World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

An appeal to WSWS readers: Attend the ISSE/SEP Emergency Conference Against War

உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கு ஓர் வேண்டுகோள்: போருக்கு எதிரான சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சியின் அவசர மாநாட்டில் கலந்து கொள்வீர்

20 March 2007

அன்பான வாசகர்களே,

Use this version to print | Send this link by email | Email the author

சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் மற்றும் சோசலிச சமத்துவக் கட்சி இரண்டும் போருக்கு எதிராக ஒரு அவசர மாநாட்டை மார்ச் 31 மற்றும் ஏப்ரல் 1ம் தேதிகளில் கூட்டியுள்ளன. போர் மற்றும் சமத்துவமின்மையை நீண்டகாலமாகப் பேணுவதற்கு இந்த வளங்களை பயன்படுத்துவதற்கு பதிலாக சமூகப் பிரச்சினைகளை தீர்ப்பதற்குப் பயன்படுத்தும் வகையில் சர்வதேச அளவில் அதிகாரத்தை எடுத்துக் கொள்ளும் உலகின் உற்பத்தி சக்திகளை உலக மக்களின் ஜனநாயகக் கட்டுப்பாட்டின் கீழ் வைக்கும் ஓர் அரசியல் இயக்கத்திற்கான அஸ்திவாரங்களை இடுவதே இம்மாநாட்டின் நோக்கமாகும்.

மார்ச் 20, செவ்வாய்க்கிழமை ஈராக்கின்மீது அமெரிக்கப் படையெடுப்பு தொடங்கி நான்கு ஆண்டுகள் முடிதலை குறிக்கிறது. இந்த அனுபவத்தில் இருந்து உறுதியான முடிவுகளை எடுத்தல் மிகவும் அவசியமாகும்.

WSWS ஐ தொடர்ந்து படிப்பவர்கள் எமது பகுப்பாய்வும் எச்சரிக்கைகளும் மீண்டும் மீண்டும் உறுதிபடுத்தப்படுவதை நன்கு அறிவர். செப்டம்பர் 14, 2001ல் 9/11 தாக்குதல்கள் அமெரிக்க ஆளும் உயரடுக்கின் சில பிரிவுகளால் "ஒரு தசாப்தத்திற்கும் மேலாக கருத்தில் உள்ள இராணுவவாத நடவடிக்கையை செயல்படுத்துவதற்கு ஒரு நல்வாய்ப்பு" எனக் காணப்படுகிறது என்று நாம் எழுதினோம். கடந்த ஐந்தரை ஆண்டு காலத்தில், புஷ் நிர்வாகம் இரண்டு போர்களை, ஆப்கானிஸ்தானிற்கும் ஈராக்கிற்கும் எதிராக தொடங்கியதுடன், ஈரானுக்கு எதிராக மூன்றாம் போரையும் திட்டமிட்டு வருகிறது.

ஈராக் போர் தொடங்குவதற்கு முன்பு, படையெடுப்பிற்காக புஷ் நிர்வாகம் கொடுத்த போலிக் காரணங்களை நாம் பொய்கள் என்று கண்டித்தோம். பெப்ருவரி 12, 2003 அன்று படையெடுப்பிற்கு முன்னர் போர் எதிர்ப்பிற்கான ஆர்ப்பாட்டத்திற்காக WSWS ஆசிரியர் குழு அறிக்கையில் நாம் எழுதினோம்:

"ஈராக்கிற்கு எதிராக அண்மையில் நிகழவிருக்கும் போரைப் போல், முழு உலகின் கண்களின் முன்னே வெளிப்படையாக ஒரு போர்க்குற்றம் வைக்கப்படல் அபூர்வமானதாகும். இந்த ஏழ்மை பீடித்த நாட்டை ஆக்கிரமித்து அமெரிக்க இராணுவ ஆட்சியின் கீழ் கொண்டுவரவும், மற்றும் அதன் எண்ணெய் வயல்களை கைப்பற்றுவதற்கான அதன் உறுதியை அமெரிக்க அரசாங்கமானது பலமாதங்களாகவே எடுத்துக்காட்டி வந்திருக்கிறது. திட்டமிட்டபடி கறாராக இராணுவ தயாரிப்புக்கள் முன்னெடுக்கப்பட்டிருக்கின்றன. சதாம் ஹூசைனின் பேரழிவுகரமான ஆயுதங்கள் என்று கூறப்படுபவற்றிற்கு நம்பத்தகுந்த ஆதாரம் எதுவுமில்லாததுடன், ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் தீர்மானங்கள் மற்றும் விவாதங்கள், ஐ.நா சோதனைகள் அனைத்துமே பொதுக் கருத்தை சூழ்ச்சியுடன் கையாளுவதற்கும் ஏமாற்றுவதற்குமான வெறும் பிரச்சார உத்தியேயாகும்."

"ஈராக்கிற்கு எதிரான போர், மனிதகுலம் அனைத்தையும் அழிவுக்குள்ளாக்கும் அச்சுறுத்தலை கொண்டிருக்கின்றது. அதன் ஈவிரக்கமற்ற நடவடிக்கை போக்குடன், அமெரிக்க ஏகாதிபத்தியம் பல்வேறு தேசிய இனங்கள் மற்றும் மதங்களுக்கு இடையில் பதட்டங்களை மேலும் கூட்டிக் கொண்டிருக்கிறது. ஈராக்கை வென்று கைப்பற்றல் வாஷிங்டனின் வேட்கையை தணிக்காது. அது மேலும் அதனை அவா கொள்ளச்செய்யும்."

மார்ச் 21ல் வெளியிட்ட எங்கள் அறிக்கையில், "படையெடுப்பு கொடூரமானது, சமமானவர்களுக்கு இடையே நடப்பது அல்ல, இது பல ஆயிரங்கள், ஏன் பல நூறாயிரக்கணக்கான அப்பாவிகளது உயிர்களைக் குடித்துவிடும் தன்மையுடையது" என்று எழுதினோம். மிகவும் துன்பியலாகவும், மிருகத்தனமான முறையிலும் இந்த மதிப்பீடு சரியென நிரூபணம் ஆகிவிட்டது. ஈராக்கிய இறப்புக்களை பற்றிய மிக அறிவார்ந்த ஆய்வுகளின்படி, போரின் விளைவினால் 655,000 பேர் கொல்லப்பட்டனர், இன்னும் பல பேர் கடுமையாக காயமுற்றனர். ஈராக்கிய சமூகமே முழுவதுமாக அழிக்கப்பட்டுள்ளது. இதைத்தவிர 3,400 அமெரிக்க மற்றும் கூட்டணி துருப்புக்கள் இறந்துள்ளனர்.

ஈராக்கின் மீதான படையெடுப்பு, அமெரிக்கா உட்பட, உலகம் முழுவதும் பரந்த அளவிலான கடும் வெறுப்பை ஏற்படுத்தியது. கடந்த நான்கு ஆண்டுகளில் அமெரிக்க இராணுவவாதத்திற்கு எதிர்ப்பு இன்னும் பெருகிவிட்டது. நவம்பர் 2006 தேர்தல்களில் அமெரிக்க மக்கள் போருக்கு முடிவு வேண்டும் என்ற தங்கள் விருப்பத்தை மிகத் தெளிவாகக் கூறினர். சர்வதேச அளவில் நூற்றுக்கணக்கான மில்லியன் மக்களுடைய நலன்கள் மற்றும் கருத்துக்களுக்கு வெளிப்பாடு கொடுக்கும் ஓர் அரசியல் முன்னோக்கு இல்லாததுதான் இழப்பாகும்.

தேர்தல்கள் பற்றி நவம்பர் 14, 2006 ல், "ஈராக்கிய போரை மக்கள் தேர்தலில் நிராகரித்துள்ள நிலையில்" அமெரிக்க ஸ்தாபன அமைப்பில் உள்ள அரசியல் உறுப்பினர்கள், "ஜனநாயகக் கட்சியினர் மற்றும் குடியரசுக் கட்சியினர் ஒரே நேரடித் தோல்வியை தவிர்த்து எண்ணெய் வளமுடைய நாட்டில் அமெரிக்க மேலாதிக்கத்தை தக்க வைத்துக்கொள்ளும் ஒரு புதிய திட்டத்தை செயல்படுத்த முயலுகின்றனர்" என்று நாம் எழுதினோம்.

கடந்த நான்கு மாதங்களில், ஜனநாயகக் கட்சியினர் முறையாக போருக்கு எதிரான எந்த உண்மையான எதிர்ப்பையும் கவிழ்த்துவிடத்தான் செயலாற்றிவருகின்றனர். ஜனநாயகக் கட்சியினருடைய பணியே அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நலன்களை காப்பதும், அதே நேரத்தில் இருகட்சி முறைக்கு வெளியே எதிர்ப்புக்கள் தோன்றுவதை தடுத்து நிறுத்தி தங்களுடைய பொதுத் தோற்றத்தை நிலைநிறுத்துவதும் ஆகும். அமெரிக்க தொழிலாள வர்க்கம் இத்தகைய தந்திரங்களை ஐயத்திற்கு இடமின்றி நிராகரிக்க வேண்டும்.

நியூ யோர்க் டைம்ஸிற்கு கடந்த வாரம் கொடுத்த பேட்டியொன்றில், 2008 ஜனாதிபதி தேர்தலில் ஜனநாயக வேட்பாளர்களில் முன்னணியில் இருப்பவர்களில் ஒருவரான ஹில்லாரி கிளின்டன், ஜனநாயகக் கட்சி கீழ் மன்றத்திலும் செனட்டிலும் கொண்டுவரும் தீர்மானங்கள் எதுவும் அப்பகுதியில் அமெரிக்க இராணுவத் தலையீட்டை நிறுத்தும் வகையில் இருக்காது என்று தெளிவாகக் கூறினார். "எண்ணெய்ப் பகுதியின் சரியான மையத்தானத்தில்" ஈராக் உள்ளது என்று குறிப்பிட்ட கிளின்டன், "ஈராக்கின் தேசிய பாதுகாப்பு நலன்களில் எஞ்சியிருக்கும் நலன்களுக்கு" அமெரிக்கா அந்நாட்டில் காலவரையறையற்ற வகையில் இருப்பது தேவை என்பதை உணர்த்துகின்றன என்றார்.

நிர்வாகத்தின் கொள்கை பற்றி எவ்வித குறைகூறல்களை ஜனநாயகக் கட்சியினர் கொண்டாலும், மத்திய கிழக்கிலும் மத்திய ஆசியாவிலும் அமெரிக்க முதலாளித்துவத்தின் நலன்களை காக்கும் வகையில் கட்டுப்பாடு கொள்ளுவது என்னும் புஷ் நிர்வாகத்தின் நோக்கத்தில் ஜனநாயகக் கட்சியினர் அடிப்படையில் பங்கு கொள்ளுகின்றனர். காங்கிரஸ் காட்ட முற்படும் தோற்றத்தின் இறுதி நிலைப்பாடு ஜனநாயகக் கட்சியுடன் ஆதரவுடன் ஒரு துணைச் செலவினங்கள் ஒப்புதல் சட்டத்தை இயற்றி ஈராக் ஆக்கிரமிப்பிற்கு முழு நிதியம் கொடுத்து அதே நேரத்தில் புஷ்ஷிற்கு தடையற்ற வகையில் போர்ப் பெருக்கம் நடக்க உதவுவதும் ஆகும்.

ஈராக்கில் ஒரு புதிய எண்ணெய்ச் சட்டம் கொண்டுவரப்பட வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி முயல்கிறது; ஈராக்கில் "முன்னேற்றம்" என்பதை நிர்ணியிக்கும் "அடையாளங்களில்" ஒன்றாக இது இருக்க வேண்டும் என்று இக்கட்சி கூறுகிறது. நியூயோர்க் டைம்ஸ் ஏட்டில் செவ்வாயன்று தலையங்கத்திற்கு எதிர்ப்பக்கம் வந்த கட்டுரை ஒன்றில் ("Whose Oil Is It, Anyway? by Antonia Juhasz of Oil Change International) இச்சட்டம் "ஈராக்கிய அரசாங்கத்தின் பிடியில் இருந்து ஈராக்கின் பெரும் எண்ணெய் வளம் எடுத்துக் கொள்ளப்பட்டு சர்வதேச எண்ணெய் நிறுவனங்கள் ஒரு தலைமுறைக்கு பயன்படுத்தும் வகையில் ஏற்பாடு இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது. உண்மையில் படையெடுப்பின் முக்கிய நோக்கமே இதுதான்.

WSWS பல ஆண்டுகளாக வளர்த்துள்ள பகுப்பாய்வுக்கு ஆதாரமாய், போர் என்பது அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் நலன்களுக்காக விளைந்தது என்ற புரிதல் இருந்துவருகிறது. இப்பின்னணியில் அமெரிக்காவில் இருக்கும் ஜனநாயகக் கட்சியின் பங்கு பற்றி விளக்க நாங்கள் முற்பட்டோம்; இதேபோல் சர்வதேச அளவில் இருக்கும் ஒத்த அமைப்புக்கள் பற்றியும் விளக்கியுள்ளோம். போருக்கு எதிரான ஓர் இயக்கத்தின் அடிப்படையை தெளிவாக்கும் வகையில், சோசலிச வேலைத்திட்டம் ஒன்றை தளமாகக் கொண்டு தொழிலாள வர்க்கம் ஓர் சுயாதீனமான அரசியல் போராட்டத்திற்கு தயாராக வேண்டும் என்றும் கூறியுள்ளோம்.

போருக்கு எதிரான இயக்கம் ஒன்று, அமெரிக்காவில் உள்ள ஜனநாயகக் கட்சி உட்பட, இருக்கும் சர்வதேச அரசியல் நிறுவனங்களுக்கு எதிராக இயக்கப்பட வேண்டும் என்பதோடு மட்டுமல்லாமல், எதிர்ப்பு உணர்வை ஏதேனும் ஒருவிதத்தில் பாதுகாப்பான வகையில் இயக்கி விடுகின்ற அமெரிக்காவில் உள்ள போர் எதிர்ப்பு ஒழுங்கமைப்பாளர்கள் போன்ற அத்தகைய அனைத்து போக்குகளுக்கும் எதிராகவும் இயக்கப்பட வேண்டும்.

ஒரு சர்வதேச சோசலிச இயக்கத்தை கட்டமைக்கும் பணியை எதிர்கொள்கையில், அரசியல் ஸ்தாபன அமைப்பின் திவால் தன்மையை பற்றி முடிவுரைகளை எடுத்த மற்றும் ஒரு சோசலிச மாற்றீட்டின் தேவையை பார்த்த, தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் மிகத் தொலைநோக்குடைய அடுக்குகள், ஒரு தேர்வை எதிர்கொள்ளுகின்றனர்: ஒன்றில் அரசியல் பிற்போக்கின் மேலாதிக்கத்திற்கு ஒருவர் உட்பட்டு, அதன் உட்குறிப்புக்களை ஏற்கலாம் அல்லது ஒரு புதிய முன்னோக்கிற்கான தீவிர போராட்டத்தை எடுக்கலாம்.

WSWS இன் கிரமமான வாசகர்கள் என்னும் முறையில், நீங்கள் சோசலிச சமத்துவக் கட்சி மற்றும் சமூக சமத்துவத்திற்கான சர்வதேச மாணவர்கள் அமைப்பை உங்கள் நகரத்திலும் கிராமத்திலும் கட்டமைப்பதற்கு உங்களை அர்ப்பணித்துக் கொள்ளுமாறு வேண்டி கேட்டுக்கொள்கிறோம். போருக்கு எதிரான எங்கள் மாநாட்டிற்கு வருகை தாருங்கள், 2007ம் ஆண்டை அரசியல் புத்துயிர்ப்பு பெறும் ஆண்டாக மாற்றுவதற்கு உதவி புரியுங்கள்.

எமது மாநாட்டை பற்றி மேலும் தெரிந்து கொள்வதற்கும் பதிவுசெய்து கொள்ளவதற்கும் www.socialequqlity.com/conference பக்கத்தை பாருங்கள். அங்கு கூட்டங்கள் பற்றிய தகவல்களை காணலாம்; நாட்டின் ஏனைய பகுதிகளில் நாங்கள் நடத்தவுள்ள கூட்டங்கள் பற்றிய தகவல்களும் உள்ளன; அறிக்கைகள், பிரசுரங்களை பதிவிறக்கம் செய்து உங்கள் பகுதியில் வினியோகிக்கலாம்; ISSE, SEP பற்றி கூடுதலாக தெரிந்து கொள்ளலாம்.

உங்களுக்கு ஏதேனும் வினாக்கள் இருந்தால் அல்லது எப்படி ஈடுபாடு கொள்ளுவது என்பது பற்றி தெரிந்துகொள்ள விரும்பினால் இந்த படிவத்தினூடாக http://www2.wsws.org/phpform/use/comments/form1.html. எங்களுடன் தொடர்பு கொள்ளுவதற்கு சற்றும் தயங்க வேண்டாம்.

உண்மையுடன்,

ISSE, SEP சார்பில்,

Joe Kay.