World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனிCondolences on the death of Comrade Senthil from the Socialist Equality Party of Germanyதோழர் செந்திலின் மறைவிற்கு ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் அஞ்சலி16 March 2007ரவீந்திரநாதன் செந்தில் ரவியின் மறைவிற்கு ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியால் அனுப்பப்பட்ட அனுதாபச் செய்தியை இங்கு பிரசுரித்துள்ளோம். லன்டனை தளமாகக் கொண்ட அனைத்துலகக் குழுவின் உறுப்பினரான தோழர் செந்தில், பெப்பிரவரி 28 பிரிட்டனில் ஒரு கார் விபத்தில் அகாலமரணமானார். எமது மிகவும் அன்புக்குரிய தோழர் ரவீந்திரநாதன் செநிதல் ரவிக்கு (செந்தில்) ஜேர்மன் சோசலிச சமத்துவக் கட்சியின் அனைத்து உறுப்பினர்களின் சார்பிலும் எனது ஆழ்ந்த அனுதாபத்தையும் அஞ்சலியையும் செலுத்த என்னை அனுமதியுங்கள். நாம் அனைவரும் செந்திலின் மறைவைக் கேள்விப்பட்டு பெரும் அதிர்ச்சியடைந்தோம். இந்த மனவேதனைநிறைந்த சந்தர்ப்பத்தில் எமது ஆழ்ந்த கவலைகள் அவரது மனைவி பிள்ளைகளை பற்றியதாகும். அவர்கள் ஒரு தனிச்சிறப்புவாய்ந்த தந்தையையும் கனவனையும் இழந்துள்ள அதே வேளை, அனைத்துலகக் குழு அதன் ஐரோப்பிய பகுதி வேலைகளில் முன்னணிப் பாத்திரம் வகித்த ஒரு முக்கியமான உறுப்பினரை இழந்துள்ளது. அவரது இளம் வயதில் செந்திலை வேறுபடுத்திக்காட்டும் சிறப்பியல்பு என்னவெனில், அவரது சிந்தனைகளும் மற்றும் அதிஷ்டமில்லாதவர்களுக்காக தனது நல்வாழ்க்கையை அர்ப்பணிக்க அவரது தயார்நிலையுமேயாகும். இலங்கையின் பெருந்தோட்டப் பிரதேசங்களில் ஆசிரியர்களாக பணியாற்றியவர்கள்கு மகனாகப் பிறந்த செய்தில், தோட்டப்புற பிரதேசங்களில் தொழிலார்கள் மீது தினிக்கப்படும் பயங்கரமான சுரண்டல்களால் முன்நகர்த்தப்பட்டதோடு 15 வயதில் அரசியல் ரீதியில் செயலாற்றுமளவிற்கு உந்தப்பட்டுள்ளார். தமிழ் தேசியவாதம் என்ற வரையறைக்குட்பட்ட வட்டத்திற்குள் பல ஆண்டுகள் சிக்கியிருந்த செந்தில், 1992ல் ஆரம்பத்தில் பாரிசில் அனைத்துலகக் குழுவின் உறுப்பினர்களை சந்தித்ததைத் தொடர்ந்து மிக விரைவாக ஒரு அனைத்துலக முன்னோக்கிற்கு பிரதிபலித்தார். அவர் அனைத்துலக்க குழுவின் முன்நோக்கையும் ஸ்ராலினிசத்திற்கும் மற்றும் அனைத்துவகையான தேசியவாதத்திற்கும் எதிரான ட்ரொட்ஸ்கிச இயக்கத்தின் வரலாற்றையும் துரிதமாக ஜீரணித்துக்கொண்டார். அப்போதிருந்தே அவர் பாரிசில் உள்ள தமிழ் சமுதாயத்தின் மத்தியிலும் மற்றும் பிரான்ஸ் தொழிலாளர் வர்க்கத்தின் நடவடிக்கைகளிலும் கட்சி மேற்கொண்ட ஒவ்வொரு தலையீட்டிலும் முன்னணிவகித்தார். அவர் 2000 ஆண்டில், ஐரோப்பிய, இந்திய மற்றும் இலங்கைத் தொழிலாள வர்க்கத்தை ஒன்றாகப் பிணைப்பதில் தீர்க்கமான பாத்திரத்தை வகிக்கும் தமிழ் வலைத் தளத்தை முன்னெடுப்பதிலும் முன்னணிப் பாத்திரம் வகித்தார். இங்கு ஜேர்மனியில் செந்தில் பங்குபற்றிய பாடசாலைகள் மற்றும் கூட்டங்கள் போன்ற பல சந்தர்ப்பங்கள் எங்கள் நினைவிற்கு வருகின்றன. அவர் அடக்குத்துடன் பேசுகின்ற, மற்றும் கலாச்சாரத்தில் ஆர்வமுள்ள --குறிப்பாக தென்னிந்திய சினிமாவில்-- ஒரு சிறந்த செவிசாய்ப்பவராகவும் இருந்தார். அதே சமயம், அவரது வாழ்க்கை மற்றும் அவரது அரசியல் வேலைகளின் ஒவ்வொரு அங்கத்தையும் அணுகுவதில் அவருக்கு இருந்த அக்கறை மற்றும் உறுதிப்பாட்டை நாம் கண்டுள்ளோம். நாங்கள் அவரை தவறவிட்டுவிட்டோம். 38 வயது மட்டுமே ஆன அவர் வாழ்க்கையின் முக்கியமான காலகட்டத்திலும், மற்றும் தனது குடும்ப வாழ்க்கை, நண்பர்களின் வாழ்க்கை மற்றும் எமது அனைத்துலகக் கட்சியின் வேலைகளிலும் மேலும் செழுமை சேர்க்க தனது ஆரம்ப இளமைக்கால வாழ்க்கையின் படிப்பினைகளையும் அனுபவங்களையும் முன்கொணரக்கூடிய ஒரு பருவத்திலும் இருந்தார். அவரது வாழ்வுக் காலம் குறுகியதாக இருந்தாலும், அவர் எம் எல்லோரையும் காப்பாற்றும் ஒரு கட்சிக்காகவும் நோக்கத்திற்காகவும் போராடினார். அனைத்துலகக் குழுவாலும் புரட்சிகர போராளிகளின் புதிய பரம்பரையினராலும் செந்திலின் பெயர் நினைவுக்கூறப்படுவதோடு போற்றப்படும். என் ஆழ்ந்த அனுதாபங்களுடனும் மற்றும் அவரது மனைவிக்கும் பிள்ளைகளுக்கும் அன்பான வணக்கத்துடனும் முடிக்கிறேன். உல்ரிச் ரிப்பேர்ட், சோசலிச சமத்துவக் கட்சியின் சார்பில். |