World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

French presidential debate: Royal and Sarkozy spar over right-wing agendas

பிரெஞ்சு ஜனாதிபதித் தேர்தல் விவாதம்: ரோயாாலும் சார்க்கோசியும் வலதுசாரி செயற்பட்டியல் பற்றி வாதிடுகின்றனர்

By Antoine Lerougetel
4 May 2007

Back to screen version

ஆளும் கோலிச UMP வேட்பாளரும், முன்னாள் உள்துறை மந்திரியுமான நிக்கோலா சார்க்கோசிக்கும், எதிர்க்கட்சியான சோசலிஸ்ட் கட்சியின் வேட்பாளரான செகோலென் ரோயாாாலுக்கும் இடையே புதன்கிழமை அன்று நடந்த இரண்டரை மணி நேரத் தொலைக்காட்சி விவாதம், பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மற்றும் பெருவணிக நலன்களை கடுமையாக பாதுகாக்கும் இருவருக்கும் இடையே நடந்த போட்டி ஆகும்.

உலகக் கோப்பை இறுதி ஆட்டத்தையும் விட அதிகமானவர்கள் பார்த்தனர் என்ற சாதனையைப் படைத்த விவாதம், 20 மில்லியன் மக்களால் காணப்பட்டது என்றாலும், எவர் வெற்றி பெற்றார் என்பது பற்றி கருத்து வேறுபாடுகள்தான் எழுந்துள்ளன. லிபரேஷனுடைய தலையங்கம், "நிக்கோலா சார்க்கோசி தோற்கவில்லை. ஆனால் செகோலென் ரோயாால் வெற்றி பெற்றார்" என்று எழுதியது.

விவாதம் அநேகமாக பிரான்சை சுற்றித்தான் இருந்தது. ஒரு வர்ணனையாளர் குறிப்பிட்டார் "மகத்தான முறையில் அறுகோணம்! (அறுகோணம் என்பது பிரான்சை குறிக்க அடிக்கடி பயன்படுத்தும் சொல்லாகும்). (பிரான்ஸ் முக்கிய படைத்தகை இயக்கவியல் உதவி கொடுத்திருந்த) ஈராக் போர்களை பற்றி எவ்வித குறிப்பும் வரவில்லை, (பிரான்ஸ் துருப்புக்கள் இழக்கப்பட்டிருந்த, இன்னும் இழந்து கொண்டிருக்கும் நிலையில் உள்ள) ஆப்கானிஸ்தான், லெபனான் அல்லது தன்னுடைய ஏகாதிபத்திய நலன்களை காக்க தீவிர இராணுவத் தலையீடுகளில் தொடர்புடைய பல ஆபிரிக்க நாடுகள் பற்றியும் குறிப்பு ஏதும் இல்லை.

மிகத்தீவிர இடதில் இருந்து மிகத் தீவிர வலது வரை அரசியல் ஸ்தாபன அமைப்புக்களில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் அல்லது அமெரிக்க இராணுவவாதத்துடன் போட்டி, இணைந்து சதி என்ற பங்கைப் பற்றி அரசியல் விவாதத்திற்கு எடுத்துக் கொள்ளக்கூடாது என்ற உட்குறிப்பான உடன்பாடு உள்ளது. ஜனாதிபதி அரசியலமைப்பின்படி, வெளியுறவுக் கொள்கை, இராணுவ விஷயங்கள் ஆகியவற்றிற்கு பொறுப்பு என்ற உண்மை இருந்த போதிலும், ஜனாதிபதித் தேர்தல் காலத்தில் இது குறிப்பாகப் பின்பற்றப்படுகிறது.

விவாதத்தில் மையம் கொண்டிருந்த ஒரு பிரச்சினை புலம்பெயர்தல் பற்றியதாகும். இரு வேட்பாளர்களும் ஆவணமற்ற புலம்பெயர்வோர் அனைவரும் பொதுவாக சட்ட பூர்வமாக்கப்பட வேண்டும் என்பதற்கு வெளிப்படையான எதிர்ப்பைக் காட்டினர்; ஒவ்வொரு குடியேறுபவர் பற்றியும் தனித்தனி முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பதை ஒப்புக் கொண்டனர்.

சார்க்கோசி கூறினார்: "உலகின் வறிய ஆதரவற்றவர்களை பிரான்ஸ் வரவேற்க முடியாது." இக்கருத்திற்கு ரோயாால் உடன்பட்டு, "இது ஒரு கடினமான, மனிதாபிமான முறையில் ஆழ்ந்த வருத்தம் தரும் பிரச்சினை" என்று கூறினார்.

ஒரு பள்ளியில் இருந்து தன்னுடைய இரு பேரக் குழந்தைகளை அழைத்துச் செல்ல வந்திருந்தபோது கைதுசெய்யப்பட்ட சீன முதியவர் ஒருவர் பற்றிய நன்கு விளம்பரப்படுத்தப்பட்ட வழக்கிற்கு சார்க்கோசிதான் பொறுப்பு ஏற்க வேண்டும் என்று ரோயாால் குற்றம் சாட்டினார். அவர் கூறியுள்ள நிலைப்பாட்டின்படி இன்னமும் நிற்கிறாரா என்று சார்க்கோசி அவரைக் கேட்டார் -- அவர் பின்னர் அதில் இருந்து பின்வாங்கினார்; அதாவது பிரெஞ்சுப் பள்ளிகளில் சேர்க்கப்பட்டிருக்கும் ஆவணமற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், அவர்களுடைய பெற்றோர்கள் அனைவரும் வசிக்கும் உரிமைகள் கொடுக்கப்பட வேண்டும் என்று அவர் ஒப்புக்கொள்வாரா என்றார். சோசலிஸ்ட் கட்சியின் திட்டத்திற்கு இணங்க தன்னுடைய கொள்கை ஒவ்வொரு வழக்கும் தனித்தனியே தகுதிப்படி ஆராயப்பட வேண்டும் என்று ரோயாாால் ஒப்புக்கொள்ளும் கட்டாயம் நேரிட்டது. "நான் ஒன்றும் தலைமுறைகளின் உலகந்தழுவிய, பொது ஒழுங்குபடுத்தப்படல் வேண்டும் என்று கோரவில்லை" என்று அவர் வலியுறுத்தினார்.

சார்க்கோசி விடையிறுத்தார்: "நான் உத்திரவிட்டதற்கு, நாம் உடன்படுகிறோம்."

செகோலென் ரோயாால்: "ஆம். ஒவ்வொரு வழக்கும் தகுதியின்பேரில், நாம் உடன்படுகிறோம்."

தன்னுடைய புலம்பெயர்தல் கொள்கைகளில் இருக்கும் மனிதாபிமானமற்ற தன்மையை சார்க்கோசி விளக்கினார்; அதில் ஒரு கூறுபாடு பிரான்சில் சட்டபூர்வ வசிக்கும் உரிமை பெற்றவர்களுடன் குடும்பங்கள் இணைவது கிட்டத்தட்ட இயலாது என்பதாக உள்ளது; இக்கொள்கையை ரோயாாாலும் ஏற்கிறார்."வசிக்க இடம் உள்ளது என்பதை நிரூபிக்க முடியாமல் இருக்கும்போது தங்கள் குடும்பங்களை ஒருவர் கொண்டுவரலாம் என்பதற்கு நான் இசைவு தரமுடியாது" என்றார் அவர். "செய்யும் தொழிலில் இருந்து அவர்களுக்கு வருமானம் கிடைக்கிறது; பொதுநல செலவினங்களில் இருந்து அல்ல.... இங்கு அவர்களுடைய சேரவரும் குடும்ப உறுப்பினர்கள் வருவதற்கு முன் பிரெஞ்சு மொழியைக் கற்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன்."

பிரான்சில் ஒவ்வொரு வாரமும் ஆவணங்கள் அற்ற புலம் பெயர்ந்தோர் 500 பேர் வெளியேற்றப்படுவது பற்றி இரு வேட்பாளர்களும் குறிப்பிடவில்லை; இப்படி வெளியேற்றப்படுபவர்கள் பலர், ஆண்டு ஒன்றுக்கு 26,000 பேர் வெளியேற்றப்பட வேண்டும் எனும் சார்க்கோசியின் திட்டத்தால், இழப்புக்கள், கைது, சித்திரவதை, மரணம் ஆகியவற்றை எதிர்கொள்ளுகின்றனர். பொதுவான மசோதா கேள்விக்கப்பாற்பட்டது என்பதில் இருவரும் உடன்பட்டனர்.

இந்தப் பின்னணியில், பொதுப் பள்ளிகளில் பயிலும் ஊனமுற்ற குழந்தைகளுக்கு உதவியை நிறுத்தியதற்காக UMP அரசாங்கத்தைக் குற்றம் சாட்டிய வகையில் உயர்ந்த சீற்றத்தை வெளிப்படுத்திப் பேசிய ரோயாாலின் நிலைப்பாடு முற்றிலும் தவறான தன்மையைத்தான் கொண்டிருந்தது. உண்மையில், மனிதகுல இடர்பாடுகளுக்கு இரு வேட்பாளர்களும் காட்டிய அக்கறையின்மை வெளிநாட்டு மக்களுக்கு மட்டும் பொருந்தவில்லை.

வேலை இல்லாதவர்கள் போல் பொதுநலச் செலவுகளை நம்பியிருப்பவர்கள் எந்த வேலையையும் ஏற்க வேண்டும், அதாவது கட்டாயப் பணி என்பதை வலியுறுத்திச் செயல்படுத்த வேண்டும் என்பதை இருவருமே ஒப்புக் கொண்டனர். பிரான்சில் இது மிகவும் கொடூரமான உள் விளைவுகளை கொண்டுள்ளது; ஏனெனில் நாஜி ஆக்கிரமிப்பின்போது ஒத்துழைத்த மார்ஷல் பெத்தானின் ஆட்சி கட்டாய சேவை வரியை ஜேர்மனிக்காக வசூலித்து கொடுத்தது. (ஆயிரக்கணக்கான தொழிலாளர்கள் இதை எதிர்த்து பிரெஞ்சு எதிர்ப்பணியில் சேர்ந்து, அதை ஒரு மக்கள் இயக்கமாக மாற்றினர்.)

ரோயாால் வலியுறுத்தினார், "உரிமைகள் மற்றும் கடமைகள் பிரச்சினையில், நாம் இருவரும் உடன்படும் ஒரு புள்ளி, நான் முன்வைக்கும் வேலைத்திட்டத்தில் இருப்பது, பதிலுக்கு ஏதும் கொடுக்காமல் புதிய உரிமைகள் வழங்கப்படலாகாது என்பதாகும்."

தன்னுடைய முக்கிய ஆலோசகரும் பிரான்சில் மிகவும் வெறுக்கப்பட்டுள்ள அரசியல்வாதிகளில் ஒருவருமான பிரான்சுவா பிய்யோன் உடைய ஓய்வூதியத் திட்டங்கள் சீர்திருத்தங்களை தான் தக்க வைத்துக் கொள்ளுவேன் என்று சார்க்கோசி வலியுறுத்தினார். பிய்யோன், Jean-Pierre Raffarin அரசாங்கத்தின் மந்திரி என்னும் முறையில் ஒரு சட்டத்தை புகுத்தியிருந்தார். அது மகத்தான உறுதியான எதிர்ப்பை தூண்டிவிட்டிருந்தது. அதன் தற்போதைய விதிகளின்படி, ஏற்கனவே வயதானவர்களை, குறைந்த வாழ்க்கை தரமுடையவர்களை, அது அதே நிலையில் தொடர்ந்து வைத்துவிடும்; ஆனால் சார்க்கோசி தவறான முறையில் இதற்கு விளக்கம் கொடுத்து முதியவர்கள் பாதிக்கப்பட மாட்டார்கள் என்றார். உண்மையில் பிரான்சுவா பிய்யோன் உடைய சட்டத்தின் விதிகள் அடுத்த ஆண்டு மறு பரிசீலனைக்கு வரும்; மாதக் கட்டணத்தில் உயர்வு வரக்கூடும், ஓய்வூதியத்தில் குறைப்புக்கள் வரலாம்; புதிதாக ஓய்வு பெற்றவர்களுக்கு என்று இல்லாமல், அனைவருக்குமே.

தான் இச்சட்டத்தை அகற்றிவிடுவேன் என்பதை ரோயாால் உறுதியுடன் மறுத்தார்; "மிகவும் உன்னிப்பாக கண்காணிக்கப்படும் என்றால் அகற்றப்படும் என்ற பொருள் அல்ல" என்று அவர் கூறினார். சில குறிப்பாக குழந்தை பேறுமூலம் தகுதிபெறுவனவற்றை மகளிர் இழப்பது போன்ற குறிப்பிட்ட அநீதிகள் பற்றி மட்டும் அவர் அணுகுவார் "பிய்யோனுடைய சட்டங்களை நான் அகற்றிவிட மாட்டேன்; அவற்றை நன்கு ஆராய்வேன்; மிக அநீதியான விதிகள் அகற்றப்படும்" என்று அவர் கூறினார். நீண்ட காலமாக சிறப்பு இலக்காக வலதுகளால் இலக்கு வைக்கப்பட்ட, சக்தி வாய்ந்த மின்சாரத்துறை, ரயில்வேக்கள், மற்ற அரசாங்க ஊழியர்கள் அனுபவித்துவரும் சாதகமான ஓய்வூதியத் திட்டங்கள், "சிறப்பு ஆட்சிகள்" பற்றியும் அவர் கேள்விக்குட்படுத்துவார்.

"அனைத்தும் நன்கு ஆராயப்படும்", சிறப்பு ஆட்சிகள் உட்பட, என்று அவர் கூறினார்.

இரு வேட்பாளர்களும் வறுமையில் வாடும் இளைஞர்களுக்கு எதிரான அடக்கு முறை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட வேண்டியதின் தேவையில் அடிப்படையில் உடன்பாடு காட்டினர்; சார்க்கோசியினால் பாராளுமன்றத்தின் மூலம் கொண்டுவரப்பட்ட மிகப் பரந்த சட்டமன்ற திட்டங்கள், போலீஸ் கொண்டுள்ள கைது, கண்காணிப்பு அதிகாரங்கள் அதிகப்படுத்தப்பட்டது பற்றி ரோயாால் எந்தக் கருத்தையும் தெரிவிக்கவில்லை. இளையவர்களின் கடமைதவறல்களை பொறுத்துக் கொள்ளுதல் சிறிதும் கூடாது என்பதைச் செயல்படுத்தாதற்காக வலதில் இருந்து ரோயாால் சார்க்கோசியை விமர்சித்தார்.

தங்களுடைய பிற்போக்குத்தன கொள்கைகளை சுமத்துவதற்கு தொழிற்சங்கங்கள் உதவும் என நம்பிக்கை கொண்டுள்ளதாக இரு வேட்பாளர்களும் கூறியது முக்கியமானதானகும். இதை இன்னும் வெளிப்படையான முறையில் ரோயாால் கூறினார்: "வளர்ச்சியை மறுபடியும் தொடங்குவதின் இரண்டாம் அச்சு சமூக பேச்சுவார்த்தையின் தன்மை ஆகும்" என்றார் அவர். "வட ஐரோப்பாவில் வளர்ச்சியை மறுபடியும் தொடங்குவதில் வெற்றி அடைந்துள்ள நாடுகள், நல்ல சமூக பேச்சுவார்த்தை முறையை ஏற்படுத்தியுள்ளன; அவை தொழிற்சங்கங்கள் சமூக சமரசம் கொண்டுவர வழிவகுத்துள்ளன." அதாவது, ஊதியங்களில் வெட்டுக்களை சுமத்துவதும் தொழிலாள வர்க்கத்தின் நிலைமைகளில் இன்னும் இடர்பாடுகளை ஏற்படுத்துவதும் ஆகும்.


Copyright 1998-2014
World Socialist Web Site
All rights reserved