World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

An answer to the attacks launched by Airbus

எயர்பஸ்ஸால் தொடுக்கப்பட்ட தாக்குதல்களுக்கு ஒரு விடையிறுப்பு

Statement by the Editorial Board
8 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

அனைத்து ஐரோப்பிய தொழிலாளர்களையும் அவர்கள் பாட்டனார்கள், முப்பாட்டனார்களின் வாழ்க்கைத்தர மட்டத்திற்கு வாழ்க்கைத்தரத்தை குறைக்கும் நோக்கங்கொண்ட ஒரு பரந்த தாக்குதலின் உச்ச கட்டம்தான் 10,000 வேலைகளை குறைப்பது என்னும் எயர்பஸ் நிறுனத்தின் முடிவு ஆகும். எயர்பஸ்ஸில் நடந்துவரும் தற்போதைய அபிவிருத்திகள் இந்நிறுவனத்தின் தொழிலாளர்கள் மற்றும் ஊழியர்களுடைய அக்கறை பற்றியது மட்டும் அல்ல; 1930 களில் நிலவிய சமூகச் சூழ்நிலைக்கு திரும்ப வேண்டும் என்ற திட்டத்தை ஏற்கத் தயாராக இல்லாத ஐரோப்பாவில் இருக்கும் அனைத்து தொழிலாளர்கள், இளைஞர்கள் ஆகியோரைப் பற்றிய அக்கறை உடையதாகும்.

உலகம் முழுவதும் இருக்கும் தொழிலாளர்களை எதிர்கொண்டுள்ள அடிப்படை பிரச்சினைகளைத்தான்: ஒரு நிதிய உயரடுக்கின் குறுகிய கால நலன்களான உச்சபட்ச இலாப விகிதங்களை இயக்குவதற்கு நீண்டகால பொருளாதார வளர்ச்சியை தாழ்த்துதல்; வாழ்க்கைத் தரங்கள் மற்றும் வேலைகள் மீது நிரந்தரத் தாக்குதல்கள்; இந்த அபிவிருத்திகளை எதிர்ப்பதற்கு வழியில்லாத மற்றும் பெரு வணிகத்திற்கு துணை மேலாளர்களாக செயல்படும் தொழிற்சங்கங்களின் திவால்தன்மை; தொழிலாளர்களை தேசிய வகையில் பிளவுபடுத்தி ஒருவருக்கு எதிராக மற்றவரை திருப்பும் அரசாங்கங்களால் ஆற்றப்படும் தீய பங்கு ஆகியவற்றை எயர்பஸ்ஸில் நடைபெறும் நிகழ்வுகள் உயர்த்திக் காட்டுகின்றன.

வேலைப்பாதுகாப்புக்கள், சமூக வெற்றிகள், தொழில்நுட்ப மற்றும் கலாச்சார முன்னேற்றத்திற்கான வாய்ப்புகளுக்குக்கூட அடிப்படையில் ஒரு புதிய அரசியல் மூலோபாயம் தேவைப்படுகிறது. தொழிற்சங்க எதிர்ப்பு மற்றும் ஆளும் உயரடுக்கினரின்மீது அழுத்தம் கொடுத்தல் ஆகியன போதுமானது அல்ல. உற்பத்திமுறை நிதிய உயரடுக்கின் கட்டுப்பாட்டில் இருந்து அகற்றப்பட்டு ஒட்டுமொத்த சமூகத்தின் தேவையில் வைக்கப்பட வேண்டும். சோசலிச வகையில் சமூகம் மறு ஒழுங்கமைக்கப்படுவதற்காக தொழிலாள வர்க்கம் தன்னுடைய பழைய, தேசிய அமைப்புக்களுடன் இருந்து முறிந்து கொண்டு, ஒரு ஐரோப்பிய மற்றும் உலகளவிலான அடிப்படையில் ஐக்கியப்படவேண்டும்.

இப்படிப்பினைகள்தாம் தற்போதைய எயர்பஸ் நெருக்கடியில் இருந்து வெளிப்பட்டுள்ளவை ஆகும்.

உயர் தொழில்நுட்ப உற்பத்தி மற்றும் முழு அனுப்பாணைகள் பதிவு

எயர்பஸ் முன்னணி தொழில்நுட்ப நிறுவனம் ஆகும். டிசம்பர் 1970ல் நிறுவப்பட்ட இது மிக நவீன விமானங்கள் பலவற்றையும் இப்பொழுது உற்பத்தி செய்து, பெரிய பயணிகள் விமானங்களுக்கான உலகச் சந்தையில் போயிங்குடன் பகிர்ந்துகொள்ளுகிறது. அதன் அனுப்பாணைகள் பதிவானது நிறைந்துவிட்டது. கிட்டத்தட்ட 7,000 விமானங்களுக்கான கோரிக்கைகள் முன்கூட்டியே வந்துள்ளன; இது இந்நிறுவனம் தயாரிக்க கூடியதைவிட அதிகமாகும். ஜேர்மனிய பணிக்குழு தலைவர் Rudiger Lugjen கூறியபடி, "முடிவில்லாத அளவிற்கு எங்களிடம் வேலை குவிந்துள்ளது."

இப்படி இருந்த போதிலும்கூட, நிறுவனம் மற்றும் அதன் துணை ஒப்பந்தக்காரர்கள் இடத்தில் இருக்கும் ஒன்பது வேலைகளில் ஒன்று அழிக்கப்படும் அல்லது வெளியே கொடுக்கப்பட்டுவிடும். இந்த முடிவிற்கு பின்னே தேவைகள் குறைவு என்பது இல்லை, மாறாக இலாபத்தை இன்னும் பெருக்க வேண்டும் என்ற உந்துதல்தான் உள்ளது. 2010ஐ ஒட்டி, நிறுவனம் 6.6 பில்லியன் யூரோக்கள் சேமிக்கவும் அதன்பின்னர் ஆண்டு ஒன்றுக்கு சராசரியாக 2 பில்லியனையும் சேமிக்கவும் திட்டமிட்டுள்ளது.

இது தொழிலாளர் தொகுப்பின் இழப்பில்தான் முழுமையாக அடையப்பட உள்ளது. முழு ஆலைகளையும் விற்பது, உற்பத்தியை வெளியே கொடுப்பது ஆகியவை ஊதியங்களை குறைத்தலை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் நிறுவனத்திற்குள் உற்பத்தித்திறனை பெரும் அளவு அதிகரிப்பதையும் நோக்கமாக கொண்டுள்ளன.

"Power 8" எனப்படும் மறுசீரமைப்பு திட்டம் A350 மாதிரியின் 30 சதவிகித உற்பத்தி ஐரோப்பாவில் இருக்கும் வெளித் தயாரிப்பாளர்களால், அதேபோல் சீனா போன்ற குறைவூதிய நாடுகளினாலும் செய்யப்படுகிறது; இது திட்ட அளவில்தான் இப்பொழுது உள்ளது. அதே நேரத்தில் வாங்குவதில் ஒருமுகப்படுத்துவதன்மூலம் அளிப்பாளர்கள் எண்ணிக்கை 10,000ல் இருந்து 7,000 ஆகக் குறைக்கப்படும். இது விலைகளை குறைப்பதற்கு பிந்தையதற்கு பெரும் அழுத்தத்தைக்கொடுக்கும்; இது தவிர்க்க முடியாமல் இன்னும் வேலை இழப்புக்களை ஏற்படுத்தும்.

நிறுவனத்திற்குள் பொறியியல் துறையில் உற்பத்தித்திறன் அடுத்த நான்கு ஆண்டுகளுள் 15 சதவிகிதம் அதிகரிக்கப்படும்; நிர்வாகச் செலவினங்கள் இதே காலத்தில் 30 சதவிகிதம் குறைக்கப்படும்.

அதிக அனுபவம் கொண்ட, பயிற்சி பெற்ற பணியாளர்களுடன் முழு தொழிற்சாலைகளும் துண்டிக்கப்படுவதும் கூடுதல் உற்பத்தித்திறனுக்கான அதிகரிக்கும் அழுத்தமும், தரத்திலும், நீண்டகாலப் போக்கில் பயணிகள் பாதுகாப்பிலும் தவிர்க்க முடியாத தீய விளைவுகளை ஏற்படுத்தும்.

35 ஆண்டுகளுக்கு முன்பு நிறுவனம் தோற்றுவிக்கப்பட்டபோது, தற்கால பயணியர் விமானங்களை கட்டும் பேரவாக் கொண்ட மற்றும் சிக்கல் வாய்ந்த திட்டத்திற்கு ஐரோப்பா முழுவதில் இருந்தும் தொழில்நுட்ப, நிதிய இருப்புக்கள் தேவைப்படும் என்பது தெளிவாக இருந்தது. பல ஆண்டுகள் தயாரிப்பு, கணிசமான அளவில் அரசாங்கங்கள் பங்கு பெற்றது இவற்றின் விளைவாக எயர்பஸ் ஒரு பிரெஞ்சு-ஜேர்மனிய கூட்டு நிறுவனமாக வெளிப்பட்டது. 1971ம் ஆண்டில் ஸ்பெயினும் எயர்பஸ் திட்டத்தில் சேர்ந்தது; பிரிட்டன் 1979ல் சேர்ந்தது. புதிய விமானங்கள் கட்டமைப்பதற்காக வளர்ச்சி செலவுகள் பில்லியன் கணக்கில் போயின; இவை பிரத்தியேகமாக வரியில் இருந்து கிடைத்த வருமானங்களில் இருந்தே நடத்தப்பட்டன.

பெரும் பொதுநலனை கருத்திற்கொண்டு ஒன்றும் அரசாங்கங்கள் இதில் பங்கு பெற்றுவிடவில்லை. ஐரோப்பிய விமானக் கட்டுமான தொழில் வளர்ச்சி என்பது சந்தையில் இருந்த அமெரிக்க மேலாதிக்கத்தை சவாலுக்கு உட்படுத்தும் நோக்கத்தை கொண்டிருந்தது. 1960களில் அமெரிக்கா கிட்டத்தட்ட அனைத்து வணிக விமானங்களிலும் 85 சதவிகிதத்தை உற்பத்தி செய்து வந்தது; ஐரோப்பா 10 சதவிகிதம்தான் உற்பத்தி செய்தது. ஜேர்மனியில் கிறிஸ்துவ சமூக ஒன்றிய தலைவரும் முதல் எயர்பஸ்ஸின் நிர்வாகக் குழுத் தலைவருமான Franz Joseph Strauss போன்ற அரசியல் வாதிகள் ஒரு திறமையான ஐரோப்பிய விமான உற்பத்தித் தொழிலை கட்டமைத்து வளர்த்தலை ஐரோப்பிய ஆயுதத் தொழில் வளர்ச்சியிலும் ஒரு முக்கியமான கட்டமாக நினைத்தனர்; இவை இரண்டிலும் விமானத்துறையில் பயன்படுத்தப்படும் தொழில்நுட்பங்கள் பல ஒன்றாக உள்ளன.

ஐரோப்பா முழுவதும் படர்ந்திருந்த வளங்கள் அடிப்படையில், எயர்பஸ் மிகச் சிறப்பான தொழில்நுட்ப விளைவுகளை கண்டது. ஆரம்பகட்ட பிரச்சினைகள், சற்றே தாமதித்த விற்பனைகள் ஆகிய இவற்றுக்கு பின்னர், எயர்பஸ் 1970 களின் இறுதியிலேயே திருப்புமுனையைக் கண்டு 1990 களில் அதன் ஒரே போட்டியாளரான அமெரிக்க விமானத் தயாரிப்பாளரான போயிங்கிற்கு சமமாக நின்றது.

நிறுவனத்தின் மிகச் சிறந்த தொழில்நுட்ப அவாக்களை கொண்டிருந்த திட்டம் A370 ஆகும். இது இப்பொழுது விநியோகிக்கப்படும் நிலைக்கு அருகில் உள்ளது. மிக அதிக அளவில் உற்பத்தி செய்யப்படும் பயணிகள் விமானம் 16,000 கிலோமீட்டர் தூரத்திற்கு 850 பயணிகளை ஏற்றிக் கொண்டு செல்லமுடியும்; இது Boing 747 "ஜம்போ ஜெட்டுக்களையும்" விட நேர்த்தியான செயற்பாடு உடையதாகும். இந்த மாதிரியை உருவாக்குவதற்கான செலவினங்கள் கிட்டத்தட்ட 12 பில்லியன் யூரோக்கள் ஆயின.

அமெரிக்க நிலைமைகள்

A 380 விமானங்களை அளிப்பதில் ஏற்பட்ட தாமதம், A 350 நீண்ட தூர விமானம் (புதிய தொழில்நுட்பத்தை அடிப்படையாகக் கொண்ட ஒரு சிறிய நீண்ட தூர விமானம்) கொண்டுவருவதில் அதிக அபிவிருத்திச் செலவுகள் மற்றும் அமெரிக்க டாலரின் மதிப்புக் குறைவு ஆகியவை எயர்பஸ்ஸின் தற்போதைய இடர்பாடுகளுக்கு முக்கிய காரணமாக கூறப்படுகின்றன; அவைதான் "Power 8" எனப்படும் மறுசீரமைப்பு திட்டத்திற்கான தேவையை கொண்டுவந்ததாக கூறப்படுகிறது. ஆனால் எயர்பஸ்ஸின் வரலாற்றில் முன்னரும் தோன்றியுள்ள தற்காலிக நிதியப் பிரச்சினைகள் இப்பொழுது தொழிலாளர் தொகுப்பிற்கு எதிராக முழு அளவுத் தாக்குதல் நடத்துவதற்கு போலிக் காரணங்களாக பயன்படுத்தப்படுகின்றன என்பது வெளிப்படையாகும்.

பிரிட்டிஷ் வணிக ஏடான Economist இதைப் பற்றி தெளிவாகக் கூறுகையில், "கடுமையான ஐரோப்பிய தொழிலாளர் சட்டங்கள், அரசியல் கூர் உணர்வுத் திறன்ங்கள்" ஆகியவற்றை சாடியுள்ளது. அவைதாம் இன்னும் கடுமையான வேலை வெட்டுக்களுக்கு குறுக்கே இருப்பதாக அது கூறியுள்ளது. இதற்கு மாறாக "அமெரிக்காவின் மிருதுவான தொழிலாளர் சட்டங்கள்" போயிங் நிறுவன ஊளைச் சதையை அகற்றுவதை எளிதாக்கியுள்ளது என்று இது கூறியுள்ளது. இதழ் முடிவாகக் கூறுகிறது: "செலவினங்களைக் குறைப்பதின் மூலம் அல்லது நாட்டுக்கு வெளியே தயாரிக்க எடுக்கும் முயற்சிகள் ஊடாக எப்படி எயர்பஸ் நிலைமையை சமாளிக்க முயன்றாலும், அமெரிக்க நிறுவனம் எங்கு உற்பத்திச் செலவு மிகக் குறைவாக உள்ளதோ அங்கு கால இடமாற்றங் கொண்ட உற்பத்தியை செய்வதை எளிதாகக் கொண்டிருக்கும்."

பெரும்பாலான வணிக வர்ணனையாளர்கள் எயர்பஸ்ஸின் நிதிய நெருக்கடிகளுக்கு அரசியல் குறுக்கீடுதான் காரணம் என்று கூறுகின்றனர். இவ்விதத்தில் முன்னோடியாக இருப்பவர் Manager Magazine உடைய ஆசிரியரான Andreas Nölting ஆவார். இவர் எழுதியுள்ளதாவது: "அரசியலில் இருந்து முற்றிலும் விடுவிக்கப்பட்டால்தான் எயர்பஸ் சற்றே நிம்மதியாக மூச்சுவிட முடியும்; இதுதான் சுதந்திர- சந்தைப் பொருளாதாரத்தின் தூய தத்துவம் ஆகும்."

இது முற்றிலும் அபத்தமான வாதமாகும். தனியார் நிறுவனங்களான Siemens, Volkswagen, Bayer Schering ஆகியவையும் சமீபத்தின் தொழிலாளர் தொகுப்பின் இழப்பில் கடுமையான மறுசீரமைப்பு திட்டத்தை செயல்படுத்தியுள்ளன. ஜேர்மனிய நாட்டின் Telekom கிட்டத்தட்ட 50,000 வேலையாட்களை நாட்டுக்கு வெளியிலிருந்து பெறும் என்று சற்று முன் அறிவித்துள்ளதுடன், 30 சதவிகிதம் ஊதிய வெட்டுக்களும் சேர்ந்துள்ளன.

எயர்பஸ்ஸின் முக்கிய போட்டி நிறுவனமான Boeing, ஆறு ஆண்டுகளுக்கு முன்பு தன்னுடைய மறுசீரமைப்பை நடத்தியது; அதன்படி நிறுவனத்தில் தலைமை அலுவலகம் சியாட்டிலில் இருந்த முக்கிய உற்பத்தி வளாகத்தில் இருந்து சிகாகோவிற்கு மாற்றப்பட்டது. அதற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில் போயிங் பல ஆலைகளையும் மூடியது; அதையொட்டி 25,000 வேலைகள் விமான உற்பத்திப் பிரிவிலும், நிறுவனம் முழுவதிலும் 49,000 பணிகளும் வெட்டிக் குறைக்கப்பட்டன.

அந்த நடவடிக்கையின் நோக்கம் போயிங்கை ஒரு உலக நிறுவனமாக, முற்றிலும் "பங்குதாரரின் மதிப்பிற்கு" உட்படுத்தல் என்று மாற்றுவதாக இருந்தது. நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி அத்தகைய நகர்வு, "சியாட்டிலை மட்டும் துணையாகக் கொண்டிருப்பதை தவிர்த்து வணிக சார்பு, மற்றும் மத்தியில் அமைந்துள்ள பெரு நிதியச் சந்தையில் நிலையத்தை அமைப்பதற்கு" தேவையாக இருந்தது என்று அறிவித்தார்.

உற்பத்தியில் 50 சதவிகிதம்வரை செலவினங்களை குறைப்பதற்காக, உற்பத்தியை வெளி நிறுவனங்கள், மற்ற இடங்கள், பிற நாடுகள் ஆகியவற்றிற்கு மாற்றும் விதத்தை போயிங் நோக்கமாக கொண்டு செயல்படுத்தியது. இதையொட்டி நிறுவனம் ஊதியங்களை குறைக்க மற்றும் ஊழியர்களையும் அதேபோல் அனுப்புமாறு கோரும் அதன் வேண்டுகோள்களுக்கு ஏற்ப குறைக்க அல்லது அதிகரித்துக் கொள்ள முடியும். இதைத்தவிர, ஆர்டர் வாங்குவதற்கும் விநியோகிப்பதற்கும் இடையே உள்ள கால அவகாசம் "lean manufacturing" குறைவான உற்பத்திக் காலம் என்ற முறையின் மூலம் பாதியாக்கப்பட்டது.

இத்திட்டம் உடனடி விளைவுகளை காட்டியது. 2001ல் போயிங் அதுகாறும் இல்லாத அளவிற்கான வருமானமாகிய 57 பில்லியன் அமெரிக்க டாலர்களை எட்டியது; ஒரு தசாப்தத்தில் முதல்தடைவையாக நடைமுறை இலாபமாக 10 சதவிகிதத்தையும் பெற்றது. எயர்பஸ்ஸின் "Power 8" திட்டம் போயிங்கின் மறுசீரமைப்புத் திட்டத்தை எதிர்கொள்ளும் வழிவகையாகும்.

வலுவான அரசிற்கான அழைப்பு

பணிக்குழுக்களும் தொழிற்சங்க அமைப்புக்களும் மறுசீமைப்பு திட்டம் பற்றிய எயர்பஸ்ஸின் திட்டத்திற்கு அரசாங்கத் தலையீடு வேண்டும் என்ற விடையிறுப்பை காட்டியுள்ளன.

அரசின் ஆரம்ப முயற்சி இல்லாவிடின், எயர்பஸ் நிறுவனமே தோன்றியிருக்க முடியாது. ஆனால் தேசியப் பொருளாதார கொள்கை தோற்றுவிக்கப்பட்டு, பாதுகாப்பான வேலைகள் மற்றும் தொழில்நுட்ப முன்னேற்றம் அடைதல் என்பது நீண்ட கடந்தகாலமாகிவிட்டது. பல ஆண்டுகளாக ஜேர்மனி பிரான்ஸ் இரண்டிலுமே, சமூக ஜனநாயக மற்றும் கன்சர்வேட்டிவ் அரசாங்கங்கள் இரண்டுமே முறையாக தொழிலாளர்களின் உரிமைகளை குறைத்துக் கொண்டு, வேலைச் சந்தையின்மீது உள்ள கட்டுப்பாடுகளை தளர்த்தி நிதி மூலதனத்திற்கு தடையற்று செயல்படும் உரிமையை கொடுத்துள்ளன.

எயர்பஸ்ஸின் மறுசீரமைப்பு திட்டம் பிரான்சிற்கும் ஜேர்மனிக்கும் இடையே கணிசமான அழுத்தங்களுக்கு வழிவகுத்துள்ளது. இறுதியில் ஜனாதிபதி ஜாக் சிராக்கும், அதிபர் அங்கேலா மேர்க்கலும் தாமே இப்பிரச்சினை பற்றி அக்கறை கொண்டனர். ஆனால் இருவரில் எவருமே "Power 8" திட்டத்தின் நோக்கங்களுக்கு சவால்விடவில்லை. அவர்களுடைய முக்கிய அக்கறை சுமையை "நியாயமாக", அதவது பிரெஞ்சு மற்றும் ஜேர்மனிய தொழிலாளர்கள் சம அளவில் பகிர்ந்து கொள்ள வேண்டும் என்பதாகத்தான் உள்ளது.

எயர்பஸ்ஸின் பங்குகளை மாநில அல்லது வட்டார அரசாங்கங்கள் எடுத்துக் கொள்ளுவது ஒரு சிறந்த வழியாகாது. ஜேர்மனியின் Länder மற்றும் பிரான்சின் பகுதிகள் சிலவும் மறுசீரமைப்பு திட்டத்தால் கடுமையாக பாதிக்கப்பட்டதால் அத்தகைய கருத்துக்களை கூறியுள்ளன. அவர்களுக்கு தொழிற்சங்கங்கள் மற்றும் பிரெஞ்சு சோசலிஸ்ட் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் செகோலென் ரோயாலுடைய ஆதரவு கிடைத்துள்ளது.

இதன் தலைவரான மார்டின் மல்வியின் கருத்தின்படி தெற்கு பிரெஞ்சு பகுதியான Midi-Pyrénées, எயர்பஸ்ஸின் பங்குகளில் 5ல் இருந்து 10 சதவிகிதத்தை எடுத்துக்கொள்ள தயாராக உள்ளது. 480 நடுத்தர தொழிற்கூடங்கள் இப்பகுதியில் எயர்பஸ் நெருக்கடியினால் பாதிப்பிற்குட்பட்டு 60,000 வேலைகளை இழக்கும் என்று அவர் அஞ்சுகிறார். இத்தகைய திட்டங்கள் வடக்கு ஜேர்மனிய மாநிலமான Lower Saxony யில் இருந்தும் வந்துள்ளது; அதுவும் கடுமையான பாதிப்பிற்கு உட்பட்ட பகுதியாகும்.

இந்த பிராந்திய அரசாங்கங்களும் தொழிலாளர் தொகுப்பின் அவலநிலையை எதிர்கொள்ளத் தயாராக இல்லை. மற்ற அனைவருடைய இழப்பிலும் தங்கள் பகுதியின் நலன்களை காப்பதுதான் தங்கள் பணி என அவை கருதுகின்றன. St.Florian உடைய கோட்பாட்டின் அடிப்படையில் அவை வேலைசெய்கின்றன: "புனித தூய புளோரியன் அவர்களே, என்னுடைய வீட்டை காப்பாற்றுங்கள், ஆனால் என்னுடைய அண்டை வீட்டை எரித்து விடுங்கள்!."

ஐரோப்பிய ஒன்றியமும் இத்தகைய "பிராந்தியங்களுக்கு இடையேயான போட்டியை" சிறிது காலமாக ஊக்குவித்துள்ளது. ஊதியக் குறைப்புக்கள், வரி குறைப்புக்கள், சமூகநல செலவினக் குறைப்புக்கள் ஆகியவற்றிற்கு இது ஒரு கருவியாகும். "மூலதனத்தை ஈர்ப்பதற்கு" என்னும் முறையில் பிராந்தியங்கள் நாய் சண்டை போல், ஒன்றையொன்று முந்தும் வகையில் ஏலத் தொகையை அதிகப்படுத்துகின்றன. ஐரோப்பா துண்டாடல், ஒவ்வொருவரும் மற்றவருக்கெதிராக போராடல் என்பதுதான் இதன் விளைவாக இருக்கும். இதை ஒட்டி பெரு வணிக நிறுவனங்களை இன்னும் வருமானங்களையும் சமூகத் தரங்களையும் கீழ்நோக்கி சரியச்செய்யக்கூடியதாக ஆக்குவதுடன், அதேவேளை மிகப் பெரிய, கிட்டத்தட்ட வரியற்ற இலாபங்களும் கிடைக்கக் கூடியதாகவும் ஆக்குகிறது.

தொழிலாளர் தொகுப்பை தொழிற்சங்கங்கள் பிளவுபடுத்துதல்

பிரெஞ்சு, ஜேர்மனிய தொழிலாளர்களை ஒருவருக்கு ஒருவர் எதிராக தூண்டிவிடும் இந்த முயற்சியில் தொழிற்சங்கங்கள் குற்றம் சார்ந்த (Criminal Role) பங்கை கொண்டுள்ளன.

ஜேர்மனியின் IG Metall தொழிற்சங்கமோ அல்லது பிரெஞ்சு தொழிற்சங்க கூட்டமைப்புக்களோ கொள்கையளவில் எயர்பஸ்ஸின் மறுசீரமைப்பு திட்டத்திற்கு சவால் விடவில்லை; மாறாக, அவை பெரும் பரபரப்புடன் பணிக்குழுக்கள் மற்றும் நிர்வாகக் குழுக்களில் திட்டங்களை தயாரித்து செயற்படுத்துவதற்கும், கணிசமான படிகள், ஊதியங்களை அவ்விதத்தில் பெறுவதற்கும் தயாராக உள்ளன. அவர்கள் எந்த எதிர்ப்பிற்கு தலைமை வகித்தாலும், மற்ற நாடுகளில் இருக்கும் தொழிலாளர் தொகுப்பிற்கு எதிராக சீற்றத்தை பரந்த அளவில் திசைதிருப்பும் முயற்சியைத்தான் கொள்ளுகின்றன.

"Power 8" வெளியிடப்படுவதற்கு ஒரு மாதம் முன்பு, பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் தங்களுடைய ஆய்வை அளித்தன; இதில் பிரெஞ்சு ஆலைகள் ஜேர்மனியை விடக் கூடுதாலன உற்பத்தித் திறன் உடையது என்று கூறப்பட்டுள்ளது. ஐரோப்பிய பணிக்குழுக்களின் இணைத் தலைவரும் FO தொழிற்சங்க (Force Ouvrière) உறுப்பினருமான Jean François Knepper கூறினார்: "ஒரு சீரான, நியாயமான வகையை காண முற்பட்டால், ஒருவர் செயற்பாட்டில் இதுகாறும் எது சிறந்த பங்களிப்பை கொடுத்துள்ளது என்பதை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்."

ஜேர்மனிய பணிக் குழுக்களின் தலைவரான (IG Metall ஐ சேர்ந்த) Rudiger Lutjen தக்க பதிலை அவ்வாறே கொடுத்தார். நெப்பருடைய அறிக்கை "திமிர்த்தனமானது" என்று கூறிய அவர் மேலும் தெரிவித்ததாவது: "ஜேர்மனிய எயர்பஸ்ஸின் பணிக்கூடங்கள் பிரான்ஸில் இருப்பதைப் போலவே உற்பத்தித்திறனை கொண்டுள்ளன; சில இடங்களில் கூடுதலான திறனைக் கொண்டவை."

எவர் இன்னும் குறைவூதியத்தில் வேலேசெய்து "சிறப்பாக செய்துமுடிப்பார்" என்பதில் இருக்கும் இப்போட்டியை விட நிர்வாகத்தின் திட்டங்களுக்கான ஊக்கம் வேறு ஏதும் இருக்க முடியாது. சர்வதேச ஐக்கியத்தின் அடிப்படைக் கோட்பாடுகள் அனைத்தையும் இது முழுதும் கேலிக்கூத்தாக ஆக்குகிறது. அதுவும் பிரெஞ்சு, ஜேர்மனிய, ஆங்கில இன்னும் பல நாட்டுத் தொழிலாளர்கள் நெருக்கமாக ஒன்றாக உழைத்து பல நேரங்களில் தங்கள் பணிக்காக அண்டை நாடுகளிலும் குடிபெயர்ந்துள்ள ஒரு நிறுவனத்தில் இத்தகைய கருத்துக்கள் வெளிவருகின்றன.

ஜேர்மனிய அல்லது பிரெஞ்சு தொழிற்சங்கங்கள் எதுவுமே அனைத்து வேலைகளும் நிபந்தனையற்ற முறையில் பாதுகாக்கப்பட வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கவில்லை; அந்த ஒரு கோரிக்கைதான் எல்லைகள் கடந்து பாதிக்கப்பட்ட அனைத்து தொழிலாளர்களையும் ஒன்றாக இணைக்கக்கூடிய, பிணைக்க கூடிய கோரிக்கை ஆகும். எதிர்ப்பு வேலைநிறுத்தங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் பல இடங்களில் நடத்தப்படுவது அவ்வாறு தனியே நடத்தப்பட வேண்டும் என்பதை கவனமாக அவர்கள் உறுதிப்படுத்துகின்றனர்; மேலும் போயிங்குடனான போட்டி இருக்கும்போது எவ்வித செயற்பாடுகளையும் பாதிக்காத வகையில் எதிர்ப்புக்களை இவை காட்டுகின்றன. இப்பொழுது அனைத்து எயர்பஸ் கூடங்களிலும் திட்டமிட்டு ஒரு அரை நாள் வேலைநிறுத்தம் நடத்தி, மார்ச் 16 அன்று பிரஸ்ஸல்ஸில் ஒரு கூட்டு ஐரோப்பிய ஆர்ப்பாட்டத்தையும் நடத்த இருக்கும் நிலையில், இவர்களுடைய அழைப்பு முக்கியமாக அடையாளத் தன்மையை கொண்டு உண்மையான பங்கை மூடிமறைக்கும் வகையில்தான் உள்ளது.

தாங்கள் பணியாற்றும் நிறுவனங்களின் நலனுக்கு உறுதியளித்து, ஒரு சோசலிச முன்னோக்கிற்கு முற்றிலும் விரோதப் போக்கை காட்டும் வகையில், தொழிற்சங்கங்கள் பெருவணிகத்திற்குள்ளேயே இணை மேலாளர்களாக தங்களை மாற்றிக் கொண்ட வழிவகையை நீண்ட காலமாகவே முழுமைப்படுத்திவிட்டனர். பூகோளப் போட்டியின் அழுத்தம் மற்றும் பணிகள் குறைந்த கூலியுடைய நாடுகளுக்கு சென்றுவிடுமோ என்ற இடையறாத அச்சுறுத்தலின் கீழ் அவர்கள் தாங்கள் வேலை செய்யும் நிறுவனத்திற்கு பெருகிய இலாபங்கள் வருவதை உறுதிப்படுத்துவதன் மூலம் தங்கள் சொந்த "இடத்தை"க் காப்பதுதான் தங்களது வேலை என்று காண்கின்றனர்.

இத்தகைய வளர்ச்சிதான் உலகெங்கிலும் உள்ள தொழிற்சங்கங்களால் கடைபிடிக்கப்படுவதை காணலாம். சமீபத்தில்தான் ஜேர்மனியின் Volkswagen நிறுவனத்திலுள்ள பணிக்கள் குழு, நிர்வாகம் Golf மாதிரி உற்பத்தியை பிரஸ்ஸல்ஸில் இருந்து ஜேர்மனியிலுள் வொல்ப்ஸ்பேர்க்கிற்கு மாற்றுவதை உறுதிப்படுத்தும் பொருட்டு, நீடித்த பணி நேரத்திற்கு அதற்கு ஈடான ஊதிய உயர்வு இல்லாமல் ஒப்புதல் கொடுத்தது. பிரஸ்ஸில்ஸில் இருக்கும் VW Forest ஆலை இப்பொழுது சிறிது சிறிதாக மூடப்பட்டு வருகிறது.

தொழிற்சங்கங்களுடனும், பணிகள் குழுக்களுடனும் முறித்துக் கொள்ளுவது என்பதுதான் எயர்பஸ்ஸில் வேலை பாதுகாப்புக்களுக்கு அடிப்படை நிபந்தனை ஆகும். தொழிலாளர் தொகுப்பு சுயாதீனமான பாதுகாப்புக் குழுக்களை நிறுவ வேண்டும்; அவைதான் ஒன்றோடொன்று தொடர்பு கொண்டு ஐரோப்பிய தொழிலாள வர்க்கம் முழுவதன் ஆதரவையும் நாடும். அத்தகைய குழுக்கள் போயிங் தொழிலாளர்களுடனும் தொடர்பு கொள்ள வேண்டும். ஐரோப்பா, அமெரிக்காவில் உள்ள விமானக் கட்டமைப்பு தொழிலாளர்கள் தாங்கள் பிளவிற்குட்பட்டு, ஒருவருக்கு எதிராக மோதலுக்கு உட்படுத்தப்படக்கூடாது என்பதை கட்டாயம் உறுதி செய்ய வேண்டும். அட்லாண்டிக் பெருங்கடலுக்கு இருபுறமும் இருக்கும் தொழிலாளர்களை ஒன்றாக இணைக்கும் போராட்டம் ஒன்றுதான் "Power 8" திட்டத்திற்கு எதிரான திறமையான போராட்டத்திற்கு அடிப்படையாகும்.

மிகப்பெரிய வேலை அழிப்புக்கள், ஊதிய வெட்டுக்கள் நலன்கள் இவற்றிற்கு எதிராகப் போராடும் பாதுகாப்புக் குழுக்களை கட்டமைத்தலுடன் ஒரு சோசலிச, சர்வதேச முன்னோக்கை விரிவாக்குவதும் இணைக்கப்பட வேண்டும்; இது நவீன உற்பத்தி முறையின் சர்வதேச தன்மையில் இருந்து வெளிப்படுகிறது; உலகம் முழுவதும் உள்ள தொழிலாளர்களின் பொது நலன்களை பாதுகாக்கும். அத்தகைய முன்னோக்கு, பெருவணிகத்தின் இலாப நலன்களை, மக்களிடையே பெரும்பான்மையினராக இருக்கும் தொழிலாள வர்க்கத்தின் சமூக நலன்களுக்கும் தேவைகளுக்கும் கீழ்ப்படுத்தும், சமூகத்தை ஒரு சோசலிச வகையிலான மாற்றத்தில் ஈடுபடுத்த நோக்கம் கொள்ளும்.

எயர்பஸ் தொழிலாளர்கள், மற்றும் அவர்களுடைய போராட்டத்திற்கு ஆதரவு கொடுப்பவர்கள் அனைவரையும் தங்களின் பணியிடங்களில் பாதுகாப்புக் குழுக்களை கட்டியமைக்குமாறு நாங்கள் அழைப்பு விடுகிறோம். உலக சோசலிச வலைத் தளத்தின் ஆசிரியர் குழுவுடன் தொடர்பை ஏற்படுத்துங்கள் மற்றும் இப்பிரச்சினைகளை உங்கள் சக ஊழியர்களுடனும் கலந்துரையாடுங்கள்.