World Socialist Web Site www.wsws.org |
:
செய்திகள்
ஆய்வுகள்
:
ஆசியா
:
இந்தியா
West Bengal Stalinists' pro-business policies leading to "civil war" Prominent left-wing intellectuals warn "உள்நாட்டுப் போருக்கு" வழிவகுக்கும் மேற்கு வங்க ஸ்ராலினிஸ்ட்டுக்களின் வணிக-சார்பு கொள்கைகள் பிரபல இடதுசாரி புத்திஜீவிகளின் எச்சரிக்கை By Ajay Prakash முக்கியமான இடதுசாரி புத்திஜீவிகள் குழு ஒன்று, அவர்களுள் பலர் ஸ்ராலினிச இந்திய மார்க்ஸிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் (CPM) ஆதரவாளர்கள் என்று நெடுநாளாக பகிரங்கமாக அடையாளம் காணப்பட்டவர்கள், முதலீட்டாளர்களுக்கு ஆதரவான சிறப்பு பொருளாதார மண்டலங்களை (Special Economic Zones SEZs) தோற்றுவிப்பதற்காக ஏழை விவசாயிகளின் நிலங்களை அபகரிக்கும் மேற்கு வங்க இடது முன்னணியின் கொள்கையை வலுவாக கண்டித்து ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. நந்திகிராம் மற்றும் சிங்கூருக்கு உண்மையை கண்டறியும் பணி நிமித்தமாக சென்றிருந்த இந்த புத்திஜீவிகள், மாபெரும் சலீம் குழு தொழில் வளாகம் மற்றும் ஒரு டாடா (Tata) கார் தொழிற்சாலைக்கான இடங்கள் இரண்டையும் பார்வையிட்ட பின்னர், அதன் "தொழில்மயமாக்கல்" கொள்கைக்கு எதிரான மக்கள் எதிர்ப்பு, வலதுசாரிகள் மற்றும் நக்சலைட்டுக்களால் (மாவோயிஸ்டுகள்) ஆன தூண்டுதல் என்ற CPM இன் கூற்றுக்களை அறிக்கை மறுத்துள்ளது. "இது ஓர் உண்மையான மற்றும் மக்களுடைய தன்னெழுச்சியான இயக்கம்; ஏனெனில் அவர்கள் கலந்தாலோசிக்கப்படாததால் கோபம் அடைந்துள்ளனர்; சந்தை விலையை விட கொடுக்கப்படும் இழப்பீட்டுத் தொகை மிக, மிகக் குறைவு ஆகும்" என்று தற்கால இந்தியாவின் சர்வதேச புகழ் பெற்ற வரலாற்றாளரான சுமித் சர்கார் சிங்கூர், நந்திகிராம் ஆகியவற்றிற்கு சென்று திரும்பிய பின் செய்தியாளர்களிடம் கூறினார். ஜனவரி மாதத் தொடக்கத்தில் நந்திகிராமத்தை அதிர்விற்கு உட்படுத்திய மக்கள் எழுச்சி "மாநிலம் முழுவதும் மனித உரிமைகள், ஜனநாய வழிவகைகள், வாழ்வதற்கான வகைகள் பற்றிச் சிறிதும் அக்கறை இல்லாத தற்போதைய (தொழில்மயமாக்கல்) கொள்கை தொடரப்பட்டால் மாநிலம் முழுவதும் கிளர்ச்சிக்கு வகை செய்யும்" என்று ஒரு கூட்டறிக்கையில் புத்திஜீவிகள் எச்சரித்துள்ளனர். சர்க்கார், எழுத்தாளரும் அரசியல் செயற்பாட்டாளருமான அருந்ததி ராய், பண்டைய இந்திய வரலாற்று வல்லுனரான ரோமிலா தாபர் மற்றும் பலரும் ஜனவரி 7ம் தேதி CPM செயல்பாட்டாளர்கள் நந்திகிராமத்தில் விவசாயிகள் எழுச்சியை அடக்க கடுமையான வன்முறையைப் பயன்படுத்தியதற்கு எதிராகப் பேசும் கட்டாயத்தில் உள்ளனர்; இந்தக் கிராமம் மாநிலத்தின் தலைநகரமான கொல்கத்தாவில் இருந்து வடக்கே 60 கிலோமீட்டர் தொலைவில் உள்ளது. தங்களின் நிலங்களை கையகப்படுத்தும் வழிவகையை அரசாங்கம் தொடங்கிவிட்டது என்பதை அறிந்த பின்னர், நந்திகிராம் மக்கள் பல உள்ளூர் CPM அதிகாரிகளையும் தொண்டர்களையும் அவர்களுடைய வீடுகளில் இருந்து துரத்தியடித்தனர். இதற்குப் பழிவாங்க முற்படுகையில் 200 CPM ஆதரவாளர்கள் ஜனவரி 6-7 நள்ளிரவில் கிராமத்தில் புகுந்தனர்; மாநில அரசாங்கத்தின் அதிகாரத்திற்குட்பட்ட போலீசார் அவ்விடத்தை விட்டு அகன்றனர். இதன்பின் நடந்த அமளியில், குறைந்தது ஆறு கிராமவாசிகளாவது கொல்லப்பட்டனர். நந்திகிராம் விவசாயிகளுக்கு எதிராக CPM குண்டர்கள் மூலம் வன்முறையை பயன்படுத்தியதற்கு முன்னதாக, பிரிட்டிஷ் காலனித்துவ அரசாங்க சட்டம் ஒன்றின் அடிப்படையில் மேற்கு வங்காளம் சிங்கூரில் அனைத்துக் கூட்டங்கள், எதிர்ப்புக்கள் ஆகியவற்றை தடை செய்ததுடன், வெளியிடங்களில் இருந்து மக்கள் சிங்கூருக்கு பயணிப்பதையும் தடைசெய்து உத்தரவு பிறப்பித்தது. நந்திக்கிராமில் நடந்த பூசல் CPM தலைமையிலான இடது முன்னணி மேற்கு வங்க அரசாங்கத்தை நெருக்கடியில் தள்ளியது. நிலத்தை கையகப்படுத்தும் அரசாங்க ஆணை ஏதும் பிறப்பிக்கப்படவில்லை என்று முதலில் கூறியபின்னர், அரசாங்க அதிகாரிகள் நிலக் கையகப்படுத்தலுக்கு நிலங்களை அடையாளம் காணத் தொடங்கிவிட்டனர், சில "தவறுகள்" நேர்ந்துள்ளன என ஒப்புக் கொள்ளும் நிலைமை மேற்கு வங்க முதல் மந்திரியும் CPM அரசியல் குழு உறுப்பினருமான புத்ததேப் பட்டாச்சார்ஜிக்கு ஏற்பட்டது. இத்தகைய ஒப்புதல் கூட, நில பறிப்பு திட்டத்தை விவசாயிகள் எதிர்ப்பது காங்கிரஸ் கட்சியில் இருந்து பிரிந்து வந்த திருணமூல் காங்கிரசை சேர்ந்த போராடுபவர்கள், விவசாயிகளை மாற்றாக முன்வைத்து எதிர்க்கிறார்கள்தான் என்ற பிரச்சாரத்தில் ஸ்ராலினிச வாதிகள் ஈடுபடுவதை தடுக்க முடியவில்லை. திருணமூல் காங்கிரஸ் ஹிந்து தலைமைவாத பாரதிய ஜனதா கட்சி (BJP) மற்றும் பல நக்சலைட் குழுக்களுடன் நட்பு கொண்டுள்ள கட்சியாகும். உண்மையை கண்டறியவேண்டும் என்ற விருப்பத்தில் சுமித் சர்க்கார், தலைமை நீதிமன்ற வழக்கறிஞர் கோலின் கோன்ஸ்லாவ்ஸ், செய்தியாளர் சுமித் சக்கிரவர்த்தி, ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக பேராசிரியர் டானிகா சார்க்கார், டெல்லி பல்கலைக்கழக கிருஷ்ண மஜும்தான் ஆகியோர் நந்திகிராமிற்கும் சிங்கூருக்குனம் "உண்மை கண்டறியும்" பணியை தொடக்கினர். அவர்களுடைய இடைக்கால அறிக்கை CPM ன் கூற்றுக்கள் பொய் என்பதை காட்டுகிறது; மேலும் பெருவணிகத்திற்கு மிகப் பெரிய நிலங்களை பெயரளவு விலைக்கு கொடுக்கும் மேற்கு வங்க அரசாங்கத்தின் உந்துதல், முறையான ஆலோசனை, இழப்பீடு இல்லாமல் செய்தாவது, "கிராமப்புற உள்நாட்டுப் போரை" தூண்டிவிடக்கூடிய அச்சுறுத்தலை கொண்டுள்ளது என்றும் எச்சரித்துள்ளது. கிராமவாசிகளுக்கு இழைக்கப்பட்ட தேவையற்ற மிருகத்தனமான அநீதி பற்றி சுமித் சர்க்கார் விளக்கியதாவது: "ஆண்கள், ஏராளமான பெண்கள் என்று நாங்கள் பலரையும் கண்டோம்; இவர்கள் தாக்கப்பட்டவர்கள், அவர்களுடைய காயங்கள் இன்னமும் ஆறவில்லை; இதில் 80 வயதுடைய மூதாட்டி ஒருவரும் இருந்தார். போலீசுடன் சேர்ந்து, போலிசாரையும் விட அதிக எண்ணிக்கையில் கட்சிக் காரியாளர்கள் இருந்ததாக கிராமவாசிகள் பலமுறையும் கூறியுள்ளனர்; அடித்து உதைப்பதில் பிரதான பங்காகிவிட்ட இழிபடுத்தும் வார்த்தையாகி விட்ட, "காரியாளர்கள்" அதிக அளவில் இருந்தனர்." சர்க்கார் தொடர்ந்தார்: "சிறப்புப் பொருளாதார மண்டலத்தில் (SEZs) செயலாற்ற விரும்பும் பெருவணிக நிறுவனங்களான டாடாக்கள், மற்ற சர்வதேச நிறுவனங்களுக்கு பெரும் சலுகைகளை கொடுக்கும் வகையில் குறிப்பிட்ட முறை தொழில் வளர்ச்சியை பின்பற்ற மேற்கு வங்க அரசாங்கம் உறுதி கொண்டுள்ளது போல் தோன்றுகிறது." மேற்கு வங்கத்தில் முதலீடு செய்வதற்கு மாநில அரசாங்கம் இந்திய, மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களுக்கு அளிக்கும் பெரும் சலுகைகளால் விவசாயிகளும் பயனடைவர் என்னும் மாநில அரசாங்கத்தின் கூற்றுக்களில் தக்க காரணத்தோடு விவசாயிகள் நம்பிக்கை வைக்கத்தயாராக இல்லை என்று டாக்டர் டானிகா சர்க்கார் குறிப்பிட்டுள்ளார். "கல்வியறிவற்ற அவர்களை போன்றவர்களுக்கு தொழிற்கூடங்கள் வேலை அளிக்கும் என்பது பற்றி மக்கள் முற்றிலும் அவநம்பிக்கைதான் கொண்டுள்ளனர். மேலும் ஹால்டியா, ஜேலிங்கம் ஆகிய இடங்களில் [துறைமுக சரக்கு போக்குவரத்து வளாகங்கள்] வந்த ஏனைய சில திட்டங்களிலும் இடம்பெயர்ந்த மக்களுக்கு ஏதும் செய்யப்படவில்லை." CPM, மற்றும் இடது முன்னணியுடன் நீண்டகாலமாக பகிரங்கமாக அடையாளம் காணப்பட்டுள்ள புத்தி ஜீவிகளின் கடுமையான குறைகூறல்களினால் அதிர்ச்சி அடைந்த ஸ்ராலினிசவாதிகள் பொய்கள், திரித்தல்கள் ஆகியவற்றுடன் அவற்றை எதிர்கொண்டுள்ளனர்.சிறப்புப் பொருளாதார மண்டலங்களுக்காக பெரும் நிலப்பரப்புக்களை கையகப்படுத்தும் செயலுக்கு வந்துள்ள எதிர்ப்பு நாடெங்கிலும் பெருகியுள்ளது என்பதை CPM நன்கு அறியும். அதே நேரத்தில் அரசாங்கம் மாநிலத்தை "வணிகர்களுக்கு உகந்ததாக" செய்யும் என்று முதலீட்டாளர்களை நம்பச் செய்யும் முயற்சிகள், நிலப் பறிப்புக்களை இது செய்யக் கூடிய திறனில்தான் அடங்கியுள்ளது. நில கையகப்படுத்ததல் வழிமுறைக்கு பொறுப்பாக உள்ள, CPM இன் மத்தியக் குழு உறுப்பினரான பேனாய் கோனர், அறிவித்ததாவது: "வரலாற்றாளர்கள் பின்னோக்கிச் செல்ல முடிவு எடுத்தால், அதைப் பற்றி நான் ஏதும் கூற விரும்பவில்லை. சோசலிச அல்லது முதலாளித்துவ முறையில் ஆலை என்பதற்கு நிலம் தேவை." மேற்கு வங்க வணிக, தொழில்துறை மந்திரி நிருபம் சென்னும் இதேவிதத்தில் கூறியதாவது: "வரலாற்றாளர்களின் பார்வைக்கு உடன்பட்டால், இந்தியாவில் எந்த இடத்திலும் நிலத்தை எவரும் கையகப்படுத்த முடியாது." பிற CPM தலைவர்களும் தங்களை குறைகூறுபவர்கள் போலிப் பிரச்சாரம், தவறான தகவல்கள் இவற்றால் "பாதிக்கப்பட்டவர்கள்" என்று கூறினர்; இதையொட்டி அருந்ததி ரோய் அறிவித்தார்; "நான் ஒன்றும் அவ்வளவு முட்டாள் என்று நினைக்கவில்லை. நான் ஒன்றும் கைப்பாவை அல்ல. சுமித் சர்க்கார் போன்றவர்கள் எவ்வித பிரச்சாரத்தாலும் பாதிக்கப்பட்டவர்கள் அல்ல என்றுதான் நான் கூறுவேன்." தற்போதைய விவசாயிகள் எதிர்ப்பு மற்றும் புத்திஜீவிகளின் குறைகூறல், தங்கள் கட்சியின் சொந்த அணிகளுக்குள்ளேயே எதிரொலிக்குமோ என்ற அச்சத்தில், CPM தலைமை மேற்கு வங்கத்தின் "தொழில்மயமாக்கல் கொள்கை" பற்றிக் குறைகூறும் கட்சி உறுப்பினர்கள் தீவிர விளைவுகளை சந்திக்க வேண்டும் என்று தெரிவித்துவிட்டது. CPM தலைமையிலான இடது முன்னணி மேற்கு வங்க மாநில அரசாங்கத்தை கடந்த 30 ஆண்டுகளாக கைப்பற்ற முடிந்தது என்றால், அதிகாரத்திற்கு வந்த பின்னர் விரிவான நிலச்சீர்திருத்தத்திற்கான ஆதரவுத் தளத்தை அது விவசாயிகளிடம் வலுவாக அது ஒருங்கிணைக்க முடிந்ததால்தான். பதவியில் இருந்த ஆரம்ப ஆண்டுகளில் இடது முன்னணி ஆட்சி பல சமூக ஜனநாயக வகையிலான சலுகைகளையும் ஒழுங்கமைக்கப்பட்டிருந்த தொழிலாள வர்க்கத்திற்கு கொடுக்க முடிந்தது; அதையொட்டி வேலைப் பாதுகாப்பு, மற்ற நலன்கள் ஓரளவிற்கு இருந்தன.ஆனால் இந்திய முதலாளித்துவ வர்க்கம் அரசு தலைமையிலான வளர்ச்சி மூலோபாயத்தை கைவிட்டு, இந்தியாவை ஒரு குறைவூதிய தொழிலாளர் தொகுப்பு உடைய உற்பத்தி நாடாக முதலாளித்துவ சந்தை முறைக்கு மாற்றும் திருப்பம் ஏற்பட்டதுடன் நெருங்கிப் பிணைந்த நிலையில், மேற்கு வங்க அரசாங்கம் கடந்த 15 ஆண்டுகளில் வலதுபுறம்தான் சென்றுள்ளது. தொழிற்சங்கங்கள் கட்டுப்பாட்டை வலியுறுத்தி உற்பத்தித் திறனை அதிகரிக்க வேண்டும் என்றும் சிறப்பு பொருளாதார மண்டலங்களை நிறுவுவதற்காக ஏழை விவசாயிகளிடமிருந்து நிலங்களை பறிக்க வேண்டும் என்றும் கோருகிறது. இச் சிறப்புப் பகுதிகளில் முதலாளித்துவம் அனைத்துவித சலுகைகள், உதவித் தொகைகள் ஆகியவற்றை அனுபவிப்பதுடன், தொழிலாளர்களின் மரபார்ந்த தரங்கள், உரிமைகள் பொருந்தாது என்றும் நிகழலாம். ஏற்கனவே இடது முன்னணி அரசாங்கம் தகவல்-தொழில்நுட்பம் மற்றும் அது தொடர்புடைய தொழில்களை பொதுப் பணி என அறிவித்துள்ளது; இதையொட்டி தொழிலாளர்கள் உரிமைகள், வேலைநிறுத்த உரிமை உட்பட, பலவும் பெரிதும் தடைக்கு உட்பட்டுவிட்டன. பெப்ருவரி 11ம் தேதி, மேற்கு வங்க முதல் மந்திரியும் CPM அரசியற்குழு உறுப்பினருமான புத்ததேப் பட்டாசார்ஜி, நந்திகிராமிற்கு அருகில் CPM ஏற்பாடு செய்திருந்த பேரணியில் கூறியதாவது: "மாநில அரசாங்கம் தொடக்கியுள்ள தொழில்முறை வழிவகைகள் பின்னோக்கிச் செல்லாது, விவசாயத்தில் இருந்து தொழில்துறைக்கு மாற்றம் என்பது தவிர்க்க முடியாத போக்கு என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும்." சிங்கூருக்கு சென்றிருக்கையில் அவர் டாடா மோட்டார்ஸ் எதிர்ப்பு பிரச்சாரகர் ஒருவரிடம் கூறினார்: "இங்கு கார் தொழிற்சாலை வருவதை உங்களால் தடுத்து நிறுத்த முடியாது. ஆலை உறுதியாக வரும்; எவரும் அதைத் தடுத்து நிறுத்த முடியாது." CPM இன் பொதுச் செயலாளரான பிரகாஷ் காரட், CPM வாரந்திர ஏடான People's Democracy ல் எழுதுகையில், காங்கிரஸ் கட்சித் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி மேற்கொண்டுள்ள புதிய தாராள பொருளாதாதார கொள்கைகளுக்கு எதிர்ப்பாளராக காட்டிக் கொண்டு அதேபோன்ற கொள்கைகளை மேற்கு வங்கத்தில் செயல்படுத்துகையில் "இரட்டைப் பேச்சில்" ஈடுபட்டுள்ளது என்று சர்க்கார் மற்றும் பிற இடது புத்திஜீவிகளால் வைக்கப்படும் குற்றச்சாட்டிற்கு விடையிறுக்க முயன்றுள்ளார்."இந்தியாவின் அரசியலமைப்பு நெறியின் கீழ் ஒரு மாநில அரசாங்கத்தின் பங்கு என்ன என்பதையும், கட்சித் தலைமையில் இருக்கும் மாநில அரசாங்கங்கள் என்ன செய்ய முடியும் என்பது பற்றிய CPI(M) -ன் புரிதலையும் இவ்விமர்சகர்கள் புரிந்து கொள்ளாததும்தான் இவ்விஷயத்தின் இதயத்தானம் ஆகும். "கடந்த ஒன்றரை தசாப்தத்தில் CPI(M) இன் அனைத்து இந்திய ரீதியிலான கொள்கை, புதிய தாராள திசை வழியிலான கொள்கைகளை, பொதுவாக தாராளமயம், தனியார்மயம் மற்றும் பூகோளமயமாக்கல் எனப் பலரும் கூறுவதை எதிர்த்துள்ளதாகத்தான் இருந்து வந்திருக்கிறது. ஆனால் போதுமான அளவு சரியாகப் புரிந்து கொள்ளாதது என்ன என்றால், அத்தகைய கொள்கைகளின் விளைவின் சுமையை மாநில அரசாங்கங்கள் ஏற்கவேண்டியிருக்கின்றன என்பதை ஆகும்." காரட்டின் கருத்தின்படி, இந்திய அரசியலமைப்பு மத்திய அரசாங்கத்தின் கைகளில் முக்கிய பொருளாதார நெம்புகோல்களை கொடுத்துள்ளதால், மேற்கு வங்கத்தின் இடது முன்னணி அரசாங்கம் புதிய தாராள கொள்கைகளை செயல்படுத்தும் கட்டாயத்திற்கும், தொழிலாள வர்க்கத்தினர், உழைப்பாளிகள் ஆகியோரை முதலாளிகளை ஈர்ப்பதற்காக தாக்கும் கட்டாயத்திலும் உள்ளது. "மேற்கு வங்கம் ஒரு தாராளமயமாக்கப்பட்ட முதலாளித்துவ பொருளாதாரத்தின் அடிப்படைக் கூறுபாடுகளை கொள்ளும். வேறுவிதமாக அது செய்யலாம் என்று நினைப்பவர்கள் தங்களைத்தான் ஏமாற்றிக் கொண்டிருக்கிறார்கள்" என்று காரட் பிரகடனம் செய்துள்ளார். CPM, இந்தியாவின் பிற்போக்குத்தனமான, முதலாளித்துவ அரசியலமைப்பை சவால் செய்தல் அல்லது மேற்கு வங்க மாநில அரசாங்கத்தை கட்டுப்படுத்துவதிலிருந்து கிடைக்கும் சலுகைகள் மற்றும் இழந்த சக்தியைப் பெறுதலை ஆபத்தில் வைத்தல் என்பதற்கான எந்த சாத்தியமும் எனவே இயலாததாகும்.உண்மை என்னவென்றால், ஸ்ராலினிஸ்டுகள் 15 ஆண்டுகளாக புதிய தாராள சீர்திருத்தத்தினால் தோற்றுவிக்கப்பட்ட சமூகப் பேரழிவிற்கு மக்களுடைய எதிர்ப்பை அடக்கி வைத்ததில் முக்கிய பங்கைக் கொண்டிருந்தது. முதலாளித்துவ வர்க்கம் 1990 களிலேயே அதன் வர்க்க மூலோபாயத்தில் அடிப்படை மாற்றத்தை எளிதில் ஏற்படுத்த முடிந்தது என்றால், அரசு தலைமையிலான தேசிய வளர்ச்சி என்னும் அழிவில் இருந்து தன்னை விடுவித்துக் கொண்டு, சர்வதேச மூலதனத்துடன் நெருக்கமான உடன்பாட்டை கொள்ளும் வகையில் நடக்க முடிந்தது என்றால், பல தசாப்தங்களாக ஸ்ராலினிஸ்டுகள் தொழிலாள வர்க்கத்தை ஏதேனும் ஒரு முதலாளித்துவ கட்சிக்கு துணையுறுப்பாக செய்து, ஆளும் வர்க்கத்தின் "ஏகாதிபத்திய-எதிர்ப்பு" அல்லது "நிலப்பிரபுத்துவ அணி எதிப்பு" இவற்றுக்கு ஆதரவு கொடுப்பது ஒன்றுதான் "யதார்த்தமான" கொள்கை என்ற அடிப்படையில், அதாவது தேசிய வளர்ச்சிக்கு மிக வலுவாக ஆதரவு கொடுத்தல் என்பதாகும். 1991 ல் இருந்து, CPM மற்றும் அதன் ஸ்ராலினிச சகோதரக் கட்சியான இந்திய கம்யூனிஸ்ட் கட்சியும் BJP யை அரசாங்கம் அமைப்பதில் இருந்து தடுக்க வேண்டும் என்ற பெயரில் தற்பொழுது காங்கிரஸ் தலைமையிலான UPA அரசாங்கம் உள்பட புதிய தாராள சீர்திருத்தங்களை முன்னேற்றுவிக்கும் தேசிய அரசாங்கங்களுக்கு உறுதுணையாக இருந்து வருகின்றன.CPM- தலைமையிலான இடது முன்னணி, மேற்கு வங்கத்தின் புதிய தாராளவாத அரசாங்கத்திற்கு தலைமை வகிக்கிறது, மற்றும் முதலாளித்துவ வளர்ச்சிக்காக விவசாயிகளின் நிலத்தை பறிமுதல் செய்வதற்கு ஜனநாயக எதிர்ப்புச் சட்டங்கள் மற்றும் நேரடி வன்முறையை சிபிஎம் பயன்படுத்துவதை வெளிப்படையாக காரட் ஒப்புக் கொண்டுள்ளமை, இக்கட்சி இந்திய முதலாளித்துவத்திற்கு அரசியல் முண்டுகோலாகவும் போலீஸ்காரனாகவும் இருக்கிறது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. |