததைவிட அதிகமாகக்
கூறிவிட்டார் போலுள்ளது. இது Virginia Tech
இல் ஏதோ பெரிதும் தவறாகப் போய்விட்டது என்பதனை
ஒத்துக்கொள்வதாகும். இவ்விதத்தில் பல்கலைக்கழகம் என்பது பெரிய சமூக உண்மையின் ஒரு சிறு பகுதிதான் --
அதை எளிதாக சரிப்படுத்துவது சாத்தியமல்ல.
இக்கூட்டத்தில் பேசி பள்ளி அதிகாரிகள், அரசியல்வாதிகள், தேவாலய ஊழியர்கள்
என்று பொதுவாக நிகழ்வை விரைவில் முடிக்க விரும்பியது போல் தோன்றியது. சிலபேரைப் பொறுத்தவரையில்
சமூகத்தின் மொத்த உணர்வை உயர்த்தி, தேறுதல் கூறுவதற்கான உண்மை உணர்வு இருந்தது. ஆனால் பரந்த சமூக
தாக்கங்களை கொண்ட ஒரு பெருந்துன்பம் நடந்துவிட்டது; அது நன்கு ஆராயப்பட வேண்டும்.
Virginia Tech இல் நடந்த
நிகழ்வுகள் கொலாராடோவில் லிட்டில்டனில் கொலம்பைன் உயர்நிலைப் பள்ளியில் பலர் கொலையுண்ட நிகழ்விற்கு
கிட்டத்தட்ட சரியாக எட்டு ஆண்டுகளுக்கு பின் வந்துள்ளது. அங்கு 15 பேர் கொல்லப்பட்டனர். அப்பொழுது
செய்தி ஊடகமும் அரசியல்வாதிகளும் சடங்கு போல் மார்புகளில் அடித்துக் கொண்டனர்; பில் கிளின்டன் அப்பொழுது
தலைமை தாங்கினார். துப்பாக்கி கட்டுப்பாடு பற்றி புதிதாகக் கருதப்பட வேண்டும், பள்ளிகளில் கூடுதலான
பாதுகாப்பு வேண்டும், மன உளைச்சல் பெற்றுள்ள மாணவர்களுக்கு ஆலோசனை தேவை என்றெல்லாம் பெரிதும்
கூறப்பட்டது. இப்பொழுது போலவே, அப்பொழுதும் உத்தியோகபூர்வ அமெரிக்க மக்களின் கருத்து,
இக்கொலைகளுக்கு காரணம் ஒரு சமூக ஒழுங்கீனம் என்பதை அங்கீகரிக்க மறுத்தனர்.
இடைப்பட்ட ஆண்டுகளில் என்ன நிகழ்ந்துவிட்டது? 1999ல் இருந்து அமெரிக்க சமூகம்
கொலம்பைன் சோகம் போன்ற துன்பங்கள் வராமல் இருக்கும் வகையில் வளர்ந்துவிட்டது என்று எவரேனும் வாதிட
முடியுமா?
அமெரிக்காவில் அன்றாட வாழ்வு என்பது ஒரு இடைவிடா வன்முறைப் பின்னணியில்
தொடர்கிறது. ஏப்ரல் 1999ல் அமெரிக்க, நேட்டோ படைகள் முன்னாள் யூகோஸ்லாவியாவிற்கு எதிராக
தொடர்ச்சியாக ஏவுகணைகளால் தாக்கி, ஈராக் மீது பெரும் தீமைகள் பயக்கும் பொருளாதாரத் தடைகளை
கொண்டுவந்து, அவ்வப்பொழுது குண்டுவீச்சுக்களையும் நடத்தின. சோமாலியா மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகியவை
ஏற்கனவே கிளின்டன் நிர்வாகத்திடம் தண்டனை பெற்றன.
ஆனால் அமெரிக்க இராணுவவாதம் இந்த தசாப்தத்தில்தான் பெரிதும் தலைதூக்கி
நிற்கிறது. மத்திய ஆசியா அல்லது மத்திய கிழக்கில் அமெரிக்கா பல பகுதிகளில் கொலம்பைனுக்கு பின்னர் எட்டு
ஆண்டுகளில் பல நேரமும் படைகளை நிறுத்தியுள்ளது. களவாடப்பட்ட தேர்தல், மற்றும் செப்டம்பர் 11
பயங்கரவாதத் தாக்குதல்கள் பயன்பாடு இவற்றையொட்டி புஷ்-ஷென்னி ஆட்சி பொய்களை அடிப்படையாகக்
கொண்டு ஒரு போரை தொடக்கினர். ஆளும் உயரடுக்கு கற்பித்த படிப்பினை தெளிவாக இருந்தது: ஒரு இலக்கை
அடையவேண்டும் என்றால் இரக்கமற்ற வழிவகைகள் எவையாயினும் சரியானதுதான்.
அதே நேரத்தில், அமெரிக்காவில் கடந்த தசாப்தத்தில் சமூக இடைவெளி மிகவும்
அதிகமாகிவிட்டது. 2005 ஐ ஒட்டி அமெரிக்க மக்கள்தொகையில் உயர்மட்ட 10 சதவிகிதம் கீழேயிருக்கும் 150
மில்லியன் அமெரிக்கர்கள் சம்பாதிக்கும் பணத்தை சம்பாதித்தது. அந்த 300,000 தனி செல்வந்தர்கள் மக்களில்
வறியவர்களின் சராசரி வருமானத்தை போல் தலா 400 மடங்கு வருமானத்தை பெற்றுள்ளனர்; இது 1980
பிளவைப் போல் இரு மடங்கு ஆகும். செல்வம் படைத்தவர்கள் மற்றவர்கள் அனைவரையும் ஆதிக்கத்தில்
கொண்டுள்ளனர்; மிகப் பரந்த தொழிலாள வர்க்கத்தின் இழப்பில் நேரடியாக பெரும் செல்வக் கொழிப்பை
ஈட்டுகின்றனர். சமூகம் "வெற்றியாளர்கள்", "தோல்வி பெற்றவர்கள்" என்று அப்பட்டமாக பிரிக்கப்பட்டுள்ளது.
பிந்தையவர்களுக்கு வருங்காலம் இருண்ட தன்மையைக் கொண்டுள்ளது.
சமூக ஐக்கியத்தின் சிதைவு, அரசியல் வழிவகையில் பணத்தின் ஆதிக்கம், ஜனநாயக
உரிமைகள் அழிப்பு, அரசாங்கம் மற்றும் பென்டகனுடைய பிரச்சாரக் கருவியாக செய்தி ஊடகம் மாறியது, இந்த
நிகழ்போக்குகள் அனைத்தும் 1999ல் இருந்து வெளிவந்து இப்பொழுது இன்னும் முற்றப்பெற்ற நிலையில் உள்ளன.
இன்னும் பொதுவாக, கடந்த இருபத்தி ஐந்து ஆண்டுகள் அமெரிக்க அரசியல் மற்றும்
செய்தி ஊடக நடைமுறை வலதிற்கு தீவிரமாக பாய்ந்துள்ளதையும் கண்ணுற்றது; இதற்கு காரணம் ஒப்புமையில்
பொருளாதாரச் சரிவின் உந்துதல், மற்றும் சமூகச் சூழ்நிலையில் காணப்படும் நயமற்ற தன்மை, இழிசரிவு
ஆகியவையும்தான். சொற்களின் மிருகத்தனம், செயலில் மிருகத்தனம் ஆகியவை இப்பொழுது சக்தி வாய்ந்தவர்களால்
பின்பற்றப்படும் கொள்கையாகிவிட்டது.
வன்முறை அதிகரித்தல், பிறரை அச்சுறுத்தல், மனோவியாதியை முன்கொண்டுவருதல்
ஆகிய இவையனைத்தும் ஒரு பின்விளைவுகளை கொண்டவை; இதையொட்டி ஒருவித சூழ்நிலை உருவாகியது. தன்னுடைய
முக்கியமான பிரச்சினைகளை மூடி மறைத்தல் அல்லது புறக்கணித்தல் என்பதை அமெரிக்க சமூகம் நீண்டகாலமாக செய்துவருகிறது.
இதற்கு உத்தியோகபூர்வ விடையிறுப்பு என்ன? முதலில் தண்டனை; பின்னர் கடவுளை இழுத்தல். முரண்பாடுகளை
மூடிமறைத்தல் அவற்றை அகற்றிவிட உதவாது.
கலாச்சாரம் முற்றிலும் தாக்கத்திற்குள்ளாகி இருக்கிறது. வலதுசாரி அறநெறி
பாதுகாவலருக்கு முன்னுரிமை கொடுத்தல், வீடியோ விளையாட்டுக்கள், பொதுமக்கள் இசை மற்றும் திரைப்படங்கள்
கற்பழிப்பையும் கொலையையும் பெரிதாக்குதல் சமூக நலன்களின் அடையாளம் என்று எடுத்துக் கொள்ளப்படவே
முடியாதது ஆகும். மக்களை சிறு துகள்களாக்கி, பிறருடைய கஷ்டங்கள் பற்றி கவலை கொள்ளாதவர்களாக்கி
தள்ளும் வகையில் முயற்சிகள் உள்ளன. மனித வாழ்வு மதிப்புக் குறைவிற்கு உட்படுத்தப்பட்டுள்ளது; பல நேரமும் அது
இகழ்வாகத்தான் கருதப்படுகிறது.
இதற்கு விளைவுகள் ஏற்படும் என்பது தெளிவு. முழு உணர்வுடன் சக மாணவர்களை
முறையாகக் கொல்லும் திறமை சமூக இரத்தசோகை எத்தனை கொடூர தரத்திற்கு வந்துள்ளது என்பதைக்
காட்டுகிறது. காயமுற்றவர்களுக்கு உதவி அளிக்கப்பட்ட
Montgomery வட்டார மருத்துவமனையில் உள்ள டாக்டர்
ஒருவர் கூறினார்: "காயங்கள் வியக்கவைக்கின்றன. இந்த மனிதன் ஒரு மிருகம். சுடப்பட்டவர்களில் ஒருவர்கூட
குறைந்தது மூன்று தோட்டாக் காயங்களை இல்லாமல் இல்லை."
பிளாக்பேர்க் துப்பாக்கிதாரியான
23 வயது
கொரிய-அமெரிக்கரான சோ சேயுங் ஹுயி, இத்தகைய பெரும் சோகங்களில் தவிர்க்கமுடியாமல் தோன்றும்
பரிதாபமான நபர்களில் ஒருவனாவான். "அவர் ஒரு தனித்தவர்" என்று ஒரு கல்லூரி அலுவலர் கூறினார்.
அவனுடைய அறையில் இருந்த நண்பர்கள் அவன் "இயற்கைக்கு மாறாக இருந்தவன்", தனியாக புசித்த இளைஞர்,
பிறருடன் அதிகம் பேசாதவன், ஆண் அல்லது பெண் நண்பர்கள் அதிகம் இல்லாதவர், தன்னுடைய கணினி முன் பல
நேரம் உட்கார்ந்திருந்தவர், "தன்னுடைய மேசையை வெறித்து, வெறுமையை வெறித்துப்பார்த்துக்கொண்டு
இருந்தவர்" என்று கூறியுள்ளனர்.
சோவின் ஆங்கிலப் பேராசிரியர் "மிகவும் உளைச்சலில் இருந்தான்" என்பதற்கான
அடையாளங்களை கொண்டிருந்தான் என்று அவனுடைய படைப்பாற்றல் எழுத்துப் பயிற்சியை அடிப்படையாக கொண்டு
குறிப்பிட்டு அவனை தக்க ஆலோசனை பெறுமாறும் கூறினார். அவனுடைய சக மாணவர்களில் ஒருவர், நாடகம்
எழுதும் வகுப்பில் உள்ளவர், அவனுடைய படைப்பை "உண்மையில் மன நோயாளியுடையது போன்றும்,
கோரமானதுமானது" என்றும் விவரித்தார். அவனுடைய ஒரு நாடகத்தை பற்றி அவர் கூறுகையில், "தன்னுடைய
மாற்றம் தந்தையை வெறுத்த ஒருவனைப் பற்றியது அது. நாடகத்தில் சிறுவன் இயந்திரவாள் ஒன்றை எடுத்து
மாற்றாந்தந்தையை அடிக்கிறான். ஆனால் நாடக முடிவில் சிறுவன் தன்னுடைய மாற்றாந் தந்தையை ஒரு அரிசி
வறுவல் கொடுத்து வன்முறையில் திணற அடித்துக் கொல்லுகிறான்." இதை ஒப்புக் கொள்ளுவது கடினம்தான், ஆனால்
தற்கால அமெரிக்க திரைத் தொழிலில் இத்தகைய காட்சி நினைத்துப் பார்க்க முடியாததா?
அமெரிக்காவிற்கு ஒரு சிறுவனாக வந்து வாஷிங்டன் டி.சி. புறநகர், வேர்ஜீனியா,
Fairfax
மாவட்ட உயர்பள்ளிகளில் பயின்ற சோ, ஒரு குறிப்பை விட்டுச் சென்றுள்ளான்; அதில் அவர் "பணக்காரக்
குழந்தைகள்", "இழிந்த செயற்பாடுகள்", "ஏமாற்றுத்தன வல்லுனர்கள்" போன்ற சொற்களை பலமுறையும்
பயன்படுத்தியுள்ளான். "நீங்கள்தான் இதை நான் செய்யக் காரணம்" என்றும் அவன் எழுதியுள்ளான். பள்ளி
அதிகாரிகள் கருத்தின்படி இந்த இளைஞன் பள்ளி ஆன்லைன் அமைப்பில் (online
forum) "நான்
vtech இல்
மக்களைக் கொல்லப் போகிறேன்" என்று எச்சரிக்கையையும் கொடுத்திருந்தான்.
இது ஒரு பெரும் உளைச்சலில் இருந்த நபரைக் காட்டுகிறது; ஆனால் ஏதும்
செய்யப்படவில்லை. பலரைப் போல இவனும் பள்ளங்களில் தடுமாறி விழுந்தான். அமெரிக்காவில் நல்லவற்றை
செய்யும் பல தனிநபர்கள் இருக்கிறார்கள்; உதவியளிக்க பெரும் ஆர்வத்துடன் அவர்கள் உள்ளனர்; ஆனால்
சமுதாயம் என்தை முற்றுமுழுதாக எடுத்துக்கொள்ளும்போது அது உணர்வற்றதாக உள்ளது. அமைப்புரீதியாக,
நிதிரீதியாக என்று மக்களுக்கு உண்மையில் உதவ உள்ளவர்களுக்கு பல தடைகள் வருகின்றன; இவை அனைத்தும் விட்டுக்
கொடுக்காத போட்டிச் சூழ்நிலையில் நடைபெறுகின்றன.
மிகப் பயங்கரமாக இருந்தாலும் பிளாக்ஸ்பேர்க் நிகழ்வு ஒரு தனித்தன்மையோ
அல்லது தனிமைப்படுத்தப்பட்டு நடந்ததோ அல்ல. வேர்ஜீனியாவில் பலர் கொலையுண்ட ஒரு நாளைக்கு பின்னர்
டெக்சாஸ், ஓகலோமா, டெனிசே பல்கலைக்கழக நிர்வாகிகள் வளாகங்களை மூடி, மாணவர்களை காலி செய்யக்
கூறினர். லூயிசியானாவில் அதிகாரிகள் இரண்டு பொதுப் பள்ளிகளை மூடினர். புளோரிடாவில் ஹாலிவுட் ஹில்ஸில் ஒரு
உயர்நிலைப்பள்ளி தன்னுடைய கைத்தொலைபேசி மூலம் துப்பாக்கிப் படம் வரைந்து தன்னையே கொன்று
கொள்ளப்போவதாக தகவல் கொடுத்தபின் மூடப்பட்டது. அயோவாவில் ராபிட் நகர மத்திய உயர்நிலைப்பள்ளி
பள்ளித் திடலில் ஒருவர் துப்பாக்கியுடன் இருந்தது பற்றிய தகவல் வந்தவுடன் மூடப்பட்டது.
கொலம்பைனுக்கு பின்னர் இந்த சமூக தனிமைப்படுத்தலின் ஆதாரம் பற்றி நாம் என்ன
அறிந்துள்ளோம்? நாட்டின் முக்கிய செய்தித்தாட்களில் தலையங்கங்களை பார்த்தால், தவிர்க்கமுடியாமல் ஒரு
முடிவிற்குத்தான் வரமுடியும் ... அடிப்படையில் ஏதும் அறியவில்லை என்பதுதான் அது.
நியூயோர்க் டைம்சின் ஆசிரியர்கள் "வெகு எளிதில் கிடைக்கக்கூடிய துப்பாக்கிகளை
வைத்துக் கொண்டு, அச்சுறுத்தும் வீட்டிலேயே இருக்கும், கொலைகாரர்களிடம் இருந்து அமெரிக்கர்கள் மிகப்
பெரிய ஆபத்துக்களை" எதிர்கொள்ள வேண்டியுள்ளது என்று புலம்பியுள்ளனர். கொலம்பைனிற்கு பின்னர் "பொதுப்
பள்ளி நிர்வாகிகள் அபாய எச்சரிக்கைகளை முன்கூட்டியே கண்டறிவதில் குறிப்புக் காட்டி, துயரங்களை தடைசெய்ய
முயன்றனர்." என்றும் அவர்கள் வாசகர்களுக்கு நினைவுபடுத்தியுள்ளனர்.
அமெரிக்காவில் நூறாயிரக்கணக்கான மில்லியன் துப்பாக்கிகள் உலவுகின்றன; ஐயத்திற்கு
இடமின்றி அவற்றை பெறுதல் எளிதுதான். ஆனால் இது இப்பொழுது முக்கியமானது அல்ல. அமெரிக்க வாழ்வில்
வாடிக்கையாக சமூகபாதிப்பு கொடுக்கக்கூடிய செயல்பாட்டை விளக்குவதற்கு அது உதவாது. "எச்சரிக்கை
அடையாளங்களை" காண்பதற்கு விழிப்புடன் இருப்பதைப் பொறுத்தவரையில், இது நல்ல ஆலோசனையாக
இருக்கலாம், ஆனால் தக்க விடை என்று கூறமுடியாது.
Washington Post, Los Angeles Times, Boston Globe, USA
Today, Detroit Free Press ஆகியவற்றில் வந்துள்ள
தலையங்கங்களும் நிலைமை பற்றி நன்கு அறிய உதவவில்லை. முறையே, அவை பின்வரும் வினாக்களை எழுப்புகின்றன,:
("கருவிகள் மூலம் ஆயுதங்கள் கண்டுபிடிக்க வேண்டியது அமெரிக்க வகுப்பறைகள், பல்கலைக் கழகங்களில் எப்பொழுதும்
நிறைந்து இருக்க வேண்டுமா?", கருத்துக் கூறாமல் விடுவது ("சில நேரங்களில் மெளனமாக இருத்தல்தான் மிகச்
சிறப்பாக எதிர்கொள்ளும் முறை என்பதை நாம் நினைவிற் கொள்ள வேண்டும்), வியப்பைத் வெளிப்படுத்துதல்
(சிறிதும் பொருளில்லாமல் ஒருவன் சக மனிதர்களை எப்படி அழித்துவிட முடிகிறது என்பதைக் கற்பனையும் செய்து
பார்ப்பது கடினனமாகும்), சீற்றம் ("ஆனால் இன்று துப்பாக்கியேந்தியவன் செய்த செயலினால் இழிவுணர்வு, மற்றும்
அவன் செயலால் பாதிக்கப்பட்டவர்களுக்காக மனத்தில் வலி இவற்றில்தான் இன்று குவிப்பு உள்ளது), அல்லது தர்ம
உபதேசம் (ஒருவேளை வன்முறை "உறுதியற்ற அடித்தளமுடைய அறநெறியின் அடையாளம்தான்").
தீவிர விவாதம் அல்லது கருத்தாய்வு இல்லாத நிலையில் 24 மணி நேரமும் சோகம்
பற்றி இம்முறையில் கேபிள் தொலைக்காட்சிகள் மூலம் தகவல் கொடுக்கப்பட்டது, நிலைமையை சுரண்டும்
தன்மையைத்தான் காட்டுவது போல் உள்ளது.
எந்தச் செய்தி ஊடகமும் நிகழ்வின் சமூகக் காரணங்கள் பற்றி ஏதும் கூறவில்லை.
அரசியல், செய்தி ஊடகம் Virginia Tech
படுகொலைக்கு கொடுத்த விடையிறுப்பு, மற்ற முக்கிய சமூக தீமைகளுக்கு காட்டுவது போல், மறுப்பு மற்றும்
தன்னையே ஏமாற்றிக் கொள்ளும் தன்மை இரண்டையும் இணைத்த தாக்கத்தால் இருந்தது. படுகொலை தொடர்ச்சிகள்
பெருகிய முறையில் விழிப்புடன் இருந்தால் தவிர்க்கப்படலாம் என்று தன்னைத்தானே ஏமாற்றிக் கொள்ளுதல், கல்வி
வளாகங்களை கோட்டைகளாக மாற்றுதல் என்பதோ, எந்த அளவிற்கு கல்வியாளர்களும் அரசியல்வாதிகளும் யதார்த்தத்தில்
இருந்து வெகு தொலைவில் உள்ளனர் என்பதையே காட்டுகிறது.
இத்தகைய நிகழ்வுகள் மற்றொரு வழி காணப்படுதலின் தேவையை அறிவுறுத்துகின்றன;
கூடுதலான உணர்வு உடைய விடைகள், பிரச்சினைகளுக்கு உண்மையான விடைகள் வேண்டும் என்பதை காட்டுகின்றன.
இது ஒரு வித்தியாசமான சமூக சார்பின் தேவை எழுகிறது; தற்பொழுதைய அமெரிக்க சமூகத்தின் தளங்களை அது
வினாவிற்கு உட்படுத்துகிறது. அத்தகைய தீவிர ஆய்வுகள் தேசிய பேரிடரான காலத்திற்கு மட்டுமே எனக் கருதப்படலாகாது. |