World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்Presidential election contest in France: Panic grips the Socialist Party பிரான்சில் ஜனாதிபதித் தேர்தல்: சோசலிஸ்ட் கட்சியை பீதி கவ்வுகிறது By Peter Schwarz in Paris பாரிஸ் 11வது தொகுதியில் உள்ள ஜாபி (Japy) விளையாட்டு அரங்கில் மார்ச் 12, மாலையில் (PS) பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளரான செகோலென் ரோயால் தன்னுடைய வேட்பு மனுக்கு ஆதரவளிக்கும் கலைஞர்கள், விஞ்ஞானிகள், அறிவுஜீவிகள் கூட்டத்தில் உரையாற்றினார். ஒரு சலிப்பூட்டும் குரலில் தயாரித்திருந்த கையேட்டில் இருந்து முன்பே கூறப்பட்ட பலவற்றை ரோயால் படித்தார். அவருடைய பார்வையாளர்கள் ஏற்கும் வகையில் ஒவ்வொரு சொல்லும் கவனமாக தேர்வு செய்யப்பட்டிருந்தது என்ற உணர்வு மேலோங்கி நின்றது. உண்மையான நம்பிக்கைகொண்டிருந்ததோ அல்லது உணர்ந்ததோ பற்றி ஒன்றையும் அவர் கூறவில்லை, ஒரு குறிப்பைக்கூட வழங்கவில்லை. "ஒரு பாணி தான் மனிதன்" அல்லது இந்த விஷயத்தில் மனுஷி என்ற சொற்றொடரை மட்டின்றி நாம் பயன்படுத்தக் கூடாது -- அதிலும் குறிப்பாக அரசியலில். தீவிர புத்தி உடைய அரசியல் வாதிகள் உள்ளனர், ஆனால் அவர்கள் நல்ல பேச்சாளர்கள் அல்ல; அவ்வாறே நல்ல பேச்சாளர்கள் அனைவரும் தீவிர புத்தி உடையவர்களும் அல்லர். ஆனால் ரோயாலை பொறுத்தவரையில், அவருடைய சலிப்பூட்டும் உரையாற்றும் முறைக்கும் அவருடைய அரசியலின் பொருளுரைக்கும் வெளிப்படையான தொடர்பைத்தான் காண்கிறோம். டோனி பிளேயரின் மாதிரியில், தன்னுடைய முக்கிய போட்டியாளரான ஆளும் கோலிசக் கட்சியான UMP யின் வேட்பாளர் நிக்கோலா சார்க்கோசியை காட்டிலும் வலதுபுறம் இருப்பதாக தன்னுடைய நிலைப்பாட்டை காட்டிக் கொள்ளும் வகையில் கடந்த கால சமூக சீர்திருத்தங்கள் கொண்ட கருத்துக்களை அறவே ஒதுக்கி வைத்து அவர் "நவீனவாதி" எனத் தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியிருந்தார். இந்த மூலோபாயம் எதிர்ப்பை எதிர்கொண்ட அளவில், கருத்துக் கணிப்புக்களில் ரோயால் நிலை சரிந்த அளவில், அவர் தன்னுடைய போக்கை மாற்றிக் கொண்டு, இன்னும் கூடுதலான வகையில் இடதிற்கு வலதிற்கும் இடையே தெளிவான எல்லைக் கோட்டை காட்டிய அளவில், மிக சமூகரீதியான நட்பு என்னும் தோற்றத்தை வளர்க்க முற்பட்டார். திங்கட்கிழமை கூட்டத்தில் சார்க்கோசி விவரிக்கும் சமூக மாதிரிக்கு ஓர் மாற்றிடு கொடுக்கும் நிலைப்பாட்டை தான் கொண்டுள்ளதாக அவர் அறிவித்து, பொருளாதார தாராளக் கொள்கை சமூகக் கொள்கையுடன் பொருந்தியிராமல் உள்ள தன்மையை பற்றிப் பேசினார். இறுதியாக சோசலிஸ்ட் கட்சியின் "யானைகளை" அவர் விவாதத்திற்கு கொண்டுவந்தார்: அதாவது முக்கியமான, மூத்த சோசலிஸ்ட் கட்சி அரசியல் வாதிகளை, எவர்களிடம் இருந்து இவர் இதுகாறும் ஒதுங்கியிருந்தாரோ, அவர்களை முன்வைத்துப் பேசினார். இப்படிப்பட்ட நெளிவு, சுளிவுகள் ரோயாலை ஒரு தடையற்ற சந்தர்ப்பவாதி என அம்பலப்படுத்தின; அவர் என்னென்ன அனுகூலமாக தோன்றுகிறதோ மற்றும் பின்னணியில் இருந்து சக்திவாய்ந்த, செல்வக் கொழிப்பு உடைய சக்திகள் என்ன இவர் கூறவேண்டும் என்று கூறுகின்றனரோ, அதைச் செய்யவேண்டும் என்றார். பிரான்சுவா பேய்ரூவின் எழுச்சி வலதுசாரி ஆத்திரமூட்டலாளர், நிக்கோலா சார்க்கோசிக்கு தீவிரமாக எதிர்ப்பு தெரிவிக்கும் பல வாக்காளர்கள் இருக்கும் சூழ்நிலையில், ரோயாலின் சரிவை முழுமையாக பயன்படுத்திக் கொள்ளுவார் என்று எவரும் கணக்கிடாத பிரான்சுவா பேய்ரூ, UDF (Union pour la Democratic Francaise) என்னும் முதலாளித்துவ தாராளக் கொள்கை கட்சியின் தலைவர் மிக விரைவாக கருத்துக் கணிப்புக்களில் முன்னேறிக் கொண்டுவருவதுடன், இரண்டு முன்னணி வேட்பாளர்களான சார்க்கோசி, ரோயால் ஆகியோருக்கு மிகவும் நெருக்கமாக நிற்கிறார். சமீபத்திய கருத்துக் கணிப்புக்களின்படி, பேய்ரூ தேர்தலின் முதல் சுற்றில் 23.5 சதவிகிதம் பெறக் கூடும்; ரோயால் 25.5 சதவிகிதமும் சார்க்கோசி 27 சதவிகிதமும் பெறக்கூடும். கருத்துக் கணிப்பில் பரந்த அளவு பிழை மாறுபாடுகள் இருக்கலாம் என்பதை மனதில் கொண்டால், வாக்குப் பதிவில் இரண்டாம் சுற்றிற்கு பேய்ரூ வருவது சாத்தியம்தான்; அதில் அவருக்கு உண்மையிலேயே வெற்றி வாய்ப்பு இருக்கும்; ரோயாலோ, சார்க்கோசியோ - மூன்றாம் இடத்தில் இருந்த வேட்பாளருக்கு வாக்களித்தவர்களில் பலர் அவருக்கு வாக்களிக்கக்கூடும். 1978ம் ஆண்டு UDF அப்பொழுது பிரெஞ்சு ஜனாதிபதியாக இருந்த Valery Giscard d'Estaing னால் நிறுவப்பட்டு, மரபார்ந்த முறையில் கன்சர்வேட்டிவ் முதலாளித்துவ முகாமுடன் இணைந்ததாகும். 1993ல் இருந்து 1997 வரை பேய்ரூ எடுவார்ட் பலடூர் மற்றும் அலன் ஜுப்பே என்னும் பிரதமர்களின் கீழ் கல்வி அமைச்சராக இருந்தார். நாட்டின் பழமைவாத சக்திகள் அனைத்தையும் ஒரே கட்சியில் ஒன்று திரட்ட ஜாக் சிராக் 2002ல் முற்பட்டபொழுது - இன்றைய UMP- பேய்ரூவும் அவருடைய கட்சியின் ஒரு பிரிவும் வெளியே நின்று UDF ஐ ஒரு சுயாதீனமான அமைப்பாக தக்க வைத்துக் கொண்டன. ஏனைய கட்சிகளின் பூசல்களில் இருந்து ஒதுங்கி உயர்ந்த நிலையில் இருப்பவராகவும், வலதையும் இடதையும் ஒன்றாக கொண்டுவரக்கூடிய திறன் இருப்பதாகவும் இப்பொழுது பேய்ரூ காட்டிக் கொள்ளுகிறார். கடந்த வாரம் செய்தியாளர் கூட்டத்தில் கருத்துக் கணிப்பில் அவருடைய வெற்றியின் பொருள் "ஏதோ ஒன்று வளர்ச்சி பெற்று வருகிறது" என்பதாகும் என்று கூறினார். "பிரெஞ்சு மக்கள் ஒரு தகவல் கொடுக்கிறார்கள்: ஒரு புதிய அத்தியாயத்தை தொடக்க நாங்கள் தயார். உங்களுடைய பூசல்கள் முடிவில்லாப் போர்கள் அலுத்துவிட்டன. மக்கள் ஒன்றுபட்டு வாழ நாங்கள் விரும்புகிறோம்." கட்சிகளுக்கு இடையே நடக்கும் பூசல்களினால் சலிப்புற்ற வாக்களாளர்களிடையே பேய்ரூ நல்லிணக்கத்தை காண்கிறார்; கட்சிகளுடைய சொற்பூசல்கள் உண்மையான அரசியல் வேறுபாடுகளை அறிந்திராத்தன்மைக்கு தலைகீழ் விகிதத்தில் உள்ளன. பொருளுரையை பொறுத்தவரையில், ரோயால் மற்றும் சார்க்கோசியின் திட்டங்களுக்கு இடையே பாகுபடுத்திக் காண்பதற்கு ஏதும் அதிகமாக இல்லை. ரோயாலுக்கும் சார்க்கோசிக்கும் இருக்கும் அதே மட்டத்துத் திறமை பேய்ரூக்கும் உள்ளது என்பதைத்தான் கருத்துக் கணிப்புக்கள் காட்டுகின்றன; ஆனால் விடையிறுத்தவர்களில் மிக அதிக சதவிகிதத்தினர் பேய்ரூவை கணிசமான முறையில் "கூடுதலான நேர்மை" உடையவராக கருதுகின்றனர். பேய்ரூ மிகவும் நேர்மையான வேட்பாளர் என்று 38 சதவிகிதத்தினர் கருத்துக் கொண்டுள்ளனர்; அதே நேரத்தில் அவருடைய இரு எதிர்ப்பாளர்களும் 26 சதவிகிதத்தினரால்தான் நேர்மையாளர் எனக் கருதப்பட்டு பின்தங்கிய நிலையில் உள்ளனர். பேய்ரூவின் தற்போதைய வெற்றிக்கு பிரான்சின் தீவிர இடது கட்சிகள் தங்கள் பங்கை கொடுத்துள்ளன. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு, வாக்காளர் தொகுப்பில் 10 சதவிகிதத்திற்கும் மேலானவர்கள் தீவிர இடதின் வேட்பாளர்களை ஒரு மாற்றீட்டு வேட்பாளராக வாக்களிக்க தயாராக இருந்தனர். ஆனால் இந்த அமைப்புக்கள் அதைப் பயன்படுத்த தவறி, முன்னேறும் பாதை எதையும் காட்டாமல் போயின. ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இரண்டாம் சுற்று வாக்குப் பதிவில் Revolutionary Communist Leasgue (LCR) ஷிராக்கிற்கு ஆதரவு கொடுக்குமாறு அழைப்பு விடுத்தது; ஆனால் LO (Lutte ouvrière) இன் தலைவரான Arlette Laguiller தன்னுடைய கட்சி மிகச் சிறியது, அரசியல் அபிவிருத்திகளை செல்வாக்கிற்குட்படுத்துவதில் முக்கியமல்லாதது என்று அறிவித்துவிட்டார். எப்படிப்பார்த்தாலும், பேய்ரூவின் கருத்துக் கணிப்பு தரமும் மிகவும் உறுதியற்றதாகத்தான் உள்ளது. சார்க்கோசி, ரோயால் போலவே இவரும் ஆளும் ஸ்தாபன அமைப்பின் ஒரு மூத்தவர்; இவரிடமும் புதிதாக அளிப்பதற்கு ஏதும் இல்லை. இக்கணத்தில் இவருடைய கூடுதலான நலன் ஒப்புமையில் அதிகம் அறியப்படாதவர், ரோயாலையும் விட ஈர்ப்புச் சக்தி குறைந்தவர் என்பதேயாகும். இந்த அடிப்படையில் இவர் அரசியல் சமரசத்தின் வேட்பாளர் என்று காட்டிக் கொள்ள முடியும்; மத்தியதர வகுப்பு, கல்வியாளர்கள் அடுக்குகள் ஆகியவற்றில் பல வாக்காளர்களும் அதைத்தான் விழைகின்றனர். சமூகப் போராட்டத்தால் உருக்குலைந்து கொண்டிருக்கும் சமூகத்தில், அத்தகைய எதிர்பார்ப்புகளுக்கு அடிப்படை இல்லாமல் இல்லை; ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சமூக உண்மையுடன் அது வன்முறையாகத்தான் மோதும். சோசலிஸ்ட் கட்சி பீதியினால் கவ்வப்படுதல் ஆயினும்கூட, கருத்துக் கணிப்புக்களில் பேய்ரூவின் வெற்றிகள் சோசலிஸ்ட் கட்சியில் பெரும் பீதியை ஏற்படுத்த போதுமானவையாக உள்ளன. உயர்கல்விக் கூடங்கள், கல்வித்துறையில் இருக்கும் மரபார்ந்த சோசலிச வாக்காளர்கள் UDF வேட்பாளர்பால் ஆதரவை திருப்பியுள்ளனர். இப்பொழுது கட்சித் தலைமை இரண்டாம் சுற்றுக்கு வராமல் போக நேரிடுமோ என்ற அச்சத்தில் -2002ல் நிகழ்ந்ததைப் போல்-- உள்ளது. அப்பொழுது சோசலிசஸ்ட் கட்சியின் வேட்பாளரான லியோனல் ஜோஸ்பன் தேசிய முன்னணியின் Jean Manie Le Pen இடம் தோல்வியுற்றார். திங்கள் மாலைக் கூட்டம் புத்திஜீவிகளிடையே ரோயாலின் செல்வாக்கை மீட்பதைத்தான் பெரும் இலக்காக கொண்டிருந்தது. அவருக்கு கவனமான முறையில் பயிற்சி அளிக்கப்பட்டிருந்தது. வரவேற்கப்பட்ட 1000 விருந்தாளிகளையும் தெரிந்தெடுக்கப்பட்டிருந்த செய்தி ஊடகப் பிரதிநிதிகளுக்கு மட்டும்தான் கூட்டம் என்று இருந்தது. இக்கட்டுரையின் ஆசிரியர் மிகவும் பொறுமையையும் ஊக்கத்தையும் காட்டித்தான் நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்திருந்தவர்களிடம் அரங்கத்தில் நுழைய அனுமதி பெற முடிந்தது. உரையாற்றுபவர்களின் அரங்கத்தில் நாற்காலிகள் ஒரு வட்டத்தில் போடப்பட்டிருந்தன; முன் வரிசையில் முக்கியமான, புகழ் பெற்றவர்களுக்கு வெள்ளை நாற்காலிகள்; சற்று பின்னே குறைவாக அறியப்பட்டவர்களுக்கு பிரெளன் கலர் நாற்காலிகள். கட்சி இளைஞர்கள் பால்கனியில் இருத்தப்பட்டு "Ségolène Présidente." என்று ஆர்ப்பரித்து ஊக்கம் அளிப்பதற்கு உதவும் வகையில் இருந்தனர். ஆனால் எதிர்கொண்ட களிப்பு குறைவாகத்தான் இருந்தது. பிரெஞ்சு திரைப்படத்திலும், தொலைக்காட்சியிலும் புகழ்பெற்ற ஒரு சில முகங்கள்தான் வந்திருந்தன; கடைசியில் ரோயால் நடிகைகள் Jeanne Moreau, Emmanuelle Béart க்கு நடுவில் அமர்ந்தார். சற்று குறைவாக அறியப்பட்ட நடிகர்களும் தொலைக்காட்சி முக்கியஸ்தர்களும் குழுவை முழுமைப்படுத்தினர்; மொத்தம் அவ்வளவுதான். விஞ்ஞான உலகத்தில் இருந்து வருகைதந்தவர்களில் Pierre Broué என்னும் வரலாற்றாளர், ட்ரொட்ஸ்கி வாழ்க்கை நூலை எழுதியவரின் மகனான கணித வல்லுனர் Michel Broué, இருந்தார். சார்க்கோசிக்கு எதிராக ஒரு கால் மணி நேரம் இவர் தாக்கிப் பேசினார்; பின்னர் பேய்ரூவிற்கு எதிராக மற்றொரு 15 நிமிடங்கள் பேசினார். இறுதியாக ஒரு சில மணித்துளிகள் செகோலேன் ரோயாலை புகழ்ந்தார்; ஒருவேளை அவருக்குப் பிடித்த வேட்பாளர் பற்றி கொஞ்சம் உடன்பாடாக அதிகம் பேசுவதற்கு ஏதும் இல்லைப் போலும். ஒரு துரதிருஷ்டவசமான பங்களிப்பில், மனோதத்துவ வல்லுனர் Gerard Miller வேட்பாளரின் பெண்மை நலன்களை புகழ்ந்தார்; மற்ற அரசியல் வாதிகளைப் போல் "ஆண்மை நிறைந்த பெண்ணாக" இவர் இல்லை என்று அவர் கூறினார். தன்னுடைய ஒரு மணி நேர உரையில் கல்வி, பண்பாடு, ஆராய்ச்சி ஆகியற்றை வளர்த்தலை மையத்தானமாக ரோயால் கொண்டார். மிகத் தாராளமான முறையில் பெரும் திட்டங்கள் பற்றி உறுதிமொழி அளித்ததுடன், சிறப்பான வகையில் விவரங்களை கூறும்போது மிகவும் தெளிவற்று இருந்தார். இவர் எந்தப் புள்ளி விவரத்தையும் கூறவில்லை; 1990களில் இவர் மந்திரியாக இருந்த பொழுது, சோசலிஸ்ட் கட்சி அரசாங்கங்கள் கல்வி மீது நடத்திய தாக்குதல் பற்றி ஏதும் குறிப்பிடவில்லை. தன்னுடைய போட்டியாளரான சார்க்கோசியின் தேசியவாத உணர்வு வெடிப்புக்களை ரோயால் விமர்சித்தபோது அவருடைய உணர்வு மாறுபட்டுப் போயிற்று; சார்க்கோசி அண்மையில் குடிவரவு மற்றும் தேசிய அடையாளத்திற்காக ஒரு அமைச்சரகம் அமைக்க வேண்டும் என்ற அழைப்பை விடுத்திருந்தார். ரோயால் அத்திட்டத்தை, குடியேற்றமும் தேசிய அடையாளமும் "பொறுத்துக் கொள்ளமுடியாத கலவை" என்று விளக்கினார். இதைத் தொடர்ந்து இவ்வம்மையார் தன்னுடைய தேசியம், தேசிய அடையாள மாதிரியின் தன்மையை எடுத்துரைத்தார். "என்னைப் பொறுத்தவரையில், உலகந்தழுவிய முறை என்பதனால் தேசிய அடையாளம் அதன் பொருளுரையை இழக்காது, மறைந்தும் போகாது." இதன் பின்னர் உலகிற்கு ஒரு முன்மாதிரியாக பிரான்ஸ் எப்படி உள்ளது என்று விவரித்தார். சார்க்கோசியிடம் இருந்து இவருடைய ஒரே கருத்து வேறுபாடு குடிமக்களின் தேசிய அடையாளம், அவர்கள் தோன்றிய நாட்டை ஒட்டி வரையறை செய்யப்படக்கூடாது, மாறாக "எங்கு அவர்கள் ஒன்றாகச் செல்ல வேண்டும் என விரும்புகிறார்களோ, அதனால் வரையறுக்கப்பட வேண்டும்." "வெள்ளையர்கள், கறுப்பர்கள், மஞ்சள்நிறத்தவர் என்றோ கத்தோலிக்கர்கள், நாத்திகர்கள், யூதர்கள், முஸ்லிம்கள் என்றோ" தேசம் பாகுபாடு காட்டாது என்று அவர் அறிவித்தார். நாம் அனைவரும் பிரெஞ்சு குடிமக்கள், ஒரேவிதமான உரிமைகளையும், கடமைகளையும் கொண்டவர்கள். ஆனால் அடுத்த சொற்றொடரிலேயே அவர் குடியேறுபவர்கள் சம உரிமைகள் வாய்ப்புக்கள் இவற்றை பெறுவதற்கு முன்பு "எமது சட்டங்களை மதிக்க வேண்டும்" என்று வலியுறுத்தினார். முழுக்கூட்டமும் ஒதுங்கி நின்ற தன்மையையும், மிகையதார்த்த தன்மையையும் புலப்படுத்தியது. ஆரம்பத்திலும் கூட்ட இறுதியிலும் அளிக்கப்பட்ட நின்று ஆர்ப்பரித்தல் முற்றிலும் பயிற்சியளிக்கப்பட்டதாகவும், வெற்றுத்தன்மை கொண்டதாகவும் தோன்றியது. சமூக யதார்த்தத்திற்கு --மிக உயர்ந்த வேலையின்மை, வறுமை நிலை, புறநகர்களில் எழுச்சி, எயர்பஸ், மற்றும் பிற நிறுவனங்களிலும் பெரும் வேலைவெட்டுக்கள்-- ஆகியவற்றுக்கு இக்கூட்டத்தில் இடமில்லை. இது சமூக யதார்த்தத்தால் அச்சுறுத்தப்பட்டுள்ளதாக உணர்பவர்கள் ஒன்றுகூடியுள்ள கூட்டம், மற்றும் என்ன நடக்கிறது என்பதை காண விரும்பாமல் கண்களை மூடிக் கொள்ள விழைபவர்களின் கூட்டம் ஆகும். இந்த அடுக்குகள்தாம் இன்னமும் செகோலென் ரோயாலுக்கு ஆதரவு கொடுக்கத் தயாரக இருப்பவர்கள். மக்களின் பரந்த அடுக்குகளிடையே ரோயால் அம்மையார் ஒரு செல்வாக்கிழந்துவிட்ட, உதறித் தள்ளப்பட்டுவிட்ட சக்தியாவர். |