World Socialist Web Site

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

 
 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government exploits attack on foreign delegation to intensify war

இலங்கை அரசாங்கம் வெளிநாட்டு பிரதிநிதிகள் மீதான தாக்குதலை யுத்தத்தை உக்கிரப்படுத்த சுரண்டிக்கொள்கிறது

By Sarath Kumara
3 March 2007

Use this version to print | Send this link by email | Email the author

இலங்கை அரசாங்கம், பிரிவினைவாத எதிரிகளுக்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை மேற்கொள்ள நெருக்குவதற்காக, செவ்வாயன்று வெளிநாட்டுப் பிரதிநிதிகளை அழைத்துச் சென்ற இராணுவ ஹெலிகொப்டர் மீது தமிழீழ விடுதலைப் புலிகள் தாக்குதல் தொடுத்த சம்பவத்தை இறுகப் பற்றிக்கொண்டுள்ளது.

இடர் முகாமைத்துவ மற்றும் மனித உரிமைகள் அமைச்சர் மஹிந்த சமரசிங்கவுடன் சேர்ந்து, அமெரிக்கா, ஜேர்மன், ஜப்பான், கனடா மற்றும் பிரான்ஸ் தூதர்கள் மற்றும் ஐ.நா தூதுக்குழுவின் தலைவர் உட்பட வெளிநாட்டு அலுவலர்களும் கிழக்கு நகரான மட்டக்களப்புக்கு விஜயம் செய்தனர்.

இராணுவ விமானப்படைத் தளத்தில் தரை இறங்கியதை அடுத்து பிரதிநிதிகள் ஆட்டிலறி மற்றும் மோட்டார் தாக்குதலுக்கு உள்ளாகினர். வெடிகுண்டில் இருந்து சிதறிய துணுக்குகளால் தலையில் சிறு காயமடைந்த இத்தாலியத் தூதுவர் பியோ மறியானி மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டார். ஏனைய பல இராஜதந்திரிகளும் இராணுவ சிப்பாய்களும் சிறிய காயங்களுக்குள்ளாகினர்.

கடந்த ஜூலையில் இருந்து இலங்கை இராணுவம் ஒரு தொடர்ச்சியான தாக்குதல்களை கிழக்கு மாகாணத்தில் நடத்திவருகின்றது. 2002ல் கைச்சாத்திடப்பட்ட யுத்த நிறுத்த உடன்படிக்கையை பகிரங்கமாக மீறிய இராணுவம், புலிகளின் வசமிருந்த மாவிலாறு, சம்பூர் மற்றும் மிக அண்மையில் வாகரைப் பிரதேசத்தையும் கைப்பற்றியது. இந்த இராணுவ நடவடிக்கைகளால் பத்தாயிரக்கணக்கான பொது மக்கள் இடம்பெயரத் தள்ளப்பட்டனர். இந்த மாவட்டத்தில் இடம்பெயர்ந்துள்ள மக்களின் "மனிதாபிமான மற்றும் அபிவிருத்தி விவகாரங்கள்" தொடர்பாக வெளிநாட்டு அலுவலர்கள் கூட்டமொன்றை நடத்தவிருந்தனர்.

உடனடியாக ஒரு பிரச்சாரத் தாக்குதலைத் தொடுக்க முனைந்த அரசாங்கமும் இராணுவ அலுவலர்களும், வேண்டுமென்றே சர்வதேச பிரதிநிதிகளை இலக்குவைத்ததாகப் புலிகளைக் குற்றஞ்சாட்டினர். இந்தத் தாக்குதலைக் கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்ட வாஷிங்டனில் உள்ள இலங்கைத் தூதரகம், "மனித உயிரை மதிக்காத இரக்கமின்மையையும் மற்றும் தமிழ் புலி பயங்கரவாதத்திற்கு எதிராக எழுந்துள்ள சர்வதேச கண்டனங்களை இறுமாப்புடன் எதிர்ப்பதையும் இது காட்டுகிறது," எனத் தெரிவித்தது.

எவ்வாறெனினும், இராணுவப் பேச்சாளர் பிரிகேடியர் பிரசாத் சமரசிங்க, "பாதுகாப்புக் காரணங்களுக்காக" இந்த விஜயம் பற்றி புலிகளுக்கு அறிவிக்கப்படவில்லை என்பதை ஏற்றுக்கொண்டார். ஆயினும், இந்தத் தாக்குதல் வேண்டுமென்றே நடத்தப்பட்டதாக வலியுறுத்திய அவர், "வெளிநாட்டு இராஜதந்திரிகள் குழுவொன்று மட்டக்களப்புக்கு விஜயம் செய்கின்றது என்பது எல்லோரும் நன்கு அறிந்த விடயமாகும்..." என்றார். தமது அறிக்கையில் உள்ள தெளிவான முரண்பாடுகளை அவர் தெளிவுபடுத்தவில்லை: இது "நன்கு அறிந்த விடயமாக" இருந்தால், புலிகளுக்கு அறிவிக்காமல் இருந்ததற்கான "பாதுகாப்புக் காரணங்கள்" எவை?

புலிகளின் இராணுவப் பேச்சாளர் இராசையா இளந்திரையன் உடனடியாக சம்பவத்திற்கு "ஆழமான வருத்தத்தை" வெளிப்படுத்தியதுடன் இந்த விஜயம் தொடர்பாக புலிகளுக்கு அறிவிக்கத் தவறியமைக்காக இராணுவத்தைக் குற்றஞ்சாட்டினார். இந்தப் பிரதேசத்தில் வெளிநாட்டு இராஜதந்திரிகள் வருகைதந்திருப்பதாக ஐ.நா. அலுவலர் மரியன் டின் அறிவித்த உடனேயே புலிகள் தாக்குதலை நிறுத்திவிட்டதாக அவர் விளக்கினார்.

ஒரு சர்வதேச பிரதிநிதிகள் குழுவின் உறுப்பினர்களை தாக்குவதன் மூலம் நிச்சயமாக புலிகளால் சம்பாதித்துக்கொள்ளக்கூடியது ஒன்றும் இல்லை. உண்மையில், புலிகள் மேலும் மேலும் தனிமைப்படுத்தப்படுவதை தவிர்க்கும் முயற்சியாக சர்வதேச சமூகம் என சொல்லப்படுவதை அமைதிப்படுத்த புலிகளின் தலைமைத்துவம் அவநம்பிக்கையான நிலையில் எதிர்பார்த்துக்கொண்டிருக்கின்றது. எந்தவொரு மரணமோ அல்லது கடுமையான காயமோ ஏற்பட்டிருந்தால், புலிகளுக்கு எதிரான கொடூரமான நடவடிக்கைகளை எடுக்க அழுத்தம் கொடுத்துக்கொண்டிருக்கும் கொழும்பு அரசாங்கத்திற்கு நேரடியாக பயன்பட்டிருக்கும்.

அமெரிக்காவை தளமாக கொண்ட ஸ்டட்போர் ஆலோசனை குழு குறிப்பிட்டிருந்ததாவது: "வெளிநாட்டு பிரதிநிதிகள் வந்திருப்பது தமக்குத் தெரியாது என புலிகள் தெரிவித்த போதிலும், பொதுமக்களை இலக்குவைப்பதாக புலிகளை இலங்கை அரசாங்கம் குற்றஞ்சாட்டுகிறது. யாதேனுமொரு விடயத்தில், புலிகள் தமது சாயலை உயர்த்திக்கொள்வதோடு, எதிரிகளை தாக்குவதற்காக உயர்ந்த இராணுவ உதவியையும், வாஷிங்டன் மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தின் ஆதரவையும் பெற்றுக்கொள்ள இலங்கை அரசாங்கத்திற்கு சிறந்த வாய்ப்பையும் கொடுத்துவிடுகின்றனர்."

இலங்கை இராணுவம் வேண்டுமென்றே பிரிதிநிதிகள் குழுவை தாக்குதல் நடக்கும் பகுதிக்கு கொண்டு சென்றுள்ளது என்பதை தள்ளிவைத்துவிட முடியாது. கொழும்பைத் தளமாகக் கொண்ட நேற்றைய டெயிலி மிரர் பத்திரிகையின் கட்டுரை ஒன்று, தரையிறங்கு பகுதியில் இருந்து இரண்டு கிலோமீட்டர் தூரத்தில் உள்ள இராணுவ முகாமொன்று அரைமணித்தியாலத்திற்கு முன்னதாக மோட்டார் தாக்குதலுக்கு உள்ளானதாக சுட்டிக்காட்டியுள்ளது. "ஆகவே அங்கு நிச்சயமாக பாதுகாப்பு அச்சுறுத்தல் இருந்துள்ளதோடு ஹெலிகொப்டர்களை பாதுகாப்பான பிரதேசத்திற்குத் திருப்பியிருக்க வேண்டும்," என ஒரு பாதுகாப்பு அலுவலர் பத்திரிகைக்குத் தெரிவித்திருந்தார்.

இந்த சம்பவத்தை அரசாங்கமும் அதன் அரசியல் பங்காளிகளும் பற்றிக்கொண்டனர். வெளியுறவு அமைச்சர் ரோகித போகொல்லாகம, "பயங்கரவாதக் கொள்ளை நோயை எதிர்கொள்வதற்கும் மற்றும் பயங்கரவாதத்தைக் கைவிட்டு ஜனநாயக வழிக்கு வருமாறு புலிகளுக்கு அழுத்தம் கொடுக்கவும் இலங்கை அரசாங்கத்தின் பெரும் முயற்சிக்கு ஆதரவளிக்குமாறு சர்வதேச சமூகத்திற்கு" அழைப்பு விடுத்தார். "வெளிநாடுகளில் புலிகள் நிதி திரட்டுவதையும் மற்றும் ஆயுதம் பெறுவதையும் தடுக்க விளைபயனுள்ள நடவடிக்கைகளை எடுக்குமாறு" அவர் வேண்டுகோள் விடுத்தார்.

சர்வதேசத்தின் பிரதிபலிப்பு மெளனமாக இருந்தது. ஐ.நா. செயலாளர் நாயகம் பான் கி மூன், "பொதுமக்கள், மனிதாபிமான தொண்டர்கள், அரசாங்க அலுவலர்கள் மற்றும் சர்வதேச சமூகத்தவரின் உயிரை முற்றிலும் புறக்கணிப்பதாகும்" என கண்டனம் செய்த அதே சமயம், சமாதானப் பேச்சுக்களுக்குத் திரும்ப வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுத்தார். ஐரோப்பிய ஒன்றியமும் ஏனைய நாடுகளும் இதேபோன்ற அறிக்கைகளையே வெளியிட்டன. தூதர்கள் குறிப்பாக இலக்குவைக்கப்பட்டது போல் தெரியவில்லை என அமெரிக்க இராஜாங்கத் திணைக்களம் தெரிவித்துள்ளது.

இலங்கை இராணுவம் உடனடியாக மட்டக்களப்புக்கு அருகில் புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசமான வவுனதீவு மீது பதில் விமானத் தாக்குதல்களை முன்னெடுத்தது. இந்தப் பிரதேசத்தில் இருந்தே சர்வதேச பிரதிநிதிகள் குழுமீதான ஆட்டிலறித் தாக்குதல் வந்ததாக இராணுவம் கூறிக்கொண்டது. புதன் கிழமை கடற்படை முல்லைத்தீவுக்கு அருகில் பிரதான கடற்புலித் தளத்தின் மீது தாக்குதல் தொடுத்தது. செவ்வாய் கிழமையன்று முல்லைத்தீவு மாவட்டத்தில் புலிகளின் பயிற்சி முகாம் எனக் கூறப்பட்டதன் மீது விமானப்படை குண்டு வீசியது.

இந்த மட்டக்களப்பு சம்பவமானது இலங்கை யுத்த நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டு ஐந்தாவது ஆண்டு நிறைவின் ஐந்து நாட்களின் பின்னர் நடந்துள்ளது. உத்தியோகபூர்வமாக யுத்த நிறுத்தத்தை மேற்பார்வை செய்யும் இலங்கை கண்காணிப்புக் குழுவால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை ஒன்று, யுத்த நிறுத்த உடன்படிக்கையின் முறிவிற்கான பொறுப்பு முழுமையாக ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷவையே ஆதாரமாகக் கொண்டிக்கின்றது என்ற உண்மையை கோடிட்டுக்காட்டுகிறது. மஹிந்த இராஜபக்ஷ 2005 நவம்பரில் ஒரு குறுகிய வெற்றியைப் பெற்றார்.

2005 நவம்பரிற்கு முந்தைய மூன்று ஆண்டுகளில், புலிகளும் பாதுகாப்புப் படையினரும் சம்பந்தப்பட்ட மோதல்கள் மற்றும் ஏனைய சம்பவங்களில் 130 பேர் மட்டுமே கொல்லப்பட்டுள்ளதாக கண்காணிப்புக் குழு பதிவுசெய்துள்ளது. கடந்த 15 மாதங்களாக, யுத்தம் உக்கிரப்படுத்தப்பட்டதில் குறைந்தபட்சம் 4,000 பொதுமக்களும், இராணுவத்தினரும் பொலிசாரும் மற்றும் புலி போராளிகளும் கொல்லப்பட்டுள்ளனர்.

அரசாங்கத்தின் சமாதானச் செயலகம் என சொல்லப்படுவதால் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்று, அரசாங்கம் யுத்த நிறுத்தத்தைக் கைவிடவில்லை என கேலிக்கூத்தாக பிரகடனம் செய்துள்ளது. அதே சமயம், "சட்ட விதிகளை பேணுவதற்கும் மற்றும் நாட்டின் அனைத்து பிரஜைகளதும் மனித உரிமைகள் மதிக்கப்படுவதை உறுதி செய்யவும் அரசாங்கம் மேற்கொள்ளும் தொடர்ச்சியான முயற்சிகளையும்" அந்த அறிக்கை பாதுகாக்கின்றது. "புலிகளால் பரந்தளவில் மக்களின் உரிமைகள் மீறப்பட்டுள்ள தற்போதைய புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களிலும் அதை மீண்டும் சாத்தியமாக்குவதற்கு முயற்சிக்க அரசாங்கம் அர்ப்பணித்துக்கொண்டுள்ளது," எனவும் அது தெரிவிக்கின்றது.

புலிகளின் கட்டுப்பாட்டுப் பிரதேசங்களில் "மனித உரிமைகள்" மற்றும் "சட்ட விதிகளையும்" உறுதிப்படுத்தும் அரசாங்கத்தின் உபாயம், புலிகளை விரட்டியடிப்பதை மட்டுமே அர்த்தப்படுத்துவது தெளிவு. வேறு வார்த்தைகளில் சொன்னால், இராஜபக்ஷ "மனித உரிமைகள்" என்ற பெயரில் யுத்த நிறுத்தத்தை மீறி இராணுவத் தாக்குதல்களுக்கு கட்டளையிட்டார். இதனால் நூற்றுக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டதோடு பத்தாயிரக்கணக்கான பொதுமக்கள் வீடுகளை விட்டு வெளியேறத் தள்ளப்பட்டனர். "சட்ட விதிகளைப்" பாதுகாத்தல் என்ற பெயரில், அரசாங்கம் கொடூரமான சட்டங்களை அமுல்படுத்தியுள்ளது. இதன் கீழ் விசாரணையின்றி எதேச்சதிகாரமாக தடுத்துவைப்பது அனுமதிக்கப்பட்டுள்ளதோடு தீவின் தமிழ் சிறுபான்மையினரை பீதிக்குள்ளாக்கும் இராணுவத்தின் ஆதரவிலான கொலைக் கும்பல்களின் நடவடிக்கைகள் தொடர்பாகவும் கண்களை மூடிக்கொண்டுள்ளது.

கடந்த ஞாயிற்றுக் கிழமை தொலைகாட்சியில் கருத்துத் தெரிவித்த இராஜபக்ஷ, இரண்டு பேச்சுக்களை வெளிப்படுத்தினார். "யுத்த நிறுத்த உடன்படிக்கை ஒரு தடையாக இல்லாததால் அதைப் பற்றி தான் கவலைப்படப் போவதில்லை" என ஜனாதிபதி வெளிப்படையாகத் தெரிவித்தார். அராசங்கம் மீண்டும் நாட்டை இனவாத யுத்தச் சேற்றுக்குள் ஆழமாகப் புதைக்கத் தயாராகிக்கொண்டிருக்கின்றது என்பதற்கான பிரகடனமே இது.