World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

Presidential election in France
The dismal world of Lutte Ouvrière and Arlette Laguiller

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல்

லூத் ஊவ்றியேர் மற்றும் ஆர்லட் லாகியே இன் சோர்வுற்ற உலகம்

By Felix Faber
20 April 2007

Back to screen version

தொழிலாளர் போராட்டத்தின் (Lutte Ouvrière, LO) வேட்பாளாரான ஆர்லட் லாகியே ஜனாதிபதி தேர்தலுக்காக நடத்தும் பிரச்சாரத்தில் மூன்று முக்கிய கருத்துக்கள் ஆதிக்கம் கொண்டுள்ளன: வேலையின்மை, வீடுகள் பற்றாக்குறை மற்றும் ஊதியங்கள். இந்த அமைப்பு, சர்வதேச பிரச்சினைகள் பற்றி ஏதும் கூறவில்லை; அதன் அரசியல் முன்னோக்கின் மூன்று தூண்களும் முற்றிலும் தேசிய நிலைப்பாட்டில் இருந்துதான் அணுகப்படுகின்றன.

ஒரு வகையான குறைந்தபட்ச சீர்திருத்தவாத வேலைத்திட்டத்துடன் லாகியே நிறுத்திக் கொண்டுள்ளார்: தேசிய குறைந்தபட்ச ஊதியத்தில் (SMIC) உயர்வு, சமூக வீடுகள் கட்டுமானத்தில் விரிவாக்கம் மற்றும் கூடுதலான வேலைப் பாதுகாப்பு என்பவையே அவை. இந்த நடவடிக்கைகள் பெரு நிறுவனங்கள் மீதான வரிகளை அதிகப்படுத்துவதன் மூலம் அடையப்படும்.

இவ்வம்மையாரின் தேர்தல் அறிக்கை கூறுகிறது: "எனவே நான் எழுப்பும் கோரிக்கைகள் உண்மையான சோசலிச ஜனாதிபதி மற்றும் அரசாங்கத்தால் சாதிக்கப்பட இருக்கும் முதல் நடவடிக்கைகளாக இருக்கும்", "சோசலிஸ்ட்" என்னும் சொற்றடர் இப்பின்னணியில் செகோலென் ரோயால் தலைமையில் இருக்கும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியை குறிக்கும்.

லாகியே இத்தகைய கோரிக்கைகளை நடைமுறைக்கு கொண்டுவருவதற்கு தான்தான் பொறுப்பு என்று காணவில்லை - மாறாக, இவர் தன்னை சோசலிஸ்ட் கட்சியின் நல்ல மனச்சாட்சி என்று கருதுகிறார். அவருடைய தேர்தல் சுவரொட்டிகளில் அவர் சார்க்கோசிக்கு எதிர்ப்பை வலியுறுத்துகிறார், ரோயாலை வலுவற்றவர் என்று குற்றம் சாட்டுகிறார்; பின்னர் தன்னுடைய ஆதரவாளர்களை "இடதை செயல்படும்படி கட்டாயப்படுத்துவதற்காக", அவரை தேர்ந்தெடுக்குமாறு கூறுகிறார்.

"வாக்காளர்களில் பெரும்பாலானவர்கள் நிக்கோலா சார்க்கோசி நிராகரிக்கப்படுவார் என எதிர்பார்க்கின்றனர் என்பதை நான் அறிவேன்" என்று கடந்த ஞாயிறன்று பாரிசில் நடந்த இவருடைய பெரிய தேர்தல் கூட்டத்தில் அறிவித்தார். "ஆனால் முதல் சுற்றிலேயே செகோலென் ரோயாலை, அவர் தேர்ந்தெடுக்கப்பட்டால் விரும்பியதை எல்லாம் செய்ய முடியாது என்று எச்சரிக்க வேண்டும்; தொழிலாளர்களும் பெரும்பாலான வர்க்கங்களும் வலதுசாரிக் கொள்கையை அவர் செய்படுத்தினால் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கமாட்டா." வேறுவிதமாகக் கூறினால், லாகியேக்கு வாக்கு என்பது ரோயாலை இடதுபுறம் நோக்கி அழுத்தம் கொடுப்பதற்காக கொடுக்கப்படும் வாக்கு ஆகும்.

இத்தகைய சோசலிஸ்ட் கட்சிக்கான அழைப்பு தன்னுடைய பிரசாரத்தை பற்றி தன்னம்பிக்கை முற்றிலும் இல்லாத நிலையுடன் சேர்ந்துள்ளது. தன்னுடைய கட்டுரைகளில் லாகியே தான் ஒன்றும் ஜனாதிபதியாக வருவோம் என்ற போலிக் கருத்தைக் கொண்டிருக்கவில்லை என்று தவிர்க்க முடியாமல் சுட்டிக்காட்டியுள்ளார். அவருடைய ஒரு நிமிஷ தொலைக்காட்சி தோன்றுதல்கூட இந்த நம்பிக்கையுடன்தான் தொடங்குகிறது. தனக்கு சில வாக்காளர்கள் வாக்களித்துவிட வேண்டும் என்று நம்பதற்கரிய கருத்தைப் பெறக்கூடும் என்று லாகியே அஞ்சுவது போன்ற உணர்வை ஒருவர் பெரும்பாலும் பெறுவார்.

Liberation செய்தி ஏடு, கிட்டத்தட்ட 80 வயதான, அமைப்பின் தலைவரான, ஹார்டி எனப்படும் ரோபேர்ட் பார்சியாவை மேற்கோளிட்டு பாரிஸ் கூட்டத்தில் லாகியே இரண்டு சதவிகித வாக்குகளை பெறுவார் என்ற தன் நம்பிக்கையை அறிவித்தாக கூறியுள்ளது. இதைவிட வேறு எப்படி இருந்தாலும் அது எதிர்பாராததாக இருக்கும். "ஆர்லெட்டிற்கு இதுவரை இரண்டு சதவிகிதத்திற்கு குறைவாகக் கிடைத்ததில்லை. இரு முறை ஐந்துக்கும் மேலாக நாங்கள் பெற்றது முழு வியப்பைக் கொடுத்தது."

2002 தேர்தலில் லாகியே மற்றும் LCR இன் ஒலிவியே பெசன்ஸநோவும் மொத்தத்தில் 10 சதவிகித வாக்குகளை பெற்றபொழுது "வலதுசாரியை பொறுத்தவரையில் இது பாதிப்பை ஏற்படுத்தவில்லை" என்று ஹார்டி குறைகூறினார். மற்றொரு வகையில், இடதின் மீது அழுத்தம் கொடுப்பதற்கு, செகோலென் ரோயால் தேர்ந்தெடுக்கப்பட்டால் மட்டுமே முடியும் என்றும் அவர் கூறினார்.

ஹார்டியை பொறுத்தவரையில் இது நிகழ்தற்கரியது ஆகும். "ரோயால் நிச்சயமாக இரண்டாம் சுற்றிற்கு வருவார். ஆனால் சார்கோசியை எதிர்த்து வெற்றி பெறுவது என்பது வேறு விஷயம்." என்று அவர் லிபரேஷனிடம் கூறினார். "இந்நாட்டில் இடது எப்பொழுதுமே சிறுபான்மையில்தான் உள்ளது. சிராக்கின் ஆதரவு கொடுத்ததால்தான் மித்திரோன் தேர்ந்தெடுக்கப்பட்டார்." சமீபத்திய பிரெஞ்சு வரலாறு பற்றி இது வினோதமான விளக்கமாகும்; ஏனெனில் 1981 தொடக்கம் சோசலிஸ்ட் கட்சி 14 ஆண்டுகளுக்கு ஜனாதிபதி பதவியை வகித்தது, பிரதம மந்திரி பதவியை 1997க்கு பின் இன்னும் ஐந்து ஆண்டுகளுக்கு வகித்தது.

எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாள வர்க்கத்தின் மீதான அனைத்து தாக்குதல்களும் சோசலிஸ்ட் கட்சி ஜனாதிபதி பிரான்சுவா மித்திரோன் மற்றும் சோசலிஸ்ட் கட்சி பிரதம மந்திரி லியோனல் ஜோஸ்பனால் நடத்தப்பட்டன; அதுதான் வலதுசாரி மீண்டும் அதிகாரத்தை பெற உதவியது இவ்விதத்தில் லூத் ஊவ்றியேர் பெரும் பொறுப்பைக் கொண்டுள்ளது. சோசலிஸ்ட் கட்சி தொழிலாளர் நலன்களுக்கு ஏற்ப நடக்குமாறு அழுத்தம் கொடுக்கப்பட முடியும் என்ற போலித் தோற்றத்தை அது தொடர்ந்து ஊக்குவித்தது; இதையொட்டி அதற்கு இடது மூடுதிரையையும் கொடுத்தது. அதே நேரத்தில் தன்னுடைய சொந்த அரசியல் பொறுப்பு அல்லது தொடக்க முயற்சியை நிராகரிக்கவும் செய்தது.

இதே போக்கைத்தான் இன்றும் அது தொடர்ந்து வருகிறது. ஹார்டி, லாகியே போன்றவர்களுக்கு, தவறாக "இடது" என பெயரிடப்பட்டுள்ள கட்சிகளின் கொள்கைகள்தான் வலதுசாரியின் தேர்தல் வெற்றிகளுக்கு பொறுப்பு அல்ல; ஆனால் தொழிலாள வர்க்கம்தான் பொறுப்பு என்ற கருத்து ஆகும். சோசலிஸ்ட் கட்சி மற்றும் அதன் நட்புக்கட்சிகள் மீது அழுத்தம் கொடுப்பதைவிட அவர்கள் வேறு எவ்வித அரசியல் தொடக்க முயற்சியையும் நிராகரிக்கின்றனர். ஒரு உண்மையான விசுவாசி சுவர்க்கத்தை பற்றிப் பேசுகையில் எவ்வித நம்பிக்கையுடன் பேசுகிறாரோ, அதேபோல் இவர்கள் சோசலிசத்தை பற்றிப் பேசுகின்றனர் -- அதாவது இவ்வாழ்வை நீத்த பின்னர் கிடைக்கும் வாழ்வாகத்தான் பேசுகின்றனர்.

Canal Plus க்குக் கொடுத்த பேட்டி ஒன்றில் லாகியே 2002 ஜனாதிபதித் தேர்தல்களுக்கு இரண்டுவாரம் முன்புதான் அவரைப் பற்றிய தேர்தல் கணிப்பு 11 சதவிகிதமாக இருந்தது என்று நினைவுறுத்தப்பட்டார். எவ்வளவு முயன்றும் இதை மறுக்க முடியாத நிலையில் அவர் பேச்சற்று நின்றார். இந்தப் பேச்சற்ற தன்மைதான் LO வின் அடிப்படை வேலைத்திட்டம், பார்வை ஆகியவற்றின் பிரதிபலிப்பு ஆகும்.

லூத் ஊவ்றியேர் ட்ரொட்ஸ்கிசம் பற்றிக் குறிப்பிட்டாலும், அது நான்காம் அகிலத்தின் அங்கத்துவமாக இருந்ததே கிடையாது. ட்ரொட்ஸ்கிச சர்வதேசியத்தின் அமைப்பு குட்டிமுதலாளித்துவ வகை என்று வாதிட்டு, அதன் முக்கிய பணி தொழிலாள வர்க்கத்தின் தொடர்பு அமைப்புக்களை நிறுவுதல் என்று கூறிக் கொண்டு LO தன்னுடைய அரசியல் பணியை ஆலைச் செய்தித்தாட்களை வினியோகித்தல் மற்றும் தொழிற்சங்க நடவடிக்கைகள் என்பதுடன் நிறுத்திக் கொண்டது. பேச்சளவில் இது ஒரு சர்வதேசக் கட்சி அமைக்கப்பட வேண்டும் என்று கூறியது; ஆனால் நடைமுறையில் முற்றிலும் தொழிற்சங்கங்களின் தேசிய சூழ்நிலைக்கு மாற்றியமைத்துக் கொண்டது.

இது வெறும் அமைப்பு ரீதியான நிலைப்பாடு அல்ல; அரசியல் நோக்குநிலையின் அடிப்படைப் பிரச்சினை ஆகும். நான்காம் அகிலம் கட்டியமைக்கப்படுதல் என்பது, இரண்டாம், மூன்றாம் அகிலங்களின் தேசியவாத சீரழிவை ஒட்டி தொழிலாள வர்க்க தலைமையில் ஏற்பட்ட நெருக்கடியை தீர்ப்பதற்கான அவசியத்தில் விளைந்தது. இதற்கு ஒரு சர்வதேச மூலோபாயமும், அமைப்பும் தேவைப்பட்டது; இதை LO உறுதியாக நிராகரிக்கிறது. தொழிற்சங்க சூழல் மீதான இந்தக் குழுவின் ஒருங்குவிப்பு முழுவதும் உடனடியான தேசிய பிரச்சினைகளுக்கு அதனுடைய கவனத்தை மட்டுப்படுத்திக் கொள்வதுடன் செல்கிறது.

இரண்டாம் உலகப் போருக்கு பின்னர் நிலவிய சர்வதேச சூழ்நிலை சீர்திருத்தவாதம் மட்டுப்படுத்தப்பட்ட குறிப்பட்ட அளவில் புதுப்பிக்கப்படுவதை அனுமதித்தது; ஆனால் தொழில்நுட்பத்தின் புரட்சிகர வளர்ச்சி மற்றும் 1980களில் இருந்து உற்பத்தி பூகோளமயமாக்கல் ஆகியவை தேசிய அரசை அடிப்படையாகக் கொண்ட எவ்விதக்கொள்கைக்குமான அடிப்படையை தகர்த்துவிட்டன.

லூத் ஊவ்றியேர் ஐ பொறுத்தவரையில் உலகம் பொறிந்துவிட்டது. ஆலைகளில் தன்னுடைய பணியில் முற்றிலும் ஆழ்ந்துபோன அது, பூகோளமயமாக்கல் வழிவகைகளைப் புரிந்துகொள்ள அல்லது அதற்காக தயாரிக்க தவறியது. 1980 கள் மற்றும் 90 களில் வேலைநிறுத்த இயக்கங்களின் தோல்வி ஏற்கனவே நசுங்கியிருந்த அமைப்பிற்கு கூடுதலான அடிகளை கொடுத்தன. இறுதி விளைவு தற்போதைய தேர்தல் பிரச்சாரத்தில் நாம் எதிர்கொள்ளும் வினோதமான அரசியல் உட்பொருள் ஆகும்.

சில விதிவிலக்கான சந்தர்ப்பங்களில், LO உலக நிகழ்வுகள் பற்றிப் பேசுகிறது; ஆனால் அதன் முடிவுரைகள் வலுவற்று, செயலற்று உள்ளன. ஈராக் போரை ஏகாதிபத்திய போர் என்று கண்டிக்கிறது; எண்ணெய் இருப்புக்களுக்கான போட்டிகளை குறைகூறுகிறது; அமெரிக்க படைகள் திரும்பப் பெற வேண்டும் என்று கூறும் அதே நேரத்தில், இது அமெரிக்க ஏகாதிபத்தியத்தை பற்றி எவ்வித பகுப்பாய்வையும் செய்ய முற்றிலும் தவறியது. போருக்கு பின்னணியில் இருக்கும் உந்து சக்திகளை உணர்வதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டதற்கான அறிகுறியே கிடையாது; போரை எதிர்ப்பதற்கு செயலூக்கமான ஒரு சர்வதேச மூலோபாயத்தை காட்டிக்கொள்வது என்பது LO தலைவர்களின் புரிந்துகொள்ளும் சக்திக்கு முற்றிலும் அப்பாற்பட்டதாகும் -- மொத்தத்தில் இது ஒன்றும் பிரான்சில் நடக்கவில்லை என்ற கருத்துத்தான் எஞ்சியுள்ளது.

ஈரானின் அணுசக்திப் பிரச்சினை பற்றிய சர்ச்சையில், LO ஐந்து பெரும் அணு வல்லரசுகளுக்கும் வெவ்வேறு அளவுகோல்கள் பயன்படுத்தப்படுகின்றன என்ற உண்மைக்கு எதிராக வாதிடுகிறது மற்றும் பிரான்சின் மீது விமர்சனமின்மையை நோக்கமாகக் கொண்டுள்ளது. ஆனால் பின்னணி பற்றிய பகுப்பாய்வு ஏதும் இல்லை; அமெரிக்காவால் மேற்கொள்ளப்பட்டுவரும் போர்த்தயாரிப்புக்கள் பற்றிக் குறிப்பு ஏதும் இல்லை; எல்லாவற்றிற்கும் மேலாக உலக அரசியலில் இந்த நெருக்கடியினால் ஏற்படக்கூடிய விளைவுகள் பற்றிப் பகுப்பாய்வு ஏதும் இல்லை.

லூத் ஊவ்றியேர் ஐ பொறுத்தவரையில், அரசியல் என்பது உலகப் பொருளாதாரம், புறநிலைவிதிகள் ஆகியவற்றின் ஆணைகளால் உறுதிப்படுத்தப்படுகிறது என்று இல்லாமல் தனிநபர்களின் தனிப்பட்ட நல்ல தீய செயலால் உறுதிப்படுத்தப்படுகிறது. அத்தகைய நிலைப்பாடு ஏற்கப்படமுடியாதாகையால், LO சலுகைகள் கொடுப்பதில் பேரம் பேசுவது இயலும் என்று நினைக்கப்படும் அரசியல் பகுதிகளில் தஞ்சம் நாடுகிறது. இந்த நோக்கத்துடன் லாகியே குறிப்பாக (SMIC) குறைந்த ஊதிய விகிதம், போதுமான இல்லங்கள் இல்லாதது அல்லது வேலையின்மை விகிதம் உயர்ந்துள்ளது ஆகியவை பற்றி விவாதிக்கத் தயாராக இருக்கிறார்.

ஆனால் தேசிய அரசுகளின் கொள்கையை நிர்ணயிப்பது உலகக் கொள்கைதான்; உலகப் பொருளாதார வளர்ச்சிதான் பிரெஞ்சு பொருளாதாரத்தின் விதியை நிர்ணயிக்கிறது. ஊதிய உயர்வுகள், வேலைகள், சமூகக் கட்டுமானங்கள் ஆகியவை சர்வதேச பணச் சந்தைகள், இலாபங்களை அதிகரிக்க பூகோளந்தழுவிய அழுத்தங்கள், அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் சரிவு, கடந்த முப்பது ஆண்டுகளில் உலக அரசியலில் ஏற்பட்டுள்ள சர்வதேச மாறுதல்கள் இவற்றைப் பகுத்தாராயாமல் புரிந்துகொள்ளவும் முடியாது தீர்க்கப்படவும் முடியாது.

இன்று மிக அடிப்படையான நலன்களின் பாதுகாப்புக் கூட ஒரு சர்வதேச புரட்சிகர மூலோபாயத்தின் அவசியத்தை முன்வைக்கிறது. லூத் ஊவ்றியேர் -இன் சீர்திருத்தவாத முன்னோக்கும் தேசிய அரசில் பிரமைகளை தோற்றுவிக்கத்தான் பயன்படும் மற்றும் ஒரு சுயாதீன, புரட்சிகர இயக்கத்தை கட்டியமைப்பதற்கு அது ஒரு தடை ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved